வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்!!

காதல் ஜோடிகள்..

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீரன்பட்டை பகுதியை சார்ந்தவர் லிங்க சுப்பிரமணியம் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் கல்லூரி பயின்று வந்த மாணவி ஹேமலதா.

இவர்கள் இருவருக்கும் இடையே முதலில் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்து, திருமணத்திற்காக பெண்ணின் வீட்டை அணுகுகையில், பெண் வீட்டார் சார்பாக திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, காதல் ஜோடிகள் இருவரும் அம்பத்கார் மணிமண்டபத்தில் பவுத்த முறைப்படி ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்வில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் லிங்கு சுப்பிரமணியமும், ஹேமலதாவும் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்த முறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

மூடநம்பிக்கை மற்றும் சடங்கு சம்பிரதாயம் இன்றி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இதில் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பங்கேற்றனர். சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

கிணற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட அக்கா – தங்கை : க தறும் பெ ற்றோர்!!

பிரியங்கா, செண்பகவல்லி..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தை அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தைச் சார்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி சீதா. இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

இந்த தம்பதிக்கு பிரியங்கா, செண்பகவல்லி என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று வழக்கம் போல பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்பியபோது மகள்கள் வீட்டில் இல்லாததை கண்டு பெரும் அ திர்ச்சி க்குள்ளாகி உள்ளனர்.

அவர்களை இரவு முழுவதும் தே டி அ லைந்த நிலையில், இன்று காலை ச டலமாக கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே,

பொதுமக்கள் உதவியுடன் இருவரின் உ டலையும் மீ ட் டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பி ரே த ப ரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து,

இவர்கள் இருவரும் கிணற்றில் த வறி வி ழுந்து உ யிரிழந்தா ர்களா? அல்லது கொ லை செ ய்யப்பட்டா ர்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

16 வயதுடைய பிரியங்கா அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், 12 வயதாகும் இளைய மகள் செண்பகவல்லி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த குழந்தையை பார்க்கச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக பலி!!

புவனசிங்கம் சுவேகாந்தன்..

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் ஒரு குழந்தையின் தந்தை புவனசிங்கம் சுவேகாந்தன்(29) என்பவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று அதிகாலை மட்டக்களப்பு வைத்தியசாலையில் தனக்கு கிடைத்த குழந்தையினை பார்ப்பதற்கு திக்கோடை பிரதேசத்தினூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே வீதியினூடாக எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட்டார்.

அதன் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் உயரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் 45ஆவது கொரோனா மரணம் பதிவானது!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு,மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரே கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயர் குருதியழுத்தத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் போதே கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.

கனடாவில் செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவனுக்கு ந டந்த வி பரீதம்!!

பன்யம் அகில்..

கனடாவில் தங்கி படித்து வந்த இந்திய மாணவன் கட்டடத்தில் இருந்து கீழே வி ழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பன்யம் அகில் (19). இவர் கனடாவின் ரொரன்ரோவில் தங்கி ஹொட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி அகில் தனது செல்போனில் வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த போது நிலைதடுமாறி அவர் கீழே வி ழுந்து ப லியாகியுள்ளார். இது குறித்து கனடாவில் உள்ள அவரது நண்பர்தான், ஹைதராபாத்தில் உள்ள குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அகில் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்துக்கு விடுமுறையில் வந்திருக்கிறார். இதையடுத்து சமீபத்தில் தான் மீண்டும் கனடாவுக்கு திரும்பியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு வெளியேறத் தடை!!

மேல் மாகாணத்திலிருந்து..

மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியிடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி வரையில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மாகாணத்திற்குள் எவரும் பிரவேசிப்பதற்கு அனுமதியுண்டு என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர் நலனுக்காக வாழ்வை அர்பணித்த பெண் சந்தித்த அவலங்கள்!!

கிறிஸ்டினா..

தமிழகத்தில் கிறிஸ்டினா என்ற பள்ளி தலைமை ஆசிரியை இலங்கை தமிழ் பிள்ளைகள் மற்றும் தமிழக மாணவ, மாணவிகளுக்காக தன் வாழ்வையே சேவையாக அமைத்து கொண்ட விதம் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கரூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிறிஸ்டினா (53). இவர் தான் பல இலங்கை தமிழ் பிள்ளைகள் உள்ளிட்ட பல மாணவ, மாணவிகளின் கல்வி கனவை நினைவாக்க அயராது உழைத்து வருகிறார்.

கிறிஸ்டினா கூறுகையில், 1997-ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியில இடைநிலை ஆசிரியராக நிரந்திர பணியில் சேர்ந்தேன்.

அப்போது சில வருடங்கள் எனக்கு சம்பளமே தரப்படவில்லை. அந்த சமயத்தில் பேருந்துக்கு கூட பணமில்லாமல் இருந்திருக்கிறேன். என் நிலையை பார்த்து பேருந்து நடத்துனர்கள் அவர்கள் பணத்தில் டிக்கெட் கொடுப்பார்கள்.

இதை பார்த்து தான் உதவி செய்வதின் ஆழம் எனக்கு புரிந்தது. பின்னர் 2015ல் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பணியாற்ற தொடங்கினேன்.

2004-ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தப்போது, ஹெச்ஐவி பாசிட்டிவ் காரணமாக பாதிக்கப் பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை, மத்த பள்ளிகளில் சேர்க்காமல் விரட்டியடிப்பதைக் கேள்விப்பட்டேன். உடனே, அவர்களை தேடிப்போய் 13 பிள்ளைகளை எங்க பள்ளியில சேர்த்து கொண்டேன்.

என் கல்வி பணிக்கு தடங்கல் வரக்கூடாது என்பதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் பண்ணிக்காமல் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே என பலர் என்கிட்ட வருத்தமாக கேட்பாங்க.

திருமணம் செய்திருந்தால் 1,2 பிள்ளைகளுக்குத்தான் அம்மாவா இருந்திருப்பேன். இப்போது என் பள்ளியில் படிக்கிற 113 மாணவர்களுக்கும் நான் அம்மா.

கொரோனா லாக்டவுன் சமயமான கடந்த ஏப்ரல், மே மாதத்தில் என் சம்பளமான 1,60,000 ரூபாயில் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள், நிவாரண பொருட்களை வழங்கினேன் என கூறியுள்ளார்.

கிறிஸ்டினா குறித்து நாடோடி மக்கள் குழுவின் பிரதிநிதி ஜெயபால் கூறுகையில், அவர் எங்கள் மக்கள்கிட்ட தொடர்ந்து பேசி, எங்கள் குழந்தைகளை அவங்க பள்ளியில சேர்த்துப் படிக்கவெச்சாங்க. அதேபோல, ராயனூர் இலங்கை முகாமில் உள்ள பிள்ளைகளையும் அவர்களின் பள்ளியில சேர வைத்தார்கள்.

அதேபோல, முடிவெட்டாம போகும் மாணவர்களுக்கு, பள்ளி முடிஞ்ச மாலை நேரத்துல மேடமே முடிவெட்டி விடுவாங்க என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த 35 வயது பெண் : திருமணமான 2 மாதத்தில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

அனுசியா..

இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வீட்டுக்கு கழிப்பறையில் ம ர்மமான முறையில் இ ற ந் து கி டந்துள்ளார்.

சத்திஷ்கரை சேர்ந்தவர் அனுசியா (35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுசியாவின் கணவர் ம ர் ம மா ன முறையில் கடந்தாண்டு உ யிரிழந்தார்.

இந்த நிலையில் ஹித்தேஷ் என்ற தன்னை விட 10 வயது குறைவான நபருடன் அனுசியாவுக்கு காதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சூழலில் வீட்டு கழிப்பறையில் அனுசியா ச ட ல மா க க ண்டெடுக்கப்ப ட்டுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் ச ட ல த் தை கைப்ப ற்றினா ர்கள்.

அப்போது ஹித்தேஷ் கூறுகையில், மதியம் 3 மணிக்கு கழிப்பறைக்கு என் மனைவி சென்றார், வெகுநேரமாகயும் அவர் வெளியில் வரவில்லை. பின்னர் நான் உள்ளே சென்று பார்த்த போது கா யத்துடன் தரையில் வி ழுந்து கிடந்தார்.

தூ க் கி ல் தொ ங் கி ய போ து க யி று அ விழ்ந்ததால் கீழே விழுந்து ச ட ல மா க கி டந்தார் என கூறியுள்ளார். ஆனால் அவர் மீதே பொலிசாருக்கு ச ந்தேகம் வலுத்துள்ள நிலையில் தீ வி ர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். வி சாரணை முடிவில் அனுசியாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சொந்த தாய் தந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து மகன் செய்த செயல்!!

மகன் செய்த செயல்..

தலைவ லி மாத்திரை எனக் கூறி தூக்க மாத்திரையை கொடுத்து நகை மற்றும் பணத்தை தி ருடிவிட்டு தாய், தந்தையை பெற்ற மகனே வீட்டை விட்டு து ரத்திய ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் பம்மையன் (70). இவரது மனைவி ராமுத்தாய் (65). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் வேலை பார்த்தே பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் இவர்களது மகன் புவனேஷன் என்பவர் இருவரையும் பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டை செட்டில்மெண்ட்டாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அதன்பிறகு எந்த உதவியும் பெற்றோருக்கு புவனேஷன் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவலிக்கு மாத்திரை கொடுப்பதாக இருவருக்கும் தூக்கமாத்திரையை புவனேஷன் கொடுத்ததாக பெற்றோர் கு ற்றம் சாட்டியுள்ளனர்.

இருவரும் ம யக்கத்தில் இருந்தபோது தாய் கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பணத்தை தி ருடி சென்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ‘இனி வீட்டில் உங்களுக்கு இடம் இல்லை. வீடு எனக்கு மட்டுமே சொந்தம்’ என சொல்லி பெற்றோரை வீட்டை விட்டு புவனேஷன் து ரத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தங்களுக்கு நேர்ந்த கொ டு மை குறித்து முதிய தம்பதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பு கார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தெரிவித்த வயதான தம்பதியினர்,

‘எங்களை ஏ மாற்றி எடுத்துக்கொண்ட நகை, பணம் ஆகியவற்றை மீ ட் டு, மகன் புவனேஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனுக்கு தானசெட்டில்மென்ட்டாக வழங்கிய வீட்டின் பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’ என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டு ஆடை!!

உள்நாட்டு ஆடை..

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் ப த் தி க் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பி ரச்சி னைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய வடிவங்களை அறிமுகம் செய்யவுள்ளோம்.

எதிர்காலத்தில், ப த் தி க் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்.வி.கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நேற்று 5 பேர் மரணம், இன்று 3 பேர் மரணம் : இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல்கள் திணைக்களம் சற்று முன்னர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு – 11ஐச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும்,

களனி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று இத்துடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நேற்றையதினம் ஐந்து மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று மாத்திரம் இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 646 பேர் குணமாகிவீடுகளுக்கு திரும்பியதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில்கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10183ஆக உயர்ந்துள்ளது.

 

தனிமைப்படுத்தலை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய குழுவினர் செய்த மோ சமான செ யல்!!

வீடு திரும்பிய குழுவினர்..

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சென்ற குழுவொன்று பேருந்தை நிறுத்தி விட்டு ம து பா ன ம் அ ரு ந் தி யு ள் ள தா க தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விட்டு மீண்டும் வீடு நோக்கி சென்ற குழுவினரே இவ்வாறு செ யற்பட்டதாக கு ற் ற ம் சா ட்டப்பட் டுள்ளது.

இந்த நபர்கள் கம்பஹாவை நோக்கி பயணித்த பேருந்தை இடையில் நிறுத்திவிட்டு ம து பா ன வி ரு ந் து ஒ ன்றை ந டத்தியு ள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவை இயக்குனர் மிகார ஏபா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கு டி போ தை யி ல் இ ரு ந் த கு ழு வி ன ர் பே ருந்திற்கு கு ழ ப் ப ம் ஏ ற்படுத்தும் வ கையில் செ யற்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி, இரா ணுவத்தினர் மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளரிடம் அறிவித்து நிலைமையை க ட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு!!

தொற்றினால்..

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

பானந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முழு நாட்டையும் உடனே முடக்குங்கள் : ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!!

சஜித் வலியுறுத்து..

சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது.இந்த நிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.

இதனால் கொரோனாத் தொற்றுப் பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது.தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழுநாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்கவேண்டும்.

அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

திருமணத்திற்கு வந்த கொரோனா நோயாளி : புதுமண தம்பதி உட்பட 50 பேர் தனிமைப்படுத்தல்!!

கொரோனா..

பண்டாரகம கம்மன்பில பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கலந்து கொண்டமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் புதிதாக திருமணம் செய்த தம்பதி உட்பட அதில் கலந்து கொண்ட குடும்பத்தினர் நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி நிமேஷா ரத்னவீர,

இந்த திருமண நிகழ்வில் சுகாதார ஆலோசனைக்கமையவே இடம்பெற்றுள்ளது. இதில் 40 – 50 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய புதுமண தம்பதி உட்பட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மணமகனின் மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த சகோதரனுக்கே இவ்வாறு கொரோனா தொற்றிமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் குளம் உடைப்பெடுத்தமையால் பல ஏக்கர் வயல் நாசம்!!

ஊற்றுக்குளம்..

வவுனியா ஊற்றுக்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில் பல ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக நெடுங்கேணி பகுதியில் உள்ள குறித்த குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்த நிலையிலேயே குளம் உடைப்பெடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.