வவுனியா புளியங்குளத்தில் வீதிக்கு வந்த யானையால் பதற்றம்!!

புளியங்குளத்தில் ..

வவுனியா, புளியங்குளம், நெடுங்கேணி வீதியில் புளியங்குளம் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று மதியம் 1 மணியளவில் குறித்த யானை வீதிக்கு வந்ததுடன் சில மணிநேரம் குறித்த பகுதியில் நடமாடியது. இதனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

அவ்வப்போது மாலை வேளைகளில் குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதுடன், தற்போது மதிய வேளைகளிலும் வீதிக்கு வரத் தொடங்கியுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிக்கு வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த மின்சார வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகளும் அப்பகுதி மக்களும் கேட்டு நிற்கின்றனர்.

தனியார் வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவரின் பரிதாப நிலை!!

கொரோனா..

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் கொரோனா நோயாளர் அல்ல என 19 நாட்களின் பின்னர் தெரியவந்துள்ளது.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என உறுதி செய்யப்பட்ட கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த நபர் இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட 2 PCR பரிசோதனைகளின் அவர் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதியாகியமையினால் 19 நாட்களின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

அவரை அம்பியுலன்ஸ் வண்டி மூலம் தனது வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக இந்த நபர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் கொரோனா தொற்றாளர் என உறுதியாகியமையினால் அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தை 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதகைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனியார் வைத்தியசாலை PCR பரிசோதனையின் நம்பகத்தன்மை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய இரண்டாவது முறையான இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை காரணமாக அவர் தனது வெளிநாட்டு தொழிலையும் இழந்துள்ளார்.

-தமிழ்வின்-

நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதி கோட்டாபய விடுத்த செய்தி!!

ஜனாதிபதி கோட்டாபய..

கொரோனா வைரஸ் பரவலை நாட்டிற்குள் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் நாட்டை திறந்து வைப்பது கட்டாயமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தீர்மானங்கள் எடுக்கும் போது முழுமையான செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு ஏன் கொரோனா தொற்றுவதில்லை? அவர்கள் உரிய முறையில் முகக் கவசம் அணிகின்றார்கள்.

சரியான முறையில் கைக் கழுவுகின்றார். சரியான முறைகளை பின்பற்றுகின்றார்கள். இதனை தான் நாங்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.

இவற்றினை சரியான செய்தால் எந்தவொரு பிரச்சினையும் இன்றி நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். மக்கள் அவதானமாக இருந்தால் நாட்டை கொண்டு செல்ல முடியும்.

மாத சம்பளம் எடுப்பவர்களுக்கு நாட்டை மூடினால் பிரச்சினைகள் இல்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு 10 நாட்கள் நாட்டை மூடினால், அதன் நட்டத்தை ஈடு செய்வதற்கு சில நேரங்களில் ஒரு வருடமாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எங்களால் ஒரு பக்கத்தினை மாத்திரம் சிந்தித்து தீர்மானம் முடியாது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் யானை தா க் கி ஒருவர் உ யிரிழப்பு!!

மாங்குளம்..

மாங்குளம், மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யா னை தா க் கி ஒ ருவர் உ யிரிழந்து ள்ளார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தச்சு வேலைக்காக முல்லைத்தீவு – மல்லாவி, கொல்லவிளாங்குளம் பகுதிக்கு வருகை தந்து வேலை புரிந்து வந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பும் நோக்கில் கொடிகாமம் நோக்கி சென்றுள்ளார்.

இவ்வாறு கொடிகாமம் நோக்கி செல்வதற்காக பயணத்தை ஆரம்பித்த நபர் மாங்குளம் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவில் வருகை தந்த போது இரவு 10.30 மணியளவில் திடீரென வீதியை குறுக்கறுத்த யா னையுடன் மோ தி வி பத்திற்கு இ லக்காகியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த யானையானது மோட்டார் சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ந பர் மீ தும் ச ரமாரி யாக தா க் கு த ல் மே ற்கொண்டு ள்ளது.

இ ந்த தா க் கு த லி ல் கு றித்த மோ ட்டார் சை க்கிளில் ப யணித்த ந பர் சம்ப இ டத்திலேயே உ யிரிழந்து ள்ளார். சம்பவத்தில் 37 வ யதுடைய யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஆனந்தராசா விஜியானந்தன் என்ற ந பரே உ யிரிழந்து ள்ளார்.

உ யிரிழ ந்த ந பரின் ச டலம் நேற்றிரவு மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த இடத்திற்குச் சென்ற மாங்குளம் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாகும் சட்டம்!!

முகக் கவசம்..

முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமை மற்றும் உரிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்பட்ட வர்த்தமானிக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும் என அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சியில் அறிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை இன்று காலை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய முட்டை வியாபாரி!!

முட்டை வியாபாரி..

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல் மாகாணத்தில் முழுமையான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் முட்டை விற்பனை செய்யும் வியாபாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தனது முட்டைக்காக பயனாளர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளும் போது ஒன்றரை மீற்றர் தூரத்தை கடைபிடிக்கும் வகையில் பிளாஸ்டிக் கூடைகள் இரண்டினை ஒன்றிணைத்து கம்பி ஒன்றை பயன்படுத்தி பெற்றுக் கொள்கின்றார்.

அவசியமான முட்டை அளவை தெரிவித்த பின்னர் அவர் குறித்த கம்பி ஊடாக பயனாளர்களுக்கு தூரத்தில் இருந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மிகவும் சுகாதார பாதுகாப்புடன் முட்டை விற்பனையில் ஈடுபடும் குறித்த முட்டை வியாபாரிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

 

வவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன்!!

அம்மாச்சி உணவகம்..

நாட்டில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அம்மாச்சி உணவகத்தின் சுகாதார நிலைமை தொடர்பில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் அம்மாச்சி உணவகத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் மலசல கூடம், சமயலறை, களஞ்சிய அறை, விற்பனையிடம் என்பவற்றினை பார்வையிட்டதுடன் உணவகத்தின் பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார நடைமுறை தொடர்பிலும் ஆராந்திருந்தார்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காகவும் அங்குள்ள இடவசதிகளை கருத்தில் கொண்டும் குறித்த உணவகத்தில் காணப்படுகின்ற மலசலகூடத்தினை அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் மாத்திரமென தீர்மானிக்கப்பட்டதுடன் புதிய பேரூந்து நிலையத்தில் காணப்படும் விசாலமான கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக மீன் விற்பனை வீழ்ச்சி!!

மீன் விற்பனை..

இலங்கையில் பேலியகொட மீன் சந்தையில் கொவிட் – 19 கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களாக 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு தற்போது மிக அபாயகரமான சூழ்நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் வடமாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்துள்ள நிலையில் மீன் தொடர்பில் மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்திற்கு யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்ற மீன் வகைகளின் விற்பனை வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மக்கள் மீன்களை பெரிதளவில் கொள்வனவு செய்யவில்லை என்பதுடன் மீன்கள் விற்பனையின்றி நகர மீன் சந்தை, குருமன்காடு மீன் சந்தை, குழுமாட்டுச்சந்தி மீன் சந்தை போன்ற இடங்களில் மீன்கள் தேங்கிக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்களின் நடமாட்டமின்றி மீன் சந்தைகள் வெறுச்சோடி காணப்படுவதுடன் வியாபாரிகளும் நட்டமடைந்துள்ளனர்.

மீன்களை நன்கு சுத்தம் செய்து சமைத்துச் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

37 வயது பெண்ணுடன் பழகி வந்த 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

த மிழகத்தில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பழனிச்சாமி என்ற 30 வயதில் மகன் உள்ளார். பழனிச்சாமி, மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 28-ஆம் திகதி தியாகதுருகம் அருகிலுள்ள பி ரிதி விமங்கலம் கிராம ஏரிக்கரை பகுதியில் பழனிச்சாமி ம ர் ம மான முறையில் இ ற ந்து கி டந் தார்.

இது குறித்த தகவல் பொ லிசாருக்கு தெரிவிக்க, பொ லிசார் வந்து உ டலைக் கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ த னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அப்போது, தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இ ற ந்து போன பழனிச்சாமி, சம்பவ தினத்தன்று பிரியாணி பொ ட்ட லம் வாங்கி சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அப்போது அவருடன் ஒரு பெண்ணும் சென்றுள்ளார் என்பது உ றுதியா னதால், பொ லிசார் அந்த பெண் யார் என்பது குறித்து வி சார ணை மேற்கொண்டனர்.

அதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சே ர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி கோமதி(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து பொ லிசார் அவரை தே டிய போது, த லை ம றைவாக இ ருப்பதை அ றிந்தனர். அதன் பின் பொ லிசாரின் தே டலுக்கு பின், அவர் பொ லிசாரிடம் சி க்கி னார்.

கோமதி பொ லிசாரிடம் அ ளித்த வா க்கு மூ லத்தில், இ ற ந்து போ ன பழனிச்சாமிக்கும் எனக்கும் நீ ண்ட நாட்களாகவே ப ழக்கம் இ ருந்து வந்தது. ச ம்ப வத்தன்று இருவரும் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் வந்தோம். அப்போது பழனிச்சாமி ம து போ தை யில் இ ருந்தார்.

தியாகதுருகம் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் பிரியாணி வாங்கி கொண்டு பிரிதிவிமங்கலம் ஏரிப் பகுதிக்கு சென்றோம். அங்கு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இருவரும் த னி மை யில் இ ருந்தோம். பின்னர் எங்களுக்குள் ச ண் டை வந்தது. இதில் ஆ த் தி ரம டைந்த நான் பழனிச்சாமியின் க ழு த் தை து ணி யால் இ று க்கி னேன்.

அவர் இ ற ந்து போ னதை தெ ரிந்து கொண்டு அவரிடமிருந்த 3500 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு த லை ம றைவாகி வி ட்டேன் என்று வா க்கு மூ லம் அ ளித்துள்ளார்.

ஆனால், கோமதியைப் ப ற்றி வி சார ணையில் மேலும் சில தகவல்கள் கி டைத்துள்ளது. கோமதி எப்படி பழனிச்சாமியுடன் ப ழக்கம் இருக்கிறதோ, அதே போன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கடலூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று,

இதே போன்று பல்வேறு ஆண்களுடன் பணத்திற்காக த னி மையில் இ ருப்பதும், அதன் பின் அவர்களை தா க் கி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை ப றித்துச் செல்வதும் போன்ற செயலில் ஈ டுபட்டு வந்துள்ளார்.

ப ல்வேறு ஆ ண்க ளுடன் ப ணத்தி ற்காக த னிமையில் இ ருப்பதும், அ தன் பி ன் அ வர்களை அ டி த் து ப ணம், ந கை, செ ல்போன் ஆ கியவற்றை ப றி த் து ச் செ ல்வதும் போ ன்ற செ யலில் ஈ டுப ட்டு வ ந்துள் ளார்.

இ வ ர் மீ து இ து போ ன்ற வ ழக்குகள் ப ல கா வ ல் நி லையங்களில் நி லுவையில் உ ள்ளது தெ ரியவந்து ள்ளது. கை து செ ய்யப்பட் டுள்ள கோமதி ம ருத்துவம னைக்கு ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை க்கப்பட்டு ள்ளார். ப ரிசோ தனை மு டிந்த பி ன் நீ திமன் றத்தில் ஆ ஜர்படுத்த ப்பட்டு சி றையில் அ டைக்கப்படுவார் எ ன்று தெ ரிவிக்கப்பட் டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய மீதான தடை நீக்கம்!!

சனத் ஜயசூரிய..

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நேற்றுடன் பூர்த்தியாகின்றது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் சனத் ஜயசூரியவிற்கு எதிராக இரண்டாண்டு காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நீங்குவதாக சர்வதேச கிரிக்கட் பேரவையினால் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் விளையாட்டு தொடர்பான எந்தவொரு விடயத்திலும் பங்கேற்கக் கூடாது என்ற அடிப்படையில் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த இரண்டாண்டு கால தடை நீக்கப்பட்டுள்ளதனால் சனத் ஜயசூரிய சர்வதேச கிரிக்கட் வர்ணனை, பயிற்றுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு சனத் ஜயசூரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மினுவாங்கொட கொத்தணியை கட்டுப்படுத்த இரண்டு மாதங்கள் ஆகும்!!

மினுவாங்கொட கொத்தணி..

மினுவாங்கொட கொரோனா கொத்தணியை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்கள் செல்லலாம் என, பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றது.

தற்போது இந்த கொத்தணி ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 30 நாள்களுக்குள் இந்த கொத்தணியிலிருந்து 7,856 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 332 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,581 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து : வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!

கொரோனா..

அண்மையில் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 30 சதவீதமானோர் 60 வயதை விட அதிக வயதுடையவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், முன்னரை விட தற்போதுள்ள வைரஸின் தன்மையானது பரவும் வேகம் அதிகமாகும்.

சுமார் 25 வயதுடைய இளைஞர்களுடன் 60 வயதுடையவர்களை ஒப்பிட்டு அவதானிக்கும் போது 60 வயதுடையோர் மரணிக்கக் கூடிய எச்சரிக்கை 30 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது.

முதியவர்கள் எந்தளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அத்துடன், நாட்பட்ட தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த அவதான நிலைமை காணப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம் , இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவர்.

அண்மையில் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 30 சதவீதமானோர் 60 வயதை விட அதிக வயதுடையவர்களாவர். ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தமது சேவைகளை ஆற்றும் போது அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மக்கள் ஒன்று கூடும் இடங்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதால் இயன்றவரை உற்சவங்கள் வைபவங்களை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை..

இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது.

இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள் தொலைபேசிகளில் தறவிறக்கம் செய்யும் செயற்பாடு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதளாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலவசமாக டேட்டா வழங்குவதாக வரும் தகவலுடன் உள்ள Linkஐ அழுத்தும் போது அது மேலும் சமூக ஊடக பயனாளர்கள் 20 பேர் அல்லது அதற்கும் அதிகமானோருக்கு குறித்த இணைப்பை பகிர்ந்து, உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும் என அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்போது இந்த தகவல்கள் இணைய மூலம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் எவ்வித தேடலுமின்றி பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மோசடி நடவடிக்கையில் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான போலி தகவல் ஊடாக ஆபத்தான மென்பொருள்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்யப்படுகின்றது.

இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் திருடப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழில் ஒன்பது வயது சிறுமிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ்ப்பாணம்- உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 அகவை சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

உடுவில் – சங்குவேலியில் தமது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.

இந்தநிலையில் அவர்களில் 9 அகவை சிறுமிக்கே கொரோனா உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தாய்க்கும் மற்றொரு பிள்ளைக்கும் முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 அகவைக்கொண்ட மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

என்றும் இல்லாத அளவிற்கு கடனில் மூழ்கப்போகும் பிரித்தானியா : நிபுணர்கள் எச்சரிக்கை!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கும் என தொழில் செய்வோர் கணித்துள்ளனர்.

அத்துடன், ஏற்கனவே வீழச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பணிக்கால விடுமுறை முடிந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பும் நேரத்தில், 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது என அவர்கள் கணித்துள்ளனர்.

வர்த்தகம் சரியாக நடக்காததாலும், பொருளாதார வீழ்ச்சியால் வரி வசூல் பாதிக்கப்படுவதாலும், அரசின் கடன் இதுவரை இல்லாத அளவில் 50,000 கோடி பவுண்டுகளை எட்டலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், பிரித்தானியாவில் இரட்டை மந்த நிலை என்னும் ஒரு வகை பொருளாதார வீழ்ச்சியை அவர்கள் கணித்துள்ளார்கள்.

இரட்டை மந்த நிலை என்பது என்னவென்றால், ஒரு முறை வீழ்ச்சி அடைந்த பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வரத்துவங்கும்போது, அது மேலும் உயராமல் மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்வதாகும்.

பிரித்தானியாவில் அதுதான் நிகழப்போவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பிரித்தானியாவில் பொருளாதாரம், ஆண்டின் முதல் காலாண்டில் 2.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

இரண்டாவது காலாண்டில் 19.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. மூன்றாவது காலாண்டில், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டு, தொழில்கள் மீண்டும் துவக்கப்பட்டதும் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது,

அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில். அதனால், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பிரித்தானியா விடுபட்டுவிடும் என்ற ஒரு நம்பிக்கை உருவானது.

ஆனால், இப்போது மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஆண்டின் நான்காவதும் கடைசியுமான காலாண்டில் மீண்டும் பிரித்தானியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் 1000 கிலோ கிராம் உழுந்து நியாய விலையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு!!

உழுந்து..

வவுனியா பிராந்திய பிரதி விவசாயப் பணிப்பாளர் விதை, நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையத்தினால் இன்று (03.11) 1000 கிலோகிராம் உழுந்து நியாய விலையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இலங்கையில் வவுனியா மாவட்டத்திலிலேயே அதிகளவிலான உழுந்து விளைச்சல் காணப்படுகின்றது. நாட்டின் உள்ளுர் விவசாயிகளின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் உழுந்து இறக்குமதி தடை செய்யப்பட்டு உள்ளுர் உழுந்து உற்பத்தியினை ஊக்குவிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் காலபோகத்தில் உழுந்து செய்கை பிரதான பயிராக செய்கை பண்ணப்பட்டு வரப்படுகின்றது. காலபோகம் 2020/21 உழுந்து செய்கைக்கான விதை உழுந்து மிகவும் தட்டுப்பாடாக காணப்படுவதாலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால்,

விவசாயிகள் உழுந்துச்செய்கையை மேற்கொள்வதற்கு தடையாக காணப்படுகின்றது எனினும் காலபோகச்செய்கைக்காக பிரதி விவசாயப்பணிப்பாளர் விதைகள் நடுகைப்பொருட்கள் நிறுவனம் இதுவரை 25650 கிலோ விதை உழுந்தை விநியோகித்துள்ளது.

இதன் இறுதி விநியோகம் இன்று 03.11.2020 இல் 1000 கிலோ விதை உழுந்து விநியோகிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் ஆர்வமாக காணப்பட்ட போதும் அனைத்து விவசாயிகளுக்கும் விநியோகிக்க முடியாததன் காரணத்தினால் விவசாயிகள் விதை உழுந்து கிடைக்காமையினால் மிகுந்த மனத்தாக்கத்துடன் திரும்பியிருந்தனர்.