இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் மரணம்!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வெள்ளம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்றினால் அவரது ஈரல் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 29 பேர் கொரோனா மரணங்கள் ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1154 பேர் வவுனியா பம்பைமடு இராணுவமுகாம், பெரியகட்டு இராணுவமுகாம், வேலங்குளம் விமான படைத்தளம், பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவர்களில் 127 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 990 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தங்களது வீடுகளிற்கு திரும்பியுள்ள நிலையில், வேலங்குளம் முகாமில் மாத்திரம் 37 பேர் வரையில் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

கொரோனா..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியற நேரிட்டுள்ளது. வாடகை வீடுகளில் தங்கிருந்து பணிக்கும் ஊழியர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வாடகை வீடுகளை விட்டு வெளியற நேரிட்டுள்ளமையினால் வைத்தியசாலை பராமரிப்பு சேவைகள் நடத்தி செல்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா நோயாளிகளை பராமரிப்பதன் காரணமாக வைத்தியசாலை ஊழியர்களை வாடகை வீடுகளை விட்டு வெளியேற்ற உரிமையாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு அருகில் வாடகை வீடுகளில் வசிக்கும் இந்த ஊழியர்கள் தங்கள் கடமைகளுக்கு செல்வது கட்டாயமாகும். இவ்வாறான நேரத்தில் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றுவது மிகவும் அநீதியான செயல் என வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

சுகாதார சட்டத்தை மீறிய கொழும்பு மணமகன் : பலருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

மாவனெல்ல பிரதேசத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதியும் தொற்றுக்குள்ளானவர்களில் அடங்குவதாக மாவனெல்ல பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மணமகள் தரப்பினரால் நடத்தப்பட்ட திருமண நிகழ்வின் போது சுகாதார முறைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாள் மணமகன் தரப்பினரால் மாவனெல்ல ஓவத்தை பிரதேசத்தில் நடத்திய நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி எனவும் குறித்த தினத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் இருந்து பாரிய அளவிலானோர் வருகைத்தந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 120க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான மணமகன் உந்துகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணமகள் கேகாலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கேகாலை மாவட்ட கொரோனா தொற்றாளர்கள் 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3031 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் நாளை முதல் உணவகங்களில் அமுல்படுத்தப்படும் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை..

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும்.

அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்றுநீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.

இதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில்,

அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுகின்றது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகிக்க வேண்டாமென உணவக உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் எமது சுகாதார பிரிவினர் நாளையதினம் தொடக்கம் சோதனை நடவடிக்கை ஈடுபடுவார்கள். அச்சமயத்தில் இதனை மீறி செயற்படும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

 

அமெரிக்காவில் நேற்று புதிதாக இனங்காணப்பட்ட 100,000 கொரோனா தொற்றாளர்கள் : பேரழிவை நோக்கிச் செல்லும் நிலை!!

அமெரிக்காவில்..

ஒரு தொற்றுநோயின் நிழலில் ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை அறிய முழு உலகமுமே காத்திருந்த நிலையில்,நேற்றையதினம் 100,000 ற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் கண்டறியபப்பட்டுள்ளனர்.

கண்ணாடி மற்றும் முக கவசங்கள் அணிந்து சுகாதார நடைமுறைகளுடன் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்த போதும் புதிய பல கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் இனம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுகிறது. கொவிட் 19 தடுப்பூசியின் தேவை மிகவும் அவசியமானது. ஆனால் அது நம் அனைவரையும் பாதிக்கும் மோசமான பாதிப்புகளை சரிசெய்யாது.

வறுமை, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இந்த துன்பங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பு அவசரமாக தேவை என அமெரிக்காவின் உயர்மட்ட சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் வீசும் ஆரோக்கியமற்ற காற்று : ஆபத்து யாருக்கு?

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற சில தெற்காசிய நாடுகளின் மாசுபட்ட வளி இலங்கையின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் வளியின் தரம் மாசுபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி H.D.S. பிரேமசிறி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பருவமழைக்கு இடைப்பட்ட மழை பெய்து வருவதால் மாசுபட்ட வளி எல்லா திசைகளில் இருந்தும் இலங்கைக்குள் வருவதாக பிரேமசிறி கூறியுள்ளார்.

இந்த ஆரோக்கியமற்ற காற்று ஒக்டோபர் 27 முதல் கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களை பாதித்துள்ளது. இந்தநிலையில் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறியீட்டு மதிப்பு 90 முதல் 150 வரை உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்குள் வளி மாசுபாடு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது சுவாசக் கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பிரேமசிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலேசான தூசித் துகள்களுக்கு உணர்திறன் கொண்டவர்கள் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உணர்திறன் உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனவே அவர்கள் ஆபத்து கொண்டவர்களாக உள்ளனர்.

எனவே இதுபோன்ற உடல் பிரச்சனைகளை கொண்டவர்கள் தவறாமல் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். உடல்நலக் கேடுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உடல் உழைப்பு, விளையாட்டு மற்றும் வெளியில் வேலை செய்வது போன்ற கடுமையான செயல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரேமசிறி கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க தேர்தலில் தமிழர் ஒருவர் அபார வெற்றி!!

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நால்வர் வெற்றிபெற்றுள்ளனர்.

அதிலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அமோக வெற்றிபெற்றிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். கடைசி அறிக்கைகள் வந்தபோது, ​​அவர் கணக்கிடப்பட்ட மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதத்தைப் பெற்றிருந்தார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன் முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வரையில் ஜோ பைடன் முன்னிலைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நடமாடிய தென்பகுதியைச் சேர்ந்த அறுவர் தனிமைப்படுத்தலில்!!

கனகராயன் குளத்தில்..

வவுனியா – கனகராயன் குளத்தில் தென் பகுதியிலிருந்து வருகை தந்திருந்த ஆறு பேர் சுகாதார திணைக்களத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கனகராயன்குளம் – புதூர் பகுதியில் 6 பேர் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப்பலகையினை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது,

வவுனியா வடக்கு சுகாதார பிரிவினர் சந்தேகம் கொண்டு விசாரணையினை மேற்கொண்டபோது அவர்கள் கொழும்பில் இருந்து கடந்த 29ஆம் திகதி வருகை தந்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தாம் தங்கியிருந்த இடங்களை மறைத்திருந்த போதிலும் சுகாதார திணைக்களத்தினரின் தீவிர விசாரணையில் அவர்கள் கனகராயன்குளத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததுடன் கனகராயன்குளத்தில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த 6 பேரும் கனகராயன்குளத்தில் தங்கியிருந்த விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அவர்கள் சென்று வந்த வர்த்தக நிலையங்கள் சுகாதார பகுதியினரால் மூடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறித்த பகுதி சுகாதாரப்பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞர் படுகாயம்!!

கோர விபத்து..

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (05.11.2020) அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேலைக்கு சென்ற குறித்த இளைஞன் கடமைகளை முடித்துக்கொண்டு வீரபுரம் நோக்கி வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியூடாக சென்றுள்ளார்.

சூடுவெந்தபுலவு பகுதியினை அண்மித்த சமயத்தில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளினை ஓட்டிச் சென்ற 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உலுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

கொழும்பு வைத்தியசாலையில் 6 கொரோனா மரணங்கள் : காரணத்தை வெளியிட்ட வைத்தியர்!!

6 கொரோனா மரணங்கள்..

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட 10 மரணங்களில் 6 மரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

PCR பரிசோதனை மேற்கொள்ளாமையினால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக அரச மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் PCR பரிசோதனை வைத்திய ஆய்வகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தாமதம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு பாரிய சிக்கலான நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் நிலை சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை மேற்கொள்ள கூடிய வசதி இருப்பது அத்தியாவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நேரங்களில் PCR பரிசோதனை மேற்கொள்ளும் வசதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்திருந்தால், குறித்த 6 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் PCR பரிசோதனை முறை ஆரம்பிக்க கூடிய முறை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா மரணச் சடங்கில் பங்கேற்ற 50 பேருக்கு ஏற்பட்ட நிலை!!

கொரோனா..

அண்மையில் பாணந்துறை பகுதியில் உ யிரிழந்த இ ளைஞனின் ம ரணச் சடங்கில் கலந்து கொள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

27 வ ய து இ ளைஞன் உ யி ரை மா ய் த் து க் கொ ண் ட நி லையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ம ரணச் ச டங்கு நடத்தப்பட்டதில் அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ம ரணச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் நேற்று மாத்திரம் 443 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர். இதில் 25 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கண்டறியப்பட்டனர்.

418 பேர் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களின் இணைப்புக்களில் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை காலம் கொரோனா தொற்றாளியாக கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,187 ஆக உயர்ந்துள்ளது.

வைத்தியசாலைகளில் 6,305 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை 5,858 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். 24 பேர் கொரோனா தொற்றினால் உ யிரிழந்து ள்ளனர்.

 

இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா : கட்டுப்படுத்த வழிகள் இல்லை : சுகாதார அமைச்சு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து உள்ளமையினால் இன்னும் இரண்டு வருடங்கள் அதனுடன் வாழ வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது மிகவும் மோசமான நிலைமையாகும்.

இதுவரையில் 65 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR பரிசோதனைக்கமைய எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் கொரோனா தொற்றினை நாங்கள் உரிய முறையில் கட்டுப்படுத்தியுள்ளதாக கூற முடியாது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களை பின்பற்ற வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியே இல்லை என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அதிகாலையில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் கோர விபத்து : இளைஞர் படுகாயம்!!

கோர விபத்து..

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (05.11.2020) அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேலைக்கு சென்ற குறித்த இளைஞன் கடமைகளை முடித்துக்கொண்டு வீரபுரம் நோக்கி வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியூடாக சென்றுள்ளார்.

சூடுவெந்தபுலவு பகுதியினை அண்மித்த சமயத்தில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளினை ஓட்டிச் சென்ற 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உலுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

மூன்று வருடங்களுக்கு கொரோனா கொத்தணி : தொற்று நோயியல் நிபுணர் அதிர்ச்சித் தகவல்!!

கொரோனா கொத்தணி..

இலங்கையில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய கொத்தணி உருவாகும் அபாயம் என தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொதுச் செயலாளரும் தொற்று நோயியல் நிபுணருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்வாறான அபாய நிலை உள்ளமையால் அது தொடர்பில் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவரது வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது என்றும் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலை குறித்து அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான ஸ்டிக்கர் பிரச்சாரம் முன்னெடுப்பு!!

கொரோனா விழிப்புணர்வு ..

தேசிய மட்டத்திலான கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் பிரச்சாரம் வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் அலுவலகங்கள், தாய்சேய் கிளினிக் நிலையங்களிலும் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டது.

மேலும், சுகாதாரத் திணைக்களம், பொலிஸ், இளைஞர்கள் சம்மேளனமும் இணைந்து பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகளிற்கு வவுனியா பொது பஸ் நிலையத்தில் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டது.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் மற்றும் உதவி பொலிஸ்மா அதிபர், மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், வீதிப் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

முகக் கவசம் அணிதல், தனி நபர்களுக்கிடையேயான இடைவெளியை ஒரு மீற்றரை விட அதிக இடைவெளியில் பேணுதல், கை கழுவுதல், இருமும் போதும் தும்மும் போதும் வாய் மூக்கு பகுதிகளை ரிசு அல்லது முழங்கையின் உட்புறத்தால் மறைத்தல் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.