முல்லைத்தீவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் : விபத்தில் இளைஞரொருவர் பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – முள்ளியவளை, ஆலடி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைனகளை முன்னெடுத்துள்ளனர்.

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிரடிப் படையினருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட அதிரடிப்படை முகாம்கள் மூன்று தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படை முகாமில் 11 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமையினால், களனி, களுபோவில, ராஜகிரிய ஆகிய மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முகாமிற்கு மீன் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற போது இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, மிரிஹான, சீதுவ மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் 345 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது!!

நாடாளுமன்றம்..

நாடாளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் நாளைய தினமும் நாடாளுமன்றம் மூடப்படும் என நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றின் சுத்திகரிப்பு பணிகள் நாள் தோறும் நடைபெறும் என்ற போதிலும் இந்த இரண்டு நாட்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு பணியாளர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் கடமையாற்றிய காவல்துறைப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகிருந்தது. எவ்வாறெனினும், இந்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 6 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி ராகம வைத்தியசாலையில் பதிவாகியுள்ளார். இந்த சிசுவிற்கு ஆறு மாதங்களே என ராகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஆறு மாத சிசுவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் போது குறித்த சிசுவிற்கு கொவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சிசுவிற்கு மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காக அந்த சிசு முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சிசுவின் தந்தை பெஹலியகொட கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை : காரணத்தை கண்டுபிடித்த புலனாய்வுப் பிரிவு!!

கொரோனா இரண்டாவது அலை..

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு துருக்கியிலிருந்து வந்த நபரே காரணம் என புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாவது அலையின் ஆரம்பம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

துருக்கியில் இருந்து இலங்கை வந்த யுக்ரேன் விமான ஊழியர்களினால் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதென புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பாதுகாப்பு பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த யுக்ரேன் விமான ஊழியர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். இந்த குழுவில் 11 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சீதுவ பிரதேசத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். விமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் போது ஹோட்டல் ஊழியர்களும் தனிமைப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட விமான ஊழியரான யுக்ரேன் நாட்டவர் ஒருவர் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலை அனுதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய விமான ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் 60 பேரில் 8 பேர் தினமும் வீடுகளுக்கு சென்று பணிக்கு வந்துள்ளவர்களாகும். அந்த 18 பேர் செப்டெம்பர் 11ஆம் திகதி 13ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து பணிக்கு சென்றுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் ஹோட்டல் நிர்வாகத்தினர் கொரோனா சட்டத்திட்டத்தை கருத்திற்கொள்ளாமல் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு வாய்ப்பளித்துள்ளர்.

வீடுகளுக்கு தினமும் சென்ற 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அவர்களில் மூவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 13ஆம் திகதி வரை பணிக்கு சென்றுள்ளனர். ஹோட்டல் சமையல் கலைஞர், ஆடை கழுவும் பிரிவிற்கு அதிகாரியும் அவர்களுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினரை சோதனையிடும் போது இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளிடம் காணப்பட்ட கொரோனா அளவை விடவும் அதிகம் திறன் கொண்ட வைரஸ் உடலில் இருந்தமை உறுதியாகியுள்ளது.

முன்னர் இந்த வைரஸ் உடலில் நூற்றுக்கு 15 – 18 வீதமான அளவே காணப்பட்டது. எனினும் இவர்களிடம் 29 – 31 வீதம் காணப்பட்டுள்ளது. இது புதிய நிலைமையாகும். பிரென்டிக்ஸ் நோயாளியின் உடலில் 29 – 31 வீதம் வைரஸ் காணப்பட்டுள்ளது.

குறித்த யுக்ரேன் நாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர் ஒருவர் பிரென்டிக்ஸ் ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது என விசாரணை நடத்திய சிரேஷ்ட அதிகாரி உறுதி செய்துள்ளார்.

அத்துடன் யுக்ரேன் நாட்டு ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் சிலாபத்தில் இருந்து தினமும் பொது போக்குவரத்து ஊடாக சீதுவ பிரதேசத்திற்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரென்டிக்ஸ் பரவலின் முதலாவது நோயாளிக்கு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. அந்த பெண் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலும் நோய் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.

ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிரென்டிக்ஸ் பரவலின் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டாவது அலை கொரோனா பரவலின் அளவு முதலாவது அலையை விடவும் இரண்டு மடங்கு அதிகமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியா நகரில் தனியார் பேரூந்தின் நடத்துனர், சாரதி மீது இனந்தெரியாத நபர்கள் தா க் கு த ல்!!

பேரூந்தின் நடத்துனர், சாரதி மீது..

யாழ்ப்பாணத்திலிருந்து – வலஸ்முல்ல நோக்கி பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி , நடத்தினர் மீது வவுனியா நகரில் இ னந்தெ ரியாத நபர்கள் தா க் கு தல் மே ற்கொண்டு ள்ளனர்.

வவுனியா நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக நேற்று (26.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று மாலை பயணித்தினை ஆரம்பித்த குறித்த தனியார் பேரூந்து இரவு 8.10 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து.

8.20 மணியளவில் நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக தரிந்து நின்ற சமயத்தில் வாகனத்தில் வருகை தந்த இ னந்தெ ரியாத ந பர்கள் குறித்த பேரூந்தின் சாரதி , நடத்துனர் மீ து தா க் கு த ல் மே ற்கொண்டுவி ட்டு அ வ்விடத்தி லிருந்து த ப் பி த் து செ ன்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டதுடன் தா க் கு த லு க் கு உ ள்ளானவ ர்களிடம் வாக்குமூலத்தினையும் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் குறித்த பேரூந்து 9.40 மணியளவிலேயே அங்கிருந்து பயணிகளுடன் பயணத்தினை தொடர்ந்தது.

 

வவுனியாவில் முகக்கவசம் அணியாத மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் பொலிஸ்!!

முகக்கவசம்..

உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த முகக்கவசம், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது முகக்கவசம் அணியாது பயணிக்கின்றனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.குறுசிங்க அவர்களின் தலைமையிலான பொலிஸார் இன்று (26.10.2020) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முகக்கவசம் அணியாது செல்பவர்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்வர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு முகக்கவசத்தை வாங்கி அணிந்து வந்து வாகனத்தினை எடுத்துச்செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர்.

பொலிஸாரின் இச் செயற்பாடு வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் : உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயம்!!

கொரோனா..

இலங்கையில் கடந்த நான்காம் திகதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கொரோனா தொற்றாளர்களின் உடலுக்குள் உள்ள வைரஸின் அளவு அதிகமாகும். ஏனைய காலப்பகுதிகளை விடவும் தற்போது பரவும் வேகம் அதிகரித்துள்ளது. ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்துள்ளதனை காண முடிகின்றது.

இந்நிலைமையில் மேலும் வேகமாக கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளது. எனினும் இன்னமும் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. வைத்தியசாலைகள் மற்றும் நோயாளிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அதிகமாக சமூகத்திற்குள் வருகின்றார்கள். ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கின்றார்கள். இவ்வாறு தொடர்பு கொள்வதனால் பரவும் ஆபத்து அதிகமாகும்.

அரசாங்கத்திற்கு அல்லது சுகாதார பிரிவிற்கு இதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை கூட ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளது.

உடனடியாக இந்த நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயோதிபர்கள், நாள்பட்ட நோய் தொற்றாளர்களிடையே கொரோனா பரவி அதிக மரணங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று (26.10.2020) காலை 9 மணியளவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரேன மோட்டார் சைக்கில் ஒன்று நகரசபை வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் சடனாக டிப்பர் வாகனம் பிரேக் பிரயோகித்த சமயத்தில் டிப்பருக்கு பின்பக்கமாக வந்த கண்டி- யாழ்ப்பாணம் வழித்தட இ.போ.ச பேரூந்து டிப்பரின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இ.போ.ச பேரூந்தின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்த பயணியோருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

சற்றுமுன்னர் இலங்கையில் 16ஆவது கொரோனா மரணம்!!

கொரோனா…

கடந்த சில நாட்களாக இலங்கையில் சடுதியாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் 16வது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் இலவச யோக வாழ்வு பயிற்சி ஆரம்பம்!!

யோகா..

பழங்காலத்திலிருந்தே குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்ற யோகாவானது மனதினைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாகவும் பேணப்பட்டு வந்திருக்கின்றது.

மனதினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியும் மன ஆற்றலால் உண்டாகின்ற பல்வேறுபட்ட சாதனைகளும் மனம் , உடல், செயலுணர்வுகளின் கட்டுப்பாடு மற்றும் இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவு முதலியனவும் இணைந்தவொரு உருவாக்கமாக யோகதத்துவம் உள்ளது.

இதன் விளைவாக யோக தத்துவத்தினை ‘மன விஞ்ஞானம்’ (Science of mind) எனச் சுட்டித்துக் கூறுவர். அந்த வகையில் இலவச யோக வாழ்வு பயிற்சியினை வவுனியா மாவட்ட மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் என வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் அனுசரணையுடன் கிரியா பாபாஜி நிறுவனத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

அதன் முதற்கட்டமாக வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று (25.10) காலை யோக வாழ்வு பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. யோக வாழ்வு பயிற்சி வகுப்பில் சமய ஆர்வளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

 

களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா!!

கொரோனா..

களுபோவில போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் சுகாதார ஊழியர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் சம்பந்தப்பட்ட 12 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சேவைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

களுபோவில போதனா வைத்தியசாலையின் சில விடுதிகளில் நேற்று கிருமி நாசனி தெளிக்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்டதாகவும் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 3,803ஆக பதிவாகியுள்ள அதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி ஓராண்டு : வலியை விவரிக்க முடியாத பெற்றோர்!!

பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உ யிரிழந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி வரும் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் விழுந்து, இப்போது ஓராண்டாகிறது.

சிறுவன் சுஜித் கிணற்றில் சிக்கிக் கொண்ட விபத்தையும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததையும் ஆறாத வடுவாக சுமந்து வருகின்றனர் நடுக்காட்டுப்பட்டி கிராம மக்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலைராணி. இவர்களுக்கு புனித் மற்றும் சுஜித் வில்சன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.

கட்டடத் தொழிலாளியான பிரிட்டோவின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது. அதில் பிரிட்டோவின் முந்தைய தலைமுறையினர் பல வருடங்களுக்கு முன்னர் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளனர்.

தண்ணீர் வராததால், அதனை பயன்படுத்தாமல் மேலோட்டமாக மண் வைத்து மூடியிள்ளனர். அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி சோளப்பயிர் விவசாயம் செய்து வந்தார் பிரிட்டோ.

ஆழ்துளைக் கிணறு கைவிடப்பட்டிருந்த நிலையில், சமமான நிலப்பரப்பைப் போல் அந்த பகுதி இருந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையால் குழயில் மேல் பரப்பிலிருந்த மண் உள்வாங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரிட்டோவின் இளையமகன் சுஜித் எதிர்பாராத விதமாக அந்தக் குழிக்குள் விழுந்து சிக்கிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரை மீட்பதற்கான பணிகள் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட தமிழக அமைச்சர்கள் அனைவரும் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வந்தனர்.

சுமார் 82 மணிநேர மீட்புப்பணிகளுக்கு பின், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுஜித் உயிரிழந்ததாகவும், அவரின் உடல் 29ம் தேதி அதிகாலை ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுஜித்தின் உடல், நேரடியாக மருத்துவமனையில் இருந்து நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது

இந்த விபத்து நடந்து ஓர் ஆண்டு ஆகியும் அந்த காட்சிகள் நினைவில் இருப்பதாகவும், தீபாவளி கொண்டாட்டங்களையும் மறந்து மீட்பு பணிகளை மட்டுமே பார்வையிட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர் நடுக்காட்டுப்பட்டி ஊர்மக்கள்.

ஓராண்டுக்கு பிறகு நடுக்காடுப்பட்டிக்கு சென்ற பிபிசி தமிழ் குழு, அந்த ஊரைச் சேர்ந்த ராஜலெட்சுமி என்பவரிடம் பேசியது.

”தீபாவளி பண்டிகைக்காக ஊர் மக்கள் அனைவரும் தயாராகி வந்தோம். எங்கெங்கோ வேலைக்கு சென்ற மக்களும், சொந்தங்களும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

பண்டிகை கால வியாபாரங்களும், பட்டாசு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. சரியாக தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலை 7 மணி அளவில், இரண்டு வயது சிறுவன் சுஜித் குழிக்குள் சிக்கிக் கொண்டதாக எனக்கு தெரியவந்தது.

நான் அந்த பகுதிக்கு சென்று பார்க்கையில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஊர் மக்களின் கூட்டத்தை அரசு அதிகாரிகள் கலைத்துக் கொண்டிருந்தனர்.”

”இருபது அடி ஆழத்தில்தான்தான் சிறுவன் சிக்கியுள்ளான், நிச்சயம் மீட்டு விடலாம் என ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் நாற்பது அடிக்கும் கீழ் சென்றதாக கூறப்பட்டது.

சுஜித்தின் தாய் அந்த குழியின் அருகே நின்று கொண்டு கதறி அழுத காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அது பிள்ளையை சுமந்து பெற்றெடுத்த ஒரு தாயின் வேதனை.”
”மூன்று நாட்களாக பெரிய இயந்திரங்களை வைத்து துளையிட்டு சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

தொலைகாட்சி செய்திகளை பார்த்துக் கொண்டு ஊர் மக்கள் அனைவரும் காத்திருந்தோம். 24 மணி நேரத்தை கடந்ததுமே உயிர் இருக்க வாய்ப்பில்லை என தோன்றியது. இருந்தும், ஒருவேளை சுஜித் காப்பாற்றப்படுவான் என நம்பியிருந்தேன். ஆனால், சிறுவன் சடலமாக தான் எடுக்கப்பட்டான்.

இந்த சின்ன வயதில் கடவுள் சுஜித்தை எடுத்துக் கொண்டானே என ஊர்மக்கள் அனைவரும் அழுது தீர்த்தோம். தீபாவளி பண்டிகையையே மறந்துவிட்டோம். ஊரில் உள்ள சிறுவர்கள் கூட சென்ற ஆண்டு பட்டாசு வெடிக்கவில்லை. மறக்க முடியாத சோகத்தை தந்து சென்றுள்ளான் சுஜித்,” என கண்கலங்குகிறார் ராஜலெட்சுமி.

சுஜித்தின் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார் கோபால், சிறுவன் கிணற்றில் விழுத்த சில நிமிடங்களில் நேரில் சென்று பார்த்தவர் இவர்.

”சுஜித் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான் என தகவல் வந்ததும் உடனடியாக ஓடிச் சென்று பார்த்தேன். ஊர் மக்கள் இருபது பேர் அந்த குழியை சுற்றி நின்று கொண்டிருந்தனர். சுஜித்தின் தாய் அழுது கதறிக்கொண்டிருந்தாள்.

கூட்டத்தை விளக்கி குழிக்குள் பார்த்தேன். ‘அம்மா… அம்மா…’ என சுஜித்தும் அழுது கொண்டிருந்தான். அவன் அழுகும் சத்தம் மேலே இருந்த எங்களுக்கு கேட்டது. எதாவது செய்து காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்தோம்.

சில நிமிடங்களில் அதிகாரிகளும், தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து மீட்கும் பணிகளுக்கு தயாராகினர். அப்போது சிறுவன் 10 முதல் 20 அடி ஆழத்தில்தான் இருந்தான். எதாவது ஆயுதத்தை பயன்படுத்தி அவனை மேலே எடுத்துவிடுவோம் என நாங்கள் கேட்டுகொண்டோம். ஆனால், அதிகாரிகள் எங்களை தடுத்துவிட்டனர்.”

சற்று நேரத்தில் சிறுவனின் அழுகை சத்தம் கேட்கவில்லை. அவன் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான். வெளியூரிலிருந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் நபர்கள் வருவதாக தெரிவித்தனர். சில மணி நேரங்களில் மக்கள் கூட்டமும் அதிகரித்தது. அதிகாரிகளும், அமைச்சர்களும் வந்தனர்.

குழியை சுற்றி தடுப்புகளை உருவாக்கி, ஊர்மக்களை வெளியேற்றினர். அதற்கு பிறகு எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மிகப்பெரிய இயந்திர வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள், பிரம்மாண்ட விளக்குகள், ஊடகத்தினர் என நடுக்காட்டுப்பட்டி அதுவரை பார்த்திடாத பெருங்கூட்டம் அன்றைக்கு சேர்ந்தது.

ஆனால், யாராலும் சுஜித்தை காப்பாற்ற முடியவில்லை. சிறுவன் காப்பாற்றப்பட்டிருந்தால் மிகப் பெரிய சாதனையாக அது அமைந்திருக்கும். இதைவிட, குழியில் உயிரோடு பார்த்த சிறுவனை காப்பாற்றாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தான் வேதனையளிக்கிறது,” என கூறுகிறார் கோபால்.

பிரிட்டோவின் வீட்டை கடந்து செல்கையில் சுஜித்தின் நினைவுகள்தான் முதலில் தோன்றும் என அவரை இழந்துவாடும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

”நான் சுஜித்தின் பாட்டி. அவனைப் பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வருவேன். ‘எனக்காக என்ன வாங்கி வந்த’ என கேட்பான். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விளையாடுவோம், பேசுவோம், வேடிக்கைப்பார்ப்போம்.

தோட்ட வேலை அவசரத்தில் அவனது வீட்டுக்குள் போகாமல் சாலையை கடந்தாலும் என்னைப் பார்த்து ஓடி வந்துவிடுவான். அமைதியான பையன், நல்ல விவரமானவன் சொல்வதை கவனமாக கேட்டு புரிந்து கொள்பவன்.

அவன் குழியில் விழுந்தபோது நான் வெளியூர் சென்றிருந்தேன். தகவலறிந்து வந்தும் அவன் முகத்தை கூட பார்க்க முடியவில்லை. அவன் வீட்டை கடக்கும்போதெல்லாம் அந்த திண்ணையை பார்த்துக்கொள்வேன்,” என வருத்தத்துடன் பேசினார் சுஜித்தின் உறவினர் ராணி

வீடு முழுவதும் எங்கு திரும்பினாலும் சுஜித்தின் நினைவாக படங்கள் நிறைந்திருக்கின்றன. சுஜித்தின் தந்தை, தாய் மற்றும் மூத்த மகன் இங்கு வசித்து வருகின்றனர். சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறும், மீட்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பிரம்மாண்ட பள்ளங்களும் சிமென்ட் கலவை மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளன.

மகனை இழந்த சோகம் தீராத சுஜித்தின் பெற்றோர் ஓராண்டு ஆகியும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும் சோகத்தை அடக்கிக்கொண்டு பிபிசியிடம் பேசினார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ.

”இதுவரை வாழ்க்கையில் பல வேதனைகளையும் துன்பங்களையும் கடந்திருப்பேன். இந்த ஓர் ஆண்டாக நானும், எனது மனைவியும் அனுபவிக்கும் வலி விவரிக்க முடியாதது. சுஜித் நினைப்பில்லாத நாளே எங்களுக்கு இருந்ததில்லை.

பிள்ளையை பறிகொடுத்த வேதனையிலிருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. ஆனால், எங்கள் மீது சமூகவலைதளங்களில் மிகமோசமான விமரசனங்களை முன்வைக்கின்றனர். சில செய்திகளை பார்க்கும்போது தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தோன்றுவதாக எனது மனைவி என்னிடம் அழுது புலம்பியுள்ளார்.”

”ஏன் எங்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர் என தெரியவில்லை. எது எப்படியோ, என்ன பேசினாலும், எதை செய்தாலும் எனது மகன் திரும்பிவரப்போவதில்லை.

எனது கோரிக்கை ஒன்றுதான், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைகளில் எனது மகனே கடைசி ஆளாக இருக்கடும். இனிமேல் இதுபோன்ற விபத்து எங்கும் நடக்க கூடாது. அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார் பிரிட்டோ.

2019ம் ஆண்டு ஆழ்துளை கிணற்றில் சுஜித் சிக்கி உயிரிழந்த விபத்திற்கு பிறகு பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த விபத்திற்கு பிறகு தமிழகத்தில் ஆழ்துளைக்கிணறு மரணங்கள் எதுவும் நிகழாதபோதும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆழ்துளைக்கிணறு விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.

வேறு ஊரில் வசித்த கணவன் : அதிகாலையில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 28 வயது நர்ஸ் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட சம்பவம் தொடர்பாக மூவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). இவர் அங்குள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். இந்த நிலையில்,

சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டில் மேகா தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார். இதையடுத்து மேகா ச டலத்தை மீ ட் ட போலீசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்ப ற்றினர்.

அதில், மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள், தலைமை நர்ஸ்களின் து ன்புறு த்தலால் இந்த முடிவை எடுப்பதாக எழுதப்பட்டிருந்ததோடு அவர்களின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், மேகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவர் வேறு ஊரில் தங்கி பணி செய்கிறார். மேகா தனது தாயாருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு தலைமை நர்ஸ்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். கு ற்றவாளிகள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என கூறியுள்ளனர்.

 

அடிக்கடி நோயால் அவதிப்பட்ட குடும்பத்தார் : சாமியாரிடம் சென்றவர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நோயால் அவதிப்பட்ட குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சாமியாரின் செயல் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் சொந்தமாக லோடு வேன் ஒன்றை வைத்து ஓட்டி வந்தார். கடந்த சில தினங்களுக்கு சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அடிக்கடி ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படுவதாக கூறி ராஜகுமாரன் குறிகேட்டுள்ளார்.

அதற்கு அந்த சாமியார் உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும், உடனடியாக அதனை எடுக்க பூஜை நடத்த வேண்டும் என்று கூறியதோடு, இந்த பூஜைக்கு 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 சேவல் கோழிகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வருமாறும் கூறியுள்ளார்.

நோயை குணப்படுத்த மருத்துவரை நாடாமல் சாமியாரின் பேச்சை உண்மை என்று நம்பிய ராஜகுமாரன் தனது மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, தனது உறவினர் லாசர் என்பவருடன் புளியங்குடியில் இருந்து காரில் சென்னை வந்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே அந்த சாமியாரை பார்த்து 2 லட்சம் ரூபாய் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். உடனடியாக அதை பெற்று கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவேயில்லை.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த ராஜகுமாரன் இது குறித்து பொலிசில் புகாரளித்தார். இதையடுத்து மோ சடி செய்த போலி சாமியார் யுவராஜ் இருக்குமிடத்தை கண்டுபிடித்த பொலிசார் அவனை தேடி சென்ற நிலையில் உஷாரான் யுவராஜ் காரில் தப்பிசென்றுவிட்டான்.

அவனது காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத், ஆகியோரை சுற்றி வளைத்து பொலிசார் கைது செய்தனர். மேலும் பொலிசார் த ப் பி ஓ டி த லைமறைவான யுவராஜை வ லைவீ சி தே டிவருகின்றனர்.

இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய் : நேர்ந்த பரிதாபம்!!

இளைஞனுடன்..

இந்தியாவில் குழந்தையை த விக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்.

இவர் திருமணமான 28 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் ப துங்கி இருந்தார். ஏனெனில், குறித்த நபர் அந்த பெண்ணின் மைனர் மகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமி தாயாரிடம் கூற, ஆனால் அவரோ இது குறித்து நீ தந்தையிடம் கூற வேண்டாம், நீ அப்படி சொன்னால் நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று மி ரட்டியு ள்ளார்.

இருப்பினும் சிறுமி இது குறித்து புகார் தெரிவிக்க, குறித்த இளைஞன் மற்றும் தாய் கேரளாவை விட்டு வெளியேறினர். இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,

காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.