கொவிட் – 19 வைரஸ் தொற்று இன்னமும் இலங்கையில் சமூகத் தொற்றாக மாறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன இன்றைய தினம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், தற்பொழுது அடையாளம் காணப்பட்டு வரும் தொற்றாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கொத்தணிகளைச் சேர்ந்தவர்கள்.
சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் அனைத்து தீர்மானங்களையும் எடுத்து வருகிறது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தங்களது நடமாட்டத்தை வரையறுத்து கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்க வேண்டிய அவசியம் இன்னும் எழவில்லை என அரசாங்கம் கருகிறது.
நாட்டை முடக்காது நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளது. அரசாங்கம் எதனையும் மூடிமறைக்கவில்லை, இன்னும் நாட்டில் சமூகத்தொற்று ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரங்கள் உட்பட புறக்கோட்டை பகுதி மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மிகவும் பாழந்து காணப்படுகின்றன. மிகவும் அரிதாக ஓரிரு வாகனங்களை காணமுடிவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெறிச்சோடிக் காணப்படும் கொழும்பு நகரின் புகைப்படங்கள் சில ஊடங்களில் வெளியாகியுள்ளன.
வவுனியா கலைஞர்களால் No Money Production உருவாக்கத்தில் வெளியான மாயா எனும் பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றது.
வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணிலிருந்து உருவான இப்பாடலுக்கான இசை மற்றும் பாடல் வரிகள் ஸ்ரீ அருணன் வழங்கியுள்ளதுடன் பாடலை ஸ்ரீ அருணனுடன் இணைந்து மக் றொனால்ட் பாடியுள்ளார்.
இப் பாடலில் அபி , கபில் , பகீஸ் ஆகியோர் நடித்துள்ளதுடன் வீடியோ எடிட்டிங் பிரசாந், கமரா ஜோய், யூட், மாஸ்டரிங் ஜெய் மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இன்று பிற்பகல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் ஒருவார காலத்திற்குள் அறுவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொ லிஸார், இ ளைஞர் ஒ ருவரை தா க் கு ம் கா ட்சிகள் அ டங்கிய சிசிடிவி காணொளி ஒன்று சமூக ஊ டகங்களில் வை ரலாகியுள்ளது.
காணொளியில் இந்த ச ம்பவம் கடந்த 24ம் திகதி இ டம்பெற்றதாக பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இளைஞர்கள் சிலர் மு ச்சக்கர வ ண்டியில் இருந்த இ டத்தை பொ லிஸார் மு ற்றுகையி ட்டுள்ளனர். ஊ ரடங்கு உ த்தரவை மீ றியதற்காக இ ளைஞர்களை கை து செ ய்ய காவல்துறையினர் மு யற்சிப்பதாக தெரிகிறது.
இ தன்போது இ ளைஞர் ஒ ருவர் பொ லிஸாரினால் தா க் க ப் ப ட் டு ள் ளா ர். எ வ்வாறாயினும், கா ணொளியின் ந ம்பகத்தன்மை இ ன்னும் உ றுதிசெய்யப்ப டவில்லை எ ன தெ ரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்படும் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யார் என்ற விடயம் தொடர்பில் மீளவும் ஆராய்ந்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு இந்த நிலைமை தொடர்பில் மீளவும் ஆராய்ந்து பார்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலைகளில் உள்ள இடவசதி எல்லையை மீறியுள்ளது.
அதே போன்று தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள இட வசதியும் எல்லையை மீறிச் சென்றுள்ளதனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டியவர்களை பிரித்து தெரிவு செய்வதற்கு அவசியமான முறை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அத்துடன் ஏற்பட்டுள்ள நிலைமைக்கமைய நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
நாட்டில் உள்ள வளங்களுக்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புத் தடமறிதலுக்காகவும், கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பயனர்களை எச்சரிக்கவும் மொபைல் அடிப்படையிலான App ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த Appஇல் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார். அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்து பயனர்களை எச்சரிக்க இந்த App உதவும் என்று அவர் கூறினார்.
இந்த App எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்தில், மினுவாங்கொடா கொரோனா வைரஸ் கொத்தணியுடன் இணைப்பில் இருந்த நபர்களின் தொடர்புகளை கண்டறிவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், தொடர்பு தடமறிதலுக்காக மொபைல் App உருவாக்கும் யோசனை கடந்த பல மாதங்களாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திவுலப்பிட்டிய கொரோனா நோயாளர்கள் குழுவினரின் செயற்பாடு காரணமாக வைத்தியசாலை நிர்வாகம் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக சுகாதார பிரிவு மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு கிடைக்கும் உணவு சுவையில்லை எனவும், போதுமான அளவு குளியலறை மற்றும் ஏனைய வசதிகள் இல்லை எனவும் கூறி நோயாளர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
நோயாளிகள், வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களை அ ச்சுறுத்தியதுடன், குறித்த வசதிகளை வழங்கவில்லை என்றால் வைத்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்று கிராமத்தில் கொரோனா பரப்புவதாக அ ச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள திவுலபிட்டிய வைத்தியசாலையில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குழுவினருக்குள் டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இவ்வாறு வைத்தியசாலை ஊழியர்களுக்கு அ ச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்த நபர்களுக்காக டொக்யார்ட் நிறுவனம் உலர் உணவுகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த அ ச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலையை சுற்றியுள்ள பொலிஸாருக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
முகக் கவசங்கள் அதிக பட்சம் 4 மணித்தியாலங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பொது சுகாதார சிறப்பு மருத்துவர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
4 மணித்தியாலங்களில் பயன்படுத்திய பின்னர் அகற்றப்படும் முகக் கவசத்தை பாதுகாப்பாக அகற்றி குப்பை தொட்டியில் போட வேண்டும். பின்னர் புதிய முகக் கவசம் ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும்.
வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 4 மணி நேரத்தின் பின்னர் அகற்றும் முகக் கவசத்தை குப்பை தொட்டியில் போடுங்கள். ஆங்காங்கே போட வேண்டும். அதன் ஊடாக இந்த கொரோனா வைரஸ் பரவ கூடும்.
முகக் கவசம் அணியும் போது வாய் மற்றும் மூக்கு முழுமையான மூடும் வகையில் அணிவது கட்டயமாகும். முகக் கவசத்தை சரியான வகையில் பயன்படுத்தவில்லை என்றால் கொரோனா தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.
நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் மேலதிகமாக இரண்டு முகக் கவசங்களை கொண்டு செல்வது கட்டாயமாகும். அது உங்கள் சுகாதார பாதுகாப்பிற்கு நல்லது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காதலனை ப ழிவாங்குவதற்காக நான்கு வயது சி றுவனை கொ ன் று சூட்கேஸில் பார்சல் செய்த பெ ண், தற்போது நைஜீரியா இளைஞனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். 43 வயதான இவருக்கு அனந்தலட்சுமி என்ற 40 வயது மனைவியும், நிவேதா என்ற 16 வயது மகளுடன், ஆதித்யா என்ற 4 வயது மகனும் இருந்தனர்.
ஜெயக்குமார் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் மேலாளராக, வேலை பார்த்து வந்தார். இதே நிறுவனத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, பூவரசி என்ற 36 வயது பெண் வேலை பார்த்து வந்தார்.
இவர், வேப்பேரியில், தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் ஜெயக்குமார் மற்றும் பூவரசிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட, இருமுறை பூவரசி கர்ப்பமாகி உள்ளார். ஆனால்,ஜெயகுமார் திருமணம் செய்ய மறுத்ததுடன், கர்ப்பத்தையும் கலைத்து விடும்படி கூறியுள்ளார்.
இதனால், ஆ த்திரமடைந்த பூவரசி, ஜெயக்குமார் மகன் ஆதித்யாவுடன் நல்லவள் போல பழகி, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை, 17 ஆம் திகதி தன்னுடைய விடுதிக்கு அழைத்துச் சென்று, கொ லை செ ய் து,
சி றுவனின் ச டலத்தை சூட்கேசில் பார்சல் செய்து, அதன் பின், புதுச்சேரியில் இருந்து, நாகை செல்லும் பேருந்தில் அந்த பார்சலை விட்டு விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சி றுவனை ம ர் ம ந பர்கள் க ட த் தி வி ட்டதாக பூவரசி, ஜெயக்குமாரிடம் நாடகமாடியுள்ளார். இருப்பினும் பூவரசி மீது ச ந்தேகம் அடைந்த பொலிசார் அவரை வி சாரித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஆயுள் கைதியாக இருக்கும் சிறையில் இருக்கும் பூவரசி, தற்போது 35 வயதான, நைஜீரிய வாலிபரை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். பூவரசியுடன் சிறையில் இருந்த பெண் ஒருவர், தற்போது வெளியே வந்துள்ளார்.
அப்பெண் கூறுகையில், போ தை ப் பொ ரு ள் க ட த் த ல் வழக்கில் கைதான பெண் ஒருவர், சிறையில் பூவரசியுடன் அடைக்கப்பட்டு இருந்தார்.அந்தப் பெண் வாயிலாக, டில்லியில் தங்கியுள்ள, நைஜீரிய வாலிபருடன், பூவரசிக்கு காதல் ஏற்பட்டது.
அவரும், போ தை ப் பொ ரு ள் க ட த் த ல் கு ம்பலை சேர்ந்தவரா என, தெரியவில்லை. வழக்கு நடத்துவதற்காக, பூவரசி குடும்பத்தார், பல லட்சம் ரூபாயை செலவழித்து, வறுமையில் சி க் கி த விக்கின்றனர்.
திருந்தி விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு, பூவரசியின் முடிவு, தலையில் கல்லை துாக்கி போட்டது போலாகி விட்டது.
பரோலில், செப்டம்பர் 5-ஆம் திகதி முதல் 7-ஆம் திகதி வரை வெளியே வந்திருந்த பூவரசி,
அந்த நைஜீரிய வாலிபரை திருமணம் செய்வது குறித்து பேசியுள்ளார். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதால், பூவரசியின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல், கடும் சோ கத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
பில்லி சூனியத்திலிருந்து காப்பாற்றுவதாக, நோயால் அவதிப்படும் குடும்பத்தினரிடம் கூறி நம்ப வைத்த போலி சாமியார் சிக்கியுள்ளார்.
ஒரு சாமியாரை நம்பி தான் பிழைப்புக்கு ஓட்டி வந்த மினி வேனை விற்று சென்னையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் என்பவர் சென்னையில் மகேந்திரா லோடு வேன் ஓட்டி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில் இருந்து புளியங்குடி சென்று அங்கு சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
சாமியாரை பார்த்த ராஜகுமாரன் தனது குடும்பத்தினருக்கு உடல் நிலை சரி இல்லாததை குறிப்பிட்டு சோகமாக பேசியுள்ளார். இதனை பார்த்த சாமியார் உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்துள்ளார்கள்,
என்று கூறியதுடன், அவற்றை எடுப்பதற்கு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறி 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 கோழிகளை எடுத்துக்கொண்டு சென்னை வருமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து ராஜகுமாரன் தனது மினி வேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்று புளியங்குடியில் இருந்து நண்பர் ஒருவருடன் காரில் சென்னைக்கு வந்து சாமியார் யுவராஜிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் 2 கோழிகளையும் கொடுத்துள்ளார்.
இதைப்பெற்றுக் கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. இதனை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகுமாரன் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து சிசிடிவி கேமரா கட்சிகளை கொண்டு போலி சாமியார் யுவராஜ் என்பவரை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தேடிவந்தனர்.
இந்த நிலையில்தான் வேறு ஒருவருடன் சாமியார் யுவராஜ் நீண்ட நேரம் செல்போனில் பேசியதும், யுவராஜ் வேளச்சேரியில் பதுங்கி புதிதாக ஒருத்தருக்கு பில்லி சூனியம் எடுக்க பூஜை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அங்கு விரைந்த போலீசார் பூஜைக்குத் தயாராக இருந்த யுவராஜ் மற்றும் அவருடைய கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். யுவராஜுடன் அவருடைய காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கோழிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனினும் தப்பி ஓடிய யுவராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தியாவில் பணத்திற்காக இரண்டு மனைவிகளுடன் ஒன்றாக இருப்பதை வைத்து பணம் சம்பாதித்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் Vidisha பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர் இரண்டு மனைவிகளிடம் ஒன்றாக இருப்பதை ஆப்களில் நேரலையாக பதிவிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Charanjeet என்று அறியப்படும், 24 வயது மதிக்கத்தக்க நபர் மீது கடந்த 21-ஆம் திகதி அவரின் இரண்டாவது மனைவி Vidisha-வில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், பணம் சம்பாதிப்பதற்காக கணவர் அவருடன் ஒன்றாக இருப்பதை பல்வேறு ஆப்களில் நேரலையாக பதிவிடுவதாகவும், இதன் காரணமாக பல்வேறு வகைகளில் து ன்புறுத்த ப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அந்த நபர், டெக்னாலஜிகளை நன்றாக தெரிந்து வைத்துள்ளார். இதன் மூலம் மட்டும் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.
அவரின் பெயரில் மூன்று வங்கி கணக்குகள் இருந்துள்ளன. அதில் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்துள்ளது, அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட தங்க நகைகள், 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் போன்றவற்றை பொலிசார் கைப்ப ற்றியுள் ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புகார் கொடுத்த பெண்ணுக்கு, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரியவில்லை, தற்போது தான் அது தெரியவந்துள்ளதால், அவர் மேலும் அ திர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 38 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் வழங்கி வைத்தார். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகத்தில் இன்று (26.10) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதற்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதற்கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் சிபாரிசிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 38 பேருக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன்,
பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் அவரது இணைப்பாளர்கள் மற்றும் நியமன பெறுனர் எனப் பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டறியப்படுகின்ற கொரோனா தொற்றாளிகள்,பேலியகொட மீன் சந்தை மற்றும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலேயே கண்டறியப்படுவதாக தொற்று நோயியல் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுதத்சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று நோயாளிகள் சமூக மட்டத்தில் இருந்து கண்டறியப்படவில்லை என்று அவர் இன்று ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்துள்ளார்.
சமூக மட்டத்தில் இருந்து நோயாளிகள் கண்டறியப்படுவார்களானால் அது இரண்டு தொற்று இணைப்புகளில் இன்றி நோயாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இலங்கையில் கண்டறியப்படும் அனைத்து தொற்றாளிகளும் இரண்டு பிரதான தொற்றுக்களின் இணைப்பிலேயே கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு இணைப்புக்களும் பாரியளவில் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளன என்றும் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளியவளை, ஆலடி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைனகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட அதிரடிப்படை முகாம்கள் மூன்று தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை முகாமில் 11 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமையினால், களனி, களுபோவில, ராஜகிரிய ஆகிய மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முகாமிற்கு மீன் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற போது இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மிரிஹான, சீதுவ மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் 345 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.