ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார்.
19 வயதான ஜெசிந்தா இங்கிலாந்து வெஸ்ட்ஹேம் பெண்கள் கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுகிறார்.
அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை வம்சாவளியான ஜெசிந்த கலபட ஆரராச்சி தனது 5 வயதில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
தனது சகோதரர் கால் பந்து விளையாடும் விதத்தை பார்த்த பின்னர், அதில் விளையாடும் ஆர்வம் ஜெசிந்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.
9வது வயதில் மென்செஸ்டரில் உள்ள கால் பந்து விளையாட்டு பயிற்சி நிலையத்தில் இணைந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
2016- 2017 ஆம் ஆண்டுகளில் 17வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய தேசிய அணிக்காகவும் 2020 ஆம் ஆண்டில் 20 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய தேசிய அணியிலும் விளையாடியுள்ளார்.
அத்துடன் மெல்பேர்னில் உள்ள பேர்த் கிளோரி மற்றும் வெஸ்ட்ஹேம் கால் பந்து அணிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
செயற்கை முட்டைகளை பயன்படுத்தி சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை முட்டைகள் சிற்றுண்டி தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த உணவகத்தில் ரோல்ஸ் உட்கொண்ட நுகர்வோர் ஒருவர் முட்டையின் சுவை தொடர்பில் ஏற்பட்ட ச ந்தேகம் காரணமாக உணவக உரிமையாளருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உணவக உரிமையாளர் கவனம் எடுக்காத காரணத்தினால் குறித்த நுகர்வாளர் வவுனியா நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
உடன் செயற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தினை ப ரிசோ தனையிட்ட போது சிற்றுண்டி வகைகளுக்கு பிளாஸ்டிகினால் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை முட்டைகள் பயன்படுத்தப்பட்டமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகத்துடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றில் 09-09-2020 அன்று மாலை தேனீர் அருந்தச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்ட சிற்றுண்டிக்குள் இருந்த முட்டையே இவ்வாறு விநோதமாக இருந்துள்ளது.
இ.போ.சபையின் வவுனியா சாலை முகாமையாளர் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சாரதி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இ.போ.சபை தலைமைக் காரியாலயத்தினால் வவுனியா சாலை முகாமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், தலைமைக் காரியாலயத்தினால் தெரிவிக்கப்பட்ட கட்டளைக்கு மாறாக குறித்த சாரதிக்கு சார்பாக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அறிந்து கொண்ட இ.போ.சபை தலைமைக் காரியாலயம் குறித்த வவுனியா சாலை முகாமையாளரை குறித்த செயற்பாடு காரணமாக வேலையில் இருந்து இடைநிறுத்துவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இதன்படி இ.போ.சபை வவுனியா சாலை முகாமையாளரான சஹுர் என்பருக்கே இத் தற்காலிக இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர் இடமாற்றம். இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் ஆசிரியர்களைப் பாடசாலைக்கு நியமிப்பதிலும், இடமாற்றம் வழங்குவதிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதிலும், இடமாற்றம் வழங்குவதிலும் உள்ள சமச்சீர் அற்ற நடவடிக்கைகள் காரணமாக சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாகவும் காணப்படுகின்றனர்.
இதேவேளை சில பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையாகவும் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் மேலதிகமாகவும் காணப்படுகின்றது. மாணவர்களின் கற்றல் அடைவுக்கு பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதிலுள்ள குறைபாடுகள் கணிசமான அளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. கல்வித்துறையினைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஆசிரியர் வளம் முக்கியமான மனிதவளமாகப் பாடசாலைகளில் கருதப்படுகின்றது. இவ் வளங்களை முகாமை செய்வதிலுள்ள பிரச்சினைகள் காரணமாக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுவது கவலைதரும் விடயம் ஆகும்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் காணப்படுகின்ற போதும் வடக்கு மாகாணத்தின் ஆசிரியர் படையில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் படை யாழ் மாவட்டத்தால் உருவாக்கப்படுவதாகக் காணப்படுகின்றது. ஏனைய தொழில்துறைகளைப் பொறுத்தவரையில் அந்த அந்த மாவட்டங்களை நிரந்தர வசிப்படமாகக் கொண்ட ஊழியர் படையை கணிசமாகக் கொண்டுள்ளது. இதனால் அவர்களை முகாமை செய்வதில் இடமாற்றம் வழங்குவதில் அவ் திணைக்களங்கள் பாரிய இடர்பாடுகளை என்னும் எதிர்நோக்கவில்லை. நாட்டின் அரச திணைக்களங்களில் என்பது வீதத்துக்கு மேற்பட்டவை நகர் அல்லது உப நகரங்களில் அமைந்துள்ளது. ஆனால் வடமாகாணத்தில் பாடசாலைகள் பல கிராமங்களில் அமைந்துள்ளது. எனவே கல்வித்துறையில் நிலைமை மாறுபட்டது. எனவே தான் ஆசிரியர் நியமனமும், இடமாற்றங்களும் எப்போதும் வடமாகாணத்தின் பேசுபொருளாக இருக்கின்றது.
இலங்கையில் ஆசிரியர்; இடமாற்றம் வழங்குவதற்கு என தேசிய ரீதியான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை காணப்படுகின்ற போதும் மாகாணசபை அதிகாரத்தின் பிரகாரம் வடமாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை 2015.06.22 திகதி வடக்கு மாகாணசபை அமைச்சர் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கொள்கையாக வெளியிடப்பட்டது. ஆனால் அவ் இடமாற்றக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில் வடமாகாணக் கல்வியமைச்சு காட்டிவரும் மெத்தனப்போக்கு யுத்தத்தால் முற்றாக அழிவடைந்த வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள மாணவர்களின் கல்வியை மேலும் பாதிக்கின்ற விடயமாகக் காணப்படுகின்றது. கல்வி அதிகாரிகளின் குறுகிய நோக்கமும் சில ஆசிரியர் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுமே ஆசிரியர் இடமாற்றக் கொள்கையினை அமுல்படுத்த முடியாமைக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றது.
இலங்கையின் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமைக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு மாகாண ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு படிப்படியாக தமது ஓய்வு காலங்களுக்கு அண்மையிலேயே சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுவரக் கூடியதாகக் காணப்பட்டது. அப்போது கல்வியமைச்சு மத்தியில் கொழும்பில் காணப்பட்டமையினால் தமது உறவினர், அயலவர் என செல்வாக்கினைப் பயன்படுத்தி இடமாற்றம் பெறமுடியவில்லை. வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை அரசியல் அமைப்பின் 13ம் திருத்த சட்டமூலத்துடன் தான் ஆரம்பமாகின்றது. 13ம் திருத்தின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணசபையாக திருகோணமலையில் காணப்பட்ட போது பெருமளவு இடமாற்றப் பிரச்சினைகள் தோன்றவில்லை.
ஆயினும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித் தனி மாகாண கல்வியமைச்சுகளாக மாற்றப்பட்ட பின்னர் வடமாகாணக் கல்வியமைச்சு யாழ் மாவட்டத்தில் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து தான் ஆசிரியர் இடமாற்றங்கள் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையினைத் தாண்டி நீதி நியாயம் இன்றி நடைபெறுகின்றது. தமக்கு உரிமை வேண்டும், அதிகார பரவலாக்கம் வேண்டும் என்று போராடிய ஒர் இனம் அந்த போராட்டத்தால் பெற்றுக் கொண்ட சிறிய அதிகாரப் பரவலாக்கலையே சரியாகப் பயன்படுத்தவில்லை. தங்களால் நிர்வகிக்கப்படும் மாகாணக் கல்வி அமைச்சினை எவ்வாறு வினைத்திறனுடன் நிர்வகிக்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் பரவலாக்கல் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முதலாவது காரணி அரசியலமைப்பின் 13ம் திருத்தம் என சிந்திப்பதற்கு எம்மவர்களே காரணமாக அமைகின்றனர். அண்மைய காலங்களில் பத்திரிகைகளில் வெளிவருகின்ற மணிவிழா மலர்களில் ஆசிரியர்களின் சேவை விபரங்கள் நோக்குகின்ற போது சேவை ஆரம்பித்த காலம் தொடக்கம் சேவையிலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை ஒரே கல்விக் கோட்டதிலேயே தமது சேவையினை முடித்தவர்கள் பலரை அவதானிக்க முடியும். அவ்வாறு எனின் ஏன் இடமாற்றக் கொள்கைகள்? ஏன் இடமாற்றச் சபைகள் இவை செல்வாக்கு அற்ற ஆசிரியர்களுக்கு மாத்திரம் தானா? என சிந்திக்கத் தூண்டுகின்றது.
ஒவ்வொரு ஆசிரியர்களும் நாட்டின் எப்பாகத்திலும் வேலை செய்வதற்கான உடல் உள தகுதியை பெற்றுள்ளனர் என மருத்துவச் சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தி தான் தமது சேவையில் பதவியை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் வசதியான பிரதேசங்களிலிருந்து இடமாற்றம் வரும்போது வெளியே சொல்ல முடியாத காரணங்களுடன் மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து அதிகாரிகளுக்கு கடிதங்களை வரைந்து தமது இடமாற்றத்தை நிறுத்துகின்றனர். வடமாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மருத்துவக் காரணங்களுக்கு அரச வைத்திய சபையின் சிபார்சு கருத்தில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ள போதும் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி பெறும் மருத்துவச் சான்றிதழ்களுடனேயே பல ஆசிரியர்கள் தமது இடமாற்றத்தை நிராகரித்து வசதியான பிரதேசங்களில் தொடர்ச்சியாகக் கடமையாற்றுகின்றார். இவ் ஆசிரியர்களின் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படுகின்ற வரை இவ்வகையான இடமாற்றங்கள் பிரச்சினைக்குரியதாகவே காணப்படும்.
வடமாகாணக் கல்வியமைச்சின் தரவுகளின் பிரகாரம் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலுள்ள பன்னிரண்டு கல்வி வலயங்களிலும் ஆசிரியர் – மாணவர் விகிதம் அண்ணளவாகச் சமனாகக் காணப்படுகின்றது. ஆனால் பாடரீதியாக நோக்குகின்ற போது நகர்புறம் தவிர்ந்த ஏனைய வசதி வாய்ப்புக்களற்ற பிரதேசங்களில் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. வவுனியா வடக்கு, துணுக்காய், மடு, கிளிநொச்சி போன்ற வலயங்களில் பிரதான பாடங்களுக்கே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதே போல இப் பிரதேசங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மருத்துவம் மற்றும் ஏனைய தேவைகளின் பிரகாரம் மாகாணக் கல்வியமைச்சுக்கு சென்று தற்காலிக இணைப்பைப் பெற்று குறித்த எண்ணிக்கையான ஆசிரியர்கள் வசதியான பிரதேசங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்களின் சம்பளம் தொடக்கம் பதிவுகள் எல்லாம் நிரந்தர வலயத்திலேயே காணப்படுகின்றது. இவையும் ஆசிரியர் – மாணவர் விகிதக் கணிப்புகளில் தாக்கம் செலுத்துகின்றது. இதேவேளை வடமாகாண கல்வியமைச்சால் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நியமனங்களும் இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களிலேயே வழங்கப்பட்டுள்ளன என்பதும் நோக்கத்தக்கது.
ஆசிரியர் இடமாற்றம் என்பது கல்வி தொடர்பான பிரதேச ரீதியான வேறுபாடுகளை முடியுமானவரை கட்டுப்படுத்தி மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை தடையின்றி தொடர்சியாக மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் முதல் நியமனத்தில் ஆசிரியராக கஷ்ட பிரதேசத்தில் நியமனம் பெறும் ஆசிரியர்களை ஆறு வருட முடிவில் தமது சொந்த வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குதலையே இடமாற்றக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இவ்வாறான இடமாற்றக் கொள்கை காரணமாக என்னும் ஓர் இரு வருடங்களில் வடமாகாண கல்வியமைச்சு பாரிய நெருக்கடியினைச் சந்திக்கப் போகிறது.
ஒரு ஆசிரியர் வெளிமாவட்டங்களில் 6 வருடம் கஷ்ட பிரதேசங்களில் வேலை செய்துள்ளார் எனின் அவர் இடமாற்றம் பெறுவதற்கான தகுதியினைப் பெற்றுள்ளார். ஆனால் அதை அவர் யாழ் மாவட்டத்துக்கு இடமாற்றம் பெறுவதற்குகான தகுதியாகக் கல்வியமைச்சு கருதுகின்றது. அவ்வாறு கல்வியமைச்சு கருதுவதற்கும் ஒரு நியாயம் இருப்பதனை மறுக்க முடியாது. யாழ் மாவட்டத்தில் பல ஆசிரியர்கள் தமது சொந்த வலய கோட்டங்களிலேயே நியமனகாலம் தொடக்கம் கடமையாற்றுகின்றனர். அவர்கள் ஏனைய வலயங்களுக்கு ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று கடமையாற்றுவதற்கு தயாரில்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் கஷ்ட பிரதேசங்களில் முதல் நியமனம் பெற்று வெளிமாவட்டங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்வி வாய்ப்புக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சினைகள், உடல் ரீதியான பிரச்சினைகள், குழந்தைப்பேறு, குடும்பத்தை தொடர்ச்சியாகப் பிரிந்து இருத்தல் போன்ற துன்பங்களைத் தொடர்ச்சியாக அனுபவிக்கின்றனர். இதனால் அவர்களின்;;; கற்பித்தல் ஊக்கம் குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை வடமாகாண கல்வியமைச்சு அண்மைய சில வருடங்களில் வழங்கிய முதல் நியமனங்களை வசதியான பிரதேசங்களிலேயே வழங்கி ஆசிரியர் இடமாற்றச் சுற்று வட்டத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றது. இதேசமயம் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தீவுப்பகுதிக்கோ வடமராட்சி கிழக்குப் பகுதிக்கோ சென்று கடமையாற்றுவதற்கும் தயார் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதே போல் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்டிக்குளம், நெடுங்கேணி போன்ற பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி தவிர்க்கின்றனர். இது சில ஆசிரியர்களின் குறுகிய மனப்பாங்கை வெளிக்காட்டுகின்றது.
இதேசமயம் அதிகஷ்ட வெளிமாவட்டங்களில் முதல் நியமனங்கள் பெறுபவர்கள் வசதியுடைய பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு ஆறு, ஏழு வருடங்கள் தொடர்ச்சியான சேவையினைப் பூர்த்தியாக்க வேண்டும். ஆனால் யாழ் மாவட்டத்தில் வசதியுடைய பாடசாலைகளிலிருந்து வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளில் சொந்த வலயங்களில் மீண்டும் ஆசிரியராக இடமாற்றம் பெறலாம் என்ற சலுகை வழங்கப்படுகின்றது. இது ஆசிரியர்களைக் கல்வியமைச்சு பாகுபாடாக நடத்துகின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு பாகுபாடு காட்டுதலை எதிர்கின்றது.
எனவே வடமாகாண கல்வியமைச்சு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே வகையான இடமாற்றக்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய வெளிமாவட்ட சேவையினை ஆறு அல்லது ஏழு வருடங்களாக வழங்க வேண்டும். ஆறு அல்லது ஏழு வருடங்கள் கற்பிக்கின்ற போது தான் அந்த மாணவர்களின் அடைவுகளுக்கு அந்த ஆசிரியர் வகைகூற வேண்டியவர் ஆகின்றார். வெறுமனே மூன்று வருடங்கள் கடமையாற்றுவதால் அந்த பிரதேச மாணவர்கள் எந்தவித நன்மைகளையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இதேவேளை வடமாகாண கல்வியமைச்சு ஆசிரியர்களின் தரவுகளைப் பயன்படுத்தி இணைய வழிச் செயலிகள் மூலம் இடமாற்றத்;தைச் செயற்படுத்த வேண்டும். அப்போது தான் செல்வாக்கின் அடிப்படையில் வெளிமாவட்ட சேவையினைத் தவிர்த்து வருபவர்களின் விபரங்களை இனங்காண முடியும். தமது பி;ள்ளைகள் போலவே வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள பிள்ளைகளும் கல்வி பயில வேண்டும் என்கின்ற சமூக சிந்தனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறான சமூக சிந்தனை அற்ற ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களிடம் எவ்வாறு சமூக சிந்தனையுள்ள ஒரு எதிர்காலச் சமூகத்தை எதிர்பார்க்க முடியும்.
இதேசமயம் வளமான ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஒரே பிரதேசத்தில் கடமையாற்றுவதனை தவிர்பதன் மூலம் அவர்களின் வளங்களை ஏனைய பிரதேச மாணவர்களும் பெற்றுக் கொள்வதற்கு ஆசிரிய இடமாற்றம் என்பது அவசியமானது. வேறுபட்ட சூழலில் ஆசிரியர்கள் தம்மை வளப்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பை ஆசிரியர்களுக்கு இடமாற்றம் தருகின்றது. இதேவேளை ஒரு பாடசாலையில் தொடர்சியாகக் கடமையாற்ற அனுமதிப்பதன் மூலம் நிர்வாகச் சிக்கல்கள், நிதிமோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. ஆசிரியர் தனித்தனிக் குழுக்களாகச் செயற்படல், நிர்வாகத்தைக் குழப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு பாடசாலையில் கடமையாற்றல் ஒரு காரணியாக இருக்கும். இது மாணவரின் கற்றலையும் பாதிப்படையச் செய்யும்.
இதேசமயம் வடக்கு மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பாடங்களுக்காக ஆசிரியர் பிரதான உற்பத்தி மையமாக யாழ் பல்கலைக்கழகமே காணப்படுகின்றது. ஆனால் அண்மைக் காலங்களில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. இது எதிர்காலத்தில் வடமாகாணத்துக்கு தேவையான கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்பது தெளிவாகின்றது.
எனவே இப்போது தொடக்கம் இந்த ஆசிரியர்களின் பரம்பலை சீராக்குவது மிகவும் அவசியமானது ஆகும். அதன் மூலம் வன்னிப் பிரதேசங்களில் மாணவர்கள் உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கணித, விஞ்ஞான பட்டதாரிகளை அந்த பிரதேசங்களில் உருவாக்குவதன் மூலம் அந்த அந்த பிரதேசத் தேவைகளை அந்த அந்த பிரதேச ஆசிரியர்;களை உருவாக்குவதன் மூலமே தீர்க்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதேவேளை வடமாகாணக் கல்வியமைச்சு அழகியல் பாட ஆசிரியர்களை ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கினால் யாழ் மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்குவதாகச் சில ஆண்டுகளாகக் கூறுகின்றது. உண்மையிலேயே குறித்த பாடத்துறையில் அரச நிதியைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றவர்களின் வளங்களை விணாக்குகின்ற செயற்பாடாகவே இதனைக் கருதலாம். இவற்றை தவிர்த்து வெளிமாவட்ட சேவையை முடிக்காத அழகியற் பாட ஆசிரியர்களுக்கு வெளிமாவட்ட இடமாற்றங்களை வழங்கி அதற்கு மாற்று ஒழுங்குகளை மேற்கொள்ள மாகாண கல்வியமைச்சு முயற்சிக்க வேண்டும்.
இதே வேளை ஆசிரியர் இடமாற்றத்தை ஓரளவு ஏனும் நீதியாகச் செயற்படுத்த வேண்டும். ஏனின் ஆசிரியர்களின் தரவுகள் அவர்களின் தனிப்பட்ட கோவைகளுடன் ஒப்பு நோக்கி கணனி மயப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இணையம் மூலமான செயலிகள் மூலம் செயற்படுத்தப்படல் வேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக இடமாற்றத்தை நிராகரிக்க விண்ணப்பிக்கும் ஆசிரியர்களைக் கல்வியமைச்சு நியமிக்கும் அரச வைத்திய சபை முன் தோன்றி மருத்துவக் காரணங்களை உறுதிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
போதியளவு நேரசூசி இன்றிய ஆசிரியர், விபரங்கள் அதிபர்கள் மூலம் பெற்று பொருத்தமான பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க வேண்டும். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற வசதியான பிரதேசங்களில் கடமையாற்றும் வெளிமாவட்ட சேவையில் ஈடுபடாத ஆசிரியர்களை இனங்கண்டு வயது அடிப்படையில் ஏழு வருடங்கள் கட்டாயம் வெளிமாவட்ட சேவைக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். முதல் நியமனங்களை கட்டாயமாக வெளிமாவட்ட சேவைகளாகவே வழங்கப்படல் வேண்டும். பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு பத்து வருடங்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்ற நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டு நியமனங்களை வழங்க வேண்டும்.
இதே வேளை வடமாகாணக் கல்வியமைச்சு, கல்வித் திணைக்களம் என்பவை வடமாகாணத்தின் மையமான மாங்குளப் பிரதேசத்திற்கு இடமாற்றப்படல் வேண்டும். இதன் மூலம் வன்னிப் பிரதேச மாணவர்கள் கற்றலுக்காக ஆசிரியர்களை வேண்டி தவிக்கும் தவிர்ப்பு கல்வி நிர்வாகிகளுக்குப் புரியும். அதேசமயம் கல்வியமைச்சு யாழ் மாவட்டத்தில் இருப்பதால் தமது இடமாற்றத்தை இலகுவாக கல்வியமைச்சில் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் உறவுகளைக் கொண்டு தவிர்பதும் தடைப்படும்.
இதேவேளை கஷ்டப் பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்றுவதுடன் கல்வியமைச்சின் கடமை முடிந்து விடவில்லை அவர்களுக்கு கவர்ச்சிகரமாக கொடுப்பனவை வழங்குதல், விடுதி வசதிகளை வழங்குதல், இலவசப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல், கஷ்டப்பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்குப் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தரல், குறைந்த வட்டியுடனான கடன்கள், பதவியுயர்வின் போதான சலுகைகள் என்பன போன்ற முற்போக்கான திட்டங்களை வடமாகாண கல்வியமைச்சு மத்திய கல்வியமைச்சுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இதே சமயம் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விசேட வகுப்பு ஒன்றை உருவாக்குதல் மூலம் ஆசிரியர்களின் வெளிமாவட்ட சேவையினை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் மனங்களில் குறுகிய மனப்பான்மை அகன்று சமூக சிந்தனை உருவாகும் வரை வடமாகாண ஆசிரியர் இடமாற்றம் என்பது வடமாகாணத்தின் பேசுபொருளாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார்.
பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
தான் 6ஆம் வகுப்பு கற்ற போதிலும், தன்னால் சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற கூடிய திறன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமல்லாமல் விலங்கியல் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற லேஹன்ஸா ஆவர்த்தன அட்டவணையை சில நொடிகளில் படித்து பாடசாலை அதிபர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
செனுலி தனது முதல் ஆண்டில் இருந்தபோதும் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார் என்று அவரது பெற்றோர் கூறுகிறார்கள்.
சிங்கள மொழில் கற்கும் அவர் ஆங்கிலத்தில் இருந்தளவு திறமையை காட்டியது ஆச்சரியமாக இருந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணித பாடத்தில் விசேட திறமையை காட்டும் அவர் நம்பமுடியாத அளவிற்கு பில்லியன்களையும் டிரில்லியன்களையும் கணக்கிடுவார் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
“எனக்கு 6ஆம் வகுப்பிலேயே சாதாரண தர பரீட்சை எழுத வேண்டும். அனைத்து பாடத்தில் ஏ சித்தி பெற முடியும். எனக்கு கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் உட்பட பல விடயங்களை செய்ய முடியும். எனக்கு உதவி செய்த ஒருவர் இருந்தால் என்னால் இலங்கைக்காக பல்வேறு வெற்றிகளை பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் மகளாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார்.
இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார். 1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்தார்.
நடிகர் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் ஸ்ரீவித்யாவிற்கு நட்பு ஏற்பட்டது. காதல் தோல்வியில் இருந்த ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து ஆறுதல் கூறி வந்தார். அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது.
ஶ்ரீவித்யா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். ஸ்ரீவித்யா வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்து ஒரு வழியாக மதம் மாறி 1976ஆம் ஆண்டு ஜார்ஸ் தாமஸை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார். படப்பிடிப்பு காரணமாக வெளி இடங்களில் இருப்பதால் தனது குடும்ப செலவிற்கு தேவையான பணம், ஆகிய வங்கியில் காசோலை மூலம் கணவர் தாமஸ் பொறுப்பில் விட்டார்.
நாட்கள் செல்ல செல்ல அவர் ஸ்ரீவித்யா போல் மோசடி கையழுத்து போட்டு அவரின் பணத்தை எடுத்தார். இந்த விவரம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிய வர தன்னை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது அவர் புரிந்து கொண்டார்.
பின்னர் கணவர் தாமஸ் 1980ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். இருந்த போதிலும் கணவர் தாமஸ் இவர் வங்கி கணக்கில் இவரைப்போல் கையழுத்து போட்டு மீண்டும் பணத்தை எடுத்து சென்றார். பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி முன்னணி நடிகையாக வலம் வந்தார்,
ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அ டியான பு ற்றுநோயால் பாதிக்கப்பட்டார் ஸ்ரீவித்யா. அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. அழகிய மேனியையும் அற்புத குரலையும் சின்னாபின்னபடுத்தி சீ ரழித்து சிரித்தது தலையெழுத்து, லட்சக்கணக்கான ரசிகர்களை அ ழவைத்துப் பார்த்து ரசித்தது விதி.
பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூ ன்யமாகி போனது. தனிமை, ஏகாந்தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கைதியின் நிலைக்கு ஆளானார்.
அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அதனை நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை.
திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆய்வு கழகம் மற்றும் மருத்துவனையில் தனி அறையில் தலை முடி எல்லாம் உதிர்ந்து போய் மிகவும் ப ரிதாபகரமான நிலையில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்றார்.
அந்த சமயத்தில் யாரையும் பார்க்க மறுத்த ஸ்ரீவித்யா நடிகர் கமலை மட்டும் பார்க்க அனுமதித்தார். மருத்துவமனையில் உ ணர்ச்சி வசப்பட்டு கமல் அ ழு து வெளியே வந்து உடல் நலம்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம் என தெரிவித்தார். பல்வேறு போ ராட்டங்க ளுக்கு பிறகு தனது 53வது வயதில் 2006ல் ஸ்ரீவித்யா கா லமானார்.
கழிப்பறையில் மொபைலைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் இடத்தில் சுறுக்கென வ லிக்க, ப தறிப்போய் எழுந்திருக்கிறார்.
தாய்லாந்தில் வாழும் Siraphop Masukarat (18) வ லி தா ங்காமல் குனிந்து பார்க்க, மலைப்பாம்பு ஒன்று அவரது உ றுப்பைக் கவ்விகொண்டிருந்திருக்கிறது.
அய்யோ அம்மா என அவர் போட்ட சத்தத்தில் அவரது தாயர் ஓடி வர, கழிவறை முழுவதும் ஒரே இர த்தமாக இருந்திருக்கின்றது.
உடனே மகனை ஆசுவாசப்படுத்திவிட்டு, மருத்துவ உதவிக்குழுவை அழைத்திருக்கிறார் Masukaratஇன் தாய். அவர்கள் வந்து Masukaratக்கு முதலுதவி அளித்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இதற்கிடையில் Masukaratஇன் தாய் பாம்பு பிடிப்பவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வந்து பாம்பைத் தேட, அது கழிப்பறைக் கோப்பைக்குள்ளேயேதான் இருந்திருக்கிறது.
அதை பிடித்தவர்கள், அது ஒரு விஷமற்ற மலைப்பாம்பு என்று கூறியிருக்கிறார்கள். அதனால்தான் Masukarat சிறு கா யங்களுடன் உ யிர் பி ழைத்திருக்கிறார்.
இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டுக்குள் இ ளம் பெ ண் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தியா தேவி. இவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகவுள்ளது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அ டிக்க டி ச ண் டை ஏ ற்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தேவியை அவர் தாய் வீட்டில் கணவர் கொண்டு விட்டுள்ளார்.
இதை விரும்பாத தேவி அப்போதிருந்தே வே தனையில் இருந்திருக்கிறார். இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு கணவருடன் வெகு நேரம் தேவி போனில் பேசிய நிலையில் இருவருக்கும் வா க்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் தனது அறைக்கு தேவி தூங்க சென்றுவிட்டார், நேற்று காலை வெகுநேரமாக அறையில் இருந்து அவர் வெளியில் வரவில்லை.
இதையடுத்து குடும்பத்தார் க தவை உ டை த் து சென்று உள்ளே பார்த்த போது தேவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக கி டப்பதை பா ர்த்து அ திர்ச்சி யடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து தேவி ச ட ல த் தை கைப் பற்றிவி ட்டு இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கணவன் கல்லூரி மாணவியுடன் ஓ ட்டம் பி டித்ததால், மிகுந்த வே தனையில் இருந்த மனைவி 2 ம கன்களை எ ரி த் து கொ ன் று வி ட் டு, தா னு ம் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி யுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (45). விவசாயியான இவருக்கு ராதா(34) என்ற மனைவியும், அபிஷேக்(13) மற்றும் அபிரித்(9) என்ற மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் முத்து அறந்தாங்கி ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவியுடன் முத்து நெ ருங்கி ப ழகி வந்துள்ளார்.
இதை அறிந்த மனைவி அவரை க ண்டித்து ள்ளார். மா ணவியின் பெற்றோருக்கும் இந்த விவகாரம் தெரியவர அவர்களும் மா ணவியை கண்டித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன் தினம் காலை முத்து வீட்டை விட்டு வெளியேறி மாணவியை அழைத்துக் கொண்டு ஓ டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில்,
அறந்தாங்கி பொலிசார் முத்து மீது வழக்குப்பதிவு செய்து தே டி வருகின்றனர். இதற்கிடையே, தனது கணவர், மாணவியுடன் ஓ டியதால் அவமானம் தாங்கமுடியாமல் ராதா ம னமுடை ந்தார்.
இதே வேதனையில், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் 2 ம கன்களுக்கு தூ க் க மா த்திரை கொ டுத்து தூ ங்க வை த்து ள்ளார். அதன் பின், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெ ட்ரோலை 2 பேர் மீதும் ஊ ற் றி தீ வைத் துள் ளார். பின்னர் த ன் மீ தும் பெ ட்ரோலை ஊ ற்றிக் கொண்டு தீவை த்துக் கொ ண்டார்.
இவர்களின் அ ல ற ல் ச த் த ம் கே ட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கா ப்பாற்ற முயன்றனர். ஆனால், ராதாவும், அபிரித்தும் சம்பவ இடத்திலேயே உ யிரிழ ந்தனர்.
ப லத்த கா யமடைந்த அபிஷேக் மற்றும் இவர்களை கா ப்பாற்ற முயன்று கா யம் அடைந்த ஆனந்த், சத்தியமூர்த்தி ஆகியோரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர்களில், அபிஷேக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உ யிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து நாகுடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரித்து வருகின்றனர்.
தென்னிலங்கை ரானா – ஹூகம என்ற இடத்தில் உந்துருளி ஒன்றை முச்சக்கர வண்டி மோதிச்சென்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த 12 அகவை மா ணவர் கொ ல்லப்ப ட்டார். இருவர் கா யமடைந்தனர்.
வி பத்தில் கொ ல்லப் பட்ட மா ணவனின் த ந்தை மகனையும், மகளையும் உந்துருளியில் ஏற்றிக்கொண்டு பாடசாலையில் இருந்து வீடு செல்லும் வழியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கா யமடைந்த தந்தையும், மகளும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்தில் சம்பந்தப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர வண்டியுடன் த ப்பிச்செ ன்றுள்ளார். அவரை கைதுசெய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்
கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளான ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ எண்ணெய்க் கப்பல் இருந்த கடல் பகுதியில் தென்படும் எரிபொருள் படிமம் அந்தக் கப்பலின் எரிபொருள் தங்கியில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டவை என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் கப்பலில் உள்ள மசகு எண்ணெய் தாங்கியில் இருந்து இதுவரை எந்தவித கசிவும் ஏற்படவில்லை என்று கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் கடற்படையின் சுழியோடிகளைப் பயன்படுத்தி கப்பலின் கீழ் பகுதியை ஆராயத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கப்பலால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க, கப்பலை நாட்டில் இருந்து 200 கடல் மைல் தூரத்துக்கு இழுத்துச் செல்லுமாறு சட்டமா அதிபர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆனபோதும் நேற்று முன்தினம் 33 கடல் மைல் தொலைவில் இருந்த கப்பல், நேற்று காலை 50 கடல் மைல் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது எனக் கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் (data packages) இணையத்தரவு பொதிகள் குறித்து பயனர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வை காண முயற்சிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இது தொடர்பில் நேற்று தகவல் வழங்கியுள்ளார்.
இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தினசரி பயன்பாட்டிற்கான இரண்டு ஒதுக்கீடுகளைக் கொண்ட இணையத்தரவு பொதிகளை வழங்கிவருவதை நியாயமற்றவை என்று பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்,
ஏனெனில் பெரும்பாலானவர்கள் இரவு நேர இணையத்தரவுகளைப் பயன்படுத்துவதில்லை.
எனினும் தொலைதொடர்பு நிறுவனங்கள் இணையத்தரவுகளின் பயன்பாட்டைப் பொருட்படுத்தாமல் முழு பொதிக்கும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பயனர்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொலைதொடர்பு நிறுவனங்கள் தினசரி பயன்பாட்டிற்கான இரண்டு ஒதுக்கீடுகள் உட்பட தரவு தொகுப்புகளை வழங்குகின்றன.
அனைத்து பயனர்களையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்க இந்த அமைப்பு இயலாது என்பதற்காகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி பயன்பாட்டுக்கான இரண்டு தரவு ஒதுக்கீடுகளை வழங்குவதாக அமைச்சர் விளக்கினார். இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் அனைத்து பயனர்களும் ஒரே நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்தினால் இந்த அமைப்பு தாங்கிக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பகல் நேரத்தில் நெரிசலைக் குறைக்க உச்ச மற்றும் அதிகப்பட்ச நேரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த தொகுப்புகள் திரைப்பட பதிவிறக்கங்கள் போன்ற சில அத்தியாவசியமற்ற செயல்களை அதிகபட்ச நேரங்களில் நடத்த உதவுகின்றன. இது பகல் நேர பயன்பாட்டின் சுமையை குறைக்கிறது என்றும் அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டார்.
போ தை ப் பொ ரு ள் ச ந்தேக ந பரை கை து செய்ய சென்ற பொ லிஸ் அதிகாரிகள் குழு நேற்று பண்டாரகம, அட்டலுகம பகுதியில் பெ ண்கள் உ ள்ளிட்ட ஒ ரு கு ழுவினரால் பா திக்கப்பட் டிருந்தனர்.
இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரிகளை பெ ண்கள் கு ழுவினர் அ டித்து ள்ளனர்.
அத்துடன், அந்த குழுவில் இருந்த பெ ண் ஒ ருவர் பொலிஸ் அதிகாரியின் கை யை க டித்து ள்ளார். இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வை ரலாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கை து செய்யப்பட்டுள்ள ஐ ந்து பேரை எதிர்வரும் 24ம் திகதி வரையில் வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கை து செ ய்யப்பட் டவர்களில் 15 வ யதான சி று மி ஒ ருவரும் இ ருப்பதாக தெ ரிவிக்கப்ப டுகின்றது.
போ தை ப் பொ ரு ள் வி யாபாரம் தொடர்பில் பண்டாரகம, அட்டலுகம, மாரவ பிரதேசத்தில் சு ற் றி வ ளை ப் பி ற் கு செ ன்ற பொ லிஸ் அ திகாரிகள் மீ து இவ்வாறு மே ற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட சாரியை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மருத்துவர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில், அவரை பார்க்க வந்துள்ளார். நேற்று இரவு மருத்துவரது மகளின் வெள்ளவத்தை பகுதியிலுள்ள இல்லத்தில் அவர் தங்கியிருக்கின்றார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் ஊடாக மருத்துவரது மகளுடன் பொலிஸார் தொடர்புகொண்டு பிறிதொரு சாரியை குறித்த பெண்ணுக்கு வழங்கும்படி பணித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலா பயணிகளை குழுக்களாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறை வகுக்கப்பட்டிருப்பதாகவும் சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள மாலைதீவு தூதுவர் ஓமார் அப்துல் ரசாக் மற்றும் பிரசன்ன ரணதுங்கவிற்கு இடையில் நேற்று முன்தினம் (09.09) நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத் தொழில்துறையை மேம்படுத்தவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது மாலைதீவு தூதுவர் விமான நிலையங்களை எப்போது திறப்பதற்கு எதிர்பாரத்துள்ளீர்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேட்டுக்கொண்டார்.
கட்டுநாயக்கா மற்றும் மத்தளை விமான நிலையங்களை விரைவாக சுற்றுலாப்பயணிகளுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி செல்ல தயாராக இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தவறான ஆசனத்தில் பயணி ஒருவர் அமர்ந்தமையினால் ஏற்பட்ட கு ழப்பநிலையை அடுத்து, குறித்த பயணியை விமானத்தில் இருந்து இறக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விமான பயணி தனக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்துக் கொள்ளாமையினால் விமான ஊழியர்களுடன் தொடர்ந்து வாய்த்த கராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தீவிரமடையும் போது இன்னும் ஒரு பயணி தனது கையக்க தொலைபேசியில் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 6 நோயாளிகளை அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசன பகுதியில் இந்த நபர் அமர்ந்துள்ளார்.
அவருக்கான ஆசனத்தில் அவரை அமருமாறு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அவர் அந்த கோரிக்கையை நிராகரித்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் ம ன நோ யினால் பா திக்கப்பட்ட ஒருவர் என பின்னர் அடையாளம் காணபட்ட நிலையில் அவர் வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.