கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி : தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று!!

கொரோனா..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசகர் அனுராதபுரம் பிரதேசத்தில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு முதலாம் திகதி சென்றுள்ள நிலையில் இரண்டாம் திகதி மீண்டும் அனுராதபுரத்தில் உள்ள திஸா வெவ முகாமிற்கு சென்றுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வந்த அந்த அதிகாரி உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனால் முகாமிற்கு செல்லாமல் மீண்டும் ராஜாங்கனயாய 5 பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த அதிகாரியின் உறவினரின் இறுதி சடங்கு நடைபெற்ற ராஜாங்கன 3 இல் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார். மரண வீட்டு சடங்கு 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசகர் கலந்து கொண்ட மரண வீட்டு நிகழ்வு மற்றும் தானத்திற்காக கலந்து கொண்ட 230 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய ஆலோசகரின் பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளும் 11ஆம் மற்றும் ஒன்றரை வயதுடையவர்களாகும்.

11 வயதுடைய பிள்ளை 4, 6 மற்றும் 7ஆம் திகதி பாடசாலைக்கு சென்றுள்ளார். அவரது வகுப்பில் உள்ள மாணவர்கள் 70 பேரை தேடி அவர்களை தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார்!!

மீண்டும் கட்டுப்பாடுகள்..

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆபத்து இன்னமும் குறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் 4 இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பீசீஆர் பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா நோயாளர்கள் தொடர்பில் போலி பிரச்சாரங்கள் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதி மீண்டும் மாற்றம்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் திறக்கப்படும் திகதி ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதனை கருத்திற் கொண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பின்னர் ஒரு நாள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் திறக்கப்படும் உரிய திகதியை இன்னமும் அறிவிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று : யாழில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த ஒருவருடன் பழகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர். முன்னதாக மாநகர சபை பகுதி மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்திருந்தார்.

யாழ். மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர.

இதனால் அங்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயின் ஒத்துழைப்புடன் சீ ரழிக்கப்பட்ட சி றுமி : இருவருக்கு விளக்கமறியல்!!

தாயின் ஒத்துழைப்புடன்..

தாயின் ஒத்துழைப்புடன் 13 வ யது சி றுமியை பா லி ய ல் வ ன்மப்படு த்திய தாயையும், தா யின் க ள்ளக் கா தலனையும் எதிர்வரும் 22ம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 வருடங்களாக தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில் குறித்த சி றுமியின் தா ய் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளார்.

சுற்றுலாச் செல்வதாகக் கூறி ம களை அழைத்துச் சென்ற தாய் இரவு விடுதியொன்றில் ம களை த னியான அ றையொன்றில் தங்க வைத்து விட்டு குறித்த கா தலனுடன் தா ய் தனியாக இருந்துள்ளார்.

அத்துடன் மகளுக்கு ம யக்க ம ருந்தைக் கொடுத்து க ள்ளக் கா தலனுக்கு பா லி ய ல் வ ன்மத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஆரம்பக் கட்ட வி சாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ம யக்கம் தெ ளிந்து சி றுமி விடயத்தை உணர்ந்த போதிலும் தாயும், கள்ளக் காதலனும் வெளியில் சொன்னால் பி ரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என அ ச்சுறுத்தியு ள்ளனர்.

எனினும் வீடு வந்து சேர்ந்த சி றுமி வே தனை தா ங்க மு டியாமல் உறவினரிடம் குறித்த விடயத்தைக் கூறியதை அடுத்து பொலிஸாரால் சந்தேக நபர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதான நபர்கள் இருவரையும் விசாரித்த நீதிவான் எதிர்வரும் 22ம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான சி றுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு!!

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 பேர் கொரோனா நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2454 ஆக உயர்ந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவரும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து 283 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 13 பேரும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்பிலிருந்த மூவரும் என நேற்று ஒரே நாளில் 300 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1980 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொரோனா பரவல் குறித்து போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அது குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை மீண்டும் முடங்கும் அபாயம் : கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை!!

கொரோனா..

“கந்தக்காடு போ தைப்பொ ருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இனி யாருக்காவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுடன் தொடர்புடைய பிரதேசங்கள் முடக்கப்படும். அது சில வேளைகளில் நாடு முழுவதுக்குமான முடக்கலாக அமையலாம்.”இவ்வாறு கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம், வெலிக்கடைச் சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் எனப் பலருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 340 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடு முடக்கப்படுமா என்ற அ ச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் வினவியபோது, “வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட தொற்றுப் போன்று கந்தகாட்டில் ஏற்பட்ட தொற்றைக் கூற முடியாது. வெலிசறை கடற்படை முகாமில் கடற்படையினர் விடுமுறையில் வீடு சென்று வந்தார்கள்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஏற்பட்டால் அங்குள்ளவர்களுக்கு பரவித்தான் அது முடிவுக்கு வரும்.

ஆனால், கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார்கள். அவர்களில் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டால் நிலைமை சிக்கலாம்.

அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று அந்தச் சங்கிலியுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அந்தப் பிரதேசங்களை முடக்க நேரிடலாம்” – என்றார்.

வவுனியாவில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!!

நித்தியானந்தம்..

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று (10.07.2020) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு 9.00 மணியளவில் அவரை கா ணவில்லை என தேடிய சமயத்தில் சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தினை மீட்டெடுத்த அயலவர்கள் சடலத்தினை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுந்தபுரம் பகுதியினை சேர்ந்த 34 வயதுடைய நித்தியானந்தம் என்ற நபராவார். மீட்கப்பட்ட நபரின் தலையின் பின் பகுதியிருந்து இரத்தம் வந்துள்ளமையினால் இச்சம்பவம் கொ லையாக இருக்கலாம் என உ யிரிழந்த நபரின் உறவினர்கள் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் கொரோனாவின் பின் சர்வமத குழுவினரின் ஒன்றுகூடல்!!

சர்வமத குழுவினரின் ஒன்றுகூடல்..

வவுனியாவில் சர்வமத குழுவினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (10.07.2020) மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

‘மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு’ எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சர்வமத குழு மற்றும் சமூகமட்ட அமைப்புக்களை சேர்ந்த நாற்பது பேர் கலந்து கொண்டிருந்தன.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்கள் கடந்தவிட்ட நிலையில் மேலும் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாதவகையில் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

மக்களுக்கு கொரோனா தொற்று எற்படாதிருக்க நடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குசட்டம் காலப்பகுதியில் சர்வமதக் குழுவினரால், இருபது கிரமங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது அத்துடன் தேசிய சமாதனப் பேரவையின் நிதி உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்புடன் நான்கு நவீன கை கழுவும் இயந்திரங்கள் சுகாதாரத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதஸ்தலங்களை கண்காணிப்பதற்காக சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து கண்காணிப்பக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சர்வமத குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் போதகர். பி.என்.சேகர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட மட்ட இணைப்பாளர்களான எம்.யு.எம்.உவைஸ், ஏ.மெடேசன், கெ.நிசாந்த குமார, மதத் தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்!!

காத்திருந்த ஆச்சரியம்..

அமெரிக்காவில் வீடு ஒன்றின் கூரையில் வழி ஒன்று இருப்பதைக் கண்ட அந்த வீட்டை வாங்கிய நபர் அந்த வழியாக நுழைந்து சென்றுள்ளார். பார்த்தால், அங்கு ஒரு வீடே மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அது எங்கே முடிகிறது என்று பார்த்தபோது, தனது அறையிலிருக்கும் ஒரு அலமாரிதான் அந்த வீட்டின் கதவு என்பதை அறிந்தபோது ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளார் அவர்.

ஒரு காலத்தில் அந்த வீடு விற்கப்பட்டபோது, அதை ஆலயமாக மாற்றியுள்ளனர். அப்போது, அந்த கூடுதல் வீடு வேண்டாம் என, அதை அப்படியே பூசி மூடி விட்டிருக்கிறார்கள்.

இப்போது அந்த வீட்டை வாங்கியவர் தற்செயலாக அந்த வீட்டுக்குள் இன்னொரு வீடு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். வெளியே இருந்து பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்பதை காண்பிப்பதற்காக தனது வீட்டின் வெளிப்புற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட அந்த ’வீட்டுக்குள் வீடு’ புகைப்படத்தைக கண்ட மக்கள், பேய் படம் ஒன்றில் வருவதுபோல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிலர், நார்னியா என்ற படத்தில் அலமாரிக்குப்பின் வேறொரு உலகுக்கு வழி இருப்பதுபோல் இந்த அலமாரி உள்ளது என்று கூறியுள்ளனர்.

அழகிய இளம் பெண்ணை மணக்க ஏழை மணமகன் கொடுத்த வரதட்சணை : ஆச்சரியப்பட்ட மக்கள் : என்ன தெரியுமா?

ஏழை மணமகன் கொடுத்த வரதட்சணை..

இந்தோனேசியாவில் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக மணமகன் கொடுத்த பொருள் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நடத்தும் திருமணத்தில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுப்பது.

அப்படி Iwan Firman Wahyudi என்ற சாதாரண பணியில் உள்ள ஏழை இளைஞனுக்கும், Helmi Susanti என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு Iwan Firman ஒரு ஜோடி செருப்பு மற்றும் டம்ப்ளரில் தண்ணீரையும் வரதட்சணையாக கொடுத்தார்.

பொதுவாக அதிகளவிலான பணம், நகைகளை மணமகன் வரதட்சணையாக கொடுப்பது வழக்கம் என்ற நிலையில் Iwan Firman-ன் வரதட்சணை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து மணப்பெண் Helmi Susanti கூறுகையில், எனது கணவர் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் சிரமங்களை சந்திப்பதை நான் விரும்பவில்லை.

அதனால் நான் தான் இந்த யோசனையை அவருக்கு கொடுத்தேன். அதே சமயம் என் பெற்றோர் அவரிடம் $2,771 வரதட்சணையை எதிர்பார்த்தனர் என கூறியுள்ளார்.

தனக்கு கிடைத்த செருப்பை Helmi பத்திரப்படுத்தி வைத்துள்ளார். வருங்காலத்தில் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதை காட்ட விரும்புவதாக கூறியுள்ளார்.

கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் : பின்னர் நடந்த விபரீதம்!!

இ ளம் பெ ண்….

டெல்லியில் இருந்து 19 வயதுப் பெ ண் அன்சிகா யாதவும் அவர் தாயும் ஜூன் 15ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் சிகோபாபாத்துக்குச் சென்றனர்.

கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த இளம் பெண்ணைப் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்ட நிலையில் அந்தப் பெ ண் உ யிரிழந்தது வி சாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அன்சிகாவுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி மற்ற பயணிகள் கூ ச்சலிட்ட தால் ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து வ லுக்கட்டா யமாக அவரையும் அவர் தாயையும் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டனர்.

இதையடுத்த அரைமணி நேரத்தில் அன்சிகா உ யிரிழந்தார். அவர் இயற்கையாக இ றந்ததாகக் கூறி மதுரா காவல்துறையினர் வ ழக்குப் ப திவு செ ய்ய ம றுத்துவிட்டனர்.

இந்நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையில் மா ரடைப்பால் அவர் இ றந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வி சாரித்து அறிக்கை தா க்கல் செய்ய உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு டெல்லி பெ ண்கள் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து நடந்த வி சாரணையில், பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாலும், அப்போது வீசிய அனல்காற்றாலும் அவர் மா ரடைப்பால் உ யிரிழந்தது தெ ரியவந்துள்ளது.

காதலனுக்காக கணவனை து டி து டிக்க கொ ன்ற மனைவி : வி சாரணையில் அ திர்ச்சி!!

காதலனுக்காக..

இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொ லை செ ய்துவிட்டு வேறு இரண்டு ஆண்கள் மீது பு கார் கொடுத்த சம்பவம் வி சாரணையில் அம்பலமாகியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Firozabad மாவட்டத்தில் உள்ள Sirsaganj காவல்நிலையக்குட்பட்ட பகுதியில் இருக்கும் Sothara கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவருக்கு மோகினி என்ற மனைவி உள்ளார்.

கணவர் மிகவும் கு டிகாரன் என்பதால், மோகினி அவர் மீது வெறுப்பில் இருந்துள்ளார். அப்போது தான் அப்பகுதியை சேர்ந்த சுர்ஜித் என்பவருடன் மோகினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. சுமார் ஓராண்டிற்கு மேலாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு அர்ஜுன் சிங் உ யிரிழந்த நிலையில் ச டலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது மோகினின் தன் கணவரின் ம ரணத்திற்கு காரணம் என்று கூறி இரண்டு பேர் மீது பு கார் கொடுத்தார்.

இருப்பினும் பொலிசாருக்கு மோகின் மீது ச ந்தேகம் ஏற்பட, கி டுக்குப்பி டி வி சாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மோகினி கணவனை கொ லை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

பொலிசாரிடம், தானும், சுர்ஜித்தும் கணவரின் கழு த்தை நெ ரித்து கொ ன்றதாகவும், அதன் பின் அவரின் உ டலை வேறொரு இடத்தில் வீசிவிட்டு, வேறொரு நபர்கள் மீது புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மகளின் திருமணத்திற்காக பணம் மற்றும் நகையை புதைத்து வைத்த தாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற 52 வயது மனைவியும், விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர்.

தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார்.

ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி, அதோடு அரை பவுன் தங்க தோடையும் வைத்து கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோண்டி புதைத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடாகக் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.

இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது பிளாஸ்டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர்.

அப்போது,அவர் அந்த பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆனால் அந்த பணம் எல்லாம் 2016-ஆம் ஆண்டிலே மத்திய அரசு தடை செய்துவிட்டதாக கூற, தாய் மற்றும் மகள் இருவருமே அந்த இடத்தில் க தறி அ ழுதனர்.

சகோதரர்களை மணந்து கொண்ட 2 சகோதரிகள் : பின்னர் நடந்த விபரீதம்!!

சகோதரிகள்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒரு பெண் மர்மமான முறையில் உயி ரிழந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்சந்த். இவர் மனைவி ரஜ்னி இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் உ யிரிழந்து கிடந்தார்.

ரஜ்னி த ற்கொ லை செய்து கொண்டதாக கணவர் மற்றும் குடும்பத்தார் கூறிய நிலையில் அவர் கொ லை செய்யப்பட்டுள்ளார் என அவரின் சகோதரி மம்தா பரபரப்பு பு காரை பொலிசில் அளித்துள்ளார்.

அதில், பிரேம்சந்துக்கும், ரஜ்னிக்கும் கடந்த 2011ல் திருமணம் நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரேம்சந்தின் சகோதரர் பங்கஜுக்கும் எனக்கும் 2017ல் திருமணம் நடந்தது.

ஏற்கனவே ரஜ்னியை கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பத்தார் கொ டுமைப்ப டுத்தி வந்தனர். இதையடுத்து என்னையும் அதே போல து ன்புறுத்தி னார்கள்.

நான் கூட ஒருமுறை அவர்களின் கொ டுமை தாங்காமல் த ற்கொ லைக்கு மு யன்று கா ப்பாற்றப்பட்டேன். இதையடுத்து சில காலமாக என் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.  இந்த சமயத்தில் ரஜ்னி மர்மமாக இ றந்துள்ளார், அவர் க ழுத்து உ டல் ப குதியில் கா யங்கள் உள்ளது.

இதனால் என் மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தார் தான் என் சகோதரி ரஜ்னியை கொ லை செய்துள்ளனர் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் பிரேம்சந்த், பங்கஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட 375 பி.சி.ஆர் பரிசோதனைகளின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 283 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மொத்தமாக 339 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரையில் மொத்தமாகத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2437 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய இவர் மேலும் தெரிவிக்கையில், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்த போ தைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்ட 375 பேரின் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றிருப்பதாகவும்,

அதில் 253 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் கந்தகாடு தனிமைபடுத்தல் நிலையம் உள்ளடங்களாக 1150 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்க நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் வெகுவாக அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடு இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு செயற்திட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறிச் சென்றவர்கள் மற்றும் அங்கிருப்பவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதனூடாக கொரோனா வைரஸ் சமூகப்பரவல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் முகாமுக்கு கடந்த சில மாதங்களில் சென்றவர்கள் மற்றும் தற்போது அடையாளங்காணப்பட்ட தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்தோடு புனர்வாழ்வளிக்கும் முகாமில் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென கந்தக்காட்டிலுள்ள தனிமைப்படுத்தல் முகாம் வைத்தியசாலையாக மாற்றப்பட்டு தொற்றுக்குள்ளானவர்களுக்க அங்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பீதிஅடைய செய்யவேண்டாம் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வினயமாக கேட்டுக்கொண்டுள்ளார். எப்போதும் போன்று கொரோனா தொற்று தொடர்பில் நிலவும் உண்மை நிலவரங்களை தாம் நாட்டிற்கு அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை நாட்டில் ஒரே நாளில் அதி கூடிய தொற்றாளர்களாக 283 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2437 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1980 ஆகவும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 446 ஆகவும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 11 ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி-