இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை : பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

கொரோனா இரண்டாவது அலை..

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சட்டத்தை உருவாக்கி, தனிமைப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை துரிதமாக வெளியிட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால், கொரோனா என்ற இரண்டாவது அலை கட்டுப்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகந்தை கந்தகாடு மற்றும் சிலாபம் மாரவில பிரதேசங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காய்ச்சல் பீடிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு : மூடப்பட்டது முந்தல் வைத்தியசாலை!!

இளைஞன் உயிரிழப்பு..

சிலாபம் முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திலுஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அந்த வைத்தியசாலைய மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிலாபம் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வைத்தியசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை!!

மழை..

வவுனியாவில் இன்று (10.07.2020) மதியம் 2.15 மணி தொடக்கம் மழை 6.15 மணிவரை காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்தது.

நான்கு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பநிலை காரணமாக குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பெய்தமையினால் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.

முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம் : ஏன் தெரியுமா?

முருங்கை

தினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது.

நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருக்கும் பட்சத்தில், நமக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது. முருங்கை கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

முருங்கையில் இருக்கும் வைட்டமின் சி சத்து, ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களை விட 7 மடங்கு அதிகமாகும். வைட்டமின் ஏ சத்து, கேரட்டில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகமாகும்.

வைட்டமின் பி 2 சத்து, வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 2 சத்தை விட 50 மடங்கு அதிகமாகும். வைட்டமின் பி 3 சத்து, வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்களை விட 50 விழுக்காடு அதிகம் ஆகும். கால்சியம் சத்து பாலில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகம் ஆகும்.

இதனைப்போன்று பாலில் உள்ள புரோட்டின் சத்தை விட 2 மடங்கு அதிகமாகவும், முட்டையில் உள்ள மெக்னீசியம் சத்தை விட 36 மடங்கு அதிகமாகவும்,

பிற கீரைகளில் உள்ள இரும்பு சத்தை விட 25 மடங்கு அதிகமாகவும், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தை விட 2 மடங்கு அதிகமாகவும் என பல சத்துக்களை தன்னகத்தே அதிகளவு கொண்டுள்ளது.

இதனைப்போன்று தமிழ் பழமொழிகளில் முருங்கையை உண்டவன் வெறும் கையுடன் நடப்பான் என்ற பழமொழியும் நம்மிடையே வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை!!

கொரோனா பரிசோதனை..

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்காக கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நகர சபை தீர்மானித்துள்ளது. கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்களிடம் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட சிலரிடம் மாத்திரம் உயிரியல் மாதிரிகள் பெற்றுக் கொண்டு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வைரஸ் உடலுக்குள் தொற்றியுள்ளதா என அறிந்து கொள்வதற்காக இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் மஞ்சள், உழுந்து தட்டுப்பாடு : பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!

மஞ்சள், உழுந்து தட்டுப்பாடு..

நாட்டில் மஞ்சள், உழுந்து தட்டுப்பாடு தொடரும் நிலையில் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படும் வரையில் இரு பொருட்களிற்கும் உடன் இறக்குமதியினை அனுமதிக்குமாறு பிரதமரிடம் யாழ். வணிகர் கழகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்திற்கு முன்பு மார்ச் மாதம் வரை மஞ்சள் 400 ரூபாவாகவும், உழுந்து 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போதுஅதன் விலைகள் மிக அதிகரித்து மஞ்சள் 1 KG 3000 ரூபாவாகவும், உழுந்து 1 KG 600 ரூபாவாகவும் விற்கப்படுகிறது. அத்துடன் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

நாட்டில் தற்போது மஞ்சள் போதியளவு உற்பத்தி செய்யப்படவில்லை. மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் வரை மஞ்சளை தடை செய்யாது இறக்குமதிக்கு அனுமதிக்கும்படி தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக பொது மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள மஞ்சளை அதிகளவில் பாவனை செய்கின்றார்கள்.

ஆகவே இவ்விடயத்தினையும் கருத்தில் எடுத்து மஞ்சளுக்கான இறக்குமதித் தடையை நீக்கி தாராளமாக மஞ்சள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை உழுந்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். கடந்த மார்ச் மாதம் விற்பனை செய்த விலையிலிருந்து 100 மடங்காக அதிகரித்து சுமார் 600 ரூபா அளவில் விற்கப்படுகிறது.

தற்போது நாட்டில் உழுந்து உற்பத்தி போதியளவில் இல்லை. அத்துடன் தமிழ் மக்களுடைய பாரம்பரிய உணவு வகைகளான வடை, தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு இது அத்தியாவசியமானதாகும்.

அத்துடன், சாதாரண ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகையால் அதன் இறக்குமதி தடையை நீக்கி பொது மக்களுக்கு இவை குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடியதான ஏற்பாடுகளை செய்து தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், நாளுக்கு நாள் இவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்வதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றார்கள். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களையும் கவனத்தில் எடுத்து பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றியும், குறைந்த விலையிலும் மஞ்சள் மற்றும் உழுந்து கிடைக்க தாங்கள் ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கின்ற்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸை ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா : எதற்காக தெரியுமா?

நடிகை ரோஜா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, ஆந்திர அரசியலில் குதித்தார். கடந்த வருடம் நடைபெற்ற சடமன்ரத் தேர்தலில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார். அவரது வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கிராமங்களுக்காக ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடைபெற்றது. இதில் நடிகை ரோஜா கலந்துகொண்டதுடன் திடீரென ஆம்புலன்ஸை ஓட்டினார்.

இதைப் பார்த்த தெலுங்கு தேசம் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ரோஜா சாகசம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் தான் கிடைத்ததா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவசர கால ஊர்தியை இயக்க ரோஜாவிடம் உரிய லைசென்ஸ் உள்ளதா எனவும் விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

குடும்ப தகராறில் அரங்கேறிய சோகம் : 8 மாத க ர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

க ர்ப்பிணி மனைவிக்கு..

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சோபனா. சோபனா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

கணவன் – மனைவிக்கிடையே அவ்வப்போது கு டும்ப த கராறு ஏ ற்பட்டு வ ந்ததாக தெ ரியவருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் வழக்கம்போல த கராறு ஏ ற்பட்டுள்ளது.

இதில் வா க்குவாதம் ஏ ற்பட்டு த கராறாக மு ற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆ த்திரத்தில் மணிகண்டன் தனது ம னைவியை தா க்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த சோபனா சம்பவ இடத்திலேயே ம யங்கி விழுந்த நிலையில்,

சோ பனாவின் அ லறல் ச த்தம் கே ட்டு வி ரைந்த அ க்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர்.

சோபனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்,

சோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அபாய வலயமாக மாறியுள்ள கந்தக்காடு : அங்கு சென்றவர்கள் தொடர்பான தகவல்!!

கொரோனா..

கடந்த காலங்களில் கந்தகாடு போ தைப்பொ ருள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த கைதிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த 119 உறவினர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த நபர்களை பார்ப்பதற்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் அனுமதி கிடைக்கவில்லை எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சேனபுர பிரதேசத்தில் 144 பேரும் ஹெதல வைத்தியசாலையில் மேலும் 50 பேருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெதல பிரதேசத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் போ தைப்பொ ருளுக்கு அடிமையான நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கந்தகாடு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் ஐந்து வ யது சி றுமியை க த்தியால் வெ ட்டிய தந்தை கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்றுமுன்தினம் தனது ம களை க த்தியால் வெ ட்டிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட த கராறை தொடர்ந்து 5 வ யது சி றுமி மீது ச ரமாரி யாக க த்தி வெ ட்டு மே ற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ப டுகாயம டைந்த சி றுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீ விர சி சிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த சி றுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா : நாட்டு மக்களுக்கு PCR பரிசோதனை!!

தீவிரமடையும் கொரோனா..

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதன் பொறுப்பை சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சேனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு வாரத்திற்கு இரண்டு முறை கூடி கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் எடுத்த போதிலும் தற்போது மாதம் ஒரு முறையே இந்த குழு கூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவில் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர், பாதுகாப்பு பிரிவு, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட குழுவினர் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொற்று நோய் பிரிவு வெளியிடும் கருத்திற்கமைய மாதத்திற்கு 68 ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற போதிலும் நாள் ஒன்று 1000 – 1500 PCR பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமூக பரவலாக மாறும் கொரோனா : உறவினர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

கொரோனா..

கந்தகாடு போ தைப் பொ ருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நோயாளிகளின் கொத்து காரணமாக சமூகத்திற்குள் வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெலிகட சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதன் பின்னர் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் புதிய 56 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இன்று 196 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. அவர் தனது வீட்டிற்கு சென்று திரும்பியர் என தெரியவந்துள்ளது. அதேபோல் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கைதிகளின் நலம் விசாரிப்பதற்கு நிலையத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக இறுதி ஆண்டு மாணவி விபத்தில் பலி!!

மாணவி..

ருஹுனு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கற்கும் மாணவி ஒருவர் விபத்தில் உ யிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து குறித்த மாணவிகளின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இஷானி என்ற மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த மாணவி 27 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

மிகவும் நன்றாக கற்க கூடிய இந்த மாணவி ஒவ்வொரு விடுமுறைக்கும் வீட்டிற்கு வந்து பிரதேச சிறுவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்துவார் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். உ யிரிழந்த மாணவியின் பூதவுடன் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஒரே நாளில் 196 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு!!

196 கொரோனா நோயாளிகள்..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கந்தகாடு முகாமில் 252 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கந்தகாடு முகாமில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் போ தைப்பொ ருளுக்கு அடிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா ரைவஸ் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடித்து இரண்டு மாதங்களேயான இளம் பெண் மரணம் : உண்மையை மறைக்கும் பெற்றோர்!!

காஞ்சியில் இளம் பெண் மரணம்..

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பிரதேசத்தில் வசிப்பவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் கடமையாற்றி வரும் நிலையில், இவரது மனைவி ஜெயந்தி.

ஜெயந்த் சி.பி.ஐ.எம் மாதர் சங்க தலைவியாக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் செந்தாமரை (வயது 23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக செந்தாமரைக்கும், இதே பகுதியை சார்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தாய் வீட்டில் செந்தாமரை கழிவறை செல்லுகையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல்,

அவரது உடலை இரகசிய அடக்கம் செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனை அடுத்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செந்தாமரையின் உறவினர்கள் சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த காவல் துறையினரின் விசாரணையில் செந்தாமரை மற்றொரு நபரை காதலித்து வந்ததாகவும்,

அவருடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை சமாதானம் செய்து வேறு நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் செந்தாமரை மனமுடைந்து காணப்பட்ட சூழலில்,

சுதந்திரமாக வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் த ற் கொ லை செய்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கை பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும். பெற்றோர்கள் செந்தாமரையின் மரணத்தை விபத்து மரணம் என்று கூறியுள்ளார்கள்.

இது தற் கொ லையா அல்லது கொ லையா என்பது தெரியவந்தவுடன் மேற்படி விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நொடி பொழுதில் நிகழ்ந்த இரு துயர சம்பவம் : பரிதாபமாக உ யிரிழந்த சிறுமிகள்!!

கோவையில் நிகழ்ந்த..

இந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பிரதேசத்தை சேர்ந்தவர் அருள் ஞான ஜோதி. இவரது மகள் ஜெரலின் நேகா (வயது 9).

இவர் கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , ஊஞ்சலின் துணி கழுத்தை இறுக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மயங்கி காணப்பட்டுள்ளார்.

சிறுமியை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், இந்த சோகமானது ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை போன்றே கோவையில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. கோவையில் உள்ள ஒண்டிப்புதூர் சாமியார் மேடைப் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பவதாரணி (வயது 9).

சம்பவத்தன்று சிறுமி இரண்டு அடுக்கு கட்டிலில் இருந்து தனது வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்துள்ளார். அதன் போது சிறுமியின் பென்சில் தவறி கீழே விழுந்துள்ளது. பென்சிலை எடுக்க முயன்ற சிறுமி கட்டிலிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து, தலையில் அடிபட்டுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதனை அடுத்து இந்த விடயம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த இரண்டு சிறுமிகளின் உயிரிழப்பு அம்மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.