மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரியிலிருந்து பல வகை வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளள்ளது.
அதற்கமைய கடந்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் திறந்த கடன் கடிதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1800 சிலிண்டர் கொள்ளளவுக்கு மேல் இல்லாத பெட்ரோல் மோட்டார் வாகனங்களின் சொகுசு வரி நீக்கப்பட்டுள்ளது.
2300 சிலிண்டர் திறனைத் தாண்டாத அனைத்து டீசல் மோட்டார் வாகனத்திற்கும் அல்லது இயந்திர சக்தி 200 கிலோவோட்டை தாண்டாத அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது.
எனினும் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த வாகனங்களை இலங்கை சுங்கத்திடம் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நேற்று இரவு 9.45 மணியளவில் விசேட அதிரடிபடையினர் நடத்திய சோதனையின் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் பயணிகளுடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமான முறையில், விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் தரகர்களாக செயற்படுபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும் 49 வயதுடைய ஹரித்த பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஒரே நாளில் பயணிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களையும், பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குறிறச்சாட்டில் மேலும் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல், கடுநாயக்க விமான நிலைய முனையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 60 பேர் வரை கைது கைது செய்யப்பட்டுள்ளதாக கடுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சர ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா நேற்று இரவு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன் போது நேற்று காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள், பூஜைகள், பல்வேறு சொற்பொழிவுகள் மற்றும் மதம் சார் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து இரவு பூசையும் இடம் பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல இலட்சக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை சிங்கள பகுதிகளில் இருந்தும் அனேக பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியாவில் அண்மைய காலமாக குறைவடைந்திருந்த டெங்கு நுளம்பின் பெருக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும், கடந்த வாரத்தில் இரு புதிய டெங்கு நுளம்பு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் ஓமந்தை பகுதியில் புதிய டெங்கு நுளம்பு நோயாளர்கள் இருவர் இணங்காணப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தமது இருப்பிடங்கள், காணிகள், வர்த்தக நிலையங்களை, தண்ணீர்த் தொட்டிகள், மூடிகள், போன்றவை சுத்தப்படுத்தப்பட்டு வாரத்தில் ஒரு நாளில் தமது இருப்பிடங்களை துப்பரவு செய்து வைத்திருக்குமாறும்,
தமது பகுதிகளை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு வருவதாகவும், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இணங்கண்டால் அவருக்கு எ திராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் எழுத்து மூலமாக அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஓமந்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் மூன்று இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், உரிமையாளருக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏனையவர்கள் தமது பகுதிகளை சுத்தமாக துப்பரவு செய்து வைத்திருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் வெளிநாட்டு பெண்ணொருவரை ஏமாற்றி 300 இலட்சம் ரூபாய் மோ சடி செய்த கு ற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை கொழும்பு குற்ற வி சாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது காலி – கல்பே பகுதியைச் சேர்ந்த சமீர சம்பத் என்ற 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டு பெண் ஒருவருடன் தொடர்புகளை பேணி திருகோணமலை, நிலாவெளி பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணியொன்றை பெற்று உணவகம் ஒன்றை அமைத்துள்ளதாகவும்,
அதன் பின்னர் வெளிநாட்டு பெண்ணை அதில் இருந்து வெளியேற்றி அவருடைய 300 இலட்சம் ரூபாய் பணத்தை மோ சடி செய்ததாகவும் சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு கு ற்ற வி சாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சந்தேகநபர் பல தடவைகள் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு நிலாவெளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகம் அமைக்கப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமான (உல்லாசப் பிரயாண சபைக்கு) இடமெனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கு ற்ற வி சாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், கு ண்டினை வெ டிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உ ளவு பார்த்தார் எனும் கு ற்றச் சாட்டில் 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற வி சாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் ப யங்கரவாதச் செ யலுக்கு ச தி செய்ததாக, கு ற்றத்தினை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கான த ண்டனை மே மாதம் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஷேய்க் கைது செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு ர கசிய அதிகாரிகளுடன் தொடர்பை வளர்த்துக்கொண்டார்.
அந்த அதிகாரிகள் இருவரும் தீ விரவாத ஆதரவுள்ள கணவன், மனைவியாக தம்மை அடையாளப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் ஷேய்க் தகவல்களை அனுப்பினார்.
நான் ஏராளமானவர்களைக் கொ ல்ல விரும்புகிறேன். அதற்காக தேவாலயத்தினைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன்.
கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்ரர் போன்ற நாளில் ஏராளமானவரைக் கொ ல்லலாம் என்று அதிகாரிக்குத் தகவல் அனுப்பினார்.
நான் எப்போதும் அ ச்சுறுத் தல்களை அனுப்புகிறேன். ஆனால் அந்த அ ச்சுறுத் தல்களை உண்மையானதாக மாற்ற விரும்புகிறேன்.
சஃபியா ஷேய்க் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தின் படத்தை அதிகாரிக்கு அனுப்பியதுடன் நான் நிச்சயமாக இந்த இடத்தைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன்.
நான் கு ண்டினை வெ டிக்கவைக்க விரும்புகிறேன். இ றக்கும் வரை சு ட விரும்புகிறேன். அந்த இடத்தையும் காஃபிர்களையும் (ஐ.எஸ்ஸின் எ திரிகள்) அ ழிக்க விரும்புகிறேன்.
ஹோட்டலிலும், பின்னர் தேவாலயத்திலும் கு ண்டினை வெ டிக்கவைப்பேன். நான் இ றக்கும்வரை கொ ல்லுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தைப் (St Paul’s Cathedral) பார்வையிட்டதுடன் அது தொடர்பான வீடியோக்களையும் அனுப்பினார்.
வெ டி கு ண்டுகளைத் தயார் செய்வதற்காக பெண் ரகசிய அதிகாரியிடம் ஷேய்க் இரண்டு பைகளைக் கொடுத்ததாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அயலவர்களால் ஈர்க்கப்பட்ட சஃபியா ஷேய்க், 2007 இல் இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு பிரதான இஸ்லாத்தை நிராகரித்தார்.
2016 ஆம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் மற்றும் ஏனைய ஜிஹாதிக் கு ழுக்களின் தீவி ரவாத வ ன்முறைச் சித்தாந்தத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.
வழிபாட்டாளர்களும் இமாம்களும் தனது தீ விரவாதக் கருத்துக்களைப் பற்றி கவனத்தில்கொள்வார்கள் என்ற அ ச்சத்தில், சஃபியா ஷேய்க் மசூதிகளில் கலந்துகொள்வதை நிறுத்தினார்.
ஏற்கனவே அவர் குறித்து, அரசாங்கத்தின் ப யங்கரவாதத் தடுப்புத் திட்டத்திற்கும் மு றைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ப யங்கரவாதச் செயல்களுக்குத் தி ட்டம் தீட்டியது மற்றும் ப யங்கரவாதக் கருத்துக்களைப் பரப்புவது ஆகிய கு ற்றங்களை சஃபியா ஷேய்க் ஒப்புக் கொண்டார்.
மே 12 ஆம் திகதி த ண்டனை வழங்குவதற்கு முன்னதாக த ண்டனை அறிக்கைகளை தயார் செய்யுமாறு நீதிபதி ஜஸ்ரிஸ் ஸ்வீனி (Justice Sweeney) உத்தரவிட்டார்.
சவுதி அரேபியாவில் பேருந்து சாரதிகளாக சேவை செய்வதற்காக இலங்கையர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளும் சவுதி அரேபிய போக்குவரத்து பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 45 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன், 2 வருட அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கு செல்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் இலங்கையில் ஆங்கிலம் மற்றும் அரபு மொழி பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.. தெரிவு செய்யப்படும் இலங்கையர்களுக்கு சவுதியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட், உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். எவ்வித கட்டணமுமின்றி இந்த தொழிலுக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்களிப்புகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (22.02.2020) காலை 8.00மணி தொடக்கம் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.
பொலிஸ் பா துகாப்புடன் இடம்பெறும் இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதுவரையிலும் எவ்வித அசம்பாவிதம் நிகழாத வண்ணம் அமைதியான முறையில் நடைபெறுகின்றது.
தமிழகத்தை உலுக்கிய கொ டூர பேருந்து விபத்தில் திருமணம் முடித்து சில வாரங்களேயான புதுமணப்பெண்ணும் சி க்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். பெங்களூருவில் பணியாற்றும் தமது மனைவியின் வருகைக்காக சம்பவத்தன்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்.
குறிப்பிட்ட நேரம் கடந்தும் தமது மனைவி அனுவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்பதால், அவரது மொபைலில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் சொன்ன தகவல் ஸ்னிஜோவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் அவினாசியில் குறித்த பேருந்துடன் லொறி ஒன்று மோதியதில், அதில் பயணம் செய்த அனு உள்ளிட்ட 19 பேர் உடல் நசுங்கி ப லியாகியுள்ளனர்.
அனு மற்றும் ஸ்னிஜோவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. சமீபத்தில் தான் இருவரும் டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேனிவு கொண்டாடிவிட்டு திரும்பியுள்ளனர்.
அனு பெங்களூருவில் பணியாற்றுவதால், திருச்சூரில் இருக்கும் கணவரை காண சம்பவத்தன்று அந்த பேருந்தில் திரும்பியுள்ளார். இதனிடையே பேருந்து விபத்து குறித்த தகவல் அறிந்து உடனடியாக அவினாசிக்கு விரைந்துள்ளார் ஸ்னிஜோ.
அவினாசியில் குறிப்பிட்ட மருத்துவமனைகளை தேடி அலைந்த ஸ்னிஜோ இறுதியில் அனுவின் ச டலத்தை மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார். கட்டாரில் பணியாற்றும் கணவர் ஸ்னிஜோவை வழியனுப்பி வைக்கவே அனு, பெங்களூருவில் இருந்து திருச்சூர் திரும்பியுள்ளார்.
இறுதியில் கணவரை இறுதியாக ஒருமுறை பார்க்காமலையே அனு விடைப்பெற்று சென்றுள்ளது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கி ரேன் வி ழுந்த வி பத்தில் 3 பே ர் உ யிரிழந்த ச ம்பவத்தில் தே டப்பட்டு வந்த ஆபரேட்டர் ராஜன் கை து செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த ஈவிபி ஸ்டுடியோஸில் கி ரேன் அ றுந்து வி ழுந்த வி பத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ப்ரொடக்ஷன் உதவியாளர் ம து, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோர் உ யிரிழந்தனர்.
இந்த வி பத்து தொடர்பாக தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர், கி ரேன் ஆப்ரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மூ வர் உ யிரிழப்புக்கு மு க்கிய கா ரணமாக இருந்த கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் த லைம றைவாக இருந்த நிலையில் பொ லிசார் அ வரை வ லைவீ சி தே டி வந்தனர். இந்நிலையில் பொ லிசார் ராஜனை தற்சமயம் கை து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு வி பத்து தொ டர்பாக நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு ஏற்கனவே ச ம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கேதீஸ்வர ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீச்சர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள், அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இன்றைய மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
ஒரு நாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 4 மணித்தியாலங்களுக்குள் அதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை தயாரானவுடன் அது குறித்து விண்ணப்பதாரிக்கு குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்.
இதனூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பின்னர் ஆட்பதிவு திணைக்கள வளாகத்தில் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு நாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு நாளாந்தம் 1500 இற்கும் அதிகமானோர் ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகை தருவதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
இவர்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டினார்.
வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (21.02.2020) மதியம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரசபை மைதான விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த இளைஞன் ஒருவர் நகரசபை வளாகத்தில் மோட்டார் சைக்கிலினை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மதியம் மோட்டார் சைக்கிலினை எடுக்க சென்ற சமயத்தில் மோட்டார் சைக்கிலின் ஆசனப்பகுதி உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பணம் களவாளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் சி.சி.ரி.வி காணொளியில் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் இன்று (21.02.2020) அதிகாலை 4.00 மணியளவில் இலகுரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
யாழிலிருந்து ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த இலகுரக வாகனம் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சென்றபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனம் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளை – மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிறுமி ஒருவரும் 10 வயதுச் சிறுவன் ஒருவரும் உ யிரிழந்துள்ளனர்.
தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தம்புளை விகாரை சந்தி பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற பேருந்தும் கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்தும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைத்தவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் மாத்தளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவரும் 10 வயது சிறுவன் ஒருவரும் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.