யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாரிய மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாத மர்மநபர்கள் eZ Cash மூலம் பலரிடம் பெருந்தொகை பணத்தை ஏமாற்றியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் eZ Cash மூலம் 25 ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. வீதி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியை தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என அறிமுகம் செய்துள்ளார். “எனக்கு அவரசமாக 25 ஆயிரம் ரூபா பணம் தேவை. தற்போது வீதி போக்குவரத்து கடமையில் உள்ளதால் அருகிலுள்ள eZ Cash நிலையம் ஊடாக பணத்தை அனுப்புமாறு ” கோரியுள்ளார்.

அவரும் உண்மையென நம்பி குறித்த இலக்கத்திற்கு 25 ஆயிரம் ரூபாவை அனுப்பி வைத்துள்ளார். எனினும் பொலிஸ் நிலையம் சென்று சம்பவம் தொடர்பில் பொறுப்பதிகாரியிடம் கூறிய போதே தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. மோசடி சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தகவல் தருகையில்,

“இந்த மோசடி கும்பல்கள் பெருந்தொகை பணத்தினை மோசடி செய்வதனை தவிர்த்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மோசடி செய்கின்றனர். இவ்வாறான தொகைக்கு பெரும்பாலனவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். சிலர் முறைப்பாடுகள் செய்கின்றனர்.

அவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் பதிவில்லாமல் இருக்கும். அல்லது சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களில் இருக்கும் அல்லது உ யிரிழந்த நபர்களின் பெயர்களில் இருக்கும். அதனால் எமது விசாரணைகள் தடைப்பட்டு விடும்.

மோசடி நபர்களை நெருங்குவதில் தடைகள் உண்டு. அதேவேளை இவர்கள் மோசடியாக பெறும் பணத்தின் தொகை சிறிதாக இருப்பதனாலும் விசாரணைகளில் சில சிக்கல்கள் உண்டு.

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க முடியும். தெரியாத நபர்கள் , புதிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை நம்பி அவர்களுக்கு பணம் செலுத்தாதீர்கள்.

அதேவேளை அதிஸ்டம் விழுந்துள்ளது என வரும் குறுந்தகவல்கள் குறித்தும் கவனமாக இருங்கள். அவற்றை நம்பியும் பணம் செலுத்தாதீர்கள். அது தொடர்பிலும் விழிப்பாக இருங்கள். அவ்வறான குறுந்தகவல்கள் குறித்து , தொலைத்தொடர்பு வலையமைப்பின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அவர்களின் சேவை நிலையங்களுக்கு சென்றோ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொலைபேசி ஊடாக மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இரண்டு ஆண்டுகளாக கா ணாமல்போயுள்ள கணவன் : தேடியலையும் மனைவி, பிள்ளைகள்!!

இரண்டு ஆண்டுகளாக..

அம்பன், குடத்தனையை பிறப்பிடமாகவும் குடத்தனை கிழக்கில் வசித்து வந்தவருமாகிய செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவர் கடந்த 09.03.2018 ஆம் ஆண்டிலிருந்து கா ணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் தொடர்பாக எவ்வித தகவல்களும் தெரியாமல் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் தே டி வருகின்றனர்.

குறித்த நபர் காணாமல் போனது தொடர்பில் 10.03.2018 ம் அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் கா ணாமால் போன தினத்திலிருந்து ஒரு வார காலம் வரை தொலைபேசி இயங்கியிருக்கிறது. பலர் அதில் பேசியிருக்கிறார்கள், ஆனால் கா ணாமால் போன நபர் பேசவில்லை.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் பொலிஸார் அதில் அக்கறை கொள்ளவில்லை என காணாமல் போன நபரது உறவுகள் தெரிவிக்கின்றனர்.

கா ணாமல் போனவரான செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதாவது தகவல் யாராவது அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களான 0771154704 அல்லது 0761660414 தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 57 தடைகள் நீக்கம்!!

முச்சக்கர வண்டிகளுக்கு..

முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 57 புதிய சட்டங்களை அகற்ற போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே இயற்றப்பட்ட 67 சட்டங்களில் 10 சட்டங்கள் அதே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார பாகங்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளது.

எனினும் பயணங்களின் போது மற்ற ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பா துகாப்புக்கு இடையூறு ஏற்படக்கூடாது என சாரதிகளுக்கு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலங்கார தொழிலை பராமரிக்கும் நோக்கில் இந்த சட்டங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையருக்கு அதிஷ்டமாக கிடைத்த 22.9 மில்லியன் ரூபாய் : சு ற்றிவ ளைத்து பிடித்த பொலிஸார்!!

அதிஷ்டமாக கிடைத்த..

கண்டியில் கடந்த வாரம் லொத்தர் சீட்டில் 22.9 மில்லியன் ரூபா வென்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 1.6 கிராம் ஹெ ரோயின் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ச ந்தேக ந பர், லொத்தர் சீட்டில் பெருந்தொகை பணம் வென்றுள்ளார். இதன்மூலம் ஹெ ரோயின் கொ ள்வனவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவர் கண்டி மாநகர சபையின் பணியாளராக பணியாற்றி வருகின்றார். கடந்த வாரம் குறித்த நபர் 22.9 மில்லியன் ரூபா வென்ற நிலையில் அந்த பணத்தில் 4 இலட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பணம் வென்ற சில நாட்களிலேயே ந ண்பர்களுடன் இணைந்து ஹெ ரோயின் போ தை பொ ருளுக்கு அ டிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸாரின் சு ற்றிவ ளைப்பில் குறித்த நபர் கை து செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் பொருத்து வீடுகள் : சீனாவில் இருந்து வரும் கொங்கிரீட்!!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான, கொங்கிரீட்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்படவுள்ளன. அவற்றை பொருத்தும் பணியில் இந்தியப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சால் கொங்கிரீட் பொருத்து வீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் கொங்கிரீட் வீடுகளே அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கொங்கிரீட் பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.

கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான கொங்கிரீட் சுவர்கள் சீனாவிலிருந்து கொள்கலனில் கொண்டுவரப்படவுள்ளது. இப்போது இவை ஏற்றப்பட்டு வருவதாகவும் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சீனப் பணியாளர்களைப் பயன்படுத்தியே கட்டுமானத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அதனை விரும்பியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனப் பணியாளர்கள் பணியாற்றுவதை இந்திய அரசு விரும்பவில்லை.

இதனையடுத்து, இந்தியப் பணியாளர்களைப் பயன்படுத்தியே கொங்கிரீட் பொருத்து வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளத்தில் விபத்து : இளைஞன் காயம்!!

விபத்து..

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (23.02.2020) காலை 11.30 மணியளவில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் பண்டாரிக்குளம் பாடசாலை வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் டிப்பரின் பின் சில்லுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 19வயதுடைய இளைஞர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற தொழிலாளி : ப தறிய மருத்துவர்கள்!!

பாம்பை..

தன்னை க டித்த பா ம்பை தொழிலாளி ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சேது என்கிற தொழிலாளி தன்னுடைய வீட்டின் முன், கட்டுவிரியன் பாம்பு ஒன்று எலியை வி ழுங்கிய நிலையில் ம யங்கி கி டப்பதை பார்த்துள்ளார்.

அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, ம யங்கி கி டந்த பாம்பு சட்டென சேதுவின் கைக ளை சு ற்றி க டித்துள்ளது.  வ லி தா ங்க மு டியாமல் அவர் அ லறுவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து பா ம்பை அ டிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் பா ம்பு உ யிரிழந்ததை அடுத்து, சேது வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் என்ன பா ம்பு க டித்தது எனக் கேட்டுள்ளனர்.

உடனே அவர் தான் வைத்திருந்த பையில் இருந்து, 3 அடி நீள பாம்பை எடுத்து காட்டியுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பெ ரும் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த பாம்பு ஏற்கனவே இ றந்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபரீதம் : தெய்வாதீனமாக தப்பிய தந்தையும் மகளும்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் தந்தையும் மகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். பிறவுண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளன.

இந்த அனர்த்தம் இன்று மாலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துள்ளனர். இதன்போது, வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் ஒழுக்குக் காரணமாக தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வீதியில் பயணித்தவர்களின் முயற்சியால் தீ அணைக்கப்பட்டு தந்தையும் மகளும் எந்தவித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டனர்.

இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்..

கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர் இ றந்த நிலையில், அவர் மகளான ராஜேஸ்வரியை சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ராஜேஸ்வரிக்கு திருமண வயது எட்டிய நிலையில், அவருக்கு இந்து முறையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு இஸ்லாமிய மக்களும் இந்து பிரிவினரும் ஏராளமானோர் கலந்து கொண்டது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து பேசிய அப்துல்லா “10 வயதிலிருந்து ராஜேஸ்வரி எங்க கூடதான் இருக்கிறார். எனக்கு ஏற்கனவே மூன்று பசங்க இருக்காங்க. வீட்டில் பெண் இல்லை என்ற குறையை தீர்த்தவள் ராஜேஸ்வரிதான்.

அவளை அந்த அளவு நேசித்தோம். அதே நேரத்தில் அவள் நம்பிக்கைக்கு நாங்கள் தடை தெரிவிக்கவில்லை. அனைவரும் விரும்பியபடி கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தோம். இது எங்கள் கடமை. மதம் வேறு மனுஷன் வேறு இல்லையா?” என்று புன்னகைத்தார்.

இது குறித்து புதுபெண் ராஜேஸ்வரி கூறுகையில், அப்பா- அம்மாவை விட்டு இருக்குறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்னை பிரிகிறதை நெனச்சு அம்மா அழுதுகிட்டே இருக்காங்க. என்னாலையும் அழுகையை அடக்க முடியவில்லை. என்று பகிர்ந்துள்ளார் நெகிழ்ச்சியாக.

திருமணமான 21 வயது பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பேருந்து நடந்துனர்!!

பெண் மீது..

தமிழகத்தில் திருமணமான பெண் மீது ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊ ற்றி தீ வைத்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த இளம்பெண் சலோமி (21). திருமணமான இவரை பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது விருப்பத்தை ஏற்காத சலோமி மீது பெ ட்ரோல் ஊற்றி சுந்தரமூர்த்தி தீவை த்துள்ளார். இதையடுத்து பலத்த தீக்கா யமடைந்த சலோமி ஆ பத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சலோமி மீது பெ ட்ரோல் ஊற்றி கொளு த்திய பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பி டித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் அறிக்கையிடல் பயிற்சிப் பாசறை!!

ஊடகவியலாளர்களுக்கு..

வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தொடர்பான பயிற்சிப் பாசறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (22.02.2020) காலை 8.30 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அதனை எவ்வாறு அறிக்கையிடுவது என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்டர் நியூஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப் பயிற்சிப் பாசறை இடம்பெறுகின்றது.

குறித்த பயிற்சி பாசறை இன்றும் (22.02) நாளையும் (23.02) காலை 8.30மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறுகின்றது.

ஒய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் எல்.எம்.மொஹமட் வளவாளராக கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான சட்டங்கள், கு ற்றச்செயல்களின் த ண்டனைகள், வழிகாட்டு நெறிகள், பாராளுமன்றை கலைப்பதில் உள்ள சிக்கல்கள், ஆரம்ப கால நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இப் பாசறையில் திருகோணமலை , அம்பாறை , கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா உட்பட வடக்கு கிழக்கினை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்!!

சாரணியத்தின் தந்தையின் பிறந்ததினம்

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் 163 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (22.02.2020) காலை 8.00 மணியளவில் பாடசாலையின் ஜனாதிபதி சாரணர் த.லிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாரணியத்தின் தந்தை பேடன் பவலின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.பொன்னையா சிவநாதன், பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன், ஜனாதிபதி சாரணர் சி.சரோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பயிற்சிக்கு வந்த பெண்களை நி ர்வாணமாக நிற்க வைத்து சோ தனை : சர்ச்சையில் மருத்துவர்கள்!!

பெண்களை..

நகராட்சி எழுத்தருக்கான 10 பயிற்சி பெண்களை நி ர்வாணமாக நிற்கவைத்து மருத்துவர்கள் சோ தனை செய்துள்ள சம்பவம் ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 20 அன்று குஜராத்தில் சூரத் நகராட்சியால் நடத்தப்படும், சூரத் முனிசிபல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (SMIMER), நகராட்சிக்கான பயிற்சி எழுத்தர்களை நி ர்வாணமாக வைத்து பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து வியாழக்கிழமை அன்று பொலிஸாரிடம் கொடுக்கப்பட்ட புகாரில், சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கம் திருமணமாகாத பெண்கள் உட்பட 10 பயிற்சி எழுத்தர்களை ஒரே அறையில் நி ர்வாணமாக நிற்க வைத்து, கர்ப்ப பரிசோதனை செய்ததாக கு ற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் அறிக்கை தா க்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்குழுவில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி நகராட்சி ஆணையர் காயத்ரி ஜரிவாலா மற்றும் நிர்வாக பொறியாளர் துருபி கலத்தியா ஆகியோர் அடங்குவர்.

விதிகளின்படி, அனைத்து பயிற்சி ஊழியர்களும் தங்களது பயிற்சி காலம் முடிந்ததும் வேலைக்கான உடல் தகுதியை நிரூபிக்க உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதேபோல கட்டாய பரிசோதனைக்காக மூன்று ஆண்டு பயிற்சி காலம் முடிந்ததும், சில பெண் பயிற்சி எழுத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்காக SMMER மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்கள் கட்டாய சோதனைக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும், மகளிர் மருத்துவ வார்டில் பெண் ஊழியர்களுக்கு பின்பற்றப்பட்ட முறை தவறானது என தொழிற்சங்கம் புகார் கூறியுள்ளது.

“சோ தனைக்காக அறையில் பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேர் கொண்ட குழுவில் நி ர்வாணமாக நிற்க வைத்துள்ளார்கள். மற்றவர்களுடன் நி ர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்தும் இந்த செயல் மிகவும் இழிவானது”.

இந்த முறை ச ட்டவி ரோதமானது மற்றும் மனிதகுலத்திற்கு எ திரானது. ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட வேண்டியது அவசியம்” என்று தொழிற்சங்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவில் உள்ள திருமணமாகாத பெண்கள் கூட அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைச் சோதிப்பதற்கான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது ஷேக் கூறியுள்ளார்.

“அவர்கள் மற்ற பெண்களுக்கு முன்னால் ஒரு சங்கடமான சூழ்நிலையில் வைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைகளின் போது பெண்களின் மரியாதை பராமரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் சர் ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சூரத் மேயர் ஜெகதீஷ் படேல் கு ற்றவாளிகள் மீது க டுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

குஜராத்தின் பூஜ் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியின் மாணவர்கள், மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க விடுதி அதிகாரிகள் உள்ளாடைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சில நாட்களுக்குப் பிறகு இந்த அ திர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தந்தை இறந்தது கூட தெரியாமல் பரீட்சை எழுதிய மகள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்..

பேருந்து விபத்தில் தந்தை இ றந்தது கூட தெரியாமல் கேரளாவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தேர்வெழுதியுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டத்தின் புறநகரில் வெலியநாடு என்ற சிறிய கிராமத்தில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு படித்து வருபவர் மாணவி பவிதா பைஜு.

இவர் நேற்று காலை மாதிரி தேர்வுக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு தெரியாது, அதே நேரத்தில் நடத்த ஒரு கோர விபத்தில் அவருடைய தந்தை உ யிரிழந்துவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 3.15 மணியளவில் எர்ணாகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, லொறி மீது மோதி விபத்தில் சிக்கியது.

பேருந்தில் பயணித்த 50 பயணிகளில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தனர். இதில், பவிதாவின் தந்தை, 47 வயதான வி.ஆர்.பைஜுவும் உ யிரிழந்துள்ளார்.

பைஜு போக்குவரத்துக் கழகத்தில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையேயான தடத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.

குறித்து வீட்டிற்கு தகவல் கிடைத்தாலும், பவிதா தேர்வுக்கு சென்றுகொண்டிருந்ததால் அதனை பற்றி குடும்பத்தினர் அவரிடம் தெரிவிக்கவில்லை.

இதனால் தேர்வுக்கு சென்ற பவிதா, மாலை 5 மணிக்கு பின்னரே தந்தை விபத்தில் இ றந்தது குறித்து கேட்டறிந்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாப்பிள்ளை செய்த செயல் : திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

மணப்பெண்..

இந்தியாவில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று கூறு நிறுத்திய சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.

இதனால் திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெற்றது. அடுத்த நாள் காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகி மணமேடையில் நின்றனர்.

அப்போது மணமகனின் தங்கை உற்சாகமாக பாடல் ஒன்றிற்கு நடனமாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மணமகன் கோபத்தின் உச்சிக்கு சென்று, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தங்கையை அடித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண், இவரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறி மணமேடையிலேயே மாலையை உதறிவிட்டு எழுந்து சென்றுள்ளார்.

அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அவரோ ஒரு கோபக்காரருடன் தன்னால் வாழ முடியாது. சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை தன்னிடமும் இதேபோல்தான் நடந்துகொள்வார்.

பெண்களை மதிக்காத இதுபோன்ற நபரால் தன்னால் வாழ முடியாது என தெரிவித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின்போது மணமகன் கு டிபோ தையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கணவர் இராணுவத்தில் இருக்கும் நிலையில் நடிகை செய்த மோசமான செயல்!!

மோசமான செயல்..

கணவன் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் இரண்டு ஆண்களை, கூலிப்படையை வைத்து கொ லை செய்ய திட்டமிட்ட பெண் குறித்த அ திர்ச்சி ஓடியோ வெளியாகியுள்ளது.

தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரை சுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம். சுகந்தியின் கணவர் இராணுவத்தில் பணிபுரியும் நிலையில் இவர் சினிமாவில் துணை நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் சுகந்தியும், அவரது சகோதரியும் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதில் ஆ பாச வசனங்களும், பாடல்களுமே அதிகமாக இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சுகந்தியின் செயல்பாடுகளை கண்டித்த ஊர்மக்களை திட்டி அவர் வீடியோ வெளியிட்டார்.

இதனால் கடுப்பான ஊர் மக்கள் சுகந்தியை ஊரை விட்டே துரத்தியதோடு அவர் மீது பொலிசில் புகார் அளித்தனர். இதையடுத்து தன் மீது கலங்கம் ஏற்படுத்த இரண்டு டிக்டாக் இளைஞர்கள் தான் காரணம் என்பதை கண்டுபிடித்த சுகந்தி அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கூலிப்படையைச் சேர்ந்த கார்த்தி என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், என்ன ஆனாலும் பரவாயில்லை. அவர்களை கொலை செய்ய வேண்டும். போட்டு தள்ளுவதே என் முடிவு. எந்த கேஸ் ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசும் ஆடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள சுகந்தியை கைது செய்ய வேண்டும் என அவரின் ஊர் மக்கள் பொலிசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.