அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தின்போது மரத்தை பிடித்து கொண்டு உதவிகேட்டு க த்திய நபர், 10 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீ ட்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பெகா நகரத்திற்கு அருகே, பல மாதங்களாக வறண்ட ஆறுகள் உள்ள பகுதியில் நேற்று சில மணி நேரங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால் ப்ரோகோ ஆற்றில் ப யங்கர வெள்ளம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ஒரு நபர், வறண்ட ஆற்றில் நடைபயணம் மேற்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென வெள்ளம் பா ய்ந்தோடி வந்துள்ளது. இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக அங்கிருந்த மரம் ஒன்றை இறுக பிடித்தபடியே உதவி கேட்டு கூ ச்சலிட்டு கொண்டிருந்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த மீ ட்பு ப டையினர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரை பத்திரமாக மீ ட்டனர்.
பல மணி நேரம் தண்ணீரில் இருந்ததால், மீட்கப்பட்டபோது அவர் தாழ்வெப்பநிலை பா திப்புக்கு உள்ளாகியிருந்ததாக உள்ளூர் மாநில அவசர சேவை தளபதி மைக்கேல் டி ஃபிரிஸ்போம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த வி பச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீ ரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சி றுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அந்த சி றுமியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து விடுதியும் இயங்கி வந்துள்ளது.
எனினும் அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை. அந்த விடுதியில் கலாசார சீ ரழிவு நடவடிக்கை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் அந்த விடுதியை இன்று பிற்பகல் சுற்றிவளைத்தனர்.
அங்கு தங்கியிருந்த வெள்ளைக்கடற்கரையைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரும் அவரது கணவர் எனத் தெரிவித்த ஒருவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஒரே இடத்தைச் சேர்ந்த போதும் பெண் திருமண வயதையடையாதால், அவர்கள் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த விடுதியில் வைத்து அந்த சி றுமி மூலம் அதிகளவு பணத்தை ஆண் பெற்றுவந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்துள்ளமையே இவ்வாறான கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ் மாநகர சபை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகளைச் செய்யாமல் அரசியல் நடத்தினால் இப்படியான கலாசார சீ ரழிவு நடவடிக்கைகளை தடுக்க முடியாது போகும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், பா துகாப்பான முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை பா துகாக்கக் கூடிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும் முற்பகல் 11 மணிமுதல் 3.30 வரையான காலப்பகுதியில், மாணவர்களை திறந்த வெளியில், அதிக வியர்வை ஏற்படும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொப்பியை அணிவதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் குடையை பயன்படுத்துதல், தளர்வான ஆடையை அணிதல் உள்ளிட்ட சில நடைமுறைகளையும் சுகாதார அமைச்சு ஆலோசனையாக முன்வைத்துள்ளது.
பாடசாலை வளாகத்தில் போதுமான அளவு குடிநீர் வசதியை ஏற்படுத்துவதுடன், முதலுதவி குழுக்களை பயிற்றுவித்தல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் நிலைமையுடன் இருக்கும் மாணவர், முழுமையாக குணமடையும் வரை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பெற்றோர்களுக்கு அறியப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சுக்கு, சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்களும் மருத்துவர்களும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர் என சுகாதாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா, தன் வரலாற்றில் மிகவும் மோசமான நாள்களை அனுபவித்துவருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் சூழலில், உலகம் முழுவதும் மக்கள் அ ச்சத்தில் உள்ளனர்.
சீனாவில் மட்டும், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில், கடந்த 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில், அதிக அளவில் உ யிர்ச் சே தத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸின் தா க்கத்தைவிடவும் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 42,200 பேர் இந்த வைரஸால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், 90-க்கும் அதிகமானவர்கள் உ யிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், உபகரணங்கள், மருந்துகள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான சூழலில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், நகரத்துக்குள் இறங்கி நேற்று களஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
முகமூடி, கிளவுஸ் ஆகியவற்றை அணிந்துகொண்டு, பெய்ஜிங் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ளார். பின்னர், நகரிலுள்ள சமூகநலக் கூடங்களுக்கும் சென்று மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்துள்ளார்.
கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸுக்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்தே இதைச் சுற்றி வதந்திகளும் பரவிவருகின்றன. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ்,
கொரோனா வைரஸ் தா க்கம் கடுமையான சூழலில் நமது ஹீரோக்கள் பணியாற்றிவருகின்றனர். வைரஸ் தொடர்பான வதந்திகள் பரவும்போது, மீட்புப்பணியை மேற்கொள்ளக் கடினமாக இருக்கிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போ ராடுவதைவிட, கேலிகளை எதிர்த்துப் போராட வேண்டியது அதிகமாக இருக்கிறது என்றார்.
மேலும், வைரஸ் பரவுவதை எதிர்கொள்ள உலக நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெற்றோரே தங்களது 11 மாத கு ழந்தையை தண்ணீர் தொ ட்டிக்குள் அ ழுத்தி கொ லை செய்த ச ம்பவம் தொடர்பில் அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ். கடந்த 5ஆம் திகதி அமல்ராஜின் 11 மாத ஆண் கு ழந்தையின் ச டலம் வீட்டிலுள்ள தொட்டியில் இருந்து மீ ட்கப்பட்டது.
அமல்ராஜ் தான் கு ழந்தையை கொ ன்றதாக அவனது மனைவி சுஷ்மிதா (18) தந்தையுடன் சென்று பொலிசில் பு காரளித்துள்ளார். வி சாரணையில் குழந்தையின் பி றப்பு மீது ச ந்தேகம் கொண்டு பெற்ற தாய் உட்பட ஒரு குடும்பமே சேர்ந்து அந்த பி ஞ்சுக் கு ழந்தையைக் கொ ன்றது தெரியவந்துள்ளது.
சுஷ்மிதா கடந்த 2018ல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அமல்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் கர்ப்பமான சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது உறவினர்கள் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். இரு மாதங்களில் ஆண் கு ழந்தையும் பிறந்துள்ளது.
அமல்ராஜின் மனைவிக்கு அவரது மாமன் மகன் ஒருவனோடு ஏற்கனவே பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கு ழந்தை தன்னுடையது இல்லை என்று கூறி அமல்ராஜ் புறக்கணித்து வந்துள்ளான்.
அவனுடைய பெற்றோரும் குழந்தையை தூக்கவோ, பரமாரிக்கவோ ம றுத்து பு றக்கணித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் குழந்தையை கொ ன்றுவிட்டால் நமக்குள் பின்னாளில் பி ரச்சனை வராது என அமல்ராஜ் மனைவிக்கு யோசனை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதை ஏற்று கொண்ட சுஷ்மிதா த ண்ணீர் தொ ட்டியில் கு ழந்தையின் த லையை அ ழுத்தி கொ ன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொ லை சம்பவத்தில் இருந்து ம களை கா ப்பாற்ற எண்ணிய சூசை மாணிக்கம், மருமகன் மீது ப ழியைப் போட்டு த ப்பிக்க முயன்று அவரும் சி க்கியுள்ளார்.
தற்போது சுஷ்மிதா, அமல்ராஜ், சூசை மாணிக்கம், அமல்ராஜுவின் பெற்றோரான மரிய லூகாஸ், விமலா என 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்னரே சுஷ்மிதாவை திருமணம் செய்ததால் அமல்ராஜ் மீது போக்சோ சட்டமும் பாய்ந்திருக்கிறது.
தமிழகத்தின் சேலம் அருகே மூளைச்சாவு அடைந்த இ ளைஞரின் உ டல் பா கங்களை பெற்றோர் தானமாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் – ராணி தம்பதியின் மகன் சுரேந்திரன். இவர் கடந்த 8 ஆம் திகதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி ப டுகாயம் அடைந்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறினர். குறித்த தகவலால் அ திர்ச்சி ஒரு பக்கம் இருந்த போதிலும், மகனின் உ டல் உ றுப்புகளை தானமாக வழங்க சுரேந்திரனின் பெற்றோர் முன்வந்தனர்.
இதனையடுத்து, சுரேந்திரனின் இருதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் வெவ்வேறு இடங்களுக்கு தானமாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. காவல்துறை உதவியோடு இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து காமலாபுரம் விமான நிலையம் கொண்டு செல்வதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
சுரேந்திரனின் உடலில் இருந்து பத்திரமாக பிரித்தெடுக்கப்பட்ட இருதயம், பின்னர் ஆம்புலன்ஸின் மூலம் விமான நிலையம் புறப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்ததால்,
25 கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் கடந்து இருதயத்தை விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக இருதயம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மண்ணில் புதைப்பதைவிட உறுப்புகளைத் தானம் கொடுத்தால் அவன் இன்னொருவருடைய உருவத்தில் வாழ்ந்துகொண்டிருப்பான் என்று முடிவெடுத்து உடல்தானம் செய்தோம் என சுரேந்திரனின் பெற்றோர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த நபர் பெ ண்ணிடம் லட்சக்கணக்கான பணம், நகைகளை இழந்த நிலையில் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த பெருமாள் (24). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பினார்.
இந்த நிலையில் அதே ஊரில் உள்ள கன்னியம்மாள் என்பவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட கன்னியம்மாள் பெருமாள் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்த 8.50 லட்சம் பணம், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை அவரிடம் ஆசை வார்த்தை பேசி பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர்களுக்குள் பி ரச்சனை ஏற்பட பெருமாள் தனது பணம் நகையை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதனிடையே கன்னியம்மாள், பெருமாளிடம் நயந்து பேசி நள்ளிரவில் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு மொட்டையடித்து அவரை உட்கார வைத்து மாந்திரீகம் செய்துள்ளார்.
இதனால் பெருமாள் பயந்து க தறிபடி மி ரண்டுள்ளார். வீட்டுக்கு வந்த பெருமாள் தனது செல்போனில் அழுதுகொண்டே பேசி அதனை பதிவு செய்துள்ளார். அதில், என்னிடம் பணம், நகைகளை பறித்துக்கொண்ட கன்னியம்மாள் சுடுகாட்டில் என்னை வைத்து பூஜை போட்டதிலிருந்து எனக்கு உ டல் முழுவதும் எ ரிகிறது.
தூக்கம் வரவில்லை. உடல் உபாதை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் கன்னியம்மாள் தான். எனக்கு பில்லி சூனியம் வைத்து, மாந்திரீகம் செய்துள்ளார். அதிலிருந்து எனக்கு வாழவே பிடிக்கவில்லை என பேசியுள்ளார்.
மேலும், கன்னியம்மாளும் அவர் மகனும் தான் என் சா வுக்கு காரணம் என பேசி தனது சகோதரி தேவிக்கு அனுப்பிவிட்டு பெருமாள் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில், கன்னியம்மாள் அவரது மகன் சூர்யா ஆகியோர் மீது பெருமாள் சகோதரி தேவி புகார் அளித்துள்ளார்.
ஆனால் பொலிசார் இருவரையும் கைது செய்யாததால் பெருமாள் உறவினர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் பொலிசார் சமாதானம் செய்த நிலையில் போ ராட்டத்தை கைவிட்டார்கள்.
தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மகள் திவ்யா (21).
இவருக்கு சென்னை திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்தது. நேற்று திவ்யா, கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசினார்.
சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்ற திவ்யா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் ச ந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி அழைத்தனர். கதவு திறக்கப்படவில்லை.
அதனால் அவர்கள் க தவை உ டைத்து உள்ளே சென்றனர். அங்கு திவ்யா தூ க்கில் ச டலமாக தொ ங்கியதை பார்த்த பெற்றோர் க தறி அ ழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவின் உ டலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 3 நாட்களில் திவ்யா தூ க்கிட்டு த ற்கொ லை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வி சாரணை நடத்தி வருகிறார்கள்.
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின்போது, சகோதரி உ யிரிழந்த சோ கத்துடனே வங்கதேச அணியின் கேப்டன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி, இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
ஆனால் இந்த தொடரின் போது, அக்பர் அலி தனது சகோதரியை இ ழந்து அந்த வே தனையுடனே விளையாடியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
டாக்காவில் உள்ள ஒரு உள்ளூர் வலைத்தளம் ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிட்ட செய்தியில், நான்கு சகோதரர்களுடன் கடைசியாக பிறந்த அவருடைய சகோதரி இரட்டை குழந்தை பெற்றெடுத்தபோது உ யிரிழந்துள்ளார்.
க வனம் சி தறிவிடுமோ என்கிற அ ச்சத்தில் இந்த செய்தியை அவருடைய குடும்பத்தினர், அக்பர் அலிக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் உடனான போட்டி மழையால் ரத்து செய்யபட்டிருந்தபோது, அவர் எப்படியோ இந்த செய்தியை தெரிந்துகொண்டு, வீட்டிற்கு போன் செய்து பேசியுள்ளார். அந்த வ ருத்தத்தை சக வீரர்களிடம் கூட தெரிவிக்காமல் வே தனையுடனே விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
2019.01.01ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ள வேலை வாய்ப்பற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி செயலகம் வேலைதொடர்பில் அறிவித்துள்ளது.
“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், குறித்த விண்ணப்பதாரிகள் ஒரு வருடத்திற்கு அதிக காலம் தொழில் வாய்ப்பற்றவராக இருப்பதாகவும் விண்ணப்பிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர பதிவைக் கொண்டவராகவும் இருப்பதை கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ள பட்டப் பாடநெறி ஒன்றை அல்லது அதற்கு சமமான தகைமையினைக் கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றை 2019.12.31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்துள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
2019.01.01ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ள குறித்த காலப்பகுதியில் (பட்டம் பெற்ற திகதி முதல்) வேலை வாய்ப்பற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்” என்று ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில் தேடும் பட்டதாரிகள் அரசாங்க தொழில்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய திகதி நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்ப இறுதி திகதி பெப்ரவரி 14 என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த திகதி பெப்ரவரி 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
45 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் அல்லது அதற்கு நிகரான கல்வி தகுதியை கொண்டவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும். விண்ணப்பங்களை presidentoffice.gov.lk என்ற இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது பந்து மா ர்பில் வே கமாக ப ட்டதால் இளம் வீரர் உ யிரிழந்தது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அணியும், அச்சிறுப்பாக்கம் அணிகளும் விளையாடிக்கொண்டிருந்த போது,
சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இ ளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். திரணியைச் சேர்ந்த கமலேஷ் பந்து வீசியுள்ளார். அப்போது அவர் வீசிய பந்து சுனில் மா ர்பின் மீ து வே கமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மா ர்பை பி டித்துக் கொண்டு கீ ழே ம யங்கி வி ழுந்துள்ளார்.
அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீ ட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சி கிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அம்புலன்சில் செல்லும் போது சுனில் உ யிரிழந்துள்ளார். உடனடியாக அவரின் உ டலை பி ரேத ப ரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ளுர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் ரன் எடுக்க ஓடும் போது மைதானத்திலே சுருண்டு வி ழுந்து உ யிரிழந்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியின் போதே இச்சம்பவம் நடந்துள்ளது.
போட்டியின் போது, ரன் எடுக்க ஓடிய 18 வயதான இளம் கிரிக்கெட் வீரர், எதிர்பாராதவிதமாக ஆடுகளத்திலே சு ருண்டு வி ழுந்துள்ளார். உடனே அவர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், வீரரை சோ தனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் டெராபிஷ் கல்லூரியின் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யஜித் பிரதான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதான் மாரடைப்பால் இ றந்திருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், பிரதான் ம ரணம் தொடர்பாக தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ம ரணத்தின் சரியான காரணத்தை அறிய பி ரேத ப ரிசோதனை செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது இருக்க பல்வேறு பா துகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்குள் வரும் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பதற்கும் நோய் பரவுவதனை தடுப்பதற்கும் சுகாதார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் விமான நிலையத்தின் ஊழியர்கள், விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய சுகாதார நடவடிக்கை தொடர்பான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் வாழும் பிரதேச மக்களுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1010 பேர் உ யிரிழந்துள்ளனர். 43000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இ.போ.ச பேருந்து சேவைகள் உரிய நேரத்தில் இடம்பெறாமையினால் பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும், பருவகால பயணச்சீட்டுக்கள் பலனளிக்கவில்லையெனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இ.போ.ச பேருந்து சாலையிலுள்ள பேருந்துகள் அதிகளவில் வெளி மாவட்டங்களை நோக்கிச் செல்கின்றதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் பாடசாலை ஆரம்பமாகிய பின்னரே பாடசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச சாலையினால் மாணவர்கள் உட்பட பலர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலைமைகளை அகற்றி பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள்,
பாடசாலை மாணவர்களுக்கான பா துகாப்பான சேவைகளையும், தன்னிறைவான சேவைகளையும் வழங்க வவுனியா இ.போ.ச சாலை முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான கு ற்றச்சாட்டுக்கள் குறித்து வவுனியா இ.போ.ச சாலையின் முகாமையாளர் எச்.சாஹிருடன் தொடர்பு கொண்டு வினவியபோது,
வவுனியா சாலைக்கு 15 பேருந்து சாரதிகளும், நடத்துனர்களும் தேவைப்படுகின்றனர். இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறை காரணமாக கிராமப்புறங்களுக்கான சேவைகள் மேற்கொள்ள முடியவில்லை.
போதியளவு பேருந்துகள் சாலையில் காணப்படுகின்ற போதிலும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தர்மபால, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளாக கே. காதர் மஸ்தான், ரிஷாட் பதியூதீன் மற்றும் இ.போ.ச போக்குவரத்துச்சபைப் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை ப யமுறுத்தும் பாணியில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சில இளைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் நான்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை அ ச்சுறுத்தும் வகையில் செலுத்திய போது நேற்று போக்குவரத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிஸாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று ஜனாதிபதி மன்றத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைய அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர்களுடன் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு செலவு செய்வதை விட, கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்திற்காக செலவிடுமாறு ஜனாதிபதி இதன்போது மேலும் வலியுறுத்தினார்.