வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அதிஸ்டலாபச்சீட்டு கூடம், வடை வண்டில் மற்றும் குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் நாளாந்த வாடகையாக 50ரூபா செலுத்தப்பட்ட வேண்டுமென நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அறிவித்தல் குடியிருப்பு வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களிற்கு முன்பாகவும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்குறிப்பிட்ட இடங்களில் நாளாந்த வாடகை 50ரூபா செலுத்த தவறும் பட்சத்தில் மேற்கூறப்பட்ட வியாபாரங்கள் நகரசபையால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடமாடும் வண்டில் வியாபாரம் என நகரசபைக்கு வருடாந்தம் 1270ரூபா செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது தினசரி 50 ரூபாவும் பெறுகின்றனர். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடமாடும் வண்டில் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை திறந்த வெளிச்சந்தை குத்தகையாளர் என நகரசபையினரால் இதற்கு (நாளாந்த வாடகை 50 ரூபா பெறுவதற்கு) குத்தகை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல் பரவும் நிலையில், பாடசாலைக்கு அருகில் சீனர்கள் தங்கியிருக்கின்றனர் என்ற காரணத்தால் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்டம், தென்மராட்சிக் கல்வி வலயத்தில் ஒரு பாடசாலையில் கற்கும் பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் கட்டடத்தில் தென்மராட்சியில் தண்ணீர்க் குழாய் பொருத்தும் பணியில் சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருப்பது, அந்தப் பாடசாலைக்கு அருகில் உள்ள தனியார் கட்டடத்திலேயே. இதுவரை காலமும் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்கவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் பலரது உ யிர்களைப் பறித்து பீதி ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனர்கள் அந்தப் பாடசாலைக்கு அருகில் வசிக்கின்றமையால் இந்த நிலைமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இலங்கை மதிப்பீட்டு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தில் இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வீதிகளும் அதிவேக வீதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பு போட்சிட்டி, ஹம்பாந்தோட்டை துறைமுகம், காவல்துறை நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை முன்னைய வரைப்படத்தில் இருக்கவில்லை.
மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பி.சங்கக்கார இது தொடர்பில் கூறுகையில் இந்த புதிய வரைபடம் கூகுள் வரைபடத்துக்குள்ளும் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீன பெண் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனப் பெண்ணிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் குணமடைந்துள்ளார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவர் அல்லது அவர் இலங்கையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் வைரஸ் தொற்றியுள்ளதா என சோதனையிடப்பட்டது. எனினும் அவர்கள் பாதிக்கப்படவில்லை என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதல் நோயாளி இவராகும்.
43 வயதான பெண் குறித்த பெண் சீனாவின் ஹுபே மாகாணத்திலிருந்து சுற்றுலா மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த போதே இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்மணி முழுமையாக காப்பாற்றப்பட்ட நிலையில், இலங்கையில் ஏற்படவிருந்த பெரும் ஆபத்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.02.2020) காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.
திடீரென அமைக்கப்பட்ட இச் சோதனைச் சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் மக்கள் ஒருவித அ ச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம், காணொளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை வைத்துள்ளனர்.
ஒரு பக்கம் கொரோனா வைரஸைக் கண்டு உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்க, அதையும் பயன்படுத்தி சிலர் பிரபலமாக விரும்புகிறார்கள்.
குறைந்தது 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உ யிரிழந்தாயிற்று, 9 அவுஸ்திரேலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கொரோனா வைரஸ் ஹேஷ்டேக் 180,000 இடுகைகளுடன் பிரபலமடைந்து வருகிறது.
ஆனால், அதையும் பயன்படுத்தி பிரபலமடைய விரும்புகிறார்கள் சிலர். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலர் முகமூடிகளுடன், தங்கள் கவர்ச்சியான உடலையும் உடையையும் காட்டி பிரபலமாக முயன்று வருவது வருத்தமளிப்பதாக உள்ளது.
அதில் ஒருவர் தனது காதலியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்ள, முகமூடிகளுடன் இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். இதில், எங்களுக்கு கொரோனா வைரஸ் பயம் இல்லை என்ற கேப்ஷன் வேறு! மற்றொருவர் சுற்றிலும் முகமூடி அணிந்த அழகிய இளம் மொடல்களுடன் போஸ் கொடுக்கிறார்.
மற்றொருவர் தன் க வர்ச்சியைக் காட்டி, மாஸ்க் அணிந்துகொண்டே என் படங்களைப் பாருங்கள் என்கிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக எதைத்தான் பயன்படுத்துவது என்றே தெரியவில்லை இவர்களுக்கு.
அ ழுதுகொண்டிருந்த 11 மாத கைக் கு ழந்தையை அ டுப்பில் வே கவைத்த தாத்தா – பாட்டிக்கு சி றைத் த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்யாவில் ஹக்காசியா பகுதியை சேர்ந்த 20 வயதான விக்டோரியா சாகலகாவ் என்கிற என்கிற தா ய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தனது மகனை தா ய்- த ந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றிருந்துள்ளார்.
அந்த நேரத்தில் கு ழந்தை தொடர்ந்து அ ழுதுகொண்டே இருந்ததால், ம து போ தையில் இருந்த சி றுவனின் பாட்டி ஜன்னா (43) அ ழுகையை நிறுத்தும் வரை மூ ச்சை அ டைந்துள்ளார். அதன்பிறகு ச த்தமில்லாமல் கிடந்த கு ழந்தையை தூக்கி, அதன் தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் (48) விறகுகளை எ ரிக்கும் அ டுப்பில் போ ட்டுள்ளார்.
இதற்கிடையில் ச ந்தேகமடைந்த பக்கத்துவீட்டு நபர் பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், இருவரையும் கைது செய்து வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
விசாரணையின் முடிவில், ஜன்னா மூ ச்சை அ டைத்த பின்னரும் கூட சிறிது உ யிருடன் இருந்த கு ழந்தை, அ டுப்பில் வீ சப்பட்ட பின்னரே து டிதுடி த்து உ யிரிழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சி றைத்தண் டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்தியாவில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி பெரும் கோடீஸ்வரர் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேஷ் படேல். இவர் குடும்பம் விவசாய குடும்பமாகும். ஆனால் குடும்பத்தினர் யாரும் பெரிய அளவில் கல்வி கற்காத நிலையில் ஜிதேஷ் மட்டும் வேளாண் துறையில் பட்டப்படிப்பை முடித்தார்.
இதையடுத்து சாதாரணமாக விவசாயம் மூலம் வருமானம் ஈட்டி வந்த குடும்பத்தாருடன் ஜிதேஷும் சேர்ந்து விவசாயம் செய்ய தொடங்கினார்.
இதற்கு அவர் பயின்ற வேளாண் அறிவியல் படிப்பு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதையடுத்து விவசாயம் மூலம் அவர்களின் வருமானம் பெருக தொடங்கியது. தற்போது ஜிதேஷ் லேடி ரொசட்டா என்ற ரகத்தை சேர்ந்த உருளைக்கிழங்கை ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்.
சிப்ஸ், பிஸ்கட் தயாரிக்க பயன்படுவதால், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு கிலோ 17 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுவதால், ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக ஜிதேஷ் படேல் தெரிவித்தார்.
மேலும் இனப்பெருக்கம், நோயியல், நுண்ணுயிரியல், பூச்சியியல் மற்றும் தோட்டக்கலை போன்ற விவசாயத்துக்கு தேவையான விடயங்கள் குறித்து தன் குடும்பத்தாருக்கு சிறப்பு திறன் உண்டு என ஜிதேஷ் கூறியுள்ளார்.
இதனிடையில் கடந்தாண்டு மட்டும் குஜராத்தில் இருந்து ஒரு லட்சம் டன் லேடி ரொசட்டா உருளைக்கிழங்கு இந்தோனேசியா, குவைத், சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது பாட்டி வயது பெண் ஒருவரை காதலிக்கும் இளைஞர் ஒருவர், நான் அவரது உடலைப் பார்க்கவில்லை, உள்ளத்தைப் பார்க்கிறேன் என்று சினிமாவில் வருவது போல வசனம் பேசுகிறார். பேஸ்புக்கில் என்னென்னவோ கண்றாவிகள் நுழைந்துள்ளன, அதில் இந்த பொருந்தாக் காதலும் ஒருவகை.
வயது வித்தியாசமே இல்லாமல், அப்பா வயது ஆணை இளம்பெண்களும், பாட்டி வயது பெண்ணை ஆண்களும் காதலிக்க, தாய் மகன், தந்தை மகள் என்ற உறவு முறையே காணாமல் போய்விடும்போலிருக்கிறது (வெளிநாடுகளில்).
அப்படித்தான் பேஸ்புக்கில் சந்தித்த 35 வயது எகிப்தியரான முகமது அகமது இப்ராகிமுக்கும், பிரித்தானியாவைச் சேர்ந்த 80 வயது ஐரிஸ் ஜோன்ஸ் என்ற பெண்மணிக்கும் காதல் வந்திருக்கிறது.
இந்த லட்சணத்தில், சந்தித்த முதல் முறையே இருவரும் பா லுறவு வைத்துக்கொள்ள, அடுத்த நாள் தன்னால் நடக்கவே முடியவில்லை என்கிறார் பாட்டி.
ஐரிஸ் பாட்டியின் மகளான டாரன் (53)! தன் தாயிடம், கவனமாக இருக்குமாறும், அந்த பையன் உங்கள் பணத்துக்காகத்தான் உங்களைக் காதலிப்பதாகத் தோன்றுகிறது என்றும் எச்சரிக்க, ஐரிசோ, தன்னிடம் ஒரு வீடு மட்டுமே இருப்பதாகவும், தான் முதியோர் பென்ஷனில்தான் வாழ்கிறேன் என்பதையும் ஏற்கனவே தன் காதலரிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
போதுமான சேமிப்பு இல்லாததால் முகமதுக்கு பிரித்தானிய சுற்றுலா விசா கிடைக்கவில்லை. ஆகவே, ஐரிஸ் எகிப்துக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். திருமணத்துக்குப்பின் முகமதுக்கு பிரித்தனியாவில் வாழிட உரிமம் கிடைக்காவிட்டால், இந்த ஜோடி எகிப்தில் சென்று குடியேற இருக்கிறார்களாம், கலிகாலம்!
வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்லத்திறனாய்வுப் போட்டி நேற்று 30/01/2020 வியாழக்கிழமை பாடசாலையின் முதல்வர் திரு, விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படிஇல்லத்திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக திரு. இ.இளங்கோவன்(செயலாளர்,)
கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு) சிறப்பு விருந்தினராக திருமதி அன்னமலர் சுரேந்திரன்(வலயக்கல்விப்பணிப்பாளர் ,வவுனியா வடக்கு) ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை சமூகத்தினரின் பங்களிப்புடன் இல்லத்திறனாய்வுப் போட்டி சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் து ப்பாக்கி மு னையில் 23 சி றார்களை பி ணைக் கை தியாக பி டித்து வை த்திருந்த கு ற்றவா ளியை பொ லிஸார் சு ட்டு வீ ழ்த்தி அ னைவரையும் கா ப்பாற் றியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் Farrukhabad பகுதியை சேர்ந்த சுபாஷ் பாதம் என்கிற கு ற்றவா ளி சமீபத்தில், சி றையி லிருந்து ஜா மீனில் வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது மகளுக்கு பிறந்தநாள் எனக்கூறி உள்ளூரை சேர்ந்த அனைத்து சி றார்களு க்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று ஆறு முதல் 15 வயதுடைய 23 கு ழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வீடு திரும்பாததால் ச ந்தேகமடைந்த சி றார்களின் பெ ற்றோர்கள், சுபாஷ் வீட்டு கதவை த ட்டியுள்ளனர். அப்போது ஒருவர், மட்டும் திறந்துகொண்டு உள்ளே சென்றபோது சுபாஷ் அவரை து ப்பாக் கியால் சு ட்டுள்ளார்.
ச த்தம் கே ட்டு ஓ டிவந்த அ க்கம்பக்கத்தினர் உ டனடியாக பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வி ரைந்து வந்த பொ லிஸார், 8 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.
ஆனால் பேச்சுவார்த்தை முயற்சிகள் எந்த பலனையும் அளிக்காத நிலையில், இறுதியாக க தவை உ டைத்துக்கொண்டு உ ள்ளே சென்றனர். உடனே சுபாஷ் து ப்பாக்கிச் சூ டு ந டத்தியதால், பொலிஸாரும் ப தில் சூ டு நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே கு ற்றவாளி சுபாஷ் உ யிரிழ ந்தான். மேலும் இரண்டு பொ லிஸார் மற்றும் உள்ளூர் ந பர் ப டுகாயமடைந் தனர். இந்த ச ம்பவத்திற்கு சுபாஷின் மனைவி உடந்தையாக இருந்தாரா என்பது தெரியவில்லை.
எவ்வாறாயினும், அவர் தி ட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக பொ லிசார் ச ந்தேகிக்கின்றனர். கு ழந்தைகளை கா வல்துறையினர் வீட்டிலிருந்து பா துகாப்பாக அ ழைத்துச் சென்றபின், ஆ த்திரமடைந்த உ ள்ளூர்வாசிகள் செ ங்கற்களையும் க ற்களையும் வீ சும்போது அ வர் ப லத்த கா யமடைந்துள்ளார்.
இதனையடுத்து மீ ட்கப்பட்டு ம ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பி ணை கை திகளாக பிடிக்கப்பட்ட 23 சி றார்களும் கா யமின்றி ப த்திரமாக மீ ட்கப்பட்டனர் என கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுபாஷ், 2001 ஆம் ஆண்டு கொ லை வ ழக்கில் கு ற்றவாளி என அறிவிக்கப்பட்டு சி றைத்த ண்டனை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து சென்று பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கங்களை பெற்ற மூன்று வீரர்கள் இன்று (31.01.2020) வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் கௌரவிக்கப்பட்டனர்.
வவுனியா விபுலானந்தா கல்லாரியின் அதிபர் பி.சிவநாதன் தலைமையில், எஸ்.சஞ்சயன் (தங்கப்பதக்கம்), பி.ராகுல் (தங்கப்பதக்கம்), ரி.நாகராஜா (வெள்ளிப்பதக்கம்) வென்ற மாணவர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கல்லூரி வளாகத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளரும், வடக்குமாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமார், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம், உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் கெ.யூட் பரதமாறன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையிலான உள்நாட்டு விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையை பிட் எயார் விமான சேவை நிறுவனம் எடுத்துள்ளது. கொழும்பு இரத்மலானையில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கு புறப்படும் இவ்விமானம் காலை 8.20 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முற்பகல் 9.30 புறப்படும் விமானம் முற்பகல் 10.20க்கு இரத்மலானையை வந்தடையும். விமானப் பயணத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்படுகிறது. ஒரு பயணி கையில் 4 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களையும் 20 கிலோ கிராம் எடை கொண்ட பயணப் பொதியையும் எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதன் தாக்கம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையதில் வைத்து உள் வருகை விசாவை பெற்று வந்தனர். எனினும் அந்த நடவடிக்கை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் உள்ள இலங்கை தூதகரம் ஊடாக, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே விசா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
On Arriva எனப்படும் உள் வருகை விசா நடைமுறை நிறுத்தப்படுவதுடன், முன்கூட்டியே விசா பெற்றுக்கொண்ட பின்னரே இலங்கைக்குள் எந்தவொரு வெளிநாட்டவரும் வர முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன – களுகல சிங்கள வித்தியாலயத்தில் உணவு விஷமடைந்தமை காரணமாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை உணவை உட்கொண்டதன் பின்னர் மாணவர்களுக்கு திடீரென மயக்கம், வாந்தி ஏற்பட்டதன் காரணமாகவே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் இது வரை 39 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இரண்டு மாணவிகள் மாத்திரம் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று (30.01.2020) வியாழக்கிழமை சிவஸ்ரீ.சர்வேஸ்வரகுருக்கள் தலைமையில் நண்பகல் பதினொரு மணியளவில் கொடிஏற்றதுடன்ஆரம்பமானது.