வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

வௌிநாட்டிலிருந்து இலங்கை வருகை தருபவர்கள் தமது தகவல்கள் வௌிப்படுத்தும் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புதல் கட்டாயம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனூடாக, சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பா துகாப்பாக இருப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு நான்கு பக்கங்களை கொண்ட சுற்றுநிருபம் ஒன்றை வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பா துகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்றைய தினம் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

வட.கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம், குருநாகல், கரகம்பிட்டிய, கண்டி, நுவரெலியா, அநுராதபுரம், இரத்தினபுரி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள போதனா வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

குறித்த பகுதிகளிலுள்ள போதனா வைத்தியசாலையில் அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் முல்லைத்தீவில் இருந்து ஒருவரும், கண்டியில் இருந்து ஒருவரும், வாத்துவ பகுதியிலிருந்து ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீனாவில் இருந்து வருகை தரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் தியத்தலாவில் இரண்டு வாரம் தடுத்து வைத்து அவதானிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட 11 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அனுமதிக்கலாம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தத்தமது தனி நபர் சுகாதாரத்தை மக்கள் பேணிக்கொள்ள வேண்டும் என்பதுடன், உணவு விடயத்திலும், பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திலும் அவதானமாக செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் சோ தனையில் மூ வர் கை து!!

புதூர் சந்தியில்

வவுனியா, கனகராயன்குளம் புதூர் சந்தியில் இரா ணுவம் மற்றும் பொ லிசார் இ ணைந்து மேற்கொண்ட சோ தனை ந டவடிக்கையில் க டற்ப டை சி ப்பாய் உள்ளிட்ட மூ வர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த மூவரும் கை து செய்யப்பட்டு புளியங்குளம் பொ லிசாரிடம்
ஒ ப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.சபை பேருந்தை புதூர் சோ தனை சா வடியில் வ ழிமறி த்து இரா ணுவத்தினரும், பொ லிசாரும் சோ தனை செய்த போது 5 கி லோ கேரளா க ஞ்சா க ண்டுபி டிக்கப்பட்டதுடன், அதனை உ டமையில் வை த்திருந்த  கு ற்றச் சாட்டில் க டற்ப டை சி ப்பாய் உட்பட இருவர் கை து செய்யப்பட்டனர்.

அத்துடன், பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.சபை பேருந்தை கு றித்த சோ தனை சா வடியில் சோ தனை செய்த போது 2 கிலோ கேரளா க ஞ்சா க ண்டுபி டிக்கப்பட்டது. இதனை உ டமையில் வை த்திருந்த கு ற்றச்சா ட்டில் ஓருவர் கை து செய்யப்பட்டார்.

கைப் பற்ற ப்பட்ட கேரளா க ஞ்சாவும், கை தான மூவரும் புளியங்குளம் பொ லிசில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை புளியங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நீல மயில்!!

நீல மயில்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய இல்ல திறனாய்வுப் போட்டி கடந்த 23.01.2020 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இல்ல அலங்கரிப்புப் போட்டியில் நீல மயில் போன்று அலங்கரிக்கப்பட்ட இல்லம் முதலிடத்தைப் பெற்றதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் தற்போது இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனோ வைரஸ் : முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு!!

இலங்கையில் கொரோனோ வைரஸ்

இலங்கையில் முதலாவது கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே நோய்த் தொற்றுக்கு இலக்காகி உள்ளார்.
அவர் சீனாவின் Hubei மாகாணத்தில் இருந்து இலங்கை வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையர்கள் யாரும் அ ச்சமடைய வேண்டாம் என சுகாதாரம் ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரம் ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் இரத்த மாதிரி ஊடாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சலவை இயந்திரத்தினுள் பிஞ்சுக் குழந்தை : இரத்தக் கறையுடன் மனைவி : அ திர்ச்சியில் உறைந்த கணவன்!!

சலவை இயந்திரத்தினுள்..

புதிதாக பிறந்த குழந்தையை பெற்ற தாயே சலவை இயந்திரத்திற்குள் அடைத்து கொ லை செய்துள்ள கொ டூர ச ம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 31 வயதான சிகையலங்கார நிபுணர் நடேஷ்தா இசட், தனது நான்காவது குழந்தையை சனிக்கிழமை இரவு பெற்றெடுத்துள்ளார். பின்னர் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் அடைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டிற்கு வந்த அவருடைய கணவன் டேனிஸ், மனைவி இ ரத்தக்க றையுடன் கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நடேஷ்தாவிற்கு பிறந்த கு ழந்தை சலவை இயந்திரத்திற்குள் இ றந்த நிலையில் அ டைக்கப்பட்டிருப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடேஷ்தாவிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தனக்கு குழந்தை பிறக்கவே இல்லை என கொ லைக் கு ற்றத்தை மறைத்துள்ளார்.

ஆனால் பொலிஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொ லைக் கு ற்றத்தை எதிர்கொள்வார் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் பொலிஸார் வி சாரணை மேற்கொண்டபோது, நடேஷ்தாவிற்கு முதல் கணவரின் மூலம் ஒரு மகனும், தற்போதைய கண்வன் மூலம் இரண்டு மகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு நல்ல தாய் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தன்னால் மற்றவர்களுக்கு பரவி விடகூடாது என்பதற்காக இளம் பெண் செவிலியர் எடுத்த அதிரடி முடிவு!!

கொரோனா வைரஸ்

சீனா உட்பட பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய்த்தோற்று, தன்னால் மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்க சீனாவைச் சேர்ந்த செவிலியர் செய்த செயல் அனைவரையும் உருக வைத்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, கிட்டத்தட்ட 3,000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தேசிய புத்தாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையைச் சேர்ந்த இளம் பெண் செவிலியர் ஷான் சியா, நோய் மற்றவர்களுக்கு தொற்றுவதை தவிர்ப்பதற்காகவும்,

மருத்துவ பா துகாப்பு ஆடைகளை அணிந்துகொள்வதற்கான நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் தலையை மொட்டையடித்துள்ளது அனைவரையும் உருகவைத்துள்ளது.

எனது நேரத்தை அதிக உயிர்களை கா ப்பாற்ற பயன்படுத்த வேண்டும் இளம் பெண் செவிலியர் ஷான் சியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!!

வடக்கு மக்களுக்கு..

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வடக்கு மக்கள் தேவையற்று அ ச்சமடையத் தேவையில்லை என்று மாகாண தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் அதிகாரி மருத்துவர் எஸ்.சிவகணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையைப் பொறுத்த வரையில் சீனாவுடன் தொடர்புகள் காணப்படினும் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பிரதேசமாகக் காணப்படவில்லை.

எனினும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பான தப்பான விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடையே தேவையற்ற ப யமும் கு ழப்பங்களும் ஏற்படலாம் என்பதனால் இந்த தகவல்களை பொதுமக்களின் நன்மைகருதித் தெரிவிக்கின்றோம்.

தற்போது சீனாவில் குறிப்பிட்டதொரு மாகாணத்தில் சுமார் 3 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 80 நோயாளர்கள் உ யிரிழந்துள்ளனர்.

எனினும் ஏனைய நாடுகளில் சீனா போன்று கொரோனா வைரஸ் நிரந்தரமான தொற்றுக் காணப்படவில்லை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் சுகாதார ஊழியர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ள போதும் சீனா போன்று ஆபத்துக்கள் இல்லை.

இலங்கையிலும் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிய போதும் இதுவரை அந்த வைரஸ் தொற்றுக்குள்ளான எவருமே இனங்காணப்படவில்லை.

4 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு ஏற்பட்டது கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்தவிடயத்தில் தேவையற்றுப் அ ச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா வைரஸ் தொற்று சாதாரணமாக தடிமன், காய்ச்சல் ஏற்படுவது போன்ற தொற்றுத்தான்.

ஆனால் 2019ஆம் ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம்தான் தற்போது காணப்படுகின்ற நோய்நிலமை ஏற்படுகிறது. இதுதொடர்பில் தற்போது ஆராய்ச்சிகளை சீன அரசும் உலக சுகாதார நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஊடாக மேலதிக தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்கும். எனினும், நாம் சில த ற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருக்கும். கூடுதலாக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் இதற்கான த ற்காப்பு நடவடிக்கைகள் அவசியமாகும்.

சவர்காரமிட்டு கைகழுவுதல் மிகவும் முக்கியமானது. எத்தகைய தொற்று நோயாக இருந்தாலும் சவர்காரமிட்டு கைகளைக் கழுவுவதன் மூலம் 90 வீதமாக நோய் பரவாமல் தடுக்க முடியும்.

பொதுவாக வைரஸ் தொற்றுக்களைத் தடுக்கும் உணவு வகைகள் உள்ளன. மரக்கறிகள், பழங்கள் (புளிப்பான பழங்கள்) போன்றவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.

அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையம், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்த்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

சுகாதார அமைச்சு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைரஸ் தொற்று நோயாளர்களை இனங்கண்டு கொள்வதற்கான நவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதால் நாம் தேவையற்ற வகையில் அ ச்சமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம் ஜோடியின் காதல் கதையை கேட்டு உருகிய பொலிஸ் : காவல் நிலையத்திலே நடந்த சுவாரஷ்ய திருமணம்!!

சுவாரஷ்ய திருமணம்

வீட்டிலிருந்து ஓட்டம்பிடித்த காதல் ஜோடியின் கதையை கேட்டு உத்திரபிரதேச பொலிஸார், காவல் நிலையத்தில் வைத்தே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே தெருவில் வசித்து வந்த ராகுல் – நைனா என்கிற இளம் ஜோடி இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்கிற அச்சத்தில், இருவரும் கடந்த 7 மாதத்திற்கு முன்பாக பதிவு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் யாருக்கும் தெரியாதபடி வழக்கம்போலவே இருவரும் தங்களுடைய வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் இவர்களுடைய காதல் விவகாரத்தை அறிந்து கொண்ட நைனாவின் பெற்றோர், வீட்டிலிருந்து வெளியேற விடாமல் அ டைத்து வைத்துள்ளனர். மேலும், ஒரு வாரத்திற்கு முன்பாக நைனாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடவும் ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் வீட்டிலிருந்து மா யமாகியுள்ளனர். நைனாவின் தந்தை ஜூஹி மகளை கா ணவில்லை என பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் பொலிஸார் அடிக்கடி ராகுல் வீட்டிற்கு சென்று விசாரணை என்கிற பெயரில் தொ ந்தரவு கொடுத்து வந்தனர். இதனை அறிந்த ராகுல் நேற்று தாமாகவே பொலிஸ் நிலையம் சென்று ச ரணடைந்துள்ளார்.

அங்கு அவர்களுடைய காதல் கதையை கேட்ட பொலிஸார், உடனடியாக காவல் நிலையத்திலே திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து சமாதானம் பேசியுள்ளனர். இறுதியாக இருவீட்டாரும் காதலை ஏற்றுக்கொள்வதாக கூறி, வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

தொ ல்லை செய்யும் 3 தோழிகள் : க ண்ணீர் விடும் டிக் டாக் பெண்!!

டிக் டாக் பெண்

தமிழகத்தில் டிக் டாக் மூலம் தனக்கென்று சில ரசிகர்களை வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மா ர்பிங் செய்யப்பட்டு ஆ பாசமாக சமூகவலைத்தளங்களில் வை ரலானதால், இதைக் கண்டு அவர் அ திர்ச்சியடை ந்ததுடன் அதற்கான காரணத்தையும் வே தனையுடன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி. 39 வயதான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லாததால், விவாசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது டிக்டாக்கில் வீடியோ ஒன்றை இவர் பதிவிட, அதற்கு ஆதரவு அதிகமானதால், டிக்டாக்கில் இவரை 33 ஆயிரம் பேர் பின் தொடர ஆரம்பித்தனர்.

நல்ல கருத்துக்களை கூறி வந்ததால், இவரை பலரும் பின் தொடர் ஆரம்பித்தனர். அப்படி டிக் டாக் மூலம் விழுப்புரத்தை சேர்ந்த லதா, சென்னையை சேர்ந்த கவிதா, சுமதி என்பவர்கள் கடல்கன்னிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள், அவரிடம் நட்பாக பேசி நெ ருக்கமாகியுள்ளனர். இவர்கள் ஆ பாசமாக டிக்டாக் செய்பவர்களாம். இதன் காரணமாகவே கடல்கன்னி அவர்களுக்கு பலமுறை இது எல்லாம் த வறு என்று அறிவுரை கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்கள் கேட்கவில்லை, ஆனாலும் தன்னுடைய குடும்ப க ஷ்டத்தை இந்த மூன்று பெண்களிடமும் கூறி கடல்கன்னி அ ழுது வந்துள்ளார்.

அப்படி ஒரு முறை இவர்கள் ஆறுதல் கூறும் போது, தங்களுக்கு தெரிந்தவரிடம் நெருங்கி பழகினால் 2 லட்சம் ரூபாய் தருவார் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி வி பச்சாரத்திலும் ஈடுபட க ட்டாயப்ப டுத்தியுள்ளனர்.

ஆனால் கடல்கன்னி மறுத்ததால், இந்த விஷயத்தை இவள் வேறு யாரிடமும் சொல்லிவிடுவாள், நம்மை பற்றி கெட்ட பெயர் வந்துவிடும் என்று கூறி, அவர்கள் இதை பற்றி யாரிடமும் வெளியே சொல்ல கூடாது,

குறிப்பாக டிக்டாக்கில் பதிவிட கூடாது, என்று மி ரட்டி 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொ ந்தரவு செய்ய, அவர்கள் கடல்கன்னியின் போட்டோவை ஆ பாசமாக மா ர்பிங் செய்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

டிக்டாக்கில் தன்னுடைய ஆ பாச படத்தை பார்த்த கடல்கன்னி அ திர்ச்சியடைந்து, எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த பு காரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடித்து வருவதால், 3 தோழிகளின் தொ ல்லை தா ங்க மு டியாமல் த ற்கொ லை வரை சென்றதாக வே தனையுடன் கூறியுள்ளார்.

வயிற்று வ லியால் அவஸ்தையடைந்த 13 வயது சிறுமி : அறுவை சிகிச்சையில் காத்திருந்த அ திர்ச்சி!!

13 வயது சிறுமி

கோவையில்13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாகவே வயிற்று வ லியால் அவஸ்தையடைந்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடைய வயிற்றில் கட்டி போன்ற ஒன்று இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.

மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட் கவர் என சில பொருட்கள் இருந்துள்ளன.

இவை அனைத்தையும் வயிற்றில் இருந்து அகற்றிய மருத்துவர்கள், சிறுமி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

சீனாவில் இருந்து பயணிக்கும் கப்பலில் பணியாற்றும் ஆறு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ்

கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அறுவருக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பாலித்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து எகிப்து நோக்கி பயணிக்கும் C.M.A.C.G.M. வுரல் எனும் வர்த்தகக் கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கே இவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற குத்துச்சண்டை வீரர்கள் காயம்!!

குத்துச்சண்டை வீரர்கள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட இரு இலங்கை வீரர்கள் போட்டியின் போது காயமடைந்துள்ளனர்.

இலங்கையை பிரதிபலித்து வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (வயது 18), எஸ்.சிறிதர்சன் (வயது 18) ஆகியோரே இவ்வாறு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட நிலையில் காயமடைந்துள்ளனர்.

வட மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவிலிருந்து ஏழு வீரர்கள் தேசிய கிக் பொக்சிங் குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பாகிஸ்தானில் கடந்த 23.01.2020 தொடக்கம் 27.01.2020 வரை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்த நிலையிலேயே, போட்டியின் போது குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் கை மற்றும் முகத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் இந்த நிலையிலேயே குறித்த இரு வீரர்களும் தொடர்ந்தும் விளையாடி இலங்கைக்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். காயமடைந்த இரண்டு வீரர்களும் சிகிச்சைகளின் பின் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

வட மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் பயிற்சிகளை பெற்று தேசிய ரீதியில் தங்க பதக்கங்களை பெற்ற ஏழு வீரர்கள் குறித்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை பிரன்ஞ்சு சவாட் கிக்பொக்சிங் குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் சி.பூ.விக்ரமசிங்க தலைமையில் பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் 11 தங்க பதக்கங்களையும், 8 வெள்ளி பதக்கங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வீரர்கள் பாகிஸ்தானில் 7 பதக்கங்களைப் பெற்று சாதனை!!

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23.01.2020 தொடக்கம் 26.01.2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில்,

கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான,

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) வெள்ளிப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும்,

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) வெள்ளிப் பதக்கத்தையும்,  வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.

இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப்பதக்கங்களையும் 08 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை 27.01.2020 மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தயார் நிலையில் நோயாளர் காவு வண்டிகள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

சீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் விமான நிலைய ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த ஊழியர்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் மூலம் பயணியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால் அவரை உடனடியாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், விமான நிலைய பா துகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவர் உள்ளடங்கிய குழுவும் இது தொடர்பில் தீவிரமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு!!

புதிய அரசாங்க அதிபர்

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று பதவியேற்றுள்ளார்.

இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம்.கனீபா பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

இந்த நிலையில் அநுராதபுர மாவட்டத்தின் உதவி‌ அரசாங்க அதிபராகவும், பின்னர் வட மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன, புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்.

தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்த நிலையில், புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உலகை மி ரட்டும் கொரனோ வைரஸ் : பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கின்றனர்? வெளியான புகைப்படங்கள்!!

கொரனோ வைரஸ்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

சீனாவின் வுஹான் மாகாணத்தில், உயிர் கொல்லி நோயான கொரோனா வேகமாக பரவி வருவதால், தற்போது வரை இந்த நோயின் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் ப லியாகியிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா திப்படைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பா திக்கப்பட்டவர்களில் சிலர் நல்ல நிலையில், இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, வுஹான் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் எப்படி கண்காணித்து வருகின்றனர், உதவுகின்றனர் என்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அதில், தலை முதல் கால் வரை உடை அணிந்திருக்கும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அவர்களை காப்பாற்ற போ ராடி வருகின்றனர்.

மேலும் இப்படி வைரஸால் பா திக்கப்பட்டவர்களுக்கு செவிலியர் உதவிய போது, அவருக்கும் இந்த நோயின் தா க்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர் ஏழு மாத கர்ப்பிணி பெண் எனவும், அவரை மட்டுமின்றி அவருடைய 70 வயதான தாயுக்கும் கொரோனோ வைரஸின் பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.