காதலியை பார்க்க வெளியூரில் இருந்து வந்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இளைஞனுக்கு..

தமிழகத்தில் பெண் குரலில் பேசி, ஒருவரை மயக்கி அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவைகளை 5 பேர் கொண்ட கு ம்பல் தி ருடிய நிலையில், தற்போது அதில் இரண்டு பேர் பலி யாகியுள்ளனர்.

சென்னை கொளத்தூர் சன்தானியா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தருண் (17). இவர் காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் கொளத்தூர் பூம்புகார் நகர் 21-வது தெருவை சேர்ந்த ஆதி (23). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (18), கொளத்தூர் வெற்றி நகரை சேர்ந்தவர்கள் யுவராஜ் (19), சதீஷ் (18). இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.

இதில், ஆதியின் தாய் மாலதி அயனாவரத்தில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். இந்நிலையில், தருண் பேஸ்புக்கில் ஒரு பெண் புகைப்படத்துடன் போ லி கணக்கு தொடங்கி, பலரிடம் பேசி வந்துள்ளார்.

அப்போது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் (37) என்பவர், தருண் பெண் என கருதி பேஸ்புக்கில் பேசி வந்துள்ளார்.

அப்போது இருவரும் போன் நம்பர்களை மாற்றிக் கொள்ள, தருண் பெண் குரலில் பேசி ம யக்கும் குணம் கொண்டவர் என்பதால், அவர் சண்முகசுந்தரத்திடம் பெண் குரலில் பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில், தருண், சண்முக சுந்தரத்திடம், நான் உங்களை காதலிப்பதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்து தருணுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது, அவரை மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி அங்கே சண்முகம் அன்றே சென்ற போது, அவருக்கு அ திர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், தருண் தனது நண்பர்களுடன் அங்கு நின்றிருந்தார். சண்முகசுந்தரம் தருணை பார்த்து, தன்னுடன் பேசிய பெண் எங்கே என்று கேட்டுள்ளார்.

அப்போது, திடீரென தருண் மற்றும் அவரது நண்பர்கள் ஆதி, நவீன்குமார், யுவராஜ், சதீஷ் ஆகியோர் சண்முகசுந்தரத்தை அ டித்து, அவர் வைத்திருந்த செல்போன், 15 ஆயிரம், செயின், மோதிரம் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர்.

பின்னர், தருணும், நவீன்குமாரும் சண்முகசுந்தரத்தை பிடித்துக்கொள்ள, அவரது ஏடிஎம் ரகசிய எண்ணை பெற்றுக் கொண்ட யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரும் ரவுண்டானா அருகில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க பைக்கில் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த ரோந்து வந்த பொலிசார், ஒரு வாலிபரை 2 பேர் பிடித்து வைத்திருப்பதை பார்த்து அருகில் வந்து, சண்முகசுந்தரத்திடம் விசாரித்தனர்.

அவர் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் கூற, அந்த நேரத்தில், ஏடிஎம் சென்ற 3 பேரும் அங்கு திரும்பி வந்தனர். இவர்கள், பொலிசாரை பார்த்ததும் அங்கிருந்து பைக்கில் தப்பினர். இதையடுத்து சண்முகசுந்தரம், தருண், நவீன்குமார் ஆகிய 3 பேரை மாதவரம் காவல் நிலையத்திற்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

பொலிசாரிடம் சி க்காமல் த ப்பிய யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரும் இரவு முழுவதும் பைக்கில் பல்வேறு பகுதிகளில் சுற்றியுள்ளனர்.

இவர்கள், நேற்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில், யுவராஜ், சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இ றந்தனர். ஆதிக்கு ப லத்த கா யம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் அங்கிருந்து த ப்பிவிட்டார். இதுகுறித்து மாதவரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தருண், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய ஆதியை தேடி வருகின்றனர்.

டிக்டாக்குக்கு அ டிமையான க ணவன் : க ண்ணீர் விடும் ம னைவி!!

டிக்டாக்..

தமிழகத்தில் டிக்டாக் தோழியுடன் ஓ ட்டம் பிடித்த திருமணமான நபரின் செயல் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கீழிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் தனது மனைவி சுகன்யா மற்றும் மூன்று வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ராஜசேகர், டிக்டாக்குக்கு அ டிமையான நிலையில் அதன் மூலம் தோழியான அறந்தாங்கியை சேர்ந்த கவிநயா என்ற பெண்ணுடன் சேர்ந்து வசிப்பதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுகன்யா மனு அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கவிநயா வீட்டிலும் ராஜசேகர் மீது பு கார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வி சாரணை நடத்தி வந்த பண்ருட்டி மகளிர் பொலிசார் ராஜசேகரை கைது செய்தனர்.

அவரிடம் வி சாரணையை முடித்து விட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் உள்ள வழக்கிற்காக அழைத்துச் சென்றனர்.

ப சியும், ப ட்டினியுமாக கோடீஸ்வரர் வீதியில் கிடக்கும் ப ரிதாபம் : சோ க பின்னணி!!

தமிழகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கேட்டு, மகன் அ டித்து, து ன்புறு த்துவதால், 80 வயது மதிக்கத்தக்க கோடீஸ்வர் ஒருவர் ப சியும், ப ட்டினியோடும் சாலையோரத்தில் ப டுத்து கிடந்த சம்பவம் பார்ப்போரை க ண்கல ங்க வைத்துள்ளது.

சேலத்தை அடுத்த ஆர்.கே. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

ராமசாமிக்கு, பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். தன் பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்த இவர், தன்னுடைய மகன்-மருமகள் வசிக்கும் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராமசாமியின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை ம கன் பச்சமுத்து அ டித்து உ தைத்து து ன்பு றுத்தியுள்ளார்.

மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அ டித்து உ தைத்து து ன்புறு த்துவதாக மகள்களிடம் கூறியுள்ளார். ஆனால் மகள்களும் இதை கண்டு கொள்ளாததால், இது தொடர்பாக காவல்நிலையம், மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் புகார ளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் இந்த பி ரச்சனையை தீர்த்து வைக்காமல், சாதரணமாக சமரசம் பேசி அனுப்பிவிடுவதால், மிகவும் வே தனைய டைந்த, ராமசாமி, சொத்து தொடர்பான ஆவணங்களை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு சாலையோரத்திலும் பேருந்து நிழற்குடைகளிலும் படுத்துறங்கி, ப சி ப ட்டினியோடு சுற்றி வந்துள்ளார்.

இவரது நிலையைப் பார்த்த செய்தியாளர்கள் சிலர், உணவு வாங்கிக் கொடுத்து உதவி செய்ததோடு, தனியார் ஆதரவற்றோர் அமைப்பிடம் சேர்த்து விட்டனர்.

கோடீஸ்வரர், இத்தனை ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் இப்படி ப சியும், ப ட்டினியுமாக கிடக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உணவின்றி தவிக்கும் இலங்கையர்கள்!!

இலங்கையர்கள்..

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தனிமைப்பட்ட நகரமான அதனை சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வாழும் இலங்கையர்கள் உணவு இன்றி தவித்து வருவதாக தெரிய வருகிறது. இது தொடர்பில் வூஹானிலுள்ள இலங்கையர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

11 மில்லியன் மக்கள் வாழும் வூஹான் பிராந்தியத்தில் விமான நிலையம், பொது மற்றும் தனியார் போக்குவரத்து என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு எவரும் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ சீன அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் வுஹான் மற்றும் சிவுஆன் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய சிவுஆன் பிராந்தியத்தின் சென்டு நகரத்தில் வாழும் 150 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விமான சேவை தெரிவித்துள்ளது.

கொழும்பில் திடீரென பாரியளவில் விற்பனையாகும் முகக் கவசம்!!

கொழும்பில்..

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய அளவு முகக் கவசங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அலைமோதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, குருந்துவத்தையில் உள்ள அரசாங்க ஒசுசல மற்றும் நகரங்களில் உள்ள ஏனைய தனியார் ஒசுசலவில் கடந்த நாட்கள் முழுவதும் முகத்தை மறைக்கும் முகச் கவசங்களின் விற்பனைகள் பாரிய அளவு அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் அனைத்து முகக்கவசங்களும் முழுமையாக விறபனையாகி முடிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்களே இந்த முகக் கவசத்தை அதிகமாக கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவு : சாரதி அனுமதி பத்திரம் பெறுவதில் புதிய நடைமுறை!!

சாரதி அனுமதி பத்திரம்

சாரதி அனுமதி பத்திரத்திற்கு அவசியமான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரம் நாளை முதல் இணையத்தில் நேரடியாக பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்கானதிகதி, நேரம் போன்றவை ஒன்லைன் முறையில் இணையத்திலேயே வெளியிடப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் இந்த வசதியை தேசிய போக்குவரத்து மருத்துவநிலையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் முகவரி www.ntmi.lk இந்த இணையத்தளம் நாளை முதல் இயங்க ஆரம்பிக்கும். கையடக்க தொலைபேசிகளில் இதற்கான விசேட செயலி ஒன்றும் அடுத்த வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பதாரியின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவபரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் வெளியிடப்படும்.

கொரோனா வைரஸினால் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலையில்..

உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத் தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் தா க்கம் காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிக்கு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1600 அமெரிக்க டொலரை தாண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். 2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று அமெரிக்க மத்திய கூட்டத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வரி அறவீடு மாற்றமடையாமல் பார்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பா துகாப்பான முதலீடும் தங்கத்தின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

உலக சந்தையில் கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை 1550 அமெரிக்க டொலர் வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ச கோதரியை கொ லை செய்த இலங்கையர்!!

இலங்கையர்..

ம து போ தையில் தனது ச கோதரியை கொ லை செய்த இலங்கையர் ஒருவரை கை து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்.தரகேஸ்வரி என்பவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தா ய் மற்றும் ம கனுடன் சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவர் அங்குள்ள புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றி வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், இலங்கையில் வசிக்கும் குறித்த பெ ண்ணின் ச கோதரர் குகதர்சன் சென்னைக்கு சென்றுள்ளார்.

சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாத்திரை முடிந்து சென்னையில் உள்ள தனது சகோரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு ம து அ ருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அவர், தனது சகோதரியுடன் இ டம்பெற்ற வா க்குவா தத்தில் குறித்த பெ ண்ணை க த்தியால் கு த்தி கொ லை செய்துள்ளார்.

அத்துடன் தனது தா ய் மீதும் வ ன்மு றையை மேற்கொண்டுள்ளதாக பொ லிஸாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபர் கை து செய்யப்பட்டு த டுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஒன்பது பேரை பலியெடுத்த பேருந்து விபத்து : காரணம் வெளியானது!!

விபத்து.

பதுளை – பசறை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த பேருந்து உரிய முறையில் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் வழியிலே பேருந்து சில்லு பொருந்தும் பகுதி விலகியதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் 9 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவிடம், போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், விசாரணைக் குழுவால் தொகுக்கப்பட்ட விபத்துக்கான காரணங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அண்மையில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பேருந்து உரிய முறையில் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் வழியிலே பேருந்து சில்லு பொருந்தும் பகுதி விலகியதால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, விபத்து குறித்த விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அமைச்சர் பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியில் இரவில் திடீர் இராணுவ சோதனைச் சாவடிகள்!!

ஏ9 வீதியில்..

A9 வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் நேற்றிரவு இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏ9 வீதியின் புளியங்குளம், நொச்சிமோட்டை சந்தி, ஓமந்தை மற்றும் ஈரியற்பெரியகுளம் ஆகிய குறுகிய இடைவெளிகளில் நான்கு இடங்களில் இராணுவத்தினரால் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பேரூந்துகளில் பயணித்த அனைத்து பயணிகளும் தங்களின் பயணப் பொதிகளுடன் பேரூந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள், கடந்த காலங்களில் இடம்பெற்ற கெடுபிடிகளை ஒத்ததாக இருப்பதாகவும், இவ்வாறான திடீர் சோதனைகள் பயணிகள் மத்தியில் ஒருவித பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும்” பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து சோதனை : மோப்பநாயும் களத்தில்!!

வவுனியாவில்..

வவுனியா ஏ9 வீதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இன்று காலை முதல் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு சோ தனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்போது வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கையில் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

பொதிகளுடன் வருபவர்களும் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழிற்கு சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி!!

கடுகதி ரயிலில்..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

பொல்கஹவெல ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 18 வயதுடைய பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்தவரின் சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பிற்கு வருபவர்களை எச்சரிக்கும் வகையில் ஓர் அதிவிசேட அறிவிப்பு!!

கொழும்பிற்கு வருபவர்களை..

இலங்கையில் கொழும்பிற்கு வருபவர்களை எச்சரிக்கும் வகையிலான அதிவிசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொழும்பிற்கு வருபவர்கள் முகத்தை மறைக்கும் துணியிலான கவசத்தை அணியுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பல இடங்களில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றும் தன்மையை கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையை இலங்கை சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு பல்வேறு எச்சரிக்கை அறிவித்தல்களை மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே முகத்தை மறைக்கும் துணியிலான கவசத்தை அணியுமாறு கொழும்பு வருபவர்களுக்கு கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜமுனி அறிவுரை வழங்கியுள்ளார்.

கொழும்பில் அதிகளவில் சீனப் பிரஜைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வீரர்கள் பாகிஸ்தானில் 7 பதக்கங்களைப் பெற்று சாதனை!!

வவுனியா வீரர்கள்..

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23.01.2020 தொடக்கம் 26.01.2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில்,

கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான,

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) வெள்ளிப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும்,

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) வெள்ளிப் பதக்கத்தையும்,  வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.

இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப்பதக்கங்களையும் 08 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை 27.01.2020 மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் செய்த மோசமான செயல் : தே டும் பொ லிஸார்!!

இலங்கையரை..

சைப்ரஸ் நாட்டில் பெ ண் ஒ ருவரை து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச் சாட்டில் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தே டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த ச ம்பவம் தொடர்பில் பிரசாத் சந்தன வீரதுங்க என்பவரே இவ்வாறு தே டப்பட்டு வருகின்றார். சந்தேக நபர் பணியாற்றிய பகுதியில் சக பெ ண் ஊ ழியரை பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளார். குறித்த இலங்கையர் அந்த பகுதியில் சாரதியாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ச ம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து குறித்த இலங்கையர் கா ணாமல் போ யுள்ளதாகவும் அவரது கையடக்க தொலைபேசி செய லிழந்து போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறித்த இலங்கையர் தொடர்பில் தகவல் அறிந்தால் 112 என்ற இலக்கதிற்கு அறிவிக்குமாறு பொ லிஸார் அறிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை : கோட்டாபயவினால் திறக்கப்பட்ட நிலையம்!!

இலவச சிகிச்சை

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான முதலாவது பா துகாப்பு மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களிடம் கையளித்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் வழங்கிய காணியில், இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

13 மாத காலப்பகுதியில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பல பங்களிப்புக்களை வழங்கியிருந்தன.

55 கோடி ரூபா செலவில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டது. மாற்றுத் திறன் கொண்ட பிள்ளைகள் இலவசமாக இந்த நிலையத்தில் சிகிச்சைகளைப் பெற முடியும்.