தனது திறமைகளால் உச்சம் தொட்ட தமிழர்கள் உலகளாவிய ரீதியில் தமிழுக்கும் தமது நாட்டிற்கு பெருமைசேர்த்த வண்ணமே உள்ளனர்.
அந்தவகையில், பாலறூபன் அஸ்வின் தனது 18ஆவது வயதிலேயே உதைபந்தாட்டம் ஆடுவதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ள முதல் தமிழன் ஆவார்.
உதைபந்தாட்ட வீரரின் மகனான பாலறூபன் அஸ்வின் லுர்சேன் மாநில அணியிலும், 21 வயதுப்பிரிவு சுவிஸ் தேசிய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.
பாலறூபன் அஸ்வின் தனது முதல் தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரது ஒப்பந்தம் 2023 ஜூன் 30 வரை இயங்குகிறது.
எஃப்.சி. லுஸெர்ன் அணியிலிருந்து, சுவிஸ்லாந்தில் தேசிய ரீதியான போட்டிகளுக்கு விளையாட தகுதி பெற்றிருக்கும் இருவரில் இவரும் ஒருவர். அத்துடன் இந்த போட்டிகளுக்கு தெரிவாகியிருக்கும் முதலாவது ஈழத்தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாளத்தின் பெறும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொடுக்கும் தனியார் மற்றும் அரச வங்கிக் கிளைகளில் கைவிரல் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்று ஓய்வூதியத்திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட முதலாவது ஓய்வூதியத்தை பெறும்போது கைவிரல் அடையாள பதிவை மேற்கொண்ட ஓய்வூதியக்காரர்களுக்கு இந்த நடைமுறை அமுலாகும்.
கைவிரல் அடையாளத்தின் மூலம் ஓய்வூதியோம் பெறுவோரு் வாழ்வதற்கான உறுதியை, கடுவெல, ஹோமாகம, மஹரகம, கெஸ்பாவ, மாவனெல்லை, காலி, கம்பஹா, கண்டி, கடவஸ்சதவ, மீரிகம, அத்தனகலை, மஹர, களுத்துறை, குருநாகல், கொழும்பு, மினுவாங்கொட, ஜாஎல, தம்புள்ளை, உக்குவெல மற்றும் திம்பிரிக்கஸ்யாய ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களின் பதிவு செய்யலாம்.
ஏனைய பிரதேச செயலகங்களிலும் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை பா துகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுக்கநெறி மற்றும் மத ரீதியாக அவமதிக்கும் கருத்து மற்றும் பதிவுகள் வெளியிடுவதனை நிறுத்த இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக முறையற்ற பதிவுகளை தடை செய்வதற்கு புதிய சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை உடனடியாக தயாராகிக்குமாறு பா துகாப்பு செயலாளர் மேஜர் கமல் குணரத்ன, இலங்கை கணினி அவசர பிரச்சார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய தயாரிக்கப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கண்கானிப்பின் கீழ் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சைபர் பா துகாப்பு சட்டமூலத்தின் மூலம் கடன் அட்டை, போலி தகவல், இணையத்தளங்களுக்குள் அனுமதியின்றி நுழைதல், அரசாங்கத்திற்கு எதிராக சைபர் கு ற்றங்களை தடுப்பதல் உட்பட பல விடயங்களை தடுப்பதே நோக்கமாகும்.
உலக மக்களை கிலி செய்யும் வகையில் மற்றொரு வைரஸ் புதிதாக பரவி வருகின்றது. சீனாவில் இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பதிவாகியுள்ளது. அதுவே 2019 – நொவல் கொரோனா வைரஸ் (2019 – nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இனங்காணப்பட்ட இவ் வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரையும் சீனாவுக்கு அப்பால் ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பதிவாகி இருக்கின்றது. சீனாவின் மத்திய மாகாணமான உஹான் மாநிலத்தில் முதலில் இனம் காணப்பட்ட இவ் வைரஸ் தற்போது அந்த நாட்டின் 13 மாநிலங்கள் வரையும் பரவியுள்ளது.
இன்று வரையில் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டவர்கள் அனைவரும் உஹான் மாகாணத்திற்கு சென்று வந்தவர்கள் என்பதை சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
என்றாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு கடந்த வியாழக்கிழமை வரையும் 571 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது உலகளாவிய ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல், சார்ஸ், சிகா வைரஸ்களின் சவாலுக்கு பின்னர் இப்போது 2019 – நொவல் கொரோனா வைரஸ் மனித ஆரோக்கியத்திற்கு சவாலாக விளங்குகின்றது.
உலக மக்கள் மத்தியல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இவ்வைரஸின் பிரதான குடும்பமான கொரோனா வைரஸ் குடும்பம் 1961ஆம் அண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடிமலுக்குள்ளாகி இருந்த நபர் ஒருவரின் நாசித் துவாரங்களில் பெற்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தான் இவ்வைரஸ் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வைரஸ்கள்தான் மனிதனைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால் தற்போது அதில் மேலுமொரு வைரஸ் சேரந்து கொண்டுள்ளது.
தற்போது மனிதர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்ற 2019 – நொவல் கொரனா வைரஸ் (2019 – nCoV) மனிதர்கள் முன்பு இனம் காணப்படாத ஒரு திரிபாக விளங்குகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
2019 – நொவல் கொரனா வைரஸ் (2019 – nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இவ் வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற முறையில் நேரடி தொடர்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. என்றாலும் இவ் வைரஸ் தற்போது ஆளுக்காள் பரவும் நிலையை அடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும். இவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.
சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவரை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம். அதன் காரணத்தினால் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணும்போது இவ்வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான விஷேட மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது.
இவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக இலங்கை உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுக்குள் இவ் வைரஸ் தொற்று வந்து சேர்வதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளன.
சீனாவுக்கு செல்வது தொடர்பிலும் அங்கு சென்று வருபவர்கள் தொடர்பிலும் ஒவ்வொரு நாடும் விஷேட கவனம் செலுத்துகின்றன. இதன் நிமித்தம் விமான நிலையங்களிலும் விஷேட மருத்துவ சோதனை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வட கொரியா தமது எல்லைப் பகுதிக்கு வரவென சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியிருந்த அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
அத்தோடு அவுஸ்திரேலியாவுக்கு அதிகளவு உல்லாசப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தருவதால் அந்நாடு தம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் 2002இல் தென் சீனாவில் தோற்றம் பெற்று உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸ் காரணமாக 800 பேர் உயிரிழந்தனர். 5000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு உ யிரிழந்தவர்களில் 650 பேர் சீனா, ஹொங்கொங் நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும் கனடாவில் 44 பேரும், தாய்வானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்ஸில் 2 பேரும் என்றபடி இ றந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே சீனாவில் தோற்றம் பெற்று உலக மக்களை கிலி கொள்ளச் செய்திருக்கும் 2019 – நொவல் கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்த்து கொள்வதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயற்படுவது மக்களின் பொறுப்பாகும்.
சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகின்றமையே இதற்கு காரணமாகும்.
காய்ச்சல், இருமல், தடுமல், மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேகமாக பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றினால் நிமோனியா மற்றும் சிறுநீர் கோளாறு உட்பட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட கூடும். கொரோனா வைரஸ் ஆ பத்தை தடுப்பதற்கு மேற்கொள்ள கூடிய நடவடிக்கை தொடர்பில் சுகாதார அதிகாரிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கை கழுவுதல், கிருமி நாசினி பயன்பாடு, இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டை அல்லது திசு பயன்படுத்துமாறும், பயன்படுத்திய கைக்குட்டையை அவதானமாக குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டை அல்லது திசு இல்லை என்றால் முழங்கையின் உள் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தும்மும்போது கைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் ஏற்படும் அ பாயத்தைத் தவிர்க்க காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உணவுக்காக தயாரிக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தி ருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண்கள் மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த தி ருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியிலுள்ள சதோசா விற்பனை நிலையத்தில் நேற்று மதியம் 12மணியளவில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்ற பெண்கள் தாம் அணிந்திருந்த ஆடைக்குள் இன்னுமொரு ஆடை அணிந்து அவ் ஆடைக்குள் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
ச ந்தேகமடைந்த சதோச பணியாளர் சீ.சீ.ரி.வீ வீடியோவை பார்வையிட்ட போது திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.
வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சீ.சீ.ரீ.வீ வீடியோவின் உதவியுடன் மூன்று பெண்களை கைது செய்துள்ளதாகவும்,
கொழும்பு, பாணந்துறையை சேர்ந்த 22,45,62 வயதுடையவர்களென்றும் திருடப்பட்டவை 35000 ரூபா பெறுமதியான பொருட்களெனவும் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் முன்னர் திருடியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 60 வயது பெண்ணை உ யிருக்கு உ யிராக காதலித்த 22 வயது இளைஞர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கு திருமணமாகி 7 பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் அவருக்கும் 22 வயது இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடும் எ திர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த இளைஞர் அனைவருக்கும் தொ ந்தரவு கொடுக்கும் வகையில் சத்தம் போட்டு ச ண்டை போட்டார். இதையடுத்து இந்த விடயம் காவல் நிலையத்துக்கு போனது.
அங்கு பொலிசார் எவ்வளவோ எடுத்து கூறியும் இளைஞரை திருமணம் செய்தே தீருவேன் என்பதில் 60 வயது பெண் உறுதியாக இருந்தார்.
ஆனால் இளைஞரை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என நினைத்த பொலிசார் அவர் மீது அமைதியை குலைக்கும் வகையில் அந்த பெண் வசிக்கும் பகுதியில் நடந்து கொண்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பர்னாலா நகரத்தைச் சேர்ந்த 22 வயதான மானு என்கிற இளம்பெண், ஜனவரி 16 அன்று இரவு மலேசியாவில் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
இரண்டு இ ளைஞர்கள் கொடுத்த தொடர் து ன்புறு த்தலே அவருடைய த ற்கொ லைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் து ன்புறு த்தலுக்கு பின்னரே அவர் மலேசியாவிற்கு சென்றிருக்கிறார்.
கு ற்றம் சா ட்டப்பட்டவர்கள் மிலன் சிங் குகி மற்றும் அமன்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இ றந்தவரின் தாய் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இருவரின் மீதும் வ ழக்கு பதியப்பட்டுள்ளது.
இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனது மகளை து ன்புறு த்தி வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். குகி மற்றும் சிங் அவளுக்கு மோசமான கருத்துக்களுடன், வீடியோக்களுடன் குறுஞ்செய்தி அனுப்புவார்கள் என கூறியுள்ளார்.
ஜூலை 2019 இல் தனது மகள் 181 ஹெல்ப்லைனை அழைத்ததாக தாய் கூறியுள்ளார். இந்த அழைப்பு சதர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. து ன்புறு த்தலிலிருந்து த ப்பிக்கும் முயற்சியில், இளம்பெண்ணின் பெற்றோர் அவரை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவர் ஒரு அழகுக்கலை படிப்பில் சேர்ந்தார்.
வெளிநாட்டிற்கு சென்ற பின்னரும் கூட, ஆ பாச செய்திகளை அனுப்பியதுடன், மானுவின் பெற்றோரையும் அ ச்சுறு த்தி வந்துள்ளனர். மேலும், பணம் கேட்டு இளம் பெ ண்ணை அடிக்கடி தொ ல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு இளைஞர்களும் மானுவிற்கு வீடியோ கால் செய்துள்ளனர்.
அப்போது, இரண்டு பேராலும் தான் பெரும் ம னவே தனை அடைந்துவிட்டதாக கூறி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.
இதில் ஒரு இளைஞன் மட்டும் சம்பவத்தின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து, மலேசியாவில் உள்ள நிஷா என்ற நண்பருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் பா துகாப்பு கேட்டு பொலிசில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராம் (26). இவர், பெண்ணாக பிறந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் ஆவார்.
இந்தநிலையில் ராமுக்கும், அவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் சரஸ்வதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக காதலித்து வந்தனர். இதற்கு சரஸ்வதியின் பெற்றோர் கடும் எ திர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ராமும், சரஸ்வதியும் வீட்டை விட்டு வெளியேறி கோவையை அடுத்த சூலூர் வந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து சில திருநம்பிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட னர்.
இதையடுத்து காதல் ஜோடி பா துகாப்பு கேட்டு சூலூர் பொலிசில் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தது. இதற்கிடையே சரஸ்வதியின் தாய், தனது மகளை கா ணவில்லை என்று வில்லிவாக்கம் பொலிசில் புகார் கொடுத்தது தெரிந்தது.
எனவே ராம் மற்றும் சரஸ்வதி ஆகியோரை சென்னை வில்லிவாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சூலூர் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளாவில் பெ ண்ணொருவர் க டற்க ரையில் நி ர்வா ண நி லையில் ச டலமாக கி டந்த ச ம்பவத்தில் அ திர் ச்சி த கவல்கள் வெ ளியாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – ரூபஸ்ரீ சந்திரசேகரன்.
ரூபஸ்ரீ பள்ளி ஆ சிரியையாக ப ணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி ப ள்ளிக்கு சென்றபின்னர் பிறகு வீ டு தி ரும்பவில்லை. இதையடுத்து க ணவரும், உ றவினர்களும் ரூபஸ்ரீயை பல இ டங்களில் தே டியும் அ வர் கி டைக்கவில்லை.
இந்நிலையில் மஞ்சேஸ்வரம் க டற்க ரை யில் ரூபஸ்ரீ நி ர்வா ண நி லையில் ச டலமாக கி டந்தார். அவரது த லைமு டி அ றுக்கப் பட்டு இ ருந்ததோடு உ டலில் ப ல கா யங் கள் இருந்தன.
இது குறித்து த கவலறிந்த பொ லிசார் ரூபஸ்ரீ ச டலத்தை கை ப்ப ற்றி வி சாரணையை தொ டங்கினர். அவர் ப லாத் காரம் செய்யப்பட்டு கொ ல்லப்ப ட்டிருக்கலாம் என்ற கோ ணத்தில் வி சாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சூழலில் ரூபஸ்ரீ செல்போன் சி க்னலை பொ லிசார் ஆ ராய்ந்த போது அதில், கடைசியாக அவர் வெங்கட்ரமணா என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து வெங்கட்ரமணாவை கை து செய்து பொ லிசார் வி சாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், நான் வேலைக்கு சேர்ந்த அதே வருடம் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார். நட்பாக பழகினோம், ஒரே பள்ளி என்பதால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.
இது தொடர்பில் எங்களுக்குள் பி ரச்சனை ஏற்பட்ட நிலையில் ரூபஸ்ரீயை அ டிக்கடி ச ந்தித்து தொ ந்த ரவு செய்து வந்தேன். சம்பவத்தன்று ரூபஸ்ரீ வீட்டுக்கு போய் அ வரை ப க்கெட்டில் உள்ள த ண்ணீ ரில் மூ ழ்க டித்து கொ ன்றேன்.
அதன்பிறகு ச டலத்தை கா ரில் கொண்டு சென்று க டலில் வீ சினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பொ லிசார் தீ விர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் த ற்கொ லை செய்து கொண்டதாக நபர் ஒருவர் எ ரிக்கப்பட்ட நிலையில், அவரை அவரின் நண்பரே அ டித்து கொ லை செ ய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த ஒழுகைமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் பக்கத்துவீட்டை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
இவருக்கு விஸ்வாநாதன் என்ற நண்பர் உள்ளார். விஸ்வநாதன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி விஸ்வநாதன், மணிமாறனை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ம து அ ருந்தி யுள்ளனர்.
அதன் பின் மறுநாள் காலை கழிவறைக்கு சென்ற போது, அங்கிருந்த மரத்தில் மணிமாறன் த லையில் கா யத்துடன், தூ க்கில் தொ ங்கியவாறு கி டந்ததைக் கண்டு, அ திர்ச்சியடை ந்துள்ளார். அப்போது எதுவும் தெரியாதது போன்று ந டித்த நண்பர் விஸ்வநாதன் உ டலை கீழே இறக்க உதவி செய்துவிட்டு அங்கிருந்து ந ழுவியுள்ளார்.
அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்ற நிலையில் மணிமாறன் த ற்கொ லை செய்துக் கொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் கருதியதால், இத்தகவலை பொலிசாருக்கு தெரிவிக்காத அவர்கள் மணிமாறன் உ டலையும் இ றுதி ம ரியாதை செலுத்தி தக னம் செய்துள்ளனர்.
இதையடுத்து விஸ்வநாதன், எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் ச ரண் அ டைந்தார், அப்போது அவர், மணிமாறனை தாம் கொ லை செய்ததாக கூறி அ திர வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து ம து அரு ந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட த கராறில் பா ட்டிலால் த லையில் அ டித்துக் கொ ன்று த ற்கொ லை போன்று இருப்பதற்காக மணிமாறனி உ டலை தூ க்கில் தொ ங்கவி ட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ம னசாட்டி உ றுத்தியதால் ச ரண் அ டைந்ததாக வா க்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் அவரிடம் தொடர் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்ததும் பிறந்த வீட்டிலிருந்து வெளியேற மறுத்த மணமகளை, மணமகன் அலேக்காக தூக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் திருமண முறைகள் பல்வேறு இடங்களில் மாறுபட்டாலும் கூட, திருமணத்திற்கு பின்னர் தான் பிறந்து வளர்ந்த அனைத்தையும் விட்டு மணப்பெண், மணமகனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது மட்டும் வழக்கமாகவே இருந்து வருகிறது.
இந்த நிகழ்வின் போது, எத்தகைய குணம் கொண்ட பெண்ணாக இருந்தாலும் கூட, தன்னுடைய தாய் உறவினர்கள் அனைவரையும் கட்டையனைத்து க தறி அ ழுதுவிடுவார்.
அவரை அங்கிருந்து தேற்றி அனுப்புவதற்கே நீண்ட நேரம் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வடஇந்தியாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், திருமணம் முடிந்த பின்னர், பிறந்த வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என மணமகள் அடம்பிடிக்கிறார்.
அவரை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, இறுதியாக மணமகன் அவரை அலேக்காக தூக்கி செல்ல ஆரம்பித்துவிட்டார்.
இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள அந்த பக்கத்தின் நபர், மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதனை பார்த்த இணையதளவாசிகள், சிரிப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனை பார்த்து சிந்திக்க வேண்டும். இது ஒரு கடுமையான நிகழ்வு என கூறியுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறு த்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 65 மில்லியன் வரையான மக்கள் உ யிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று எ ச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 18 மாதங்களில் இந்த உ யிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் வைத்திய பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வைத்திய பரிசோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் டொக்டர் எரிக் டொனர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முதற்தடவையாக சீனா புஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியமை அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுகிறது.
இது உலகம் முழுவதும் 6 மாதத்திற்குள் பரவும் நிலை காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 1918 காலப்பகுதியில் இந்த ஆ ட்கொ ல்லி வைரஸ் வேகமாக பரவிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயினில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து அதனால் உலகம் முழுவதும் 500 மில்லியன் பேர் வரையிலானோர் பீடிக்கப்பட்டதுடன் 50 மில்லியன் வரையானோர் உ யிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தற்போதைய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு பரவினால் பல உ யிரிழப்புகளை சந்திக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அவுஸ்திரேலியா , அமெரிக்கா , பிரான்ஸ் , சிங்கப்பூர் , ஹொங்கொங் , தாய்லாந்து , தென்கொரியா , நேபாளம் , தாய்லாந்து , தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த வைரஸ் தா க்கம் காரணமாக இதுவரை 47 பேர் உ யிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சமாஸ்பிரிவில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்ட யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன.
இதன்போது தோட்ட மக்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தந்தையின் கு டிப் பழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தந்தை தினமும் கு டித்துவிட்டு வந்து ச ண்டை பிடிப்பதாகவும் உ ருக்கமான கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டே இவர் கடந்த 23ஆம் திகதி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.
இவ்வாறு உ யிரிழந்தவர் 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவர் எனத் தெரியவருகின்றது.
மலேசியாவை நோக்கி பயணித்த மரப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், படகில் பயணித்த 20 இந்தோனேசிய தொழிலாளர்கள் உ யிருக்குப் போ ராடியுள்ளனர்.
இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து மலேசியா செல்ல முயன்ற போது, மலாக்கா ஜலசந்தியில் வைத்து இப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது உ யிருக்கு போ ராடிய நிலையில் 10 பேர் மீ ட்கப்பட்டதாகவும், 10 பேரை கா ணவில்லை எனவும் இந்தோனேசியாவின் Pekanbaru மீட்பு ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஐசக் தெரிவித்தார்.
அந்தவகையில் கா ணாமல் போன 10 பேரில் ஒருவரின் உ டல் மீ ட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 9 பேரை தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படகில் சென்ற இந்தோனேசியர்கள் முறையான ஆவணங்களின்றி ச ட்டவிரோ தமாக மலேசியாவில் வேலைக்கு செல்ல முயன்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.