முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பதினொரு பேர் படுகாயம்!!

முரசுமோட்டை பகுதியில்..

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பதினொரு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயங்களுக்குள்ளான நிலையில் வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும், தனியார் பேருந்தொன்றும் முரசுமோட்டைப் பகுதியில் வைத்து மோதுண்டமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நான்கு இ ளைஞர்கள் அ திரடியாக கை து!!

புதிய பேருந்து நிலையத்தில்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (24.01.2020) இரவு 8 மணியளவில் கேரள க ஞ்சாவுடன் நான்கு இ ளைஞர்ளை வி சேட அ திரடிப்ப டையினர் கை து செய்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரள க ஞ்சா ப ரிமாற்றம் இடம்பெறுவதாக வி சேட அ திரடிப்படை யனருக்கு கிடைத்த இர கசிய த கவலையடுத்து வி சேட அ திரடிப்ப டையினர் புதிய பேருந்து நிலையில் ச ந்தேகத்தி ற்கிடமான முறையில் நின்ற நா ன்கு இ ளைஞர்களை சோ தனைக்குட்படுத்தினர்.

இதன் போது கேரள க ஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த வவுனியா கோவிற்குளம் , ஈரட்டைபெரியகுளம் பகுதியினை சேர்ந்த 35,33,32,28 வயதுடைய நான்கு இ ளைஞர்களை விசேட அ திரடிப்படை யினர் கை து செய்து வவுனியா பொ லிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடமிருந்து 40கிராம், 20கிராம், 20கிராம், 20கிராம் வீகிதம் 100 கிராம் கேரள க ஞ்சாவினை கைப்பற் றியுள்ளனர்.

கை து செய்யப்பட்ட நபர்கள் வவுனியா பொ லிஸ் நிலைய த டுப்புக் கா வலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர்.மானவடு பதவியேற்பு!!

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரசன்ன வெலிகள கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற நிலையில்,

கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவிற்கான புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொண்டு வந்தார்.

இந் நிலையில் இன்றையதினம் (25.01.2020) காலை 8.17 சுபநேரத்தில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர்.மானவடு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இரண்டரை வருடங்கள் கடமையாற்றிய பீ.ஆர்.மானவடு இடமாற்றம் பெற்று இன்று முதல் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றவுள்ளார்.

வவுனியாவில் புதிய கடைத்தொகுதி, கலாசார மண்டபம், திறந்தவெளி அரங்கு, அருங்காட்சியகம்!!

வேலைத்திட்டங்கள்

வவுனியா நகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதி ஒதுக்கிட்டில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலொன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், நகரசபை தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள், நகரசபை செயலாளர், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது எதிர்காலத்தில் வவுனியாவில் தேவைப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டதுடன் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக ஆராயப்பட்டது.

வவுனியா நகரசபையின் சிபாரிசுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவில் 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் கடைத்தொகுதி ஒன்றும்,

வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் திறந்தவெளி அரங்கும் நகரசபை பொது பூங்காவில் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் அருங்காட்சியகமும் கலாச்சார மண்டமும் அமையப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி : இருவர் வைத்தியசாலையில்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – கண்டாவளை, மயில்வாகனபுரம் கிராமத்தில் 25 வயதான இளம் ம னைவியின் க ழுத்தைய றுத்து கணவன் கொ லை செய்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவன், மனைவியின் கழுத்தையறுத்து கொ லை செய்த பின் மனைவியின் உறவினரான யுவதியொருவரையும் வெ ட்டிய பின்னர் தானும் க ழுத்தை வெ ட்டி கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட வி சாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தில் மனைவியான சுகந்தன் சகுந்தலா (வயது 25) என்பவர் உ யிரிழந்துள்ளார்.
இதேவேளை சகுந்தலாவின் உறவினரான யுவதி கா யமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி என தெரியவருகிறது. அத்துடன் த ற்கொ லைக்கு முயற்சித்த கணவரும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களாக கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் அண்மையில் பல்கலைக்கழக மாணவியான தனது மனைவியை, இரா ணுவ சிப்பாயான கணவர் க ழுத்தைய றுத்து கொ லை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கொ லை செய்யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெளியான சோ கமான பின்னணி!!

காஞ்சா

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொ லை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மா ணவியின் சோ கமான குடும்பப் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மா ணவி தனது க ணவரான இரா ணுவ சிப்பாயினால் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டார். இது கோ பத்தினால் ந டந்த ஒரு கொ டூர கொ லையாகவே பார்க்கப்படுகின்றது.

பேருவளை, பதனாகொட பிரதேசத்தில் பிறந்த காஞ்சா, அதே பகுதியிலுள்ள பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு சென்று கற்கை நடவடிக்கைகளை மிகவும் க டினமான சூ ழ்நிலையில் மேற்கொண்டுள்ளார்.

அவரது தந்தை மிகவும் க ஷ்டத்திற்கு மத்தியில், குடும்பத்திற்காக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய ஒருவராகும். அவர் பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்ட ஒருவராகும்.

உ யிரிழந்த மா ணவி பாடசாலையில் படிக்கும் காலப்பகுதியிலேனும் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டவர் அல்ல என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் சிறப்பான ஒரு யுவதியாக அந்த பகுதியில் அவர் காணப்பட்டுள்ளார். அயலவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவராகும்.

அம்மா, அப்பா சகோதரர்களினால் அதிகம் நேசிக்கப்பட்ட தங்கமான ம கள் ஒ ருவரே கொ டூரமாக கொ லை செய்யப்பட்டுள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தெரிவித்து்ளார்.

“எனது ம கள் மிகவும் நல்லவர். மிகவும் க ஷ்டப்பட்டே எனது மகளை வளர்த்தேன். அவர் ஒரு போதும் தவறான வழியில் போகக்கூடியவர் அல்ல. எங்கள் விரும்பமின்றி அவர் ஒன்றையும் செய்துக் கொள்ளவில்லை.

திருமணத்தின் போது மாத்திரமே விடாபிடியாக இரா ணுவ சி ப்பாய் பிரதீப்பை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். இறுதியில் அதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.

பிரதீப் அதே பிரதேசத்தை சேர்ந்தவராகும். பாலர் பாடசாலை முதல் நண்பர்களாக பழகியவர். எனினும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னரே காதல் தொடர்பு ஏற்பட்டது.

இரண்டு முறை விஞ்ஞான பிரிவில் உயர்தரப்பரீட்சைக்கு முகம் கொடுத்த மகள் வைத்தியராக வேண்டும் என் ஒரே இலக்கில் இருந்தார். அவ்வளவு தூரம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற போ ராடினோம். பல்கலைக்கழகம் சென்ற பின்னரே இ ரா ணுவ சி ப்பாய் மீண்டும் பழக்கம் ஏற்படுத்தி அது காதலாக மாறியது.

தெற்கில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் உடனடியாக அங்குள்ளவர்களுடன் நெருங்கி பழகிவிட மாட்டார்கள். இந்த நிலையில் சிறு வயது நண்பனின் பழக்கம் கிடைத்தால் நெருக்கம் ஏற்பட்டு விடும்.

அதற்கமைய இருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. அந்த காலப்பகுதியில் பிரதீப் யாழ்ப்பாணம், பரந்தன் இரா ணுவ மு காமின் வைத்திய ப டையில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமணத்தின் பின்னர் இருவரும் பிரதீப்பின் தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னரே பி ரச்சினைகள் ஆரம்பித்தது. ஒரு முறை வா யில் இருந்து இர த்தம் வரும் அளவிற்கு பிரதிப் ம களை அ டித்திருக் கின்றார். அதன் பின்னர் தொடர்ந்து பி ரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தது.

அதன் பின்னர் ம கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஏன் என வினவிய போது, எங்களுடன் பேசக்கூடாதென பிரதீப் உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவை மீறி பெற்றோருடன் பேசியதனால் பி ரச்சினை ஏற்பட்டதாகவும் மகள் கூறினார். அதன் பின்னர் ஒரு வருட காலம் இருவரது தொடர்பில் முறிவு ஏற்பட்ட நிலை காணப்பட்டது.

எனினும் மீண்டும் பிரதீப் பி ரச்சினை ஏற்படுத்த ஆரம்பித்தார். இதனால் மகள் விவாகரத்து வழக்கு தா க்கல் செய்யதார். கணவனின் கொ டுமை களை அவரால் தா ங்கிக் கொள்ள முடியாமல் போன போதிலும் அவர் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.

இந்நிலையிலேயே கொ லை நடந்தது. 3 மாதங்களில் வைத்தியராகி வீட்டிற்கு வருவதற்கு அவர் எதிர்பார்ப்புடன் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்த ம கள் இன்னும் 3 மாதங்களில் டொக்டர் காஞ்சனா என்ற பெயரில் வீட்டிற்கு வருவேன் என கூறி சென்றார். இறுதியில் இப்படி ஒரு கொ டூரம் நடந்து விட்டது” என காஞ்சனாவின் த ந்தை க ண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த தனியார் கல்லூரி இயக்குனர்!!

அச்சுறுத்தல்..

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ ச்சுறு த்தல் விடுத்துள்ளதாக தெரிவித்து,

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரி நேற்று (24.01.2020) இரவு 8.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் நேற்று இரவு 7.30 மணியளவில் தொலைபேசி மூலம் எனக்கு தொடர்பு கொண்டு உன்னை இல்லாமல் செய்வேன், பாடசாலையிலிருந்து நீக்குவேன் போன்ற பல்வேறு விடயங்களை தெரிவித்து அ ச்சுறு த்தல் விடுத்தாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.

பாடசாலையின் அதிபரின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார் என அரச தகவல் திணைக்கள ஊடகத்தில் NEWS.LK (https://tamil.news.lk/fetures/item/33185-2019-11-28-05-08-21) இல் செய்தி வெளியாகியிருந்த நிலையில்,

குறித்த மாணவி தனது தனியார் கல்லூரியின் மாணவியெனவும் எமது கல்லூரியூடாகவே தொழிநுட்ப அறிவினை பெற்று இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார் என குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் தெரிவித்திருந்திருந்தார்.

இந் நிலையிலேயே வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அ ச்சு றுத்தல் விடுத்துள்ளார்.

கனடாவில் தமிழ் மா ணவிக்கு ச ரமாரி க த்திக்கு த்து : ஆ பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழ் மா ணவி

கனடாவில் தமிழகத்தை சேர்ந்த பெ ண் ஒருவர் அடையாளம் தெரியாத ந பர்களால் மேற்கொள்ளப்பட்ட வ ன்மு றையால், மிகவும் ஆ பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் Toronto-வில் இருக்கும் York University-யில் முதுகலை பட்டம் படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த Rachel Albert(23) என்ற பெ ண், கடந்த புதன் கிழமை கேம்பஸ் அருகே Leitch Avenue and Assiniboine சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, உள்ளூர் நேரப்படி காலை சரியாக 10 மணிக்கு அ டையாளம் தெ ரியாத ந பரால் க த்தி கு த்து க்கு உள்ளானார்.

க ண்மூடித் தனமாக க த்தியால் கு த்தி யதால் இவர், அங்கு இர த்த கா யங்களோடு உ யிருக்கு போ ராடியு ள்ளார். அதன் பின் இது குறித்த தகவல் Toronto பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் Sunnybrook Health Sciences Centre-ல் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மிகவும் ஆ பத்தான நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வரும், Rachel Albert மீது நடந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி அறிவித்துள்ளனர்.

குறித்த பெ ண்ணை கு த்திய ந பர் ஆசியாவை சேர்ந்தவர் எனவும், அவர் 5 அடிக்கு மேல் இருப்பார், கருப்பு ஜாக்கெட் போட்டிருந்ததாகவும் பொலிசார் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து உடனடியாக தமிழகத்தில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் வெளியுறவு அமைச்சர் S Jaishankar-யிடம் உதவி கோரியுள்ளனர். அவர்கள் நாங்கள் உடனடியாக கனடா செல்வதற்காக வெளியுறவு அமைச்சர் உதவ வேண்டும்.

விசா கிடைப்பது அவ்வளவு எளிதானது கிடையாது, அமைச்சர் உதவினால் நாங்கள் விரைந்து சென்று Rachel Albert-ஐ பார்க்க முடியும் என்று அவருடைய சகோதரி உ ருக்கமாக உதவி கோரியுள்ளார்.

திருமணமான சில மணி நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

திருமணமான சில மணி நேரத்தில்..

தமிழகத்தில் திருமணம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே க டத்திச் செல்லப்பட்ட காதல் மனைவியை மீ ட்டுத்தரக்கோரி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மெய்யப்பன் என்பவரும் சரளை சண்முகபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜீவிதாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காததால், வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த பெண் வீட்டார், இருவரையும் க டுமையாக தாக்கிவிட்டு ஜீவிதாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்து அ திர்ச்சியடைந்த மெய்யப்பன், தனது மனைவியை மீட்டு தருமாறு காவல் நிலையத்தில் கண்ணீருடன் கோரியுள்ளார்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதால் கோ பமடைந்த பெற்றோர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக மெய்யப்பன் வே தனை தெரிவித்துள்ளார்.

மனைவி இ றந்த பின்னர் பிச்சைக்காரனாக மாறிய நபர் : 18 ஆண்டுகள் பிச்சை எடுத்து செய்த ஆச்சர்யம்!!

பிச்சைக்காரனாக மாறிய நபர்

18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் பிச்சைக்காரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் புல்பாண்டி என்ற பாண்டி (66). இவர், மனைவி இறந்த பின் 1979ம் ஆண்டு மும்பைக்கு சென்றார். அங்கு ஒரு கோவிலில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

பின்னர், 2000ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர் திருச்செந்தூர் பகுதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணத்தில் தனது தேவையை பூர்த்தி செய்த பின் மீதம் உள்ள பணத்தில் உதவி செய்ய தொடங்கினார்.

அதன்படி கடந்த 18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு உதவி செய்து உள்ளார்.

தற்போது ஆரல்வாய்மொழி அருகே தோவாளை, வீரநாராயணமங்கலம், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி தோவாளை அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரபானுமதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். 3 பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பாண்டி வழங்கினார்.

கிளிநொச்சியில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு!!

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரயோக விஞ்ஞான பல்கலை கழகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

நோர்வேயிலுள்ள பல்கலைகழகத்திற்கும் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கும் இவ் ஆய்வை மேற்கொள்ள கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைகழகமும் நோர்வே பல்கலைகழகமும் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குயினர் எனும் நோர்வே சக்தி வலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலின் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான கைகோர்ப்பாக இன்றைய திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் உதவிகளை வழங்குகின்றது.

இந்த புதிய மிதக்கும் சூரிய மின் ஆலைரூபவ் நோர்வே கொண்டுள்ள வெளிக்கள மற்றும் கடல்சார் தொழிற்துறைகளின் அனுபவங்களின் பிரகாரம் அமைந்துள்ளது என நான் கருதுகின்றேன்.

இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள முதலாவது புதுப்பிக்கத்தக்க வலுப்பிறப்பாக்கல் பங்காக அமைந்துள்ளதுடன் இதனூடாக 42 கிலோ வாற்று மின்சாரத்தை பிறப்பிக்கக்கூடியதாக இருக்கும்.

மிதக்கும் மின் ஆலை போன்ற தூய வலு மூலங்களிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை பெற்றுக் கொள்வது மக்களின் வாழ்க்கையில் பெருமளவு தா க்கத்தை ஏற்படுத்தும்.

நிலக்கரியில் இயங்கும் மின் பிறப்பாக்கல் ஆலைகள் உள்நாட்டு வளியின் தரத்தில் பாரதூரமான தா க்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றின் காபன் வெளியீடும் காலநிலை மாற்றத்தில் தா க்கம் செலுத்துகின்றன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இளவயது ம ரணங்களை ஏற்படுத்தும் காரணிகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளிலிருந்து வெளிவரும் மாசுகளும் பங்களிப்பு செலுத்துகின்றன.

இந்த விடயங்களின் பிரகாரம் படிம எரிப்பொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாறுவதற்கு சூரிய சக்தி முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களைப் போன்றே உலகின் அரைப்பங்கு சனத்தொகையினர் கரையோர பகுதிகளில் வசிக்கின்றனர்.

எனவே மிதக்கும் சூரிய மின் ஆலைகளினால் தூய வலுவை பிறப்பித்துரூபவ் நுகரக்கூடியதாக இருக்கும்.

வலுபிறப்பாக்கலுக்கு புதிய வாய்ப்புகள் பலதை உருவாக்கக்கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் ரூபவ் குளங்கள் மற்றும் திறந்த சமுத்திரங்களில் மிதக்கும் சூரிய வலுப் பண்ணைகளை நிறுவக்கூடிய சாத்தியம் ஏற்படும்.

இவற்றை பயன்படுத்தி நாம் சரியாக செயலாற்றினால் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் ரூபவ் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இலங்கையை பொறுத்தமட்டில் நீண்ட கால வறட்சி அல்லது தொடர் மழைவீழ்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்காது. இந்த மிதக்கும் சூரிய மின் ஆலை ரூபவ் இலங்கையில் நிறுவப்படவுள்ள பல நிலைபேறான மின் ஆலைகளில் முதலாவதாக அமைந்துள்ளது என கருதுகின்றேன்.

இறுதியாக நோர்வே மற்றும் இலங்கை தரப்பிலிருந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறுவுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த ஒன்றிணைவினூடாக நீண்ட காலமாக பேணப்படும் இலங்கை மற்றும் நோர்வே இடையிலான உறவுக்கு மேலும் பிரகாசத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதி யு த்த தினத்தன்று பிறந்த மாணவிக்கு கௌரவிப்பு!!

மாணவிக்கு கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யு த்த தினத்தன்று பிறந்த மாணவி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற இவருக்கு ஆங்கில கல்வி நிறுவனமொன்றினால் விருது வழங்கி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் நிஷாந்தி உஷாந்தன் எனும் 10 வயது மாணவியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2009 மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதி யு த்தத்தின் போது பிறந்த இவர், எதிர்காலத்திலும் உயர்கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பட்டப்படிப்பை முடித்து, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சேவையாற்ற வேண்டுமென்பதை இலக்காக கொண்டுள்ளார்.

வவுனியா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : 271 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் வீதிகளாகவுள்ளன!!

மகிழ்ச்சியான செய்தி

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சாலை (ஐரோட்) திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 271.48 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன.

வவுனியாவின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீதிகள் அமைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 12947.6 மில்லியன் ரூபாய் இத்திட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

வவுனியாவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள பல்வேறு முக்கிய வீதிகள் காப்பெற் வீதிகளாக இத்திட்டத்தின் மூலம் மாற்றம் செய்யப்படவுள்ளன.

ஐரோட் திட்டத்தின் கீழ் வடக்கில் 1034.18 கிலோமீற்றர் நீளமான 343 வீதிகள் புனரமைக்கபடவுள்ளதுடன், யாழில் 273.24 கிலோமீற்றரும், கிளிநொச்சியில் 181.78 கிலோமீற்றரும், முல்லைதீவில் 141.34 கிலோமீற்றரும், மன்னாரில் 166.34 கிலோமீற்றர் வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்த காலம் இரண்டு வருடங்களாக வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஏ9 வீதியினை மறித்து போராட்டம்!!

ஆசிரியர் பற்றாக்குறையினை..

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (24.01.2020) காலை கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மடுக்கந்தை தேசிய பாடசாலையில் 80 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டும் ஆனால் தற்போது 35 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுக்கின்றனர்.

எமது பாடசாலையில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களினால் இக் கவனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு வலய கல்விப் பணிமனைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போ ராட்டத்தின் பின்னர் ஏ9 வீதியினை மறித்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் போ ராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி ஒரு வார காலத்தினுள் தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

தீர்வினை எழுத்து மூலம் தருமாறு போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்த நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்பாக எழுத்து மூல கடிதத்தினை வாசித்துக்காட்டியதுடன் அவர்களிடம் கடித்தினை கையளித்தார்.

மடுக்கந்தை பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய் முடியாத நிலை காணப்பட்டது. மத்திய கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டதுடன் ஒரு வார காலத்தினுள் இதற்குரிய தீர்வினை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

விரைவில் குறித்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வோம் என வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன் பின்னர் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போ ராட்டம் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா சாளம்பைக்குளம் மக்களின் போராட்டம் நீதிமன்ற உத்தரவை அடுத்து கைவிடப்பட்டது!!

சாளம்பைக்குளம் மக்களின் போ ராட்டம்..

வவுனியா சாளம்பைக்குளத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்தை அகற்றுமாறு கோரி நடத்தப்பட்டு வந்த கவனயீர்ப்பு போ ராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து கைவிடப்பட்டது.

வவுனியா நகரசபையின் குப்பை கொட்டும் மடுவம் சாளம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை மடுவத்திற்கு செல்லும் வீதியை வழி மறித்து கொட்டகை அமைத்து கடந்த மூன்று நாட்களாக போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இவ்விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதன் நிமித்தமாக எதிர்வரும் 31.01.2020 வரை போ ராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்ததுடன், தொடர்ந்து அவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்று மாலை கவனயீர்ப்பு போ ராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் குறித்த குப்பை மடுவத்தை அகற்ற தவறினால் தொடர் போ ராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.

வவுனியாவில் முதியவரின் சடலம் மீட்பு!!

முதியவரின் சடலம்..

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இன்று (24.01.2020) காலை தூ க்கில் தொ ங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா என்பவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டுள்ளனர்.

குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் இரவு 9 மணியளவில் ஒன்றாக இருந்து உணவருந்தியதாகவும் அதிகாலை 5 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக காணப்பட்டதாகவும்,

அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.

முதியவர் தூ க்கிய தொ ங்கிய நிலையில் ச டலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில் டோச் லைட் உள்ளதுடன் தூ க்கில் தொ ங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும்
மு தியவரின் ம ரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில்,

தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.