வல்வை பட்டத் திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய மகேந்திரன் பிரஷாந்திற்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன.
இம்முறையும் 1,2,3 இடங்களை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.
பிரசாந் அவர்களின் பட்டத்தை பார்த்த பல்லாயிரகணக்கான மக்களுக்கு ஆச்சரியத்தையும் வியப்பை தந்துள்ளது. அவரின் அபார திறமையால் தொடர்ந்து 5 வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளது என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.
வல்வெட்டித்துறை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மகேந்திரன் பிரசாந் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாழ்த்துவது சுலபம். ஆனால், இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.
அரச ஊழியர்களுக்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்பட்டு காணியற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் காணி அற்ற 600 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எனினும் 600 பேர் வரையில் குறித்த பகுதியில் காணிகளை பெற்றுக்கொண்ட நிலையில் வெறும் 80 குடும்பங்கள் மாத்திரமே அப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
200 பேர் வரையில் பகுதியளவில் வீடுகளை அமைத்துள்ளதுடன் ஏனையோர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளிற்குள் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தமக்கு காணியில்லை என்று தெரிவித்து பலர் இங்கு காணிகளை பெற்றுக் கொண்ட நிலையில் மிகவும் சொற்ப அளவிலானோரே குறித்த பகுதியில் வசிக்கின்றனர்.
குறிப்பாக 100 இற்கும் மேற்பட்டோருக்கு வீடமைப்பு அதிகாரசபையால் வீடு கட்டுவதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளனவே தவிர அவர்கள் குடியிருக்க வரவில்லை. எனவே அவை பற்றைக்காடுகளாக வளர்ந்து காடாக இருக்கிறது.
இதனால் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாக இது இருப்பதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாகவும், தமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியவசிய உட்கட்டுமான வசதிகள் தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் மாவட்ட அரசஅதிபர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததுடன், கடந்த மாதம் ஓமந்தை பகுதியில் பொதுமக்களால் ஆ ர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் உத்தியோகத்தர்களின் குறைப்பாடுகள் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா வீடமைப்பு அதிகார சபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன் கடந்த 2ஆம் திகதி வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே இக்கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,
குறித்த பிரச்சினை தொடர்பாக தமது தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி காணிகளில் வதியாதோர் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளோம்.
அதேவேளை வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
காணி வழங்கப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக அறிவித்தல்கள் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வங்கி முகாமையாளர் ஒருவரின் காரை அடையாளம்தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் – 3ம் கட்டை, கல்வியங்காடு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காரே இவ்வாறு நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முகாமையாளரின் வீட்டுக்குள் நுழைந்த அடையாளம்தெரியாத நபர்கள் சிலர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்கு தீவைத்துள்ளனர்.
இத் தீ விபத்தினால் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட 6 பேர் உ யிரிந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குள் இலங்கையர்கள் உள்ளதாக அபுதாபி செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை அபுதாபியில் உள்ள அல் ரஹா கடற்கரைக்கு அருகில் இந்த விபத்து இம்பெற்றுள்ளது. வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் லொரி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உ யிரிழந்தவர்களில் இலங்கை பெண்ணுக்கு மேலதிகமாக நேபாள நாட்டு பெண் மற்றும் பாகிஸ்தான் நாட்டு சாரதியும் உள்ளடங்குகின்றனர். ஏனைய மூவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளர்.
அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட காந்த உருண்டைகளை ஓன்லைனில் வாங்கிய சிறுமி அதை விழுங்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உ யிர் பிழைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ரெபிகா. இவர் மகள் ஒலிவியா (7). இவர் வீட்டில் காந்த உருண்டைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென பக்கத்து அறையில் இருக்கும் அம்மாவை க த்தியபடியே ஒலிவியா அழைத்தார்.
இதையடுத்து காந்த உருண்டைகளை தான் விழுங்கிவிட்டதாகவும் தனக்கு வயிறு வலிப்பதாகவும் கூறினார். இதை கேட்டு அ திர்ச்சியடைந்த தாய் ரெபிகா உடனடியாக மகளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
அங்கு சிறுமி ஒலிவியாவுக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து அதன் அறிக்கையை பார்த்த போது அ திர்ச்சியடைந்தனர். காரணம் சிறிது சிறிதான காந்த உருண்டைகளை அவர் அதிகளவில் விழுங்கியதும் அது செரிமானம் ஆகும் இடத்தில் சிக்கி கொண்டதும் அதில் தெரியவந்தது.
அதே நேரத்தில் வேறு ஒரு சி றுவனும் காந்த உருண்டைகளை விழுங்கியதாக அங்கு வந்திருந்தான். இருவருக்கும் உடனடியாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் காந்த உருண்டைகளை போ ராடி வெளியில் எடுத்தனர்.
குறித்த காந்த உருண்டைகள் அவுஸ்திரேலியாவில் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஓன்லைனில் அது விற்பனை செய்யப்படுவதால் பலரும் அதை வாங்குவது தெரியவந்தது. இது மிகவும் ஆ பத்தான பொருள் எனவும் குழந்தைகளிடம் அதை கொடுக்க கூடாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஒலிவியாவின் தாய் ரெபிகா கூறுகையில், எனக்கு காந்த உருண்டைகள் அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டது தெரியாது. அதை உணராமல் என் மகளுக்கு ஓன்லைனில் வாங்கி கொடுத்துவிட்டேன். இது தொடர்பில் இனி யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை ஒன்று ஆவியுடன் விளையாட, அதை வீடியோவில் படம் பிடிக்கிறார் அதன் தாய். பிரித்தானிய பெண் ஒருவர் தனது குழந்தை தனது அறையில் யாருடனோ பேசுவதை கவனித்துள்ளார்.
அங்கு யாருமில்லாத நிலையில், குழந்தை யாருடனோ பேசுவதை கவனித்த Georgia Hooson (20) என்னும் அந்த தாய், அதை வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை கவனிக்கும்போது, குழந்தை சுவரை நோக்கி பேசுவதையும், அங்கு ஏதோ வெள்ளையாக நகர்வதையும் கவனித்துள்ளார்.
இரண்டாவது எடுத்த ஒரு வீடியோவில், சட்டென தனது குழந்தை தொட்டிலில் பின்னோக்கி நகர்வதையும், அவள் நகர்ந்ததும் அவளை நோக்கி ஒரு வெள்ளை உருவம் வருவதையும் காணமுடிகிறது.
Georgiaவின் பக்கத்து வீட்டில் குடும்ப நண்பர் ஒருவர் வசித்துவந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் திடீரென இ றந்து போக, அனைவரும் து க்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவர்தான் இப்போது தனது குழந்தையை பார்க்க வருவதாக நம்புகிறார் Georgia. ஒரு முறை அந்த நண்பரின் புகைப்படத்தை குழந்தையிடம் Georgia காட்ட, பொதுவாக அந்நியர்களைக் கண்டால் பயப்படும் குழந்தை அந்த நபரின் புகைப்படங்களைப் பார்த்ததும், கைகொட்டி சிரித்து மகிழ்ந்தாளாம்.
ஆகவே, தங்கள் நண்பர் தன் குழந்தையை பார்க்க வருவதாக நம்பும் Georgia, அவரிடம்தான் தன் குழந்தை விளையாடுவதாக நம்புகிறார்.
ரஷ்யாவில் 10 வயது சி றுவனால் 13 வ யது சி றுமி கர்ப்பமடைந்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது பள்ளி மா ணவி ரஷ்யாவில் பத்து வ யது சி றுவனால் கர்ப்பமாகிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் சைபீரியாவில் உள்ள கிராஸ்நோயார்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கர்ப்பிணிப் பெ ண் கு ழந்தையை வைத்திருக்க திட்டமிட்டுள்ளார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த முடிவில் அவருக்கு ஆதரவளித்து வருவதாக TBK செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
காவல்துறையினர் சூழ்நிலைகள் குறித்து வி சாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் சி றுமியின் பள்ளி அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் பொலிசார் கூறியதாவது: ‘ஜனவரி 13, 2020 அன்று, 13 வயதான பள்ளி மா ணவி க ர்ப்பமாக இருப்பதாக ஜெலெஸ்னோகோர்ஸ்க் நகரத்தின் மத்திய மாநில பட்ஜெட் சுகாதார நிறுவன மருத்துவர்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
‘கிராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்திற்கான ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ககாசியா குடியரசின் விசாரணைக் குழு வி சாரணையைத் தொடங்கியுள்ளது. சி றுவனைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் இந்த ஜோடி தங்கள் சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரங்களில் ‘திருமணமானவர்கள்’ என்று பட்டியலிட்டுள்ளன.
உள்ளூர் குழந்தை மருத்துவரான நிகோலாய் ஸ்கொரோபோகடோவ் சி றுவன் உண்மையில் தந்தையா என்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.
‘கோட்பாட்டளவில், இது சாத்தியம்’ என்று கூறிய மருத்துவர், ‘இந்த குறிப்பிட்ட வழக்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் மற்றொருவர் சி றுமியை க ர்ப்பிணியாக்கிவிட்டு, பையனைக் கு ற்றம் சாட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.
தமிழகத்தில் திருமணமாகாத விரக்தியில் 40 வயது நபர் த ற்கொ லை செய்து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (75).
இவரது மகன் (40). எலக்ட்ரீசியனான இவர் ம து பழக்கத்துக்கு அ டிமையானர் எனக் கூறப்படுகிறது. தினமும் சம்பாதிக்கும் பணத்தை கு டித்துவிட்டு வருவதை சேதுராமன் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார் என திருமண ஏற்பாடுகளை வைத்தியநாதன் செய்துள்ளார். ஆனால் சேதுராமன் கு டி ப ழக்கத்துக்கு அ டிமையானவர் என்பதை தெரிந்துகொண்டு, யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த சேதுராமன், 40 வயதான எனக்கு திருமணமே நடக்காதா, நான் மட்டுமா கு டிக்கிறேன்,ஊரே குடிக்கிறது என புலம்பியபடியே இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10ம் திகதி ம துவில் வி ஷம் கலந்து கு டித்துவிட்டு பெருமாள் கோயில் வாசலில் மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீ ட்ட உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சேதுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் ஒரு உபேர் டிரைவருடன் தனது வாழ்க்கையின் ப யங்கரமான சூழ்நிலையை அனுபவித்ததாக நடிகை சோனம் கூறியுள்ளார்.
நட்சத்திர நடிகர் அனில் கபூரின் மகள் சோனம்(34), கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் லண்டனில் வீட்டை கொண்டிருப்பதால், தனது நேரத்தை பிரித்தானியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் செலவழித்து வருகிறார்.
இந்த நிலையில் உபேர் வாகனத்தில் பயணித்த அவர் மோசமான அனுபவத்தை பெற்றதாக, 12.8 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், தோழர்களே எனக்கு @UberLondon உடன் ப யங்கரமான அனுபவம் ஏற்பட்டது. தயவுசெய்து கவனமாக இருங்கள். உள்ளூர் பொது போக்குவரத்து அல்லது வண்டிகளைப் பயன்படுத்துவதே சிறந்த மற்றும் பாதுகாப்பானது.
நான் பயணித்த காரின் ஓட்டுநர், நிலையற்றவராக இருந்தார். கத்தினார், கூச்சலிட்டார். அதன்காரணமாக நான் நடுக்கத்தில் இருந்தேன். உபேர் நிறுவனத்திடம் புகார் செய்ய முயற்சித்தேன். ஆனால் மென்பொருளால் துண்டிக்கப்பட்ட பல பதில்களைப் பெற்றேன் என கூறியிருந்தார்.
இதற்கு உபெர் நிறுவனம் தனது தானியங்கி பதிலில், “சோனம் இந்த சம்பவத்திற்கு மன்னிக்கவும். தயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைலுடன் ஒரு மெசேஜ் அனுப்ப முடியுமா?” என கூறியிருந்தது.
உபெர் நிறுவனத்தின் பயன்பாட்டில் தங்கள் அடையாளத்தை போலியாகக் கொண்ட ஓட்டுனர்களுடன் 14,000 க்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, உபெர் நிறுவனத்தின் உரிமம் நவம்பர் மாதம் பறிக்கப்பட்டது.
ஆனால் டிசம்பர் மாதம் மேல்முறையீடு செய்து தலைநகரில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகையின் சமீபத்திய புகார் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக உபெர் சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன், நடிகை தனது சாமான்களை இழந்ததற்காக கூறி பிரிட்டிஷ் ஏர்வேஸுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சினிமா பட பாணியில் இந்தியாவை சேர்ந்த ஒருவர், தனது காதலியை கொ லை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் வடக்கு நகரமான சண்டிகரில் உள்ள நியூஸ் 18 அலுவலகத்தின் ஸ்டுடியோவுக்குள் சென்ற மனிந்தர் சிங் (27) என்கிற நபர், அங்கிருந்த கேமராமேனிடம் கொ லைக் கு ற்றத்தை ‘ஒப்புக்கொள்ள’ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அவர் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது ஒப்புதல் வாக்குமூலம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கூறிய மனிந்தர் சிங், நான் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது காதலி சர்ப்ஜித் கவுரின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் டிசம்பர் 30 அன்று அவரை க த்தியால் கு த்திவிட்டு த ப்பிவிட்டேன்.
எனது குடும்பத்தினரை பொலிஸார் தொடர்ந்து தொ ந்தரவு செய்து வருவதாலே தற்போது வாக்குமூலம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த பொலிஸார், விரைந்து சென்று மனிந்தர் சிங்கை கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அண்டை மாநிலமான ஹரியானாவில் சிங் மற்றொரு காதலியைக் கொ ன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். கவுர் கொ ல்லப்பட்ட நேரத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அந்த நபர் தனது வாக்குமூலத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருக்கலாம்.
“ஒரு வழக்கறிஞரை ஈடுபடுத்த பணம் இல்லாததால் சில வழக்கறிஞர்கள் தாமாக முன்வந்து தனது வழக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பியிருக்கலாம் என கூறியுள்ளார்.
க ர்ப்பிணி ம னைவியை கொ லை செய்து அ வருடைய உ டலை து ண் டுகளாக ந றுக் கி, அ ரவை இ யந்திரத்தில் அ ரைத்த க ணவனை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர குமார் (35) – உர்மிளா என்கிற தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ரவீந்திர குமார், க ர்ப்பிணியாக இருந்த ம னைவிக்கு மீண்டும் பெ ண் கு ழந்தை பிறந்துவிடுமோ என்கிற அ ச்சத்தில் அ டிக் கடி ச ண்டை யிட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் ச மையல் வி வகாரம் தொ டர்பாக இ ருவருக்கும் இ டையே க டும் ச ண்டை ஏ ற்பட்டுள்ளது. உடனே ஊர்மிளா பொலிஸாருக்கு போன் செய்து த கவல் கொ டுத்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வருகை தந்த பொ லிஸார், ரவீந்திர குமாரை எ ச்சரித் துவிட்டு செ ன்றுள்ளார்.
பொ லிஸார் வீட்டிற்கு வ ந்ததை அ வமான மாக கருதிய ரவீந்திர குமாரின் கு டும்பத்தினர், ஊர்மிளாவை கொ லை செய்த முடிவு செய்துள்ளனர். ஜனவரி 4ம் திகதியன்று ரவீந்திர குமார் (35), அவரது தந்தை கரம் சந்திரா மற்றும் ச கோதரர் களான சஞ்சீவ் மற்றும் பிரிஜேஷ் ஆகியோர் சேர்ந்து ஊர்மிளாவை க ழுத் தை நெ ரித்து கொ லை செய்துள்ளனர்.
அதன்பிறகு அவருடைய உ டலை து ண்டு களாக ந று க்கி, அ ரவை இ யந்தி ரத்தில் அ ரைத்துள் ளனர்.
எஞ்சியவற்றை வீட்டிலிருந்து 4கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று எ ரித்துள்ளனர். பின்னர் ம னைவியை கா ணவி ல்லை என ரவீந்திர குமார் பொ லிஸாரிடம் பு கார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொ லிஸாரும் தே டுதல் வே ட்டை யை ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் த ம்பதியினரின் மூ த்த ம கள், தனது த ந்தையின் கு டும்பத்தினர் சே ர்ந்துதான் கொ லை செய்தனர் என ஊர்மிளாவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
அதனை கேட்டு அ திர்ச்சி யடைந்த உர்மிளாவின் ச கோதரி வித்யா தேவி, பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வ ழக்கு ப திவு செய்த பொ லிஸார், ஆறு கு ழுக்கள் அமைத்து தப்பி ஓ ட முயன்ற 4 பே ரையும் கை து செய்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலை பகுதியில் வைத்து, தங்க சங்கிலியை ப றித்துசென்ற சம்பவத்துடன், தொடர்புடைய பெ ண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த தங்க சங்கிலி ப றிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பகிடிவ தை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
பகிடிவ தையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக கல்வியை பெற முடியாமலும் பகிடிவ தைக்குள்ளாகி பட்டத்தை பெறமுடியாமல் போனவர்கள் இதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.
பகிடிவ தையின் தன்மை, பல்கலைக்கழக வசதியை பெற்றுக்கொள்ள தயாரான பட்டப்படிப்பு கற்கை நெறி தொடர்பான தகவல்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் உண்மை தன்மை பரிசோதிக்கப்படும். இந்த குழுவில் துணை வேந்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.
நீதியான விசாரணைக்கு பின்னர் தான் விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்து பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.
பகிடிவ தையை எதிர்கொள்ள முடியாமல் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்கள் சுமார் 2000 பேர் இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அண்மை காலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாரத்திற்கொருநாள் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் வவுனியா ஏ9 வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, அதிக சத்தமுடைய ஹோர்ன் எழுப்பியமை, வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்திடமிருந்து விசா விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போது, இலங்கை தமிழர்களின் நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறு ரஜினிக்கு சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்ற ரஜினி, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா விண்ணப்பம் செய்திருந்ததாகவும் அது இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
எனினும், ரஜினிகாந்த் விசா விண்ணப்பம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய் என கூறியுள்ள அவர், ரஜினியிடமிருந்து விசா கோரிக்கை வந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.