வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்பாக பா துகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டாசு விற்பனை நிலையம் வவுனியா நகர சபையினரின் தலையீட்டை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று மதியம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நபர் ஒருவர் பட்டாசுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
பாடசாலை முடிவடைந்ததும் அவ்விடத்திற்கு வந்த மாணவர்கள் பட்டாசுகளை வாங்குவதற்காக குழுமியிருந்துள்ளனர்.
இதனை அவதானித்த வவுனியா சிரேஸ்ட சட்டதரணி இ.தயாபரன் பட்டாசு விற்பனை செய்யும் நபரிடம் சென்று, இப்பகுதியில் பட்டாசுகளை விற்பனை செய்தல் மாணவர்களுக்கு அ ச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நகரசபை தலைவரின் நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கும் நாவினிப்படியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ஜீவா(30). இவர்களுக்கு பாண்டீஸ்வரி (8), முனீஷ் (6), மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2½) என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே குடும்பத் த கராறு காரணமாக பிரேம்குமாரை விட்டு பிரிந்து தனது தந்தை செல்லத்துரையின் வீட்டில் குழந்தைகளுடன் ஜீவா வசித்து வந்துள்ளார்.
நேற்று காலையில் குழந்தைகள் அனைவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். மகாவிஷ்ணுவும், அஜிஸ்ரீயும் அங்கிருக்கும் ஒரு சுவரின் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக சுவர் இடிந்து 4 குழந்தைகள் மேலே விழுந்து அ முக்கியது.
10 அடி உயர சுவர் விழுந்ததால் கு ழந்தைகள் அனைவரும் இ டிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். குழந்தைகளின் கூ ச்சல் ச த்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீ ட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாண்டீஸ்வரியும், முனீசும் பத்திரமாக மீ ட்கப்பட்டனர். ஆனால் மஹாவிஷ்ணுவும், அஜிஸ்ரீயும் கற்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டதால் அவர்களை மீ ட்பதில் தா மதம் ஏற்பட்டது. நீண்ட போ ராட்டத்திற்கு பின்பு இருவரையும் உ யிரற்ற நி லையில் மீ ட்கப்பட்டுள்ளனர்.
உறவினர்களின் க தறலுக்கு மத்தியில் தகவலறிந்து வந்த காவல்துறை கு ழந்தைகளின் உ டல்களை மீ ட்டு பி ரேத பரிசோதனைக்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து வி சாரணை நடந்து வருகின்றது.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று உ யிரிழந்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தரான பி.சீ.பியரத்தின கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.
இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் வீட்டிற்கு சென்ற எஸ்.ரத்னாயக்க டெங்கு காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உ யிரிழந்துள்ளார்.
இவர் அனுராதபுரம் தளாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் அதிகாரி எனத் தெரியவருகின்றது. இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா என பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலைய போ தை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது, குறித்தநபரிடமிருந்து கேரள க ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள க ஞ்சாவினை பொலிஸார் அவரிடமிருந்து மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக வி சாரணைகளின் பின்னர், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று இவரை முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரி நிவாரணங்களை மக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக க டுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையம் மற்றும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சில்லறை, மொத்த மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வற் வரி குறைப்பு நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த, மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
மொத்த இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதற்கமைய செயற்படுகிறார்களா என்பதை தொடர்ந்து க ண்காணிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தங்களின் எதிர்கால வாழ்க்கையை தனியே கட்டமைத்துக் கொள்ளவும் ராணி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை அமைத்துக் கொள்ளவும், அடுத்த சில நாட்களில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் எனவும் அரண்மனை தகவல் தெரிவிக்கின்றன.
அரண்மனை கடமைகளை விட்டு விலகுவதற்கான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் முடிவில் ராணி தமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் பதிவு செய்துள்ளார்.
ராணி மற்றும் இளவரசர்கள் சார்லஸ், வில்லியம், ஹரி ஆகியோருக்கு இடையில் சாண்ட்ரிங்ஹாமில் நடந்த முக்கிய கலந்துரையாடலுக்கு பிறகு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்தில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கனடாவிலிருந்து கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவது தொடர்பாக இளவரசர் ஹரியும், அவருடைய மனைவியும் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஹரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நாளைய தினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி, வங்கி ஒன்றிற்கு சொந்தமான வாகனம் ஓமந்தை – விளக்குவைத்தகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓமந்தை பகுதியை இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய மன்னாரில் இயற்கை எரிவாயுவிற்கான அகழ்வு நடவடிக்கையை வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் கடற்படுக்கையில் 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன், கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 23 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேருந்துமே நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்த 23 பேரில் 22 பேர் வட்டவளை வைத்தியசாலையிலும், ஒருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை நான்கு பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து வீதி விதிகளை மீறி பயணித்ததாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் பா துகாப்பு குழு உறுப்பினர்களுக்கு வவுனியா பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா, பாண்டாரிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா, பண்டாரிகுளம் மற்றும் உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் பொலிசாரினால் உருவாக்கப்பட்ட சிவில் பா துகாப்புக் குழுக்களில் இணைந்து கடந்த ஆண்டு பணியாற்றியவர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதன்போது பண்டாரிகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் 09 தமிழ் பொலிஸ் உத்தியோகர்தர்களுக்கும் சிவில் பா துகாப்புக் குழுவினரால் கௌரவித்து பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதில் வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகரி அன்வர், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர், பொலிசார், சிவில் பா துகாப்பு குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழரும் கல்வி அபிவிருத்தியும் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி ரோட்டறக் கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (12.01.2020) மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலும், எதிர்காலம் தொடர்பிலும் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது.
வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் விமலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை விரிவுரையாளர் செல்லத்துரை ஜெகனேந்திரன்,
சட்டக்கல்லூரி மாணவன் கிருஸ்ணபெருமாள் கிசாந், இலங்கை திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் ல.சதீஸ்குமார், ஐடிஎம் நேசன் கம்பஸ் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோர் இதன்போது கருத்துரைகளை வழங்கினர்.
பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டையில் மனைவியை ஆள்வைத்து கொ ன்றுவிட்டு 3 ஆண்டுகளாக கணவர் நாடகமாடிய வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா கா ணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யாவின் பெற்றோர்கள் அளித்த பு காரின் பேரில், ஆலங்குடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டனர்.
வி சாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி பொலிசார் விசாரிக்க, 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சிபிசிஐடி பொலிசாருக்கு வழக்கு கைமாறியது. அவர்களது விசாரணையில் கணவர் ரமேஷ் கொடுத்த தகவல்களில் ச ந்தேகம் ஏற்பட, அவரை அழைத்துச் சென்று வி சாரணையை துரிதப்படுத்தினர்.
வி சாரணையில் மனைவி சரண்யாவின் நடத்தையில் ச ந்தேகம் ஏற்பட்டதால், தனது நண்பர்கள் ரகு, பாட்ஷா உள்ளிட்ட நான்கு பேரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து கொ லை செய்யுமாறு கூறியதை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.
அவர்கள் ஒன்று சேர்ந்து தனது மனைவியை கொ லை செய்துவிட்டு, சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீ சி வி ட்டதாகவும் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.
ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி பொலிசார், சரண்யாவை வீசிச் சென்ற கிணற்றை அடையாளம் கண்டுபிடித்தனர்.
பின்னர் சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின் சரண்யாவின் எலும்புக்கூடை தோண்டி எடுத்தனர். அதனை ப ரிசோதனைக்காக எடுத்துச் சென்ற சிபிசிஐடி பொலிசார், ரமேஷ், பாட்ஷா மற்றும் ரகு உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.
மனைவியை கணவரே ஆள் வைத்து கொ ன்றுவிட்டு மூன்று வருடம் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியினரிடையே அ திர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வி டுதியில் த னியாக இருந்த கல்லூரி மா ணவி த ற்கொ லை செய்துகொண்ட வழக்கில் மூன்று பக்க கடிதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா (23).
இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல் ) 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள வி டுதியில் இரண்டு மாணவிகளுடன் நிவேதா தங்கியிருந்துள்ளார்.
அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் த னியாக அறையில் இருந்த நிவேதா இன்று காலை விடுத்த பின்னரும் கூட, அறையைவிட்டு வெளியே வராததால் ச ந்தேகமடைந்த பக்கத்து அறையை சேர்ந்த மாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.
அப்போது நிவேதா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்த மா ணவிகள் உடனடியாக விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காப்பாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், நிவேதாவின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவருடைய அறையில் மேற்கொண்ட சோ தனையில், மூன்று பக்க கடிதம் சிக்கியது. மேலும், புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டிருந்ததால் காதல் தோல்வியாக இருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா படிக்கும் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மற்றொரு மா ணவியிடம் சி ல்மி ஷம் செய்ததாக பு கார் எழுந்தது. இந்த நிலையில் அதே துறையை சேர்ந்த நிவேதா த ற்கொ லை செய்துகொண்டிருப்பது ப லத்த ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.