வழி கேட்ட பெ ண்ணுக்கு 4 பே ரால் நடந்த கொ டுமை : நீதிமன்றம் அ திரடி தீர்ப்பு!!

கும்பகோணத்தில்..

கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெ ண்ணை ப லாத் காரம் செய்த வ ழக்கில் நா ன்கு கு ற்றவாளி களுக்கு ஆ யுள் த ண்டனையும், ஒரு கு ற்றவாளிக்கு 7 ஆ ண்டுகள் சி றை த ண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் குடந்தையில் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த இ ளம்பெ ண் வந்து இ றங்கினார். இரவு நேரத்தில் அங்குள்ள வி டுதிக்கு செல்ல ஆ ட்டோவில் ஏ றிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தி வேண்டுமென்றே அருகில் இருக்கும் வி டுதிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி கொண்டிருந்தார்.

இது குறித்து அப்பெ ண் கேட்ட நிலையில் வழியிலேயே அவரை இறக்கிவிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த வேறு இருவரிடம் வி டுதிக்கு அவர் வழி கேட்ட போது போ தையில் இருந்த இருவரும் அ வரை தூ க்கி செ ன்று ப லாத் காரம் செய்தனர்.

அப்போது அவர்களின் இ ரண்டு ந ண்பர்களும் சே ர்ந்து அப்பெ ண்ணை சீ ரழித்த தோடு குருமூர்த்தியும் அதில் இணைந்து கொண்டார். தமிழகத்தை உ லுக்கிய இந்த வ ழக்கில் குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் கை து செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐவர் மீ தான கு ற்றங்க ளும் நி ரூபிக்கப்பட்ட நிலையில் புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகிய நால்வருக்கும் ஆ யுள் த ண்டனையும், குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சி றை த ண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இ றக்கும் வரையில் ஆ யுள் த ண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் சி றையில் தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுதலை!!

கைது செய்யப்பட்ட ஆசிரியர்

மா ணவி ஒருவருடன் த வறாக நடக்க முயற்சித்தார் எனும் கு ற்றச்சாட்டில் ச ந்தேகத்தில் கை து செய்யப்பட்ட ஆ சிரியருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

குறித்த கு ற்றச்சாட்டு தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட மு றைப்பாட்டிற்கமைய, பொலிஸாரால் கடந்த 8ஆம் திகதி இரவு ஆ சிரியர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இன்று வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்றையதினம் எடுக்கப்பட்டிருந்த போது, சந்தேகநபரான ஆ சிரியருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் 6ஆம் மாதத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டது.

வவுனியாவில் மூடப்படும் நிலையில் இருந்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!!

வவுனியா, வெளிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவாக காணப்பட்டிருந்த நிலையில் மூடப்படும் தறுவாயில் இருந்துள்ளது.

இப் பாடசாலைக்கு கடந்த ஆறு மாதங்களாக அதிபர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் இவ்வருடம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய பாஸ்கரமூர்த்தி நேசராஜா வடமாகாண கல்வி திணைக்களத்தால் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு குறித்த பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இம்மாதம் 2ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

க.பொ.த.சாதாரண தரம் வரை உள்ள குறித்த பாடசாலையில் கடந்த வருடம் 35 மாணவர்கள் மாத்திரமே கல்விகற்று வந்திருந்த நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்பட்டதோடு இவ்வருடம் 15 மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய பாடசாலைகளை நாடாமல் வெளிக்குளம் பாடசாலையில் தமது பிள்ளைகளை இணைத்துக்கொள்ளுமாறு பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கேட்டு நிற்கின்றனர்.

வவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு!!

நர்த்தனாஞ்சலி

வவுனியாவில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் நிதிப் பங்களிப்புடன் நிருந்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி வழங்கிய நர்த்தனாஞ்சலி மாபெரும் கலை நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றையதினம் (12.01.2020) மாலை 4 மணிக்கு வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன்,

சிறப்பு விருந்தினராக வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் மற்றும்,

கௌரவ விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் விருந்தினர்களாக பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்க்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, கணபதி வணக்கம், நடராஜர் வணக்கம், புஸ்பாஞ்சலி, குறள்வழி நடனம், சிரித்தாடி, பல்லியம் (இசை நிகழ்ச்சி), நாட்டியக்கலை, ஜதீஸ்வரம், குழலூதி போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இரவு 7.40 மணியளவில் விழா சிறப்புற நிறைவுற்றது.

இதன் போது பிரதம, கௌரவ விருந்தினர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான சான்றிதல்களையும் யாழ்.இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அஸர்பைஜானில் உ யிரிழந்த மா ணவிகள் : பெற்றோரிடம் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ள விடயம்!!

உ யிரிழந்த மா ணவிகள்

அஸர்பைஜான் நாட்டில் உ யிரிழந்த இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகளின் ச டலங்களை இலங்கைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளுக்காக 15 லட்சம் ரூபாயை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று மாணவிகளின் ச டலங்களை இலங்கைக்கு கொண்டு தேவையான பணத்தை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சு மாணவிகளின் பெற்றோரிடம் அறிவித்துள்ளது.

இந்த பிள்ளைகளின் பெற்றோர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸர்பைஜான் நாட்டின் பாகு நகரில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்தது வந்த இலங்கை மாணவிகள் தங்கியிருந்த தொடர்மாடி வீட்டில் ஏற்பட்ட தீயி னால் ப ரவிய வாயு காரணமாக மூச்சு தி ணறல் ஏற்பட்டு மா ணவிகள் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சி றுவனை வ ல்லுற வுக்கு உட்படுத்திய ந பருக்கு 30 ஆண்டு சி றைத்த ண்டனை!!

கொழும்பு மேல் நீதிமன்றம்..

சி றுவனை க டுமையாக பா லியல் வ ல்லுற வுக்கு உட்படுத்தியதாக கு ற்றம் சு மத்தப்பட்டிருந்த ந பருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் க டூழியச் சி றைத்தண் டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கொழும்பு கிருளப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவருக்கே இந்த த ண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறைத் த ண்டனைக்கு மேலதிகமாக கு ற்றவா ளிக்கு 30 ஆயிரம் ரூபாய் அ பராதம் விதித்துள்ள நீதிபதி பாதிக்கப்பட்ட சி றுவனுக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இழப்பீட்டை செலுத்த தவறினால், கு ற்றவாளி மேலும் 6 ஆண்டுகள் சி றைத் த ண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி மற்றும் 2014 நவம்பர் 24ஆம் திகதி வரையான காலத்தில் கிருளப்பனையில் குற்றவாளி 16 வ யதுக்கும் கு றைவான சி றுவனை பா லியல் வ ல்லுற வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

கு ற்றவா ளிக்கு எதிராக மூன்று கு ற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. நீண்ட வழக்கு வி சாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு எ திராக முறைப்பாட்டாளர் சுமத்தியுள்ள கு ற்றச்சா ட்டுக்கள் சந் தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ச டலங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

தாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அ வசரமாக தரையிறங்கியுள்ளது. ஜெடாயிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் இரண்டு பயணிகள் சுகயீனமடைந்துள்ளமையினால் அவசரமாக தரையிறக்க அனுமதியளிக்குமாறு விமானி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.

எனினும் விமானத்தில் சுகயீனமடைந்ததாக கூறப்படும் இரண்டு நபர்களும் உ யிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷிய பெண் மற்றும் ஆண் ஒருவருமே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாய்லாந்து விமான நிலையத்திற்கு சொந்தமான இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தீயி ட்டு எ ரிப்பு!!

மோட்டார் சைக்கிள்

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தி ருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நிலாவரை ஈவினை பகுதியில் தீயி ட்டு எ ரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைத்த தகவலையடுத்து எ ரிக்கப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தீயி ட்டு எ ரிக்கப்பட்டிருக்கலாம் என அச்சுவேலி பொலிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வி சாரணைகளை அச்சுவேலி மற்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் புகையிரதம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ப லி!!

புகையிரத விபத்து

யாழ்.புங்கன்குளம் சந்தியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

1845 எக்ஸ்பிரஸ் புகையிரதமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

புதையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
இவர் 65 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா கூமாங்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை அழகாக மாற்றிய இளைஞர்கள்!!

கூமாங்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை..

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் காணப்பட்ட பேரூந்து தரிப்பிடம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அவலட்சணமான முறையில் பயணிகளின் பாவணைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்டது.

இதனையடுத்து கூமாங்குளம் பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பேரூந்து தரிப்பிடம் அழகுற மாற்றப்பட்டுள்ளது.

இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

சுவரோவியங்களில் திருவள்ளுவர், தமிழரின் பாரம்பரிய கலை, தைப்பொங்கல் திருநாள் போன்றவற்றை சித்தரித்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெளுக்குளம் பகுதியில் பாவனைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடத்தினை வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அழகுற மாற்றி அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் கா ணாமல் போன தமிழர் : க வலையுடன் காத்திருக்கும் உறவினர்கள்!!

சுவிஸ்லாந்தில்..

சுவிஸ்லாந்தில் கா ணாமல் போன தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் தே டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலமாக 55 வயதாகும் உதயகுமார் ராஜரட்ணம் என்பவர் கா ணாமல் போயுள்ளதாக அவரது மகன் ரதூஷன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கா ணாமல் போன நபர் தொடர்பான தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி இலக்கம் 062 871 13 33 என்பதாகும்.

தந்தையை இன்னும் க ண்டுபி டிக்க முடியாமை தொடர்பில் ம னவேத னையில் இருப்பதாக ரதூஷன் (22) தெரிவித்துள்ளார். தமது தந்தை திடீரென்று கா ணாமல் போனமைக்கான காரணம் என்னவென்று இதுவரை தங்களால் கண்டறியமுடியவில்லை.

அவர் உ யிருடன் இருப்பதாக அறிகுறி மட்டும் கிடைத்தால் போதும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கா ணாமல் போன தந்தை ஒருநாள் வீடு திரும்புவார் என மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக ரதூஷன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வளாகத்தினை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சரவை பத்திரம் தாக்கல்!!

வவுனியா பல்கலைக்கழகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை பத்திரம் தா க்கல் செய்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் அவர் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக் கழகமாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் பலரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முயற்சி எடுத்தவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறே காணப்பட்டது.

இவ்வாறு ஏமாற்றப்பட்ட விடயம் வவுனியா வளாகத்தின் செயற்பாட்டில் மாத்திரமல்ல தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகளில் இருந்து அனைத்திலும் ஏமாற்றப்பட்டனர்.

இந்நிலையிலேயே எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது தமிழ் மக்கள் தொடந்தும் ஏமாற்றப்படக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளார். ஒவ்வொரு செயற்பாட்டையும் மக்கள் நலன்சார்ந்து செயற்படுத்தி வருவதனாலேயே இன்று மக்கள் அமைச்சரின் பின் அணிதிரண்டு வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா வளாகத்தினை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு தற்போது அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே விரைவில் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு ஒன்றில் உ யிரிழந்த இலங்கை மா ணவிகள் : அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

இலங்கை மா ணவிகள்

அஸர்பைஜானில் உ யிரிழந்த மூன்று மாணவிகளின் ச டலங்களையும் அரசாங்க செலவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்த மாணவிகளின் ச டலங்களை வெகு விரைவில் இலங்கைக்கு கொண்டு வரப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் ம ரணத்தினை அடுத்து இலங்கை மாணவர்கள் வெளிநாடு செல்வதனை முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸர்பைஜானில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில பட்ட படிப்பு கற்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த மாணவிகள் அங்கு சென்றுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதேவேளை அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்தமை தொடர் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் திட்டத்தில் கரிபூசிய விஷமிகள்!!

கொடிகாமம் பகுதியில்

யாழ்.கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனம் தெரியாத நபர்களால் நேற்றிரவு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீதே சனிக்கிழமை இரவு இனம் தெரியாதோர் கழிவு எண்ணெய்யை ஊற்றியுள்ளனர்.

தாம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் வகையில் வரைந்த சுவரோவியத்தில் சிலர் கழிவு எண்ணெய்யை ஊற்றியுள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் இனம் காணப்பட்டு த ண்டிக்கப்பட வேண்டும் என சுவரோவியத்தை வரைந்தவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவன் பலி!!

ஆனந்தராசா பிரசன்னா

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ப லியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் மோட்டார் வண்டியில் பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

இதன்போது உடையார்கட்டு, மூங்கிலாறு தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது 24) என்பவரே உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் முகாமைத்துவ பீடத்தில் பேராதெனிய பல்கலை கழகத்துக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய தினமும் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ப லியாகியிருந்த நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபயவின் கடுமையான உத்தரவு!!

ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர்கள் மோ சடிக்காரர்களாக இருந்தால் ஒருபோதும் பதவி வழங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ கடுமையாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது போலி யான குற்றம் சுமத்தி சி றைப்படுத்தியுள்ளது. இதனால் தேர்தலில் உதவியவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடியாமல் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் ஒரு போதும் அரசியல் ப ழிவாங்களை மேற்கொள்ள மாட்டேன். அப்பாவிகளுக்கு எதிராக வழக்கு தா க்கல் செய்ய மாட்டேன். அவ்வாறானவற்றை செய்ய இடமளிக்க மாட்டேன்.

கு ற்றம் சு மத்தப்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான வி சாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும். எனக்கு உதவினார்கள் என்பதற்காக பாரபட்சம் பார்க்க முடியாது. எனது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட படித்தவர்களை பதவியில் நியமிப்பேன்.

எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோ சடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படுவதும் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.