யாழில் வா ள்வெ ட்டு கு ழுவின் அ ட்டகா சம் : ஏழுபேர் வை த்தியசாலையில் அனுமதி!!

யாழில்..

யாழ். மாநகர் – கொட்டடியில் வா ள்களுடன் வ ந்த கு ம்பல் ஒன்று இ ருவர் மீது வா ள்வெ ட்டு ந டத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன்போது வா ள்வெ ட்டு மற்றும் அந்த பகுதி மக்களுக்கு இ டையில் ஏ ற்பட்ட மோ தலில், இரு த ரப்பையும் சேர்ந்த ஏ ழுபேர் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரவர்கள், ச ந்தேக ந பர்களை து ரத்திச் சென்ற போதிலும் அவர்கள், தங்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவி ட்டு  தப்பிச்சென் றுள்ளனர். இந்த ச ம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஐந்து மோட்டர் சைக்கிள்களில் வந்த கு ம்பல் ஒன்றே இந்த வ ன்முறை யை ந டத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என கொட்டடி இளைஞர்கள் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வ ன்மு றைக் கும் பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சே தமாக்க ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அ றிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கை து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் கா ணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனுக்கு நடந்தது என்ன?

மகேஸ்வன் ரமேஸ்வரன்

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கா ணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரிய முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 43 வயதான மகேஸ்வன் ரமேஸ்வரன் என்பவரே கா ணாமல் போயுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் பாசெல் மாநிலத்தில் வசித்து வந்த மகேஸ்வன் ரமேஸ்வரன் கடந்த ஒன்றரை மாதங்களாக கா ணாமல் போயுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடற்புலிகளின் வாகன சாரதியாக இருந்தமை தொடர்பில் 2014ம் ஆண்டு இலங்கை பு லனாய்வு பிரிவினரால் து ன்புறு த்தப்பட்ட நிலையில், நாட்டிலிருந்து 2015ம் ஆண்டு வெளியேறியதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுவிஸில் அவரின் பு கலிடம் ம றுக்கப்பட்ட நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.

இலங்கைக்கு நாடு க டத்தப்பட்டாரா அல்லது வேறு வழிகளில் எதுவும் சி க்கியுள்ளாரா என்பது தொடர்பில் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். இவர் தொடர்பில் யாராவது அறிந்திருந்தால் உறவினர்களுக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் காணாமல்போன தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!!

திய நடைமுறை

இலங்கையில் கா ணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் இலகுவான நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

புதிய முறைக்கமைய ஒரு நபரின் கையடக்க தொலைபேசி கா ணாமல் போனால் மு றைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதற்கு பதிலாக இணையத்தளம் ஊடாக அதற்கான மு றைப்பாடுகளை மேற்கொள்வதற்கு உரிய நபருக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக www.ineed.police.lk/ என்ற இணையத்தளம் ஊடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

எவ்வாறு மு றைப்பாடு செய்வது என்பதை தெளிவுபடுத்தும் காணொளி ஒன்றும் அந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பொங்கல் வழிபாடுகள்!!

பொங்கல் வழிபாடுகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம், வாழைச்சேனை, கல்குடா, வாகரை, கிரான் உள்ளிட்ட பகுதிகளில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலயத்தில் இன்று காலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி பல கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் தேவாலயத்தில் இன்று காலை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் இந்த பொங்கல் விழா நடாத்தப்பட்டது.

பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஜெஸ்ரின் ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனித அருளானந்தர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜெஸ்ரின் வின்சன்ட் மற்றும் அருட்தந்தை ஆகியோரின் தைப்பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தமிழர்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மதவேறுபாடுகளுக்கு அப்பால் பெருமளவான பொதுமக்களும் இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா!!

பொங்கல் விழா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான தர்மபால செனவிரட்ன தலைமையில் இப் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கமும், ஒற்றுமையும் ஏற்பட வலியுறுத்தி பொங்கல் செய்து வர்ணபகவானுக்கு படைத்து இந்து முறைப்படி பூஜை மேற்கொண்டு வழிபட்டனர். அத்துடன் இனிப்புக்களை பரிமாறியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறித்த பொங்கல் நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சமூக பா துகாப்பு வேலைத்திட்டத்திற்கான இணைப்பாளருமான கேணல் ரட்ணபிரிய பந்து,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல, வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் பிரிவு அமைப்பாளர் பிறேம், கட்சியின் வட்டார தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை அதிரடியாக அறிவித்தார் ஜனாதிபதி கோட்டபாய!!

ஜனாதிபதி கோட்டபாய

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய விசேட இலத்திரனியல் அட்டையொன்றும் வழங்கப்படும். சமூர்த்தி உதவி பெறுவோர், சமூர்த்தி உதவி கிடைக்கப் பெறாதவர்கள், நிலையான தொழில் இல்லாதவர்கள், பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள், தொழில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த அங்கவீனமுற்றோர், விதவை குடும்பங்கள்,

நிலையான வருமானம் இல்லாத முதியோர்கள் மற்றும் கடுமையான நோயாளிகள் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். அவர்களது உணவுப் பா துகாப்பை உறுதிப்படுத்துவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

சீனி, தேயிலை, அரிசி, மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய், கருவாடு, கிழங்கு மற்றும் பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை நிவாரண விலையில் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

சதொச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களின் ஊடாக உணவுப் பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தெரிவுசெய்யப்படும் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமிய விற்பனை நிலையங்களுக்கு நிவாரண அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறித்த விற்பனை நிலையங்களை மக்கள் செறிந்து வாழும் பிரதேங்கள், குறைந்த வருமானம் பெறும் வீட்டுத் தொகுதிகள், கிராமிய பகுதிகள் மற்றும் பெருந்தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையிலும் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனுமதியளிக்கப்பட்ட வியாபார நிலையங்களை தெரிவுசெய்யும் போது பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். இதன் மூலம் சிறியளவிலான வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்துள்ளார்.

சுதேச உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொதிசெய்யப்பட்ட உணவு, வாசனை திரவியங்கள், இறைச்சி, மீன் முட்டை மற்றும் ஏனைய வீட்டுத் தேவைகளை குறித்த வியாபாரிகளுக்கு தரகர்கள் இன்றி நேரடியாகவே வழங்குவதற்கும் இத்திட்டத்தில் வசதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித்திதிட்டத்துடன் இணைந்ததாக கிராமிய தோட்ட மற்றும் நகர பிரதேசங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கவும், ஒரு லட்சம் கி.மீ கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் என இனங்காணப்படுவோருக்கு காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் பிம் சவியவுடன் இணைந்து விவசாயம், வியாபார அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்டத்திற்காக முப்பது வருட குத்தகை அடிப்படையில் ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

வவுனியாவில் 15 தினங்களுக்கு மின்தடை : இடங்களின் விபரம் வெளியானது!!

மின்தடை

வவுனியாவில் நாளை 16ம் திகதியிலிருந்து 31ம்திகதி வரையிலான தினங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மின்சாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொள்கின்றது.

16.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை : சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம் , ஈரப்பெரியகுளத்திலிருந்து பூஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், பூஓயா இரானுவ முகாம், Recobo North ஆகிய இடங்களிலும்,

17.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை : சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும், 18.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம்,

20.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம் ஆகிய பிரதேசங்களிலும், 21.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம், P.S.C, பகல அளுத்வத்த கிராமம் , மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம் , சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும்,

22.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மதவுவைத்தகுளம் கிராமம், சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், மகாறம்பைக்குளம், சாளம்பைக்குளம் ஆகிய பிரதேசங்களிலும்,

23.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம் P.S.C , பகல பகல அளுத்வத்த கிராமம் , சாளம்பைக்குளம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம், பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரைக்கும்,

24.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம் P.S.C, பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும், 25.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பகல அளுத்வத்த கிராமம் , பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரைக்கும், மெனிக்பாம் I,II,III மற்றும் IV ஆகிய இடங்களிலும்,

27.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும், 28.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, Gowloom Garments , ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம் ,யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், Air Point Joint Service Army Camp, BOO ஓயா,Recbo North, மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய இடங்களிலும்,

29.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரைமதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும், 30.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்,பம்பைமடு கிராமம் ஆகிய இடங்களிலும்,

31.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம் , மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்டு இருவர் பலி!!

ஸ்ரீதேவி எக்ஸ்பிரஸ் ரயிலில்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதுண்டு இருவர் உ யிரிழந்துள்ளனர். இன்று (15.01.2020) காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குருநாகல் நயிலிய ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவையினை கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரியில் பயணித்த இருவர் உ யிரிழந்துள்ளனர்.

ரயில் குறித்த காரை மோதி சற்று தூரம் இழுத்து சென்றுள்ளதுடன் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்பலகையினையும் சேதப்படுத்தியுள்ளது.


உ யிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அறிமுகமாகிறது புதிய சட்டம் : இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!!

புதிய சட்டம்

பு லனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதிகாரமளித்தலுக்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பா துகாப்புக்கு முன்னுரிமையளித்து அனைத்து பு லனாய்வுப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் : நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சடலங்கள்!!

இலங்கை மாணவிகள்

அஸர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட விஷ வாயுவை சுவாசித்ததில் சிக்கி உ யிரிழந்த 3 இலங்கை மாணவிகளின் ச டலங்கள் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கட்டார் விமான நிலையத்தில் இருந்து விசேட விமானத்தின் மூலம் ச டலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக உ யிரிழந்த இரண்டு சகோதரிகளின் தந்தையான நிஷான் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

அஸர்பைஜானில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவிகள், தீ விபத்தில் விஷ வாயுவை சுவாசித்தமையினால் உ யிரிழந்தனர்.

பிலியந்தலயை சேர்ந்த 23 வயதுடைய மல்ஷா சன்தீபனி, அவரது சகோதரியான 21 வயதுடைய தாரகி அமாயா மற்றும் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய அமோத்யா மதுஹன்சி ஆகிய மூவருமே உ யிரிழந்தனர்.

இவர்களின் இறுதிக் கிரியைககள் ஹோமாகம, தியகம மலர்சாலையில் நடைபெறும் என மாணவிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாணவனின் மற்றுமொரு கண்டுபிடிப்பு!!

ப.கிருசாந்

கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த ப.கிருசாந் என்ற மாணவன் கழிவுப் பொருட்களைக் கொண்டு உந்துருளி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார்.

உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித்தமாணவன் கல்விகற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வருகிறது புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருபவர்கள் தமது நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய நடைமுறையொன்று கொண்டு வரப்படவுள்ளது.

அந்த வகையில் தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின் இது குறித்து உரியவர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் தெரியப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொலைபேசிகளூடாக அறிவிப்பதற்காக குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் இந்த குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல் : துரைராசா தனலட்சுமி!!

துரைராசா தனலட்சுமி
பிறப்பு – 1939.08.20 || இறப்பு – 2020.01.15

யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி பகுதியினை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளத்தினை வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்கள் இன்றையதினம் (15.01.2020) இறைவனடி சேர்ந்தார்.

இவர் தினேஸ் ரவல்ஸ் உரிமையாளர் திரு துரைராசா தில்லைநாதனின் தாயாராவார். அன்னாரின் பூதவுடல் 16.01.2020 அன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஆறுமுகம் கிருபாகரன்
T&K டிஸ்டிபியூட்டர் உரிமையாளர்

வவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்!!

பொங்கல் நிகழ்வுகள்

வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் பொங்கல் விசேட பூஜை ஆராதனை நடத்தப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் மழை வீழ்ச்சி சிறப்பாக காணப்பட்டதினால் விவசாய பொருட்களின் விளைச்சல் சிறப்பாக இருந்தபடியால் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் பிரதமர் மஹிந்த விளக்கம்!!

பிரதமர் மஹிந்த விளக்கம்

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில கருத்துக்களில் உள்ள அரசியல்வாதிகள் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்ட போதிலும் அது அரசாங்கத்தின் தீர்மானமாக கருத முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஊடக பிரதானிகளுடன் அலரி மாளிகையில்ல இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ் நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஒரு நாட்டில் ஒரு தேசிய கீதம் மாத்திரமே பாட வேண்டும் என கூறிய பிரதமர், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவிலேயே தேசிய கீதம் ஒரு மொழியில் தான் பாடப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பில் பேசுவதில் இனங்களுக்கு இடையில் பேதம் அதிகரிக்கும் என கூறிய பிரதமர் தேசிய கீதம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தான் பத்திரிகைகளிலேயே பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை : நகரசபைத் தலைவர் அதிரடி!!

நடைபாதை வியாபாரத்திற்கு தடை

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவித்து இன்றையதினம் (14.01.2020) மாலை நகரசபை வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கியினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட சந்தை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி சந்தி, ஹொரவப்பொத்தானை வீதி போன்றவற்றில் முன்னெடுக்கப்படும் நடைபாதை வியாபாரத்தினால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பாதசாரிகள் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபாதை வியாபாரத்தினால் வாகன நெரிசல்களும் ஏற்படுகின்றன. இவ்விடயம் கடந்த நகரசபை சபைக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தைப்பொங்கல் வரை வியாபாரம் செய்வதற்கு நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியதுடன்,

எதிர்வரும் 16.01.2020 (வியாழக்கிழமை) இலிருந்து நகரசபைக்குட்பட்ட பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய இன்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.

இவ் அறிவித்தலில் நகரசபை சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய நாளை மறுதினம் (16.01.2020) தொடக்கம் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதுடன்,

தடையுத்தரவினை மீறி வியாபாரம் மேற்கொள்ளுபவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா நகரசபைக்கு முன்பாக அங்காடி வியாபாரத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

நடைபாதை வியாபாரத்தினால் சந்தை சுற்றுவட்ட வீதி மற்றும் இலுப்பையடி சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்கள், பாதசாரிகள் நடைபாதையினை உபயோகப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தினசரி அப்பகுதியில் வீதி விபத்துக்கும் இடம்பெறுகின்றது என்பதை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் இவ்விடத்தில் வியாபாரம் மேற்கொள்ள தடை விதித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.