நடுவீதியில் வேனுடன் எரிந்து சாம்பலான பயணிகள் : திகிலூட்டும் சம்பவம்!!

நடுவீதியில்..

இந்தியாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் மிகுந்த து யரத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிருடன் எரிந்து உ யிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

துமகுருவின் குப்பியில் உள்ள டோடகுனி அருகே தேசிய நெடுஞ்சாலை 206ல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கு பின் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துள்ளது. இதில், பேருந்தில் இருந்து அனைரும் காயமின்றி தப்பியுள்ளளனர்.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்தன. இறந்த மூவரும் வசந்த்குமார் (23), ராமையா (62), நரசம்மா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குப்பி தாலுகாவில் உள்ள என் ஹோசஹள்ளியில் வசிப்பவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

தப்பித்த நான்கு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக குப்பி பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எரிபொருள் டேங்க் தீப்பிடி த்து வெ டித்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தலைமறைவான பேருந்து டிரைவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இது போதும்… கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் : மலிங்கவின் நெகிழ வைக்கும் ஆசை!!

மலிங்க

இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால் போதும் நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற்றுவிடுவேன் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கவுகாத்தில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட மலிங்க தனது ஓய்வு குறித்து கூறியதாவது, நான் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

இப்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர்கள் இப்போது நான் விளையாடியது போதும் என்று சொன்னால், டி 20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

எனது ஒரே இலக்கு டி 20 உலகக் கோப்பையில் தகுதிச் சுற்றில் விளையாடுவதுதான். இலங்கை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால், அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன் என்று மலிங்கா கூறினார்.

டி -20 சர்வதேச போட்டிகளில் 100 அணித்தலைவராக செயல்பட்ட ஒரே பந்து வீச்சாளரான மலிங்கா மார்ச் மாதத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று கூறியிருந்தார், ஆனால் பின்னர் மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட விருப்பம் தெரிவித்தார் என்பது நினைவுக்கூரத்த்ககது.

5 மில்லியன் டொலர் இழப்பீடு வேண்டும் : சுவிஸ் நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு : ஹதுருசிங்க அதிரடி!!

ஹதுருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், இலங்கை கிரிக்கெட் அவரது ஒப்பந்தத்தை தவறாக நிறுத்தி, அவரது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஹதுருசிங்க ஒப்பந்தத்தின்படி, இப்போது வழக்கு சுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்.

ஹதுருசிங்க அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு திரும்பி அங்கு வசித்து வருகிறார், மேலும் அவரது வழக்கறிஞர்கள் இந்த வழக்கை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹதுருசிங்க விடயத்தில் சட்டப் போ ரில் ஈடுபடத் தாயராக இருப்பதாக கூறும் இலங்கை அதிகாரிகள், அதற்காக செலவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கூறுகையில், ஹதுருசிங்க இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் அது ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் போல பெரிய தொகையாக இருக்காது.

இரு தரப்பினரும் ‘பரஸ்பர பிரிவினை’ பற்றி விவாதித்தபோது, ​​ஹதுருசிங்க தனது ஒப்பந்தத்தில் மீதமுள்ள 18 மாத சம்பளத்தை வழங்குமாறு கோரியிருந்தார். அது கிட்டதட்ட 1 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

இருப்பினும், சம்பளத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே கொடுக்க தயாராக இருந்தது இலங்கை கிரிக்கெட். விவாதங்கள் முட்டுக்கட்டைக்குள் முடிவடைந்த நிலையில், சட்ட நடவடிக்கை எடுக்க ஹதுருசிங்க முடிவு செய்தார்.

ஹதுருசிங்காவை 2017 ஜனவரியில் 40,000 அமெரிக்க டாலர் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் என கிட்டதட்ட 60,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. அவர் 2020 டிசம்பர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை முடிந்ததும், விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தலைமை பயிற்சியாளர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் ஹதுருசிங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டார். ஹதுருசிங்காவுக்கு வழங்கிய சம்பளத்துடன் இந்த நேரத்தில் ஐந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நிர்வகித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் கூற்றுப்படி, ஒரு மாதத்திற்கு 60,000 அமெரிக்க டொலர்களுடன், அவர்கள் மிக்கி ஆர்தர், கிராண்ட் ஃப்ளவர், ஷேன் மெக்டெர்மொட் டேவிட் சாகர் மற்றும் டிம் மெக்காஸ்கில் ஆகியோரின் சம்பளத்தை செலுத்த முடிகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

வட்ஸ் அப்பினை தெறிக்கவிட்ட பயனர்கள்: புதிய சாதனை!!

வட்ஸ் அப்

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆனது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பின்போது உலகளவில் உள்ள பயனர்கள் வாட்ஸ் ஆப்பின் ஊடாக வாழ்த்துக்களை பரிமாறினர்.

புத்தாண்டு பிறப்பின் நள்ளிரவிலிருந்து அடுத்த 24 மணி நேரத்தில் உலகளவில் சுமார் 100 பில்லியன் குறுஞ்செய்திகள் வாட்ஸ் ஆப்பினூடாக பரிமாறப்பட்டுள்ளன. இவற்றில் Text Messaging, Status, Picture Messageing, Calling, Voice Notes என்பனவும் அடங்கும்.

இதேவேளை புத்தாண்டு தொடர்பாக சுமார் 12 பில்லியன் படங்களும் பரிமாறப்பட்டுள்ளன. இதேவேளை இந்தியாவில் மாத்திரம் 20 பில்லியன் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலை!!

பெற்றோர்களின் பங்களிப்பு இன்மையால் வட மாகாணத்தில் பல பாடசாலைகள் மூடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று பல பாடசாலைகளில் பெற்றோரின் ஒத்துழைப்பின்றியும், தமது கிராம பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்காமையினாலும், மூடப்படுகின்ற நிலை உள்ளது.

35இற்கு உட்பட்ட மாணவர்கள் இருந்தால் பல பாடசாலைகள் மூடப்படகின்ற நிலை எமது வட மாகாணத்தில் இருக்கின்றது. அருகில் உள்ள பாடசாலைகளுடன் இணைந்து இயங்குகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இலங்கையில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலை எமது இருப்பு தொடர்பில் நாம் தனித்து வாழ முடியுமா என்ற கேள்விக்கு அப்பால் எமது மாணவர்களின் சாதனைகளே எங்களை ஓரளவு நிம்மதியை கொடுக்கின்றது.

மாணவர்களது வெற்றிகளும், சாதனைகளுமே அரசியல் ரீதியான இருப்புக்கும் பக்கபலமாக அமையும் என்பதே உண்மை.

பாடசாலையில் சிறுபராயத்தில் சாதனை படைத்துவிட்டு பல்கலைக்கழகம் சென்று பட்டங்களை பெற்ற பின்னர் பலர் தமது ஆரம்ப பாடசாலைகளையும், ஆசாரிகளையும் மறந்து விடுகின்றோம்.

இன்று வட மாகாணத்தில் பெயர் சொல்லக்கூடியவர்களாகவும், கல்விமான்களாகவும் இருக்கின்றவர்கள் தமது ஆரம்பக் கல்வியை ஒரு பாடசாலையில் சாதாரண ஆசிரியரிடம் தான் கற்றிருப்பார்கள்.

அந்த ஆசிரியர்களே ஒரு மாணவன் எதிர்காலத்தில் எவ்வாறு வரப்போகின்றார் என்று அவனை பூரணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்கை ஆற்றுகின்றார்.

அந்தவகையில் புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயமும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதுடன் பல சாதனை மாணவர்களையும் உருவாக்கியுள்ளது.

அந்தவகையில், இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைக் கைதிகள் கூரை மேல் ஏறிப் போ ராட்டம் : குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்!!

சிறைக் கைதிகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறிப் போ ராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போ ராட்டத்தினை இன்று முற்பகல் ஆரம்பித்துள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை உ யிரிழந்ததை தொடர்ந்து, குறித்த கைதியின் ம ரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியே இந்த போ ராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சைபெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உ யிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், குறித்த சிறைக்கைதியின் ம ரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக்கைதிகள் நீதிபதி நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறைக்கைதிகளின் போ ராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், படையினரும் பா துகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சிறைச்சாலைக்கு வராவிட்டால் தாங்கள் கழுத்தினை அறுத்து த ற்கொ லை செய்யப்போவதாகவும் கூரையில் இருந்து குதிக்கப்போவதாகவும் கைதிகள் அ ச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த சிறைக் கைதிகளின்போ ராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப்பகுதியில் ப தற்றத்துடன் கூடிய நிலைமை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை!!

பகிடிவதை

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

அதற்கமைய பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

அதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாகன விபத்து : சாரதி தப்பி ஓட்டம்!!

வாகன விபத்து

ஓமந்தை, கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமான மரங்களை க டத்திச்சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியது.

இந்த சம்பவம் இன்று (05.01.2020) அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை ஏ9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிசென்ற நிலையில், கள்ளிக்குளம் வளைவில் திருப்ப முற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களின் வங்கி கணக்கிற்கு ஆபத்தா? ATM அட்டை தொடர்பில் வெளியான தகவல்!!

வங்கி கட்டமைப்புகளும்..

இலங்கையிலுள்ள அனைத்து வங்கி கட்டமைப்புகளும் ஹெக்கர்களின் வலையமைப்பாக மாறியுள்ளதாக நேற்று வெளியான தகவல் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளின் கட்டமைப்புகளிலும் ஹெக்கர்கள் ஊடுருவியுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை சரிப்பார்த்துக்கொள்ளுமாறும், ATM இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் செய்திகள் பரவின.

எனினும் இதுவொரு போலியான தகவல் என இலங்கை க்லியர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுப்படுத்தியுள்ளது. அது தொடர்பான அறிக்கையில்,

“பல்வேறு குழுவினரால் பல்வேறு நோக்கத்துடன் அவ்வாறான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுகின்றன. இது நிதி துறையின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக எவ்வித கொள்கைளும் அற்ற நபர்களினால் பரப்பும் போலித்தகவலாகும்.

இலங்கை ATM கட்டமைப்புகளுக்கு எவ்வித ஆபத்துகளும் இலல்லை. ATM சேவை பாதுகாப்பாக உள்ளது என அனைத்து வங்கிகளும் உறுதி செய்துள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க கைது : வருத்தத்தில் மஹிந்த தரப்பு!!

ரஞ்சன் ராமநாயக்க கைது

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமைக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பல உறுப்பினர்களே இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் கணக்குகளில் பதிவு ஒன்றை வெளியிட்டு அவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

அந்த பதிவுகளில், “ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கு முதலிடம் வழங்குவதற்கு பதிலாக, பாரிய ஊழல் மோ சடிகளுக்கு தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

ரஞ்சனை கைது செய்த செயற்பாடானது பொலிஸாரால் அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்” என மஹிந்த ஆதரவு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டினை சோதனையிட்ட பொலிஸார் அவரை நேற்று கைது செய்தனர்.

-தமிழ்வின்-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது!!

விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் தொகை ஒன்றை அபுதாபியில் இருந்து ச ட்டவிரோதமாக கொண்டுவந்த கு ற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பை சேர்ந்த 28 மற்றும் 38 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைத்தொழிலில் ஈடுபடும் இருவர் என குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இருவரும் நேற்று காலை அபுதாபியில் இருந்து யூ.எல் – 208 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் இருவரது பையிலும், 35,98,800 ரூபா மற்றும் 59,980 ரூபா பெறுமதியான சிகரெட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்!!

காய்ச்சல் காரணமாக..

காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் 39 வயதான தினேஷ் சுஜேந்தினி என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் அதிக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மரணம் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை உதவி சட்ட வைத்திய அதிகாரி ரசிக்க விஜயரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்த நிலையில் மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாத்திரம் 71 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் இருந்தும் காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான நோயாளர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற போதிலும் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்கான “டெங்கு பிரிவு” ஒன்று இல்லாமையினால்,

அதிகளவிலான நோயாளர்கள் பா திக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சையில் வழங்குவதற்கு தாமதங்கள் ஏற்படுவதாகவும் நோயாளர்களின் உறவினர்களும் பெற்றோர்களும் கு ற்றம் சுமத்துகின்றனர்.

மாணவிகள் இருவருடன் விடுதிக்கு சென்ற ஆசிரியரிற்கு நேர்ந்த கதி!!

ஆசிரியரிற்கு நேர்ந்த கதி

இம்முறை கா.பொ.த சாதாரணதரத்திற்கு தோற்றிய 16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இரவு நல்லதண்ணி பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம, பன்னில பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான குறித்த ஆசிரியர், சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்து, நல்லதண்ணியில் தங்கியுள்ளார்.

தந்தை மற்றும் இரண்டு மகள்கள் என விடுதி அறையை பெற்றிருந்த நிலையில், விடுதி மேலாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவர் நல்லதண்ணி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து, விடுதிக்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரும் இம்முறை கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை மேலதிக வகுப்புக்களை நடத்தும் குறித்த ஆசிரியர் மத விவகாரங்களில் ஈடுபடும் சந்தேகத்திற்குரியவர் என்றும், இதற்கு முன்பும் அவர் இரண்டு சிறுமிகளுடன் சிகிரியாவிற்கு சென்றிருந்ததும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவனுக்குள் இருந்து வெளியேறிய கருகிய புகை : திறந்து பார்த்து போது அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!

அவனுக்குள் இருந்து..

அமெரிக்காவில் மைக்ரோ ஓவனுக்குள் பாம்பு இருந்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் வசித்து வரும் அம்பர் ஹெல்மின் வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது ஹெல்மின் கணவர் ராபர்ட், பீட்சாவை சூடாக்க மைக்ரோ ஓவனை ஆன் செய்துள்ளார். ஓவன் சூடான பிறகு பீட்சாவை உள்ளே வைக்க சென்றுள்ளார். எனினும், காலியான ஓவனிலிருந்து புகை வருவதை கண்ட அம்பர் ஹெல்ம், ஓவனுக்குள் சரிபார்த்துள்ளார்.

அப்போது, அதற்குள் பாம்பு ஒன்று கருகி இறந்து கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த ஹெல்ம் தனது 3 மற்றும் 1 வயதுடைய குழந்தைகளுடன் பா துகாப்பாக வெளியே சென்றுள்ளார்.

பாம்பை அப்புறப்படுத்திய ராபர்ட், வீட்டை முழுமையாக சோதனை செய்துள்ளார். அவர்கள் கடைசியாக ஓவனை கிறிதுமஸ் அன்று பயன்படுத்தியுள்ளனர்.

ஓவனுக்கு அடியில் இருக்கும் ஓட்டை வழியாக பாம்பு உள்ளே நுழைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், வீட்டிற்குள் பாம்பு எப்படி வந்தது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து வீட்டில் பாம்பு இல்லாததை உறுதிப்படுத்த உள்ளுர் நிறுவனம் அடுத்த வாரம் ஹெல்ம் வீட்டிற்கு வருகிறது.

ஹப்புத்தளை கோர சம்பவம் : விமானபடை வீரரை திருமணம் செய்ய காத்திருந்த பெண்ணின் நிலை!!

ஹப்புத்தளை கோர சம்பவம்

ஹப்புத்தளையில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில், இரண்டு மாதங்களில் திருமண பந்தத்தில் இணையவிருந்த வீரரும் உ யிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த லெப்ட்டினன்ட் கே.எம்.டீ.எல்.குலதுங்க என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உ யிரிழந்தவரின் சகோதரர், “கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே தம்பி விமானப் படையில் இணைந்துக் கொண்டார்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வீட்டிற்கு வந்தவர் சம்பவ தினமான நேற்று வீட்டிற்கு விடுமுறைக்காக வருவதாக கூறியிருந்தார். சம்பவம் இடம்பெறுவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் உரையாடினார்.

மார்ச் மாதம் திருமணம் செய்யவிருந்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அவர் க ண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய காத்திருந்த மணப்பெண் இந்த அனர்த்தம் காரணமாக அ திச்சியடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்னளர். நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உ யிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது!!

ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரது வீட்டில் தே டுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்படும் காணொளி முகபுத்தகத்தில் வெளியாகியுள்ளது.