வவுனியாவில் சிறுநீரக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரம்!!

சிறுநீரக பரிசோதனை

வவுனியா மாவட்ட சிறுநீரக நோய் தடுப்பு பிரிவினரால் இன்று (06.01.2020) வவுனியா நகரப்பகுதியில் நடமாடும் சிறுநீரக பரிசோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறுநீரகங்களை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் சிறுநீரக பரிசோதனை நடவடிக்கையானது, நாட்பட்ட சிறுநீரக நோய் வைத்தியர் பிரசன்னா மற்றும் வவுனியா பிராந்திய சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி குசான் ராஜகருண தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சிறுநீரக நோயுள்ளவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காணும் முகமாக வவுனியா நகரத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவிலுள்ள அரச திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் இரத்தம் பெற்று சிறுநீரக பரிசோதனை செய்யும் நடவடிக்கைள் இடம் பெற்றது.

நீண்டகால சிறுநீரக நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள், குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், குடும்பத்தில் யாராவது சிறுநீரக நோயினால் இறந்திருப்பின் இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையாகவே சிறு நீரக பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா செட்டிக்குளத்தில் வீதியை மறித்து மக்கள் ஆ ர்ப்பாட்டம்!!

வவுனியா செட்டிக்குளத்தில்..

வவுனியா, செட்டிக்குளத்தில் நல்ல நிலையில் உள்ள வீதியால் மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறுக் கோரி இன்று வீதியை மறித்து சிலர் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, செட்டிக்குளம், உலுக்குளம் வீதியில் வீதித்தடையை ஏற்படுத்தி, கிரவல் கொண்டு சென்ற டிப்பர் வாகனங்களை வழிமறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

செட்டிக்குளம், உலுக்குளம் வீதி 2014ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியின் ஊடாகவே மதவாச்சியில் இருந்து மன்னாருக்கான கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும், செட்டிக்குளத்தில் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள கிரவல் அகழ்வினால் அங்கிருந்து செல்லும் டிப்பர்களாலும் வீதி சேதமடைந்து வருவதாக ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த செட்டிக்குளம் பொலிஸ் அதிகாரிகள் குழு விடயங்களைக் கேட்டறிந்து கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

செட்டிகுளத்தில் இருந்து வவுனியாவிற்கு செல்லும் மூன்று வீதிகளில் பூவரசங்குளம் ஊடாக செல்லும் வீதி மற்றும் வீரபுரம் ஊடாக செல்லும் வீதிகள் மிக மோசமாக சேதடைந்துள்ளமையினால் தற்போது உலுக்குளம் வீதி மாத்திரமே நல்ல நிலையில் பாவனையில் உள்ளதுடன்,

செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ்கள் செல்லும் பிரதான வீதியாகவும் உலுக்குளம் வீதி மாத்திரமே காணப்படுகின்றது. எனவே, குறித் வீதியால் கிரவல் கொண்டு செல்வதை தடுக்குமாறு ஆ ர்ப்பாட்டக்காரர்களினால் செட்டிக்குளம் பிரதேச செயலாளருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனை செவிமடுத்த பிரதேச செயலாளர் இவ் வீதியினூடாக கிரவல் கொண்டு செல்லப்படுவதற்கான வீதி அனுமதியை தடை செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபரூடாக அனுராதபுரம் அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துவதாகவும்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இவ்வீதியூடாக கிரவல் கொண்டு செல்வதற்கான அனுமதியை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் செட்டிகுளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறித்த வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் வீதி ஒழுங்கை பின்பற்றாத வாகனங்கள் தொடர்பிலும் தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும்,

கிரவல் இன்றி வெற்று டிப்பர்கள் மாத்திரம் இவ்வீதியை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுட்டவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

இலங்கையில் 2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட உணவகம் : அமைச்சரிடம் முறைப்பாடு!!

2 அப்பத்திற்கு 700 ரூபா

அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள உணவகத்தில் 2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் 85 வயதான வயோதிப பெண் ஒருவர் சம்பலுடன் இரண்டு அப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதற்காக 700 ரூபா என குறிப்பிடப்பட்ட பற்றுச்சீட்டை உணவக உரிமையாளர் வழங்கியுள்ளார். அதே உணவகத்தில் பாற்சோறு இரண்டு துண்டும் மீன் கறியும் பெற்று கொண்ட மற்றுமொரு பெண் ஒருவரிடமும் 700 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் புபே முறையிலேயே உணவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூர பயணம் மேற்கொள்ளும் பேருந்துகள் உணவுக்காக நிறுத்தப்படும் உணவகங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அப்பம்

வவுனியாவில் புகையிரதத்தில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் மரணம்!!

வவுனியாவில்..

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோ துண்டு ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (05.01.2020) இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம், வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதான ராஜன் உ யிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த மரணம் விபத்தா அல்லது த ற்கொ லையா என்ற கோணத்தில் வவுனியா பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் ச டலமாக மீட்பு!!

கிணற்றிலிருந்து..

வவுனியா, மகாறம்பைகுளம் – புளியடி பகுதியில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி (வயது 85) என்ற மூதாட்டியே ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கா ணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தந்தை மரணம்!!

மகனை தேடியலைந்த தந்தை

கா ணாமலாக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிகோரி தொடர் போ ராட்டங்களில் பங்கெடுத்து வந்த தந்தை ஒருவர் ம ரணமடைந்துள்ளார். மன்னார், ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த 73 வயதுடைய சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்பவரே நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று உ யிரிழந்துள்ளார்.

இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் 2008ஆம் ஆண்டு ஓலைதொடுவாய் பகுதியில் வி சாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் கா ணாமலாக்கப்பட்டிருந்தார். அன்று முதல் தனது மகனை தே டி மகனின் மனைவியான தனது மருமகளுடன் இணைந்து தொடர்ந்து நீதிகோரிய போ ராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

கா ணாமல் ஆக்கப்பட்ட இவரது மகனின் மனைவி ஜெயக்குமாரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டு வருகின்றார்.

கணவர் கொடுத்த கஷ்ட்டம் : மேடையில் கதறி அழுத சாயா சிங்!!

சாயா சிங்

2000 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முன்னுடி’ (Munnudi) என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமான சாயா சிங், 2003 ஆம் ஆண்டு தனுஷின் ‘திருடா திருடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர், ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட செய்தார்.

2018 ஆம் ஆண்டு சீரியல் மற்றும் சினிமா நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சாயா சிங்கிற்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த சாயா சிங், குழந்தை வளர்ந்துவிட்டதால், மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

சீரியல் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சாயா சிங், கடந்த ஆண்டு விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சி குடும்ப விழா என்ற தலைப்பில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களி சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதன் இரண்டாம் பகுதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதில், கிருஷ்ணாவும், சாயா சிங்கும் விருது பெறுகிறார்கள். அப்போது, பேசிய கிருஷ்ணா, தான் தனது மனைவிக்கு ரொம்பவே கஷ்ட்டம் கொடுத்திருக்கிறேன், நிறைய முறை அழ கூட வைத்திருக்கிறேன். ஆனால், அனைத்தையும் பொருத்துக் கொண்டு அவர் என் முன்னேற்றத்திற்காக துணை நின்றார், என்று கூறுகிறார்.

உடனே சாயா சிங், வாழ்க்கையில் எனக்கு நல்ல துணை அமைய வேண்டும் என்று நினைத்தேன். நான் ந் இனைத்தது போலவே எனக்கு கிருஷ்ணா சிறந்த வாழ்க்கை துணையாக அமைந்திருக்கிறார், என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். அவர் அழுவதை பார்த்தவர்கள் அப்படியே திகைத்து போய் விட்டார்கள்.

நடிகை சாய சிங்கின் கணவர் கிருஷ்ணா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் பிரகாஷ் என்ற வேடத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி!!(வைரலாகும் காணொளி)

சுவாமி தரிசனம் செய்யும் எலி

பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

விநாயகரின் வாகனமாக உள்ளது எலி. இந்த எலி ஒன்று சாமியை தன் இருகரம் கூப்பி வழிபடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த அந்த காட்சியில் எலி ஒன்று கடவுளை நோக்கி மனிதர்களைப் போலவே கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்கின்றது.

இது குறித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது அதன் காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து ரசியுங்கள்..

வெறும் 23 வயதில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி இளைஞன்!!

கி ல்லாடி இளைஞன்

உன்னை பார்த்துட்டே இருக்கணும்போல இருக்கு.. நீ ரொம்ப அழகா இருக்கே..’ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் முதல் பேச்சே இப்படித்தான் ஆரம்பிக்கும்.. வயசு வெறும் 23தான்.. ஆனால் மொத்தம் 8 பெண்களை கல்யாணம் செய்துள்ளார். 9வது கல்யாணத்துக்கு முயற்சி செய்யும்போதுதான், நிஜமாகவே மாமியார் வீட்டில் தூ க்கி கொண்டுபோய் வைத்துவிட்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவரின் மகன்தான் சந்தோஷ். 23 வயதான இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

கடந்த 5 மாசத்திற்கு முன்னாடி கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற 20 வயது பெண்ணை காதலித்துள்ளார். வீட்டுக்கு தெரியாமல் கல்யாணமும் செய்து, திருப்பூரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

ஆனால், கொஞ்ச நாளிலேயே சந்தோஷை கா ணவில்லை.. அதனால் சத்யா, போலீஸ் வரை சென்று பு கார் தந்தார். அதன்படி போலீசாரும் தே டிவந்த நிலையில், சசிகலா என்ற 19 வயது பெண்ணை காதலித்து, கல்யாணமும் செய்து, அதே திருப்பூர் பகுதியில் வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்த விஷயம் சத்யாவுக்கு தெரியவந்தது.

திரும்பவும் சத்யா, ஒரத்தநாடு ஸ்டேஷனில் பு கார் கொடுத்தார். இதையடுத்துதான் சந்தோஷை போலீசார் கை து செய்து விசாரித்தனர். அப்போது, சந்தோஷ் இதுவரை 8 பெண்களை ஏ மாற்றியதுடன், கல்யாணமும் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

எல்லா இளம் பெண்களையும் ஒரே பாணியில்தான் பேசிக் க விழ்த்துள்ளார். ‘நீங்க அழகா இருக்கீங்க’ என்றதுமே அந்த பெண்களின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு வருமாம்.. பெண்கள் சோ கமாக இருந்தால், ஆதரவு தருவது போலவும், பாசமாக இருப்பது போலவும் டயலாக்கை பேசி, தன் பக்கம் கவிழ்த்து விடுவாராம் சந்தோஷ்.

இந்த ந யவஞ்சக பேச்சில்தான் பெண்கள் ஏமாந்துள்ளனர். திரு ட்டு தாலி கட்டி, தி ருட்டுத்தனமாக குடித்தனமும் நடத்தி, அவர்களிடம் பணம், நகையும் ப றித்து கொண்டு எஸ்.ஆகி விடுவாராம். இப்போது 9வதாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய சந்தோஷ் தீ விர முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதற்குள் பொலிஸாரின் பி டியில் சி க்கிக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் கா ணாமல்போன நபர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு, கல்லடி – திருச்செந்தூரில் கா ணாமல்போன நபர் நேற்று மாலை கல்லடி கடற்கரை பகுதியிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் 6ஆம் குறுக்கினை சேர்ந்த ஜுலியன் யூட் (32 வயது) என்பவர் வீட்டிலிருந்து சென்ற நிலையில் கா ணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவரை தேடிவந்த உறவினர்கள் நேற்று முன்தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே நேற்று மாலை அவரின் கல்லடி, திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் ஜுலியன் யூட்டின் ம ரணம் தொடர்பில் அவரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முறிகண்டியில் விபத்து : 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே பலி!!

முறிகண்டியில் விபத்து..

முல்லைதீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே ப லியாகியுள்ளார்.

ஏ9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து சம்பவம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று (05.01.2020) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்ற இளைஞரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடுவானில் கழன்று விழுந்த சக்கரம் : நடுங்கிய பயணிகளை காப்பாற்றி ஹீரோவான விமானி!!

ஹீரோவான விமானி

கனடாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மாண்ட்ரீலில் இருந்து சாகுவேனுக்கு பறக்கும் ஏர் கனடா விமானத்திலிருந்து சக்கரம் கழன்றி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

49 பயணிகள் மற்றும் மூன்று விமானக்குழு உறுப்பினர்களைக் கொண்ட டாஷ் 8-300 விமானம், மாண்ட்ரீல்-ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சக்கரம் கழன்று விழுந்த பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து பறந்த விமானி, பின்னர் வெற்றிகரமாக ட்ரூடோ விமான நிலையத்திலே விமானத்தை தரையிறக்கினர்.

இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க எங்கள் விமானிகள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் எங்கள் நிலையான நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளனர் என்று ஏர் கனடா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் காயமடையவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக அவசர வாகனங்கள் அழைக்கப்பட்டன.

மாண்ட்ரீல் பராமரிப்பு ஊழியர்கள், விமானத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டு பிரசினையின் காரணத்தை கண்டறிந்து மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மற்றொரு விமானம், மற்றொரு குழுவினருடன், பயணிகள் திட்டமிட்டபடி, சாகுனேயில் உள்ள பாகோட்வில் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர் என விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

பெண் பேச மறுத்ததால்..

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் புதுமாப்பிள்ளை ஒருவர் வீடியோ காலில் நேரலையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையை சேர்ந்தவர் சுரேஷ் (31), வழக்கறிஞர். இவர் புதுவை சட்டக்கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த கடலூரை சேர்ந்த பெண்ணை காதலித்தார். அதை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதம் பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 27ம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அந்த பெண் திடீரென்று சுரேசுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அ திர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேச முயன்ற அவரை அந்த பெண் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் சம்பவத்தன்று இரவு அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் வீடியோ அழைப்பில் பேசினார். அப்போது நீ என்னுடன் பேச மறுத்ததால் நான் த ற்கொ லை செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிவித்து நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூ க்கு மாட்டினார். அதன்பிறகு அலைப்பேசி துண்டிக்கப்பட்டது.

ஏதோ விளையாட்டுக்குத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என்று அந்த பெண் கருதினார். இருப்பினும் ப தற்றம் அடைந்த அவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தி என்பவரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் சுரேஷ் வீட்டுக்கு சென்று, அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும், திறக்கப்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சுரேஷ் தூ க்கில் தொ ங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அ திர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே இற ந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே கடலூரில் இருந்து அந்த பெண்ணும் புதுவைக்கு வந்தார். அவரிடம் சுரேசின் ம ரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த பழைய துணியால் பறிபோன உயிர்!!

கர்ப்பிணிப் பெண்

பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் பழைய துணியை வைத்து சிசேரியன் செய்ததால் உ யிரிழந்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் அளித்துள்ளார்.

விருதாச்சலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி பிரியா. கர்ப்பிணியாக இருந்த பிரியா தலைப்பிரசவத்திற்காக கடந்த 27ம் திகதியன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவருக்கு வயிற்று வீக்கம் ஏற்பட்டு உ டல்நிலை மோ சடமைந்துள்ளது. இதனையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி உ யிரிழந்ததை அடுத்து அவருடைய உறவினர்கள் அரசு மருத்துவமனையை மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அ றுவை சி கிச்சையின் போது மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக அவருடைய கணவர் கு ற்றம் சு மத்தியுள்ளார். வயிற்றுவலியால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியாவின் வயிற்றில் பழைய துணி இருந்ததாக ராஜ்குமார் கூறியுள்ளார்.

வேஷ்டி-சேலையில் அசத்திய வெளிநாட்டினர் : அசந்து போன கிராமத்தினர்!!

அசத்திய வெளிநாட்டினர்

வெளிநாட்டில் இருந்த வந்த சுற்றுலாப்பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தின் சென்னையில் இருக்கும் கிளாசிக் ரன் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினர் பங்குபெறும் ஆட்டோ சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு கடந்த 12 வருடமாக ஏற்பாடு செய்து வருகிறது.

அதே போன்று இந்த ஆண்டும், ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28-ஆம் திகதி சென்னையில் துவங்கியது.

இதில், இத்தாலி, நியூசிலாந்து, ஹங்கேரி, சீனா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கலந்துகொண்டு ஆட்டோக்களில் 6 அணியாகப் பிரிந்து 6 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடி வந்த அவர்கள் அங்கிருக்கும் பிரசிதி பெற்ற பனிமய அன்னை பேராலயம், முத்துநகர் கடற்கரை, உப்பளங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரம் கிராமத்திலுள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அழைத்து வரப்பட்டனர்.

அங்கு அந்த 6 அணியினருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி, சட்டை கொடுக்கப்பட்டது.

அதை அணிந்து கொண்ட அவர்கள், அங்கு வந்து பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, அதே போன்று பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு குலவைச் சத்தமும் எழுப்பி அசத்தினர்.

அதன் பின் பொங்கல் வைத்து முடித்த பின், இந்த 6 அணியினரில் சிறப்பாக பொங்கல் வைத்த முதல் மூன்று அணி தெரிவு செய்யப்பட்டு, பரிசு கொடுக்கப்பட்டது. முதல் பரிசாக செவ்வாழைக் குலை, இரண்டாம் பரிசாக மலை ஏத்தன், மூன்றாம் பரிசாக நாட்டு வாழை ஆகியவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காதலனை நம்பி சென்ற இளம் பெண் குற்று யிராக கிடந்த ப ரிதாபம்!!

இளம் பெண்

தமிழகத்தில் காதலனை நம்பி வீட்டை விட்டு வெ ளியேறி சென்ற பெண் ஒருவர்  உடல் மு ழுவதும் சூ டு போ ட்ட நிலையில் மீ ட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள செட்டியாபத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – வசந்தா. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார்.

கலைச்செல்வியின் தந்தை சக்திவேல் ம துவுக்கு அ டிமையாகி அடிக்கடி வீ தியில் வி ழுந்து கிடந்ததால், குழந்தைகளை கா ப்பாற்ற தாய் வசந்தா திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும், கலைச்செல்வி தந்தையுடன் செட்டியாபத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்போது கலைச்செல்வி உடன்குடி பகுதியில் இருக்கும் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்ற போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கலைச்செல்வி தன்னுடைய தாயை பார்க்க வேண்டிய விரும்பியதால், ஆ சைவார் த்தை கூறிய அய்யப்பன் அவரை திருப்பூருக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

இதனால் கலைச்செல்வி திருப்பூருக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிகாலை செட்டியாபத்து பகுதியில் கு ற்று யிரும் கு லைஉ யிருமாக கலைச்செல்வி வீதியில் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தார்.

அவரது உ டலில் சி கரெட் சூ ட்டுக் கா யங்களும், மு கம் மற் றும் உ டலில் அ டித்து து ன்புறு த்திய கா யங்களைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீ ட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் அவரிடம் பொலிசார் வி சாரித்தபோது, தன்னை திருப்பூருக்கு அழைத்துசென்ற அய்யப்பன் இரு தினங்கள் நன்றாக பழகி விட்டு ஒரு அ றையில் அ டைத்து வை த்து சூ டுவைத் தும், அ டித்து உ தைத்தும் சி த்ரவ தை செய்தார். தலைமுடியை வெ ட்டி து ன்புறு த்தினார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து த ப்பி வீட்டிற்கு ப சியும் ப ட்டினியுமாக வீட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏன் அப்படி அ டித்து து ன்புறு த்தினார் என்பது குறித்து அவரால் கூற முடியவில்லை.

இதனால் தொடர் சி கிச்சைக்கு பின்னர் முழு விசாரணை நடத்தினால் மட்டுமே அவருக்கு நேர்ந்த கொ டுமைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்பப்படுகிறது.