பாடசாலை மா ணவிகள் 4 பேருக்கு நடந்த கொ டுமை : மருத்துவர் கைது!!

ம ருத்துவருக்கு நே ர்ந்த க தி

முதலாம் இணைப்பு : பா டசாலை மா ணவிகள் நா ன்கு பே ரை பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உ ட்படுத்திய கு ற்றச்சா ட்டில் அம்பாறை – உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் ம ருத்துவரை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

உகண பிரதேசத்தில் உள்ள பா டசாலை ஒன்றின் நா ன்கு மா ணவிகள் இன்று நடைபெறவுள்ள ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கொள்வதற்காக ம ருத்துவச் சா ன்றிதழ்களை பெற வை த்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது குறித்த ம ருத்துவர், ம ருத்துவப் ப ரிசோ தனை செய்யும் போது பா லியல் து ஷ்பிர யோகம் செய்தார் என கிடைத்த தகவலுக்கு அமைய பொ லிஸார் அவரை கை து செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மா ணவிகளின் மு றைப்பாடும் பொ லிஸாருக்கு கிடைத்துள்ளது. 14, 17 மற்றும் 18 வ யதான மா ணவிகளே இந்த மு றைப் பாட்டை செய்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு : நா ன்கு பா டசாலை மா ணவிகளை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச்சாட்டின் பே ரில் கைது செய்யப்பட்ட ம ருத்துவரை வி ளக்கம றியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்று உ த்தரவிட்டுள்ளது.

அம்பாறை நீதிமன்ற நீதிவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று ம ருத்துவரை ஆ ஜர்படுத்தியபோதே எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்குமாறு உ த்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தை சுற்றி பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியாவில் விபத்து : பெண் ஒருவர் படுகாயம்!!

விபத்து

வவுனியாவில் இன்று (07.01.2020) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்த விபத்து வவுனியா ஏ9 வீதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!!

செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில்..

வவுனியா – செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இன்று (07.01.2020) அதிகாலை இளைஞர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் ச டலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த பா.நிரோஜன் வயது 35 என்ற இளைஞரே உ யிரிழந்துள்ளதுடன் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உ யிரிழந்த நபரின் ச டலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்தநபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் மோதிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கழுத்து அ றுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்: அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மா ணவியை க ழுத்த றுத்து கொ லை செய்த சம்பவத்தில், இளைஞருடனான பிரச்னைகளை 8 மாதங்களுக்கு முன்னர் பேசி முடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொ லை செய்யப்பட்ட மாணவி அஷிகாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏபரல் மாதம் வெள்ளறட பொலிசாரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அஷிகாவுக்கு அனு என்பவர் தொடர்ந்து தொ ல்லை தருவதாக கூறியே தந்தை புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் முன்னிலையில், இனி அஷிகா தொடர்பில் தமது தலையீடு இருக்காது என அனு உறுதி அளித்திருந்தார்.

ஆனால் இதன் பின்னரும் அஷிகாவும் அனுவுக்கும் இடையே உறவு தொடர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காரக்கோணம் பகுதியை சேர்ந்த 19 வயதான அஷிகா அரசு கல்லூரி ஒன்றில் பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் அனு ஆட்டோ சாரதியாக உள்ளார். திங்களன்று பகல் சுமார் 11.30 மணியளவில் நண்பர் ஒருவரின் பைக்கில் அனு அஷிகாவின் குடியிருப்புக்கு சென்று இந்த ப டுகொ லையை செய்துள்ளார்.

குடியிருப்புக்குள் பாய்ந்து சென்ற அனு, கதவை மூடிவிட்டு மறைத்து வைத்திருந்த சோ டா போ த்தலால் அஷிகாவின் க ழுத்தில் கு த்தியுள்ளார். இதனையடுத்து தாமும் க ழுத்தறு த்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். அஷிகாவின் உறவினர்கள் மட்டுமே அப்போது குடியிருப்பில் இருந்துள்ளனர்.

அஷிகாவின் தாயாரும் தந்தையும் வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்தனர். குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்று அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் அஷிகாவையும் அனுவையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் அஷிகா ம ரணமடைந்துள்ளார். அபாய கட்டத்தில் இருந்த அனுவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்தும் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது உடற்கூராய்வுக்கு பின்னர் இருவரது ச டலங்களையும் உறவினர்களுக்கு அளிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மனைவியின் கண் முன்னே கணவனை கா வு வாங்கிய சுறா : செருப்பு மட்டுமே மிஞ்சிய சோ கம்!!

சுறா

அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்தச் சென்ற கணவனை, மனைவியின் கண் முன்னேயே சுறா ஒன்று க வ்வி இ ழுத்துச் சென்ற சோ கம் நடைபெற்றுள்ளது. நேற்று அவுஸ்திரேலியாவின் கல் தீவு பகுதிக்கு Gary Johnson என்பவர் தன் மனைவி Karen Milliganஉடன் படகில் சென்றுள்ளார்.

ஆழ் கடல் நீச்சலில் மிகுந்த விருப்பமும், கடல் மீது தீரா காதலும் கொண்ட Johnson கடலில் குதித்து நீந்த, அவரது மனைவி படகில் இருந்தவண்ணம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

மதியம் சுமார் 1.30 மணியளவில் சுறா ஒன்று அவரைக் க வ்வி இ ழுத்துச் சென்றுள்ளது. கண் முன்னே கணவனை சுறா இழுத்துச் செல்வதைக் கண்ட Karen, ப யந்து அ லறி, ரேடியோவில் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளார்.

விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினருக்கு Johnson நீந்துவதற்கு பயன்படுத்தும் செருப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கணவனின் கோ ரச் சா வை கண்டு தி கிலில் உறைந்து போயிருந்த Karenஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவருகிறார்கள். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தொடர்ந்து Johnsonஇன் உடலை தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே, 2017ஆம் ஆண்டு Laeticia Brouwer என்ற 17 வயது பெண் Wylie Bay பகுதியில் சுறாவால் கொ ல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒருவர் சுறாவால் கொ ல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்!!

இரட்டைக் குழந்தைகள்

அமெரிக்காவில் 30 நிமிட இடைவெளியில் பிறந்ததால், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஒரு வருட இடைவெளிக்கு பிறகு பிறந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இண்டியானாவில் Dawn Gilliam, Jason Tello தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

Joslyn Grace Guilen Tello என்ற அவர்களது பெண் குழந்தை 2019ஆம் ஆண்டு 31ஆம் திகதி நள்ளிரவு 11.37க்கு பிறந்து 2019ஆம் ஆண்டில் கடைசியாக பிறந்த குழந்தை என்ற பெயரை பெற்றாள்.

ஆனால், அவளது தம்பி Jaxon DeWayne Mills Tello, அக்கா பிறந்து 30 நிமிடம் கழித்துதான் பிறந்தான்.
அதாவது 2020ஆம் ஆண்டு அதிகாலை 12.07க்கு அவன் பிறந்தான். அவனும் 2020ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தையாக வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டான்.

ஆக, அக்காவும் தம்பியும் ஒரு வருட இடைவெளியில் பிறந்ததோடு ஆண்டின் கடைசி குழந்தை என்ற பெயரை அக்காவும் ஆண்டின் முதல் குழந்தை என்ற பெயரை தம்பியும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் கிடப்பில்!!

மாணவி ஹரிஸ்ணவி

வவுனியா, உக்குளாங்குளத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பா லியல் வ ன்பு ணர்வின் பின்னர் ப டுகொ லை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கெங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் வவுனியா திறந்த நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

அந்தவகையில், நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சட்டமா அதிபரின் மருத்துவச்சான்று அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கை வரும் வரையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நீதவான் நேற்று மன்றில் அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பட்ட பின்னர் வழக்கு தவணை திகதியிடப்பட்டு உறவினருக்கு அறிவிப்பதாகவும்,

அதுவரையில் வழக்கு விசாரணைகளை கிடப்பில் போடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பாக மன்றில் ஆஜராகிய மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களின் வருடாந்த கண்காட்சி!!

யாழ். பல்கலைக்கழக..

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR-2020) நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று காலை 08.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில், யாழ். பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் (Medical Check-up and Dental Care),

இரத்ததான முகாம், Battle ground Competition (For University of Jaffna, Kilinochchi Premises University Students) போன்றவற்றுடன், பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

நேற்று ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த கண்காட்சி நேற்றும் , இன்றும் காலை 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கண்காட்சியில் குறைந்த செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.

ஸ்ரீலங்கன் விமானத்தில் தண்ணீர் போத்தல் பயன்படுத்த தடை!!

ஸ்ரீலங்கன் விமானத்தில்..

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் சிறிய நீர் போத்தல் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவனம் செலுத்தியுள்ளார். டுபாய் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்படும் தண்ணீர் போத்தல்களை உடனடியாக த டை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தண்ணீர் போத்தல் இலங்கையில் தயாரிக்கப்படவில்லை. எனினும் நீருடன் சேர்ந்தே டுபாய் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 3 மில்லியன் தண்ணீர் போத்தல்களை ஸ்ரீலங்கன் நிறுவனம் பெற்றுக் கொள்கின்றது. ஒரு போத்தல் தண்ணீரின் விலை 7.80 அமெரிக்க டொலராகும்.

வருடத்திற்கு இரண்டு முறை 3 மில்லியன் தண்ணீர் போத்தல்களை ஸ்ரீலங்கன் நிறுவனம் கொள்வனவு செய்கிறது. புதிய அரசாங்கம் சுற்று சூழலுக்கு நெருக்கமான கொள்கையை பிரகடனப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பயன்பாட்டை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உள்ளூர் நிறுவனத்திடம் பொருத்தமான சிறிய போத்தல் மற்றும் நீரை கொள்வனவு செய்து பயணிகளிடம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் நிறுவனம் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களிலும் உள்ளூர் உற்பத்திற்கு முதன்மை இடத்தை வழங்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த பிரித்தானிய பெண்!!

பொலிஸ் அதிகாரியின்..

காலி மாவட்டத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையைக் க டித்த கு ற்றச்சாட்டில் பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்பாவன பிரதேசத்தில் தற்காலிகமாக விடுதி ஒன்றில் குறித்த பிரித்தானியப் பெண் தனது கணவனுடன் தங்கியிருந்த போது பொலிஸாரினால் சோ தனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணிடமும் அவரது கணவனிடமும் கடவுச்சீட்டு கோரப்பட்டது. இந்நிலையில் பிரித்தானிய பெண், பொலிஸ் பரிசோதகரின் கையை க டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரஜைகளான இவர்கள் கடந்த 10 வருடங்களாக இலங்கைக்கு வந்து செல்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரினதும் விசா கடந்த மாதம் 6ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ச ந்தேக நபரான பெண்ணுடன் அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கராப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பிரித்தானிய பெண் க டித்தமையினால் காயங்களுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் விபத்து : இராணுவ வீரர் பலி!!

ஏ9 வீதியில் விபத்து..

வவுனியா ஏ9 வீதி ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஓன்று ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற 41 வயதுடைய இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே ப லியாகியுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் 8 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம்!!

கோர விபத்தில்..

புதிய இணைப்பு : பதுளை, பசறை பகுதியில் இன்று(06.01.2020) மாலை ஏற்பட்ட விபத்தில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள் படுகாய மடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 20இற்கும் மேற்பட்டோர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உ யிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : பதுளை, பசறை பகுதியில் சற்று முன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் ஏழு பேர் உ யிரிழந்ததுடன் மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

பதுளை பசறை மடுல்சீமை பிரதான சாலையில் 6 வது மைல் போஸ்டில் பயணிகள் பேருந்து ஒரு செங்குத்துப்பாதையில் விழுந்ததிலேயே இவ்வாறான உ யிர்ச்சேத ங்கள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

500 அடி பள்ளத்தில் பேருந்து பாய்ந்ததால் உ யிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் மா ணவிகளுக்கு நடந்த கொ டுமை : க தறி அ ழுத ப ரிதாபம்!!

கல்லூரி மா ணவிகள்

இந்தியாவில் ஜேஎன்யூ மா ணவர்கள் மீ து வ ன்மு றை ந டத்திய நிலையில், பெ ண்கள் வி டுதியிலும் ம ர்ம நபர்களால் வ ன்முறை நடத்தப்பட்டதால், மா ணவிகள் தங்களை வி ட்டுவிடும் படி கெ ஞ்சிய ச ம்பவம் வே தனையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக விடுதியில் க ட்டண உ யர்வுக்கு எ திர்ப்பு தெரிவித்து போ ராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது நேற்று ம ர்ம ந பர்கள் சிலர் பு குந்து வ ன்மு யை ந டத்தினர்.

அந்த வகையில் மத்திய அ ரசிற்கு டெல்லி ஜேஎன்யூ மா ணவர்கள் போ ராட்டம் ந டத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் ம ர்ம ந பர்கள் பு குந்து மா ணவர்கள் மீ து கொ லை வெ றி வ ன்முறை யில் ஈடுபட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மா ணவ பிரிவான ஏபிவிபி மூலம் இந்த சம்பவம் ந டத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட மு கமூடி அ ணிந்த கு ம்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பு குந்து மா ணவர்கள், மா ணவிகள் மற்றும் ஆ சிரியர்களையும் ச ரமாரியாக அ டித்து ள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது மு கமூடி அ ணிந்த கு ம்பல், பெ ண்கள் வி டுதிக்குள் நு ழைந்து வ ன்மு றையில் ஈ டுபட்டுள்ளனர். அதில் சில பெ ண்களும் சேர்ந்து இந்த வ ன்மு றையை நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக விடுதிக்குள் இருந்த பெ ண்கள், பா துகா ப்பிற்காக கதவுகளை சாத்திக் கொண்டு, உள்ளேயே இரவு முழுக்க இருந்துள்ளனர். இந்த கு ம்பல் முதலில் வந்த போது, அங்கிருந்த பெ ண்கள் அவர்களை த டுத்துள்ளனர்.

அதை கேட்கவில்லை என்றதும், அவர்களிடம் வேண்டாம் எ ங்களை வி ட்டுவி டுங்கள் என்று கெ ஞ்சியுள்ளனர். இருப்பினும், அதையும் கேட்காமல் தொடர்ந்து மா ணவர்கள் மீ து அந்த கும்பல் வ ன்முறை யை நட த்தியுள்ளது.

7 வருடங்களுக்கு முன் ச டலமாக வீடு வந்த பெண் : தற்போது வெளியான வீடியோவால் அ திர்ச்சியில் பெற்றோர்!!

7 வருடங்களுக்கு முன்..

சவுதியில் ஏழு வருடங்களுக்கு முன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண் தற்போது உ யிருடன் இருப்பதாக அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி யாகப்பா – பவுலின் மார்த்தாள் தம்பதியின் மகள் இமாகுலேட் (27). இவரது கணவர் டேவிட் நடத்தி வந்த நிறுவனத்தில் ந ஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, 2012ம் ஆண்டு கணினி ஆபரேட்டர் வேலைக்காக இமாகுலேட் சவுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்றதும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் ம னமு டைந்த அவர் 2013ம் ஆண்டு மே 10ம் திகதியன்று தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக அழைப்பு வந்துள்ளது.

மகளின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் அந்தோணி அளித்த மனுவின் பேரில், உ டலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் அவருடைய உடல் 2014ம் ஆண்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதன்பிறகு பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உ டல் பெற்றோரிடம் ஒ ப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், 23 பெண்கள் சவுதியில் சி க்கி சி த்ரவ தை க்கு உள்ளாவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதில் தங்களுடைய மகள் இமாகுலேட் இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்த பெற்றோர், மகளையும் மற்றவர்களையும் மீ ட்டு தருமாறு பிரதமருக்கும், வெளியுறவுத்துறைக்கும் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவருடைய பெற்றோர் கூறுகையில், திருச்சிக்கு வந்தபோதே அது எங்களுடைய மகளின் உ டல் இல்லை என்று கூறினோம். ஆனால் பி ரேத ப ரிசோதனையில் எங்களுடைய மகள் என்று கூறியதால் ஏற்றுக்கொண்டோம் என கூறியுள்ளனர்.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களிற்கு வருகிறது மாற்று நடவடிக்கை!!

சாரதி அனுமதிப் பத்திரம்

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் போது வைத்திய அறிக்கையை நெருக்கடியின்றி பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில் குறித்த வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழை போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளும் போது பல்வேறு நெருக்கடிக்களை பொது மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு போக்குவரத்து முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலானோர் கொழும்புக்கு அப்பால் வெளி இடங்களில் இருந்து வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக இந்த பிரதேச அலுவலகங்கள் மூன்றை புதிதாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, பண்டாரவளை, நுவரெலிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வசதிக்காக அலுவலகம் ஒன்றும், அவிசாவளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போன்று வட மத்திய மாகாண மக்களுக்காக துணை அலுவலகம் ஒன்றும் தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேபோன்று வடமேல், கம்பஹா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுக்காக நீர்கொழும்பில் துணை அலுவலகம் ஒன்றையும் அமைப்பதற்கு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அமரவீர இந்த அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகளை துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேவேளை வாகன அனுமதி பத்திரத்தை அச்சிட்டு வெளியிடக்கூடிய வசதிகளை கொண்ட அலுவலகம் ஒன்றை அநுராதபுரத்தில் அமைப்பதற்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகை பணத்தையும் காலத்தையும் செலவிட்டு வெளிமாவட்ட மக்கள் கொழும்புக்கு வருவதை இதன் மூலம் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து!!

கோர விபத்து

பசரை -மடுல்சீம பிரதான வீதியின் 6ஆம் மைல்கள் பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் ப லியாகியுள்ளதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் ப லியாகியுள்ளதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் பசரை ஆகிய வைத்தியசாலைகளில் சேரக்கப்பட்டுள்ளனர்.