நாட்டின் உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமகால அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமானதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் தினங்களில் மேலும் குறைவடையும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்தார்.
வற் வரி மறுசீரமைப்பு மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனூடாக நாட்டுக்கு பல வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப் பெறும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வருட காலத்தில் வவுனியா மாவட்டத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பில் 833 முறைப்பாடுகள் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு சபையின் தவிசாளர் இ.நவரட்ணம் தலைமையில் குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் 833 காணிப்பிணக்குகள் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 132 பிணக்குகள் இரு பகுதியினரின் சம்மத்துடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரேதேச செயலக பிரிவுக்குட்பட்ட 333 பிணக்குகளுக்கு தீர்வு காணப்பதற்கு அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கும் போது நான் கவலையடைகிறேன். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் 2020 ஆம் ஆண்டில் அவ்வாறான நிலமைகள் இருக்காது எனவும் தெரிவித்தார்.
விசேட காணி மத்தியஸ்தர் சபையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் வவுனியா வடக்கு பிதேச செயலாளர் க.பரந்தாமன், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன்,
வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, மத்தியஸ்தர் சபைகளின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.திருநாவுக்கரசு, மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப்பணிப்பாளர் இ.விஜயகுமார்,
வளவள திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி கே.நாணயக்கார, மத்தியஸ்தர் சபைகளின் பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா, விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினத்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகே கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலரான செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் அஸ்வினி (29). இவருக்கும் தென்காசி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதியினருக்கு அனன்யா(5), சிவஆறுமுகவேல் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 9 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி கோ பித்துக்கொண்டு தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க, இருவீட்டாரும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு, அஸ்வினி தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.
அதிகாலை நேரத்தில் குழந்தைகள் அழுதுகொண்டிருக்கும் ச த்தம் கேட்டு அவருடைய பெற்றோர் அறையை திறந்துள்ளனர். அப்போது ம கள் தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அவரது உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவர் எழுதிவைத்திருத்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், தன்னுடைய த ற்கொ லைக்கு மாமியார் சிவகாமிசுந்தரி, மாமனார் சிவசக்திவேலு மற்றும் கணவரின் தங்கை மகேஸ்வரி ஆகியோர் காரணம் என குறிப்பிட்டிருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரி யும் தமிழ்ப் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் (21.12.2019) கைதான குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் நேற்றையதினம் (21.12.2019) மதியம் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் குறித்த வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பஜார் வீதியில் பதற்றநிலை காணப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நி லையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் (22.12.2019) மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகி சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தனர்.
இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜெபநேசராணி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ரமணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பல ட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெண்தரப்பில் ஆஜராகுமாறும் கோரியிருந்த போதிலும் சில சட்டத்தரணிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் பாம்பை வைத்து பெண் ஒருவர் சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக ப ரவிய நிலையில் அப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வாலாஜாபாத்தில் பாம்பை க ழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு வட பத்திரகாளியம்மன் அருள் வாக்கு சொல்லி வந்தார் பெண் சாமியார் கபில அம்மையார். நித்தியானந்தா பாணியில் கையில் சூலத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் கபிலா, கோவிலின் கும்பாபிசேகத்தின் போது 2 பம்புகளை வாடகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மட்டும் அருள்வாக்கு சொல்லி வரும் அவரிடம் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அருள் வாக்கு கேட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்துள்ளார்.
பாம்புகளை து ன்பு றுத்தி அதனை கா ட்சிகளாக ப டமாக்கியதோடு, அதனை யுடியூப்பிலும் இரு தினங்களுக்கு முன்னதாக ப திவேற்றம் செய்ததாக கு ற்றச்சா ட்டு எழுந்தது.
இதையடுத்து, பா ம்புகளை ச ட்ட வி ரோதமாக அடைத்து வைத்து சி த்ரவ தை செய்ததோடு, பாம்புகளை வைத்து வி த்தை காட்டியது கு ற்றம் என்பதால் கபிலாவிடம் வனத்துறையினர் விளக்கம் கேட்டனர்.
அதற்கு அம்மன் சொன்னதால் தான் பாம்புகளுக்கு பூஜை செய்ததாகவும், அம்மன் அருள் வந்ததால் தான் பாம்பு தனது க ழுத்தில் சுற்றப்பட்டதாகவும் கபிலா புதுமையான விளக்கம் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து வன விலங்கு பா துகாப்பு ச ட்டத்தின் கீழ் பெண் சாமியார் கபிலாவுக்கு எ திராக வ ழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
வேலூரில் அ ழுகிய நிலையில் சி றுமியின் உ டல் மீ ட்கப்பட்ட சம்பவத்தில் அவருடைய காதலன் கை து செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்த சரவணன் என்பவரின் 17 வயது மகள் நிவேதா தனியார் மருத்துவமனை கேண்டீனில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 14ம் திகதியன்று வேலைக்கு சென்ற நிவேதா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் ப தறிப்போன அவருடைய பெற்றோர் பல இடங்களில் தே டிப்பார்த்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்ட பொலிஸார், 18ம் தேதி அன்று கல்குவாரி பகுதியில் உள்ள கு ட்டையில் இருந்து, அ ழுகிய நிலையில் நிவேதாவின் உ டலை மீ ட்டனர். அவரது கையில் பறவையின் சிறகு பச்சை குத்தப்பட்டிருப்பதை வைத்து பொலிஸார் உறுதி செய்தனர்.
இதனையடுத்து அவருடைய செல்போன் தரவுகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். அதில், ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் (23) என்பவருக்கு கடைசியாக போன் சென்றிருப்பது தெரியவந்தது.
ச ந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து பொலிஸார் வி சாரணை மேற்கொண்ட போது, கொ லை கு ற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் நிவேதாவும் 2 மாதமாக காதலித்து வந்தோம். தினமும் ஆட்டோவில் அழைத்து செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவர் திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை வ ற்புறுத்தினார்.
ஆனால் அவருக்கு வேறு சில ஆண்களுடனும் பழக்கம் இருப்பதால் திருமணத்திற்கு நான் ம றுப்பு தெரிவித்தேன். சம்பவத்தன்று நிவேதாவை மலைப்பகுதிக்கு அழைத்து சென்றிருந்தேன். அப்பொழுதும் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் என்னை வ ற்புறுத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை மலை யிலிருந்து கீழே த ள்ளிவிட்டு கொ லை செய்தேன்.
பின்னர் என்னுடைய நண்பன் நவீன் குமாருக்கு (23) போன் செய்து உதவிக்கு அழைத்தேன். நிவேதாவின் செல்போனை குட்டையில் வீசி எ றிந்துவிட்டு, அவருடைய கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
பின்னர் அதனை என்னுடைய வீட்டுப்பகுதியில் உள்ள நிலத்தில் பு தைத்துவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், நிவேதா பா லியல் வ ன்பு ணர்வு செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய பி ரேத பரி சோதனைக்காக காத்திருக்கின்றனர்.
வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் அமைந்துள்ள புனித பேதுரு ஆலயத்தில் இன்று (22.12.2019) காலை இன்னிசை ஆராதனை (கரோல் கீதம்) இடம்பெற்றது.
கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு ஆலய தந்தை ரேபரன் கேனடி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கித்துள் வீதியிலிருந்து நந்தார் தாத்தாவுடன் பெண்கள் பவணியாக,
ஆலயத்தினை வந்தடைந்து ஆலயத்தில் இன்னிசை ஆராதனை இடம்பெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.
இதன் போது இறை செய்தியினை ஒ எம் ஜ தந்தை போல்நட்சத்திரம் அவர்கள் வழங்கியிருந்தார். இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச யாழ். குடாநாட்டிற்கு இன்றைய தினம் விசேட விஜயமொன்றை செய்துள்ளார். இதன்போது அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்பின்னர் யாழில் சுவரோவியங்கள் வரையப்பட்டு வரும் இடத்திற்கு சென்று குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் தேவாலயங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே இடம்பெறும் வா ள்வெட்டு உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் சுபீட்சமான இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும், அதனை இலங்கையின் மதத்தலைவர்கள் முன்கொண்டு செல்வது சிறந்தது என்பது தொடர்பான கருத்துக்களையும் ஆயருடன் பரிமாறிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் தனது பாரியாருடன், ஆயரிடம் ஆசியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும்,
எதிர்வரும் வியாழக்கிழமை சூரிய கிரகணம் இடம்பெற இருக்கின்றது. இலங்கை நேரப்படி காலை 08.09 மணிமுதல் பகல் 11.22 மணிவரையுள்ள காலப்பகுதிகளில் இது இடம்பெறும்.
இலங்கையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும். அன்றைய தினம் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினமுமாதலினால் காலை பூஜைகள் காலை 8 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். பின்னர் காலை 8.05 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்கு பின்னர். பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.
எனவே அதற்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஆலயங்களில் எவ்விதமான வழிபாடுகளும் இடம்பெறமாட்டாது. இந்த கிரகண காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்ளுவதை தவிர்த்துக் கொள்ளவும்.
இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் சூரியனில் இருந்து வரும் செவ்வூதாக் கதிர்களால் நஞ்சாகும் தன்மை உடையன.
அதனால் அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். அவ்வாறு உணவுகள் இருந்தால் அவற்றைத் தர்ப்பை புல்லினால் மூடி வையுங்கள். அதன் பின்னர் அவற்றைப் பாவிக்கலாம். வெற்றுக்கண்ணினால் சூரியனை இக்காலப்பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்க்கவும் ஈரத்துணி கொண்டு பார்க்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் இக்காலப் பகுதிகளில் வெளியில் செல்வதையோ அல்லது சூரிய கிரகணத்தினை பார்ப்பதனையோ தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 13 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அடைமழையுடனான காலநிலை காரணமாக இதுவரையில் 3314 குடும்பங்களை சேர்ந்த 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 90 பா துகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெற்ற விபத்துக்களில் 3 பேர் உ யிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 47 வீடுகள் முழுமையாக அ ழிவடைந்துள்ள நிலையில் ஆயித்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
நேற்று மாலை அநுராதபுரம், கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டத்திலும் கடும் காற்று வீசியுள்ளது.
இந்த நிலையில் நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை மாவட்டத்திலும், லக்கல, நாவுல, வில்கமுவ, ரத்தோட்ட, உடுதும்பர, வலப்பனை, பதுளை, பண்டாரவளை, வெலிமடை, ஹாலிஎல, ஊவபரனகமுவ, எல்ல, ஹல்தும்முல்ல, பஸ்ஸரை, லுனுகல, ஹப்புத்தளை, மற்றும சொரனாதோட்ட ஆகிய பிரதேச செயலகங்கள் மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவை இணைக்கும் விதமாக பிராந்திய விமான நிலையமாக யாழ்ப்பாண விமான நிலையம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதனை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளவும், ஏனைய சர்வதேச விமான சேவைகளை இந்த விமான நிலையம் ஊடாக இயக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களைத் தரையிறக்குதல் மற்றும் பல வசதிக் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் இந்திய ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – யாழ்ப்பாணத்திற்கான ஏ9 வீதியின் நாவுல பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தற்போது நிலவும் அடைமழை காரணமாக வாகன போக்குவரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணியவில் குறித்த பகுதியில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், நாவுல – பொபெல்ல சந்தியில் இருந்து நாவுல நகரத்திலும், தம்புளை நோக்கி செல்லும் வீதியிலும் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் வவுனியா தெற்கு பிரதேச சபை முதலாம் ஒழுங்கையில் குடிமனைக்குள் புகுந்த 8அடி நீளமான முதலை பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (21.12.2019) இரவு 11..30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீதியில் 8 அடி நீளமான முதலை ஒன்று குடிமனைக்குள் புகுந்துள்ளது. முதலையின் நடமாட்டத்தினை அவதானித்து நாய்கள் குரைத்தமையினையடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு வெளியே சென்று பார்வையிட்ட சமயத்தில் முதலையினை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து அயலவர்களுக்கு இவ்விடயத்தினை தெரியப்படுத்தியமையினையடுத்து உடனடியான அயலவர்களின் உதவியுடன் இரவிரவாக பல மணிநேரம் போ ராடி அதிகாலை குறித்த முதலையை ம டக்கிப் பிடித்து கட்டி வைத்தனர்.
அதன் பின்னர் நெளுக்குளம் பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து இன்று (22.12.2019) காலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முதலையினை கட்டி எடுத்துச் சென்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற பண்பாட்டுப் பெருவிழாவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கிய வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி மணிவண்ணன் உமாமகள், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
பாலகாந்தன் பிரசன்னா சிறந்த ஓவியர் மற்றும் பாடகர் மட்டுமன்றி சிறந்த கிரிக்கெட் வீரரும் ஆவார்.
வவுனியாவில் மேலைத்தேய நடனக் கல்லூரியின் ஆண்டு விழா இன்று (22.12.2019) மாலை 3 மணி தொடக்கம் 7 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடனக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் சுஜித் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.கீதாஞ்சலி நகுலேஸ்வரன், கௌரவ விருந்தினராக கசுன் சுமதிபால, சிறப்பு விருந்தினராக V. பிரதீபன், விருந்தினர்களாக M.மயூரன், T. தமிழழகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பிரம்மாண்டமான நடன நிகழ்வு மற்றும் சிறுவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு (Children Fashion Show) என்பன இடம்பெற இருக்கின்றது. அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றனர். அனுமதி முற்றிலும் இலவசம்.