யாழ்ப்பாணத்தில் வரையப்பட்ட ஓவியம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வீதியோரங்களிலுள்ள வெற்றி சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தும் பணியினை இளைஞர்கள், யுவதிகள் மேற்கொண்டு வருகின்றனர். வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தட்டிவானை ஓவியமாக வரைந்துள்ளார்.
சுமார் 16 மணித்தியாலங்களில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். பழைய நினைவுகளை மீட்கும் வகையில் அவர் வரைந்த ஓவியத்திற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழர் பகுதியில் போ ர்ச்சூழல் காலப்பகுதியில் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமாக தட்டிவான் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, பன்றிக்கெய்தகுளத்தில் அண்மையில் இ ளைஞர் ஒருவர் மீ து தா க்கு தல் மே ற்கொள்ளப்பட்டுள்ளது. கு றித்த இ ளைஞன் தனது கா ணியில் முச்சக்கரவண்டியை நி றுத்திவிட்டு,
வர்த்தக நி லையமொன்றுக்கு சென்றிருந்த வேளை அவர் மீ து தா க்கு தல் ந டத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவருடைய மு ச்சக்கரவண்டிக்கும் சே தம் வி ளைவிக்கப்பட்டுள்ளது.
தா க்குத லுக்கு இ லக்கான ந பர் நயினாமடுவில் வசிக்கும் 24 வ யதுடைய மனோகரன் டிலக்சன் எனத் தெரியவருகின்றது.
இத் தா க்கு தல் ச ம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரதன் ஒட்டத்தில் மலையகப் பெண் ஒருவர் உலக சாதனைகளை படைத்து வருகிறார். மலையகத்தில் உடபுஸ்ஸல்லாவ, வோல்டிமார் தோட்டத்தைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு சாதனை படைக்கிறார்.
மலையகத்தில் உள்ள பெண் மரதன் போட்டியாளர்களில் (42 கி.மீ 192 செ.மீ) இவர் ஒருவர் மாத்திரமே சிறந்த வீராங்கனையாக திகழ்கின்றமை சிறப்பம்சமாகும்.
இவர் கடந்த 2017ஆம் இடம்பெற்ற மரதன் ஒட்டப்போட்டியில் 15ஆவது இடத்தையும், சீனா கும்மினில் இடம்பெற்ற மரதன் ஒட்டப்போட்டியில் 04ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் 2014ஆம் இடம்பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடம்பெற்று தங்க பதக்கத்தினை சுவீகரித்திருந்தார்.
அந்தவகையில், இம்முறை 2019ஆம் ஆண்டு சீனா மெக்கவோவில் நடைபெற்ற மரதன் ஒட்டப்போட்டியில் 17ஆம் இடத்தை பெற்று இலங்கைக்கும் மலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வடமாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 7.00 மணிவரை இந்த சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இப்பகுதிகளுக்கு சுமார் 150 மில்லிமீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படும் அதேசமயம் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மத்திய மாகாணம் மற்றும் அனுராதபுரம், மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீட்டருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பெய்ய கூடும் என தெரிவிக்கப்படுகிறது
வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிசிரீவி விற்பனை நிலையம் நேற்று (22.12.2019) இரவு திடிரென தீப்பற்றி இருந்துள்ளது.
வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதனை அவதானித்த பொதுமக்கள் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கியிருந்ததுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பலமணி நேர போ ராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட த டவியல் நிபுணத்துவ பொலிஸார் அடங்கிய குழுவினர் இன்று (23.12.2019) காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக வர்த்தக நிலையத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
வவுனியா ஆதிவிநாயகர் கோவில் குளக்கட்டு வீதியில் இன்று (23.12.2019) காலை வீட்டிலிருந்து மூதாட்டியின் ச டலம் ஒன்று பொலிஸாரினால் மீ ட்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் குறித்த மூதாட்டி இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு உணவு வழங்குவதற்காக இளைஞன் ஒருவர் சென்ற சமயத்தில் வீட்டின் சமயலறையில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக இருந்ததனை அவதானித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த இளைஞர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ச டலமாக மீ ட்கப்பட்ட மூதாட்டி 72 வயதுடைய பொன்னம்பலம் செல்லம்மா என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இந்திய மாநிலம் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரே மேடையில் 271 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி மகேஷ் சவானி. இவரே சூரத்தில் டிசம்பர் 22 ஆம் திகதி இந்த கூட்டு திருமண விழாவை முன்னெடுக்க உள்ளார்.
271 மணப்பெண்களில் 5 பேர் இஸ்லாமியர்கள் எனவும் அதில் ஒருவர் நேபாளம் நாட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெரிவான 271 மணப்பெண்களில் இரண்டு பெண்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒருவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதன் முறையாக 23 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் மகேஷ் சவானி.
தந்தையை இ ழந்த இளம்பெண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை இவர் வழங்கி வருகிறார். தொடர்ந்து 8வது ஆண்டாக மகேஷ் சவானி இதை முன்னெடுத்து வருகிரார்.
2008 ஆம் ஆண்டு தமது தூரத்து உறவினர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக நிதி திரட்டி வந்த நிலையில், அது குறிப்பிட்ட நாளில் முடியாமல் போகவே, குறித்த நபர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
அந்த தகவல் தெரியவந்த மகேஷ் சவானி உடனடியாக குறித்த இளம்பெண்ணின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
அதன் பிறகு, சூரத் பகுதியில் தந்தையை இ ழந்த திருமணம் செய்துகொள்ளும் வசதி இல்லாத இளம்பெண்களை தெரிவு செய்து ஒரே மேடையில் தமது செலவில் திருமணத்தை முன்னெடுத்து வருகிறார்.
இதுவரை மகேஷ் சவானியால் 3,172 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் சூரத் நகரில் குறித்த திருமண விழா நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திருமணமான 20 நாட்களில் மனைவி வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஓடியோவை கேட்டு கணவன் அ திர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் ஒரு உ யிர் ப ரிதாபமாக ப றிபோயுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (26). இவருக்கும் ராஜஸ்ரீ (23) என்ற பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மனைவி வீட்டில் இல்லாததைக் கண்டு அ திர்ச்சியடைந்து தேட ஆரம்பித்துள்ளார். அந்த சமயம் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.
அதில் அவரது மனைவி, உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேடி போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் அ திர்ச்சியடைந்த வேல்முருகன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து பொலிசார் நடத்திய வி சாரணையில் ராஜஸ்ரீ தனது வீட்டின் அருகில் உள்ள சந்தோஷ் என்ற இளைஞருடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது ஒரே மகன் இப்படி செய்துவிட்டானே என்ற விரக்தியில் சந்தோஷின் தந்தை ஜெகதீசன் வீட்டில் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்துள்ளார்.
இதனிடையில் சந்தோஷ் – ராஜஸ்ரீ ஆகியோர் பெங்களூரில் இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இருவரையும் தே டி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஏழு மாதத்துக்கு முன்னர் திருமணமான இளம்பெண் த ற்கொ லைக்கு முயன்ற நிலையில் பொதுமக்கள் அவரை கா ப்பாற்றி பொலிசில் ஒ ப்படைத்தனர்.
கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் முல்லைப்பெரியாற்றில் கு தித்து த ற்கொ லைக்கு முயன்றார்.
அவரை அப்பகுதி மக்கள் ஓ டிவந்து பி டித்தனர். வி சாரணையில் இவர் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா (20) என தெரியவந்தது.
மேலும், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரை காதலித்து 7 மாதத்திற்கு முன் திருமணம் செய்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த 10 நாட்களாக தனது கணவரை கா ணவில்லை எனவும் பிரியங்கா கண்ணீருடன் தெரிவித்தார்.
இதனால் ம னமுடைந்து ஆ ற்றில் கு தித்து த ற்கொ லை செய்ய வந்தேன் என்றார். உடனடியாக அப்பகுதி மக்கள் கர்ப்பிணி பெண் பிரியங்காவை பொலிசாரிடம் ஒ ப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை தேடி வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா வசமே இன்னும் உள்ளது தெரியவந்துள்ளது.
ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் என அனைத்தும் விதமான போட்டிகளிலும் சேர்த்து சங்ககாரா கடந்த 2014ல் மொத்தமாக 2868 ரன்கள் குவித்தார்.
இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை, 2019ஆம் ஆண்டு முடியவுள்ள நிலையில் யாரும் இந்த ரன்களை முறியடிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் 2833 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் கடந்த 2005ஆம் இந்த ரன்களை எடுத்துள்ளார், விராட் கோஹ்லி கடந்த 2017ஆம் ஆண்டு 2818 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் நான்காவது இடமும் விராட் கோஹ்லி வசமே உள்ளது, அவர் கடந்த 2018ல் 2735 ரன்கள் குவித்ததன் மூலம் பட்டியலில் நான்காம் இடத்திலும் அவர் பெயரே உள்ளது.
இலங்கையை சேர்ந்த டோனி ரசிகர்கள் அவர் சர்வதேச அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடுவதை கொண்டாடும் வகையில் இ ரத்த தானம் அளித்துள்ளதோடு, முதியோர் இல்லத்துக்கு உணவுகளும் வழங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி சர்வதேச அணிக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இதை டோனி ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த டோனி ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இதோடு மருத்துவமனையில் இரத்த தானமும் அளித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும் டுவிட்டரில் #15YearsOfDhonism என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
கேசியா லவங்கப்பட்டை எனப்படும் தட்டையான பட்டையில் இருக்கும் கவ்ரிமன் என்ற ரசாயனம் மெல்ல மெல்ல கொ ல்லும் வி ஷமாக மாறிவருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வகையான பட்டைகள் சேர்க்கப்படும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, வாய்ப்புண், சுவாசக் கோளாறு என தொடங்கி சிறுநீரகம், கல்லீரல் உட்பட ஆறு வகையான நோய்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர்.
இதற்கு பதிலாக இயற்கையிலேயே உடலுக்கு நன்மை பயக்கும் ரசாயனங்கள் நிறைந்திருக்கும் சுருள் வடிவிலான சிலோன் சினமன் என்ற பட்டையை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ளது. நத்தார் பண்டிகை, ஆங்கில புதுவருட பிறப்பு அடுத்து தைப்பொங்கல் என கொண்டாட்டங்கள் களைகட்டவுள்ளன.
இந்த காலப்பகுதியில் தங்க நகைகளின் கொள்வனவு அதிகரிக்கும். இவ்வாறான நிலையில் தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை வீழ்ச்சி பதிவாக வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கமானது 1485 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின் இயக்குனர்கீதாஞ்சலி நகுலேஸ்வரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்வில் நடனக்கல்லூரியில் அங்கம் வகிக்கும் மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்த மாணவர்களால் மேற்கத்திய நடன நிகழ்வுகள் கோலகலமாக இடம்பெற்றிருந்தது.
விசேடமாக சிறுவர்களின் நவநாகரிக ஆடை அலங்கார அணிவகுப்பு (Children Fashion Show) சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்ததுடன், பார்ப்பவர்களின் மனங்களையும் கவர்ந்துள்ளது.
குறித்த நிகழ்வில் பெற்றோர்கள்,மாணவர்கள், நடன ஆசிரியர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளினால் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்காக விமான நிலைய விமான சேவை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் விமான பயணிகளுக்காக விசா கவுண்டர்கள் 19 உள்ள நிலையில் உள்நுழையும் பகுதியில் 25 கவுண்டர்களும் உள்ளன.
எனினும் தற்போது அவை போதுமானதாக இல்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. அதற்கமைய அந்த கவுண்டர்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக இந்த அனைத்து கவுண்டர்களுக்காகவும் குடிவரவு குடியல்வு அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசா தொடர்பில் பயணிகளுக்கு எவ்வித சிக்கல் ஏற்பட்டாலும் அந்த சந்தர்ப்பத்திலேயே அதற்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
அத்துடன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக தனியாக விசா கவுண்டர் ஒன்றை ஒதுக்குவது தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்காக வழிக்காட்டல்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பா துகாப்பு பிரிவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் நாட்டில் இருந்து வெளியேறும் வரையிலும், வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வரையிலும் அவர்களுக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா – குருமன்காட்டில் அமைந்துள்ள சிசிரீவி விற்பனை நிலையத்தில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த இந்நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையில் இருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.
இதனை அவதானித்த சிலர் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன், தீயணைப்பு பிரவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பல மணி நேர போ ராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
விபத்தில் வியாபார நிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் வி சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.