மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் மூவர் இன்று(02.11) அதிகாலை ப லியாகியுள்ளனர்.
மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற பிரதேசத்திற்கு இவர்கள் சென்ற வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் மூன்று பேர் உ யிரிழந்துள்ளனர் என்றும் இதுவரையில் இரண்டு பேரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கண்ணனந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார் மற்றும் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவ்பர் மற்றும் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த ரிஸான் மவ்லானா ஆகியோரே இந்த விபத்தில் உ யிரிழந்துள்ளனர்.
ச டலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தூதரம் ஊடாக மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளிள் பயணிக்கும் போது நேரிடும் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில் பாதுகாப்பான தலைக்கவசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் தரம் 12இல் கணித பிரிவில் கல்வி கற்கும் மாணவன் கிருஷ்ண குமார் முகேஷ் ராம் கண்டுபிடித்துள்ளார். வீதிகளில் பயணம் மேற்கொள்ளும் போது விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த தலைக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதை இனங்கண்டு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் உறவினர்களுக்கோ அல்லது பொலிஸாருக்கோ தெரியப்படுத்துவதினால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதற்கு இந்த பாதுகாப்பான தலைக்கவசம் உதவுகிறது.
ஆயுள் த ண்டனை அனுபவித்து வரும் கு ற்றவாளியை இளம்பெண் ஒருவர் சிறையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பவந்தீப் கவுர் என்கிற இளம்பெண் மந்தீப் சிங் என்பவரை 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் இரட்டைக் கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட கு ற்றவாளி மந்தீப் சிங்கிற்கு ஆயுள் த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் இருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வேலைகள் திடீரென தடைப்பட்டன. இதனையடுத்து மந்தீப் சிங்கின் புகைப்படத்தை திருமணம் செய்துகொண்டு பவந்தீப் கவுர், தனது மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.
மேலும், காதலனை திருமணம் செய்துகொள்ள பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மதம் மந்தீப் சிங் சார்பில் நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதனை நிராகரித்த இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு, பலத்த பா துகாப்புகளுடன் கூடிய நாபா மத்திய சிறை வளாகத்தில் இருவருக்குமான திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை 9.10 மணியளவில், மணமகள் தனது குடும்பத்தினருடன் சிவப்பு காரில் சிறைச்சாலையை வந்தடைந்தார். அனைவரும் ப லத்த சோ தனைகளுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருமண நிகழ்வில் மொத்தம் 8 பேர் கலந்துகொண்டனர். காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை திருமணத்திற்கான சடங்குகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு மணமகள் மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பாட்டியாலா மாவட்டத்தில் உயர் பா துகாப்பு கொண்ட நாபா சிறைக்குள் திருமண விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என தந்தை தி ட்டியதால் ம னமுடைந்த இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கவிதா (23) தனியார் பத்திர அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
நாய் குட்டி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக கவிதா நாய் ஒன்றினை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் நள்ளிரவில் குரைத்து கொண்டே இருந்ததால் உறங்க முடியவில்லை என பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பெருமாளிடம் பு கார் கூறியுள்ளனர்.
இதனால் அந்த நாயை வேறு ஒருவரிடம் விற்றுவிடலாம் என பெருமாள் தன்னுடைய மகளிடம் கூறியுள்ளார். ஆனால் பி டிவாதமாக இருந்த கவிதா நாயை யாருக்கும் கொடுக்க மாட்டேன் எனக்கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து கவிதா தி டீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார் கவிதாவின் உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு ஆ ய்வு மேற்கொண்ட போது கடிதம் ஒன்றினை கைப்பற்றினர். அதில், “அம்மா, அப்பா, தம்பி.. என்னை மன்னிச்சிடுங்க.. என் செல்ல நாய் சீசரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.. என் சா வுக்கு யாரும் காரணம் இல்லை” எனக்குறிப்பிட்டிருந்துள்ளார்.
செல்லப்பிராணியை தந்தை யாருக்கும் கொடுத்துவிடுவாரோ என்கிற அ ச்சத்திலே இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளங் குழந்தையை, ம து போ தையில் இருந்த தந்தை அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த துர்கா (25) என்பவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு எல்லப்பன்(27) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன் தம்பதியினருக்கு ராஜமாதா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பச்சிளங்குழந்தையான ராஜமாதா, நேற்று காலை மூக்கில் இருந்து இ ரத்தம் வழிந்தபடியே இ றந்து கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த துர்கா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அதில், நேற்று இரவு ம து போ தையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன், துர்காவுடன் ஒன்றாக இருந்துள்ளார்.
அப்போது குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால், ஆ த்திரமடைந்த எல்லப்பன் திடீரென குழந்தையின் தலையில் ஓ ங்கி அ டித்துள்ளார். மேலும் துர்காவையும் ப லமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை இ றந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், எல்லப்பனை கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தனது தாய்க்கு 50 வயதான அழகான மணமகன் தேவை என வெளியிட்டுள்ள பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
ஆஸ்தா வர்மா என்ற இளம் பெண் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
மேலும், தனது தாய் திருமணம் செய்து கொள்ள 50 வயதான அழகான நபர் தேவை என அந்த பதிவில் தெரிவித்தார்.
இதோடு அந்த மணமகன் சைவம் மட்டும் சாப்பிடுபவராகவும், ம து பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் ஆஸ்தா வர்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது கிட்டத்தட்ட 14000 லைக்குகள் மற்றும் 4000 மறு பதிவுகளை அள்ளி வைரலாகியுள்ளது.
தாய்க்கு ஏற்ற துணையை தேடும் ஆஸ்தா வர்மாவை பலரும் பாராட்டி வருவதோடு, அவர் எதிர்பார்க்கும் வரன் கிடைக்கும் என வாழ்த்தியுள்ளனர்.
தமிழகத்தின் சிதம்பரத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்து வந்த துணை நடிகையை பொலிசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சூர்யபிரியா, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சமீபத்தில் சிதம்பரம் வந்தவர், தோழிகளுடன் சேர்ந்து பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார், இதற்காக பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து கொண்டு சிதம்பரத்தின் பல இடங்களில் பணம் வசூலித்துள்ளார்.
இதுபற்றி துணை பொலிஸ் சூப்பிரண்டான கார்த்திகேயனுக்கு தகவல் தெரியவர, சூர்யபிரியாவை தீவிரமாக கண்காணித்து வந்தார். நேற்று மதியம் சப் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து கொண்டு வந்த சூர்யபிரியாவை மடக்கி பிடித்தனர்.
இதனை தொடர்ந்து எவ்வளவு பணம் வசூலித்துள்ளார்? யார் யாரிடம் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு துணையாக இருந்த மூன்று தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அபிவிருத்தி குழுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (02.11) இடம்பெற்றது.
இன்று காலை 9 மணியளவில் பாடசாலையின் கேட்போர் கூடமான ஐயாத்துரை மண்டபத்தில் பிரதி அதிபரின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து நிர்வாக தெரிவு இடம்பெற்றது இதில் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளராக பிரபல சட்டத்தரணி தயாபரன் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் இதனை தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்
இதேவேளை அபிவிருத்தி குழுவில் இரண்டு உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்கத்தினூடாக இருக்க வேண்டும் என சுற்றறிக்கை உள்ளது ஆனாலும் பழைய மாணவர் சங்கத்தில் உள்ள குழப்ப நிலை காரணமாக தற்சமயம் இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்யப்படாமல் பழைய மாணவர் சங்கத்தை சீர் செய்த பின் அதிலிருந்து இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்வதே சிறப்பாக இருக்கும் என வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
செயலாளரின் சிறப்புரை நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுக்கு வந்தது.
தென்னிலங்கையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் வாகனத்தில் மோதுண்டு 2 சிறுவர்கள் உ யிரிழந்துள்ளனர். வீரக்கெட்டிய, தங்காலை வீதியில் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறுவர்கள் இருவரும் அவர்களது தாயாரும் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி வீதியில் செல்லும் போது பேருந்திற்கு பின்னால் வந்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டமையதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் பிள்ளைகள் வீரக்கெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் ஒரு சிறுமி உ யிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மற்றுறொரு பிள்ளையையும் தாயையும் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் சிறுவன் உ யிரிழந்துள்ளார்.
விபத்தில் 12 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனும் உ யிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படும் 15 வயதான சிறுவனும் அதில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கையடக்க தொலைபேசி பயனாளர்களின் உரையாடல்களை மூன்றாம் தரப்பினர் அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் செவிமடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக பொது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் பாவிக்கும் எந்தவொரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சிம் அட்டையின் பாதுகாப்பு சிக்கலை பயன்படுத்தி இவ்வாறு ஒட்டுக் கேட்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை உட்பட உலகின் 30 நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளின் கடவுச்சொல் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள Sim tool kitஇல் உள்ள தொழில்நுட்ப குறைப்பாடு காரணமாக இந்த பாதுகாப்பு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Adoptive Security என்ற கையடக்க தொலைபேசி பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு நடத்தும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில வாரங்கள் உள்ள நிலையில் அவ்வாறான ஆபத்து குறித்து வெளியாகி உள்ள தகவல் காரணமாக பாரிய பி ரச்சினை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போ தைப்பொருள் பரிசோதனைக்காக பொலிஸ் போ தைப்பொருள் தடுப்பு செயலகத்தால் ரோபோ இயந்திரங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெ டிபொருட்கள் மற்றும் போ தைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோரை சோதனையிடுவதற்காக நுழைவாயில் பகுதியில் இந்த புதிய ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் விமான பயணிகள் மற்றும் அவர்களின் பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், இதன்மூலம் வெ டிபொருட்கள் மற்றும் அனைத்து ரக போ தைப்பொருட்களையும் அறிந்து கொள்வதற்கான ஆற்றலை இந்த 2 ரோபோக்களும் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் குறித்த ரோபோக்கள் இரண்டும் அங்கும் இங்கும் நகர்ந்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவை.Robot Inspection Dog என்ற இந்த இரண்டு ரோபோக்களும் சீன குடியரசினால் இலங்கை பொலிஸாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவில் கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் ஒரு பெண் இ றந்து கிடக்க, பொலிசார் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, மேலும் 140 பாம்புகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இண்டியானாவில் வாழ்ந்து வந்த Laura Hurst (36) என்ற பெண் தனது வீட்டில், சுயநினைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது அவரது கழுத்தைச்சுற்றி 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்றும் இருந்துள்ளது. எனவே, அந்த பாம்பு கழுத்தை இறுக்கியதால் அந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று கருதும் பொலிசார், என்றாலும் உடற்கூறு ஆய்வுக்கு முன் எதையும் உறுதியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர் இறந்து கிடந்த வீட்டில் 140 பாம்புகளும் இருந்ததால் பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் Laura தனக்கென்று சொந்தமாக 20 பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.
ஒரு சீன விவசாயி விஷ பாம்பு தீண்டியதும், ப தற்றத்தில் உடனடியாக தன்னுடைய வி ரலை வெ ட்டி வீ சியுள்ளார். சீனாவில் ஷாங்க்யூ மாவட்டத்தின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் என்கிற 60 வயதான விவசாயி, மலைப்பகுதியில் வி றகு வெ ட்டிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது உள்ளிருந்த ஒரு விஷ பாம்பு அவருடைய வலது கை ஆள்காட்டி வி ரலில் க டித்துள்ளது. இதனால் ப தறிப்போன அவர், உடனடியாக அந்த வி ரலை வெ ட்டி வீ சிவிட்டு 50 மைல்கள் தூரத்தில் உள்ள ஹாங்க்சோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அங்கு சென்ற பின்னர் தான், விரலை மலைப்பகுதியிலேயே வீசிவிட்டு வந்தது நினைவுக்கு வந்துள்ளது. இதனால் சிகிச்சை முடிந்த பின்னர் அவருடைய விரலை மருத்துவர்களால் இணைக்க முடியாமல் போனது.
அதேசமயம் அவரது விரைவான சிந்தனையைப் புகழ்வதற்குப் பதிலாக, இதுபோன்ற வியத்தகு எதிர்வினை தேவையற்றது என்றும், அந்த பாம்பு நினைப்பதை விட குறைவான விஷம் கொண்டது என மருத்துவர்கள் ஜாங்கை திட்டியுள்ளனர்.
சீனாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை தேம்பி அ ழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் புயாங் மாகாணத்தை சேர்ந்த சேர்ந்த 30 வயதான சீன மனிதர் ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது கட்டுப்பாடில்லாமல் அ ழுவதையும், அருகாமையில் அமர்ந்திருக்கும் மணப்பெண் அவரை தேற்ற முயற்சிப்பதையும் வீடியோ காட்சியில் காணலாம்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் மணமகன், என்னால் இதை இனிமேல் க ட்டுப்படுத்த முடியாது. திருமணம் செய்து கொள்வது எனக்கு மிகவும் க டினமாக இருந்தது. நான் 7 முறை என்னுடைய நண்பர்கள் திருமணம் செய்துகொண்ட போதெல்லாம், துணைமாப்பிள்ளையாக நின்றிருக்கிறேன்.
அப்போது நான் செய்த சேட்டைகளை எல்லாம், என்னுடைய திருமணத்தில் இப்போது அவர்கள் எனக்கு செய்கிறார்கள். நான் மகிழ்ச்சியாகி இருக்கிறேன் எனக்கூறியபடியே அழ, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் சிரிக்கின்றனர்.
அ ழுதபடியே அந்த மணமகன், அனைவரும் சிரிப்பதை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறேன் எனவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார். மேலும், தனது மனைவியை ஆழமாக நேசிப்பதாகவும், அவர் அவரை நன்றாக நடத்துகிறார் என்றும் ஒப்புக்கொண்டார்.
அவர் தனது மாமியார் பற்றிப் பேசுகையில் அவரின் சமையல் திறன்களைப் பாராட்டினார். பின்னர், அவர் தனது மணமகளின் பக்கம் திரும்பி கேட்டார்: “மனைவியே, நீங்கள் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறீர்களா? எனக்கேட்டார்.
அவரது மணமகள்: “நான் சொல்ல விரும்புவது நீங்கள் எவ்வளவு சோர்வாகவோ, களைப்பாகவோ அல்லது கோபமாகவோ இருந்தாலும், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம், நான் உங்களுக்காக வீட்டில் காத்திருப்பேன்.” எனக்கூறியுள்ளார். இந்த நிலையில் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கியும் கட்டுப்படுத்த தவறிய ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர்ப்பகுதியில் அதிகரித்து காணப்படும் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களைச் சீரமைக்கவும் பொது சுகாதார பரிசோதகர்களினால் களப்பரிசோதனை மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அக்கால அவகாசத்திற்குள் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு தலா 25ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து வர்த்தகர்களுக்கும் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொது சுகாதாரப்பரிசோதர்களுடன் சுகாதாரத் தொண்டர்கள் இணைந்து வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை 2ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அவதானிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், அரச, தனியார், பாடசாலைகள், நிலையங்கள் திணைக்களங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டு அவற்றிற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கால அவகாசங்கள் வழங்கப்படவும் உள்ளது.
இதன்போது தமது இருப்பிடங்கள், வர்த்தக நிலையங்களை துப்பரவு செய்து உதவுமாறு பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு பரிமாறப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிய நேர உணவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சோற்றுப் பொதியில் நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவுகளை விநியோகிக்கும் நடமாடும் சேவையாக ஊபர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப்பொதியிலேயே நத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தமை தொடர்பில், பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதன்போது உணவகத்தின் களஞ்சியத்திலிருந்து அரிசி பொதியில் நத்தைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.