கொழும்பில் இளைஞர், யுவதிகளின் மோசமான செயல் : சுற்றிவளைத்த பொலிஸார்!!

கொழும்பில்..

கொழும்பு, தெஹிவளை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் 100 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் போ தைப்பொருளுடன் இருந்ததாகவும், ஏனையவர் விருந்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஹோட்டல் சுற்றிவளைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்க தீர்மானம்!!

தமிழரசுக் கட்சி

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (03.11) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரும் உடன் இருந்தனர். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் காலை 10.30 முதல் 4.30 வரை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம்.

முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பராளுமன்றக் குழு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இது பற்றி ஆராயப்பட்டப்பட்டது.

இன்று எமது கட்சியினுடைய உத்தியோக பூர்வ முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் தமிரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு எடுத்திருந்தாலும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற விடயங்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் கைகளில் அவற்றை ஒப்படைத்து இருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய இரண்டு கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்.

நாங்கள் பிரதான இரு வேட்பாளர்கள் தொடர்பான பல விடயங்களை ஆராய்ந்து இருக்கின்றோம். அதனை குறிப்பிட்டு எதனையும் கூற முடியாது.

அவர்களுடைய கடந்தகால செயற்பாடுகள், ஜனநாயகத்திற்கு அவர்கள் காட்டும் பங்களிப்பு, எங்களுடைய எதிர்பார்ப்புக்கள், அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இப்படியாக பல விடயங்களை ஆராய்ந்தோம்.

இன்றைய நிலையில் எங்களுடைய மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கை சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்று ஏகமனதாக முடிவு எட்டப்பட்டது.

எங்களுடைய கருத்தையும் கேட்டுத் தான் மக்கள் வாக்களிக்கின்றார்கள். மக்கள் சுயமாக வாக்களிப்பவர்கள். மக்கள் திறமைசாலிகள். மக்களுக்கு அரசியல் தெரியும். விசேடமாக தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள்.
அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

மக்களுடைய கருத்தையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். மக்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதல்ல.

நிதானித்து இருக்கின்ற அரசியல் நிலையில் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தோடும் நாட்டில் இருக்கும் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவது நாங்கள். நாங்கள் மக்களுடைய பிரதிநிதிகள். மக்கள் எங்களை தங்களது பிரதிநிதிகளாக நியமித்துள்ளார்கள். அந்த கடப்பாட்டை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் மக்களை சரியாக வழிகாட்ட வேண்டும்.

இந்த தீர்மானம் சம்மந்தமான விளக்கமான காரணங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பங்களகாளிக் கட்சி தலைவர்களுடன் பேசிய பின்னர் விபரமாக அறிக்கை வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக ஈ.பி.டி.பி னரின் தேர்தல் பிரச்சார மாநாடு!!

ஈ.பி.டி.பி னரின் தேர்தல் பிரச்சார மாநாடு

வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இன்று (03.11.2019) காலை 10.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை இடம்பெற்றது.

கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், சர்வதேச இணைப்பாளர் விந்தன்,

முன்னாள் யாழ் மாவட்ட மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, கிழக்கு மாகாண ஊடக செயலாளர் ஸ்ராலின், தரணிக்குளம் வட்டார உறுப்பினர் இராஜேஸ்வரி,

கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் செல்வரத்தினம் சாந்தகுமார்,

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பாளர் கிறிஸ்தோபர் டினேஸ் றொசிண்டன் , கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் கட்சியின் கொடியும் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை இடம்பெற்றதுடன் செயலாளர் நாயகம் அவர்களின் உரையுடன் மாநாடு நிறைவுற்றது.

மாநாட்டின் போது இடம்பெற்ற உரைகளில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வவுனியாவில் பலத்த பொலிஸ் பா துகாப்பிற்கு மத்தியில் ஈ.பி.டி.பி னரின் தேர்தல் பிரச்சார மாநாடு!!

தேர்தல் பிரச்சார மாநாடு

வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு பலத்த பா துகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

குறித்த மாநாடு இன்று (03.11.2019) காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிலையில் வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் தடுப்புவேலி அமைந்து சோ தனைகளை மேற்கொண்டதுடன் மைதானத்தினுள் கூடாரம் அமைத்து மாநாட்டுக்கு செல்பவர்களை பொலிஸார் சோ தனையிட்டனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சார மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தை..

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்ட மண்டபத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்றுகையிட்டமையால் பொலிசார் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது மற்றும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றை இன்று காலை 10.30 முதல் மாலை வரை இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன், ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், துரைரெட்ணசிங்கம், யாழ் மாநகர சபை மேயர் ஆர்னோல்ட்,

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் கனடா கிளை பிரமுகர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வவுனியாவில் 988 ஆவது நாளாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட்ட மண்டபத்தை முற்றுகையிட முனைந்தனர். இதன்போது கூட்ட விடுதிக்கு செல்லும் பாதையை 50 மீற்றர் தூரத்தில் வழிமறித்து பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், அவர்களை உள்ளே செல்ல விடாது பொலிசார் தடுத்தனர்.

இதன்போது சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரிடம் 5 கேள்விக்கள் கேட்ட வேண்டும். எமக்கு சம்மந்தன் தந்த வாக்குறுதி என்னவாச்சு, காணாமல் போன எமது பிள்ளைகளுக்கு பதில் கூறு, பணப்பெட்டிகளுக்காக வாக்குகளை சிங்களவருக்கு கொடுக்காதே,

தமிழனுக்கு வாக்களிக்க கூறு, மாவைக்கு சொகுசு வீடு எங்களுக்கு போ ராட்ட வாழ்க்கை, சம்மந்தன் சுகபோகம் நாங்கள் வீதியோரம் எனக் கதறியழுதனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இருப்பினும் நீண்ட நேரமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆபகியோரை சந்திக்குமாறு கோரி அங்கு நின்ற போதும் அவர்கள் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவுதியில் கோர விபத்து : பரிதாபமாக ப லியான இலங்கை இளைஞன்!!

கோர விபத்து

சவுதியில் மக்காஹ், ஹிரா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகல், பம்மண பகுதியை சேர்ந்த முஹமட் சலாஹுதீன் முஹமட் சதாம் (MSM Sadam) (24) என்ற இளைஞர் இன்று அதிகாலை மக்காஹ், ஹிரா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் சவுதி அல்மராய் கம்பனியில் தொழில் புரிந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் ச டலத்தை இலங்கை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்துப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வருகைதந்த ரணில் மக்களுக்கு கூறிய பல உறுதிமொழிகள்!!

வவுனியா வருகைதந்த ரணில்..

கா ணாமல் போன குடும்பங்களுக்கு இருக்க கூடிய து யரம் எமக்கு நன்றாக தெரியும். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சுயாதீனமான குழு ஒன்று ஸ்தாபிக்கபட்டுள்ளதுடன், நஸ்ட ஈடு வழங்குவது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று (02.11) விஜயம் செய்த அவர் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதியதாக ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் போது அதிகார பரவலாக்கல் ஏற்படுத்தப்படும் என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, குமாரதுங்க, ராஜபக்ச அரசாங்கங்களில் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த நாடு எனும் கருத்துக்களை உள்ளடக்கி, அதனை ஆய்வு செய்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வவுனியா போன்ற பகுதிகளில் அனைத்து இனத்தவர்களும் வசிக்கிறார்கள். நாம் நினைப்பது நாட்டிலுள்ள அனைவரையும் இணைத்து அதிகார பரவாலாக்கல் என்ற வேலைதிட்டத்தை முன்னெடுப்பதாகும்.

போ ரின் காரணமாக பல சி க்கல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவற்றை நாங்கள் நிவர்த்தி செய்திருக்கிறோம். எஞ்சியவற்றையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்.

காணிகளை மீள கையளிப்பதுடன் கா ணாமல் போனோர் பற்றிய பி ரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்துடன் ஒருக்கிணைந்தவாறு சுஜாதீனமான ஒரு குழுவை ஸ்தாபித்திருக்கிறோம். இப்போ தைக்கு அவர்கள் சிறு சிறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதேபோல அவர்களிற்கு நஸ்ட ஈடு வழங்கும் கால எல்லை தொடர்பாகவும் ஆராயபட்டுவருகிறது. காணாமல் போன குடும்பங்களுக்கு இருக்க கூடிய துயரம் எமக்கு நன்றாக தெரியும்.

அதே போல பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் தொடர்பில் பல்வேறு வேலைதிட்டங்களை மேற்கொள்ளவிருப்பதுடன், போரில் காயமடைந்தவர்கள் தொடர்பிலும் நாம் கவனமெடுத்து வருகிறோம். போ ரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இன்று ப யமில்லாத அச்சமில்லாத, சட்டத்தின் மூலம் செயற்படுகின்ற ஒரு சமூகம் காணப்படுகின்றது. இவற்றை நாம் பாதுகாத்துக் கொண்டு முன்செல்ல வேண்டும்.

முக்கியமாக இங்கு கேட்பது வடக்கிற்கு நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று. வடக்கை அபிவிருத்தி செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதை தெரிவிக்கிறேன்.

இலங்கையை அதிகூடிய மத்தியதர வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதே எமது நோக்கம். வன்னியில் விவசாய மீன்பிடி துறைகளை நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நெல், மற்றும் தென்னை கால்நடை வளர்ப்பு உற்பத்தியை அதிகரிப்பதுடன். நாட்டின் வரட்சியான பகுதிகளிலும் உணவு உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

புதிய ஒரு பொருளாதார முறைமையை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம். அதற்காக விமானநிலையத்தை நாம் அங்கு திறந்துவைத்திருக்கிறோம்.

அதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். மன்னார் மற்றும் பூனகரி. வடமராட்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா வலையத்தை ஸ்தாபித்திருக்கிறோம். நிலாவெளியில் இருந்து வடக்கு நோக்கி சுற்றுலா பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.

இதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தக துறையின் ஒரு கேந்திரநிலையமாக வவுனியா மாற்றி அமைக்கபடும். தற்போது வவுனியா வளாகம் பல்கலை களகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், மதவாச்சி பகுதிகளிலே கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி தொழில் துறை கல்வியை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கிறது.

தொழில் மற்றும் வருமானமின்மை இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய பிரச்சினையாக அமைந்திருக்கிறது. அதனால் மிகப்பெரிய அபிவிருத்தியை இங்கு உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

எந்த இனமாக இருந்தாலும் ஏனைய சமூகங்களை போல வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. எமது முயற்சி நாட்டை அபிவிருத்தி செய்வது. இவற்றிற்கு பதில் சொல்லமுடியாத காரணத்தினால் தான் மொட்டு கட்சிக்காரர்கள் இனவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் மீதும் குறை சொல்கிறார்கள். போ ரின் பின்னர் இவற்றை மாற்றி அமைப்பதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை அந்த சவாலினை நாம் ஏற்று கொண்டிருக்கிறோம். எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச்செய்து நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் முன்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

உலகையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் பெற்றோர் தான் : சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்!!

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ

உலகத்தையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் குழந்தையின் பெற்றோர் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

திருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி தம்பதியரின் இளைய மகன் சுர்ஜித் வில்சன்.

கடந்த 25ம் திகதி மாலை 5.30 மணியளவில், அப்பகுதியிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சுர்ஜித்தை உயிரோடு மீட்பதற்கு, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.

மீட்புபணிகள், 80 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த நிலையில் 29ம் திகதி குழந்தை சுர்ஜித் ச டலமாகவே மீட்கப்பட்டார். சுர்ஜித்தின் மறைவை அடுத்த தமிழகம் முழுவதும் மூடாமல் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசியுள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுஜித்தின் ம ரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து அல்ல, தனி நபர் இடத்தில் பெற்றோரின் அஜாக்ரதையால் நடந்தது என தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நான் சுர்ஜித் பேசுகிறேன் : கருவறையில் தொடங்கி கருப்பறையில் முடிந்த என் வாழ்க்கை!!

நான் சுர்ஜித் பேசுகிறேன்..

சுர்ஜித் நினைவாக திறக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அவர் பேசுவது போலவே எழுதப்பட்டுள்ள வாசகம் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பின்னர் ச டலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதை பெரியளவில் கலங்கடித்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியிலுள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.

மேலும் அங்கு சுர்ஜித் நினைவாக ஒரு கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.

இந்தக் கல்வெட்டில், நான் சுர்ஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

இ றப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், ம ரணத்துடன் போ ராடிய அந்த தருணம் மிகவும் கொ டுமையானது.

நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உ யிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

திருமண வீட்டில் வி பரீதம் : ஆண்களை அ டித்து து வைத்த பெண்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!!

இந்தியாவில் திருமண கொண்டாட்டத்தின் போது மணமகன் வீட்டாரும், மணப்பெண் வீட்டாரும் ஒருவரையொருவர் தா க்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அஜய். இவருக்கும் இந்திரஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டாருக்கு இடையே எந்த முறையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்து ச ண்டை ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளாலும், நாற்காலியாலும் அ டித்துக் கொண்டனர். அதிலும் அங்கிருந்த சில பெண்கள் மிக மோ சமாக சில ஆண்களை அ டித்து து வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் கா யமடைந்த மூவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

திருமணம் செய்து கொண்ட மணமகனும், மணப்பெண்ணும் ஒன்றாகவே உள்ள நிலையில் தங்களுக்குள் எந்தவொரு பி ரச்னையும் இல்லை என கூறினார்கள்.

மேலும் இது குடும்ப பி ரச்னை என்பதால் இது தொடர்பாக புகார் அளிக்க விரும்பாமல் எங்களுக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்கிறோம் எனவும் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

சுர்ஜித் உயி ரை ஏன் காப்பாற்றவில்லை? ஆ த்திரமடைந்த இளைஞர் செய்த செயலால் பரபரப்பு!!

இளைஞர் செய்த செயல்

சுர்ஜித்தை மீட்க அரசு முறையாக செயல்படவில்லை என கூறி இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி த ற்கொ லை செய்து கொள்வதாக மி ரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் எம்ஐடி மேம்பாலம் அருகே 100 மீட்டர் உயரம் உள்ள செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் கருப்பு கொடியுடன் அமர்ந்து கொண்டு த ற்கொ லை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த இளைஞரின் பெயர் ஹரிகரன் என்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் செல்போன் மூலம் அவரிடம் பேசினர், அப்போது அந்த இளைஞர், பொலிசாரிடம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இது பெரும்பான்மையான மக்கள் மனதில் தா க்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து இளைஞர் ஹரிகரனை மீட்பது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் ஹரிகரனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பற்கள் சீராக இல்லை : திருமணமான சில மாதங்களில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்!!

விவாகரத்து கொடுத்த கணவன்

தெலுங்கானாவில் மனைவியின் பற்கள் சீராக இல்லாததால் கணவர் முத்தலாக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் குஷாய்குண்டா பகுதியை சேர்ந்தவர் ருக்சனா பேகம், இவருக்கும் முஸ்தபா என்பவருக்கும் கடந்த ஜூன் 27ம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் ருக்சனாவின் பற்கள் கோணலாக இருப்பதால் முத்தலாக் கொடுப்பதாக கடந்த வாரம் போன் செய்து கூறியுள்ளர் முஸ்தபா. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ம் திகதி ஐதராபாத் காவல் நிலையத்தில் ருக்சனா புகார் அளித்துள்ளார்.

அதில், திருமணத்தின் போது மணமகன் வீட்டார் கேட்ட நகை, பணம் என எல்லாவற்றையும் எனது குடும்பத்தினர் க ஷ்டப்பட்டு செய்து கொடுத்தனர். திருமணம் முடிந்த பின்னும் கூடுதலாக வரதட்சணை கேட்டு என்னை கொ டுமைப்படுத்தினர், 10 நாட்களாக ஒரு அறையில் என்னை அ டைத்து வை த்ததால் உடல்நிலை ச ரியில்லாமல் போனது.

தொடர்ந்து என்னை என் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர், என் பெற்றோரையும் த காத வார்த்தைகளால் தி ட்டினார். தற்போது என் பற்கள் சீராக இல்லை எனக்கூறி என் கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார், இதுபற்றி பொலிசார் விசாரிக்க வேண்டும் என கூறினார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலை விழுங்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு : அதன் பின் நடந்த சம்பவம்!!

மலைப்பாம்பு

தமிழகத்தில் மயிலை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு அப்பகுதி மக்கள் துணிச்சலுடன் பிடித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணபெருமாள். இவருக்கு சொந்தமான வயலில் இன்று மாலை மயில் ஒன்றை சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப் பாம்பு விழுங்க முற்பட்டது.

இதை அப்பகுதி வழியே வந்த ஒரு சிலர் பார்த்து, துணிச்சலுடன் அந்த பாம்ப்பை பிடித்து, மயிலை காப்பாற்றினர். அதன் பின் பிடிபட்ட மலைப்பாம்பு குறித்து தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு மக்கள் தெரிவித்தனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதாக கொண்டு சென்றனர். அவர்கள் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்த நிலையில், அந்த பாம்பின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

5 வயது சிறுமியை..

தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மேலகுப்பத்தை சேர்ந்தவர் உத்தண்டி (35). இவருக்கு ராஜேஸ்வரி(32) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

இவர்கள் அதே பகுதியில் இருக்கும் கமலம்(59) என்பவர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கமலம் வீட்டு மாடியில் வேர்கடலையை காய வைத்து கொண்டிருந்தார். அப்போது ராஜேஸ்வரியின் குழந்தைகள் வேர் கடலையை மிதித்து விளையாடியதால் அதைப் பார்த்து,

ஆ த்திரமடைந்த கமலாவின் குடும்ப நண்பர் ஐயப்பன் (35) என்பவர், ராஜேஸ்வரியின் 2வது மகள் மீனா (5) என்ற சிறுமியின் தலைமுடியை பிடித்து மாடி சுவரில் அடித்ததால், ப லத்த கா யமடைந்த மீனா சம்பவ இடத்திலே பரிதாபமாக இ றந்தார்.

இந்த சம்பவம் கமலம், உறவினர் முருகன், அஞ்சலை ஆகியோருக்கு தெரியவர அவர்கள் ஐயப்பனை காப்பாற்றுவதற்காக ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் உத்தண்டியை தொடர்பு கொண்டு, மீனா மாடியில் இருந்து தவறி விழுந்து இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பின், கமலத்தின் முந்திரி தோப்பு முதனை கிராமத்தில் இருப்பதால் மீனாவின் உ டலை முதனை கிராமத்திற்கு கொண்டு சென்று ஒரு முந்திரி மரத்தின் கீழ் பு தைத்துவிட்டு, ராஜேஸ்வரி மற்றும் உத்தண்டியை வீட்டை விட்டு வெளியே விடாமல் பார்த்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும், இவர்களுக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடி வந்து பொலிசாருக்கு, புகார் தெரிவிக்க, பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில், கமலம், ஐயப்பன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில் மூவரும் மீனா இ றந்தது எப்படி என்பதையும், உ டலை பு தைத்த இடத்தை பற்றியும் கூறியுள்ளனர். இதையடுத்து புதைக்கப்பட்ட சிறுமியின் உடல், தோண்டி எடுத்து அதே இடத்தில் பி ரேத பரிசோதனை செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அருள்முருகன் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரசங்காரம்!!

சூரசங்காரம்

வவுனியாவில் பல ஆலயங்களில் சூரசங்கார நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்துக்கள் முருகப் பெருமானிடம் வரம் வேண்டி அனுட்டிக்கும் விரதமே கந்தசஷ்டி.

இந்து மக்கள் பல்வேறு நிவர்த்திகளை வைத்து விரதம் அனுட்டித்து முருகனிடம் வரம் வேண்டுவார்கள். கந்தசஷ்டி விரதநாளின் இறுதி நாளான இன்று மாலை இந்து ஆலயங்களில் சூர சங்காரம் இடம்பெறும். அந்த வகையில், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சூர சங்கார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

முருகப்பெருமானுக்கு விசேட அபிடேங்கள் இடம் பெற்று மங்கள வாத்தியம் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த முருகப்பெருமான் சூரனை வ தம் செய்து பக்தர்களுக்கு அருள் பா லித்து காட்சி கொடுத்தார்.

வவுனியாவில் நாமல் வழங்கிய உறுதிமொழி!!

வவுனியாவில் நாமல்..

ஜுலைக் க லவரம் முதல் தீ ர்க்கப்படாத பல பி ரச்சனைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். கா ணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன.

அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். அடுத்து வரும் 2 வருடங்களில் உங்களது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி வாழ் மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். நீங்கள் யு த்தத்தினால் பா திக்கப்பட்டவர்கள். யு த்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் வன்னி மண்ணை அபிவிருத்தி செய்தார்.

பாடசாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள் என பாரிய அபிவிருத்திகளை செய்தார். வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்கினோம். முல்லைத்தீவை சுற்றுலா மையமாக மாற்றினோம். விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்கினோம். மீனவர்களின் கடற்தொழிலுக்கான உதவிகளை வழங்கினோம்.

ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்து விட்டது. வன்னி வாழ் மக்களின் அபிவிருத்திகள் முற்றாக தடைப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் இதற்கு முழுமையான பொறுப்பு கூற வேண்டும். மன்னாரில் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கப்பட்ட தொழில்பேட்டை தற்போது மூடப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முழு நாடும் சி தைவடைந்துனள்ளது.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இன்றி அபிவிருத்தியை மேற்கொண்டாம். பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை அவரது அபிவிருத்தி திட்டம் இருந்தது. இன்று உங்களது விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லா பிரச்சனையுள்ளது. உங்களது பிள்ளையின் கல்வியில் பெரும் பா திப்பு ஏற்பட்டுள்ளது. வன்னி வாழ் மக்களின் கல்வி தொடர்பில் கோட்டபாய ராஜபக்ச அக்கறை செலுத்தியுள்ளார். எமது ஆட்சி வந்ததும் சகல பிரதேச செயலங்களுக்கும் உட்பட்ட வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவோம்.

2025 ஆம் ஆண்டாகும் போது ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு சென்று வேலைவாய்ப்பைக் பெற்றுக் கொள்ளக் கூடிய கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

அமைச்சர் றிசாட் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் செல்வதை நிறுத்துங்கள். உங்களது சிறந்த எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டத்தை உருவாக்குவோம். வன்னியில் உங்களுக்கு என ஒரு தமிழ் தலைமைத்துவத்தை உருவாக்குவோம். இந்த அரசாங்கத்தில் பல முக்கியமான தீர்மானங்களை றிசாட் பதியுதீன் மேற்கொள்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியவில்ல. அவர்கள் பணத்திற்கு அடிமைப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றோல் நிரப்பு நிலையம், ம துபானசாலை என்பவற்றுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனால் வன்னி மக்கள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு தேவையாக இருப்பது தங்களின் பெருளாதாரமே. அவர்கள் தங்களது சலுகைகளை மட்டுமே கதைப்பார்கள். சம்பந்தன் ஐயாவுக்கு வீடு தேவை என்றால் ஒரு கடிதத்தை வழங்குவார். அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு வாழ் மக்களுக்கு வீடு தேவை என்று கேட்பதில்லை. அரசாங்க அமைச்சர்கள் ஹெலிகெப்டரில் வந்து அடிக்கல் நாட்டிவிட்டு செல்வார்கள். அதற்கு பின் அந்த கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஒரு விமான நிலையத்தை திறந்தார்கள். அது வயல்நிலமாக இருக்கிறது. குறைந்தபட்சம் அதையாவது சரியாக செய்ய முடியவில்லை. நீங்கள் இனியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பீர்களாக இருந்தால் றிசாட் ஊடகாவோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாகவோ எந்தவித அபிவிருத்தியும் உங்களுக்கு வரமாட்டாது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மொட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள். நீங்கள் அனைவரும் தாமரை மொட்டு சின்னத்துடன் இணைந்து கொள்ளுங்கள். 1983 ஆம் ஆண்டு ஜுலைக் க லவரம் முதல் 2009 வரை தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும்.

காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சனை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். நாங்கள் சம்பந்தன் ஐயாவைப் போல் ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு கிடைக்கும் என பொய் சொல்ல மாட்டோம். நாங்கள் செய்ய முடியும் என்றால் செய்ய முடியும் என்போம்.

செய்ய முடியா விட்டால் முடியாது என்போம். இதனை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம். அடுத்து வரும் 2 வருடங்களில் உங்களது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தர முடியும். இதனை புரிந்து எமது கரத்தை பலப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.