கேரளாவை உலுக்கிய சம்பவம் : பிரபல நடிகை கு ற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு!!

நடிகை சரிதா நாயர்

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடியில் பிரபல நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் கு ற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தண்டனை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற சோலார் பேனல் முறைகேடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோ சடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பா லியல் தொ ல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோ சடி செய்ததாகவும் அவர் மீது 2009-ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டது. மோ சடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கு ற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி சரிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ப லி : உ யிர் தப்பி அனாதையான பிஞ்சுக் குழந்தை!!

இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வெவ்வேறு தலைமுறையினர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை 30ம் திகதி செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் டெங்கு நோயால் 29 வயதான சோனி என்ற பெண் உ யிரிழந்தை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மஞ்சேரியல் மாவட்டத்தைச் நிறைமாத கர்ப்பிணி பெண் சோனி, பிரசவத்திற்காக கடந்த 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செவ்வாய்க்கிழமை 28ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, குழந்தை தான் அந்த குடும்பத்தில் உயிருடன் இருக்கும் ஒரே உறுப்பினர். புதன்கிழமை தனது தாயின் உ டலை உறவினர்கள் மஞ்சேரியலுக்கு எடுத்துச் சென்ற நிலையில் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 16ம் திகதி டெங்குவால் பாதிக்கப்பட்ட சோனியின் கணவர் குடிமல்ல ராஜகட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குடும்பத்தில் முதல் நபராக டெங்குவிற்கு ப லியானார்.

இந்த துக்கத்திலிருந்து குடும்பம் மீளாத நிலையில், ராஜகட்டின் தாத்தா 70 வயதான Lingaiah-வும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 20ம் திகதி Lingaiah ப ரிதாபமாக வீட்டிலேயே உ யிரிழந்தார்.

டெங்கு நோய் சோனியையும், அவரின் 5 வயதான மகள் வர்ஷினியையும் விட்டு வைக்கவில்லை. அக்டோபர் 27ம் திகதி தீபாவளி அன்று டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட வர்ஷினி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, பிரசவத்திற்காக 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி சோனிக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29ம் திகதி ஆண் குழந்தை ஈன்ற சோனி, 30ம் திகதி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பமும் டெங்கு நோயால் உ யிரிழந்துள்ள நிலையில்.

டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் தேங்கி நிற்கும் நீர், அவர்களது வீட்டிற்கு அருகில் எங்காவது அமைந்திருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், தண்ணீரின் மாதிரிகள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தனது உ யிரை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சுர்ஜித் : இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நடந்த மாற்றம்!!

விழிப்புணர்வை ஏற்படுத்திய சுர்ஜித்

தமிழகத்தின் பல்லடத்தில் இலங்கை தமிழர்கள் வாழும் முகாம் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த 2 ஆழ்துளை கிணறுகளை சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து மூடியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் நடுக்காட்டுபட்டியை சேர்ந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உ யிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

இதோடு சுர்ஜித்தின் ம ரணம் பலருக்கும் ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருப்பூர் அடுத்த பல்லடம் அருகே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த 2 ஆழ்துளை கிணறுகளை சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து மூடினர்.

இதேபோல் காங்கயம், தொட்டிபட்டி, சகாயபுரம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தாசில்தார் கூறுகையில், திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கைவிடப்பட்ட அல்லது பயன்படுத்தாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!

கண்கலங்க வைக்கும் புகைப்படம்

தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் திகதி மாலை அவரது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

இதனால் அந்த குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்காத நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை உ யிரிழந்த நிலையில் மீட்டனர்.

அந்த குழந்தையின் உ டல் அழுகி சிதிலமடைந்திருப்பதால் உடனே பி ரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிலிருந்து சுர்ஜித்தின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சுர்ஜித் விழுந்து இ றந்த ஆழ்துளை கிணற்றிற்கு மாலை வைத்து, தாய் மற்றும் தந்தை வேதனையுடன் உள்ளனர்.

இதைக் கண்ட இணைவாசிகள் சிலர் வேதனையான கமெண்ட்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கே புதைக்கப்பாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் குழந்தை உ யிருடன் உள்ளான்… அவன் சுர்ஜித் கிடையாது : கண்ணீர் விட்டு அழும் பெற்றோர்!!

நித்தீஷ்

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உ யிரிழந்த சுர்ஜித்தின் புகைப்படத்துக்கு பதிலாக நித்திஷ் என்ற குழந்தையின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவதால் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் திகதி மாலை சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

அவனை உயிருடன் மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் நேற்று முன்தினம் ச டலமாகவே மீட்கப்பட்டான்.

இதற்கு முன்னர் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சுர்ஜித்துக்கு பதிலாக வேறு ஒரு சிறுவனின் டிக்டாக் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டன.

வேலூர் மாவட்டம் கொல்லமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் முனிவேல். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2 வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளார்.

இந்த குழந்தை டிக் டாக்கில் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் நித்தீஷின் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் உ யிரோடு இருக்கும் தங்கள் மகனின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவது வருத்தம் அளிப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் : அரசியல்வாதிகளுக்கு ஆப்பு?

டுவிட்டர்

உலகம் முழுவதும் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் டுவிட்டரில் வெளியிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெக் டோர்சி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தின் மூலம் எவருடைய கருத்து சு தந்திரத்தையும் ப றிக்க முயற்சிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இந்த முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

டுவிட்டர் நிறுவனத்தின் இந்த தீர்மானம் நவம்பர் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் இந்த தீர்மானம் இங்கிலாந்து பொதுத் தேர்தலில் பெரிய பா திப்பை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை இந்த தீர்மானம் மோ சமான முடிவு எனவும் பழமைவாதிகளை மௌனமாக்கும் நோக்கம் கொண்ட தீர்மானம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம்பின் தேர்தல் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 147 தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள்!!

வவுனியா மாவட்டத்தில் 147 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறுவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 5038 அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றது.

அதில் 4140 அஞ்சல் வாக்காளர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் வெளிமாவட்டத்திற்கு 147 அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 147 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மூலம் 147 வாக்கெடுப்பு நிலையங்களில் இவ் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவற்றுக்காக 47 உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர்களும், 142 தேர்தல் கண்காணிப்பாளர்களும் ஒவ்வொரு நிலையங்களிலும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இவ் அஞ்சல் வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. அத்துடன் இன்றும் நாளையும் வாக்களிக்க தவறியவர்கள் வருகின்ற மாதம் 7ம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வாக்களிக்க முடியும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 4 மற்றும் 5ம் திகதி அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் பதிவிட்டால் சிறைத் தண்டனை உறுதி : வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!!

பேஸ்புக்கில் பதிவிட்டால்..

தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சி றைத் த ண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எ ச்சரித்துள்ளது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையும் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சி றைத் த ண்டனை வழங்கப்படவுள்ளது.

எனவே குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வவுனியா நகரின் அழகை கெடுக்கும் கட்டாக்காலி மாடுகள் : போக்குவரத்திற்கும் இடையூறு!!

கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவதுடன் போக்குவரத்திற்கும் பல்வேறு நெருக்கடிகள் தினசரி ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம், வவுனியா – மன்னார் பிரதான வீதி, பட்டனிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் , குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடுவீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

நாங்கள் தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக அப்பகுதிக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்த பின்னர் கட்டாக்காலி மாடுகளை பிடித்துக் கொண்டிருந்தோம்.

மழை காரணமாக சிறிது காலம் நாங்கள் இச் செயற்பாட்டை நிறுத்தியிருந்தோம். இதன் காரணமாக மாடுகள் மீண்டும் வீதிக்கு வர ஆரம்பித்துவிட்டது.

கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக அப்பகுதிக்கு ஒலிபெருக்கி அறிவித்தல் வழங்கி மீண்டும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்.

அத்துடன் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் சமயத்தில் அதனை உரிமையாளர் உரிமை கோரும் பட்சத்தில் பிடிகாசு என ஒரு மாட்டிற்கு 600 ரூபாவும் அத்துடன் ஒவ்வொரு நாளுக்குமான பராமரிப்பு செலவும் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் வீதி ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்து இருவர் உண்ணாவிரதப் போ ராட்டம்!!

உண்ணாவிரதப் போ ராட்டம்

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் வீதியை தனியொருவர் ஆக்கிரமிப்பதாகவும் அதற்கு நகரசபை தலைவர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து இருவர் உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள விமானப்படை தளத்திற்கும், கிராமத்திற்கும் இடையில் செல்லும் வீதியை தனி ஒருவர் ஆக்கிரமித்து வீடமைப்பதாகவும் வீதியை போக்குவரத்து செய்ய ஏற்ற வகையில் நகரசபை சீர்செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாதிக்கப்பட்ட நபர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பெண் கருத்து தெரிவிக்கையில், யு த்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 28 வருடங்களாக இவ்விடத்தில் வசித்து வருகின்றோம். நகரசபை தலைவர் இப்பகுதியால் முச்சக்கர வண்டி செல்லும் வகையில் வீதிக்கு இடம் விடுமாறு கோரியதையடுத்து வேலியை அகற்றி இடத்தை விட்டு கொடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபைக்கு சொந்தமான இப்பாதையானது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நகரசபையில் அனுமதி பெறப்படவில்லை.

நகரசபை யாருக்கும் பக்கசார்பாக நடந்து கொள்ளவில்லை அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதரங்களை அடிப்படையாக கொண்டு நகரசபை செயல்படுகின்றது.

எதிர்காலத்தில் இ ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆ க்கிரமிப்பு பகுதிகள் மீளப் பெறப்பட்டு நிரந்தரமான பாதை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு!!

தபால் மூல வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வவுனியாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள 7வது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றோர் இன்று காலை 7.00 மணி முதல் வாக்களிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இன்றும் நாளையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேலையிலேயே பெருந்தளவான அரச ஊழியர்கள் தமது வாக்களிப்பு உரிமையினை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாரிய க டத்தல் முயற்சி முறியடிப்பு : ஒருவர் கைது!!

ஒருவர் கைது

சட் டவிரோ தமான முறையில் பீ டி இலைகளை வாகனமொன்றில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (31.10.2019) வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபய விக்கிரம அவர்களின் ஆலோசனைக்கமைய வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் கீழ் செயற்படும் போ தைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று காலை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது,

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியொன்றை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில் 1498.3 கிலோ கிராம் பீ டி இலைகளுடன் வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பீ டி இலைகள் இந்தியாவிலிருந்து கப்பல் மூலமாக மன்னாருக்கு எடுத்து வரப்பட்டு மன்னாரிலிருந்து பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்து கிளிநொச்சி , வவுனியா ஊடாக நீர்கொழும்பு நோக்கி எடுத்துச் செல்லப்படவிருந்த சமயத்திலிலேயே வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் கைப்பற்றியதாகவும்,

வாகனத்தினை சோதனையிடும் சமயத்தில் பொலிஸார் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக வாகனத்தின் பின்பகுதி முழுவதும் புகையிலை அடங்கிய 16 பைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த லொறி சாரதியான தேவவுவ பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் நடவடிக்கையில் ம து ஒழிப்பு பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் டி.என் மாரசிங்க மற்றும் பொலிஸ் சார்ஐன்களான காமினி (24907) , சமன் (34110) பொலிஸ் கொஸ்தபர்களான நிமல் (60064) , பலமுகேதர (82346) , பிரசன்ன (82662) , நலிந்த (80721) ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட பீ டி இலைகளை கிட்டத்தட்ட 45லட்சம் பெறுமதி வாய்ந்தவை என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் : 2வது மனைவியை தேடும் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி!!

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம்

காதலித்து திருமணம் செய்துகொண்ட முதல் மனைவி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை கட்டாயப்படுத்தி விவாகரத்து செய்ய முயற்சித்த ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வர ரெட்டி என்பவர் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, பிருதுலா பவானா என்கிற இளம்பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார்.

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவரும் 9 வருடம் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள தன்னுடைய பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள், அதனால் திருமணம் செய்துகொண்டு அதன்பின்னர் வீட்டிற்கு தெரியப்படுத்தலாம் என மகேஸ்வரா கூறியுள்ளார்.

அதற்கு பிருதுலா பவானாவும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, வீட்டிற்கு தெரியாமல் ஏப்ரல் 2018ல் இருவரும் திருமணம் செய்துகொண்டு செகந்திராபாத் பத்மராவ் நகரில் ஒன்றாக வாழத் துவங்கியுள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்து பவானாவின் பெற்றோர் அவர்களுடைய திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், மகேஸ்வர ரெட்டி தனது பெற்றோரிடம் திருமணம் குறித்து கூறாமலே இருந்துவந்துள்ளார். பெற்றோரிடம் அறிமுகப்படுத்துமாறு பாவனா கூறும் சமயங்களில் எல்லாம், ஏதேனும் ஒரு காரணம் கூறி உணர்ச்சிவசப்பட்டு மகேஸ்வர ரெட்டி சமாளித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் ஐபிஎஸ் தகுதி பெற்ற பிறகு, மகேஸ்வர ரெட்டியின் செயல்பாடுகள் முழுவதும் மாறியுள்ளது. தன்னுடைய பெற்றோர் திருமணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், ரகசியமாக விவாகரத்து செய்வதற்கு பணம் தருவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களுடைய சமூகத்தை சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு பிருதுலா பவானா மறுப்பு தெரிவித்ததால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் து ன்புறுத்திய மகேஸ்வர ரெட்டி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் ம னமுடைந்த பிருதுலா பவானா செப்டம்பர் மாதம் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அறிந்துகொண்ட மகேஸ்வர ரெட்டி, தனது பெற்றோருடன் பேசுவதாகவும், திருமணம் குறித்து கூறுவதாகவும் வாக்குக்கொடுத்து பிருதுலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் அடுத்த சில நாட்களில் தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு மகேஸ்வரா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் பிருதுலா கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பிருதுலா தன்னுடைய திருமண புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உதவி கேட்டு வருகிறார்.

மாணவியை து ஸ்பிரயோகம் செய்த சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

மீண்டும் விளக்கமறியல்

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை பா லியல் து ஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் த லைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதன்போது சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சிறுமி குறித்த மேற்பார்வை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இம்முறை சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பம் தொடுத்த போதிலும் நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்து வருவதுடன்,

எதிர்வரும் தவணையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளை சந்தேகநபர் சிறுமியை அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன், இதனையடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் அம்மாணவியை பா லியல் து ன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுவன் சுஜித் மீட்புப்பணிக்கு செலவான தொகை எவ்வளவா? தீயாக பரவும் தகவல்!!

சுஜித் மீட்புப்பணிக்கு..

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து ச டலமாக மீட்கப்பட்ட சிறுவனை மீட்பதற்கு செலவான தொகை தொடர்பில் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்பதற்கு ரூபாய் 5 லட்சம் செலவானது என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் மீட்பு பணியின் போது 5,000 லிற்றர் டீசல் மட்டுமே செலவானது எனவும் கூறியுள்ளார். குழந்தையை மீட்க 10 கோடி ரூபாய் செலவானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை எனவும்,

இது குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி மாலை மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க கடுமையாக போ ராடியும், இறுதியில் 80 மணி நேரத்திற்கு பின்னர் உ டல் சிதைந்த நிலையில் ச டலமாகவே மீட்கபட்டான்.

உடற்கூராய்வுக்கு பின்னர் நேற்று முன்தினம் காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்,

பொதுமக்கள் சுஜித்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.

இந்த நிலையிலேயே சமூக ஊடகங்களில் சுஜித் மீட்புக்கு செலவான தொகை குறித்து தகவல் பரப்பப்பட்டு, பெரும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தமிழகத்தில் தொடரும் அவலம் : மற்றுமொரு சிறுவன் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து ம ரணம்!!

மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயதான ருத்திரன் என்ற குழந்தை உ யிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகம் விருதுநகரில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் மனைவி நேத்ராதேவி, மூத்த மகன் கோவிந்தனுடன் ஓ.கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

இவரது இளைய மகன் ருத்ரன்(வயது 3) ஒண்டிப்புலிநாயக்கனுாரில் உள்ள தனது தாத்தா மணிகண்டன் வீட்டில் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், காலையில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் வீட்டின் முன் கட்டப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்தார்.

மழையால் தொட்டியில் நீர் நிரம்பி இருந்ததால் இதில் மூழ்கினார். ருத்ரனை தேடிய உறவினர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் இருப்பதை கண்டனர்.

உடனடியாக மீட்டு ஆமத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

எனினும், அதிகப்படியாக தண்ணீர் குடித்ததால் மூச்சுத்திணறல் அதிகமாகி உ யிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஆமத்துார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுவன் உ யிரிழப்பை ஏற்படுத்திய மழைநீர் சேகரிப்பு தொட்டி 5 அடி ஆழம் கொண்டது என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 25ம் திகதி திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயதான சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உ யிரிழந்த சம்பமொன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.