யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் சீன அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் இது மீட்கப்பட்டுள்ளது.
இது 600 – 700 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் என யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் பிரிவு பேராசிரியர் புஸ்பரட்ணம்தெரிவித்துள்ளார்.
இந்த மட்பாண்டம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆதிகாலம் முதல் நேரடி தொடர்பு காணப்பட்டதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மட்பாண்டம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சீன நாயணமும் இதற்கான சிறந்த உதாரணம் என அவர் கூறியுள்ளார்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மட்பாணம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் கிடைத்ததாகவும் அதனை சோதனையிட்ட பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நானுஓயாவில் கடந்த 13 நாட்களாக கா ணாமல்போயிருந்த பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நானுஓயா – டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் சிவன்ராஜ் என்ற 14 வயதுடைய மாணவரையே நானுஓயா ஆற்றிலிருந்து நேற்றைய தினம் ச டலமாக மீட்டுள்ளனர்.
குறித்த மாணவர் கடந்த 16ஆம் திகதியிலிருந்து கா ணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோரால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நானுஓயா பொலிஸாரும், தோட்ட மக்களும் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே, கொத்மலை ஓயாவுக்கு நீரை கொண்டு செல்லும் நானுஓயா ஆற்றின் மூங்கில் புதருக்கு அருகில் சிக்கியிருந்த நிலையில் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயாபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் 61 பேருக்கு டெங்கு பரவியுள்ள நிலையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா காரியாலயத்தின் மீது வவுனியா பொது சுகாதார பரிசோதர்களினால் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுவதுடன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 61 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்படுவதுடன், அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனத்தின் தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தினை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் டெங்கு நோய் பரவும் நிலையில் பல இடங்கள் காணப்பட்டன.
இதன் காரணமாக தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ் வழக்கானது எதிர்வரும் மாதம் 11ம் திகதி வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து உ யிரிழந்த இரண்டு வயது சிறுவனின் மரணம் உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மாத்திரமன்றி இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில் சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் சுர்ஜித் உ யிரிழப்பை அடுத்து தென்னிலங்கையிலுள்ள சிங்கள குடும்பம் ஒன்று அஞ்சலி செலுத்தியுள்ளது.
இனவாத ரீதியாக செயற்பட்டு வரும் சிங்கள மக்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உ யிரிழந்த சிறுவனுக்காக அஞ்சலி செலுத்தியமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் 4 நாட்களின் பின்னர் ச டலமாக மீட்கப்பட்டார். நேற்றைய தினம் பி ரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 81 மணி நேரத்திற்குப் பிறகு சுர்ஜித்தின் எ ச்சங்கள் இறுதியாக எவ்வாறு மீட்கப்பட்டன என்பது தொடர்பில் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், குழந்தையின் ம றைவு அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவர் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன் இ றந்திருக்க வேண்டும்.
உ டல் சேற்றில் மூ டியிருந்ததால் நாங்கள் இ றந்திருப்பார் என சந்தேகதித்தோம், அருகில் துளை தோண்டும்போது, உ டல் மேலும் கீழே நழுவிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் 25 முதல் 60 வரை விழுந்து பின்னர் 88 அடி வரை சென்றார்.
இதனால், சுர்ஜித்தின் உ டலில் இருபுறமும் அ டிபட்டு ப லத்த கா யம் ஏற்பட்டிருக்கும் என்று மீட்பில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறுகினார்.
அவர் உ யிருடன் வெளியே கொண்டு வரப்பட மாட்டார் என்பதை அறிந்த அரசாங்கம், குடும்பத்திற்கான ஆலோசனைகளை அளிக்க தொடங்கியது, அவர்களை மோ சமான நிலைக்குத் தயார்படுத்த முயன்றது.
சுஜித்தின் ம ரணம் குறித்த குறிப்புகள் திங்களன்று அரசாங்கத்திடமிருந்து கிடைத்தன என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். போர்வெல் இயந்திரத்தைப் பயன்படுத்துவது கூட விரைவான தீர்வுக்கு வழிவகுக்காது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், ம ரணத்தை முறையாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது.
அமைச்சர்கள் மற்றும் என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் இரவே இந்த திட்டத்தை அறிந்திருந்தனர் என்று வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
துர்நாற்றத்திற்குப் பிறகு எந்த நம்பிக்கையும் இல்லை. எனவே, அவரை வெளியே எடுக்க ஒரு கொக்கி பயன்படுத்தப்பட்டது, என்.டி.ஆர்.எஃப் நடைமுறைப்படி, குழந்தையை மீ ட்டெடுக்க அலுமினிய கம்பியை ஒரு கொக்கி கொண்டு பயன்படுத்தப்பட்டது.
ஆனால் கம்பி வெளியே கொண்டு வரப்பட்டபோது, து ண்டிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே வெளியே எடுக்க முடிந்தது.
உ டலைச் சுற்றியிருந்த சேற்றை நாங்கள் அகற்றியபோது, து ண்டிக்கப்பட்ட பாகங்கள் மட்டுமே இருந்தன என்று அந்த அதிகாரி கூறினார். தொடர்ந்து கீழே சென்றதால் உ டல் சே தமடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சுஜித்தின் உ டல் 81 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டன. மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர். புதூரில் உள்ள கல்லறையில் அவரது உ டல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குழந்தையை பறிகொடுத்த விரக்தியில் சுர்ஜித் தாய் மயங்கிய நிலையில் கிடக்க அவரருகில் நின்றிருந்த செவிலியர் சிரித்தபடி இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததில் இருந்தே அவன் தாய் கமலா மேரி மயக்க நிலையிலேயே இருந்தார்.
இந்நிலையில் குழந்தை இறந்து நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சுர்ஜித் குடும்பத்தாரை சந்திக்க அவர்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது மேரி மயக்க நிலையில் கட்டிலில் படுத்திருந்தார்.
பக்கத்திலேயே மருந்து மாத்திரைகள் வைக்கப்பட, சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதற்கான செவிலியர்களும் அங்கே இருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் மேரியின் உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டிருக்க, ஒரு செவிலியர் அங்கே சிரித்தபடி காணப்பட்டார்.
அவரது சிரிப்பை பலரும் கவனித்து புகைப்படமும் எடுத்துள்ளனர். குழந்தையை அடக்கம் செய்து ஒரு சில மணி நேரமே ஆகியிருந்த சமயம் அது.
எத்தனையோ தாய்மார்கள், மேரியின் மனநிலை அறிந்து 5 நாட்களாக கண்கலங்கி கொண்டிருந்த சூழலில், சம்பவ இடத்திலேயே செவிலியர் சிரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த செவிலியரை பலரும் திட்டி தீர்த்துள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள யங் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (30.10.2019) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குபற்றிய நிலையில் வவுனியா நகர் முழுவதும் சுமார் 800 க்கு மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன் கதிரேசு வீதி, வைரவர் கோவில் வீதி, வைரவப்புளியங்குளம் பகுதி போன்றவற்றிக்கான வீதி போக்குவரத்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் கடந்த 28.10.2019 அன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ உமாசுத குருக்கள் தலைமையில் ஆரம்பமானது .
காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர் .
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் புகுந்த வீட்டில் ஏற்பட்ட து ன்புறுத்தல் காரணமாக புதுமணப்பெண் ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் Chandrayangutta பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முபீன் பேகம் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் புகுந்த வீட்டில் கணவர் மற்றும் அவரது உறவினர்களால் தொடர்ந்து து ன்புறுத்தலுக்கு இ ரையாகி வந்துள்ளார் முபீன் பேகம்.
இந்த நிலையில், தமது பெற்றோரிடம் முறையிட வந்த முபீன் பேகம், குடியிருப்பில் யாரும் இல்லாத நேரம் தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், அவரது ச டலத்தை மீட்டு ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் சிறுவன் சுர்ஜித்தை காவுகொண்ட ஆழ்துளை கிணறை, அவரது பெற்றோரே விவசாயத்திற்காக தோண்டினார்கள் என்ற தகவல் உண்மையில்லை என சுர்ஜித்தின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, 5 நாட்களுக்கு பின்னர் ச டலமாக உ டல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில், சிறுவன் மரணத்திற்கு காரணம் அவரது பெற்றோரே எனவும், அவர்களே ஆழ்துளை கிணற்றை பயன்படுத்திவிட்டு மூடாமல் விட்டுவிட்டனர் என குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த சிறுவன் சுர்ஜித்தின் தாயார் கலா மேரி, குறித்த ஆழ்துளை கிணறானது, சுர்ஜித்தின் தாத்தா காலத்தில் தோண்டப்பட்டது எனவும், இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அந்த ஆழ்துளை கிணறு தோண்டும்போது சுர்ஜித்தின் தந்தை பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். மீட்புப் பணிகள் குறித்து ஊர் மக்களில் சிலர் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். ஆனால் சுஜித்தின் தந்தை, அரசாங்கம் நல்ல முயற்சி எடுத்தது, அனைவரும் துரிதமாக செயல்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி இம்மாதிரியான சம்பவம் முதலும் கடைசியானதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடைசி குழந்தை என்னுடையதாகவே இருக்கட்டும் என்றும் அவர் கண்கலங்க தெரிவித்துள்ளார்.
சுர்ஜித் உ யிருடன் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என சுர்ஜிதின் தாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“தனது மகனை எப்படியாவது உ யிருடன் மீட்க வேண்டும் என பலரும் போ ராடினார்கள். தமிழக அரசு சார்பிலும், முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அனைத்து தரப்பினர்களும் அருகிலேயே இருந்து சுர்ஜித்தை மீட்க வேண்டும் என அயராது பாடுபட்டிருந்தனர். இடையில் இருந்த பாறையினாலேயே சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுர்ஜித்திற்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரவே கூடாது. ஆகையினால், முன்னொரு காலத்தில் தோண்டப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூடப்பட வேண்டும்.
சுர்ஜித் என் வீட்டு பிள்ளை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எல்லோம் அவனை உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து பிராரத்தனை செய்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், உ யிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எ திராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுவோர் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் தமிழ் மொழியில் உரையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் த டை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் பட்டியிலில் மூன்றாவது இடத்தில் உள்ள, வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகீப் அல் ஹசனை கடந்த 2 வருடங்களுக்கு முன் சூ தாட்ட தரகர்கள் அணுகி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் இதுபற்றி ஷகீப் அல் ஹசன் ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் முறையிடவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு ஐசிசி சமீபத்தில் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் சூ தாட்ட த ரகர்கள் அணுகியது குறித்து ஷகீப் அல் ஹசன் ஐசிசியிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
வவுனியா பாவற்குளம் பகுதியில் பாம்பு தீண்டி 5 வயது சிறுவன் இ றந்தமைக்கு காரணம் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையே என கிராமவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாவற்குளம் படிவம் ஒன்று என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் (எஸ்.சுஜன்) பாம்பு தீண்டி கடந்த 20.10.2019 அன்று இ றந்துள்ளான்.
இத் துயர சம்பவம் இடம்பெற்றமைக்கு காரணம் அக்குடும்பத்தினருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையே என உறவினர்களும் கிராம மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கிராமத்தில் கோழிகூடு அளவில் இருக்கும் தகர குடிசையில் வசித்துவரும் கூலித்தொழிலாளி சுரேனிற்கு மூன்று பிள்ளைகள் அதில் மூத்த பிள்ளையாகிய சுஜனே உறக்கத்தில் இருக்கும்போது அரவம் தீண்டி இ றந்துள்ளார்.
இது தொடர்பாக பாவற்குளம் சனசமூக நிலையத்தின் தலைவர் அ.அலக்ஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த மூன்று வருடங்களாக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எமது கிராமத்தின் நிலை தொடர்பாக தெளிவுபடித்தியுள்ளோம்.
இருந்தபோதும் வீட்டுத்திட்டம் வழங்குவதில் அரசாங்கம் அசமந்தமாக செயற்பட்டமையே இந்தநிலைமைக்கு காரணம். இதுபோன்ற 10 உப குடும்பங்கள் எமது கிராமத்தில் கொட்டகைகளில் வசித்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த செட்டிக்குளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், குறித்த துயர சம்பவம் நடந்த குடும்பத்தினர் குடியிருக்கும் பகுதி நீர் வழிந்தோடும் பிரதேசமாகும். அதன் காரணமாகவே அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.
அந்த இடத்தை விட்டு வெறு ஒரு இடத்திற்கு அவர்கள் செல்லும் பட்சத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
கொழும்பில் இயங்கும் தனியார் ஹொட்டல் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு 7 இயங்கும் தனியார் ஹொட்டல் ஒன்று தன்னுடைய ஊழியர்களை தமிழில் பேச வேண்டாம் என்று த டை செய்திருக்கிறது. இது தொடர்பில் அந்த ஹொட்டலில் ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பலகையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “அனைத்து ஊழியர்களும் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மாத்திரமே பேசவேண்டும். கண்டிப்பாக தமிழில் பேசக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தப் அறிவிப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருவதுடன் க ண்டனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
இதுபெரும் ச ர்ச்சையாக உருவெடுக்கவே, “ எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் செய்த மு றைப்பாட்டின் அடிப்படையிலேயே இதை நாம் செய்தோம் . தமிழ் மொழியில் ஊழியர்கள் கதைக்கும் போது அது வாடிக்கையாளரை கி ண்டல் செய்வது போல தாங்கள் உணர்வதாக கூறியுள்ளார்கள்.
இதனால் தான் இந்த அறிவிப்பை வைத்தோம் ” என்று அந்த ஹொட்டல் இது தொடர்பில் விளக்கம் கொடுத்திருக்கிறது. எனினும் இது தொடர்பில் க டும் க ண்டனங்களை இணையவாசிகள் வெளிப்படுத்திவருகின்றார்கள்.