வவுனியாவில் இளைஞர் எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது ஜங்பைட் விளையாட்டுக் கழகம்!!

இளைஞர் எழுச்சி கிண்ணம்

2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் வவுனியா, ஜங் பைட் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவீகரித்து.

வவுனியா மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் 32 அணிகள் பங்குபற்றியிருந்தன.

குறித்த போட்டியானது நான்கு மைதானங்களில் நடைபெற்றிருந்த நிலையில் இறுதிப் போட்டி பழைய கற்பகபுர மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் வவுனியா, பாலாமைக்கல் ஜங்பைட் விளையாட்டுக் கழகமும், இராசேந்திரங்குளம் நியூவன் விளையாட்டுக் கழகமும் மோதின.

பரபரப்பான ஆட்டத்தில் இறுதி ஓவரில் பாலமைக்கல் ஜங்பைட் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

குறித்த போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பந்து வீச்சாளர், களத்தடுப்பாளர், துடுப்பாட்ட வீரர், சிறந்த அணி உள்ளிட்ட பல்வேறு கிண்ணங்களும் இதன்போது வழங்கப்பட்டது.

எழுச்சிக் கிண்ணத்தை முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், கூட்டணியின் இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணமேனன்,

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள், தினப்புயல் பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ச.பிரகாஸ், நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பசியின் கொ டுமையால் ம ரணத்தை தேட முயன்ற குடும்பம் : இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய பிரஜை!!

பசியின் கொ டுமை

இலங்கையில் பசியின் கொடுமையால் த ற்கொ லைக்கு முயன்ற குடும்பம் ஒன்றுக்கு ஐரோப்பாவில் வாழும் ஒருவர் இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார். த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு ஜேர்மன் வாழ் இலங்கையர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

அண்மையில் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் பசி  கொடுமையால் ர யிலில் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்தனர். எனினும் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு அவர்களை காப்பாற்றியிருந்தனர்.

இதுதொடர்பான செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்த நிலையில், ஜேர்மனில் வாழும் லால் குணவர்தன என்ற இலங்கைர் இந்த உதவியை செய்துள்ளார்.

தாம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், ஊடகங்கள் வாயிலாக இலங்கை குறித்து ஆராய்வோம். நாட்டில் வறுமையிலுள்ளவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்களின் தகவல்கள் நேற்று பொலிஸாரினால் திரட்டப்பட்டுள்ளது.

இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமரின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ளது

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்து துணைத்தூதுவர் ஈவா வான்வோசம், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் அமைச்சர் நவீனின் நிகழ்வில் மர்ம நபர்கள் செய்த மோசமான செயல்!!

மோசமான செயல்

வவுனியா நந்திமித்ரகமவில் நேற்று அமைச்சர் நவீன் திசாநாயக்க கலந்து கொண்ட நிகழ்விற்கு அருகில், மர்ம நபர்கள் காட்டுக்கு தீமூட்டியதால் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நந்திமிடிரகமவில் மீள்குடியேறிய மக்களிற்கு தென்னைகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்காக நவீன் திசாநாயக்க வந்த போது, நிகழ்விடத்திற்கு அண்மையிலிருந்த காட்டிற்கு இனம்தெரியாத சிலர் தீமூட்டியுள்ளனர்.

இதனால், எழுந்த கடுமையான புகை காரணமாக கூட்டத்தை நடத்த முடியாத நிலைமையேற்பட்டதுடன் அமைச்சர் நவீன் திசநாயக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருந்த விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன் அதிகாரிகளும், அந்த பகுதி மக்களும் தீயை அணைக்க கடுமையாக பிரயத்தனப்பட்டனர்.

புகை சூழ்ந்தபோதும், அமைச்சர் நவீன் திசாநாயக்க நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்தார். காட்டுக்கு தீமூட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரியின் மகள் சத்துரிக்காவின் வாகனம் விபத்து!!

விபத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் டிபெண்டர் பாதுகாப்பு வாகனம் ஒன்று புத்தல பகுதியில் விபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் டிபெண்டர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற சத்துரிக்கா சிறிசேனவின் வாகனத் தொடரணியில் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்ததுடன் விபத்து இடம்பெற்றபோது அந்த வாகனத்தில் சத்துரிக்கா பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை : தனியாக வாழ்ந்த மனைவிக்கு என்ன ஆனது? சிசிடிவியில் பதிவான காட்சி!!

சிசிடிவியில் பதிவான காட்சி

இந்தியாவில் காதல் மனைவியின் தலையை தனியாக வெட்டியெடுத்து சாலையில் கொண்டு சென்ற கொடூர கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபுகுமார் (30). இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே மருத்துவமனைவியில் மணி கிரண்டி (26) என்ற இளம்பெண் செவிலியராக பணிபுரிந்தார்.

பின்னர் இருவருக்கும் நட்பான நிலையில் அது காதலாக மாறியது, இதை தொடர்ந்து பிரபுவும், கிரண்டியும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது.

திருமணமான இரண்டாண்டுகள் வரை மண வாழ்க்கை நிம்மதியாக சென்ற நிலையில் பின்னர் தம்பதிக்கு இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த சூழலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் பிரபு தன்னை அடிக்கடி சந்தித்து து ன்புறுத்துவதாக கூறி கிரண்டி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து 20 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் பிரபு சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

இந்த சூழலில் நேற்று காலை கிரண்டி வீட்டுக்கு பிரபு வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தன்னிடம் இருந்த கத்தியால் கிரண்டி கழுத்தை பிரபு வெட்டி கொ லை செய்தார். பின்னர் வெட்டிய தலையுடன் பிரதீப் தெருவில் நடந்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றனர்.

அந்த தலையை அங்கிருந்த கால்வாயில் தூக்கி போட்ட பிரபு நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார், இதையடுத்து சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி கமெராவை பொலிசார் ஆய்வு செய்த போது பிரபு எந்தவித பதட்டமும் இன்றி மனைவியின் தலையை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்ற காட்சி பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இதனிடையில் பிரபுவால் கிரண்டி உயிருக்கு ஆபத்து என பலமுறை பொலிசில் புகார் கொடுத்தும் அவர்கள் சரியான பாதுகாப்பை தரவில்லை என கிரண்டியின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : வீடியோ அழைப்பில் கூறிய கடைசி வார்த்தை!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தமிழகத்தின் திருப்பூரில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ம னமுடைந்த இளம்பெண் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகள் 28 வயதான அனிதா என்பவரே தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டவர்.

அனிதாவிற்கும் கோவை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கோவையில் சில மாதங்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் குடும்பத்தினருக்கும் அனிதாவுக்கு வா க்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அனிதா கணவருடன் திருப்பூரில் உள்ள தனது தாய் வீடு அருகே குடியேறினார். அங்கு சில நாட்களில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் கோ பமடைந்த கணேசன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் திரும்பி வருவார் என்று காத்திருந்து ஏமாந்த அனிதா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை தனது தம்பி அசோக்கிற்கு வீடியோ அழைப்பு செய்து பேசியுள்ளார். அப்போது அக்காள் அழுவதும், மின்விசிறியில் து ப்பாட்டா தொ ங்குவதையும் பார்த்து அ திர்ச்சியடைந்தார்.

இது குறித்து கேட்க முயன்றபோது அனிதா போனை துண்டித்து விட்டார். மகள் ஓய்வு எடுத்துகொண்டுள்ளதாக வீட்டில் இருந்த தாய் சரஸ்வதி நினைத்தார். ஏதோ வி பரீதம் நடக்கப் போவதாக அச்சமடைந்த தம்பி இது குறித்து தனது தந்தைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

அ திர்ச்சியடைந்த தந்தை வீட்டுக்கு ஓடினார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா மின்விசிறியில் பி ணமாக தொ ங்கியதை அவர் பார்த்துள்ளார். மகளின் உ டலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து திருப்பூர் ஊரக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. செண்பகவள்ளி இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கு டிபோ தையில் நடிகையை அ டித்த கணவர் கைது!!

நடிகை ஸ்வேதா திவாரி

குடிபோ தையில் அ டித்து து ன்புறுத்துவதாக பிரபல இந்தி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார்.

அதன்பிறகு இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்தது. 2013-ம் ஆண்டு அபினவ் கோலியை ஸ்வேதா திவாரி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அபினவ்வுக்கு கு டிப்பழக்கம் இருந்தது. தினமும் போ தையில் வீட்டுக்கு வந்து ஸ்வேதா திவாரியுடன் ச ண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பி ரச்சினை ஏற்பட்டது.

குடும்பத்தினர் சமரசம் செய்துவைக்க முயற்சித்தும் பலன் இல்லை. இந்த நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காந்திவிலி போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில் அபினவ் தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து போ தையில் அ டித்து து ன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினவ்வை கைது செய்தனர்.

20 மாடி கட்டிடத்தில் இருந்து மகளை தள்ளிவிட்டு கொன்ற மொடல் : நடுங்க வைத்த சம்பவம்!!

நடுங்க வைத்த சம்பவம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரபல மொடல் ஒருவர் 20 மாடி கட்டிடத்தின் மேலே இருந்து மகளை தள்ளிவிட்டு கொ ன்ற பின்னர் தாமும் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்த அ திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 32 வயதான ஜோதி மலானி என்பவரே த ற்கொ லை செய்துகொண்டவர். 20 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மேலே இருந்து 7 வயது மட்டுமேயான தமது மகளை தள்ளிவிட்ட பின்னர் அவரும் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூருவின் ஜே.பி நகரில் இந்த அ திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த த ற்கொ லை சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவர் பங்கஜ் சுல்த்தானியுடன் ஜோதி வா க்குவாதத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பங்கஜ் தமது சகோதரரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார். பங்கஜ் குடியிருப்பில் இருந்து வெளியேறிய பின்னர், மகளை  தாமும் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஜோதியின் சகோதரரின் புகாரை அடுத்து பங்கஜ் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். 32 வயதான ஜோதி மலானி மிஸ் பெங்களூரு பட்டம் வென்றவர் மட்டுமின்றி, பிரபல மொடலாகவும் செயல்பட்டு வருகிறார்.

வவுனியாவில் 8 வயதுச் சிறுவனுக்கு எ மனாகிய சல்வார் தாவணி!!

சிறுவனுக்கு எ மனாகிய..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் க ழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் ம ரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக க ழுத்தில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த போது தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்துள்ளார்.

சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூ ச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டபோதும் அது பயனளிக்கவில்லை. சிறுவன் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்துள்ளார்.  குறித்த சிறுவனின் ச டலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (வயது 8) என்ற சிறுவனே ம ரணமடைந்தவராவார்.

குறித்த சிறுவனின் தந்தை கொ லைச் கு ற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் ம ரண த ண்டனை கை தியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொ லை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன்,

தந்தையார் தொடர்பில் மன அ ழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவுக்கு புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!!

வவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி.வெளிகள தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்த நயன் பிரசன்ன வெளிகள, வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமயத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழில் திடீரென மயங்கி விழுந்தவர் மரணம்!!

மயங்கி விழுந்தவர்..

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உ யிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

பழங்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்களை வழங்குவதாக எழுந்த போது அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான மூன்று இளைஞர்கள் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

நல்லூர் ஆலய வளாகத்தில்..

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் முஸ்லிம் இளைஞர்கள் என்பதால், நல்லூர் ஆலயத்திற்கு ஏன் வந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து : இளைஞரொருவர் மரணம்!!

திகாலை ஏற்பட்ட விபத்து

திருகோணமலையில், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

தோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான்(வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில் மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக் பயனாளர்களுக்கு மஹிந்த எச்சரிக்கை!!

பேஸ்புக் பயனாளர்களுக்கு..

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எட்டு வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு!!

பௌத்த மதகுரு

திருகோணமலையில் 8 வயது சி றுவன் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோமரங்கடவல, மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய, சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளனர்.

துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சி றுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், கை து செய்யப்பட்ட ம தகுருவை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.