எங்கள் வாழ்க்கையை அப்பா சீ ரழித்துவிட்டார் : வாட்ஸ்அப்பில் வந்த தகவல் : பதறியடித்து வந்தவருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தங்களின் இ றப்புக்கு காரணம் தந்தை தான் எனக் கூறிவிட்டு, மாணவி ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து தற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் மின் வாரியத்தில் பணிபுரிந்து வருபவர் சித்தய்யா(48). இவரது மனைவி ராஜேஸ்வரி(40) மற்றும் மகள்கள் மானசா(17), பூமிகா(15). இவர்கள் அனைவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

ஆனால், சித்தய்யாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்த சித்தய்யா, தனது மனைவியுடன் ச ண்டையிட்டு தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூத்த மகள் மானசா தனது மாமா புட்டசாமிக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் ‘ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீ ரழித்துவிட்டார். எங்கள் சா வுக்கு அவர்தான் காரணம்’ என்று இருந்தது.

இதனால் அ திர்ச்சியடைந்த புட்டசாமி, ப தறியடித்துக் கொண்டு சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது சகோதரி ராஜேஸ்வரி, மருமகள்கள் மானசா, பூமிகா மூவரும் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இ றந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக புட்டசாமி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மூவரின் உ டல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மாணவி : அங்கு வந்த பாட்டி கண்ட காட்சி!!

பாட்டி கண்ட காட்சி

இந்தியாவில் பெற்றோரை இழந்து பாட்டியுடன் வசித்த இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்னஸ்ரீ (18). இவர் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வசித்து வந்தார். ரத்னஸ்ரீ கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக வமிசெட்டி என்ற இளைஞர் அவருக்கு அடிக்கடி தொ ல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெங்கம்மா வெளியில் சென்றிருந்த நிலையில் ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட வமிசெட்டி ரத்னஸ்ரீ வீட்டுக்கு வந்து அவரை கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டி விட்டுசென்றார்.

இதனால் பயந்து போன ரத்னஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சி ம ருந்தை எடுத்து குடித்த நிலையில் சுயநினைவை இழந்து மயங்கினார். பின்னர் வீட்டுக்கு வந்த வெங்கம்மா தனது பேத்தி தரையில் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு ரத்னஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ரத்னஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வெங்கம்மா பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை?

முச்சக்கரவண்டிகளின்..

இலங்கையில் முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப பயண கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுயதொழில் புரிபவர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் சுனில் ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பானது முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளை பாதித்துள்ளது.

இதனால் கட்டண மீட்டரை அகற்றிவிட்டு பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் அதிகளவானோர் பெருமளவானோர் முச்சக்கரவண்டி பயணிகளாக உள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப பயண கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளமையானது அவர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் குழப்பம்!!

பாம்பு புகுந்ததால் குழப்பம்

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் பதற்றமடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஆணமடுவ – கண்ணங்கர முன்னோடி வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

பரீட்சை மண்டபத்திற்குள் சாரைப்பாம்பு ஒன்று திடீரென நேற்று புகுந்த காரணத்தினால் சொற்ப நேரத்திற்கு பரீட்சையை இடைநிறுத்த நேரிட்டுள்ளது. பரீட்சை மண்டபத்திற்குள் புகுந்த பாம்பும் குழப்பமடைந்து அங்கும் இங்கும் அலைமோத தொடங்கியதனால் மாணவ, மாணவியர் குழப்பமடைந்து கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பரீட்சையை நிறுத்திவிட்டு மாணவ, மாணவியரை சற்று நேரத்திற்கு மண்டபத்தை விட்டு வெளியேற்றிய, பரீட்சை மண்டப பொறுப்பாளர் பாம்பை துரத்திவிட்டு பின் மீண்டும் பரீட்சையை நடத்தியுள்ளார். அத்துடன் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு மேலதிக நேரமும் வழங்கப்பட்டுள்ளது.

மடு திருத்தல பகுதியில் இருளில் பிரகாசித்த நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளின் ஒளி!!

மெழுகுவர்த்திகளின் ஒளி

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற நவநாள் திருப்பலியை தொடர்ந்து இரவு மடு திருத்தலத்தில் மெழுகுவர்த்தி பவனி இடம்பெற்றுள்ளது.

இந்த பவனியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இன்று மாலை வேஸ்பர் ஆராதனையும், நாளைய தினம் காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கேற்க,

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து மடு அன்னையின் திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்க உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவனியும், ஆசியும் இடம்பெறவுள்ளது. மேலும், பாதுகாப்பு நிமித்தம் பொலிஸ், இராணுவம், கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடனட்டை பயன்படுத்துபவர்களுக்கு அ திர்ச்சித் தகவல்!!

கடனட்டை

இலங்கைக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் கடன் அட்டை மற்றும் இலத்திரனியல் பண பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அ திர்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவ்வாறான பொருட்கள் கொள்வனவின் போது அதற்கு வரி அறிவிட அரசாங்கத்தால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும் போது கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி கொடுப்பனவு செய்யப்படும் தொகையில் 3.5 சதவீதம் வரியாக அறவிடப்படும் என தெரியவருகிறது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விபத்து : இருவர் காயம்!!

விபத்து

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (14.08.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியூடாக யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென பிறேக் பிரயோகித்த சமயத்தில் காருக்கு பின்பாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கில் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் : தடைப்பட்ட ஏ9 வீதி போக்குவரத்து!!

வெள்ளை நாகம்

வவுனியா – தாண்டிகுளம் பகுதியில் வெள்ளை நாகத்தால் ஏ9 வீதிப்பகுதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (14.08) காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தாண்டிக்குளம் பகுதியில் வயல் வெளியில் இருந்து வெள்ளை நாகமொன்று வீதிக்கு வந்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியால் சென்றவர்கள் அனைவரும் குறித்த நாகத்தினை பார்வையிட குவிந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வெள்ளை நாகம் வீதியில் நின்ற மோட்டார்சைக்கிளொன்றுக்குள் ஒளிந்து கொண்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு நின்றவர்களின் முயற்சியால் அந்த வெள்ளை நாகமானது சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் காரணமாக ஏ9 வீதியில் சற்றுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை தவிசாளருக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்!!

துண்டுப்பிரசுரங்கள்

வவுனியா நகரசபையின் சுயாதீன தன்மையினை உறுதிப்படுத்துமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் நேற்று மதியம் நகரபையை அண்மித்த பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.

வவுனியா நகரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் தினச்சந்தைக்கு அருகே அமைக்கப்பட்ட மூன்று மாடி வியாபார நிலையம் நகரசபையின் சட்டத்திற்கு அமைவாக செயலாளரினால் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்து ஆரம்பத்தில் நகரசபையின் நடவடிக்கையினால் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து நகரசபை அறிவுறுத்தல் கடிதம் ஒன்று அங்கு ஒட்டப்பட்டிருந்தது பின்னர் நகரசபையை தவிசாளர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தற்போது அவ்வியாபார நிலையம் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு ஒட்டப்பட்ட நகரசபையின் தடை செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தல் புறந்தள்ளப்பட்டுள்ளது. அவ்வியாபார நிலையம் திறக்கப்படுவதற்கு நகரசபை தவிசாளர் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே இதில் தொடர்புபட்டுள்ள நகரசபை அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறு அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து நகரசபை தவிசாளர் இ. கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

குறித்த வியாபார நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டதால் எவ்விதமான நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க முடியவில்லை.

தற்போது அவ்வியாபார நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருன்றன.

நிச்சயமாக அவ்வியாபார நிலையம் தடை செய்ய என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

கணவருடன் விவாகரத்து : பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

கணவருடன் விவாகரத்து

இந்தியாவில் குடி போ தையில் ந கைக்காக சகோதரியை கொ லை செய்த நபரை பொலிசார் கை து செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சீதாலட்சுமியின் வீட்டருகில் அவர் சகோதரர் உறவான ரமணா ராவ் (36) என்பவர் வசித்து வந்தார். ம துவுக்கு அ டிமையான ரமணா அந்த பழக்கத்தை சீதாலட்சுமிக்கும் சொல்லி கொடுத்த நிலையில் இருவரும் தினமும் சேர்ந்து ம து அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போ தையில் சீதாலட்சுமி வீட்டுக்கு வந்த ரமணா அவரின் செயினை கழட்டி தரும் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவர் ம றுத்த நிலையில் சீதாலட்சுமியின் க ழுத்தை நெ ரித்து கொ ன்ற ரமணா பின்னர் அவரை தூ க்கில் தொ ங்கவிட்டு த ற்கொ லை நாடகமாடினார்.

ஆனால் சீதாலட்சுமியின் சகோதரர் சிவக்குமாருக்கு இந்த ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக தோன்றிய நிலையில் பொலிசில் பு கார் அளித்தார். பொலிசார் ரமணாவிடம் நடத்திய கி டுக்குபிடி வி சாரணையில் சீதாலட்சுமியை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவரை பொலிசார் கை து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை : முழுவிபரம் உள்ளே!!

அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 2 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 138.00 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 163.00 ரூபாயாகும். இதற்கு மேலதிகமாக சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 134 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வியாபாரி செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு மழை!!

வியாபாரி செய்த நெகிழ்ச்சி செயல்

கேரளாவில் தெருவோரமாக கடை நடத்தி வரும் வியாபாரி, பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய அனைத்து துணிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி பண்டிகையை வித்யாசமாக கொண்டாடியுள்ளார்.

பல வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 பெரிய வெள்ளப்பாதிப்புகள் கேரளாவை அ ழிவுப்பாதைக்கு விட்டு சென்றுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆகஸ்டு மாதம் அதற்கு அப்படியே மாறாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பெரிய அளவிற்கு பிரதிபலித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரளாவில் இதுவரை 72 பேர் உ யிரிழந்துள்ளார். மேலும், 58 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 2.5 இலட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நவ்ஷத் என்கிற தெருவோர கடை வியாபாரி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்திற்காக அதிகமான துணிகளை வாங்கி வைத்திருந்தார். அவை அனைத்தையும் தற்போது வெள்ளத்தால் பா திக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து தன்னுடைய பக்ரீத் பண்டிகையை வித்யாசமாக கொண்டாடியுள்ளார்.

கடந்த ஆண்டும் கேரளாவில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தின் போது, இதேபோல நவ்ஷத் தன்னுடைய கடையில் இருந்த துணிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் வைத்த இளைஞர் : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் சமீப காலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வெளியிடப்படு பலரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.

ஆபத்துடன் விளையாடும் இதுபோன்ற குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர் சிக்கியுள்ளார்.

பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் யூ டியூப் சேனலில் ‘திரில்’ வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க விபரீத வீடியோக்களை எடுத்து வந்துள்ளார்.

கடந்த ஜூன் 14 ஆம்ம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை 47 வீடியோக்களை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள் செயின்கள், காஸ் சிலிண்டர், பைக் போன்றவற்றை வைத்துவிட்டு, ரயில் வரும்போது அதனால் ஏற்படும் விளைவை உணராமல் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் யூ டியூப்பில் பார்வையாளர்கள் அதிகரித்து பணம் சம்பாதிக்க இவ்வாறு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமிரெட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் நேரலையில் தூ க்கில் தொ ங்கிய இளைஞர் : பதறிப்போன நண்பர்கள்!!

பதறிப்போன நண்பர்கள்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை செய்து வந்த இளைஞர் திடீரென பேஸ்புக் நேரலையில் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 27 வயதான சுபங்கர் சக்ரவர்த்தி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியை விட்டு பிரிந்து டெல்லியில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் நேரலை செய்த சுபங்கர், முதலில் தான் பணிபுரியும் சீருடையை அணிந்துள்ளார். அதன்பிறகு குளிரூட்டியின் மேல் ஏறி நின்று தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து, ‘ஐ லவ் யூ’ எனக்கூறியபடியே முத்தமிட்டுள்ளார்.

பின்னர் சரியாக உச்சரிக்காத ஒருவரின் பெயரை கூறிக்கொண்டே க யிற்றில் தொ ங்கியுள்ளார். அந்த சமயத்தில் இதனை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் அனைவரும் வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

இதற்கிடையில் சக்ரவர்த்தியின் நண்பர் சூர்யகாந்த் தாஸ், உடனடியாக பொலிஸாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்த கதவை உடைத்துக்கொண்டு சென்றனர்.

அங்கு தூ க்கில் தொங்கிக்கொண்டிருந்த சக்ரவர்த்தியின் உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

சகோதரியின் திருமணத்திற்காக ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர் : குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சோகம்!!

ஊருக்கு வந்த இளைஞர்

சகோதரியின் திருமணத்திற்காக ஆசை ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர் குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு.

இவர் தமது சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்பதால் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவே விஷ்ணு ஊருக்கு வந்துள்ளார்.

ஆனால் பேரிடர் விஷ்ணுவின் வீடு தேடி வரும் என்பதை அவர் கனவிலும் நினைக்கவில்லை. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கவளப்பாறை என்ற பகுதியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி பல குடும்பங்கள் மண்ணில் பு தைந்த நிலையில், விஷ்ணுவின் குடும்பவும் அதில் சிக்கியுள்ளது.

திருமண ஏற்பாடுகளால் மகிழ்ச்சி பொங்கி காணப்பட்ட குடியிருப்பு தற்போது வெறும் மணற் மேடாக மட்டுமே காட்சி அளிக்கின்றது. மணப்பெண் ஜிஷ்னா இல்லை, அவரது சகோதரர் விஷ்ணு இல்லை, தந்தை விஜயன் இல்லை, தாயார் விஷ்வேசுவரி இல்லை. நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையிலும், இதுவரை இந்த குடும்பத்தினரின் ச டலங்களை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.

வியாழனன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இந்த குடும்பத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பியது விஷ்ணுவின் சகோதரன் ஜிஷ்ணு மட்டுமே என தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ராணுவ முகாமில் பணியாற்றும் விஷ்ணு கடந்த வாரமே ஊருக்கு திரும்பியுள்ளார்.

பேய் மழையில் சிக்கி மாநிலம் முழுவதும் தவிக்கும் நிலையில், பகல் மொத்தமும் நண்பர்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த விஷ்ணு, இரவு சாப்பிட குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். ஆனால் அதன் பின்னர் விஷ்ணுவை அவரது நண்பர்கள் இதுவரை கண்டதில்லை என கண்ணீர் பொங்க தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதலியுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ள தர்ஷன்!!

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரம் தான் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக வலம் வந்தவர் தர்ஷன். இவர் வனிதாவை எ திர்த்து பேசியதிலிருந்து யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார் என்று மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டு வந்தார்.

இவருக்கென தனியாக ஆ ர்மி தொடங்கப்பட்டது. இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பலரே கூற தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், அவர் நடிக்கவுள்ள ஒரு திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரீலீங் பக்ஸ் புரடெக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் தர்ஷன் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘மேகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தர்ஷனின் நிஜமான காதலியான சனம் ஷெட்டியே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

ஏற்கனவே, சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.