வவுனியா பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் ரததோற்சவத் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த பண்டாரிகுளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் 14 ஆம் நாளாகிய இன்று ரததோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மகோற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ சதாசங்கரதாஸ் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராகுலசர்மா ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள், அபிஷேகங்கள் இடம்பெற்று முத்துமாரி அம்மன் உள்வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்துடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வெளி வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாளித்தார்.
பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் வவுனியாவின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தேங்காய் அடித்தும், கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர்.
பால் காவடி, தூக்கு காவடி என்பன எடுத்தும் அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர். பக்தர்களின் அரோகரா கோசத்துடனும், பக்திப் பஜனைகளுடனும், மேளதாளங்களும் ரத்தில் வலம் வந்த முத்துமாரி அம்மன் பக்தர்களுக்கு அருளினை அள்ளி வழங்கினார்.
உகாண்டாவில் குப்பை பொறுக்கும் ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவனை பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் பண உதவி செய்து படிக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா ராம்சே என்கிற சிறுமி தன்னுடைய 18 வயதில் உகாண்டா நாட்டிற்கு பள்ளியிருந்து சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு குப்பை பொறுக்கி கொண்டிருந்த ஜூலியஸ் முயோம்பியா என்கிற 18 வயது சிறுவனை சந்தித்துள்ளார். ஒரு அறை மட்டுமே கொண்ட அவனுடைய வீட்டில் 6 பேர் ஒன்றாக உறங்கி வந்துள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அவர்களுடைய வீட்டில் கிடையாது.
அந்த சிறுவனுக்கு சிறிதளவு மட்டுமே ஆங்கிலம் பேச முடியும். அவனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என நினைத்த கிறிஸ்டினா, வேல்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவனின் குடும்ப புகைப்படத்தை அனுப்பி அவன் படிக்க விரும்புவதாக கடிதம் எழுதினார். அதேசமயம் சிறுவனுக்கு குடும்பத்திற்கு புதிதாக ஒரு வீடு கட்டிக்கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த அந்த ஆசிரியர்கள் மற்றும் நகரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி சிறுவனை வேல்ஸ் நாட்டிற்கு வரவழைத்தனர். அங்கு அவன் தங்குவது மற்றும் மேல் படிப்பு என செலவுகள் அனைத்தையும் வேல்ஸ் நாட்டில் இருந்த மக்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.
குடும்ப கஷ்டத்தை நினைத்து பலமுறை அழுதாலும், கடினமான படித்து தற்போது வேல்ஸில் உள்ள பாங்கூர் பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் சட்ட பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஜூலியஸ், தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி குடிசையில் வாழும் மக்களுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத்துடன் உகாண்டாவில் அரசியல் வாழ்க்கையைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்த 10 வயது சிறுமி பார்ப்பதற்கு பாட்டி போல இருப்பதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். கம்போடியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் போ ராக்கிங் என்கிற 10 வயது சிறுமி. இவர் பிறக்கும் போதே சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்துள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்று அவருடைய பெற்றோருக்கு தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த துறவிகள் அவர் முன் பிறவியில் செய்த ஒரு பாவத்தின் காரணமாகவே இந்த தோற்றத்தினை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
முகத்தில் வயதானவரை போல இருந்தாலும், போ இன்னும் ஒரு குழந்தையின் உடலமைப்பைக் கொண்டிருக்கிறார். அவரது சகோதரர் சே (11) மற்றும் வயது ஒத்த சிறுவர்களின் அதே உயரத்தில் இருக்கிறார்.
போ இதுவரை எந்த ஒரு மருத்துவர்களின் ஆலோசனையையும் பெறவில்லை. ஆனால் தற்போது முகமாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள ஆசைப்படுகிறார். இதுகுறித்து பேசிய போ, உடன் பிறப்புகள் முதற்கொண்டு அனைவரும் என்னுடைய முகத்தை கேலி செய்கின்றனர்.
என்னை யாரும் சகோதரி என்று அழைப்பதில்லை, அதற்கு மாறாக பாட்டி என்று அழைக்கிறார்கள். எனக்கும் அழகான முகம் தேவைப்படுகிறது. மற்ற அனைவருமே நல்ல முகத்துடன் இளமையாக இருக்கின்றனர். ஆனால் நான் மட்டும் தான் இப்படி வயதான முகத்துடன் இருக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் தற்கொ லை செய்துகொண்ட வழக்கில், கர்ப்பிணி பெண் ஒருவர் கூட்டு து ஸ்பிர யோகம் செய்யப்பட்டுள்ள அ திர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென தற்கொ லை செய்துகொண்டு இ றந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இளைஞரின் செல்போன் அழைப்புகளை வைத்து பெண் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் அ திர்ச்சி தரும் தகவல் ஒன்றினை கூறியுள்ளார். ஜூலை மாதம் 13ம் திகதியன்று கர்ப்பிணியாக இருந்த அந்த பெண், தற்கொ லை செய்துகொண்ட இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென ஆ யுதங்களுடன் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இளைஞரை கொ டூரமாக தா க்கியுள்ளனர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே சுயநினைவிழந்து தரையில் சரிந்தார். உடனே அந்த கர்ப்பிணியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று பா லியல் து ஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
பின்னர் தன்னுடைய நண்பர்களை வரவழைத்து மீண்டும் அதே கொ டூரத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பெண்ணின் கரு கலைந்துள்ளது. இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என கருதிய அந்த பெண் மூடிமறைத்துள்ளார்.
இதற்கிடையில் காதலியை காப்பாற்ற முடியாத காரணத்தால் வி ரக்தியில் அந்த இளைஞர் தற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சுனில் சர்போட்டா, விகாஸ், நரேஷ் குர்ஜார், விஜய் மற்றும் ஜிதேந்திர சர்போட்டா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.
இலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்படாத பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலாபத்தில் நேற்று முன்தினம் இந்தப் பறவை இனங்கண்டுள்ள நிலையில், பிரதேச மக்கள் இணைந்து பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இரவில் இந்த பறவை முத்துபன்த்திய பகுதிக்கு வந்துள்ளது. கழுகின் பதத்தை கொண்டுள்ள இந்த பறவை, 109 சென்றிமீற்றர் நீளத்தில் உடல் அமைந்துள்ளது. இந்த பறவை தொடர்பில் தகவல்களை பெற வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இது போன்ற ஒரு பறவையை இதற்கு முன்னர் ஒரு போதும் இலங்கையில் அவதானித்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது. பறவையின் உடலில் சிறு கா யங்கள் காணப்பட்டமையினால் வனவிலங்கு அதிகாரிகள் சி கிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று குடியேறுவதற்கு, விண்ணப்பிக்கும் குறித்த நபர் அதிகபட்ச வருமானத்தை கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையை அமெரிக்க நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், இவ்வாறு அமெரிக்காவின் கிரீன் கார்ட்டுக்காக விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்க அரசின் மருத்துவ காப்பீடு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை சார்ந்திருக்காமல், அதிகபட்ச வருமானத்தை கொண்டவராக இருக்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுடன், அமெரிக்க அரசின் நலத்திட்டங்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வரும் நிலையில் இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்ற போதிலும் இதனால் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்கள் சுமார் நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று(14.08.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் அவரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பதாதைகளுடனும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று 14.08.2019 (புதன்கிழமை) அவர்கள் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர் வாக்குகளை வைத்து தொடர்ந்தும் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர், சுமந்திரனே ரணிலுக்கு நக்கியது போதும் நீ வாக்குறுதியளித்தபடி உடனடியாக ராஜினாமா செய், எனது ராஜினாமா தமிழர் அரசியல் தீர்வு போன்றதா?,
எங்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை சஜித் அல்லது கோத்தாவுக்கு வாக்களிப்பதால் பயன் இல்லை போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க போராட்டம் இடம்பெறும் வீதியூடாக வருகைதருவார் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எனினும் பிரதமர் மாற்று வீதியினூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கட்டிட திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட இடத்திலிருந்து பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக ஏ9 வீதியூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை நோக்கி சென்றனர்.
இதன் போது பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக கலகம் தடுக்கும் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் ,பொலிஸார் குவிக்கப்பட்டு ஏ9 வீதியினை பொலிஸாரின் பேரூந்தினால் மறித்து பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.
பிரதமரை தாம் சந்திக்க வேண்டுமென பேரணியான வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலதடவைகள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்த போதிலும் பொலிஸார் முன்நோக்கி செல்ல அனுமதி வழங்கவில்லை.
அவ்விடத்திடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பிரதமர் மீண்டும் செல்லும் போது போராட்டம் இடம்பெறும் பாதையூடாகவே பயணிப்பார் என வாக்குறுதியளித்தார். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று செல்லவில்லை.
அதன் பின்னர் இங்கு நின்று பலனில்லை என கருதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீண்டும் அவ் வீதியூடாக 907வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்தினை சென்றனர்.
தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி, போராட்டம் இடம்பெறும் இடம் , ஏ9 வீதி போன்றவற்றிக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14.08) வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார்.
வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகுக்கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்றய தினம் பிற்பகல் 3 மணிக்கு வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன் முதல் நிகழ்வாக புதிய கட்டடத்திற்கான நினைவு திரைச்சீலையை பிரதமர் ரணில் மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்ன, நெதர்லாந்து நாட்டின் துனைதூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிவமோகன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் மருத்துவர்கள், அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா செட்டிகுளம் அரசடிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து இன்று (14.08.2019) மாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
மனைவி வேலைக்கு சென்று மதியம் வீடு திரும்பியபோது கணவரை வீட்டில் காணவில்லை. அதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் உள்ள 4ம் வாய்க்கால் காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட சமயத்தில் குறித்த நபர் காட்டுப்பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து செட்டிகுளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கட்டுத்துவக்கு வெடித்ததில் இவர் உ யிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பிரதே பரிசோதனைகளுக்காக ச டலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று(14.08.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் அவரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டம் இன்று 14.08.2019 (புதன்கிழமை) அவர்கள் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர் வாக்குகளை வைத்து தொடர்ந்தும் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர், சுமந்திரனே ரணிலுக்கு நக்கியது போதும் நீ வாக்குறுதியளித்தபடி உடனடியாக ராஜினாமா செய், எனது ராஜினாமா தமிழர் அரசியல் தீர்வு போன்றதா?,
எங்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை சஜித் அல்லது கோத்தாவுக்கு வாக்களிப்பதால் பயன் இல்லை போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க போராட்டம் இடம்பெறும் வீதியூடாக வருகைதருவார் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எனினும் பிரதமர் மாற்று வீதியினூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கட்டிட திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட இடத்திலிருந்து பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக ஏ9 வீதியூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை நோக்கி சென்றனர்.
இதன் போது பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக கலகம் தடுக்கும் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் ,பொலிஸார் குவிக்கப்பட்டு ஏ9 வீதியினை பொலிஸாரின் பேரூந்தினால் மறித்து பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.
பிரதமரை தாம் சந்திக்க வேண்டுமென பேரணியான வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலதடவைகள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்த போதிலும் பொலிஸார் முன்நோக்கி செல்ல அனுமதி வழங்கவில்லை
அவ்விடத்திடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பிரதமர் மீண்டும் செல்லும் போது போராட்டம் இடம்பெறும் பாதையூடாகவே பயணிப்பார் என வாக்குறுதியளித்தார். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று செல்லவில்லை.
அதன் பின்னர் இங்கு நின்று பலனில்லை என கருதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீண்டும் அவ் வீதியூடாக 907வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்தினை சென்றனர்.
தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி, போராட்டம் இடம்பெறும் இடம் , ஏ9 வீதி போன்றவற்றிக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்கா கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்க்கச் சென்ற பிரித்தானியா மொடல் மற்றும் கல்லூரி மாணவி ம ர்மமாக கொ ல்லப்பட்ட சம்பவத்தின் விசாரணை முடிவில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுலா சென்ற 19 வயதான சினேட் மூட்லியர் என்ற பிரித்தானியா மாணவி ம ர்மமான முறையில் இ றந்தார்.
கேம்பிரிட்ஜில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் மொடல் மற்றும் தத்துவ படிப்பு பயிலும் மாணவி, சம்பவத்தன்று டர்பனுக்கு அருகிலுள்ள உம்லானாகா ராக்ஸில் சூரிய உதயத்தைப் பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கரையில் இருந்த சினேட்டை சக்திவாய்ந்த அலை தாக்க, அவர் பாறை மீது மோதியுள்ளார், பின்னர், அலை அவரை கடலுக்குள் இழுத்துச்சென்றுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், கேம்பின் வில்பர்டனைச் சேர்ந்த சினேட்டின் பெற்றோர்களான பாப் மற்றும் நொலன் மூட்லியருக்கு, 19 வயது மகள் கடலில் இழுத்துச்செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால், பின்னர் மருத்துவமனையில் சினேட் இ றந்தார்.
நொலன் மூட்லியர் தனது மகள் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு உணவகத்தில் இருந்தபோது போனில் பேசியதாகவும், அவர் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றினார் என்றும், பின்னர் அவர் கடற்கரைக்குச் சென்றார் என்றும் கூறினார்.
அருகிலுள்ள டர்பனில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பாறையைத் தாக்கியதில் தலையில் காயம் இருப்பதையும், கிட்டத்தட்ட நீரில் மூழ்கிய பின்னர் ஏற்பட்ட பாதிப்புகளால் அவர் இறந்துவிட்டதையும் கண்டறியப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் நீர்க்குடம் உடைந்து வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியை ஆட்டோவில் செல்வதற்கு இந்திய இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்தே அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதிகளவிலான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தினம்தோறும் மக்கள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் இராணுவத்தின் அத்துமீறலுக்கு இடையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்டு 8ம் திகதியன்று இந்திய இராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதில் நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய ஏராளமான எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சாட்சிகள் தெரிவிக்கின்றன. பெல்லட் குண்டுகள் மூலம் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுமி உட்பட பலருக்கும் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இன்ஷா அஷ்ரப் (26) என்பவருக்கு திடீரென தண்ணீர்குடம் உடைந்துள்ளது. உடனே இன்ஷாவின் தாய் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை அழைத்து வந்துள்ளார்.
அவரும் மருத்துவமனை கொண்டு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். ஆட்டோவில் இன்ஷா அவருடைய அம்மா முபீனா மற்றும் சகோதரி நிஷா ஆகியோர் புறப்பட்டுள்ளனர். சிறுது தூரம் சென்றதும் ஆட்டோவை நிறுத்திய இந்திய இராணுவ வீரர்கள் இதற்கு மேல் ஆட்டோவில் செல்லக்கூடாது, நடந்து தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். கர்ப்பிணி ஒருவர் வலியால் துடித்து கொண்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர் நீண்ட நேரம் கெஞ்சியும் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.
பின்னர் 8 கிமீ அங்கிருந்து நடையாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஒவ்வொரு இடத்திலும் அனுமதி மறுத்து சுற்றுப்பாதையிலே மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளனர். 500மீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்த போது நடக்க முடியாமல் இன்ஷா தரையில் அமர்ந்துள்ளார்.
உடனே அவரை கைத்தாங்கலாக அவருடைய சகோதரியும், அம்மாவும் அழைத்து சென்றனர். அங்கு இன்ஷாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அங்கு நிலவும் இணையதள முடக்கம் காரணமாக இந்த தகவல் இன்னும் இன்ஷாவின் கணவருக்கு சென்றடையவில்லை என அவருடைய மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்ணொருவர் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் ச டலத்தை யாரையும் தொட விடாமல் வளர்ப்பு நாய் பாதுகாத்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தனசேகர் (40). வாட்டர் கேன் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தனசேகர் தொழில் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி கொடுக்க முடியாமல் திணறினார்.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனசேகர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு திடீரென தலைமறைவானார். இதனால் கடன் கொடுத்தவர்கள் ராதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தொ ந்தரவு செய்து வந்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த ராதா வீட்டில் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதாவின் உ டலை மீட்க முயன்றனர். அப்போது ராதா பாசமாக வளர்த்த நாய் ராதாவின் ச டலத்தை எடுக்கவிடாமல் ச டலத்தின் மீது படுத்து கண்ணீர் வடிந்தபடி பொலிசாரை பார்த்து குரைத்தது.
பின்னர் ஒரு வழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பொலிசார் ச டலத்தை மீட்டனர். எஜமானர் இ றந்துவிட்டதை அறிந்த நாய் ச டலத்தை எடுக்கவிடாமல் செய்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
சிலைக்க டத்தல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தமிழ் பெண் சென்னை விமானத்தில் பொலிசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டில் சிலைக்கடத்தல் புகாரில் தீனதயாளன் என்பவரும் அவரது கூட்டாளியான புஷ்பராஜனும் கைது செய்யப்பட்டனர்.
தீனதயாளனின் வீடு மற்றும் கிடங்கிலிருந்து ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தன் பங்குக்கு 14 சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார் புஷ்பராஜன். இதோடு புதுச்சேரியைச் சேர்ந்த மரிய தெரசா என்பவரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்தச் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து உடனடியாக களமிறங்கிய பொலிசார் மரிய தெரசா வீட்டை சோதனையிட்டது. அவர் வீட்டு கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 பழங்கால சாமி சிலைகள் சிக்கின. எஞ்சிய 3 சிலைகளோடு சேர்த்து மரிய தெரசாவையும், அவரது கணவர் விஜய்யையும் காணவில்லை.
பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மரிய தெரசாவும் விஜயும் பிரான்சுக்கு தப்பிய நிலையில் அங்கு சொகுசாக வாழ்ந்துள்ளனர். தப்பியோடிவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அவர்களைப் பிடிப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனினும் காவல்துறையின் முயற்சிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே தற்போது பலன் கிடைத்துள்ளது.
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த மரிய தெரசா விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளிடம் நேற்று சிக்கிக்கொண்டார். இதையடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மரிய தெரசாவின் மோ சடிகள் குறித்து மேலும் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் தன் மனைவியை திரும்ப கிடைப்பாரா என்று தன் 12 வயது மகனுடன் கணவன் காத்திருக்கும் சம்பவம் நெஞ்சை உருக்க வைத்துள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 8ஆம் திகதி, வயநாட்டிலுள்ள பச்சக்காடுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வீடுகளோடு அதில் வாழ்ந்து வந்த மக்களும் அடியோடு புதைந்துவிட்டனர்.
இதுவரை பத்து பேரின் உ டல்கள் அங்கிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். இன்னும் எட்டு பேரின் உ டல் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், லாரன்ஸ் என்பவரின் மனைவி ஷைலாவும் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் லாரன்ஸ் தன் மனைவி திரும்ப வருவாரா தன்னுடைய 12 வயது மகனுடன் முகாமில் காத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை வீட்டில் விட்டு சென்றேன்.
கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. அங்கு என் மனைவி மற்றும் மகனை அங்கு காணவில்லை, தற்போது என்னுடைய 12 வயது மகனை கண்டுபிடித்துவிட்டேன், அவனுடன் தான் இப்போது வயநாட்டில் இருக்கும் நிவாரண முகாமில் தங்கியிருக்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
மோசடி வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுருதி குறித்த அவதூறு தகவல்களை இணைய தளத்தில் இருந்து நீக்குவது குறித்து ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அவரும் வருங்கால மனைவி தானே கேட்கிறார் என பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சுருதி பாலமுருகன் தொடர்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலமுருகன் உணர்ந்தார்.
இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் சுருதி, வாடகை தாய் சித்ரா, தந்தை எனப்படும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே பாணியில் வெளிநாட்டில் வாழும் பல தமிழர்களை சுருதி ஏமாற்றியுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சூழலில் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஜாமீனில் விடுதலையாகியுள்ள சுருதி, இணையதளங்களில் தன்னை பற்றி புகைப்படங்களுடன் கூடிய அவதூறான செய்தி வெளியாகி உள்ளதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுருதியின் கோரிக்கை மனுவை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.