புற்றுநோய் பாதித்த மகனின் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த இளம்தம்பதி : குவியும் பாராட்டுகள்!!

இளம்தம்பதி

கேரளா பலத்த மழையால் தத்தளித்து வரும் நிலையில் சிறுவனின் புற்றுநோய்க்காக வைத்திருந்த பணத்தை அவர் குடும்பத்தார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் எர்ணாக்குளத்தை சேர்ந்த அனஸ் என்பவரின் குடும்பம் ஒரு நெகிழ்ச்சியான விடயத்தை செய்துள்ளது. அனஸ் – ராஜீலா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான 4 வயது சிறுவன் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறந்தான்.

இதோடு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறுவனை புற்றுநோய் தாக்கியது. இதற்கான சிகிச்சைக்கு சேமித்து வைத்த பணத்தை அனஸ் – ராஜீலா தம்பதி முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுக்கவுள்ளனர்.

இவர்களின் நெகிழ்ச்சியான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அனஸ், அடுத்த வெள்ளிக்கிழமை எங்கள் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

எங்களுக்கு நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது, ஆனாலும் கேரளா மழையில் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு முன்னால் இது சாதாரணம் என நினைக்கிறேன். இதற்காக நிதியுதவி செய்யவுள்ளோம், நிச்சயம் இந்த துயரத்தில் இருந்து கேரளா மீண்டு வரும் என நம்புவதாக கூறியுள்ளார்.

இதனிடையில் இந்த விடயத்தை கேள்விப்பட்ட கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா, அனஸுடன் தொலைபேசியில் பேசியதோடு அவர் மகனின் சிகிச்சைக்கு உதவ உள்ளதாக கூறியுள்ளார்.

கொழும்பில் இருவர் கொ டூரமாக வெ ட்டிக் கொ லை!!

வெ ட்டிக் கொ லை

கொழும்பில் இன்று மாலை இருவர் வெட்டிக் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பே கல்லறை பகுதியில் கூர்மையான ஆ யுதங்களில் குத்தி கொ லை செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள குழுக்கள் இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக இந்த கொ லைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 4.35 மணியளவில் முச்சக்கர வண்டிகள் இரண்டில் வந்த மர்மநபர்கள், குறித்த இருவரையும் கொ லை செய்துள்ளனர்.

ஒரு முச்சக்கரவண்டியில் வந்த 4 பேரினால் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் மீது கூர்மையான ஆ யுதங்களால் தா க்கி இந்த கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினராக ஆனமாலு ரங்க உட்பட இருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூறு ரூபாய் பணத்திற்காக அக்காவின் கண்ணை தோண்டி வெளியே எடுத்த தம்பி : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

இந்திய தலைநகர் டெல்லியில் 100 ரூபாய்க்கு உடுப்பு வாங்கியதற்காக அக்காவின் கண்களை தோண்டி தம்பி வெளியே எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் துவாரகா பகுதியிலேயே 17 வயது சிறுவனின் கொடூரத்திற்கு 20 வயதான சிறுமி இரையாகியுள்ளார்.

100 ரூபாய் அளவுக்கு உடுப்பு வாங்கியதாலையே சிறுவன் அவனது அக்காவை கொ டூரமாக தா க்கியதாகவும், பின்னர் அவரது கண்களை தோண்டி வெளியே எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் அப்போது இருந்த மகளிர் அமைப்புகளே சிறுமியின் அலறல் கேட்டு காப்பாற்றியுள்ளனர்.

அதிரவைக்கும் இச்சம்பவம் நடந்த வேளையில், சிறுமியின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குடியிருப்புக்கு உள்ளே நுழைய முயன்ற மகளிர் அமைப்பு உறுப்பினர்களையும் சிறுவன் தா க்க முயன்றுள்ளான்.

இதனிடையே அறையில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமியை மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் மீட்டுள்ளனர். பின்னர் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் முறையிட்டு சிறுமியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனின் து ன்புறுத்தலால் சிறுமியின் முகம் வீங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ர த்தம் அதிகமாக வெளியேறியதால் சிறுமி மருத்துவமனை கொண்டு சென்ற வேளையில் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

எனது மொத்த உயிரும் மண்ணுக்குள் புதைந்து விட்டது : மகன், காதல் மனைவியை பறிகொடுத்த இளைஞன் கதறல்!!

இளைஞன் கதறல்

இந்திய மாநிலம் கேரளாவில் நிலச்சரிவில் காதல் மனைவி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் இளைஞர் ஒருவர் பறிகொடுத்த சம்பவம் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.
கேரளாவின் மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலேயே சரத் என்ற இளைஞரின் மொத்த குடும்பமும் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளது.

சம்பவத்தன்று மதியம் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன் ஒன்றாக சாப்பிட அமர்ந்துள்ளார் சரத். அப்போது சாலை அருகே இருந்து மழைவெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதைக்கண்ட சரத் மனைவி கீதுவிடம், அழும் மகனுக்கு உணவு தர சொல்லிவிட்டு, வீட்டுக்கு வெளியே மழை வெள்ளத்தை திருப்பி விட தாயாருடன் சென்றுள்ளார்.

ஆனால் அந்த சில நிமிடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சரத்தின் குடியிருப்பு மண்ணுக்குள் புதைந்துள்ளது. தற்போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட தம்முடன் யாரும் இல்லை என கதறும் சரத்தின் முகம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

வெள்ளியன்று மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சரத்தின் ஒன்றரை வயது மகன், மனைவி மற்றும் தாயார் என உயிருக்கு உயிரான குடும்பம் மொத்தமும் மண்ணில் புதைந்துள்ளது.
சரத் மட்டும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து தொடர்ந்து 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னரே மனைவி கீது மற்றும் மகன் த்ரூவனின் சடலங்களை மீட்டுள்ளனர்.

நேற்று தாயார் சரோஜினியின் சடலம் மீட்டுள்ளனர். தந்தை சத்யன் மற்றும் சகோதரன் சஜின் ஆகியோர் சம்பவத்தின் போது வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்ட சரத், மனைவி மற்றும் தாயார் உள்ளிட்ட குடும்பத்துடன் வாடகை குடியிருப்பிலேயே தங்கி வந்துள்ளார்.

பொங்கி வந்த மழை வெள்ளத்தை திருப்பி விடும்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், ஆனால் அது தமது மொத்த குடும்பத்தையும் கொண்டு செல்லும் என தெரியாமல் போனது என சரத் கண்கலங்கியுள்ளார்.

வவுனியா கூமாங்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் வி சமிகள் அ ட்டகாசம் : பொருட்களும் திருட்டு!!

வி சமிகள் அ ட்டகாசம்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஓன்றில் திருட்டு இடம்பெற்றுள்ளதுடன் விசமத்தனமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஓன்றின் களஞ்சியசாலைக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த ஓலிபெருக்கி, பணம், தேவலாயத்திற்குரிய பொருட்களை திருடிச் சென்றுள்ளதுடன், தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாட்டு தேவைக்காக வைக்கப்பட்டிருந்த கூடையை தீ மூட்டி எரிந்துள்ளனர். அத்துடன், அங்கிருந்த வர்ணபூச்சினை எடுத்து சுவர்களில் தகாத வார்த்தைகளால் எழுதியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சப்பர உற்சவம்![?]

வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சப்பர திருவிழாநேற்று முன்தினம்  (14.09.2019) செவ்வாய்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா  மகோற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ சதாசங்கரதாஸ் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராகுலசர்மா ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

 

வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!!

கணித விஞ்ஞான ஒலிம்பியாட்

 

அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித  விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில்  வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய  மாணவன்  செல்வன் மயூரன் .யதுர்சன் 135  புள்ளிகளுடன் தேசிய ரீதியில்   மூன்றாமிடத்தையும்  வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய  மாணவி செல்வி .எஸ்.சப்தகி  130 புள்ளிகளுடன்  தேசிய ரீதியில்   ஐந்தாமிடத்தையும்  பெற்று சர்வதேச ஒலிம்பியாட்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் .

மேலும்  வவுனியாவில் இருந்து கலந்து கொண்ட  சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி  செல்வி ரி.கபிசா  117.5  புள்ளிகளுடன்  18 ஆம் இடத்தையும், வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன்  எஸ்.கரிஸ் 116  புள்ளிகளுடன்   21 ஆம் இடத்தையும், இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவி  செல்வி ஜெ.சாகித்தியா 115.5  புள்ளிகளுடன்   22ஆம் இடத்தையும்

வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன்  செல்வன் எஸ். சன்சய், 113 புள்ளிகளுடன்   26 ஆம் இடத்தையும், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி  செல்வி எஸ்.ஆரபி 80.5  புள்ளிகளுடன்   100 வது  இடத்தையும்  பெற்றுகொண்டனர்.

இவர்களை ஆசிரியை ஹம்ஸவதனா மகேந்திரன், வவுனியா மாவட்ட விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், வவுனியா தெற்கு கல்வி வலய விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் இ.மாதவன், ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.இந்திரலிங்கம், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தின் நடுவே புதிதாக வாழ்க்கையை துவங்கிய தம்பதி!!

வெள்ளத்தின் நடுவே..

கடுமையான வெள்ளத்தால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கையில், நிவாரண முகாமில் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில தினங்களாகவே கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களை மீட்கும் பணியில் மீட்பு படை வீரர்களும், தன்னார்வாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு – ஷைஜு ஜோடிக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அஞ்சுவின் வீடு அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதனையடுத்து அஞ்சுவும், அவருடைய தாயாரும் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் முகாமில் இருந்த மக்கள் திருமணம் குறித்து கேள்விப்பட்டதும், உடனடியாக ஒன்றுகூடி திருமணத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.


மணப்பெண்ணுக்கு புத்தாடைகள் உடுத்தி திருமணத்திற்கு தயாராகினர். சரியான நேரத்தில் ஷைஜுவும் வந்து சேர, உறவினர்கள் முகாம் வாசிகள் மத்தியில் இனிதாக திருமணம் நடந்து முடிந்தது.

நடுரோட்டில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : ஒரே நாளில் என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, தற்போது பாலிவுட்டில் பாடும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

மேற்குவங்கத்தில் ராணுமோண்டால் என்ற பெண் அங்கிருக்கும் இரயில் நிலையம் மற்றும் சாலைகளில் பாட்டு பாடி பிச்சையெடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் இரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை அப்படியே ஸ்ருதி மாறாமல் பாடியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால், ராணு ஒரே இரவில் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுவிற்கு ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார்.

இதற்காக பிச்சையெடுத்து கொண்டிருந்த அவர் அழைத்துச் செல்லப்பட்டு, அழகு நிலையத்தில் வைத்து அவருடைய ஸ்டலையே அப்படியே மாற்றினர்.

இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், ஒரு சிலர் ஒரே நாளில் அடித்த இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

விமானத்தில் திட்டமிட்டு கொ ல்லப்பட்ட கால்பந்து வீரர் எமிலியானோ : விசாரணையில் திருப்பம்!!

எமிலியானோ சாலா

ஆஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா திட்டமிட்டு கொ ல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ஆஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, ஜனவரி 21ம் திகதி பிரான்ஸ் நாட்டின் நன்டேஸ் பகுதியில் இருந்து வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, திடீரென விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக ப லியானார்.

தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்த கடற்படையினர் 15 நாட்களுக்கு பிறகு அவரது உடலை கண்டுபிடித்தனர். ஆனால் 59 வயதான விமானி, டேவிட் இபோட்சன் உடலை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பிரித்தானியாவின் விமான விபத்து விசாரணைக் கிளை, கார்பன் மோனாக்சைடு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு வெளியேறியதாலே விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நச்சுயியல் சோதனையில் சலாவின் இரத்தத்தில் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டேவிட் இபோட்சன் உடலை பொலிஸார் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரும் கார்பன் மோனாக்சைடுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பிரதமரின் பாராட்டைப் பெற்ற வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்!!

ப.சத்தியலிங்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே இந்த பாராட்டை தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டம் தயாரித்து அதனடிப்படையில் நெதர்லாந்து நாட்டின் நிதிஉதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட €60 மில்லியன் ( 12,000 மில்லியன் இலங்கை ரூபா) நிதியில் வவுனியா வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு என்பனவும்,

பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் நவீன சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கப் பிரிவும், கிளிநொச்சியில் தாய்சேய் விசேட சிகிச்சை மத்திய நிலையமும், மாங்குளத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான சிகிச்சை பிரிவு மற்றும் உளநலப்பிரிவும் அமைக்க முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிதியை நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவிற்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, நெதர்லாந்து நாட்டின் துணை வதிவிடப் பிரதிநிதி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இந்நிலையில் இந்நிதியை பெற்று மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உதவியமைக்காக பிரதமர் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இலங்கையில் வருகிறது புதிய நடைமுறை : சாரதிகளுக்கு எ ச்சரிக்கை!!

சாரதிகளுக்கு எ ச்சரிக்கை

இலங்கையில் இந்த மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் சாரதிகளுக்கு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போ தைப்பொ ருட்களை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காகவே இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ்வாறான சாரதிகளை அடையாளம் காண நவீன தொழிநுட்பத்துடனான சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பேருந்து சாரதிகளை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலனுடன் சேர்ந்து மோசமான செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி!!

கல்லூரி மாணவி

சென்னையில் காதலனுடன் சேர்ந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த திஷேரிங் லேப்சா என்பவரின் மனைவி பிரசன்னா (42). இவர் கடந்த 12ம் திகதியன்று டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி, திடீரென அவருடைய கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில் அவருடைய செல்போன் இருந்ததாகவும், அதனை மீட்டு தருமாறும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணும், பெண்ணும் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சென்னையை சேர்ந்த ராஜு (23) என்பவரும், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் சுவாதி (20) என்பவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து பொலிஸார், சிறையில் அடைத்துள்ளனர்.

வவுனியாவில் மரங்களை கடத்தி வந்த வாகனம் விபத்து : கடத்தல்காரர் வாகனத்தை விட்டு தப்பியோட்டம்!!

வாகனம் விபத்து

வவுனியா, சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மரங்களை கடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இன்று (15.08.2019) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி 10 முதிரை மரக்குற்றிகளை கடத்திச் சென்ற கப் ரக வாகனம் சாந்தசோலை சந்தியில் வாகன அச்சு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து முதிரை மரங்களை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டு வாகனத்தை கட்டி இழுத்து செல்ல முற்பட்ட நிலையில் அதுவும் உடனடியாக சரிவராமையால் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மரங்களையும், வாகனத்தையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாருமற்ற நிலையில் வாகனம் நின்றமையால் சந்தேகமைடந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், வன இலாகாவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த அவர்கள் மரங்களையும், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் ஆபத்து : முப்படையினரும் தயார் நிலையில்!!

காலநிலையால் ஆபத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கக்கூடும். நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தமாக 18 வீடுகள் முழுமையாகவும், 292 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை கருத்திற் கொண்டு 24 மணி நேரமும் மூன்று மொழிகளிலும் 117 என தொலைபேசி மூலம் தகவல்களைப் பெறலாம் என மத்திய நிலையத்தின்பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.

முறிந்து விழக்கூடிய மரங்கள் தொடர்பில் கவனம் தேவை. வீடுகளின் அருகிலுள்ள ஆபத்தான மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது அவசியம். இடி மின்னல் தாக்கல் குறித்தும் கவனம் தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இடர் நிலைமைகளை சமாளிக்க பொலிசாரும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இடர்காப்பு மத்திய நிலையங்கள் ஊடாக மாவட்ட மட்டத்தில் சகல விடயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பகுதியில் பதற்றம் : கார் தீவைத்து எரிப்பு!!

கார் தீவைத்து எரிப்பு

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்றிரவு 7. 45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரொன்று அலஸ்தோட்டம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியையும், துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியதாகவும் தெரியவருகின்றது.

இதனால் கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.