இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சம்பவாட் பகுதியில் நடைபெறும் பக்வால் மேளா எனப்படும் வித்தியாசமான திருவிழாவிலேயே அங்குள்ள கிராம மக்கள் கற்களால் தா க்கியுள்ளனர்.
சம்பவாட் பகுதியில் ஆண்டுதோறும் இந்த விசித்திரமான விழாவானது கொண்டாடப்படுகிறது.
பக்வால் மேளா எனப்படும் இந்த திருவிழாவில் மக்கள் இரு அணியாக பிரிந்து கொண்டு கற்களை வைத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர்.
அப்படி தாக்கிக் கொள்வதால் நிலத்தில் சிந்தும் ரத்தம், கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை என நம்பப்படுகிறது.
கடந்த வியாழனன்று நடைபெற்ற பக்வால் மேளா திருவிழாவில் சுமார் 100 பேருக்கு காயம்பட்டதாக கூறப்படுகிறது.
வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விழா தொடர்பில் கற்களை பயன்படுத்தி தாக்கிக்கொள்ள கூடாது என முன்னரே மாவட்ட நிர்வாகம் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை மற்றும் அதன் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு வவுனியா நகரசபையிலும், நகர்ப்பகுதியிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையிலான குழுவினரால், வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களிலும், வேறு இடங்களிலும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக வீசப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக சேமிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் நகரசபையின் உறுப்பினர்கள், வவுனியா வளாக மாணவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள் இணைந்து இத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை 15 நாட்கள் கடந்தும் பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீ விரவாத தா க்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இதன்போது பேரூந்து நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் சோதனைச் சாவடி அமைத்து பேரூந்து நிலையத்திற்குள் வந்து செல்வோரின் பயணப் பொதிகளை சோதனை செய்து வருகின்றனர்.
இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் காணப்படும் பேரூந்து நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மட்டுமே சோதனைகள் தொடர்கின்றது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த பொலிஸ் சோதனையை நீக்குமாறு மக்கள் பிரதிகள், மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடமும் தெரிவித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து கடந்த முதலாம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக
அமைச்சர் றிசாட் பதியுதீன், குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்த போதும் கூட்டம் முடிந்தும் 15 நாட்கள் கடந்தும் சோதனை கெடுபிடிகள் தொடர்கின்றது.
இதனால் மக்கள் பலரும் பேரூந்து நிலையத்திற்குள் செல்லாது வீதியில் நின்று பேரூந்துகளில் ஏறுகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய நிலை உருவாக்கியுள்ளது. எனவே பொலிஸார் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், குருமன்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்தபின் வருகின்ற மிகுதிச் சில்லறைப் பணங்களை குறித்த வர்த்தக நிலையத்தினர் வழங்குவதில்லை.
பதிலாக இனிப்புகளை வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . மேலும் சில வர்த்தக நிலையங்கள் மிகுதிப் பணம் தொடர்பில் கவனம் செலுத்தாது மிகுதிப் பணத்திற்கு சில்லறை இல்லை எனக் கூறி பணம் செலுத்துவதில்லை.
இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மகனை கொ லை செய்தவர்களிடம் இருந்து வந்த தொடர் கொ லை மி ரட்டலால் கண்பார்வை தெரியாத தந்தை வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்திரன் ஜாதவ் என்பவரின் மகன் ஹரிஸ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இதில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனால் ஆ த்திரமடைந்த மர்ம கும்பல் ஹாரிஸ் மீது கடுமையான தா க்குதல் நடத்தியுள்ளது. பலத்த காயமடைந்த ஹாரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹரிஸ் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. இதற்கிடையில் கொடுத்த வழக்கினை வாபஸ் வாங்குமாறு கொ லை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், கண்பார்வை இல்லாத ரத்திரனுக்கு போன் செய்து மி ரட்டி வந்துள்ளனர்.
இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரத்திரன் நேற்று விஷம் கு டித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரத்திரனின் இரண்டாவது மகன் தினேஷ் கூறுகையில், “எனது தந்தை நீதிக்காக காவல்துறையிடம் மன்றாடினார்.
ஆனால் அவர்கள் அவருடைய கோரிக்கையை அவர்கள் கவனிக்கவில்லை. எனது சகோதரரின் கொ லை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், எனது தந்தை இன்று எங்களுடன் இருந்திருப்பார்.” என வேதனை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் க த்திக்குத்து காயங்களுடன் 16 வயது சிறுவன் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சூர்யா என்கிற 16 வயது சிறுவன், ஜேசிபி இயந்திரம் ஓட்டுபவரிடம் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளான்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் வெளியில் விளையாட சென்றுவிட்டு நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. மாறாக அப்பகுதியில் இருந்த குட்டையில் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் ச டலமாக மிதந்துள்ளான்.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் சூர்யாவின் ச டலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சூர்யாவின் பக்கத்து வீட்டு சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த சிறுவனும் வேறொருவரிடம் ஜேசிபி உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளான்.
அவர் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் ஜேசிபியை வாடகைக்கு ஓட்டிவந்ததாக தெரிகிறது. இதனை சூர்யா அந்த சிறுவனின் உரிமையாளரிடம் செல்போனில் கூறியுள்ளான். உடனே அந்த உரிமையாளர் சிறுவனை கூப்பிட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆ த்திரமடைந்த அந்த சிறுவன், நேற்று சூர்யாவை தனியாக அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மனமகிழ்வடைந்துள்ளனர்.
வவுனியா ஹொறவபொத்தான வீதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தால் வவுனியா நகரசபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்றையதினம் (15.08) இடம்பெற்றது. இதன்போது வவுனியா ஹொறவபொத்தான வீதியில் அமைக்கபட்டுள்ள வர்த்தக நிலையம் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருப்பதாக கடந்த அமர்வுகளில் விவாதிக்கபட்டு மூடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது திறக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அது தொடர்பாக தெளிவுபடுத்துமாறும் குடியிருப்பு வட்டார உறுப்பினரான த.பரதலிங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தார். நாம் ஒரு வேலை நிமித்தமாக கண்டிக்கு சென்ற சமயம் அந்த வர்த்தக நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக சபையின் தவிசாளர் கௌதமன் பதில் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் லரீப் குறித்த பகுதியில் 32 கடைகள் அனுமதியற்று இருப்பதாகவும் அப்படியானால் அனைத்து கடைகளின் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கடை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற சபை கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்குக்கொண்டார்.
பல வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்களை நாம் இதற்குள் புகுத்த முடியாது. நமது சபை எங்களிடம் உள்ள காலகட்டத்தில் நாம் சரியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்தவனின் பிழையை சாட்டி நாம் பிழைவிடுவது முறையல்ல.
இந்த வர்த்தக நிலையத்துடன் தொடர்புடைய பிரச்சனை எமது காலப்பகுதியில் இடம்பெற்றுவரும் ஒருவிடயம். இதனால் அனைவருக்கும் கெட்டபெயர் உருவாகியுள்ளது. குறித்த கடை விடயத்தில் அனைத்து உறுப்பினர்களும் இருபது இலட்சம் வரையில் இலஞ்சம் வாங்கியுள்ளதாக இணையதளங்களில் எழுதப்பட்டுவருகின்றது.
இதனை இலகுவாக விட்டுவிடமுடியாது. இதற்கு அனுமதி வழங்கபட்டால் இதனை முன்னுதுராணமாக வைத்து பலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவார்கள். எனவே தமிழ் சிங்கள, முஸ்லீம் என யாராக இருந்தாலும் இனிமேல் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று உறுப்பினர் சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.
ஏனைய உறுப்பினர்களான ராஜலிங்கம், காண்டீபன், செந்தில் ரூபன் ஆகியோரும் பல ஆண்டுகளிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்களை பேசிக்கொண்டிருக்காமல் எமது காலப்பகுதிக்குரிய விடயங்களில் சட்டத்தை நடைமுறைபடுத்தி நிர்வாகத்தினை கொண்டு நடாத்த வேண்டும் என்று காட்டமாக தெரிவித்திருந்தனர்.
உறுப்பினர்களான லரீப், பாயிஸ், பாரி ஆகியோர் வர்த்தக நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் கூட்டமைப்மை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இந்த விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் வாக்குவாதம் முற்றியமையால் 5 நிமிடங்கள் சபையை ஒத்திவைப்பதாக தவிசாளர் உத்தரவிட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த விடயம் கலந்துரையாடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபைத் தவிசாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா நகரசபையின் நேற்றைய மாதாந்த அமர்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
வவுனியா நகரசபையின் தவிசாளரும் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரும் அண்மையில் சண்டையிட்டுள்ளனர். இங்கு யார் முதலில் தாக்கியது என எமக்குத் தெரியாது.
இது கௌரவப் பிரச்சினையாக இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் இருப்பதற்காக விடயம் தொடர்பாக எமது சபைக்குள்ளாகவே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.
அலுவலக நேரத்திற்குப் பின்னர் நகரசபை வளாகத்திற்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது விவரங்கள் காவலாளியால் பதியப்பட வேண்டிய நடைமுறையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழை பொழியும் போது கடும் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் மற்றும் புத்தளம் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள தமிழ் குடும்பத்திற்கு சாதகமான பதில் வரக்கூடிய நிலை காணப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் Dan Tehan அவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி சொந்த நாடான சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் குடும்பத்தின் சார்பில் ராஜசேகரனின் புதல்வி வாணிசிறீ அவுஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க உதவியை நாடியிருந்தார்.
தந்தையின் உடல்நிலையின் அடிப்படையில் நாடுகடத்தப்படவுள்ள தமது குடும்பம் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு சேவையாற்றுவது தனது இலட்சியம் என்றும் கூறியிருந்தார். தனது கல்வி நிலமை தொடர்பாகவும் தனது எதிர்காலத்திட்டங்கள் குறித்து பகிரங்கமாகக்கூறி அவுஸ்திரேலிய மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வாணிசிறி கோரியிருந்தார்.
இதன்பிரகாரம், ராஜசேகரன் குடும்பத்துக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மட்டத்தில் பெரும் ஆதரவு எழுந்தது. அவர்களை நாடுகடத்தக்கூடாது என்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. அரசு மட்டத்தில் இது தொடர்பில் பேசுவதற்கான தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ராஜசேகரன் குடும்பம் வசிக்கும் மெல்பேர்ன் மேற்கு பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான Dan Tehan கருத்து தெரிவிக்கும்போது, ராஜசேகரன் குடும்பத்தினரின் விவகாரம் குறித்து குடிவரவு அமைச்சுத்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
என்றாலும் சமூக மட்டத்தில் அந்தக்குடும்பத்துக்கு எழுந்துள்ள ஆதரவும் அந்தக்குடும்பம் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு வழங்கிய பங்களிப்பு குறித்தும் கருத்திற்கொள்ளும்போது அவர்களுக்கு சாகமான பதில் வருவதற்கு வாய்புள்ளது என்று கூறியுள்ளார். இந்த வார இறுதியில் அரசு தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நேற்றைய தினம் வீழ்ச்சி மாற்றம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஒரு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1523 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த 11ஆம் திகதி உலக சந்தையில் தங்கத்தின் விலையில் கடுமையாக அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த 6 வருடங்களில் இதுவே தங்கத்தின் உச்சகட்ட விலை அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தம்புள்ளை – ஹபரண வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் ஒரு பெண்ணும் ஆணும் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டுள்ளனர். இந்த வேனில் பயணித்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என இன்னமும் தகவல் வெளியாகவில்லை.
காயமடைந்தவர்கள் யார் என்பது இன்னமும் அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வாகனங்களின் சாரதிகளினதும் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான வின்சன் பெர்னாண்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்களான நோபட் அன்றாடி, பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும், ஆசிரும் இடம்பெற்றதுடன் இதன்போது நூற்றுக்கணக்கான குருக்கள் கலந்து கொண்டிருந்தனர். முப்படையினரின் பா துகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம்பெற்றுள்ளது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் தன்னுடைய பூர்வீக கிராமத்தை தத்தெடுத்துள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், மேல வெள்ளூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன்-சரளா தம்பதியின் மகள் தான் காவ்யா. காவ்யா, அமெரிக்காவின் கலிபோர்னியாக மாகாணத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சரவணன்-சரளா தம்பதியினர் 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய குல தெய்வ கோவில் திருவிழாவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் காவ்யா அமெரிக்காவிலிருந்து தன்னுடைய கிராமத்திற்கு வந்த போது, அங்குள்ள முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஊரணி சீமை கருவேல மரங்களால் மண்டி, 10 ஆண்டுகளாக தூர் வாராமல், இருப்பதை பார்த்து சற்று கவலையடைந்துள்ளார் காவ்யா.
இதனால் அதன் பின் இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு காவ்யா கொண்டு சென்றதால், கிராமத்தில் தற்போது தூர் வாரும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து தற்போது அமெரிக்காவில் இருக்கும் காவ்யா கூறுகையில், அந்த ஊரணியை பார்த்த குப்பைகள் அதிகமாக இருந்தது.
இதனால் நம்மளே சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன், இதனால் இது குறித்து அப்பாவிடம் சொன்னேன். அதன் பின் அங்கிருக்கும் கிராமத்தினரிடம் சென்று இது குறித்து கூறிய போது, சுத்தம் செய்வது எல்லாம் பிரச்சனையில்லை, அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இது குறித்து மனு அளித்து, இதைப் பற்றி பேசி, அனுமதி பெற்று வேலைகள் எல்லாம் ஆரம்பித்தோம். தண்ணீர் பற்றாக்குறை தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது.
குறிப்பாக நாங்கள் மதுரையில் இருக்கும் போது, தண்ணீர் வெளியில் வாங்கி தான் பயன்படுத்தினோம். இது போன்று சிறிய முயற்சி தான் அனைத்துக்கும் வழியாக இருக்கும், அதுமட்மின்றி இது போன்ற ஊரணிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவியின் இந்த முயற்சியால் தற்போது தூர்வாரப்பட்டு, ஊரணியில் சில இடங்களில் தண்ணீரில் நிரம்பி வருவதால், அவருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் பலரும் பாராட்டு வருகின்றனர்.
இந்தியாவில் வரதட்சனை கொடுக்காததால், 21 வயது பெண்ணின் வாயில் ஆ சிட் ஊற்றி கொடூரமாக கொ லை செய்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் சர்மா. இவருக்கு யசோதா தேவி(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் யசோதா தேவிக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பஹேதியைச் சேர்ந்த ஓம்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமான சில நாட்களிலேயே கொடுத்த வரதட்சணை போதவில்லை என்று கூறி யசோதாவை, ஓம்கர் மற்றும் அவரது பெற்றோர் கொ டுமைப்படுத்தியுள்ளனர். அதோடுமட்டுமின்றி, வரதட்சணை வாங்கி வர சொல்லி யசோதாவை, அவரது தாய் வீட்டிற்கு விரட்டியடித்துள்ளனர்.
இதனால் தாய் வீட்டிற்குச் சென்ற யசோதா, தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை தடுப்புசட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளித்தார். அப்போது இது தொடர்பான வழக்கு நிதிமன்றத்தில் விசாரணைத்து வந்த போது, யசோதாவை தன்னோடு அழைத்துச் செல்ல, ஓம்கார் ஒப்புக்கொண்டார்.
வீட்டிற்கு அழைத்துச்சென்ற சில நாட்களில் மீண்டும் யசோதாவை, ஓம்கார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொ டுமைப்படுத்த துவங்கியுள்ளனர். இதனால் சில தினங்களுக்கு முன்பு, யசோதாவின் சகோதரர் மனிஷ், 20,000 ரூபாய் செலவு செய்து அவர்களுக்கு இன்வெர்ட்டர் ஒன்றை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
அதன் பின் மீண்டும் யசோதாவை து ன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை காலை, தந்தை கிரிஷ் சர்மாவிற்கு போன் செய்த யசோதா, தன் கணவர் குடும்பத்தினர் தன்னை அடித்து து ன்புறுத்தி, கட்டாயப்படுத்தி எதையோ குடிக்க சொல்கின்றனர் என்று கதறி அ ழுதுள்ளார்.
இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த கிரிஷ் சர்மாவும், மனிஷும், காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, யசோதா தங்கியிருந்த பஹேதிக்கு விரைந்தனர். அங்கு சென்றபோது தரையில் ம யங்கிய நிலையில், யசோதாவைக் கண்டு அ திர்ச்சியடைந்தனர். அங்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் காணவில்லை. இதனால் உடனடியாக யசோதாவின் தந்தை, அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால் யசோதவின் உ டலை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே இ றந்துவிட்டதாக கூற, குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இச்சம்பவம் குறித்து கருத்து பஹேதி பொலிசார் கூறுகையில், அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் தலைமறைவானதால், இது வரதட்சணைக்காக நிகழ்த்தப்பட்ட கொ லைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
யசோதாவின் குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப்பூர்வமான புகார் பெற்றதும் ஓம்கார் குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்