இலங்கையில் பெண் ஒருவரின் கொ டூர செயல் : நெஞ்சை ப தற வைக்கும் சம்பவம்!!

கொ டூர செயல்

வெயங்கொடை – கூரிகொட்டுவ பிரதேசத்தில் தாய் நாயையும் அதன் ஏழு குட்டிகளுக்கும் தீ வைத்து கொ லை செய்ய முயற்சித்தமை பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தின் போது இரண்டு நாய்க்குட்டிகள் உ யிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெயங்கொடை – கூரிகொட்டுவ பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் ஒன்று 7 குட்டிகளை போட்டுள்ளது. இந்த குட்டிகளின் வயது 3 வாரங்கள் மாத்திரமே. இந்த நாய்க்குட்டிகள் வாழும் இடத்திற்கு அருகில் பெண் ஒருவரினால் வீட்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நடவடிக்கை காரணமாக குறித்த பெண்ணால் இந்த கொ டூர செயல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ம துபோ தையில் ஒருவர் அ டித்து கொ லை : திருகோணமலையில் சம்பவம்!!

அடித்து கொ லை

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரங்குடா பகுதியில், நேற்றிரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற கை கலப்பில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் மூவர் ஒன்றிணைந்து ம து அ ருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வா க்குவாதம் கைக லப்பாக மாறியதாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மதுரங்குழிய-கோடுவாடுவ பகுதியைச் சேர்ந்த வெல்லவகே சுமித் பிரணாந்து(40 வயது) என்ற நபரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்தவரின் ச டலம் தற்போது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா!!

தமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி கரங்கள் நிறுவனம் எல்லப்பர் மருதங்குளம் கணேசா சிறுவர் கழகத்துடன் இணைந்து பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வினை நடத்தியது.

இதில் தமிழர் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பனையோலை மாலைகள், பனையோலை அட்டைகள் அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தமிழர் பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. அத்துடன் சிறந்த கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழர் பாரம்பரிய, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்களான ந.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், க.செந்தில்ரூபன், கிராம அலுவலர், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், சிறுவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா குருமன்காட்டில் குழு மோதல் : ஏழு பேர் கைது!!

குழு மோ தல்

வவுனியா குருமன்காட்டில் இன்று (12.08) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குழு மோ தலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோ தலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தா க்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் இளைஞர் குழுக்கள் ம துபோ தையில் இருந்ததாக அப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும் : சீமான் ஆவேசம்!!

சீமான் ஆவேசம்

நடிகர் ரஜினிகாந்த் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும், அதன் பின் நல்ல தலைவராக இருக்க வேண்டும் என நாம் தமிழர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க கட்சி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடி இருவரும் கிருஷ்ணர்-அர்ஜூனன் போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். அத்துடன் காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அங்கு கல்வி, வேலை வாய்ப்பு இல்லை. உட்கட்டமைப்பு வசதியில்லை.

அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கூறுகிறார்கள். 433 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ஏன் பிரிக்கவில்லை? மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கூறுகிறது. அப்படியென்றால் முத்தலாக் சட்டத்தை ஏன் நிறைவேற்றினார்கள்? அதிகாரம் படைத்தவர்கள் கூறும்போது, அடிமைகள் கை கட்டி கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து. முதலில் அவர் நல்ல மனிதராகவும், நல்ல தலைவராகவும் இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

வானத்திலிருந்து பொழிந்த இரும்பு மழை : பீதியில் ஓடிய மக்கள் : நடுவானில் நடந்தது என்ன?

இத்தாலி நாட்டில் ரோமின் ஃபியமிசினோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென இரும்பு துண்டு மழை பொழிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபியமிசினோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்திலிருந்து கொட்டிய நுற்றுக்கணக்கான சிதைந்த பொருட்களே இந்த இரும்பு மழைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

நோர்வே விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 விமானம், சனிக்கிழமை ஃபியமிசினோ விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அருகே உள்ள ஐசோலா சேக்ரா நகரின் மீது சிதைந்த பொருட்கள் கொட்டியுள்ளது. இரும்பு துண்டுகள் கீழே இருந்த வீடு மற்றும் கார்கள் மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், இதில் ஒருவர் காயமடைந்ததாகவும், 25 கார்கள் மற்றும் 12 வீடுகள் சேதமடைந்ததாக நகர அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி தோட்டக்கள் போல் கழிவு மழை பொழிந்ததாக உள்ளுர் வசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்த பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரோமில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் பயணித்த விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரும்பு கழிவுகள் கொட்டியதாக நோர்வே விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் கோர தாண்டவம் ஆடிய லெக்கிமா : பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!!

கோர தாண்டவம் ஆடிய லெக்கிமா

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயல் தாக்கியதில், பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

ஜேஜியாங் மாகாணத்தை 187 கிலோ மீற்றர் வேகத்தில் லெக்கிமா புயல் தாக்கியது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன.

அத்துடன் 3,64,000 ஹெக்டேர் பயிர்கள் மற்றும் 36,000க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த புயலின் பாதிப்பால் சேதமடைந்துள்ளன. ஷாண்டோங் பகுதியில் மட்டும் பயிர்கள் சேதமடைந்ததால், 939 மில்லியன் யுவான் அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஷாண்டோங்கில் 18 பில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும் ரயில் சேவைகள், விமான சேவைகள் ஆகியவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கே கடலுக்குள், சாண்டோங் கடற்கரையில் இருந்து வடமேற்கே செல்லும்போது சூறாவளி பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல் : உயிருக்கு போராடிய குழுவினர்!!

கொழுந்து விட்டெரிந்த கப்பல்

விசாகப்பட்டினம் கடற்கரையில் கப்பல் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் மீட்பு கப்பலான ஜாகுவாரில் திடீரென பெரிய வெடிச் சத்தம் கேட்டு தீப்பிடித்து ஏரிந்துள்ளது.

விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையின்படி, 29 பேர் கொண்ட கப்பல் குழுவில் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பாக வெளியான தகவலின் படி, ஜாகுவார் கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது, உடனே கப்பலில் இருந்து குழுவினர் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்துள்ளனர்.

தகவல்அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ராணி ராஷ்மோனி கப்பல், கடலில் குதித்த 28 பேரை மீட்டுள்ளனர். மேலும், ஜாகுவார் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.

கப்பலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் நிலவும் தொடர் பதற்றம் : பால் கூட இல்லாமல் கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள்!!

கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள்

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கிருக்கும் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மிகுந்த சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதோடு அல்லாமல் அதிகளவிலான இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தொலைக்காட்சி, இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருப்பதால் அங்கிருக்கும் மக்கள், பசியால் கதறி அழும் பிஞ்சுக்குழந்தைக்கு பால் முதற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களான மாத்திரைகள், சமைப்பதற்கான உணவுப்பொருட்கள் ஆகியவை வாங்க முடியாமல் பெரும் அவஸ்தையடைவதாக ‘நியூயார்க் டைம்ஸ்’பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை பிற்பகல், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியான வழியில் தலைநகர் ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

சுதந்திர முழக்கங்களை எழுப்பி, காஷ்மீர் கொடிகளை அசைத்துகொண்டிருத்துள்ளனர். அப்போது திடீரென இந்திய இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு குவிந்திருந்த மக்கள் கூட்டம் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். இதில் குறைந்தது 7 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பெல்லட் குண்டு தாக்குதலால் அதிகமானோருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஃப்ஷனா ஃபாரூக் என்ற 14 வயது சிறுமி கிட்டத்தட்ட நெரிசலில் சிக்கி மிதிக்கப்பட்டார் என கூறியுள்ளதாக பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கையை இறுக்கி அணைத்தபடியே மண்ணில் புதைந்திருந்த அக்கா : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்

கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் அக்கா – தங்கை இருவரும் கட்டி அணைத்தபடியே இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள் அழிந்தன. அதனுடன் சேர்ந்து குழந்தைகள் பொதுமக்கள் என பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் மீட்பு படையினர் கட்டியணைத்தபடியே இறந்து கிடந்த சகோதரிகளின் உடல்களை மீட்டுள்ளனர். நிலம்பூர் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய காவலப்பரா கிராமத்தை சேர்ந்தவர்கள் விக்டர் – தோம்மா தம்பதியினர்.

இவர்களுடைய வீடு மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் தச்சு மற்றும் ஓவியராக வேலை செய்துவரும் இரண்டு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள், மற்றும் ஐந்து குழந்தைகள், வசித்து வந்தனர்.

தினமும் இரவு உறங்கும் போது அனகா மற்றும் அலீனா என்கிற சகோதரிகள் இருவரும் ஒரே கட்டிலில் கட்டியணைத்தபடியே உறங்கி வந்தனர். இவர்கள் பாசத்தை பார்த்து பூரித்துப்போன பெற்றோர் கடைசி வரை இப்படியே இருவரும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளை தம்பதியினரால் காப்பற்ற முடிந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு குழந்தைகளும் மண்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய மீட்பு படையினர், கட்டியணைத்தபடியே மண்ணில் புதைந்திருந்த சகோதரிகளின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர்.

திங்கள்கிழமை காலை, மலப்புரம் மாவட்டம் பூத்தனத்தில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் இரண்டு இளம் குழந்தைகளின் உடல்கள் அடுத்தடுத்த பெட்டிகளில் வைக்கப்பட்டன. நான்கு வயது அனகாவின் முகம் தெரிந்த நிலையிலும், எட்டு வயது அலீனா முகம் தெரியாத அளவிற்கு முழுமையாக மூடப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள மக்கள் மரியாதை செலுத்துவதற்காக சுமார் ஒரு மணி நேரம் இருவரின் சடலங்களும் தேவாலயத்தில் வைக்கப்பட்டன. அதன்பிறகு இருவரின் உடல்களும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!!

வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்!!

கண்ணீர் சம்பவம்

கேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 58 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மலப்புரம் அருகே நேற்று மீட்பு பணி நடைபெற்றது. அதில் கீது என்ற 22 வயது இளம் பெண் உட்பட சிலர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது ஒரு இடத்தில் கீது, தனது ஒரு வயது மகன் துருவனை நெஞ்சோடு அணைத்தபடி கிடந்துள்ளார். இதைக் கண்ட மீட்பு குழுவினர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினர். அதிகாரிகள் மட்டுமின்றி, அங்கிருந்த மக்கள் சிலரும் இதைக் கண்டு கண்கலங்கினர்.

அதன் பின் அவர்களின் உடல்களை மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும் நிலச்சரிவின் போது அவர்களுடன் தான் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.

ஆர்த்தியால் அழகாகும் வீடு : காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்!!

சிவகார்த்திகேயன் உருக்கம்

வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால் என்று கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப் பெரிய பரிசு ஆர்த்தி. எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இது மாறாது.

என் தாய்மாமாவின் மகள்தான் ஆர்த்தி என்றாலும் இருவரும் அவ்வளவாகப் பேசிக்கொண்டதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, “மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்பா” என்று சொன்னார் அம்மா. திருமணமாகும் போது எனக்குப் பெரிய வசதி இல்லை. ஆனால், ஆர்த்தி வசதியான குடும்பத்துப் பெண். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

எனக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுங்க எனக் கேட்டதே கிடையாது. எங்களுக்குத் திருமணமாகும்போது ஆர்த்திக்கு 21 வயது. பொறியியல் படித்திருந்தார். ரொம்ப சீக்கிரமே திருமணம் செய்து கொண்டுவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

ஆராதனா பிறந்த நாளை எங்கள் இருவராலும் மறக்க முடியாது. என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என அவர் நினைத்தார். பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி மேடம், குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி. இப்போ நாமதான் போன் செய்து அவர்களுடைய வேலையை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என்றால் இடைப்பட்ட நேரத்தில் பேசிக்கொள்வோம். ஆராதனாவிடம் பேச வேண்டுமே, இல்லையென்றால் மேடம் கோபித்துக்கொள்வார்.

என் நண்பர்கள் குழுவில் எனக்குத்தான் முதலில் திருமணமானது. திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுப்பார் ஆர்த்தி. மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். சமையலில் புதிதாக ட்ரை பண்ணுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான். வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அன்றைக்கு வந்திருந்த நண்பர்களும் என்னப்பா ஆச்சு என்று பதறிக் கேட்க, அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். என்ன நடந்தாலும் அப்படியே சொல்லிவிடுவேன்.

திரையுலகில் நுழைந்தவுடன் ஆரம்பத்தில் சிறிய வதந்தியில்கூடச் சிக்கவில்லை. ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளேன் என்ற பெரிய வதந்தியில்தான் சிக்கினேன். அப்போது அவர் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்ததால் ரொம்ப வருந்தினேன், பயந்தேன்.

இந்த நேரத்தில் இந்த வதந்திச் செய்தியைப் படித்தால் என்ன நினைப்பார் என்று நினைத்து அதை அவரிடமிருந்து மறைத்தேன். அடுத்த நாள் அவராகவே, “என்னங்க இப்படியொரு செய்தி வந்துருக்கு?” என்று ரொம்ப யதார்த்தமாகக் கேட்டார்.

அப்போதுதான் எதையுமே நேரடியாக எதிர்கொள்ளக்கூடிய பெண் அவர் என்பது புரிந்தது. “சினிமாத் துறையில் இருந்தால் இதெல்லாம் வரும் என்று தெரியும், பார்த்துக்கொள்ளலாம்” என்று எனக்கு ஆறுதல் சொன்னார்.

அவரது பேச்சுக்குப் பிறகு எனக்குப் பொறுப்பு அதிகமானதுபோல் உணர்ந்தேன். திரைத்துறையில் நுழைந்திருந்த நேரத்தில் இப்படி அவர் சொன்னது ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

எது உண்மை, எது பொய் என்று புரிந்துகொள்ளக்கூடிய மனைவி நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன். எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்திதான் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால்கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறாரே என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் எனக்குக் கொடுத்த பரிசாக நினைத்து, அதை வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டியிருக்கிறேன். நாம் வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

 ஆனால், வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே அனைத்தையும் சரிபார்த்து, சரியாக வரியைச் செலுத்தி ‘தங்கச் சான்றிதழ்’ பெற்றுக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல. வீட்டு விஷயங்களைப் பொறுத்தவரைக்கும் ஆர்த்திதான் எல்லாமே. அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறார்.

வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம். வீட்டை எப்போதுமே ஜாலியாகவே வைத்திருப்பார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது என்னிடம் கேட்டுக்கொள்வார்.

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால் ஒரு மாதம் வீட்டுக்கு வர முடியாததுதான் சிரமம். முன்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு ஓடிக்கொண்டிருப்பேன். ஒரு மாதம் வேலை செய்துவிட்டு, ஒரு வாரம்கூட வீட்டில் இருந்தது கிடையாது. அப்போதெல்லாம் அதைப் புரிந்து நடந்துகொண்டார்.

என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. மனைவியையும் மகளையும் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் நானே அவர்களை வெளியூர்களுக்கு வரவழைத்துவிடுவேன். மற்றபடி நான் வீட்டிலிருந்தால் அவருக்குப் போதும்.

பொதுவாகவே எந்த மாதிரியான கதைகளில் நடித்துவருகிறேன், நடிக்கப்போகிறேன் என்பதை அவருடன் விவாதிப்பேன். படப்பிடிப்புக்கும் அவர் வருவதால் வேலையில் உள்ள ப்ளஸ், மைனஸைத் தெரிந்துவைத்துள்ளார்.

வவுனியாவில் விசேட தேவையுடையோரை சந்தித்து கலந்துரையாடிய வடமாகாண முன்னாள் முதலமைச்சர்!!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர்

வவுனியா, வரோட், தாய்மடி இல்லத்தில் தங்கியிருக்கும் விசேட தேவையுடையோரை சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய சீ.வி.விக்கினேஸ்வரன் கேட்டறிந்து கொண்டார். நேற்று (11.08) மாலை 6 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சர் வரோட், தாய்மடியில் தங்கிருக்கும் 50 இற்கும் மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களது தேவைகள் குறித்தும் அவர்களை பராமரிக்கும் அருட்தந்தையர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது முதலமைச்சரை மாலை அணிவித்து வரவேற்ற விசேட தேவையுடையோர் தம்மை வந்து சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் இதன்போது வெளிப்படுத்தினர்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா அமைப்பாளர் செ.ஸ்ரீதரன், இளைஞரணி தலைவர் கிறிஸ்ண மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலி!!

சிறுமி பரிதாபமாக பலி

நுரைச்சோலை-நாயிப் நகர்-எத்தாலை பிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து உ யிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வீட்டில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,

 சிறுமி வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் சிறுமியை கிணற்றிலிருந்து மீட்டெடுத்து கல்பிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை!!

ஹஜ் பெருநாள்

உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.

இறைதூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றுள்ளன.