பேருந்தில் நடந்த ப யங்கரம் : பெண்களே மிகவும் அ வதானம்!!

பெண்களே மிகவும் அ வதானம்

குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போ தை க லந்த கு டிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொ ள்ளையடித்த நபர் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டு திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏறியுள்ளார்.

இதன்போது 45 வயதான நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் ந ட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் கு டிபானம் ஒன்றை வழங்கியுள்ளார். அதனை கு டித்தவுடன் பெண் ம யங்கியுள்ளார். அதற்கமைய அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும் 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கு டிபானத்தை கு டித்தவுடன் ம யங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பி டித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கை து செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான மோ சடியாளர்களிடமிருந்து நாட்டு மக்கள் மிகவும் அ வதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எ ச்சரித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் : அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!!

விமான நிலையத்தில் சிக்கிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யபட்ட பெண்ணிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியான கொ க்கைன் போ தைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இலங்கைக்கு போ தைப்பொருள் கொண்டு வந்த குறித்த பெண்ணை சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதான இந்திய பெண் என தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பையை சோதனையிட்ட போது, அதில் பொலீத்தின் பைகளில் வைக்கப்பட்ட நிலையில் கொ க்கைன் போ தைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ 250 கிராம் நிறையுடைய கொ க்கைன் மீட்கப்பட்டது. அதன் முழுமையான பெறுமதி ஒரு கோடி 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் கையோடு சென்றவர் ஒரே நாளில் கோடீஸ்வர : கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்!!

கேரளாவைச் சேர்ந்த நபருக்கு வெளிநாட்டில் மாலில் நடந்த குலுக்கலில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Abdul Salam Shanavas. இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு வெறும் கையோடு அபுதாபிக்கு டிரைவர் வேலைக்காக வந்துள்ளார்.

தற்போது அபுதாபியில் இவர் ஒரு குடும்பத்திற்கு டிரைவராக இருக்கும் இவர், 2,500 திர்ஹம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அங்கிருக்கும் மாலில் Mall Millionaire என்ற குலுக்கல் போட்டி 47 நாட்களாக நடத்தப்பட்டது.

இதில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் 200 திர்ஹம் கொடுத்து அந்த குலுக்கல் சீட்டில் பெயர் மற்றும் முகவரி எழுதி போட வேண்டும். 47 நாட்களுக்கு பின்னர் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 5-ஆம் திகதி இந்த குலுக்கலில் வெற்றி பெற்றிருப்பது Abdul Salam Shanavas என்பது தெரியவந்துள்ளது.
இதற்காக அவருக்கு 1 மில்லியன் திர்ஹம்(இலங்கை மதிப்பில் 4,81,60,071 கோடி ரூபாய்) விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 50 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன், ஆனால் என்னிடம் அந்தளவிற்கு பணம் இல்லை. என்னிடம் இதை 5-ஆம் திகதியே சொல்லிவிட்டனர்.

ஆனால் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக காத்திருந்தேன், அதுமட்டுமின்றி நான் பரிசு வென்றதற்கான குறுந்தகவலும் என்னுடைய போனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை நான் நீக்கிவிட்டதால், பரிசு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்தது.

பரிசு கொடுக்கும் குழுவினர் என்னுடைய போன் நம்பரை வைத்து உறுதி செய்துவிட்டனர். இதனால் எனக்கு அந்த பயம் போய்விட்டது.

எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருத்திக்கு 7 வயது, ஒருத்திக்கு 14 வயது, என் மனைவியிடம் இதைப் பற்றி கூறும் போது இன்ப அதிர்ச்சியடைந்தாள்.

கிடைத்திருக்கும் பணத்தை வைத்து, ஒரு சிறிய இடம் ஒன்றை வாங்கி வீடு கட்ட வேண்டும் ,அதன் பின் கொஞ்ச பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர் : 21 வயதில் மில்லியனராக மாறிய சுவாரஷ்யம்!!

பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர்

அவுஸ்திரேலியாவில் பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர், 21 வயதிலே மில்லியனராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரி சாண்டர்ஸ் என்கிற 21 வயது இளைஞர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு சொந்தமானவராக உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வாழ்க்கையில் பலர் வெற்றிபெற விழித்திருந்து இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் நீங்கள் ஒரு தொழிலை நடத்த முடியாது.

அதிகாலை 3 மணி வரை உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள். இதனால் நீங்கள் சிறந்தவராக இருக்க முடியும். நான் ஒரு போதும் உயர்ந்த ரக ஆடைகள் மற்றும் கோட் ஷூட்களை அணிந்து கிடையாது. எனக்கு பிடித்தமான ஆடைகளை மட்டுமே அணிந்து வருகிறேன். விலையுயர்ந்த ஆடைகளை அணிவது மற்றவர்களுக்கு தவறான எண்ணத்தை விட்டுவிடக்கூடும், முடிந்த வரை நான் அதிக நேரம் தூங்குவேன்.

என்னுடைய 16 வயதிலே எஸ்சிஓ தொழில்நுட்பத்தில் இருந்த ஆர்வத்தால், சொந்தமாக ஸ்டுடியோஹாக் என்னும் இணையதளத்தை உருவாக்கினேன். ஆனால் பணத்தை இழந்த பிறகு என்னுடைய கனவு சோகமாக மாறியது.

அது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான, நான் பயந்திருந்த காலகட்டம். தங்குவதற்கு வீடு இல்லாமல் கிடைக்கும் இடங்களில் தங்குவேன். கடைகளில் மிச்சமாகும் உணவை கேட்பேன். அங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டிய பொருட்களை எனக்குத் தருவார்கள்.

அந்த சமயத்தில் தான் சில விலைமதிப்பற்ற பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். அந்த சம்பவங்கள் என்னை ஒரு மில்லியனராக மாற்ற உதவியது. என்னிடம் பணம் இல்லாமல் இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக, நான் கற்றுக்கொண்ட திறன்களை ஒருபோதும் மறக்கவில்லை. 2017ம் ஆண்டு மீண்டும் என்னுடைய இணையதளத்தை புதுப்பித்து வேலை செய்ய ஆரம்பித்தேன். அது இப்போது வெற்றியில் முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மனைவியை தனியாக அழைத்து கணவன் செய்த அதிர்ச்சி செயல் : சிசிடிவியில் பொலிசார் கண்ட காட்சி!!

பொலிசார் கண்ட காட்சி

தமிழகத்தில் 20 வருடமாக கணவனிடமிருந்து ஜீவானம்சம் பெற்று வந்த பெண், கடத்தில் எ ரித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தீகுண்டு பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் திகதி எரிந்த நிலையில் பெண்ணின் ச டலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், பெண்ணின் உ டலை மீட்டு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சம்பவ தினத்தன்று இருட்டு நேரத்தில் தீவைத்து எரிக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது. அதுமட்டுமின்றி அந்த நேரத்தில்அந்த பகுதிக்கு சென்ற கார் ஒன்றை பொலிசார் அடையாளம் கண்டனர்.

இதையடுத்து அந்த கார் பதிவு எண்ணை வைத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அது கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நேனனங்கலா பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரது தெரியவந்ததால், அவரிடம் பொலிசார் இது குறித்து கேட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ், தனது மனைவி கவுரம்மாவுக்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கவுரம்மாவிற்கு குறிப்பிட்ட அளவு ஜீவனாம்சம் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளாக ஜீவனாம்சம் கொடுத்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவ்னாம்சம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார் லோகேஷ். ஜீவனாம்சம் கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அவர் நாடியதால் சமாதானப்படுத்திய லோகேஷ் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று முழு தொகையும் செட்டில் செய்வதாக கூறி, மனைவியை தனியாக வரும்படி கூறியுள்ளார்.

அதன் படி கணவனை பார்க்க கவுரம்மாள் சென்ற போது, அவரை லோகேஷ தலையில் பலமாக தா க்கி கொ லை செய்து உ டலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு காரிமங்கலம் தீகுண்டு பகுதியில் வீசிஉள்ளார். பின்னர் சாக்குமூட்டையுடன் ச டலத்திற்கு தீவைத்து எரித்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொடூர கொ லை தொடர்பாக லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளி அனுமந்தப்பா ஆகியோரை கைது செய்த பொலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

லட்சக்கணக்கில் சம்பளம் : கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழ் இளைஞனின் நெகிழ்ச்சி செயல்!!

அருண் கிருஷ்ணமூர்த்தி

லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த கூகுள் வேலையை உதறித்தள்ளி விட்டு சமூகசேவையில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி (32) என்கிற இளைஞர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். நீர்நிலை ஆதாரங்கள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்து கவலையடைந்த அருண், அதனை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

அதற்காக தான் பார்த்து வந்த வேலையை உதறித்தள்ளி விட்டு 2007-ம் ஆண்டு Envorinmentalists Foundation of India (EFI) என்கிற தன்னார்வ அமைப்பை நிறுவினார். அதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் 93 ஏரி மற்றும் குளங்களை சுத்தம் இவரது குழுவினர் சுத்தம் செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் இவர்கள் செய்து வரும் சேவைக்கு ஸ்ரீராம் குழுமம், முருகப்பா குழுமம் போன்ற தனியார் நிறுவனங்களும் உதவி செய்கின்றன.

இதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் சைக்கிளில் சில இடங்களுக்கு பயணம் செய்து சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

வெள்ளத்தின் நடுவே சடலம் .. போராடும் உறவுகள் : நெஞ்சைப் உருக்கும் காட்சி!!

தமிழகத்தின் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம், பதைபதைக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் என்பவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு இருந்தது.

இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மாயாற்றை கடந்து தான் கல்லாம்பாளையம் கிராமத்துக்கு செல்ல முடியும் என்ற நிலையில்,

நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். வேறு வழியில்லாததால், நீலியம்மாளின் உடலை மரக்கட்டையில் கட்டிய அவர்கள், தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் மாயாற்றை கடந்து சென்றனர்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சி, காண்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. மாயாற்றின் மேல் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும்,

அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணமான ஒரு மாதத்தில் திடீரென மயங்கி விழுந்தது ஏன்? அதிர வைத்த புதுப்பெண்ணின் வாக்குமூலம்!!

புதுப்பெண்ணின் வாக்குமூலம்

தமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வேலூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் மகேஷ்குமார் (32). இவர், அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகள் புவனேஸ்வரிக்கும் (25) கடந்த மாதம் 11ம் திகதி திருமணம் நடந்தது.

கணவனும் மனைவியும் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பைக்கில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்துவாச்சாரி நோக்கி வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷ்குமார் பைக்கை ஆட்சியர் அலுவலக மேம்பாலம் சாலையோரம் நிறுத்தினார்.

தொடர்ந்து கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி சத்தமாக பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென மகேஷ்குமார் மேம்பால சுவரின் மீது ஏறி நின்று கீழே குதித்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அணுகுசாலையில் தலைகீழாக வந்து விழுந்தார். இதில், மகேஷ்குமாரின் தலை பிளந்து ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உ யிரிழந்தார்.

இதை பார்த்து புவனேஸ்வரி கதறி அழுத நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புவனேஸ்வரி ஆட்டோவில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியில் மயக்கமானார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாரின் விசாரணையில், மகேஷ்குமார் ராணுவத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை சுந்தரேசன் உடல் நலக்குறைவால் உ யிரிழந்தார்.

இதையடுத்து மகேஷ்குமாருக்கும், உறவினர் பெண் புவனேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்காக மகேஷ்குமார் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் தான் மகேஷ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது புவனேஸ்வரிக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த மகேஷ்குமார் இருவரும் மேம்பாலத்தில் இருந்து குதித்து த ற்கொ லை செய்து கொள்ளலாம் என்று மனைவியிடம் கூறி உள்ளார். அதனை புவனேஸ்வரி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மகேஷ்குமார் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற் கொ லை செய்து கொண்டார், இந்த அதிர்ச்சியில் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
இந்த அனைத்து விவரங்களையும் புவனேஸ்வரி தங்களிடம் வாக்குமூலமாக அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடவுளாக மாறிய இராணுவ வீரர்கள் : நெஞ்சை உருகவைக்கும் வீடியோ!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பெண் தன்னுடைய நன்றியை தெரிவிப்பதற்காக இராணுவ வீரர்களின் கால்களை தொட்டு வணங்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி நகரமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேரழிவுகரமான வெள்ளத்தால் கோலாப்பூர், சாங்லி, சதாரா, புனே மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் இருந்து 2.85 லட்சத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாகவும், ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சாங்லி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவ வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் மீட்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக, இராணுவ வீரரின் கால்களை தொட்டு வணங்கினார்.

மனதை தொட்ட சம்பவம் இது என பத்திரிக்கையாளர் நீரஜ் ராஜ்புத், வீடியோவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை : ஊரில் உள்ள மனைவியை காண சென்ற கணவன் கண்ட காட்சி!!

கணவன் கண்ட காட்சி

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மனைவி உ யிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் உ யிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (30). இவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். தர்மருக்கும் ஜான்சி ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் மனைவியின் செளகரியத்துக்காக வீட்டில் சின்னதாகக் குளியலறைக் கட்டியதுடன், தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து வயர் மூலம் அவர் மின்சாரம் எடுத்திருந்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஒருவருக்கொருவர் அதிக பாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.

மனைவியை பார்ப்பதற்காக அடிக்கடி சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் தர்மர் சில தினங்களுக்கு முன்னர் அதே போல ஊருக்கு வந்தார். அப்போது குளியலறைக்கு செல்லும் மின்வயரையொட்டிய கம்பியில் தான் துவைத்த துணியை காயப்போட்டிருந்த ஜான்சி ராணி அதை எடுக்க முயன்ற போது துணி கீழே விழுந்தது.

அந்தத் துணியை ஜான்சி ராணி கீழே குனிந்து எடுக்க முயன்ற போது மின்வயரையொட்டிய அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருப்பது அறியாத அவரின் தலைமுடி, கம்பியில் பட்டது. இதையடுத்து ஜான்சி ராணியின் மீது மின்சாரம் பாய்ந்தது, இந்த காட்சியை பார்த்து பதறியடித்தபடி அங்கு வந்த தர்மர், மனைவியைக் காப்பாற்ற அருகில் வந்து அவரை தொட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தனர்.

இதன்பின்னர் குடும்பத்தார் வந்து பார்த்த போது இருவரும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் மற்றும் மருமகளை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத தர்மரின் தந்தை பொன்னுசாமி மற்றும் தாய் அழகம்மாள் கூறுகையில், தர்மர் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், என் மருமகள் தான் எங்களை கவனித்து வந்தார். மகனும் மருமகளும் எங்கள் மீது அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவர்கள் இருவரையும் ஒரே நாளில் இழப்போம் எனக் கனவில் கூட நினைக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மார்பளவு வெள்ளம் : ஒன்றரை கி.மீ குழந்தைகளை தோளில் சுமந்த போலீஸ் : குவியும் பாராட்டுக்கள்!!

மார்பளவு வெள்ளம்

இந்திய மாநிலம் குஜராத்தில் மார்பளவு வெள்ளத்தில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் காவலரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு 11 பேர் மரணமடைந்துள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக மீட்புப் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 6,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மார்பளவு வெள்ளத்தில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக பொலிசார் ஒருவர் தூக்கிச் செல்கிறார்.

பிருத்விராஜ் சிங் ஜடேஜா என்ற அந்த காவலர், கிட்டத்தட்ட 1.5 கிலோ தூரம் வெள்ள நீரில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த காவலரின் அர்ப்பணிப்பு உணர்வையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை கண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், காவலரின் பணியை பாராட்டியுள்ளார். அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு முன் உதாரணமாக காவலர் பிருத்விராஜ் சிங் ஜடேஜா உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தச் செயலுக்கு தலைவணங்குகிறேன் எனவும் லட்சுமணன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதுடன் காவலரின் உழைப்பை பாராட்டி வருகின்றனர்.

டோனிக்காக மிகவும் விலையுயர்ந்த பரிசை வாங்கியுள்ள மனைவி சாக்‌ஷி!!

டோனிக்காக சாக்‌ஷி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனிக்கு அவரது மனைவி சாக்க்ஷி, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக அளிக்க காத்துள்ளார்.

டோனிக்கு எப்போது வாகனங்கள் மீது அலாதி பிரியம் உண்டு. பைக்குகள், கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்திருக்கிறார். தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வரும் டோனியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் திகதி முடிவடைகிறது.

இந்நிலையில் அவரது மனைவி சாக்‌ஷி டோனிக்காக விலை உயர்ந்த புதிய கார் ஒன்றினை வாங்கி அவரது வீட்டில் நிறுத்தியுள்ளார்.

அந்த காரை புகைப்படம் எடுத்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்களின் புதிய விளையாட்டு பொருளாக இந்த கார் நம் வீடு வந்து சேர்ந்து விட்டது. முதல் நபர் மகி..!! உங்களை பெரிதும் மிஸ் செய்கிறேன்.

இந்த கார் இந்தியாவின் குடிமகன் என்ற அடையாளத்துக்காக காத்திருக்கிறது, ஏன் என்றால் இந்த காரை வைத்திருக்கும் முதல் இந்தியர் நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த கார் கிராண்ட் செரோக்கே வகை கார் ஆகும். டோனியிடம் ஏற்கனவே, பெராரி 599 GTO, ஹம்மர் H2 ஆகிய கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா உலுக்குளத்தில் ஆயுதங்கள் மீட்பு!!

ஆயுதங்கள் மீட்பு

வவுனியா, உலுக்குளம் குளக்கட்டு பகுதியில் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக பயணித்த ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஆயுதங்கள் சில இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து உலுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றும், ரி 56 ரக துப்பாக்கி மகசின்கள் இரண்டும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இருந்து பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றும், ரி 56 ரக துப்பாக்கி மகசின்கள் இரண்டும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என நீதிமன்ற அனுமதியுடன் இன்று விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், அதனை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை – ஆறுமுகத்தான்புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு!!

ஓமந்தை – ஆறுமுகத்தான்புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் ஆரம்ப நிகழ்வு வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா அவர்களின் கம்பெரலிய பகுதி 02 திட்டத்தில் 2,00,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ் தீர்த்தக்கேணியின் பணிகள் இடம்பெறவுள்ளன

இவ் ஆரம்ப நிகழ்வில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டார பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் க.கேதீஸ்வரன், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்களேன பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி : 622 குடும்பங்களைச் சேர்ந்த 2166 பேர் குடிநீரின்றி அவதி!!

கடும் வறட்சி

வவுனியா மாவட்டத்தில் வறட்சி காரணமாக 03 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 622 குடும்பங்களைச் சேர்ந்த 2166 பேர் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பாக இம்முறை மழை வீழ்ச்சி மிகக் குறைவாக காணப்பட்டதனால் வவுனியா மாவட்டத்தில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி தொடங்கி தற்போது வரையான காலப்பகுதியில் மழை வீழ்ச்சி மிகவும் குறைவடைந்துள்ளது. இதனால் வவுனியா வடக்கில் பிரதேச செயலக பிரிவில் மருதோடை, ஊஞ்சல் கட்டி, வெடிவைத்தகல்லு, நைனாமடு, கற்குளம் உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஓமந்தை, காத்தார்சின்னக்குளம், மகாறம்பைக்குளம், கள்ளிக்குளம், பம்பைமடு, காத்தான்கோட்டம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 154 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேரும்,

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளம், பெரியபுளியன்குளம், கங்கன்குளம், நேரியகுளம், சின்ன சிப்பிகுளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 243 குடும்பங்களைச் சேர்ந்த 1194 பேரும் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களுக்கான குடிநீரை பெற்றுக் கொடுக்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அப்பகுதி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு குறித்த வறட்சியினால் பண்ணையாளர்கள் விவசாயிகள் மற்றும் பயிற்செய்கையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பம்பைமடு மற்றும் கோவில்குளம் ஆகிய கமநல சேவை நிலைய பிரிவுகளில் 120 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை அழிவடைந்துள்ளது.

வவுனியாவில் ஹெல்மட் அணியாது சென்றவர்களை வேடிக்கை பார்த்த பொலிசார்!!

வேடிக்கை பார்த்த பொலிசார்

வவுனியா ஏ9 வீதியில் ஹெல்மட் அணியாது ஊர்வலமாக சென்ற மோட்டர் சைக்கிள்களை போக்குவரத்து பொலிசார் மறித்த போதும், அவை நிறுத்தாமல் சென்றபோது போக்குவரத்து பொலிசார் வேடிக்கை பார்த்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

வவுனியாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் வருகைதந்தார். இதன்போது கட்சி ஆதரவாளர்கள் அவரை மோட்டர் சைக்கிள் பவனியாக அழைத்து சென்றனர்.

வவுனியா, தாண்டிகுளம் முருகன் ஆலய முன்றலில் இருந்து மன்னார் வீதி நான்காம் கட்டை வரை குறித்த மோட்டர் சைக்கிள் பவனி இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் கூட்டனியின் இளைஞர் அணித் தலைவர் உள்ளிட்ட சிலர் மோட்டர் சைக்கிளில் தலைகவசம் அணியாது பயணித்தனர்.

ஏ9 வீதி புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டர் சைக்கிள் பவனியை அவதானித்து தலைகவசம் அணியாது சென்றவர்களை வழிமறித்தனர். ஆனால் மோட்டர் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாது சென்றனர்.

இதன்போது வாகனம் ஒன்றில் வந்த பிரமுகர் குறித்த இளைஞர்கள் முன்னாள் முதலமைச்சரை அழைத்துச் செல்வதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தினார். இதன்போது போக்குவரத்து பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.