வவுனியாவிற்கு வருகை தந்த வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஆலய வாசலில் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக இன்று காலை சி.வி.விக்னேஸ்வரன் வருகை தந்திருந்தார்.
வவுனியா, தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு விசேட பூஜைகளைத் தொடர்ந்து அவரை நான்காம் கட்டை வரை ஊர்வலமாக அழைத்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக சி.வி.விக்னேஸ்வரன் 9.15 மணிக்கே குறித்த ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் வவுனியா மாவட்ட கட்சி அமைப்பாளரும், ஆதரவாளர்களும் அவ்விடத்திற்கு உரிய நேரத்திற்கு வருகை தராமையால் ஆலய வெளிவாசலில், காரில் அமர்ந்திருந்தபடி சுமார் 30 நிமிடங்கள் சி.வி.விக்னேஸ்வரன் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனினும், கட்சி அமைப்பாளர் நீண்ட நேரமாக வராத போதிலும், அவர் இன்றியே முன்னாள் முதலமைச்சருக்கான பூஜை நடைபெற்றுள்ளது. பூஜை முடிந்த பின்னரே அமைப்பாளர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டரில் அவரது பெயர் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் டுவிட்டரில் இலங்கை ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார் கோத்தபாய.
மட்டக்களப்பு – கல்முனை வீதி, நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனத்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியமையினால் இன்று காலை இவ்விபத்து நேர்ந்துள்ளது.
சிறிய ரக லொறியில் பயணித்த இருவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன், இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏறாவூரைச் சேர்ந்தவர்களான, 25 வயதுடைய பதுறுதீன் ஹில்மி ஹசன் மற்றும் 30 வயதுடைய தாவூத் றிழ்வான் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடைய பதுறுதீன் றிஸ்வின் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மற்றும் மன்னாரில் தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளும் 600 பயனாளிகளுக்கு உதவித் திட்டங்களை பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று (11.08.2019) வழங்கி வைத்தார்.
வவுனியா சாம்பல் தோட்டம் ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இவ் உதவித்திட்டங்கள் வழங்கிப்பட்டிருந்தன.
இதில் 300 பயணாளிகளுக்கு காசோலைகளும் 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றும் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியாவில் இளைஞர்கள் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியை வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.வக்கினேஸ்வரன் இன்று (11.08.2019) ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா, கற்பகபுரம், நியூ வன் விளையாட்டுக் கழக மைதானத்தில் தமிழ் மக்கள் கூட்டனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.வக்கினேஸ்வரனால் 7 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களை வாழ்த்தி விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் க.அருந்தவபாலன், தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி காரியாலம் வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (11.08.2019) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி.விக்னேஸ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன்பின்னர், கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, கட்சியின் யாழ், வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிறி, மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஐதராபாத் மாநிலத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குபோட்டு தற் கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த நரசிம்மா மற்றும் அஞ்சம்மா ஆகியோரின் மகள் ஸ்ராவணி (20). இவர் கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக ஆர்.எல்.நகரில் வசிக்கும் ராமஞ்சநேயுலுவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் போது ஸ்ராவணியின் பெற்றோர் ரூ.5 இலட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து இன்னும் வரதட்சணை வேண்டும் என ராமஞ்சநேயுலு மற்றும் அவருடைய பெற்றோர் ஸ்ராவணியை கொ டுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிக மனஉளைச்சலில் இருந்த ஸ்ராவணி, வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து குளியலறையில் தூ க்குபோட்டு தற் கொ லை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமஞ்சநேயுலு குடும்பத்தினர், ஸ்ராவணியை வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஸ்ராவணி ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ராமஞ்சநேயுலு மற்றும் அவருடைய பெற்றோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காத பெண்கள் மோசமானவர்கள் என்றால், அவர்கள் தான் இந்த உலகிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி(44), சமீப காலமாக வீடு முதல் அலுவலகம் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு எதிராக போராடி வருகிறார். இதற்கு முன்பு, மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம் செய்யும் நல்லெண்ண தூதராக பணியாற்றியுள்ள ஏஞ்சலினா, தற்போது சிறப்பு தூதராக செயல்பட்டு வருகிறார்.
ஏஞ்சலினா ஜோலிக்கு மூன்று மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகன்களும், ஒரு மகளும் தத்தெடுக்கப்பட்டவர்கள். எனினும், இன பாகுபாடு இன்றி தனது பிள்ளைகளை ஏஞ்சலினா வளர்த்து வருகிறார். இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான Elleயின் செப்டம்பர் மாத இதழுக்காக கட்டுரை ஒன்றை ஏஞ்சலினா எழுதியுள்ளார்.
இதில் தன் மூன்று மகள்களுக்காக உருக்கமான தன்னம்பிக்கை தரும் விடயங்கள் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்கள் குறித்து புரட்சிகரமான கருத்துக்களையும் அதில் தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில்,
‘சமுதாயத்திற்கு எதிராக போராடும் பெண்கள் ஆபத்தானவர்கள் என்று பொதுவாக கருதப்படுகிறது. அந்த காலத்தில் இருந்தே, சமுதாயத்திற்கு சாதாரணமாக கருதப்படும் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களை, இயற்கைக்கு மாறானவர்கள் அல்லது வித்தியாசமானவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
அறிவை கூர்மைபடுத்துவது தான் உங்கள் வாழ்வில், நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விடயம் என்று என் மகள்களுக்கு நான் அடிக்கடி கூறுவேன். நீங்கள் எவ்வளவு அழகான உடையை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். ஆனால், உங்கள் மனம் வலுவாக இல்லாவிட்டால் நீங்கள் அணியும் உடை ஓர் பொருட்டே அல்ல.
ஒரு பெண்ணுக்கு சுயமான விருப்பம் மற்றும் அவளுக்கென்று சொந்த கருத்துக்கள் இருப்பதை விட வேறெதுவும் பெரிதல்ல. இதை விட பிறரை வசியம் செய்யும் பண்பு வேறெதுவும் இல்லை. குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட அல்லது வேறு எந்த கடுமையான காரணத்திற்காகவும், தனக்கான உரிமைக் குரலை விட்டுக்கொடுக்காத பெண்களே மிகவும் பலசாலிகள்.
இவர்களுக்கு பெயர் மோசமானவர்கள் என்றால், இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான பெண்கள் பெரும்பாலும், சமூக அநீதி மற்றும் துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராடி சோர்ந்துபோனவர்கள்’ என தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பள்ளி தோழியை, முதன்முதலாக சந்தித்த பள்ளியிலேயே பிரித்தானிய இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா ஃபுல்தோர்ப் (31) மற்றும் பில் ஆலன் (32) என்கிற இருவரும் 1992ம் ஆண்டு நார்தாம்ப்டன் பகுதியிலுள்ள கிங்ஸ்டார்ப் லோயர் பள்ளியில் படித்த போது முதன்முதலாக சந்தித்து கொண்டனர்.
அதன்பிறகு மேல்நிலை படிப்பிற்காக பில் ஆலன் குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது. இதனால் இருவரும் எந்தவித தொடர்பும் இல்லாமல் பிரிந்துவிட்டனர்.
2009ம் ஆண்டில் பில் ஆலன் பேஸ்புக்கில் மீண்டும் ஜெம்மாவை சந்தித்தார். நண்பர்களாக பழக ஆரம்பித்த இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.
இதனையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த ஜோடி, கடந்த வாரம் தங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்ட பள்ளியில் உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
மன்னார் – நானாட்டான், அரிப்புத்துறை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் எவரும் கடமையில் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து, வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் மது போதையில் காணப்பட்டமையினால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால், வைத்தியசாலையில் சிறிது நேரம் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் படுகாயமடைந்த இருவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் போது வைத்தியர் கடமையில் இல்லாமை குறித்து பொதுமக்கள் குறித்த வைத்தியரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு அவர், தனது கடமை நேரம் முடிந்து விட்டது அதான் இருக்கவில்ல என பதில் வழங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சைகளுக்கு செல்கின்ற போது குறித்த வைத்தியர் தொடர்ச்சியாக, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபனை வினவிய போது, நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற குறித்த வைத்தியர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
விடுமுறை நேரம் எனில் முறையாக எமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை. கடமை நேரத்தில் போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரைநகர் – பொன்னாலை சந்தி பால பகுதியில் இன்று காலை டிப்பர் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. மணல் ஏற்றிய டிப்பர் வாகனமே காரைநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிப்பரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதன்போது நன்னீர் குழாயொன்று உடைத்து தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண குத்துச்சண்டை தகுதிகாண் போட்டியில் வவுனியா மாவட்டம் 3 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மாகாண ரீதியில் நடைபெற்ற தகுதிகாண் குத்துச்சண்டைப் போட்டியில் குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளர் எம்.சுரங்க அவர்களின் மாணவர்களான வவுனியா மாவட்ட வீர, வீராங்கனைகள் 3 தங்கப் பதங்கம் உள்ளிட்ட 8 பதங்களைப் பெற்றுள்ளனர்.
91 கிலோவிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தையும், 81 கிலோவிற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தையும், 80 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் இரு வெண்கலப் பதக்கம் என ஆறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
அத்துடன் வடமாகாணத்தின் சிறந்த குத்துச் சண்டை வீரராகவவுனியாவைச் சேர்ந்த எம்.நிக்சன் ரூபராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட ஆண்கள் குத்துச் சண்டை அணி மூன்றாம் இடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், பெண்கள் அணியில் 48 தொடக்கம் 50 கிலோ பிரிவில் வவுனியா மாவட்டம் தங்கப்பதக்கத்தையும், 60 கிலோ பிரிவில் பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று (10.08.2019) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி புகையிரத வீதி வழியாக சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று ஆதிவிநாயகர் ஆலய குளக்கட்டு வீதியில் திரும்ப முற்பட்டவேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் நேற்று (10.08.2019) இரவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு பகுதியினருக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்துள்ளது. குறித்த மோதல் காரணமாக பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கு துன்ப துயரத்தின் போது ஓதவேண்டிய துஆக்களின் தொகுப்பை இன்று முதல் வழங்கி வருகிறது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக துன்ப துயரங்களின் போது ஓத வேண்டிய துஆக்கள் என்ற தொகுப்பு அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.
அச்சிடப்பட்ட 5000 பிரதிகளையும் மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் வீடுகளுக்கும் கொண்டு சென்று கொடுப்பதற்கான பொறுப்புக்கள் 04 பிரதேசக் கிளைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. பிரதேசக் கிளைகள் அதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, சாளம்பைக்குளம் பிரதேசக் கிளை தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு இந்த துஆ தொகுப்பை அப்பகுதி முஸ்லிம் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறது.