இந்தியாவில் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர், தனது மகளை கொ ன்றுவிட்டு தானும் தற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கல்வாயில், தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் பிரக்ன்யாவின் கணவர் பார்க்கர் காலை Gym-க்கு சென்று 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி பிரக்ன்யா தூ க்கில் தொ ங்கிய நிலையிலும், மகள் ஸ்ருதி ப டுக்கை அறையில் இ றந்த நிலையிலும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிரக்ன்யா எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடைத்தது. அதில், ‘எனது மகளை கொ ன்றுவிட்டு நான் தற் கொ லை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல’ என்று எழுதப்பட்டிருந்தது.
நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் பிரக்ன்யா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குச்சவெளி கடலில் நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி இன்று மாலை ம ரணமடைந்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து சிலர் வாகனம் ஒன்றில் குச்சவெளிப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது குறித்த கடல் பகுதியில் பெண்கள், ஆண்கள் என சுற்றுலா சென்றவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது மாணவன் உட்பட இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நின்றவர்கள் குறித்த இருவரையும் மீட்க முயன்ற போதும் அது பயனளிக்காத நிலையில் குறித்த இருவரும் ச டலங்களாகவே மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த த.ஐங்கரன் (வயது 20) மற்றும் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவனான உ.கிசாளன் (வயது 16) ஆகிய இருவருமே ம ரணமடைந்தவர்களாவர்.
ம ரணமடைந்த இருவரது சடலங்களும் நிலாவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை நிலாவெளிப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மாயமான மாணவியின் எலும்பு மற்றும் தலைமுடி, அவருடைய காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் கடந்த ஜூன் 5ம் திகதி, தன்னுடைய 19 வயதான தங்கை முத்தரசியை கா ணவில்லை என பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்துவரும் பரத் என்பவரை முத்தரசி பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்ததும், அதனை தமிழரசி கடுமையாக எதிர்த்திருந்ததும் தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் பரத்தை காவல் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மே மாதம் 15ம் திகதியன்று பரத்திற்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த முத்தரசி, பரத்தை நேரில் சந்தித்து கதறி அழுதுள்ளார். பின்னர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதாக மி ரட்டியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பரத், முத்தரசியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ த்திரமடைந்த பரத், முத்தரசியை அடித்து கொ லை செய்துள்ளார்.
பின்னர் அவருடைய உ டலை தன்னுடைய காரில் வைத்து வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். பகல் முழுவதும் உ டலை வீட்டில் வைத்திருந்த பரத் குடும்பத்தினர், இரவில் யார்க்கும் தெரியாமல் வீட்டின் பின் பகுதியில் புதைத்துள்ளனர்.
அன்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த பரத்தின் தாய் வட்சுமிக்கு அடிக்கடி முத்தரசியின் நியாபகம் வந்துகொண்டே இருந்ததால், தூங்க முடியாமல் அவஸ்தையடைந்துள்ளார்.
உடனே அவர்களுடைய உறவினரும் ஜோதிடருமான குமாரசாமியின் அறிவுரையை கேட்டு, பு தைக்கப்பட்டிருந்த முத்தரசியின் உ டலை தோண்டி எடுத்து எ ரித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பரத்தின் தாயார் லட்சுமி, பரத்தின் குடும்ப நண்பர் குமார், தந்தை கனகராஜ் மற்றும் மாமன் சுப்பிரமணி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் பரத்தின் வீட்டிற்கு பின்புறம் குளியல் அறையின் அருகே மறைவாக இருந்த இடத்திலிருந்து கொ லை செய்யப்பட்ட முத்தரசியின் எலும்பு, தலை முடி மற்றும் சாம்பல் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்தில் மனைவி கண்முன்னே கணவர் பாலத்தில் இருந்து குதித்து தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. வேலூரின் கணியம்பாடி மாரியம்மான் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 32), ராணுவ வீரர். இவருக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த யூலை மாதம் 11ம் திகதி திருமணம் நடந்தது.
திருமணமான நாளிலிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் அடிக்கடி சண்டையும் நடந்தது. இந்நிலையில் இன்று இருவரும் பைக்கில் ஒன்றாக சென்று கொண்டிருக்கும் போது மீண்டும் சண்டை வந்துள்ளது.
இதனால் ஆத்திரத்திரமடைந்த மகேஷ்குமார், கலெக்டர் அலுவலகத்தின் மேம்பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திடீரென கீழே குதித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியில் இருந்த புவனேஸ்வரி, கீழே வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பரிதாபமாய் இ றந்து கிடந்துள்ளார்.
கணவனின் நிலையை பார்த்து மேலும் கதற, அங்கு வந்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் எதிர்பாராதவிதமாக நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இன்று (08.10.2019) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் – வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்திற்கு அருகே காணப்படும் வீதி வளைவுக்கு அருகே முச்சக்கரவண்டியொன்று வேகமாக வந்துள்ளது.
முச்சக்கரவண்டிக்கு எதிர் திசையில் மோட்டார் சைக்கிலில் வந்த பாடசாலை மாணவன் முச்சக்கரவண்டி வேகமாக வருவதினை அவதானித்து வீதிக்கு கீழே மோட்டார் சைக்கிலினை இறக்கியுள்ளான்.
எனினும் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிலினை மோதித்தள்ளியது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 19வயதுடை பாடசாலை மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத கைக்குழந்தையை பா லியல் வன்பு ணர்வு செய்து கொ ன்ற குற்றவாளிக்கு 48 நாட்களில் ம ரண த ண்டனை விதித்து நீதிபதி அ திரடி தீர்ப்பளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத பெண் குழந்தை ஒன்று கடந்த ஜூன் 19ம் திகதியன்று தன்னுடைய பெற்றோர் மற்றும் தாத்தா – பாட்டியுடன் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்துள்ளது.
அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை மா யமாகியிருப்பதை பெற்றோர் கவனித்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது கோலிபகா பிரவீன் (28) என்கிற இளைஞர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார்.
அவர் கூறிய பகுதிக்கு சென்ற பெற்றோர் குழந்தையின் க ழுத்தை பிரவீன் நெ ரித்துக்கொண்டிருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர். உடனே பிரவீனுக்கு தர்ம அடி கொடுத்து உள்ளூர் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், குழந்தையை வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இ றந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் போ ராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
பொலிஸாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டி விசாரிக்க ஆரம்பித்தனர். பொலிஸார் வி சாரணையில் பேசிய பிரவீன், அதிகாலை குழந்தையை க டத்தி பா லியல் வ ன்பு ணர்வு செய்ததாகவும், அதன்பிறகு க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
21 நாட்களில் பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயக்குமார் சம்பவம் நடந்த 48 நாட்களில் குற்றவாளிக்கு ம ரண த ண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஏனெனில் அந்த மாவட்டத்திலிருந்து குற்றவாளிக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக முன்வரவில்லை. இந்த வழக்கில் 30 சாட்சிகளை நீதிபதி விசாரித்துள்ளார்.
நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 23 பேர் மாயமான நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று அதிகாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்துள்ளனர். தடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் தறிகெட்டு ஓடிய பேருந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நேபாள ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் கணவன், மனைவி உள்பட 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இந்த கோர விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
தந்தையின் ஆசீர்வாதம் வேண்டி, உ யிரிழந்த அவருடைய உடல் முன் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி – செல்வி தம்பதியரின் மகன் அலெக்சாண்டர் (30).
இவரும், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் – அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (27) என்பவரும் மயிலத்தில் உள்ள தனியார் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரே இடத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 2ஆம் திகதி மயிலம் முருகன் கோயிலில் வைத்து திருமணமும், அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருமணத்திற்கான வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி, நேற்று (9ஆம் திகதி) காலை திடீரென உயிரிழந்தார். திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், தெய்வமணி உயிரிழந்தமையால் குடும்பமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியது.
அதேபோல, தனது திருமணத்தை உடனிருந்து நடத்தி ஆசீர்வதிக்காமல் தந்தை உயிரிழந்துவிட்டாரே என்ற சோகத்தில் இருந்தார் மணமகன் அலெக்சாண்டர். ஒருகட்டத்தில், ”அப்பாவின் ஆசி இல்லாமல் என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது. அவர் முன்னிலையில்தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும். அவரது உடலின்முன் இப்போதே நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோம்” என்று கூற, உறவினர்கள் திகைத்து நின்றனர்.
ஆனாலும், தந்தை மீது மகனுக்கு இருந்த பாசத்தை புரிந்துகொண்ட உறவினர்கள், கொணமங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக்கூறி, திருமணத்துக்கு சம்மதம் பெற்றனர். அதையடுத்து, உயிரிழந்த தெய்வமணிக்கு பட்டுச் சட்டை, பட்டு வேட்டி அணிவித்து, அவருடைய கையில் தாலியை வைத்து ஆசீர்வாதம் பெற்று, கண்ணீரோடு ஜெகதீஸ்வரியின் கழுத்தில் தாலி கட்டினார் அலெக்சாண்டர்.
இந்த சம்பவம், அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட மக்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் ஒன்று கடித்து குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜேமீ பிஸ்செக்லியா. சமீபத்தில் இவர், டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த ஆண் போட்டியாளரின் வலையில் ஆக்டோபஸ் மீன் ஒன்று சிக்கியதை பார்த்தார்.
உடனே அவருக்கு, அந்த ஆக்டோபஸுடன் போட்டோ எடுக்க வேண்டும் என ஆசை வந்தது. இதையடுத்து, அந்த நபரிடமிருந்த ஆக்டோபஸை வாங்கி தனது முகத்தின் மீது படரவிட்டு, இரு கைகளையும் விரித்தபடி புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
முதலில், ஆக்டோபஸ் அவருடன் விளையாடுவதுபோல் உணர்ந்தார். எனவே, ஆக்டோபஸை முகத்தில் இருந்து எடுக்காமல் அப்படியே வைத்திருந்தார். அப்போது ஆக்டோபஸ் திடீரென அவரது கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் கடித்து குதறியது.
இதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் சொட்டியது. தாங்க முடியாத வலிக்கு மத்தியில் அவர் கடுமையாக போராடி முகத்தில் இருந்து ஆக்டோபஸை பிரித்து எடுத்தார். ஆக்டோபஸ் கடித்ததில் அவருடைய இடது பக்க கன்னம் மற்றும் தொண்டை பகுதி பலமாக வீங்கின. இதற்காக சிகிச்சை பெற்றுவரும் அவர், தன்னைப் போன்று யாரும் ஆக்டோபஸுடன் விபரீத விளையாட்டை மேற்கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான கருத்தமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது. வவுனியாவில் இன்று காலை இந்த கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான சமூக ஊடகங்கள் பற்றிய தெளிவூட்டல், அதன் பாதுகாப்பு, ஊடக மற்றும் தகவல் அறிவினை மேம்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கொழும்பில் இருந்து வருகைதந்த வளவாளர்கள் செயலமர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் (குறிப்பாக பிற்பகலிலும் இரவிலும்) காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.
வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 2019 ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குளாய், முகத்துவாரம் பகுதியினைச் சேர்ந்த கடலுணவு கூலர் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் சிலாவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றில் மோதியுள்ளது.
இதனால், வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பை உறுதி நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டன. இதில் சுமார் 50 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட வாகன நடத்துனர்கள் மற்றும் நடத்துனருக்கான அடையாள அட்டைகள் இல்லாத வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
ஏ9 வீதியில் அதிகளவில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் முகமாக ஆளுநரின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. திடீர் சோதனை நடவடிக்கையின் போது 60 சதவீதமான பேருந்துகள் சட்டத்தேவைகளை பூர்த்தி செய்யாதவையாகவும் மேலும் வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய பேருந்துகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டமை இணங்காணப்பட்டுள்ளன.
வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து வடமாகாணத்தில் தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தங்கள் பிரயாணத்தின்போது தாம் பயணிக்கும் பேருந்துகள் அனுமதிப்பத்திரங்கள் கொண்டுள்ளனவா என்பது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து இந்தோனேசிய சென்றடைய முயன்ற 75 இந்தோனேசிய குடியேறிகள் பயணித்த படகு மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை மலேசிய கடல்சார் அமுலாக்க முகவர் மீட்டுள்ளது. கடந்த 6ம் திகதி இவர்கள் மலேசியாவின் சுங்கய் ஏர் ஐடம் (பெனாங் மாநிலம்) பகுதியிலிருந்து இந்தோனேசியாவின் டன்ஜூங் பலாய் (வட சுமாத்ரா மாகாணம்) பகுதியை சென்றடைய முயன்ற நிலையிலேயே குடியேறிகளின் மரப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
“சாயந்தது போன்று பெரும் அலையில் படகு மெதுவாக நகர்ந்ததை கண்டு சந்தேகமடைந்து படகை நிறுத்தினோம். அப்போதே அதிலிருந்த குடியேறிகள் மீட்கப்பட்டனர்,” என ஏஜென்சியின் இயக்குனர் முகமது ரோஸ்லி கசிம் தெரிவித்துள்ளார்.
ஐந்து பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 75 குடியேறிகள் சென்றிருக்கின்றனர். இந்த குடியேறிகள் முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியா செல்வதற்காக குடியேறிகள் ஒரு நபருக்கு 800 மலேசிய ரிங்க்ட் (சுமார் 13 ஆயிரம் இந்திய ரூபாய்) ஏஜெண்டிடம் கொடுத்திருக்கின்றனர். மலேசியாவில் வசித்து வரும் அந்த இந்தோனேசிய ஏஜெண்ட்டை காவல்துறை தேடி வருகின்றது.
இக்குடியேறிகள் ஹோட்டல், துப்புரவுத்தொழில் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலில் பணியாற்றி வந்திருக்கின்றனர். மீட்கப்பட்ட குடியேறிகள் அனனவரும் குடிவரவு மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
திருகோணமலை – அக்போபுர பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே தங்கச் சங்கிலி அபகரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதினெட்டு வயதுடைய இளம் யுவதியொருவர் மோட்டார் சைக்கிளில் அக்போபுர பகுதியிலிருந்து, கந்தளாய் நகருக்கு தேவை நிமித்தமாக சென்ற வேளை பின்னால் மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியபடி வந்த இருவர் பெண்ணின் இரண்டு பவுனுடைய தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தினால் இலங்கை அரசாங்கம் 5,475 மில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாமரை கோபுரம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை உரிய முறையில் பெற்றுக் கொள்ளாமை, நிர்மாணிப்பு தொடர்பில் பொறுப்பு கூறும் நிறுவனம் உரிய காலங்களுக்குள் தீர்மானம் எடுக்காமை மற்றும்
ஒப்பந்தக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாமதம் காரணமாக, 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரையில் 5,475 மில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தாமரை கோபுர ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டமை மற்றும் மேலதிக கடன் பணமாக 141 487103 ரூபாய் சீனாவின் எக்சீம் வங்கியிடம் பெற்றுள்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுர நிர்மாணிப்பு திட்டம் 912 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நிர்மாணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.