கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தினால் இலங்கை அரசாங்கம் 5,475 மில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாமரை கோபுரம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை உரிய முறையில் பெற்றுக் கொள்ளாமை, நிர்மாணிப்பு தொடர்பில் பொறுப்பு கூறும் நிறுவனம் உரிய காலங்களுக்குள் தீர்மானம் எடுக்காமை மற்றும்
ஒப்பந்தக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாமதம் காரணமாக, 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரையில் 5,475 மில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தாமரை கோபுர ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டமை மற்றும் மேலதிக கடன் பணமாக 141 487103 ரூபாய் சீனாவின் எக்சீம் வங்கியிடம் பெற்றுள்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுர நிர்மாணிப்பு திட்டம் 912 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நிர்மாணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தொடர்பிலான மோசடிகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதன் போது, பிறக்கும் போது அடையாள அட்டை இலக்கம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரஜைகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைக் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் 90 இலட்சம் பயணிகள் வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவு செய்யப்படும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலைய பயணிகளின் வசதிக்காக 80 விமான டிக்கட் கவுன்டர்கள் வரை அதிகரிக்கவுள்ளதாகவும் 6 குடிவரவு குடியகல்வு பிரிவுகளை புதிதாக நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் வருடத்திற்கு 6 மில்லியன் மக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிலைய பகுதிக்கு 3000 சதுர அடி அளவு பகுதி புதிதாக இணைக்கப்படவுள்ளது. விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர் 20 விமானங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி நாபோலி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கடலில் குளிப்பதற்காக சென்ற இலங்கையர்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர்.
ஷாந்த ஜயவிக்ரம மற்றும் எல்.எம்.சுஜித் என்ற இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எல்.எம்.சுஜித் என்பவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அ டித்து செல்லப்பட்டு உ யிரிழந்துள்ளார்.
நேற்று ஷாந்த ஜயவிக்ரம என்பர் உ யிரிழந்துள்ளார். இரண்டு ம ரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை சுவிஸ்லாந்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மூன்று இலங்கையர்கள் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர். இதில் சிறுமி ஒருவரும் உள்ளடங்கும். ஐரோப்பிய நாடுகளில் இலங்கையர்கள் அகால ம ரணத்திற்குள்ளாவது குறித்து பலர் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கை வாழ் இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயர் தொழிற்பயிற்சியின் கீழ் இவர்களை வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக அனுப்பி வைக்கும் கொள்கை மட்டத்திலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலை செய்வதற்கான கூடுதலான கேள்வி காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்காக பல பயிற்சி மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரன் பியாபத் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
வெளிநாடு செல்லும் ஊழியர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில், காப்புறுதி வசதி உள்ளிட்ட பல விசேட வசதிகளை வழங்குவது இதன் நோக்கமாகும். பத்து வருடத்தை இலக்காகக் கொண்டு ஜப்பானுக்கான தொழில்வாய்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் ஐந்து இலட்சம் பெறுமதியான 52 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் தோட்டச் செய்கைக்கான கடன்கள், வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலாளர், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 35 வயது பெண் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சிலையாக உருமாறி வருகிறார். மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் விசித்திர நோயால் தாக்கப்பட்டுள்ளார், ரோச்ச்டேல் பகுதியை சேர்ந்த 35 வயதான ரேச்சல் வின்னார்ட்.
இதனால் தற்போது இவரது மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்வது இவரின் கணவரே. இவரால் இவரது கழுத்தை, கைகளை, கால்களை எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விசித்திர நோய் தாக்குதல் காரணமாக இவர் தற்போது வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளார். தம்மை சுற்றியிருப்பவர்களுக்கு தாம் ஒரு சுமையாக கருதுவதாக ரேச்சல் கண்கலங்கியுள்ளார்.
தமது நிலை குறித்து பலருக்கும் விளக்கம் அளித்தாலும், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல், என்னை பரிதாபமாக பார்ப்பதையே வாடிக்கையாக செய்கின்றனர் என்றார். 19 மாத குழந்தையாக இருக்கும்போது முதன் முறையாக ரேச்சலின் முதுகில் கட்டிகள் இருப்பது தொடர்பில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதை புற்றுநோய் என கருதிய மருத்துவர்கள் அதர்கான சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் அந்த கட்டி குண்மாகவில்லை.
காலில் ஒரு எலும்பு இல்லை என்பதை அறிந்த பின்னரே அது புற்றுநோய் அல்ல என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 12 ஆம் வயதில் இந்த நோய் தொடர்பில் அடையாளம் காணப்பட்டாலும் ரேச்சலின் 20 ஆம் வயதிலேயே நோயின் தாக்கம் வெளியே தெரிந்துள்ளது.
இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரேச்சலின் இடது பக்க இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அதில் இருந்து தொடர்ந்து படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார் ரேச்சல். தற்போது அவருக்கு 24 மணி நேரமும் கவனம் தேவைப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு கருவுற்ற ரேச்சலுக்கு, அந்த குழந்தை தங்கவில்லை எனவும், இதே நிலையில் பிள்ளை பெற்றுக் கொள்வது ஆபத்தானது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடுக டத்தப்பட உள்ள இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்தார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.
தற்போது அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று கூறி, அவரது குடும்பத்தை நாடு க டத்த உத்தரவிட்டுள்ளது அவுஸ்திரேலிய அரசு.
தனது உடல்நிலை தனது வாழ்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ள ராஜசேகரன், அரசு மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று கூட கூறிவிட்டார். புலம்பெயர்தல் அமைச்சருக்கு சுமார் 14,000 பேர் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றையும் அவர் அளித்து விட்டார்.
என்றாலும் எந்த பிரயோஜனமும் இல்லை, அவர்கள் இம்மாதம் 21 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்ட ராஜ சேகரனின் மகளான வாணிஸ்ரீ ராஜசேகரன், புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தனது செய்தியாக ’நான் ஒரு அவுஸ்திரேலியர்’ என்னும் பாடலை பாடினார். அவர் பாடிய விதம் அங்கிருந்தோரை நெகிழச் செய்ததையடுத்து, நீங்கள் மட்டும் இந்த நாட்டுக்கு எதையாவது செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.
வாணிஸ்ரீ 12ஆவது வகுப்பு படித்து வரும் நிலையில், உடனடியாக அவர் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளதால், சிறந்த மாணவியாகவும், மாணவர் தலைவராகவும் திகழும் அவர், தனது ஆண்டிறுதித் தேர்வை எழுதாமலே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
அத்திவரதரை தரிசிக்க சென்ற குடும்பத்தினர் கோர விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் அவருடைய நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை சந்திப்பதற்காக சொகுசு காரில் சந்தோசமாக புறப்பட்டுள்ளனர்.
சுப்புராஜின் மனைவி கிருத்திகா அதிவேகத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார். தர்மபுரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதி, இருமுறை சுழன்று தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் சுப்புராஜ், அவரது மூன்று வயது குழந்தை விவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ யிரிழந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் காயங்களுடன் காரில் சிக்கி தவித்த சுப்புராஜின் மனைவி கிருத்திகா, நண்பர் மகேந்திரன் அவரது மனைவி அனிதா மற்றும் மகேந்திரனின் 3 வயது குழந்தை கிருஸ்வினாயக் ஆகிய 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை முடிந்த பின்பு, கணவன் குழந்தையை பார்த்து கிருத்திகா கதறி அழுதுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு – கண்டி வீதியின் நிட்டம்புவ – கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நேற்று முன்தினம் (07.08.2019) புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் வேன் சாரதியான திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வேன் ஓட்டுனர், அவரது 47 வயதுடைய தாயார் மற்றும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம் வேன் ஓட்டுனரின் தந்தை மற்றும் சகோதரி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை நாளை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மகள் பயிலும் அதே கல்லூரியில் அவருக்கு ஜூனியராக தந்தை பயின்று வரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அந்த மாணவியே தமது தந்தை குறித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், என் தந்தைக்கு சட்டம் குறித்தும், வழக்குகள், அவற்றின் விவரங்கள் குறித்தும் அறிய மிகுந்த ஆர்வம் உள்ளது. அவருக்கு நீதிமன்றம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், குடும்ப சூழல் காரணமாக அது நடக்கவில்லை.
அதனால் அவர் கன்ஸ்டல்டன்சியில் பணியாற்றினார். இரவு, பகல் பாராமல் எங்களின் படிப்பிற்காகவும், வாழ்க்கை தரத்திற்காகவும் உழைத்தார். எனது சகோதரி ஒரு மருத்துவர். நானும், என் அண்ணனும் சட்டம் பயின்று வருகிறோம்.
எனது வகுப்புகள் குறித்து தினமும் விசாரிப்பார். எனக்கு அப்போதுதான் தோன்றியது. இது அவர் கனவை நனைவாக்கும் நேரம் என்பது. நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
இப்போது நானும், என் தந்தையும் ஒரே கல்லூரியில்தான் படிக்கிறோம். நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் கல்லூரியில் நடந்துள்ளன. அவரது ஆர்வத்தின்படி வகுப்புகளில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளை குழந்தைகள் நலக் குழு மீட்டு, அதில் மூன்று குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் மட்டும் என் அம்மா இன்னும் என்னை கூப்பிட வரவில்லையா என்று ஏகத்துடன் இருப்பது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
கரூர் இரயில் நிலையத்தில் பரிதாபமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளை குழந்தைகள் நலக் குழு கடந்த 6 மாதங்களுக்கு முன் மீட்டு, அவர்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் எங்கள் ஊர் தஞ்சாவூர் என்று மட்டுமே கூறியதால், குழந்தைகள் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் பயனாக, அதில் மூன்று குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதில் 5 வயது தருணின் பெற்றோரை மட்டும் அடையாளம் காண முடியவில்லை, அவர் தன் பெற்றோரி அன்புக்காக ஏங்கி தவிப்பதாக குழந்தைகள் நலக் குழுவின் தஞ்சை மாவட்ட தலைவர் திலகவதி கூறியுள்ளார்.
மதுரை விளாச்சேரியினைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற 29 வயதான பெண் ஒருவர் தன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடைசியாக கரூர் இரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது அவரிடம் நான்கு குழந்தைகள் இருந்துள்ளன.
இதனால் குழந்தைகள் உதவி அமைப்பினர் அவர்களை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். பரமேஷ்வரி குழந்தைகளை கேட்டதால், அவரிடம் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு, குழந்தைகளை அழைத்துச் செல் என்று கூறினோம், ஆனால் அதன் பின் அவர் வரவேயில்லை.
இதையடுத்து அந்த குழந்தைகளிடம் தொடர்ந்து பேசி வந்த போது, பிரித்திவிராஜ் என்ற சிறுவன் நாங்க மதுரை என்றும் படித்த பள்ளி மற்றும் ஆசிரியரின் பெயர்களையும் கூறினான்.
அதன் பின் விசாரித்து, அவர்களின் தந்தையையும் கண்டுபிடித்து வரவழைத்தோம். அப்போது அப்பாவை கண்டவுடன் மூன்று குழந்தைகளும் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டன. ஆனால் தர்ஷன் மட்டும் தனிமரமாக நின்றான், அப்போது அவன் என்னை அழைப்பதற்கு எங்க அம்மா வரலையா என்று கண்கலங்கிவிட்டான்.
அவனை சமாதானப்படுத்தி, நிச்சயமாக உன்னை உன் அம்மாவிடம் சேர்ப்போம் என்று உறுதியளித்துள்ளோம். ஒவ்வொரு நாளும் நன்றாக இருக்கும் அவன், திடீரென்று தன் அம்மா-அப்பாவை நினைத்து சோர்வாகிவிடுவான், பாசத்திற்காக ஏங்கி நிற்கிறான் என்று சற்று வேதனையுடனே கூறி முடித்தார்.
மேலும் தர்ஷனை எங்கிருந்து வந்தான் என்பதை அந்த பரமேஷ்வரி என்ற பெண் சொன்னால் மட்டுமே தான் கொஞ்சமாகவது உதவ முடியும் என்று கூறியுள்ளார்.
ஹட்டன் – நுவரெலியா, பிரதான வீதிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இருந்து லிந்துலைக்கு 15 தொன் நிறையுடைய கஜு விதைகளை ஏற்றிச் சென்ற பாரஊர்த்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பார ஊர்தியின் தடையாளி முறையாக இயங்காமையினாலே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வாகனத்தின் சாரதியும், நபர் ஒருவருக்கும் இதன்போது காயம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நம்பவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ரசிகா பிரயதர்ஸனி எனும் பெண்ணே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக குறித்த பெண்ணின் கணவரே இவ்வாறு கொ லை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரான கணவர் தலைமறைவதாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
100 வருடம் பழமை வாய்ந்த நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நா சமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் எல்லையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள குறித்த விடுதியே நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த கட்டிடத்தின் கூரை பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை ஊழியர்கள் தீயிட்டு இன்று எரிக்க முயற்சித்த வேளையில் குறித்த தீ கட்டிடத்தின் மீது பரவலாக பரவி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
எனினும் குறித்த விடுதியிலிருந்து சில தளபாடங்கள் மற்றும் தீக்கிரையாகாமல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிறகு ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் குறித்த விடுதியை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உ யிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
சுவிஸ்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற ஆறு வயது சிறுமியே கடந்த 4ம் திகதி ஏரியில் வீழ்ந்து உ யிரிழந்தார். இந்நிலையில், அவரின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தியிருந்தனர். குறிப்பாக, சிறுமியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் பலரும், கண்ணீர் விட்டு கதறியழுத நெகிழ்ச்சியான தருணமும் பதிவாயிருந்தது.
நிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி கடந்த 4ம் திகதி தண்ணீரில் விழுந்து மூழ்கினார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சுழியோடிகள் ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்தில் இருந்து சிறுமியை மீட்டெடுத்து முதலுதவிகள் வழங்கினர். எனினும், சிறுமி அந்த இடத்திலேயே உ யிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.