இலங்கை மக்களின் உயிரை ப லியெடுக்கும் எமனாக மாறும் பேருந்துகள் : வருகிறது புதிய நடைமுறை!!

வருகிறது புதிய நடைமுறை

இலங்கையில் அதிக வேகத்தில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 1955 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளின் சாரதிகளை 3 மாதங்களுக்கு பணி நீக்கம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாட்டிற்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக சாரதிகளை தெளிவூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், விபத்தினால் ஒருவர் உ யிரிழந்தால், அந்த சாரதியின் அனுமதி பத்திரம் இரத்து செய்யவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களில் உ யிரிழப்போரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முல்லைத்தீவில் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு நேற்று மீன்பிடிக்க சென்ற நபர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை குறித்தநபரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் நீரில் மூழ்கி உ யிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தாண்டவமாடும் வறட்சியினால் திண்டாடும் ஐந்தறிவு மிருகம்!!

திண்டாடும் ஐந்தறிவு மிருகம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மனிதர்கள் மாத்திரமின்றி மிருகங்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் பிரதான குளங்கள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளும் துரிதமாக வற்றி வருகின்றன.

விவசாய நீர்ப்பாசனம் தொடக்கம் குடிநீர் வரை வழங்கி வருகின்ற அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டமும் வரலாற்றில் முதல் தடவையாக வெகுவாக குறைந்துள்ளது.

அந்தவகையில், இந்த வெப்பத்துடனான காலநிலையினால் பாதிப்படைந்த நாய் ஒன்று உடல் வெப்பத்தை தணிப்பதற்காக நீரில் அமர்ந்துள்ளமை அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த நாய் அரச அலுவலகம் ஒன்றில் உள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தண்ணீர் விநியோகிக்கும் குழாய் நீரை நாடி நீரிலேயே அமர்ந்துள்ளது.

வறட்சி என்பது மனிதர்கள் மத்தியில் மாத்திரம் தாக்கம் செலுத்தக்கூடியதல்ல மாறாக அவை ஐந்து அறிவுடைய மிருகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதென்பது தெரியவருகின்றது.

வவுனியாவில் மீண்டும் கடும் காற்று : மேலும் 6 வீடுகள் சேதம்!!

மீண்டும் கடும் காற்று

வவுனியாவில் மீண்டும் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மேலும் 6 வீடுகள் சே தமடைந்துள்ளதாக மாவட்ட அ னர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை மற்றும் இரவு வீசிய கடும் காற்று காரணமாகவே இப் பா திப்புக்கள் ஏற்பட்டன.

அந்தவகையில், வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள பூவரசன்குளம் பகுதியில் ஒரு வீடும் 4 அங்கத்தவர்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நேரியகுளத்தில் ஒரு வீடும் 5 அங்கத்தவர்களும், குருக்கள் புதுக்குளத்தில் 2 வீடும் 4 அங்கத்தவர்களும், கிறிஸ்தவ குளத்தில் 2 வீடும் 7 அங்கத்தவர்களும் பா திப்படைந்துள்ளனர்.

மேலும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்குணாமடுவில் ஒரு வீடும் 5 அங்கத்தர்வர்களும் என 6 வீடுகளும் 25 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளனர். குறித்த வீடுகளின் கூரைப் பகுதிகளே பகுதியளவில் பாதிப்படைந்துள்ளன.

இதேவேளை, காற்றினைத் தொடர்ந்து இரவு பெய்த மழையின் காரணமாக குறித்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவர்களது உடமைகள், வீட்டு உபகரணங்கள் மழையில் நனைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் தடம்புரண்டது!!

வாகனம் தடம்புரண்டது

முல்லைத்தீவு – மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை ஏற்றி வந்த வாகனமே விபத்திற்கு இலக்காகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வாகனத்தின் சாரதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு அவசர எ ச்சரிக்கை : நிலைமை தீவிரமடைவதாக தகவல்!!

அவசர எ ச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு அவசர எ ச்சரிக்கையொன்றை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது. அந்த வகையில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்க வேண்டாம் என எ ச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றுடனான காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் தா க்கம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெங்கு நோயின் முதற்கட்ட அறிகுறியான காய்ச்சல் வந்த நோயாளர்கள் சிலர், இதனை சாதாரண காய்ச்சல் என எண்ணி ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் போன்ற சில மருந்துகளை உட்கொண்டுள்ளனர்.

இதனால் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த நோயாளர்களின் நிலைமை தீ விரமடைந்துள்ளதுடன், அதில் சிலர் உ யிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அவசர எ ச்சரிக்கை அறிக்கையில், அஸ்பிரின் (Aspirin), புருபன் (Ibuprofen), டைக்கிலோபெனாக் சோடியம் (Diclofenac sodium), மெபனமிக் அசிட் (Mefenamic acid) மற்றும் இந்த வகையை சேர்ந்த வேறு ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள்,

ஸ்ரிரொயிட் வகையை சேர்ந்த மருந்துகளான பிறெட்னிசலோன் (Prednisolone), மீதைல் பிறெட்னிசலோன் (Methylprednisolone) மற்றும் டெக்ஸாமெத்தசோன் (Dexamethasone) ஆகிய மருந்துகளை காய்ச்சல் வந்தவர்கள் உட்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வைத்தியர்களின் பரிந்துரைகள் இன்றி இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் இன்று காலை நேர்ந்துள்ள விபரீதம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

காலை நேர்ந்துள்ள விபரீதம்

யாழ். கோப்பாய் – உரும்பிராய் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இயக்கச்சியை சேர்ந்த நபரொருவர் உ யிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று சடுதியாக வீதியை கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) அதனுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர் உ யிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ யிரிழந்தவர் 30 வயதுடைய இளைஞன் எனத் தெரியவருகின்றது. இவரின் ச டலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்திற்கு காரணமான சாரதியை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் சாரதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரசபை வாகனம் முழுவதும் விளம்பர பாதாதைகள் : நடந்தது என்ன?

விளம்பர பாதாதைகள்

வவுனியா கோவிற்குளம் பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாதைகளை அகற்றும் பணியில் நகரசபையினர் இன்று (08.08.2019) காலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை ஈடுபட்டனர்.

கோவிற்குளம் சிதம்பரபுரம் பிரதான வீதியில் காணப்படும் பெரும்பாலான மின்கம்பங்களில் விளம்பர பாதாதைகள் காணப்பட்டது.

இதன் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் கோவிற்குளம் வீதியின் அனைத்து மின்கம்பங்களிலும் விளம்பர பதாதைகளாக காணப்பட்டன.

இதனை அகற்றும் பணியில் நகரசபையினர் இன்று ஈடுபட்டிருந்தனர். தற்போது அப்பகுதியின் காணப்படும் மின்கம்பங்கள் அனைத்தும் வெறுமையாக காணப்படுவதுடன் குறித்த வீதி அழகாகவும் காணப்படுன்றது.

வவுனியாவில் இப்படியும் மனிதர்களா? நெகிழ வைக்கும் செயல்!!

நெகிழ வைக்கும் செயல்

வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் மூன்று பிள்ளைகளுடன் அனாதரவாக நின்ற பெண்ணுக்கு பணம் வழங்கி உதவிய நல் உள்ளங்களின் மனதை நெகிழ வைக்கும் செயற்பாடொன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் குறித்த பெண்ணின் கணவன் வவுனியாவிற்கு வேலைக்கு செல்வதாக தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இரண்டு மாதங்கள் கடந்தும் கணவன் வீடு திரும்பவில்லை அதனையடுத்து குறித்த பெண் அவரது மூன்று பிள்ளைகளுடன் கணவனை தேடி இன்று (08.08.2019) வவுனியாவிற்கு வருகை தந்து அதிகாலை 3.00 மணிமுதல் வவுனியா நகர் முழுவதும் தேடியலைந்த பின்னர் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் பிள்ளைகளுடன் காலை முதல் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அவரிடம் உரையாடினர். அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கும் தகவலை வழங்கியதும் அவ்விடத்திற்கு விரைந்த ஊடகவியலாளர்கள் குறித்த பெண்ணிடம் அவரது கணவன் தொடர்பான தகவலை கேட்டறிந்ததுடன் அவரது குடும்ப நிலை பற்றிய தகவலை கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் பொலிஸாருக்கு ஊடகவியலாளர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கணவரை காணவில்லையென மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

மீண்டும் மட்டக்களப்புக்கு செல்வதற்கும், சாப்பாட்டிற்கும் பணம் இன்றி தவித்த சமயத்தில் அவ்விடத்தில் நின்ற காப்புறுதி நிறுவனத்தின் ஊழியர் ஜோன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஊடகவியலாளர்கள் இணைந்து பண உதவி செய்தனர்.

பொலிஸார் என்றால் இலஞ்சம் வாங்குபவர்கள் என்ற எண்ணக்கருத்துக்கு மத்தியில் பொலிஸார் பணம் வழங்கி உதவியமை அவ்விடத்தில் நின்றவர்களின் மனதை நெகிழ வைக்கும் செயற்பாடாக அமைந்திருந்தது.

வவுனியா பண்டாரிகுளத்தில் இரு மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

விபத்து

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (08.08.2019) காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பண்டாரிகுளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலிலும் அப்பாதையூடாக எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிலும் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிளஷர் ரக மோட்டார் கைக்கிலில் பயணித்த 40வயதுடைய பெண்ணும் அவரது 14வயதுடைய பிள்ளையும் காயமடைந்ததுடன் என்.எஸ் ரக மோட்டார் சைக்கிலில் பயணித்த 19வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இரவில் நடந்த விபரீதம் : கடைகள் தீயில் எரிந்து நாசம்!!

கடைகள் தீயில் எரிந்து நாசம்

தென்மராட்சி – சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றில் தீப்பற்றி எரிந்துள்ளது. இத்தீ விபத்தில் பழக்கடை முற்றாக எரிந்துள்ளது.

விபத்தையடுத்து யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் பன்றி வீதிக்கு குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம் : இருவர் படுகாயம்!!

ஏற்பட்ட விபரீதம்

வவுனியா, ஓமந்தை, சேமமடுப் பகுதியில் வீதியின் குறுக்கே பன்றி பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, சேமமடுப் பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது அவ் வீதி வழியாக வீதியை ஊடறுத்து பன்றி ஒன்று ஓடிச் சென்றுள்ளது.

இதன்போது பன்றியுடன் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் டிப்பர் சாரதி வாகனத்தை வீதியை விட்டு விலகி செலுத்த முற்பட்ட வேளை கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் குறித்த டிப்பரில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர்.

குறித்த விபத்தினை அவதானித்த மக்கள் 1990 அவசர தொலைபேசி இலக்கம் மூலம் தெரியப்படுத்தி நோயாளர் காவு வண்டியை வரவழைத்து காயமடைந்த இருவரையும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். விபத்தில் முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

க டத்தப்பட்ட குழந்தை காட்டில் மீட்பு : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

குழந்தை காட்டில் மீட்பு

தெனியாய பெவர்லி மாணிக்கவத்தை பிரதேசத்தில் க டத்தப்பட்ட குழந்தை காட்டில் விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது குழந்தையை க டத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

வீட்டில் உள்ள மற்றொரு சிறுமியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமற் போனதாகவும் அயலவர்களின்உதவியுடன் குழந்தையை தேடி கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதியில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தை க டத்திச்செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக, பெற்றோரால் அவசர பொலிஸ் விரிவிற்கு தகவல் கொடுக்கபட்டதையடுத்து தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று காலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான நிலைமை 6 மணித்தியாலங்கள் தொடரும் என விசேட அறிக்கையின் மூலம் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இன்று அதிகாலை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று மாலை 3.30 மணி வரை செல்லுப்படியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கும் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

பெண்ணின் உ யிரை பறித்த பேருந்து : மக்கள் அடித்து உடைத்தமையால் பதற்றம்!!

உ யிரை பறித்த பேருந்து

ஹிக்கடுவ பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உ யிரிழந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. விபத்தினால் கோபமடைந்த மக்கள் பேருந்திற்கு தா க்குதல் மேற்கொண்டு பாரிய சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

காலியில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த தனியார் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய 51 வயதான இந்த பெண் நேற்று மாலை உ யிரிழந்துள்ளார். இதனால் பிரதேச மக்கள் பேருந்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஹிக்கடுவை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் சாரதியை கைது செய்துள்ளனர்.

கொ டூரமாக க ழுத்தறுக்கப்பட்டு கிடந்த சிறுவன் : அ லறியடித்து ஓடிய மாணவர்கள்!!

அ லறியடித்து ஓடிய மாணவர்கள்

அரசு விடுதியில் 8 வயது சிறுவன் கழு த்தறுக்கப்பட்ட நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இயங்கி வரும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு விடுதியில் தாசரி ஆதித்யா என்கிற 8 வயது சிறுவனும் அவனுடைய அண்ணனும் தங்கி படித்து வந்தனர்.

தாசரி ஆதித்யா 3ம் வகுப்பும், அவனுடைய அண்ணன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். விடுதியில் இருவரும் ஒரே அறையில் தான் படுத்துறங்குவார்கள். தாசரி ஆதித்யா நேற்று இரவு அறைக்கு உறங்க வரவில்லை. பக்கத்துக்கு அறையில் உறங்க சென்றிருப்பான் என நினைத்துக்கொண்டு அவனுடைய அண்ணனும் வெளியில் எங்கும் தேடாமல் அன்று இரவு உறங்க சென்றுவிட்டான்.

இந்த நிலையில் இன்று காலை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் குளிப்பதற்காக பாத்ரூமிற்கு சென்றுள்ளனர். அங்கு கொ டூரமான முறையில் க ழுத்தறுக்கப்பட்டு, தாசரி ஆதித்யா ர த்தவெ ள்ளத்தில் கொ லை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அ லறியடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து வந்த விடுதி பாதுகாப்பாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுவனின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர்கள் மற்றும் விடுதி பாதுகாப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் கூற்றுப்படி, மாணவரின் குடும்பத்தினர் கிராமத்தில் சிலருடன் த கராறு செய்திருந்ததால், இந்த கொ லை ப ழிவாங்கும் செயலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.