கொ டூரமாக க ழுத்தறுக்கப்பட்டு கிடந்த சிறுவன் : அ லறியடித்து ஓடிய மாணவர்கள்!!

அ லறியடித்து ஓடிய மாணவர்கள்

அரசு விடுதியில் 8 வயது சிறுவன் கழு த்தறுக்கப்பட்ட நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இயங்கி வரும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு விடுதியில் தாசரி ஆதித்யா என்கிற 8 வயது சிறுவனும் அவனுடைய அண்ணனும் தங்கி படித்து வந்தனர்.

தாசரி ஆதித்யா 3ம் வகுப்பும், அவனுடைய அண்ணன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். விடுதியில் இருவரும் ஒரே அறையில் தான் படுத்துறங்குவார்கள். தாசரி ஆதித்யா நேற்று இரவு அறைக்கு உறங்க வரவில்லை. பக்கத்துக்கு அறையில் உறங்க சென்றிருப்பான் என நினைத்துக்கொண்டு அவனுடைய அண்ணனும் வெளியில் எங்கும் தேடாமல் அன்று இரவு உறங்க சென்றுவிட்டான்.

இந்த நிலையில் இன்று காலை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் குளிப்பதற்காக பாத்ரூமிற்கு சென்றுள்ளனர். அங்கு கொ டூரமான முறையில் க ழுத்தறுக்கப்பட்டு, தாசரி ஆதித்யா ர த்தவெ ள்ளத்தில் கொ லை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அ லறியடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து வந்த விடுதி பாதுகாப்பாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுவனின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர்கள் மற்றும் விடுதி பாதுகாப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் கூற்றுப்படி, மாணவரின் குடும்பத்தினர் கிராமத்தில் சிலருடன் த கராறு செய்திருந்ததால், இந்த கொ லை ப ழிவாங்கும் செயலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இரவில் தனியாக விட்டுச்சென்ற கணவன் : அதிகாலை மகளுடன் இ றந்து கிடந்த மனைவி!!

மகளுடன் இ றந்து கிடந்த மனைவி

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 7 வயது மகளுடன் தாய் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஜோதி என்கிற 28 வயது பெண் மொடலாக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன் பங்கஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஷபுனா என்கிற மகள் இருந்தார். கடந்த சில தினங்களாகவே பங்கஜ், தன்னுடைய மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் ஜோதி பெரும் மனவேத னையடைந்துள்ளார். நேற்று இரவும் கணவன் மனைவிக்கு இடையில் க டும் வா க்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆ த்திரமடைந்த பங்கஜ் வீட்டிலிருந்த நள்ளிரவில் வெளியேறியுள்ளார்.

மறுநாள் காலை விடிந்ததும் ஜோதி கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. உடனே தன்னுடைய 7 வயது மகளுடன் 20வது மாடியிலிருந்து கு தித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த காவலாளி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அவருடைய கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண் : பொலிசார் X-ray கருவியில் கண்ட காட்சி!!

நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்

எல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை X-ray எடுத்த போது அவர்களுக்கு பெரும் அ திர்ச்சி காத்திருந்தது.

கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், எல்டராடோ விமான நிலையத்தில் கால் வலியுடன் நடப்பது போன்று நடப்பதை கவனித்த அதிகாரிகள் அவரை நெருங்கியதும் அவர் மி ரட்சி அடைந்ததை நன்றாகவே கவனிக்க முடிந்திருக்கிறது. எனவே, அவரை பிடித்து சோ தனைக்குட்படுத்தியபோது அவரது தொடையில் தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

அவரை X-ray கருவிக்குட்படுத்தியபோது, அவரது தொடைப்பகுதியில், தோலுக்கும் சதைக்கும் இடையில் ஒரு பை இருப்பது தெரியவர, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் அவருக்கு அ றுவை சி கிச்சை செய்து அந்த பையை அகற்றியபோது, அது திரவ கொ க்கைன் என்னும் போ தைப்பொ ருள் என்பது தெரியவர, அதிகாரிகள் அ திர்ந்து போயிருக்கிறார்கள்.

இப்படி பயங்கரமான முறையில் போ தைப்பொருள் கடத்துவது புதிதாக இருக்கிறது, உடலுக்குள் தைத்து வைத்தெல்லாம் கடத்த ஆரம்பித்திருக்கிறார்கள், என்று அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார் Lieutenant Wilson Silva என்னும் அதிகாரி.

போ தைப்பொருள் கடத்திய அந்த அந்த பெண்ணுக்கு அ றுவை சிகிச்சை செய்த மருத்துவரோ, அந்த பெண்ணே அந்த பையை தொடையைக் கிழித்து உள்ளே வைத்து தைத்திருக்கிறார் என்னும் அதிரவைக்கும் செய்தியை சொல்வதோடு, பொலிசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து விட்டார்கள்.

இல்லையென்றால் அந்த பை இரத்தக் குழாய்களை அழுத்தி, அவரது உயிருக்கே ஆ பத்தாகியிருக்கலாம் என்கிறார் அவர். அந்த போ தைப்பொருளின் மதிப்பு 36,733 டொலர்கள் ஆகும். இதுபோல் போ தைப்பொருளை கடத்த உதவுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 1400 முதல் 3,000 டொலர்கள் வரை கிடைக்கும். அந்த பெண் பொலிசார் மேற்பார்வையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் மனைவி மற்றும் குழந்தைகளை இரும்பு கம்பியால் அ டித்து கொ லை செய்த தந்தை!!

கொ லை செய்த தந்தை

தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் மீது இருந்த சந்தேகத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொ லை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த சாந்தினி (28) தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் மூலம் அயான் என்கிற 9 வயது மகன் இருந்தார்.

அதன்பிறகு குரு பிரவீன் குமார் (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரவீன் குமார் மூலம் சாந்தினிக்கு 5 வயதில் கிறிஸ்டி என்கிற மகள் இருந்தார். திருமணம் முடிந்ததிலிருந்தே சாந்தினி மீது பிரவீன் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனரீதியிலும் உடல்ரீதியிலும் அடிக்கடி து ன்புறுத்தி வந்துள்ளார். இதனை குடும்பத்தில் இருந்து யாரேனும் தட்டிக்கேட்டால், அவர்களையும் தா க்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே மீண்டும் கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரவீனின் தாய் மற்றும் சகோதரன் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். உடனே அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியதும், இரும்பு ராடால் சாந்தினியின் தலையில் ஓ ங்கி அ டித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சாந்தினி உ யிரிழந்துவிட்டார். பின்னர் த ற்கொ லை செய்துகொள்வதற்காக பிரவீன் ரயில்நிலையத்திற்கு சென்றுள்ளார்.


ஆனால் தங்களுடைய இரண்டு குழந்தைகளும் அனாதையாகிவிடுமே என நினைத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு இரண்டு குழந்தைகளையும் அதே இ ரும்பு ராடால் தலையில் அடித்து கொ லை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த நடிகர் : வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு

பிரபல சின்னத்திரை நடிகரான மது பிரகாஷின் மனைவி திடீரென த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்து புகப்பெற்ற பாகுபலி படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் மது பிரகாஷ்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு பாரதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு சின்னத்திரையிலும் நடித்து வருவதால், மது பிரகாஷ் தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மாமியாருடன் தனிமையில் வீட்டில் இருந்து வந்த பாரதிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த பாரதி அடிக்கடி கணவருடன் ச ண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மது பிரகாஷ் தனது மனைவியிடம், ஜிம்மிற்கு செல்வதாகவும், பின்னர் அங்கிருந்து சீரியல் செட்டிற்கு நடிக்க செல்வதாகவும் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கணவருக்கு போன் செய்த பாரதி, வீட்டிற்கு திரும்பி வரும்படி கேட்டார். அப்படி வரவில்லை என்றால் த ற்கொ லை செய்துகொள்வேன் எனவும் மி ரட்டியுள்ளார். இரவு 7.30 மணியளவில் மது பிரகாஷ் வீடு திரும்பியபோது, பாரதி தூ க்கில் ச டலமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பாரதியின் உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைக லப்பு : கடுமையாக எ ச்சரித்த இராணுவம், நால்வர் காயம்!!

மாணவர்கள் கைக லப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோ தல் காரணமாக நான்கு மாணவர்கள் கா யமடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரண்டாம் மூன்றாம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த மு ரண்பாடு இன்று வரை நீடித்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைக லப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த இராணுவத்தினர் மோ தலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோ தலை தனது தொலைபேசி படம் எடுத்த பொதுமகன் ஒருவரை, சிங்கள மாணவர்கள் சிலர் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். இதன்போது அவரை கடுமையாக எ ச்சரித்ததுடன் எடுத்த படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் பரமேஸ்வராச்சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கும் கைக லப்பில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியில் மோதல் ஏற்பட்டமையினால் அதில் தலையிட யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் நிற்காமல் சென்ற வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிசார் : விபத்துக்குள்ளான வாகனம்!!

விபத்துக்குள்ளான வாகனம்

வவுனியா நைனாமடுவில் நேற்று மாலை மரக்க டத்தலில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் வழிமறித்து கைது செய்துள்ளதுடன் குறித்த முயற்சியும் மு றியடிக்கப்பட்டுள்ளது. மாமடு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மரக்க டத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி சேமமடுவில் இருந்து வவுனியா, பூந்தோட்டம் நோக்கி ச ட்டவிரோ தமான முறையில் பெறுமதிமிக்க முதிரை குற்றிகள் 13 டாட்டா கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்கையில் மாமடு பகுதியில் பொலிஸார் வாகனத்தை வழிமறித்த போது வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.

வாகனத்தை பொலிஸார் விரட்டிச் சென்ற நிலையில் அக்போபுர மாமடு பகுதியில் வாகனம் வீதியோரத்திலுள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தை சோதனை செய்த வேளை முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, சேமமடு, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 33 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் மாமடு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 900 நாட்களை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!!

900 நாட்களை..

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டபேரணி ஒன்று இன்றையதினம் (07.08.2019) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளபட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே குறித்த ஆர்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது.

சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டுக் கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், 2015 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர் இப்போது தமிழர்களிற்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை தமக்கான தீர்வை வழங்க கூட்டமைப்பு தடையாகவுள்ளதாகவும் தெரிவித்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று : 6 வீடுகள் சேதம்!!

திடீரென வீசிய கடும் காற்று

வவுனியாவில் இன்று மதியம் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் மதியம் திடீரென கடும்காற்று வீசியது. இதனால் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஒரு வீடும் 4 அங்கத்தவர்களும், பெரிய புளியாளங்குளத்தில் ஒரு வீடும் 2 அங்கத்தவர்களும், முதலியார் குளத்தில் 2 வீடும் 8 அங்கத்தர்வர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா வடக்கு மன்னகுளத்தில் ஒரு வீடும் 3 அங்கத்தவர்களும், நெடுங்கேணி வடக்கில் ஒரு வீடும் ஒரு அங்கத்தர்களும் என 6 வீடுகளும், 18 பேரும் பாதிப்படைந்துள்ளனர். குறித்த வீடுகளின் கூரைப்பகுதிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் ஏ9 வீதி தேக்கவத்தையில் மரம் முறிந்து விழுந்து கார் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

திருநங்கையை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

திருநங்கை

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், மும்பையில் வேலை செய்து வரும் லட்சுமணன் என்பவரை பேஸ்புக் மூலம் நட்பாகி அவரை காதலித்து வந்த நிலையில், இன்று அவரை திருமணம் செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் சாலைக்கரையைச் சேர்ந்த சேகர்-அமுதா. இந்த தம்பதிக்கு அமிர்தா என்ற மகள் உள்ளார். திருநங்கையான அமிர்தா பி.எஸ்ஸி வரை படித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமண். இவர் மும்பையில் சினிமா ஷூட்டிங்களுக்கு செட் அமைக்கும் பணியில் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக்மூலம் அமிர்தாவிற்கு, லட்சுமணன் அறிமுகமாகியுள்ளார். அதன் பின் இருவரும் பேஸ்புக்கில் தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாற, இது குறித்து பெற்றோரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, இன்று காலை இவர்கள் இருவருக்கும் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் படித்து வருகிறேன். பொலிஸ் வேலைக்கும் முயற்சி செய்துவருகிறேன். நான் கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இருந்தேன். அப்போது தான் பேஸ்புக் மூலம் எனக்கும், மும்பையைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகினோம். எங்கள் நட்பு காதலாக மாறியது.

ஒரு வருடமாக காதலித்துவந்தோம். இது குறித்து என் பெற்றோருக்குத் தெரிவித்தேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம்.

ஆனால், அதற்கு எ திர்ப்பு இருந்தது. கோயில் அலுவலர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுத்து அனுமதி வாங்கி இன்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.

லட்சுமணன் கூறுகையில், எங்களின் காதலைப் பற்றி கூறுகையில், முதலில் பெற்றோர் எ திர்த்தனர். அதன் பின் அவர்களை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டோம். இனி நான் மும்பை செல்லப் போவதில்லை. திருவந்திபுரத்தில் அமிர்தாவுடன் வசிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு ம ரண த ண்டனை!!

ம ரண த ண்டனை

பழைய தகராறு ஒன்று முற்றியதில் 32 வயதான ஒருவரை கொ லை செய்து, மற்றுமொருவருக்கு ப டுகாயம் ஏற்படுத்திய மூன்று பேருக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர ம ரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பொல்காவலை போராவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதான பட்டகொல்லே கேதர நிஷ்சங்க விஜேவீர என்பவரை வெ ட்டி கொ லை செய்து, 58 வயதான ஆரியதாச என்பவரை க ற்களால் தா க்கி படுகாயம் ஏற்படுத்தியதாக மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

போரவத்தை பகுதியை சேர்ந்த புல்ஹித் தேவாலகே விக்ரமபால, புல்ஹித் தேவாலகே செனரத் சமரசிங்க, புல்ஹித் தேவாலகே பிரதீப் சஞ்சீவ ஜயரத்ன ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கே இந்த ம ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மகனை கொ லை செய்து, அவரது தந்தையை காயப்படுத்தியுள்ளனர். பொல்காவல பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியிருந்தனர்.

தென்னிலங்கையை உலுக்கிய கோர சம்பவம் : மனைவி, மகளை பறிகொடுத்த தந்தையின் கண்ணீர்!!

தந்தையின் கண்ணீர்

தென்னிலங்கையை உலுக்கிய கோர விபத்தில் ப லியான தனது மனைவி மற்றும் மகள் தொடர்பில் பல தகவல்களை கணவன் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உ யிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் 49 வயதான தாய் மற்றும் பல்கலைக்கழகத்தில் கற்கும் மகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தந்தை கண்ணீருடக் தெரிவித்துள்ளார்.

“அதிகாலை 3.45 மணியளவில் மனைவி மற்றும் மகளை பேருந்தில் ஏற்றி விட்டு வீட்டிற்கு வந்து செய்தி பார்க்கும் போதே விபத்து குறித்து அறிந்து கொண்டேன். பிள்ளைகளுக்காக நான் இராணுவத்தில் இருந்து விலகினேன். அதற்கு பலனாக மகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். மகள் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு இந்த மரணம் பே ரதிர்ச்சியாக உள்ளது. இந்த துக்கத்தை எப்படி தாங்கிக்கொள்வது.

மகள் படிப்பில் சிறந்தவர். உ யிரிந்த மகள் கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே கற்றார். 3 ஏ சித்திகளை பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். மகள் அவர்களுடன் கற்ற முன்றாம் பிரிவு மாணவனை காதலித்தார். இரண்டு வீட்டாரினதும் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார். காதலித்த இளைஞர் உயர் கற்கைக்காக ஜப்பான் சென்றுள்ளார்.

மகளையும் ஜப்பான் அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜப்பான் செல்வதற்கு மகள் தயாராக இருந்தார். மகளின் ஒரு காலில் வருத்தம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அதிகாலை பேருந்தில் மனைவியுடன் சென்றார். அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்து 6 மணியளவில் செய்தி பார்த்தேன்.

அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. உடனடியாக மகள் மற்றும் மனைவிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். இருவரும் பதிலளிக்கவில்லை. களுத்துறையில் இருக்கும் நண்பரை தொடர்புகொண்டு நாகொட வைத்தியசாலைக்கு சென்று பார்க்குமாறு கூறிவிட்டு நான் சென்றேன்.

அங்கு எனது மகள் மற்றும் மனைவியின் ச டலத்தையே பார்க்க கிடைத்தது. அதன் போது வைத்தியசாலை ஊழியர் ஒருவர் இருவரதும் ச டலங்களில் இருந்த நகைகள் என கூறி என்னிடம் சிறிய பொதி ஒன்றை வழங்கினார்கள். அப்போது நான் அ திர்ச்சியில் இருந்தமையினால் அதில் இருப்பதை பார்க்கவில்லை.

பின்னர் பார்க்கும் போது அவை தங்கம் அல்ல போலியானதென தெரியவந்தது. எனினும் யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை” என தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் க ஞ்சாவுடன் சிக்கிய மூவர்!!

செட்டிகுளம்-குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கேரள க ஞ்சா பொதிகளுடன் நேற்று காலை 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட சுமார் 8kg 6 g நிறை கொண்ட கேரள க ஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, க ஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஆடிச் செவ்வாயை முன்னிட்டு விசேட பூஜை!!

விசேட பூஜை

இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடிச் செவ்வாயை முன்னிட்டு நேற்று இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது. வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு ஞானஸ்வரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்கு விசேட அபிஷேகம், தீபராதனைகள் இடம்பெற்று பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது யாகம் வளர்த்து கருமாரி அம்மனின் அருட்காட்சங்களை வேண்டியதுடன், சாமி உள்வீதி, வெளி வீதி உலா வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு கருமாரி அம்மனின் அருளாசியினைப் பெற்றனர்.

வவுனியாவில் கிடைக்கப்பெற்ற இரு வேறு முறைப்பாடுகள்!!

இரு வேறு முறைப்பாடுகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பெண்கள் வேலை புரியும் இடத்தில் தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்ததாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டிட அனுமதிக்காக நபர் ஒருவர் கொடுத்த வரைபடம் தவறாக இருந்ததால் அனுமதிக்கான தாமதத்திற்கு காரணமாக இருந்தது.

எனினும் இன்று அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதென பிரதேச சபையினரால் 3 மணியளவில் தொலைபேசியில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறாக நடந்து கொண்டதாக தெரிவித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர் அரச சுற்றுலா விடுதியில் பணிபுரியும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் தாக்கியதாக மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அரச ஊழியர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஇன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட செயலகத்தின் விடுதி காப்பாளராக பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வீடு மற்றும் மதில் என்பவற்றினை அமைப்பதற்கான அனுமதிக்காக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு சென்றுள்ளார்.

குறித்த அனுமதிக்காக விண்ணப்பித்து ஒரு வருடங்கள் நிறைவடையும் நிலையில் இன்றைய தினமே குறித்த அனுமதி கிடைத்திருந்தது.

அதனை பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவரிடம் பெற்றுக் கொண்ட போது இவ் அனுமதிக்கு ஏன் ஒரு வருடம். உங்களது செயற்பாடுகள் மந்தமாகவே நடைபெறுவதாக குறித்த நபர் உத்தியோகத்தரிடம் கூறியுள்ளார்.

இதன்போது தனது தனது செல்வாக்கை பயன்படுத்தி வேலையைஇல்லாமல் செய்விப்பேன் என மிரட்டியதாக, குறித்த நபர் தவிசாளருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

18 வயது மகனின் பெயரில் காணியை கேட்ட சாந்தி சிறிஸ்கந்தராஜா : உண்மையை போட்டுடைத்த சிவமோகன் எம்.பி!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார். ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனது மகனுக்கு பெற்றுக் கொடுக்க சாந்தி சிறிஸ்கந்தராஜா 2016 ஆம் ஆண்டு கோரினார்.

அரசாங்க அதிபர் பணிமனையில் அனுமதிக்கப்பட்டு பட்டியலும் வந்தது. அதனை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிராகரித்து அதை நீண்டகால குத்தகையில் வழங்க முடியாது என்பதை தெளிவாக உறுதியாக கூறினோம்.

அந்த காணி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணி. எனவே அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றவர். பொது மக்களுக்கு காணி இல்லை என நாம் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் போது அதை நீண்டகால குத்தகைக்கு எடுப்பதற்கு முயற்சித்தமை தவறு.

அதிலும் அவரது மகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நிலையில் 18 வயதில் இருக்கும் போதே பெரிய தொழிலை செய்வதற்காக என்று காரணம் காட்டி எடுக்க முயன்றது ஓரு தவறான உதாரணம் என்பது வெளிப்படையானது.

இந்த விடயம் தமிழரசுக் கட்சிக்கும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான பல குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கட்சி விசாரணையை முன்னெடுக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.