6 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த கொ டுமை!!

அலினா ஷேக்

சினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிதில் எனது கணவர் வீஇரவு 8 மணிக்கு திரும்பி வருவேன் என கூறிவிட்டு வெளியில் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் என் கணவரை காணவில்லை என புகார் செய்தேன். பின் அவர் நலமாக இருப்பது தெரியவந்தது. பின் 10 நாட்கள் கழித்து எனக்கு ரூ 100 பத்திரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.

இதனால் அ திர்ச்சியைடந்த நான் விவாகரத்தை ஏற்கமுடியாது என்பதால் போலிசில் புகார் அளித்தேன். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்திவிட்டார்கள்.

அதே போல நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரின் வீட்டில் இருந்தவர்கள் தொடர்ந்து கொ டுமை செய்து வந்தனர். இன்னும் க ஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். புகார் கொடுக்க முயன்ற போது கணவர் என்னை தடுத்துவிட்டார் என அலினா கூறியுள்ளார்.

வவுனியாவில் தேசிய ரீதியில் குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு!!

பாராட்டு நிகழ்வு

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் பி.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

அகில இலங்கை ரீதியில் 2019 யூன் 28 அன்று மாத்தறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டிருந்தார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் (07) பங்குபற்றி தங்கப்பதக்கம் பெற்றதுடன் வடக்கு மாகாணத்தில் குறைந்த வயதில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டிய ஆர்.கே.மைக்கல் நிம்றொத் என்ற மாணவனும் மற்றும் பதக்கங்களை பெற்ற என்.றோசி மஞ்சு, எஸ்.றிசாந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


நிகழ்வில் விருந்தினர்கள் தேசிய ரீதியில் பதக்கம் வென்ற மாணவர்கள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு அவர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் (கண்ணன்), கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் என்.வி.சுந்தராங்கன், அசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கல்லூரியின் அதிபர் பி.பூபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு வளர்க்க வேண்டும், பெற்றோரின் வழிகாட்டல்கள் பிள்ளைகளுக்கு மிக முக்கியமானது.
மைக்கல் நிம்றொத் மிகச்சிறிய வயதில் மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரி மாணவன் ஏழு வயதில் தங்கப்பதக்கம் பெற்றதானது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம். இந்த விடயம் ஜனாதிபதியின் மட்டத்திற்கு எடுத்து செல்லப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு மாகாணத்தின் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், மாணவர்கள் விளையாட்டுத் துறையை தெரிவு செய்து அதில் சாதிக்கும் போது அரசாங்க வேலை வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் : ரிஷாட்டின் அதிரடி பதில்!!

வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(01.08) மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் எமக்கும் தாருங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருந்தார்.

இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட் கன்கள் (துப்பாக்கி) மீள் எடுக்கப்பட்டமையினால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே அவர்களுக்கு மீண்டும் சொட் கன் (துப்பாக்கிகள்) வழங்க சிவசக்தி ஆனந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுதீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லது என நகைச்சுவையாக தெரிவித்தார். இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் பழைய ஞாபகங்கள் வந்துள்ளது போல் உள்ளது என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : நாளை முதல் புதிய ரயில் சேவை!!

புதிய ரயில் சேவை

நாளை முதல் கொழும்பு கோட்டைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய ரயில் சோவையில் ஈடுபட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50க்கு புறப்பட்டு யாழ் ரயில் நிலையத்தை 6.31 ற்கு சென்றடையும்.

அத்துடன், 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15க்கு புறப்பட்டு யாழ் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும். நாளை முதல் தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் செல்லும் 4087 என்ற இலக்க தபால் ரயில் பிற்பகுதியில் பயணிகளின் வசதிகருதி 3 ரயில் பெட்டிகள் பயணிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பெட்டிகள் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் அகற்றப்பட்டு 4453 இலக்க ரயிலாக நள்ளிரவு 12.50க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தல் இருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் பயணிக்கும். நாளை மறுதினம் மன்னார் ரயில் நிலையத்தில் இரவு 7.00 மணிக்கு புறப்படும் 5844 இலக்க ரயில், அநுராதபுரம் ரயில் நிலையத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் 4088 இலக்க இரவு தபால் ரயிலுடன் ஒன்றிணைக்கப்படும்.

நாளை மறுதினம் முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் புதிய ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4082 என்ற இலக்க ரயில் நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25க்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இதே போன்று இலக்கம் 4088 என்ற ரயில் நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ். ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.40க்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை காலை 4.00 மணிக்கு வந்தடையும். நாளை மறுதினம் 5845 என்ற இலக்க ரயில் நாளாந்தம் மதவாச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 5.15 ற்கு சென்றடையும்.

இடை நிறுத்தப்பட்டிருந்த கண்டியில் இருந்து எல்ல ரயில் நிலையம் வரையிலும், எல்ல ரயில் நிலையத்தில் இருந்து கண்டி ரயில் நிலையம் வரையில் வார இறுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த 1027/1028 என்ற இலக்க ரயில்கள் எதிர்வரும் 3ம் திகதி தொடக்கம் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே நிலையத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அரை நி ர்வாண கோலத்தில் தள்ளாடிய இளம் யுவதிகள் : அ திர்ச்சியில் பொலிஸார்!!

தள்ளாடிய இளம் யுவதிகள்

களுத்துறை, அழுத்கம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போ தையில் த ள்ளாடிய இளம் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் அறிமுகமானவர்கள் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வில் போ தைப் பொருள் பாவித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இலங்கையில் த டை செய்யப்பட்ட ஆபத்தான போ தைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 8 இளைஞர் – யுவதிகள் சிக்கியுள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதி சுற்றிவளைக்கும் போது அங்கு போ தையில் தள்ளாடிய நிலையில் 30 பேர் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 19 முதல் 25 வயதுடையவர்கள் தெரியவந்துள்ளது. அவர்களை சோதனையிடும் போது 8 பேரிடம் மிகவும் ஆபத்தான போ தைப் பொருட்கள் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளம் பெண்கள் அரைநி ர்வாண கோலத்தில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அண்மைக்காலமாக இவ்வாறான சமூக சீர்கேடுளை ஏற்படுத்தும் வகையிலான களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் அதிகளவான இளம் யுவதிகள் பங்கேற்பதாக பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டினை இளைஞர்கள் உடனடியாக தவிர்க்க வேண்டும் எனவும், இது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று முதல் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை : இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!!

புதிய வீசா நடைமுறை

இலங்கையில் இன்று முதல் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கும் புதிய நடைமுறை அமுலாகிறது. 48 நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கும் நடைமுறையை சுற்றுலாத்துறை அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை பல மடங்கு அதிகரிக்கலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 6 மாதங்களுக்கு புதிய வீசா நடைமுறை அமுலில் இருக்கும். இந்தத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் மேலும் அதனை பல நாடுகளுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காக இலவச உள்வருகை வீசா வசதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை தொடர்பான அறிமுக நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பிரதானமாக பல நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட் டவிரோத க ருக்கலைப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது மாணவி!!

ச ட்டவிரோத க ருக்கலைப்பு

ச ட்டவி ரோதமாக க ருக்கலைப்பு செய்துக்கொண்ட 14 வயதான பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட கடும் இ ரத்தபோக்கு காரணமாக அவர், இன்று காலை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவியின் தாய், வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இந்நிலையில் குறித்த மாணவி தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த மாணவி , இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க ருக்கலைப்பு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பள்ளம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். க ருக்கலைப்பு இலங்கையில் ச ட்டவிரோ தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அதிரடிப் படையினர் சோதனை!!

அதிரடிப் படையினர் சோதனை

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று அதிரடிப் படையினரால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டம் இன்று நண்பகல் 3 மணியளவில் ஆரம்பித்துள்ள நிலையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதுவரைக் காலமும் அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு இவ்வாறான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

44 மாதங்களின் பின்னர் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை : வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ்!!

இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக, அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும், குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

அதேபோல பந்து வீச்சில் ஷாபில் இஸ்லாம் மற்றும் சௌமிய சர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்நிலையில் 295 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் மிரட்டலால் வெற்றியை தவறவிட்டது.

பங்களாதேஷ் அணி, 36 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில், இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக, சௌமிய சர்கர் 69 ஓட்டங்களையும், தைஜூல் இஸ்லாம் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சோபிக்கவில்லை.

பந்துவீச்சில், தசுன் சானக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும், அகில தனஞ்சய, வனிது ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இந்த வெற்றியுடன் இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

இணையத்தில் வைரலாகியுள்ள ஒரே பாலினத்தவர்களின் திருமண புகைப்படம்!!

திருமண புகைப்படம்

ஒரே பாலினத்தைச் சேர்ந்த மணமகன்கள் இந்து முறைப்படி திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்கள். இந்திய பிரஜையான நடன இயக்குனரும் நடன நிறுவனத்தின் தலைவருமான அமித் ஷா என்பவர் இடர் முகாமைத்துவம் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யா மதிராஜுவை மணந்துள்ளார்.

அவர்களது திருமண புகைப்படங்கள் பார்ப்போரை பிரமிக்க வைத்த அதேவேளையில், இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏனெனில் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் முற்றிலும் இந்து முறைப்படி நடைபெற்றமையே ஆச்சரியம்.

அவர்கள் ஒரு இந்து கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பாக சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் பெரும்பாலும் ஒரே பாலின திருமணங்கள் அங்கு நடைபெறாது என்று ஆதித்யா கூறியுள்ளார். அவர்களது நண்பர்கள், பலர் ஓரின சேர்க்கை இந்திய தம்பதிகளுக்கு தங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளித்துள்ளனர் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளனர்.

பரஸ்பர நண்பரின் விருந்தில் சந்தித்த இவர்கள், 32 வயதான அமித் மற்றும் 31 வயதான ஆதித்யா ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு நகர மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இந்துமுறைப்படி திருமணம்செய்து கொள்ள விரும்பினார்கள். ‘ஒரு பாரம்பரிய திருமணத்தை நடத்துவது என்பது நம்மில் இருவருக்கும் சாதாரணமானதல்ல, நாங்கள் மிகவும் பாரம்பரியமான மற்றும் பழமைவாத பின்னணியிலிருந்து வந்தவர்கள்’ என்று இந்தியாவில் பிறந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் ஆதித்யா கூறியுள்ளார்.

“எங்கள் சிறந்த புகைப்படக் கலைஞர்களான சார்மி பெனா மற்றும் பாலோ சலூட் ஆகியோரால் எடுக்கப்பட்ட புகைப்பட தருணங்கள் மிகவும் உண்மையானவை மற்றும் சிரமமின்றித் தோன்றுவதால் மக்கள் புகைப்படங்களை மிகவும் விரும்புகிறார்கள் என நாங்கள் நினைக்கிறோம்,” ‘இது எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய தருணம், புகைப்படங்கள் நம் உணர்வுகளை முழுமையாக்குகின்றன என தெரிவித்துள்ளனர். திருமணம் ஒரு இந்து கோவிலில் நடந்ததால் , இது போன்று ஒரே பாலின திருமணங்கள் உலகத்தில் பார்த்திருக்க முடியாது.

கனடாவில் மொத்த குடும்பத்தையும் வெ ட்டி கொ ன்றுவிட்டு இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர்!!

கனடாவில்..

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் படு கொ லை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இந்த கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞரை பொலிசார் கை து செய்துள்ளனர்.


அவர் மீது 4 பிரிவுகளில் வ ழக்குப் பதிந்துள்ளனர். கனடாவை உ லுக்கிய இச்சம்வத்தில், கொ லைக்கு பின்னர், இணைய விளையாட்டுகளில் ஈர்ப்பு கொண்ட அந்த இளைஞர் குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பரப்பியுள்ளார்.

மொத்த குடும்பத்தையும் தாம் கொ ன்றுள்ளதாகவும், உ யிருடன் த ப்பினால் ஆயுள் முழுவதும் சி றை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை பார்வையிட்ட இருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் உடனடியாக மார்க்கம் பகுதியில் உள்ள ஜமான் குடியிருப்புக்கு விரைந்துள்ளனர்.

குடியிருப்பினுள் ர த்த வெ ள்ளத்தில் கிடந்த நால்வரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜமானின் தந்தை Moniruz கடந்த 1980 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து தமது மனைவியுடன் கனடா வந்துள்ளார். கடந்த மாதமே Moniruz தம்பதி தங்களது 25 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இணையய விளையாட்டுகளில் ஈர்ப்பு கொண்ட ஜமான், அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் இந்த கொ லையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் விசாரணைக்கு முடிவிலேயே உண்மை என்ன என்பது தெரியவரும்.

பேத்தியை து டிது டிக்க கொ ன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த தாத்தா!!

பேத்தியை..

கோவை மாவட்டத்தில் மகனை பழிவாங்குவதற்காக 10 மாத பேரக்குழந்தையை தாத்தாவே கொ லை செய்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் (44) என்பவர் வளர்மதியை முதல் மனைவியாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குமார் (24) என்கிற மகனும் முத்துமாலை (24) என்கிற மருமகளும் உள்ளனர்.

15 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வளர்மதி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வேலை செய்யும் இடத்தில் பழக்கமான சக்திகனி என்பவரை செல்வராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இது குமார் குடும்பத்திற்கு பிடிக்காததால் அடிக்கடி த கராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சக்திகனியும் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆ த்திரமடைந்த செல்வராஜ், நேற்று காலை ம து அருந்திவிட்டு குமார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். கையில் 10 மாத கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த முத்துமாலையை தரையில் தள்ளிவிட்டு பேரக்குழந்தையுடன் செல்வராஜ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த குமார் நீண்ட நேரம் தேடிபார்த்துவிட்டு பொலிஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் செல்வராஜ், தனது உறவினரிடம் செல்போனில், தன்னையும், குழந்தையையும் தேட வேண்டாம். எனது மனைவி சக்திகனியை என்னிடம் வரச்சொல்லுங்கள் என்று கூறியதோடு, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.


உடனே செல்போன் சிக்னலை ஆய்வு செய்த பொலிஸார் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் வைத்து செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், குமார் குடும்பத்தால் தான் என்னுடைய இரண்டாவது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் குழந்தையை கடத்தி செங்கல்லால் அ டித்து கொ லை செய்து பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்திருப்பதாகவும், ரயிலில் வெளியூருக்கு தப்ப முயன்றபோது பொலிஸார் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையைச் சொன்ன மனைவி : திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அ டித்து வி ரட்டிய கணவன்!!

உண்மையைச் சொன்ன மனைவி

கோவை மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் புதுமனைவியை பெல்ட்டால் அ டித்து நைட்டியுடன் கணவன் வி ரட்டியடித்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த சார்லஸ் என்பவர் கல்லுரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த சௌமியா(32) என்பவரை காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் சௌமியாவின் வீட்டிற்கு தெரியவந்ததும் கடும் எ திர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சௌமியா, சார்லஸ் வீட்டிற்கு சென்றார். அங்கு சார்லஸின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் சௌமியாவின் இளம்வயது குறித்து சார்லஸ் கேட்டறிந்துள்ளார். ஆர்வ மிகுதியில் பேசிய சௌமியா, கணவன் எதுவும் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார் என நினைத்து தன்னுடைய காதல் தோல்வி குறித்தும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஆ த்திரமடைந்த சார்லஸ், சௌமியாவை பெல்ட்டால் அ டித்து திருமணத்திற்கு செலவு செய்த 2 லட்சத்தை வீட்டிலிருந்து வாங்கிவருமாறு கூறி வி ரட்டியடித்துள்ளார்.

அங்கிருந்து அ ழுதுகொண்டே ஓடிவந்த சௌமியா வழியில் ஒருவருடைய செல்போனை வாங்கி வீட்டிற்கு போன் செய்தார். உடனே அவருடைய பெற்றோரும் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சௌமியா தன்னுடைய கணவர் மீது நடவடிக்கைக்கு எடுக்குமாறு கூறியுள்ளார்.

நாடகம் பார்க்கும் ஆசையில் பெற்ற மகளை ப லிகொடுத்த தாய் : அ திர்ச்சி சம்பவம்!!

அ திர்ச்சி சம்பவம்

நாடகம் பார்க்க 7வயது சிறுமியை தனியே விட்டு சென்றதால் சிறுமி பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அந்தச் சிறுமியின் தாய், உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை வீட்டு வாசலில் ப டுக்க வைத்தப்பின் சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து சிறுமி அ ழுதவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

சிறுமியின் உ டைகளில் ர த்தம் இருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்த தாய், தனது மகளை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து அங்கு ப ரிசோதித்த மருத்துவர்கள் அவர் பா லியல் வ ன்கொடு மை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர் மேலும், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் உ டல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியைச் சீ ரழித்த கா முகனை பொலிசார் தேடி வருகின்றனர்.

பூமிக்குள் புதைந்தவரை உயிரோடு காப்பாற்றிய நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் நிலச்சரிவினால் பூமிக்குள் புதைந்த நபரை காப்பாற்றுவதற்கு நாய் உதவியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஜம்மு வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் பன்தியால் பகுதியில் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அங்கு சென்ற பொலிசார் நிலச்சரிவு ஏற்பட்ட சாலையைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரிசர்வ் படை மோப்ப நாய் ஒன்று கடுமையாகக் குரைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்று பொலிசார் பார்த்த போது, நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பூமிக்குள் புதைந்திருந்துள்ளார்.

 அவர்கள் உடனடியாக அவர் இருந்த பகுதியை சுற்றிலும் தோண்டி அவரை உ யிருடன் மீட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் மோப்பம் பிடித்து அவரை மீட்க உதவிய நாய்க்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

வவுனியா வெளவாலை சந்திரசேகரீச்சரத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை!!

ஆடி அமாவாசை

வவுனியாவின் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடி அமாவாசை வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் ஈழத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகிய வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் வரலாற்று சிறப்புமிக்கதும், செட்டிகுளம் பிரதேசத்தின் ஆரம்ப ஆலயமாகவும் கருதப்படுகின்றது.

குறித்த தொன்மை வாய்ந்த ஆலயத்தில் இந்துக்கள் தமது தந்தையர்களுக்கு பிதிர் கடன் செலுத்தி வழிபடும் விசேட தினமாகிய ஆடிஅமாவாசை இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன் அவர்களின் வழிப்படுத்தலில் ஆலயத்தின் பிரதம குரு ராஜேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட அபிஷேகம் மற்றும் பிதிர் கடன் பூஜைகள் இடம்பெற்று சந்திரசேகரீஸ்வரப் பெருமாள் வெளவாலை தீர்த்தக் கேணியில் ஆடி அமாவாசை தீர்த்தமாடினார்.

இதில் பெருமளவிலான இந்துக்கள் கலந்து கொண்டு தமது இ றந்த தந்தையர்களுக்கு பிதிர்கடன் செலுத்தி சந்திரசேகரீஸ்வரப் பெருமானின் அருட்காடாச்சங்களைப் பெற்றுக் கொண்டனர்.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சண்முகானந்தம், மாவட்ட காலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி, செட்டிகுளம் பிரதேச இந்து சமய கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், செட்டிகுளம் கலாசார உத்தியோகத்தர் சச்சுருவேணு மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.