வவுனியா பட்டதாரிகள் 199 பேருக்கு நாளை நிரந்தர நியமனம்!!

வவுனியா பட்டதாரிகள் 199பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. வவுனியா பட்டதாரிகள் 199 பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் கிடைத்துள்ளது.

அக்கடிதங்கள் நாளை (01.08) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வவுனியா பட்டதாரிகள் 40பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மிகுதியாக உள்ள 159பேருக்கு நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா பட்டதாரிகள் 199பேருக்கும் பல்வேறு அரச துறைகளுக்காக அவர்கள் அந்நிறுவனங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் பேஸ்புக் பதிவினால் அ டிதடியில் ஈடுபட்ட மாணவர்கள்!!

பேஸ்புக் பதிவினால்..

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வா ய்த்தர்க்கம் வ ன்முறையாக மாறியமையல் மூன்று மாணவர்கள் கா யமடைந்துள்ளனர். லபதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் இரு தரப்பிற்கு இடையில் வ ன்முறை ஏற்பட்டுள்ளது.

கா யமடைந்த மாணவர்கள் மூவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் பதிவாகிய புகைப்படம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வா ய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோ தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் உணவு அறையில் வைத்து இந்த மோ தல் இடம்பெற்றுள்ளதாகவும், மோ தலில் அங்கிருந்த பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

செப்டெம்பர் முதல் யாழ். குடா நாட்டில் இருந்து நேரடி விமான சேவை!!

நேரடி விமான சேவை

யாழ். குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.

விமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளது. 3800 மீற்றர் நீளமான ஓடு பாதையில் யு320 ரக விமானங்கள் தரையிறங்க கூடியதாக அமைக்கப்படவுள்ளது. இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழில் மாணவிக்கு நேர்ந்த கொ டுமை : மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்!!

யாழில் மாணவிக்கு..

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பா லியல் து ஷ்பிரயோ கத்தை மறைத்த குற்றச்சாட்டில் கை து செய்யப்பட்ட அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் வி டுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நேற்று நடைபெற்ற வழக்கு வி சாரணையின் போது மூன்று பேரும் குற்றமற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றால் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அந்தப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் பா லியல் து ஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கு ற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தை வெளியில் கூறவேண்டாம் என்று மி ரட்டினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கை து செய்யப்பட்டு விளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக ப லி!!

கோர விபத்தில்..

டிரக்டர் தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த வந்த நபர் உ யிரிழந்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (31.07.2019) இடம்பெற்றுள்ளது.

போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் இருந்து 03ம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற போதே குறித்த டிரக்டர் பாதையை விட்டு விலகி தடம் புரண்டத்தில் சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த கா யங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அதன் பிறகு அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு குறித்த இருவரையும் கொண்டு செல்லும் போது மேற்படி சேவையாளர் உ யிரிழந்துள்ளதாகவும் பலத்த கா யங்களுக்குள்ளான டிரக்டர் சாரதி அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் ப லியான நபர் 35 வயதுடைய எஸ்.பொடிமாத்தியா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் உ யிரிழந்த நபரின் ச டலம் அக்கரபத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு,

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொ டூரமாக கொ லை : தாயின் அதி ர்ச்சி வாக்குமூலம்!!

அ திர்ச்சி வாக்குமூலம்

பலமுறை த ற்கொ லைக்கு முயன்றும் சாக முடியவில்லை, கொ லை செய்தால் தூ க்கு த ண்டனை கிடைக்கும் என்றே கொ லை செய்தேன் என அம்பாறையில் கொ லை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகளின் தாயான என்.அனிஷா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அம்பாறை – நிந்தவூர் பகுதியில் பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கடந்த திங்கட்கிழமை கொ டூரமான முறையில் ப டுகொ லை செய்யப்பட்டிருந்தன. இந்த ப டுகொ லைகளை தாய் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், சு யநினைவற்ற நிலையில் இருந்த தாயை பொலிஸார் மீட்டிருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வி சாரணைகளின் போது வழங்கிய வாக்குமூலத்திலேயே என்.அனிஷா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த குழந்தைகளின் தாயான அனிஷா தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளவள பிரிவில், கணவர் ஏ.சியாதுல் ஹக்கின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகிறது.

மேலும் சம்மாந்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் அங்கொடை வைத்தியசாலையின் உளவள பிரிவில் மேலதிக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மகோற்சவம்-2019

வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த விகாரி வருட மகோற்சவ பெரும் விழா எதிர்வரும் .01.08.2019 (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகின்றது.

மேற்படி உற்சவத்தில் தேர்த்திருவிழா… 14.08.2019(புதன்கிழமை)
தீர்த்ததிருவிழா..15.08.2019(வியாழக்கிழமையும் )இடம்பெறவுள்ளது.

வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!!

பரிசளிப்பு நிகழ்வு

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (30.07.2019) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் இ.தமிழழகன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நிகழ்வில் கடந்த வருடத்தில் தமது திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர் கௌரவிப்பு, சகல பாடங்களிற்குமான சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ வி.உத்தரியநாதன், க.பார்த்தீபன், ஆசிரிய ஆலோசகர்களான சி.பத்மநாதன், இ.மாதவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

வவுனியாவில் மூன்று மோட்டர் சைக்கிள்களை திருடிய இருவர் கைது!!

இருவர் கைது

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள்களை திருடியதாக இருவர் வவுனியா பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களை பார்வையிடுவதற்காக வந்தவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை வைத்தியசாலை முன்பாக நிறுத்தி விட்டு சென்ற நிலையில் 3 ரிவிஎஸ் 50 ரக மோட்டர் சைக்கிள்கள் காணாமல் போயிருந்தன.

இது தொடர்பில் மோட்டர் சைக்கிள் உரிமையாளர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.

வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 32 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட ரிவிஎஸ் 50 ரக மோட்டர் சைக்கிள்கள் மூன்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இணையத்தில் தேவதை என புகழப்படும் இளம்பெண் : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தேவதை என புகழப்படும் இளம்பெண்

ஸ்கொட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இணையதளவாசிகள் ‘தேவதை’ என புகழாரம் சூட்டியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்த கெய்ட்லின் ஹார்வி என்கிற இளம்பெண் ஒரு நாள் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.


அதிக ம துபோ தையில் இருந்த கெய்ட்லின் ஹார்வி கழிவறைக்குள் நுழைந்த போது, அங்கு சுத்தம் செய்துகொண்டிருந்த பணிப்பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது அந்த பெண், நைஜீரியாவில் இருந்து சமீபத்தில் தான் நான் ஸ்காட்லாந்திற்கு குடிபெயர்ந்தேன். ஆனால் இங்கு எனக்கு ஒரு நண்பர் கூட கிடையாது என வேதனையுடன் கூறியுள்ளார்.

ம துபோ தையில் இருந்தாலும் கூட அதனை கேட்டு மனம் இரங்கிய கெய்ட்லின், அந்த பெண்ணை தன்னுடையாய் தோழியாக ஏற்றுக்கொண்டுள்ளார். தினமும் அவருடன் வெளியில் செல்வது மட்டுமில்லாமல், தற்போது அந்த பெண்ணின் குழந்தையுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் கெய்ட்லின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் இந்த சம்பவம் முழுவதையும் விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இணையதளவாசிகள், அந்த பெண்ணிற்கு உதவியதற்காக கெய்ட்லினை ‘தேவதை’ என பாராட்டி வருகின்றனர்.

உங்களை போன்ற மனிதர்கள் இங்கு அதிகம் தேவைப்படுகிறார்கள் என ஒரு பெண் பதிவிட்டுள்ளார். மற்றொரு பெண், உங்களுடைய இதயம் மிகப்பெரியது. இந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தேவதை என குறிப்பிட்டுள்ளார்.

நடுவானில் விமான கழிப்பறையில் அழகான குழந்தை பெற்றெடுத்த பெண்!!

விமான கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்

Doha-வில் இருந்து Beirut நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் உள்ள கழிப்பறையில் இளம் பெண்ணொருவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் Doha-வில் இருந்து Beirut நகருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த கர்ப்பிணி பெண் கழிப்பறைக்கு சென்ற போது அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சையளித்த நிலையில் விமானம் அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது.

குழந்தை ஒரு சால்வையில் வைக்கப்பட்ட நிலையில் தலையில் சிறிது இரத்தம் வடிந்த நிலையில் குழந்தை இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை குறித்த விமான நிறுவனவே வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவ குழுவினர் பெண்ணின் பிரசவத்துக்கு உதவினார்கள் என்றும் பயணிகளின் பாதுகாப்பும், சௌகரியமும் தான் எங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசைப்பட்டது கிடைக்காததால் ஆடு மேய்த்த மாணவி : அதன் பின் வீட்டை தேடிவந்த அதிர்ஷ்டம்!!

தமிழகத்தில் ஆசைப்பட்ட பாடம் கிடைக்காததால், மனமுடைந்த பள்ளி மாணவி பள்ளியில் இருந்து விலகி ஆடு மேய்க்க முடிவெடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூதலாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதலில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலை பள்ளியானது.

இதனால் இந்த பள்ளியை சுற்றியிருக்கும் ஏழை மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு படித்து வருகின்றனர். குறிப்பாக இதில் பிளஸ்-1ல் 54 பேரும், பிளஸ்-2வில் 55 பேரும் இந்த கல்வியாண்டில் படித்து வருகிறார்கள்.

இதில் வைஷ்ணவி(16) என்ற மாணவி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11-ஆம் வகுப்பிற்கு அடியெடுத்து வைத்தார். அப்போது அவர் தன் குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, தனக்கு எந்த பாடம் வருமோ அதை எடுத்து, நன்றாக படித்து பெற்றோரை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதனால் தலைமை ஆசிரியரை பார்த்து, எனக்கு வரலாறு பாடம் என்றால் பிடிக்கும், தயவு செய்து அந்த பாடப்பிரிவில் என்னை சேர்த்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது ஆசிரியரும் உன் ஆசை நியாயமானதுதான். ஆனால் அந்த பிரிவு நிரம்பி விட்டது. வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளது அதில் சேர்ந்து கொள் என்று கூற மாணவி வைஷ்ணவியோ, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க எனக்கு விருப்பமில்லை. எப்படியாவது கருணை காட்டி நான் கேட்ட வரலாற்று பாடத்தை தாருங்கள் என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் தலைமை ஆசிரியர் அதில் வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லி விட்டதால். மாணவி விருப்பமில்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் சேர்ந்தார். ஆனால் அதில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.

கவனம் செலுத்த முடியாத படிப்பு படித்தால் என்ன? படிக்கவில்லை என்றால் என்ன? என்பது போல், பள்ளியில் இருந்து வெளியேறி பெற்றோரிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் தங்கள் வீட்டு ஆடுகளை வெளியில் சென்று வைஷ்ணவி மேய்த்து வந்தார். இந்த தகவல் எப்படியோ அயன்வடமலாபுரம் சமூக சேவகர் வரதராஜன்(45) கவனத்திற்கு செல்ல, அவர் உடனே இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்து, அதில் மாணவியின் நிலையைப் பற்றி கூறியுள்ளார்.

இந்த தகவல் வட்ஸ் அப்பிலும் வைரலாக பரவியது. இதனால் கலெக்டர் சந்தீப் நந்தூரி கல்வி அதிகாரிக்கு உத்தரவிடவே அவர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.

மீண்டும் அந்த மாணவி கேட்கும் பாடம் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி வைஷ்ணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

மாணவி வைஷ்ணவி தவிர அதே பகுதியை சேர்ந்த ரகுபதி, அமிர்தகணேசன், உத்திரகுமார், பானுமதி, ராஜலட்சுமி ஆகிய 5 பேரும் வரலாற்று பாடம் கிடைக்காததால் அவர்களும் வைஷ்ணவியைப்போன்று பள்ளியை விட்டு விலகி சென்றுவிட்டனர். அந்த 5 மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய பாடம் வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இருந்து ஊருக்கு வந்து பெற்ற தாயை கொ லை செய்த மகன்!!

தாயை கொ லை செய்த மகன்

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொ லை செய்துவிட்டு த லைமறைவாக இருந்த மகன் மூன்று மாதங்களுக்கு பிறகு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள் அதிமுக எம்.பி-யான இவர் 4 ஆண்டுகளுக்கு முன் இ றந்துவிட்டார். இதையடுத்து இவரது மனைவி ரத்தினம் (63) சென்னை பெசன்ட் நகரில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் திகதி ரத்தினம் வீட்டில் ம ர்மமான கொ லை செய்யப்பட்டு கிடந்தார். பொலிசார் விசாரணையில் சொத்துப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட த கராறில் லண்டனிலிருந்து வந்திருந்த அவரது மகன் பிரவீன், தாய் ரத்தினத்தை கொ லை செய்தது தெரியவந்தது.

பிரவீன் பிரித்தானிய குடியுரிமை பெற்று அந்த நாட்டில் வசித்து வந்த நிலையில், சொத்து பிரச்சனைக்காக சென்னைக்கு வந்ததும் உறுதியானது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, பிரவீனை தேடி வந்தனர். மேலும் பிரவீன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்டை முடக்கி இருந்தனர்.


இந்நிலையில், பிரவீன் செல்போன் எண்ணை ஆய்வு செய்த பொலிசார் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் சத்தியஜோதி மற்றும் அவருடைய மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் கை து செய்தனர்.

இதனிடையே பிரவீனை பிடிக்க சைபர் கிரைம் பொலிசார் உதவியுடன், தனிப்படை பொலிசார் தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர். அப்போது பிரவீன், டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பொலிசார் நேற்று பிற்பகலில் பிரவீனை கைது செய்தனர். கை து செய்யப்பட்ட பிரவீன், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சி றையில் அடைக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.

மூன்று பேரையும் கொ லை செய்தது எப்படி : நடித்துக்காட்டிய கு ற்றவாளி : அதிர்ந்துபோன பொலிஸ்!!

அதிர்ந்துபோன பொலிஸ்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொ லை செய்த நபர், நடந்த சம்பவத்தை பொலிசில் நடித்து காட்டியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி கொ லை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கை து செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு கார்த்திகேயனை பொலிசார் அழைத்து சென்ற நிலையில் கொ லை செய்தது எப்படி என நடித்துக்காட்டியுள்ளார். அதாவது, உமாவால் தனது தாய் சீனியம்மாள் திமுகவில் வளர முடியவில்லை என்பதால் சிறுவயது முதலே அவரைக் கொ லை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருந்ததாக கூறியுள்ளார்.

சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு கார்த்திகேயன் சென்ற நிலையில் அவரிடம் உமாவின் கணவர் முருக சங்கரன் என்ன விடயம் என கேட்க, எனது தாய் சீனியம்மாள் உங்களிடம் பேசிவிட்டு வரச்சொன்னார் கூறினார். பின்னர் உங்களால் தான் எனது தாயின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

உடனே கார்த்திகேயனை வெளியே போகும்படி உமா மகேஸ்வரி தெரிவித்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த க த்தியால் அவரை கு த்தியுள்ளார். கார்த்திகேயனை தடுக்க முயன்ற முருக சங்கரனையும் ச ரமாரியாக க த்தியால் குத் தியுள்ளார்.

இதனையடுத்து ஆதாயக் கொ லை போல் இருக்க வேண்டும் என்பதற்காக உமா மகேஸ்வரி மற்றும் முருக சங்கரன் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளார். பீரோவை உடைத்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கலைத்துப் போட்டுள்ளார். அந்த நேரத்தில் பணிப்பெண் மாரியம்மாள் வெளியே இருந்து வீட்டுக்குள் வந்துள்ளார். பின்னர் தன்னை காட்டி கொடுத்துவிடுவார் என பயந்து அவரை சமையல் அறைக்குள் இழுத்து சென்று க த்தியால் கு த்தி கொ ன்றார்.

இதை தொடர்ந்து கை ரேகை உள்ளிட்ட தடயங்களை அழித்த அவர், கொ லைக்கு பயன்படுத்திய க த்தி மற்றும் தம்மீதிருந்த ரத் தக்க றையை சுத்தம் செய்து கொண்டு நகைகளையும் எடுத்துக்கொண்டு காரில் தப்பியதாக கூறியுள்ளார். இதோடு தன்னை ஒரு சை க்கோ என அடிக்கடி பொலிசாரிடம் அவர் கூறினார் என்றும் தெரியவந்துள்ளது.

இறப்பிலும் பிரியாத அரச ஜோடி : ஆராய்ச்சியாளர்களை அசரவைத்த கல்லறை!!

இறப்பிலும் பிரியாத அரச ஜோடி

கஜகஜஸ்தான் நாட்டில் ஒரு இளம் அரச ஜோடி அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை ஒன்றினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டீனேஜ் ஜோடிகள் கஜகஸ்தானில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே அதில் இருந்துள்ளது.

இதனை பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் 16 அல்லது 17 வயதுடையவர்கள் எனவும், உயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் உடன்பிறந்தவர்களா அல்லது காதலர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றின் முந்தைய வாழ்வில் தோற்ற அந்த ஜோடி, அதன்பிறகான வாழ்க்கையில் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் ஒருவரையொருவர் பார்த்தபடி புதைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.

அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று வல்லுநர்கள் இன்னும் ஆராயவில்லை. ஆனால் எஞ்சியுள்ள இடங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் கல்லறையில் தங்கம் மற்றும் வெண்கலப் பொக்கிஷங்கள் காணப்பட்டன. மேலும் அந்த இளம் பெண் ஒவ்வொரு கைகளிலும் இரண்டு வளையல்களையும், சூரியனை சித்தரிக்கும் பதக்கங்களையும் அணிந்திருந்தார். காதணிகள் போன்ற வடிவிலான விலைமதிப்பற்ற தங்க மோதிரங்களையும் அவர் அணிந்திருந்தார் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற அனந்தி சசிதரன் : ஏன் தெரியுமா?

அனந்தி சசிதரன்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்திக்க வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். மீனவர்களை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துவதற்காகவும் ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் அவர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர். இதையடுத்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 27ஆம் திகதி அதிகாலை தொழில் நிமிர்த்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு வந்து குறித்த ஏழு மீனவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் பார்வையிடுவதற்காகவும் மதுரையிலுள்ள பிரபலமான சட்டத்தரணி தீரன் திருமுருகனின் வேண்டுதலுக்கு அமைய நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன்.


டீசலை வழங்கி இலங்கை கடற்படையினர் தங்களை திருப்பி அனுப்புவார்கள் என கைது செய்யப்பட்ட மீனவர்கள் நம்பி இருந்தனர். எனினும் அவர்கள் இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுடன் கதைத்துள்ளேன். இவர்களின் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் மிக விரைவில் நாடு திரும்புவர் என நம்புகின்றேன். மேலும் அவர்களுக்கு ஆறுதல் வழங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.