வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியினூடாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியினூடாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர அறிவிப்பு!!

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர அறிவிப்பு

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை மறு தினத்துடன் நிறைவடையவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

அதேவேளை மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற த ற்கொ லை தா க்குதல் சம்பவத்தையடுத்து பாடசாலைகள் மூடப்பட்ட கால பகுதியை ஈடு செய்வது தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!!

அடையாள வேலை நிறுத்தம்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (30.07.2019) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக கல்விசாரா ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்திற்கு முன்பாக இன்று (30.07.2019) காலை 9.30 மணி தொடக்கம் 10 மணிவரை சுமார் 30 நிமிடங்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பாதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் த டை : மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!!

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் த டை

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவது இன்று நள்ளிரவுடன் த டை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன இன்று நள்ளிரவிற்கு பின்னர் நடத்தப்படுமாயின் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதியை நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கீரிமலையில் இருந்த மிகப்பெரிய மாடு உ யிரிழப்பு!!

யாழ். கீரிமலையில்..

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உ யிரிழந்தது. குறித்த மாடு நேற்று மாலை உ யிரிழந்துள்ளது.

இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும். இந்நிலையில் முதுமை காரணமாக இறந்த மாட்டுக்கு சமய முறைப்படி நல்லடக்கம் இடம்பெற்றது.

கா ணாமல்போன மீனவரின் ச டலம் மீட்பு!!

ச டலம் மீட்பு

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுக்கு ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகு நீரில் மூழ்கி கடலில் கா ணாமல் போன மீனவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவரின் ச டலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்ட மீனவர் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த பாலசிங்கம் பரமானந்தம் என்ற 28 வயதுடையர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 26ஆம் திகதி இலங்கைத்துறை முகத்துவாரக் கடலில் இருந்து படகொன்றில் ஏழு மீனவர்கள் பயணித்துள்ளனர். இதன்போது அவர்கள் சென்ற படகுக்கு திடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட படகு நீரிழ் மூழ்கியுள்ளது. இதன்போது ஏழு மீனவர்களில் ஆறுபேர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளனர்.

ஒரு மீனவர் கடலில் அள்ளுண்டு கா ணாமல் போயிருந்தார். இந்நிலையில் குறித்த மீனவரை தேடி கடற்படையினரும், பிரதேச மீனவர்களும் மூன்றாவது நாளாக இன்றும் கடலில் தேடுதல் மேற்கொண்ட போதே இவ்வாறு ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

உ யிரிழந்த மீனவரின் ச டலத்தை பிரேத ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று புகழ்மிக்க தேவாலயம் தீயில் எரிந்து அழிந்தது!!

வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்

Westphaliaவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க Church of the Visitation தேவாலயம் தீவிபத்தில் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இத் தீவிபத்து இன்று காலை (உள்நாட்டு நேரம்) இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து Bishop Joe S. Vásquez கருத்து தெரிவிக்கையில்,

“மிகப்பெரிய இழப்பை சந்தித்த Westphalia மக்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அத்துடன், தீயணைப்பு வீரர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த வரலாற்றுத் திருச்சபையின் மக்களாகிய நீங்கள், இன்று பிரார்த்தனையில் ஈடுபட தயவுசெய்து என்னுடன் சேருங்கள்.” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த தேவாலயம் 1895ம் ஆண்டு திறக்கப்பட்டது. மேலும் இந்த Church of the Visitation தேவாலயம் டெக்சாஸ் மாநிலத்தின் மரப்பலகையினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலய கட்டடங்களில் ஒன்றாகும்.

கிளிநொச்சியில் வெட் டுக் காய ங்களுடன் இ ரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் ச டலங்களாக மீட்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் தாயும், மகனும் வெ ட்டுக்கா யங்களுடன் இ ரத்த வெள்ளத்தில் ச டலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர்களே வீட்டிலிருந்து இன்று காலை ச டலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தாய் விஷ்னுகாந்தி வள்ளியம்மை 70 வயதானவர் எனவும், அவரது மகன் விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் 34 வயதானவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ச டலங்களை நீதவான் பார்வையிட்டுள்ளார். அத்துடன் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போ ராட்டம்!!

போராட்டம்

படை வீரர் ஒருவரையும் தண்டிக்கமாட்டேன் என்று கூறும் அரசு எங்களுக்கு எப்படி நீதி வழங்கும் என தெரிவித்து வவுனியா மாவட்ட வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(30.07.2019) காலை கவனயீர்ப்பு போ ராட்டம்
ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கையிலே ஒப்படைத்தவர்களை திருப்பித் தருவது தானே நியாயம் அதற்கு ஏன் ஒ.எம்.பி அலுவலகம் , எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும் , ஏமாற்றாதே ஏமாற்றாதே கா ணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளை ஏமாற்றாதே , சர்வதேசமே எங்கள் பிள்ளைகளை இ ரகசிய மு காம்களில் இருந்து மீட்டுத்தா,

படை வீரர் ஒருவரையும் த ண்டிக்கமாட்டேன் என்று கூறும் அரசு எங்களுக்கு எப்படி நீதி வழங்கும் போன்ற பல்வேறு வாசகங்ளை தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் 50க்கு மேற்பட்ட கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு க ண்ணீர் மல்க பலத்த கோசங்களை எழுப்பி போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியாவில் இடம்பெற்ற விபத்தில் 6 மாத குழந்தை மரணம் : தாய் படுகாயம்!!

பதவியாவில் இடம்பெற்ற விபத்தில்..

பதவியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 மாத குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29.07.2019) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம், பதவியா பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் அதே வீதி வழியாக எதிர்த்திசையில் வந்த வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும், 6 மாத குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாகவே அனுராதபுரம், கல்கடவெல, தீபத்துகம பகுதியைச் சேர்ந்த இசுற செத்சிறு என்ற 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததுள்ளது.

குழந்தையின் தாயாரான 29 வயதான ஹங்கனி சமன்திலக படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பதவியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியாவில் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இன்று (29.07) இலங்கை தேசிய போக்குவரத்துச்சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை,

சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச்சபை, சிவில் சமூகப்பிரதிநிதிகள், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின்போது பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கான பதில்களையும் கலந்துகொண்ட பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர். எனினும் இன்றைய கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதம போக்குவரத்துப் பணிப்பாளர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வாரத்தில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து பேருந்து நிலையத்திலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்கள், வெளிமாவட்ட பேருந்துகளை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிப்பது, பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேருந்துகளை தரித்து நிற்பது குறித்தும் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையப்பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்தும் அவர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன, பிராந்திய அலுவலகத்தின் சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான ஆர்.எல்.வசந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் ரிசாட் பதியுதீன் அமைச்சரானதை வெடி கொழுத்தி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

மீண்டும் ரிஷாட் பதியுதீன் அமைச்சராக

ரிசாட் பதியுதீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர்.

உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தா க்குதலையடுத்து அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்தே வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

16 வயது மகளின் மரணத்திற்காக காத்திருக்கும் பெற்றோர் : இப்படியும் ஓர் கொ டுமை!!

இப்படியும் ஓர் கொ டுமை

இந்தியாவில் சிறுமி உ யிர் பிழைக்க வாய்ப்பிருந்தும் அவர் எப்போது உ யிரிழப்பார் என காத்திருக்கும் பெற்றோரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் அவ்ஜிலி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சன் குமாரி (16). அரசுப் பள்ளியில் படிக்கும் இந்தச் சிறுமி, தனியார் பள்ளியில் படிப்பதற்காக சமீபத்தில் தேர்வு எழுதி முதல் இடம் பெற்றார்.

ஆனால் இந்த சூழலில் அவளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு சென்ற போது குமாரியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது, சோகமான செய்தி இல்லை. இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் மிகவும் அ திர்ச்சியானவை. குமாரியின் பெற்றோர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களின் ரத்தமும் குமாரியின் ரத்தமும் ஒத்து போனது.

இதையடுத்து இருவரில் ஒருவர் சிறுநீரக தானம் அளித்தால் குமாரியை கப்பாற்றலாம் என தெரியவந்தது. ஆனால் பெற்றோர், அவளுக்கு சிறுநீரகத்தை கொடுக்க மறுத்துள்ளனர்.

இது குறித்து குமாரியின் தந்தை ராமாஷ்ரே யாதவ் கூறுகையில், அவள் ஒரு பெண், அவளுக்கு யார் சிறுநீரகம் கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

குமாரியின் தாயும் தன் மகளின் உ யிரைக் காப்பாற்ற எந்த ஆர்வமும் காட்டவில்லை, மேலும், அரசிடம் நிதியுதவி பெற்று அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்ற நிலையில் அவர் அதைச் செய்யக்கூட தயாராக இல்லை.

பெண் என்ற ஒரே காரணத்துக்காக சொந்த மகளின் இறப்புக்காகப் பெற்றோர் காத்திருப்பதாகக் கூறப்படுவது தான் அ திர்ச்சியிலும் அ திர்ச்சி!

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தன்னுடைய சிறுநீரகத்தை குமாரிக்கு தானம் அளிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.

திருமணமான சில மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு

இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் (27). இவருக்கும் பாவனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பாவனா கணவரின் சுயரூபத்தை சில நாட்களிலேயே அறிந்து அதிர்ந்தார். அதாவது தான் வீடு வாங்க வேண்டும் என கூறி திருமணமான சில நாட்களில் இருந்தே 6 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கொ டுமைப்படுத்த தொடங்கினார்.

இதோடு ஹிதேஷின் பெற்றோரும் பாவனாவை து ன்புறுத்தி வந்தனர். இதனால் பாவனா மனவேதனையில் இருந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார், இது குறித்து அறிந்த அவரின் பெற்றோர் மகள் ச டலத்தை பார்த்து அலறி துடித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் பாவனாவின் ச டலத்தை கைப்பற்றி விட்டு த ற்கொ லை வழக்கு பதிவு செய்தனர்.

பொலிசார் பாவனாவின் கணவர் ஹிதேஷ் மீது எந்தவொரு வழக்குப்பதிவும் செய்யாத நிலையில், அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஹிதேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி!!

ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ்ச் சிறுமி, அல்பர்ட் ஐன்ஸ்டினை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை பூர்விகமாக கொண்ட ராதாகிருஷ்ணன் பிரித்தானியாவிலுள்ள இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கிருஷ்ணாம்பாள் என்கிற மனைவியும், ஹரிப்பிரியா (11), ஜெகதீஷ் என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் ஹரிப்பிரியா நுண்ணறிவை சோதனை செய்யும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரித்தானிய மென்சாவின், ‘காட்டல் III பி (Cattell III B)’ தேர்வில் பங்கேற்ற ஹரிப்பிரியா, தேர்வில் சாத்தியமுள்ள மதிப்பீடான 162 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மதிப்பெண்கள் அல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற அறிவியலாளர்களின் மதிப்பீட்டை விட 2 எண்கள் அதிகமாகும். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான ‘கல்ச்ர் பார் (Culture Fair Scale)’ என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து ஹரிப்பிரியா கூறுகையில், தேர்வு முடிவுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றன. நான் எதிர்காலத்த்தில் MI6க்காக பணிபுரியும் ஒரு உளவாளியாக இருக்க விரும்புகிறேன். அதன்மூலம் ஒப்பந்தக் கொலையாளிகள், பணத்திற்காக கொலை செய்யும் ஆசாமிகள், சர்வதேச குற்றவாளிகள் மற்றும் கடத்தல்காரர்களை என்னால் பிடிக்க முடியும் எனத்தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சிறுமியின் தந்தை ராதாகிருஷ்ணன், நடப்பாண்டிற்கான “பிரைட் ஆஃப் ரீடிங்” விருதுகளின் இளம்நபர் பிரிவிற்கு தன்னுடைய மகளின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

திருமணம் முடிந்த 24 நாட்களில் கணவரை இழந்த இளம் மனைவி!!

கணவரை இழந்த இளம் மனைவி

சென்னை போக்குவரத்து பணிமனை விபத்தில் இளம்மனைவி ஒருவர் திருமணம் முடிந்த 24 நாட்களில் தன்னுடைய கணவரை இழந்துள்ளார்.

சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.40 மணியளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து இருந்துள்ளனர்.


அந்த சமயத்தில் சோதனை செய்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியுள்ளது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள், இடர்பாடுகளில் சிக்கி காயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சேகர், பாரதி ஆகிய 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் உ யிரிழந்த பாரதி 24 நாட்களுக்கு முன்பு தான் நாகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.