காதலியை கொ ன்று பு தைத்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற ராணுவ வீரர்!!

ராணுவ வீரர்

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலியை ரகசிய திருமணம் செய்து பின்னர் கொ ன்று பு தைத்த ராணுவ வீரரை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக கேரள எல்லைப் பகுதியான பூவாறு திருபுறம் பகுதியை சேர்ந்த ராகிமோள் என்ற இப்பெண்ணை அகில் என்பவர் 6 வருடங்களாக காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார்.

பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வேறு திருமணம் செய்ய நினைத்த அவர், காதல் மனைவியை தம்பி ராகுல் மற்றும் நண்பருடன் சேர்ந்து தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் உள்ள நண்பரின் காரில் அழைத்துச் சென்று கொ லை செய்துள்ளார்.

அத்துடன் அம்பூரி பகுதியில் உள்ள தனது குடியிருப்பின் பின்புறம் உ டலை நி ர்வாண நிலையில் பு தைத்துள்ளார். மட்டுமின்றி ச டலம் அடையாளம் காண முடியாத நிலையில் மக்கிப்போவதற்காக உப்பையும் கொட்டியுள்ளார். கேரள மாநிலத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி நடந்துள்ளது.

இதையடுத்து மகள் கா ணாமல் போனது தொடர்பாக பூவாறு காவல்நிலையத்தில் ராகிமோளின் பெற்றார் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிறப்பு படையை நியமித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 25ஆம் திகதி பு தைக்கப்பட்ட உ டல் மீட்கப்பட்டது. அத்துடன் கொ லைக்கு உதவிய அகிலின் தம்பி ராகுலும், அவரது நண்பரும் கை து செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அகில் கை து செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அவரை ரகசிய தகவலின் பேரில் பொலிசார் கை து செய்துள்ளனர்.

இப்படி ஒரு விபத்தை நேரில் பார்த்ததில்லை : நொடியில் கண்முன் அழிந்த குடும்பம்!!

விபத்தில்..

பெங்களூரில் வார விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியதில் பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த ரவி (31) – மஞ்சுளா (28) தம்பதியினர் தங்களுடைய குழந்தைகள் சுகன்யா (10), சாகர் (5) ஆகியோருடன் வார விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டுள்ளனர். பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது Gejjalagere என்கிற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட தம்பதியினரும் பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உ டல்களை வெளியில் எடுக்க நீண்ட நேரம் போ ராடினர். இதற்கிடையில் பேருந்தில் பயணித்த மாணவிகளில் பலரும் மய க்கமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த மோனிகா என்கிற மாணவி கூறுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு விபத்தை நேரில் பார்த்தது இல்லை. ஒரு சில வினாடிகளில் எங்கள் கண்முன் ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.

பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : 3 குழந்தைகளுடன் தூ க்கில் தொ ங்கிய தாய்!!

பூட்டிய வீட்டிலிருந்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 குழந்தைகளை கொ ன்றுவிட்டு தாயும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அக்ரம் பகவான் என்பவர் பழக்கடை ஒன்று நடத்தி வருகிறார். 

இவருக்கு பாத்திமா (28) என்கிற மனைவியும், அலியா பக்பன் (9), சோபா (7), ஜியான் (6) என்கிற மூன்று குழந்தைகளும் உள்ளார். கடந்த சில நாட்களாகவே பழக்கடையில் வியாபாரம் நடைபெறாமல் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், பாத்திமா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, மூன்று குழந்தைகளும் நைலான் க யிற்றில் தூ க்கில் தொ ங்கியுள்ளனர். அவர்களுடைய தாய் பக்கத்து அறையில் சேலையில் தூ க்கில் தொங்கியுள்ளார். இந்த நிலையில் மூன்று பேரின் உ டல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்கள் ஏமாற்றிய பாரிய பண மோசடி செய்யும் மர்ம கும்பல் : அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

மின்னஞ்சல் ஊடாக மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் பிரபுக்களின் பெயர்களை பயன்படுத்தி குறித்த மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது.

ஆசிய எல்லையில் பாரிய நிதியை செலவிட்டு சமூக முதலீட்டு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கூறி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்து மோசடி செய்கிறது. இவ்வாறான மின்னஞ்சல் பல இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் ஊடாக தொலைபேசி இலக்கம் பெற்றுக் கொண்டு முதலீட்டிற்காக இலங்கைக்கு வருகைத்தர வேண்டும் எனவும் அதற்கான விமான டிக்கட் செலவை ஏற்குமாறும், தங்கள் வங்கி கணக்கில் பணம் வைப்பிடுமாறும், போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பொது மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இந்த முதலீட்டிற்காக இலங்கை செல்லும் குழுவிற்கு விமான டிக்கட் போன்றவற்றிற்கு பணம் வழங்கினால், திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் பணம் வைப்பிட்டவர்களுக்கு பணம் மற்றும் சலுகை கிடைப்பதாக தெரிவித்து இவ்வாறான போலி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நபர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் அவ்வாறான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தன்னை கடித்த விஷப்பாம்பை கடித்து துண்டுகளாக்கிய இளைஞர்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னை கடித்த விஷப்பாம்பை கடித்து துண்டுகளாக்கிய இளைஞர் மருத்துவமனையில் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்திரபிரதேச மாநிலம் அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற இளைஞர் தன்னுடைய வீட்டில் அமர்ந்து ம து அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ம துபோ தையில் அந்த விஷ பாம்பை துண்டுதுண்டாக கடித்து வீசியுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவருடைய தந்தை உடனடியாக ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ராஜ்குமார் ஆ பத்தான நிலையில் இருப்பதாக கூறியதோடு, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து தற்போது வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜ்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வவுனியா குட்செட் வீதியில் பதற்றநிலை!!

பதற்றநிலை

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள மீன்கடையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் அகற்றமுயன்றதினால் இன்று (29.07.2019) மாலை அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.

குட்செட் வீதியில் உள்ள மீன்கடையினை அகற்றுமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மீன்கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்தில் பொதுமக்களுக்கும் பிரதேச சபை தவிசாளருக்குமிடையே கருத்து முறண்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் பிரதேசசபை தவிசாளர் மீன்கடையினை மூடுமாறும் அலுவலத்தில் வந்து தன்னை சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை தவிசாளரின் உத்தரவினையடுத்து மீன் கடை உரிமையாளர் 50கிலோ மீனை பட்டாரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பாதிப்படைந்த மீன் விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களாக நான் குட்செட் வீதியில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றேன். தற்போது பிரதேசசபையினர் அகற்றுமாறு தெரிவிக்கின்றனர். துவிச்சக்கரவண்டி மற்றும் வாகனத்தில் வியாபாரம் மேற்கொள்ளுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பிரதேசசபையினர் எனது வியாபார நிலையத்தினை மாத்திரம் குறிவைத்து அகற்ற முயல்வது ஏன்? விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 50கிலோ மீன்களை என்ன செய்வது? என விசனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளரிடம் கேட்டபோது, அப்பகுதியில் பிரதேச சபையினரால் மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களின் செயற்பாட்டினால் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையத்தில் வியாபார நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுவதுடன் பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன் காரணமாகவே பிரதேசசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குறித்த மீன் விற்பனை நிலையத்தினை அகற்றினோம் என தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ ஜீப் வண்டி தீ விபத்து!!

தீ விபத்து

மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை மட்டக்களப்பு பேருந்து நிலையத்தின் பின்பகுயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ புனர்வாழ்வு பிரிவின் ஜீப்வண்டி ஒன்றும் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

எனினும் அருகில் இருந்தவர்கள் தீயினைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜீப் வண்டி ஓரளவு சேதத்துடன் தீயணைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் தீவிபத்து தொடர்பான விசாரணை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, சம்பவ இடத்திற்கு பொலிஸ் குற்ற தடயவியல் பிரிவு மற்றும் இராணுவத்தினர். வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மன விரக்தியில் சென்று தண்டவாளத்தில் தலை வைத்த நபர் : யாழில் சம்பவம்!!

தண்டவாளத்தில் தலை வைத்த நபர்

யாழில் ம து போ தையில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது உ யிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் ம து போ தையுடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். உரும்பிராயை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப த கராறு காரணமாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த நபரின் மனைவி வன்னிப் பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகள் சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி, பிள்ளைகளை தன்னால் பார்க்க முடியாத விரக்தியில் வாழ்ந்து வந்ததனால் தனது உ யிரை மாய்க்கவே கொடிகாமம் பகுதிக்கு சென்று ம து அருந்தி விட்டு தண்டவாளத்தில் படுத்திருந்தேன் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த நபரை பொலிசார் சாவகச்சேரி நீதிவான் முன்னிலைபடுத்திய போது, நீதிவான் குறித்த நபரை சொந்த பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அடுத்த மாதம் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து : உ யிரிழந்தவர்களின் விபரம்!!

கோர விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உ யிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. கோர விபத்தில் நல்லூர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதான இரு பெண்களும் சிறுமியும் உ யிரிழந்துள்ளனர்.

கல்வியங்காட்டை சேர்ந்த சதாசிவம்(சிறி), சுகி மற்றும் அஜந்தன் கோபிகா ஆகியோர் வாகன விபத்தில் ப லியாகி உள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் தாயும் மகளும், இன்னுமொரு சிறுமியும் உ யிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  கோர விபத்து

கோர விபத்து

பேஸ்புக் களியாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் : உயி ராபத்தான பொருள் மீட்பு!!

இளம் பெண்கள்

தென்னிலங்கையில் பேஸ்புக் நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த களியாட்ட விருந்தினை பொலிஸார் சு ற்றி வளைத்துள்ளனர். மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்தில் கை து செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய அளவிலானோர் கலந்து கொண்ட இந்த விருந்தை சுற்றி வளைத்த பொலிஸார் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் விஷ போ தைப் பொருளுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் எம்.டீ.எம் போ தைப் பொருள் 160 மில்லிகிராம், கொக்கைன் 470 மில்லிகிராம், தீர்வை வரியற்ற சிகரெட்களும் இந்த விருந்தில் மீட்கப்பட்டுள்ளது.

பாரியளவிலான இளைஞர் யுவதிகள், விருந்தில் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் வெளி பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 32, 31 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் பத்து மாத இரட்டை சிசுக்கள் கொ டூரமாக படுகொ லை!!

இரட்டை சிசுக்கள்

பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொ டூரமான முறையில் படுகொ லை செய்யப்பட்டுள்ளன. சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் வெட்டி இரட்டை குழந்தைகள் படுகொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வீடொன்றின் குளியறையில் இந்த இரண்டு குழந்தைகளின் ச டலங்களும், கொ டூரமாக வெ ட்டிப் படுகொ லை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த படுகொ லைகளை தாய் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன்,

சுயநினைவற்ற நிலையில் இருந்த தாயை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மனநோய் இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிசார் மீது கல்வீச்சு!!

கல்வீச்சு

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (28.07) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவைக்கு அண்மையில் இரு போக்குவரத்து பொலிசார் கடமையில் நின்றுள்ளனர். இதன்போது அவ் வீதி வழியாக வவுனியா நகரம் நோக்கி வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை செய்த போது,

அருகில் இருந்த மறைவான இடத்தில் இருந்து போக்குவரத்து பொலிசார் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். போக்குவரத்து பொலிசார் குறித்த இடத்தில் கல்வீசியவர்களை தேடியபோதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியில் வந்தவரால் பரபரப்பு!!

வவுனியா வைத்தியசாலை..

நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு காயமடைந்த நிலையில் வந்த நபர் குழப்பம் விளைவித்தமையால் பதற்றநிலை ஏற்பட்டதுடன் பொலிசார் விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் நபரொருபர் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடப்பதாக 1990 அவரச சேவைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற நோயாளர் காவு வண்டி வீதியில் கிடந்த நபரை ஏற்றிக் கொண்டு வவுனியா வைத்தியசாலைக்கு வந்துள்ளது.

உடனடியாக குறித்த நபரை வைத்தியசாலை தள்ளுவண்டியில் வைத்து வைத்தியரிடம் கொண்டு செல்ல முற்பட்டபோது பெண் தாதிய உதவியாளர் ஒருவரை தா க்கியுள்ளார். இதனால் பாதிப்படைந்த தாதிய உதவியாளர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து விபத்துக்கள் பிரிவில் வைத்தியர் பரிசோதனை செய்ய முற்பட்ட போது குறித்த நபர் எழுந்து வைத்தியரை தாக்க முற்பட்டதுடன் மேசை, கதிரை, அலுமாரி, சுவர் என்பவற்றில் அடித்து அவற்றை சேதப்படுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற வைத்தியர்கள், தாதியர்கள் அவ்விடத்தில் இருந்து அச்சம் காரணமாக வெளியேறியுள்ளனர். தாதிய உதவியாளர்கள் குறித்த நபரை பிடித்து நிலமையை கட்டுப்படுத்த முயன்ற போது அவர்களையும் தாக்க முற்பட்டதுடன் கைகளில் இருந்து குருதி பாய்ந்து கொண்டிருந்த நிலையில் முரண்பட்டு குழப்பம் விளைவித்துள்ளார். இருப்பினும் தாதிய உதவியாளர்கள் பலர் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் கடமையில் நின்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்த முடியாது 119 பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த மேலதிக பொலிசார், தாதியர்கள், தாதிய உதவியாளர்களுடன் இணைந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் வந்துள்ளனர்.

வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் விபத்துக்கள் பிரிவு என்பவற்றில் குறித்த நபர் குழப்பம் விளைவித்தமையால் சுமார் அரை மணிநேரம் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டதுடன், வெளிநோயாளர் பிரிவு மற்றும் விபத்துக்கள் பிரிவு முழுவதும் இரத்தக் கறையாக காட்சியளித்துள்ளது. இதேவேளை, இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் ச டலம் மீட்பு : வெளியாகியுள்ள புதிய தகவல்!!

பெண்ணின் ச டலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் ச டலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தின் உடற் கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ச டலமாக மீட்கப்பட்ட பெண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், தப்பிக்க கூடாது என்பதற்காக தனது கைகளை தானே கட்டி குறித்த பெண் கிணற்றிற்குள் பா ய்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தம்பசிட்டி, கதிரவேற்பிள்ளை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெகநாதகுரு கிருபாலினி கடந்த 27ஆம் திகதி கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து கோர விபத்து : 3 பேர் பலி – 5 பேர் படுகாயம்!!

கோர விபத்து

மதவாச்சி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்றும் பேருந்தும் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகி உள்ளது.

இவ் விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவிஷ்க பெர்னாண்டோ விளையாடிய கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு நேர்ந்த கதி!!

தந்தைக்கு நேர்ந்த கதி

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விசேட விருந்தினர் பகுதியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவிஷ்க பெர்ணான்டோவின் தந்தை தி டீரென மய ங்கி விழுந்துள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விசேட விருந்தினர் பகுதியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவிஷ்க பெர்ணான்டோவின் தந்தை தி டீரென ம யங்கி வி ழுந்துள்ளார். போட்டியை பார்ப்பதற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தந்தை ம யங்கி வி ழுந்த போது ஆட்டமிழக்காமல் அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களை பெற்றிருந்தார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டி தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.