சுவிஸ்லாந்தில் யாழ் இளைஞன் பரிதாப ம ரணம்!!

யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் நாட்டின் சொலதூன் மாநிலத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட சயந்தன் எனப்படும் இளைஞன் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக சுவிஸ் நாடில் அகதி தஞ்சம்கோரிய நிலையில் தற்காலிக குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார்.

இன் நிலையில் நண்பர்களுடன் அருகில் இருந்த நீர்த்தேக்கம் ஒன்றில் நேற்று முன் தினம் நீராட சென்ற வேளையில் நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி உ யிரிழந்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் உ டலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கையான பிரசவத்தின் போது உ யிரிழக்கும் தாய்மாரின் எண்ணிகை அதிகரிப்பு!!

பிரசவத்தின் போது..

இலங்கையில் பிரசவத்தின் போது தாய்மார் உ யிரிழப்பது அதிகரித்து வருவதாகவும் இயற்கையாக பிள்ளைகளை பெறும் ஒரு இலட்சம் தாய்மாரில் 40 தாய்மார் உ யிரிழப்பதாகவும் இலங்கை மருத்துவச் சங்கத்தின் செயலாளர் விசேட சமூக மருத்துவ நிபுணர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் இலங்கையில் 3 இலட்சத்து 26 ஆயிரம் தாய்மார் இயற்கை பிரசவத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளதுடன் இவர்களில் 15 வீதமானவர்கள் 35 வயதுக்கும் குறைவான பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மருத்துவச் சங்கமும் ஐக்கிய நாடுள் அமைப்பின் நிதியும் இணைந்து கொழும்பில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குடும்ப திட்டத்தை சுற்றி உருவாகியுள்ள மூட நம்பிக்கை மற்றும் அதனை போக்குவது தொடர்பான கலந்துரையாடலும் அங்கு நடத்தப்பட்டுள்ளது.

போலி விசாவில் லண்டன் செல்ல முயன்ற முல்லைத்தீவுப் பெண் கைது!!

பெண் கைது

போலி விசா அனுமதியை பயன்படுத்தி இங்கிலாந்து செல்ல முயற்சித்த பெண்ணொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் பகுதியில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அந்த பெண்ணை கை து செய்துள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு இன்று கை து செய்யப்பட்டுள்ளார். இவர் லண்டன் நோக்கி செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அந்த பெண் சமர்ப்பித்த விசா அனுமதியில் மாற்றங்கள் இருந்த காரணத்தினால், பெண்ணை தாம் கை து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. கை து செய்யப்பட்ட பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகளை காரில் மறந்துவிட்டு வேலைக்கு சென்ற தந்தை : திரும்பி வந்தபோது நடந்த வி பரீதம்!!

நடந்த வி பரீதம்

காரில் குழந்தைகள் இருப்பதை மறந்துவிட்டு வேலைக்கு சென்ற தந்தை 8 மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, இரண்டு குழந்தைகளும் இ றந்து கிடந்துள்ள சோக சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 39 வயது தந்தை தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வீட்டிலிருந்து காரில் கிளம்பியுள்ளார். குழந்தைகள் இருவரும் காரின் பின் இருக்கையில் இருப்பதை மறந்த அவர், நேரடியாக பணிக்கு சென்றுவிட்டார்.

8 மணி நேரம் கழித்து திரும்பியதும், காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். சிறிது தூரம் சென்றதும் எதார்த்தமாக பின் இருக்கையை பார்த்துள்ளார். அப்போது இரண்டு குழந்தைகளும் வாயில் நு ரை தள்ளியபடி கிடந்துள்ளனர். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர், பொலிஸாருக்கு போன் செய்து உதவிகேட்டு க தறியுள்ளார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குழந்தைகள் இருவரும் உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். வெப்பம் காரணமாக இருவரும் உ யிரிழந்திருக்கலாம் என சந்தேகித்திருக்கும் பொலிஸார், குழந்தைகளின் தந்தையையும் வி சாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஒரு குழந்தைக்கு நான் தான் தந்தை என சண்டையிடும் 3 கணவர்கள்!!

ஒரு குழந்தைக்கு சண்டையிடும் 3 கணவர்கள்

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் குழந்தை பெற்றெடுத்த நிலையில், பிறந்த குழந்தைக்கு 3 பேர் நான் தான் தந்தை என உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் சப்னா மைத்ரான (21) என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக, பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை ஒரு இளைஞர் மருத்துவமனையில் சேர்த்தார். அவர் தான் சப்னாவின் கணவர் என மருத்துவமனை ஊழியர்கள் நினைத்து அவரிடம் விசாரித்த போது அவரும் ஆம் என்றார். பின்னர் பிரசவத்தில் சப்னாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை சப்னா தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார்.

இதை பார்த்த ஹர்ஷா கேத்ரி என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்து தான் தான் சப்னாவின் கணவர் என்றும் குழந்தை என்னுடையது தான் என்றும் கூறியுள்ளார். மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்த விவகாரத்தை பொலிசாரிடம் கொண்டு சென்றனர்.

பொலிசார் விசாரித்த போது ஹர்ஷா தனது திருமண சான்றிதழ், தனது மனைவி தான் சப்னா என்பதற்கான சான்றிதழ்களை காண்பித்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்ந்தவர் தான் சப்னாவின் நண்பர் என்று ஒப்புக்கொண்டார்.

இதுவரை உள்ள குழப்பம் போதாது என்று தற்போது மீண்டும் ஒரு குழப்பம் வந்தது. அந்த மருத்துவமனைக்கு பிரதீப் ராய் என்பவர் வந்தார். அவர் தன்னை சப்னாவின் கள்ளக்காதலன் என்றும், தனக்கு பிறந்தது தான் அந்த குழந்தை என்று அவரும் உரிமை கொண்டாட ஆரம்பித்தார்.

இதன் காரணமாக மருத்துவமனையில் பெரும் சண்டையே வந்தது. ஒரு பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு இரண்டு பேர் கணவர்கள் என சண்டை போட்ட நிலையில் பொலிசாரிடம் இறுதியாக அந்த பெண்ணிடமே இது குறித்து கேட்டனர்.

சப்னா கூறுகையில், திருமண சான்றிதழுடன் வந்தவரே தனது கணவர் மற்றும் அந்த குழந்தையின் அப்பா எனவும், தானும் அவரும் முதலில் காதலித்து வந்ததாகவும் அப்பொழுது தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார். பிரதீப் குறித்து பொலிசார் சப்னாவிடம் கேட்டபோது அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அதனால் தற்போது வரை குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பது தெரியாமலேயே உள்ளது.

திருமணமான மூன்றாம் நாள் இரவு புதுப்பெண் செய்த காரியம் : அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவன்!!

அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவன்

இந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண், கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்துவிட்டு பணம், நகைகளுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கன்ஹய்லால். இவருக்கும் பூஜா என்ற இளம்பெண்ணுக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு பூஜா, கணவர் வீட்டில் இருந்தார். அப்போது கன்ஹய்லாலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 16 பேர் வீட்டில் இருந்தனர். அவர்கள் அனைவரும் இரவு உணவை சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் பூஜா தேனீர் கொடுத்தார். தேனீரை குடித்த பின்னர் அனைவரும் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து வீட்டின் அறையில் இருந்த ரூ 40 ஆயிரம் பணம், தங்க நகைகள், விலையுயர்ந்த உடைகளுடன் பூஜா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார், உடன் அவர் சகோதரரும் கிளம்பி சென்றார். இதையடுத்து அடுத்த நாள் காலை உறவினர் ஒருவர் கன்ஹய்லா வீட்டுக்கு வந்த போது அங்கு அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அனைவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், தனது மனைவியின் செயலால் கன்ஹய்லா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூஜா மற்றும் அவர் சகோதரரை தேடி வருகிறார்கள்.

திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை : தனியாக இருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!!

பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

தமிழ்நாட்டில் இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் பரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30).

இவருக்கும், சுபிதா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. குமார் திருப்பூரில் தங்கியிருந்து லொறி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த சுபிதாவை, ராஜ்குமாரின் தங்கை சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுபிதா ஏற்கனவே இ றந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சுபிதா ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாகவும், அவரது கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுபிதாவின் பெற்றோர் பொலிஸ் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி சுபிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் உ டலை வாங்க மாட்டோம் என அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் சுபிதா சடலத்தை பெற்று கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இராணுவ வீரரால் கொ லை செய்யப்பட்ட இளம்பெண் : வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்!!

வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்

கேரளாவில் இராணுவ வீரரால் கொ லை செய்யப்பட்ட இளம்பெண் வழக்கில் பல்வேறு அ திர்ச்சி திருப்பங்கள் வெளிவந்துள்ளன. கேரளாவை சேர்ந்த ராக்கி என்கிற இளம்பெண்ணின் ச டலம் நி ர்வாணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்புகண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் இராணுவ வீரராக பணிபுரிந்து வரும் அகில் மற்றும் அவருடைய சகோதரன் ராகுல் மற்றும் ஆதர்ஷ் என்கிற இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். தற்போது வரை ராகுல் மற்றும் ஆதர்ஷ் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளி அகிலை இன்னும் கை து செய்யவில்லை.

முன்னதாக செல்போனில் பேசிய அகில் ஜூன் 29ம் திகதியன்று மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், இன்னும் 2 நாட்களில் பொலிஸாரிடம் ச ரணடைந்து விடுவதாகவும் கூறியிருந்தார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் இன்னும் பணிக்கு திரும்பவில்லை என இந்திய இராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மிஸ்டு கால் மூலம் ராக்கி மற்றும் அகில் ஆகியோரிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 6 வருடமாக காதலித்து வந்த இருவரும் பிப்ரவரி 15ம் திகதியன்று தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.


தனிக்குடித்தனம் நடத்தி வந்த சமயத்தில் தான் அகிலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இதனால் காதல் ஜோடிகளுக்கு இடையே அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், பெண் வீட்டாரை சந்தித்து அகில் திருமணம் பற்றி ராக்கி பேசியிருக்கிறார்.

இதனை கேட்டு ஆ த்திரமடைந்த அகில், சகோதரன் ராகுல் மற்றும் நண்பன் ஆதர்ஷ் உடன் கொ லை செய்வதற்கு திட்டமிட்டுள்ளான். உனக்காக புதிய வீடு ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறேன் எனக்கூறி, ராக்கியை காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.

அங்கு வைத்து க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துவிட்டு ஆடைகளை கழட்டி தீ யிட்டு கொளுத்தியுள்ளனர். பின்னர் தனியாக இருந்த நிலத்தில் உ டலை பு தைத்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வீட்டிலிருந்து வெளியில் சென்ற பெண் : அவரை தேடிச் சென்ற மாமியார் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

வெளியில் சென்ற பெண்

தமிழகத்தில் குடும்ப பிரச்சினையில், மகன்-மகளை கொ ன்று விட்டு தாய் தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது மனைவி தேவி (32). தம்பதியினருக்கு ஜனனி (8), ஜெயமித்திரன் (3) என்ற குழந்தைகள் இருந்தனர். ரமேஷ், சென்னையில் தங்கி ஒரு ஹொட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

தேவி தனது குழந்தைகளுடன் ஊரிலேயே வசித்து வந்தார். தேவிக்கும், அவரது மாமியார் மல்லிகா (65) என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பி ரச்சினையால் ச ண்டை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேவி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மல்லிகா மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குழந்தைகள் ஜெயமித்திரன், ஜனனி ஆகியோர் பி ணமாக மிதந்தனர்.

மேலும், அந்த குளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் தேவி தூ க்கில் பி ணமாக தொ ங்கினார். இதை பார்த்த மல்லிகா மற்றும் உறவினர்கள் அ திர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சட லங்களை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப த கராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தேவி, தனது குழந்தைகளை குளத்தில் உள்ள தண்ணீரில் அமுக்கி கொ லை செய்து விட்டு பின்னர் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூ க்கில் தொ ங்கிய இளம்பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!!

இளம்பெண் மருத்துவர்

இந்தியாவில் த ற்கொ லை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த இளம்பெண் பயல் தட்வி. இவர் மருத்துவர் ஆவார்.
பயல் கடந்த மே மாதம் 22ஆம் திகதி தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்த பொலிஸ் விசாரணையில் சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி பயலை து ன்புறுத்தியதால் ஏற்பட்ட அவமானத்தில் இம்முடிவை எடுத்தது தெரியவந்தது. மேலும், பயல் எழுதி வைத்திருந்த கடிதத்தின் ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை சமீபத்தில் பொலிசார் கைப்பற்றினர். அதில், மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் சாதி ரீதியாக மோசமாக பேசி து ன்புறுத்தினார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும், நான் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த சூழல் என்றும் மாறாது, என்னுடைய நம்பிக்கை முற்றிலுமாக போய்விட்டது என எழுதப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஹேமா அஹுஜா, அன்கிதா, மேரே ஆகிய மூன்று மருத்துவர்கள் கை து செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையின் மூலம் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பயல் த ற்கொ லை செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு எச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு ஒரு ஆப்ரேஷன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊசி அவர் மீது குத்தி காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனக்கு மருத்துவ விடுப்பு வேண்டும் என பயல் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் த ற்கொ லைக்கு காரணமான மூன்று மருத்துவர்களில் ஒருவர் கட்டாய மருத்துவ விடுப்பு இருந்தும் கொடுக்க முடியாது என வேண்டுமென்றே நிராகரித்துள்ளார்.


இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பயல் பாதிக்கப்பட்டுள்ளார். இதோடு எச்ஐவி சிகிச்சை தொடர்பான வகுப்பில் அவர் வாந்தி எடுத்துள்ளார், இதையெல்லாம் கணக்கிலேயே கொள்ளாமல் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதுவும் பயல் த ற்கொ லை முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

வவுனியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இலங்கை தேசிய சமாதான பேரவையினால் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று (28.07) காலை 10.30 மணியளவில் வவுனியா பௌத்த வணக்க ஸ்தலத்தில் இடம்பெற்றது.

நல்லிணக்கம் தொடர்பான பிரதேச சர்வ மதக்குழுவிற்கும், சிவில் பாதுகாப்புக்குழு, மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூகப்பிரதிநிதிகள், மத குருமார்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடல் பிற்பகல் வரையும் இடம்பெற்றது.

மக்களுக்கிடையே இன வன்மு றைகளை ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

வவுனியா பம்பைமடு பகுதியில் பாரிய தீ!!

பாரிய தீ

வவுனியா, பம்பைமடு பகுதியில் பாரிய தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு பிரிவினரின் நீண்டநேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வவுனியா, மன்னார் வீதியில் பம்பைமடு பகுதியில் உள்ள யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகம் அருகில் காணப்பட்ட காட்டுப் பகுதியில் இன்று மதியம் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டு எரிந்துள்ளது.

குறித்த தீ வேகமாக பரவலடைந்து அருகில் காணப்பட்ட குடிமனை மற்றும் பல்கலைக்கழகம் என்பவற்றைநோக்கி நகர்ந்த நிலையில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினரும், பூவரசன்குளம் பொலிசாரும் இணைந்து ஒரு மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காற்று காரணமாக தீ வேகமாக பரவலடைந்து சென்றது. இதனால் கட்டுப்படுத்துவது தொடர்பில் தீயணைப்பு பிரிவினர் பொலிசார் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கினர். குறித்த தீ விபத்து காரணமாக காட்டுத் தொகுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.

வன்னியில் 12 மாடுகளை கொ ன்று குவித்த டிப்பர் வாகனம் : வீதியில் கிடக்கும் உடல்கள்!!

டிப்பர் வாகனம்

மாங்குளம் – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றிரவு (27.07.2019) இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 12 எருமை மாடுகள் உ யிரிழந்துள்ளது. மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் கல்குவாரிக்கு அண்மித்த பகுதியில் வீதியில் நின்ற எருமை மாடுகளை அவ்வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் 12 எருமை மாடுகள் இ றந்துள்ளது.

எனினும் டிப்பர் வானத்திற்கு சிறியளவில் சேதமேற்பட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. சாரதிகளின் அவதானமின்மையும் கால்நடை வளர்ப்பாளர்களினது அசமந்தபோக்கே இவ் விபத்திற்கு காரணமாகும்.

கால்நடை வளர்ப்பாளர்களே உங்களது கால்நடைகளை இரவு நேரத்தில் வீதியில் விடுவதை தவிர்ப்பதன் மூலம் கால்நடைகளை பாதுகாக்க முடியும் என்பதுடன் வீதி விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.

திருமண வீட்டை ம ரணவீடாக மாற்றிய கைகல ப்பு : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

கைகலப்பு

திருமண வீட்டில் ஏற்பட்ட கை கலப்பில் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார் என மொணராகல, கடோல்பெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொணராகல, கடோல்பெத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது நால்வருக்கு இடையே ஏற்பட்ட வா ய்த்தர்க்கம் பின் கை க லப்பாக மாறியுள்ளது.

அதன் போது ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தா க்கியதில் உயி ரிழந்துள்ளார். உ யிரிழந்தவர் மொணராகல, கடோல்பெத்த பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார். கொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸாரால் அவரை கைது செய்துள்ளனர்.

இக்கொ லை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு!!

மோசமான செயற்பாடு

வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய பெண் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான குறித்த பெண் இதுவரையிலும், பத்துக்கு மேற்பட்ட வீடுகளை உடைத்து நகைகளை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டு யன்னலை உடைத்து, வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிய நிலையில், அவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சந்தேகநபரான பெண்ணுக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 திருடப்பட்ட சில பொருட்கள் சந்தேகநபரை கைது செய்தபோது பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும், திருடப்பட்ட சில நகைகளை குறித்த பெண் அடகு வைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையை விட்டு வெளி யேறுகிறாரா லசித் மலிங்க?

லசித் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவு ஸ்திரேலியாவில் குடியேறப் போவதாக தகவல்கள் வெளியாகின எனினும் இந்தத் தகவல் உண்மையில்லை என லசித் மாலிங்க மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியேறப் போவதாக வெளியாக தகவல்கள் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாலிங்க, நான் அவுஸ்திரேலியா செல்கிறேன் என கூறியது யார் என எனக்கு தெரியாது. எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.

நான் அவுஸ்திரேலியா செல்வதாக கூறியவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும். எனக்கே தெரியாத விடயங்களுக்கு நான் பதிலளிக்க தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போ ட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டியில் இருந்த லசித் மாலிங்க ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.