தென்னிலங்கையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் கொ டூரமாக தா க்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹொரனை பிரதேசத்தில் பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியரினால் கொ டூரமாக தா க்கப்பட்ட நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் வேறு நிறத்திலான காற்சட்டை அணிந்திருந்தாக குற்றம்சாட்டி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்போது காற்சட்டையும் கிழிக்கப்பட்டுள்ளது. தான் உணவருந்திக் கொண்டிருந்த போது அதிபர் அங்கு வந்து தாக்குதலை மேற்கொண்டதாக மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவனுக்கு புதிய காற்சட்டை கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லாமையினால் அந்த காற்சட்டையை அணிந்து அனுப்பியதாக மாணவனின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – வவுணதீவு, நெடியமடு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாயி ஒருவரின் தென்னம் தோப்பினை அழித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காட்டு யானைகள் ஏற்படுத்தும் இவ்வாறான அழிவினால் தமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக தமது குழந்தைகளுடன் இரவில் தூக்கமின்றி அச்சத்தில் வாழ்ந்து வருவதாக நெடியமடு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் மாணவி சாதனை படைத்துள்ளார். ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் இலங்கை மாணவியும் ஒருவராவர்.
விக்டோரியா பாடசாலையைச் சேர்ந்த தமிழ் மாணவியான சரண்யா ஜெயகாந்தன் இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் 99 சதவீதத்திற்கும் அதிகமாக புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
Waterloo பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேற்படிப்பினை தொடருவதற்கான வாய்ப்பினை சரண்யா ஜெயகாந்தன் பெற்றுள்ளார். குறித்த மாணவி யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொ டூரமாகப் ப டுகொ லை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளதுடன் கழுத்துப் பகுதி துணியொன்றினால் இறுகக் கட்டப்பட்டுள்ளது. தம்பசிட்டி, கதிரவேற்பிள்ளை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெகநாதகுரு கிருபாலினி என்ற பெண்ணே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது மனைவி காணாமல்போய்விட்டார் என்று அவரின் கணவர் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும், அதன்பின்னர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில் கிணறு ஒன்றில் கா ணாமல்போன பெண் ச டலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று நண்பகல் குறித்த கிணற்றிலிருந்து பெண்ணின் ச டலத்தைப் பொலிஸார் மீட்டனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
“குறித்த இளம் குடும்பப் பெண் கொ டூரமான முறையில் ப டுகொ லை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளது. கழுத்துப் பகுதி துணியொன்றினால் இறுகக் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை” என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் 36 ஆவது வெலிக்கடை ப டுகொ லை நாள் நினைவு தினம் இன்று (27.07) மாலை 4 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வு நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நூலகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டதன் பின்னர் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலையில் ப டுகொ லை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோ.ராஜசுந்தரம் அவர்களுக்கும் ஏனைய இனப்பற்றாளர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டிருந்தார்கள்.
இந் நினைவஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று தவிசாளர் தவராசா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிரியாவில் உ யிருக்கு போ ராடிய நிலையிலும் தன்னுடைய தங்கையை காப்பாற்றியுள்ளார் ஐந்தே வயதான ரிஹாம். சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போ ர் நடந்து வருகிறது.
இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொ ல்லப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்தின் அரிஹா எனும் பகுதியிலுள்ள கி ளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் தாக் குதல் நடத்தின.
இதில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், அம்ஜத் அல் அப்துல்லா என்பவரது வீடு நொறுங்கி போனது. அப்துல்லாவும், அவரது மனைவி ஆஸ்மாவும் சம்பவ இடத்திலேயே ப லியாக, 5 வயது மகள் ரிஹாம் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தார்.
அப்போதும்கூட தன்னுடைய 7 மாத தங்கை கீழே விழுந்துவிடாமல் இருக்க சட்டையை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தார். காயங்களுடன் குழந்தை உ யிர் பிழைக்க, ரிஹாம் உயி ரிழந்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி வைரலானதுடன் அனைவரின் நெஞ்சையும் பிசைந்துள்ளது.
கேரளாவில் கடும் காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டு வந்த பிரபல குழந்தை நட்சத்திரமான ஆருணி எஸ்.குருப் மரணமடைந்துள்ளார். டிக்டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் ஆருணி எஸ்.குருப், 9 வயதான இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
தன்னுடைய நடிப்பாலும், குழந்தை தனத்தாலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் ஆருணி. இந்நிலையில் கடும் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கண்டறியப்படாத மூளை நோயினால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார். இவரது மரணம் அவரது குடும்பத்தார் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடும்ப த கராறு காரணமாக கணவன் மனைவி தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டு 8 மாத ஆண் குழந்தையை தனியாக தவிக்க விட்டுசென்ற சம்பவம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். (33). இவரது மனைவி ராஜாமணி (24). இவர்களுக்கு அபினேஷ்வர் 8 மாதத்தில் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சரவணன் அடிக்கடி ம து குடித்து விட்டு வந்து மனைவி ராஜாமணியுடன் பலநாட்களாக த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவ்வப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று சரவணன் வழக்கம் போல் ம து குடித்துவிட்டு வீட்டுக்கு மனைவியுன் த கராறு செய்து வெளியே சென்று விட்டார்.
அதன்பின் வீட்டுக்கு வந்த போது ராஜாமணி அங்கு சே லையால் தூ க்குபோ ட்டு பி ணமாக தொ ங்குவதை கண்டு அதி ர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சரவணன் தனது மைத்துனர் வீரமணிக்கு செல்போனில் நடந்த சம்பவத்தை கூறி தானும் வாழ விரும்பவில்லை என்றும், எனவே, த ற்கொ லை செய்து கொள்ளபோவதாகவும், தனது குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு செல்போனை ஆப் செய்து விட்டார்.
இதனை கேட்டு அ திர்ச்சி அடைந்த வீரமணி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, நெட்டப்பாக்கத்துக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது. சரவணன் மற்றும் ராஜாமணி ஆகிய இருவரும் தூ க்கில் பி ணமாக தொ ங்கினர்.
இதனை கண்டு வீரமணி மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். குறித்த சம்பவ இடத்திற்கு வந்த நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசார் கணவன், மனைவி இருவரது உ டலையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருப்பூரை அடுத்த வாவிபாளையம் நகரில் அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் 4 வயது குழந்தை உ யிரிழந்த சம்பவம் அவ்வூர் மக்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த வாவிபாளையம் நகரை சேர்ந்தவர் பனியன் தொழிலாளியான படையப்பா நடேசன் என்பரின் 4 வயது மகன் லோகேஷ் என்ற சிறுவனே இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார்.
லோகேஷுக்கு கடந்த 14 ஆம் தேதி அதிக காய்ச்சல் ஏற்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கே காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துவிட்டான்.
இதற்கிடையே படையப்பா நகர் பகுதி மக்கள், ஊத்தக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது ஒரு வாட்டர் பாட்டிலில் அவர்கள் அருந்தும் கலங்கலான குடிநீரை பிடித்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்து “குடிநீர், சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனாலதான் எங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இதை பற்றி எத்தனையோ முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது இந்த குழந்தையோட உயிர் அநியாயமா போய்விட்டது உ யிரிழப்பிற்கு நியாயம் தேவை. அடிப்படை வசதிகளும் எங்களுக்கு உடனடியா தேவை” என்று மறியலின்போது ஆவேசத்துடன் மக்கள் கூறினார்கள்.
இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். மேலும் அவர்களிடம் பெண்கள் குறைகளை சொல்லி கொண்டே போனார்கள். அதன் பிறகு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
நேற்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள லசித் மலிங்கவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் டுவிட்டரில் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
உங்கள் அற்புதமான பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் யோர்க்கர் கிங் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். உங்களை போல கால்விரல்களை சேதப்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் இன்னொருவர் ஒருபோதும் வரப்போவதில்லை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஒரே ஓய்வறையை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தமை எனது அதிஸ்டம் என பங்களாதேசின் முஸ்டபிசுர் ரஹ்மான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நீங்கள் திட்டமிடுவதில் எவ்வளவு வல்லவர் என்பதும் மற்றவர்களை ஊக்குவிப்பதில் எவ்வளவு திறமைசாலி என்பதும் எவ்வளவு நல்லமனிதர் என்பதும் எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் பெரும் சாதனையாளன், உங்களிடம் உள்ள போராடும் குணம் அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்ககூடியது, ஒருநாள் கிரிக்கெட் உங்களை இழந்து தவிக்கப்போகின்றது நீங்கள் என்றும் நினைகூறப்படுவீர்கள் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
மும்பாய் இந்தியன் அணிக்காக கடந்த தசாப்தங்களில் விளையாடி போட்டியை வெல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யவேண்டுமென்றால் இவர் அந்த பட்டியலில் முன்னணியில் காணப்படுவார் என ரோகித்சர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அணித்தலைவர் என்ற அடிப்பயைடில் நான் மிகவும் நெருக்கடியா பதட்டமா காணப்பட்ட தருணங்களில் லசித்மலிங்க எனக்கு ஆறுதல் அளித்துள்ளார் எனவும் ரோகித்சர்மா குறிப்பிட்டுள்ளார். அவர் ஒருபோதும் ஒரு பந்துவீச்சாளராக தனது பணியை நிறைவேற்ற தவறியதில்லை,எனவும் ரோகித்சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் மலிங்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிததுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேலஜெயவர்த்தன 22 வயது மலிங்கவை வலைப்பயிற்சியில் சந்தித்ததை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீங்கள் உங்களிற்கு உண்மையாக இருந்துள்ளீர்கள் அனைத்தையும் விட நீங்கள் சிறந்த நண்பர் இலங்கையை பெருமிதம் அடையச்செய்தவர் என மகேலஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ரங்கனஹேரத் உபுல் தரங்க உட்பட பல இலங்கை வீரர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்தக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய ரயல் கடவைப் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் பின்புறத்தில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியில் வசித்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கழிவு பொருட்களால் கொழும்பு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கழிவுகளில் இருந்து பாரிய துர்நாற்றம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு துறைமுக பகுதிகளில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
களஞ்சியத்திலுள்ள கொள்கலன்களில் உள்ள கழிவுகள் பழுதடைய ஆரம்பித்துள்ளமையினால் அதன் கதவுகளை திறந்து சோதனையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுங்க பிரிவு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். குப்பைகளை அடையாளப்படுத்தி கொள்ள முடியாத அளவிற்கு குப்பை பழுதடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலை கழிவுகள் அதிகமாக இருப்பதனாலேயே இந்த நாற்றம் வீசுவதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குப்பையை சோதனையிடுவதற்காக அந்த கொள்கலன்களை திறப்பதே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இதனை திறக்காமல் மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைப்பதே சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களில் மனித உடற்பாகங்கள் இருப்பதாக ஏற்கனவே சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை கொழும்பு வாழ் மக்களின் உடல் நலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநோவ் AN124 என்ற விமானம் அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. இன்று அதிகாலை 1.34 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த விமானம் பத்தாவது முறையைாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து ஜகர்த்தா நோக்கி பயணித்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமானத்திற்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக தரையிறங்கியுள்ளது. 98 இலட்சம் ரூபா பெறுமதியான 112400 லீற்றர் எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் ரஷ்யா நோக்கி இந்த விமானம் பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இங்கிருந்து நீர்கொழும்பிற்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா நலன்புரி நிலையத்தில் நீர்கொழும்பு பகுதியில் கடந்த 21,04 கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக தங்கவைக்கப்பட்டிருந்த 113பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இதில் அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு 20பேர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 15பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம் தெரிவித்துள்ள நிலையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் ஐவரும், நேற்று இரவு ஒருவரும் சென்றுள்ளதாகவும் மேலும் 9பேர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களுக்கான அனுமதி என்னும் கிடைக்கவில்லையெனவும் தற்போது 87பேர் குறித்த முகாமில் இருப்பதாகவும் புனர்வாழ்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, வெள்ளவத்தையில் 82 லட்சம் ரூபா பெறுமதியான இரத்தின கல் திருடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று மாலை பம்பலப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் பையில் 82 லட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் மற்றும் 130000 ரூபா பெறுமதியான காசோலை புத்தகம் திருடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பொருட்களை கொள்ளையடிக்கும் நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுட்பமான முறையில் கொள்ளையடிக்கும் செயற்பாடு குறித்து பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
யாழ்ப்பாணம் – கச்சேரி, பெந்தேகொஸ்தே ஆலயத்திற்கு அருகாமையில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் உள்ள வீதியினூடாக பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.