பலாங்கொடை இந்துக்கல்லூரி மாணவியின் வரலாற்று சாதனை!!

மாணவியின் வரலாற்று சாதனை

சப்ரகமுவா மாகாணம் – இரத்தினபுரி, பலாங்கொடையில் அமைந்துள்ள இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு அந்த மாணவி தெரிவாகியுள்ளார். இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி தனுஜா மாலதி என தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம்

திருகோணமலை – கந்தளாயில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து கந்தளாய் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இரண்டு முச்சக்கர வண்டிகளும் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததமையே இவ்விபத்து இடம்பெற காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான இரண்டு முச்சக்கர வண்டிகளும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

ஆறுனி

டிக்டாக் ஆப் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். மலையாளத்தில் டிக்டாக் செயலியில் தனது நடிப்பு திறமையை காட்டி பிரபலமானவர் ஆறுனி.

ஆறுனி கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயி ரிழந்துள்ளார்.

இவரது ரசிகர்களுக்கு இது பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. இவரது தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் பரிதாபமாக உயி ரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மகிந்தவிற்கு மனமார்ந்த நன்றிகள் : பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்!!

மலிங்க உருக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், அவர் வழங்கிய ஆதரவினால் தான் எதிர்பார்த்ததை விட அதிக காலம் விளையாட முடிந்தது” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று தனது இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய அவர், பிரியாவிடை உரையின் போது, இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பலத்த காயம் ஏற்பட்டபோது, ​​ராஜபக்ஷ அவர்கள் வைத்தியர் எலியந்தா வைட் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் குணமடைய பெரிதும் உதவினார்.

ராஜபக்ச மற்றும் வைத்தியர் எலியந்தா வைட் இல்லையென்றால் தன்னால் தொடர்ந்து விளையாட முடிந்திருக்காது எனவும் லசித்த மலிங்க கூறினார். மேலும், ஐ.பி.எல் விளையாடுவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினாலேயே ஒருநாள் மற்றும் டி -20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட தகுதியுடையதாக இருந்தது என்று மலிங்க கூறினார்.

இதேவேளை, ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தான், டி -20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடுவேன் என லசித் மலிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை : டக்ளஸ் கடும் ஆதங்கம்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது. அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி என காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்ளுர மகிழ்ந்தீர்களா இல்லையா?

இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா?..

அதைவிடவும், புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனிதநாகரீக பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா இல்லையா என்று கேட்கிறேன்.

புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள் கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.

நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாம். ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.

அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களை காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன். நீங்கள் வரவில்லை.

எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சுலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட இன்று உயிருடன் இருந்திருப்பார்.

முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளை துறந்து எதிர்ப்பை தெரிவித்தீர்களா? இல்லை.

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியை துறந்திருப்பேன்.

ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள். சவப்பெட்டி அரசியல் வாதிகளும். பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்கு கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்பு குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது தமிழ் மக்களையும் ஏமாற்றி உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள் இன்று பேச தொடங்கியுள்ளார்கள்.

முப்பது வருடங்களாக போராடி எதை சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனை தியாகங்களை கொசைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.

அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் அந்த முப்பது வருட போராட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

கதறி அழுதபடி பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் : அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ!!

தாலி கட்டிய மணமகன்

இந்தியாவில் து ப்பாக்கி முனையில் வாலிபருக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர் வினோத் குமார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகும் வினோத் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாக கூறினார். இதையடுத்து சஞ்சய் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் க டத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.

வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள், வீடியோ இணையத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தெரிந்ததும் சஞ்சய் பொலிஸ் உதவியுடன் வினோத்தை மீட்டார்.

இது தொடர்பில் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு பீகார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வினோத்துக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

மின்சாரத்தை துண்டித்து 4 வயது சிறுவனை க டத்திய கும்பல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு கா ணாமல் போன 4 வயது குழந்தையை அம்மாநில பொலிசார்சார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தனது குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது ஜஷீத். என்ற சிறுவன்.

இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கட த்தப்பட்டான். சிறுவனுடன் சென்ற அவனது பாட்டியை எட்டித் தள்ளிவிட்டே அந்த கும்பல் சிறுவனை க டத்தியுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

சிறுவனை கட த்தும் போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், இருட்டின் மறைவிலேயே இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார்,

பின்னர் 8 படைகளை அமைத்து தீவிரமாக தேட தொடங்கினர். சிறுவனை கட த்தியவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளிவராத நிலையில்,

2 நாட்களுக்கு பின்னர் குட்டுகுலுரு எனும் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு அருகே சிறுவன் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் சிறுவன் ஜஷீத்தை பத்திரமாக மீட்டனர்.

இதுதொடர்பாக சிறுவனை விசாரித்தபோது, தன்னை கடத்தியவர்களுள் ஒருவர் பெயர் ராஜூ என்றும், எங்கு தங்கியிருந்தேன் என்பது பற்றி தெரியாது என்றும் கூறியுள்ளான்.

மேலும் 2 நாட்களாக வெறும் இட்லி மட்டுமே கொடுத்தனர் எனவும், அடிக்கவோ து ன்புறுத்தவோ இல்லை எனவும் கூறியுள்ளான். இதன் அடிப்படையில் பொலிசார் கட த்தல்காரர்களை தேட ஆரம்பித்துள்ளனர்.

உடல் முழுவதும் தீ ப்பற்றி போ ராடிய மனைவி : கணவன் செய்த கேவலமான காரியம்!!

போ ராடிய மனைவி

திருவாரூர் மாவட்டத்தில் வ ரதட்சணை கொ டுமை காரணமாக இளம்பெண் தீ க்குளித்து த ற்கொ லைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் – மைதிலி தம்பதியினருக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்தின் போது மைதிலி வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்திருந்துள்ளனர்.

ஆனால் அது போதாது என அருண் குடும்பத்தினர் கார் உட்பட இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கொடு மைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மைதிலி தன்னுடைய உ டலில் தீ யை ப ற்றவைத்து த ற்கொ லைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் கூட உ யிருக்கு போ ராடி கொண்டிருந்த மைதிலியின் கழுத்திருந்த தாலி செயினை அருண் பறித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

80 சதவீத தீ க்கா யங்களுடன் மைதிலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பம் முதலே தன் முகம் அழகாக இல்லை என்றும் வரதட்சணை கேட்டும் கணவன், மாமியார் மற்றும் மாமனார் தன்னை கொ டுமைப்படுத்தியதாக மைதிலி மாவட்ட குற்றவியல் நடுவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒன்பது வயது சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்து சென்ற நபரை நையப்புடைத்த மக்கள்!!

ஒன்பது வயது சிறுமியை..

கண்டி – தல்வத்தை பகுதியில் 9 வயதான சிறுமியொருவரை க டத்திச் செல்ல முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் உடதலவின்ன பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த நான்காம் திகதி குறித்த சிறுமி பாடசாலை நிறைவடைந்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, குறித்த நபர், சிறுமியின் தாய் நகரில் இருப்பதாகவும் தாம் அங்கு அழைத்து செல்வதாகவும கூறி அவரை உந்துருளியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

எனினும் சந்தேக நபர் சிறுமியை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சிறுமி வீதியை நோக்கி ஓடியுள்ளார்.

பின்னர் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தியுள்ள சிறுமி சம்பவம் தொடர்பில் அதன் சாரதிக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுமி தாயிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், தாய் சம்பவம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காணொளிகளை பரிசோதனை செய்து சந்தேக நபரை இனங்கண்டுள்ளார்.

பின்னர் தனது வீட்டில் கூலி வேலை இருப்பதாக குறித்த நபரை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துள்ள சிறுமியின் தாய், அவரை பிரதேசவாசிகளுடன் இணைந்து மடக்கி பிடித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் கண்டி காவல்துறைக்கு அறிவித்து சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.

கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்து நெ ரித்து கொ லை செய்த கணவர்!!

கர்ப்பிணியான தனது மனைவியை..

கர்ப்பிணியான தனது மனைவியின் கழுத்தை நெ ரித்து கொ லை செய்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (24.07) அதிகாலை பதுளை – ஸ்பிரிவேலி தோட்டம், முதலாவது பகுதியில் உள்ள வீட்டில் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான கணவர், கொழும்பில் பணிபுரிந்து வருவதோடு, அண்மையில் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த கொ லை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல் கிடைத்ததுடன்,

அவர் யாழ்ப்பாணம் பகுதியில் நபரொருவருடன் தொடர்பை பேணி வருவதாக தகவல் கிடைத்தமையால் மனைவியை கொ லை செய்ததாக கணவர், காவல்துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொ லை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கையடக்க தொலைபேசியை காவல்துறை கைப்பற்றியுள்ளதோடு, சம்பவம் தொடா்பில் பதுளை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பேருந்து தரிப்பிடத்தில் உறங்கிய நபர் கொ டூரமான முறையில் கொ லை!!

கொ டூரமான முறையில் கொ லை

கலேவெல, கலாவெவ சந்தியில் சிறிய பேருந்து தரிப்பிடத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர், இன்று அதிகாலை 2.30 அளவில் மிகவும் கொ டூரமான முறையில் கொ லை செய்யப்பட்டுள்ளதாகவும் கொ லை செய்யப்படுவதை இரண்டு பேர் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான காட்சிகள் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதாக கலேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கலேவெல நகரில், வர்த்தக நிலையங்களில் கூலி தொழில் செய்து, நகர மத்தியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த, ரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரை தாக்கியதாக கூறப்படும் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தம்புள்ளை பேருந்து நிலையத்தின் நேர குறிப்பாளரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் தலையில் காயம் இருப்பதால், அவர் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மோசடி : நீதிபதியின் உத்தரவுக்கமைய தீவிர விசாரணை!!

வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது ஒப்படைக்கப்பட்டிருந்த நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்களிடம் நகைகள் அடையாளம் காட்டுமாறு மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்லிம் முசானா உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் திருட்டுப் போன நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட நகைகள் மற்றும் வேறு சில வழக்குகளுடன் தொடர்புப்பட்டதாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் நீதிமன்ற பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, திருட்டுப் போன நகைகளை குறித்த வழக்காளியிடம் மீள ஒப்படைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் றியால் உத்தரவிட்டிருந்தார்.

இதன்போது, குறித்த உரிமையாளர் நகைகளை அடையாளம் காட்டவில்லை. இவ்வாறு மூன்று தடவைகள் நீதிமன்றுக்கு வருகை தந்த உரிமையாளர் தனது நகைகளை அடையாளம் காட்டாமையால் சந்தேகம் அடைந்த நீதிபதி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நகைகளை பார்வையிட்டார்.

இதன்போது பல நகைகள் காணாமல் போயிருந்ததுடன், பவுண் நகைகளுக்கு பதிலாக போலி நகைகள் மாற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கமைவாக வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் தலைமறைவாகினார்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் தலைமறைவாகிய உத்தியோகத்தரின் உறவினர் மற்றும் நீதிமன்றில் கடமை புரிந்த உத்தியோகத்தர் ஒருவர் என இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சில நகைகள் குறித்த இருவரின் பெயர்களில் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்லிம் முஸானா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது பெட்டகத்தில் உள்ள நகை உரிமையாளர்களை அழைத்து அவர்களது நகைகளை அடையாளம் காட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை தலைமறைவாகியுள்ளவரை பொலிஸார் தேடி வருவதுடன் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த பகுதியில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மின்னலினால் வேனில் இருந்த அனைத்து பொருட்களும் கருகியுள்ளது.

வீட்டு உரிமையாளர் தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் முடியாமல் போயுள்ளது.

வேனில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கர வண்டிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!!

விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்

தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளன.

LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட பின்னர் அதனை இரவில் ஒளிர செய்து விமான பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்த முயற்சி பரீட்சை செய்து பார்க்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் தமிழ்ப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ப ரிதாப நிலை : க தறி அழுது வெளியிட்ட வீடியோ!!

பரிதாப நிலை

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குவைத்திற்கு சென்ற நிலையில், நான் இங்கு சி த்ரவ தைக்குள்ளாகி வருவதாகவும், நான் இந்தியா திரும்புவதற்கு உதவி செய்யும் படி கண்க லங்கிய நிலையில் வீடியோ வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் சென்றுள்ளார். இதையடுத்து மகேஸ்வரியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், தான் குவைத்தில் அ டித்து சி த்ரவதை செய்யப்படுவதாகவும், தனக்கு உண்ண உணவோ, ஓய்வோ, ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை, தன்னோடு சேர்த்து 4 பெண்கள் குவைத் அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று க ண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாய் கொ லை செய்யப்பட்டது தெரியாமல் அருகிலேயே நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த குழந்தை!!

அழுதுகொண்டிருந்த குழந்தை

கடலூர் மாவட்டத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொ லை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜன் – அமலா தம்பதியினர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குழந்தை சிவப்பாக இருந்ததால் அமலாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜன் அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார். அதோடு அல்லாமல் வரதட்சணை கேட்டும் கொடுமைபடுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பொழுது விடிந்ததிலிருந்தே குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளது. அமலாவும் தூக்கத்திலிருந்து எழாமல் இருந்துள்ளார். சுரேசும் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை.

உடனே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று அமலாவை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அமலா எந்த அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அமலா கொ லை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவருடைய உ டலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் கொ லை செய்த சுரேஷை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தை சிவப்பாக பிறந்ததால் சந்தேகத்தில் மனைவியின் முகத்தில் த லையணையை வைத்து அழுத்தி கொ லை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.