நம்பிச் சென்ற காதலியை கொ ன்று பு தைத்த இராணுவ வீரர் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

கேரளா மாநிலத்தில் காதலியை வீட்டின் பின் பக்கம் கொ ன்று பு தைத்துவிட்டு தப்பி சென்ற காதலனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜூன் 21 அன்று, கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராக்கி (30) என்கிற இளம்பெண், தனது அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த அவருடைய பெற்றோர் ஜூலை 7ம் திகதியன்று பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவருடைய செல்போனை ஆராய்ந்த போது, இராணுவ வீரராக பணிபுரிந்து வரும் அகில் என்கிற இளைஞரை 6 வருடமாக காதலித்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் அகில் நண்பன் ஆதர்சிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராக்கியுடன் நெருங்கி பழகி வந்த அகில், அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள் அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனை கேள்விப்பட்ட ராக்கி, நேரமாக அந்த மணப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அகிலும் நானும் காதலித்து வருகிறோம் என நடந்தவற்றை கூறியுள்ளார்.

இந்த விடயம் அகில் கவனத்திற்கு வர கடும் கோபமடைந்துள்ளார். நான் ஒரு புதிய வீடு கட்டியிருக்கிறேன். உனக்கு காட்ட ஆசைப்படுகிறேன் என தனியாக வீட்டிற்கு வருமாறு அகில் அழைப்பு விடுத்துள்ளார். அதனை நம்பி சென்ற ராக்கியை, அகில், அவனுடைய சகோதரன் ராகுல் மற்றும் நண்பன் ஆதர்ஷ் ஆகியோர் சேர்ந்து கொ லை செய்த்துள்ளார்.

பின்னர் ராக்கியின் உ டலை வீட்டிற்கு பின் பக்கமாக இருந்த நிலத்தில் புதை த்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக சிறிய செடிகளை அதன்மீது நட்டு வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைமறைவாக இருக்கும் ராகுல் மற்றும் அகிலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடுவானில் பறக்கும் விமானத்தில் 6 மாத குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்

இந்திய தலைநகர் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில், நடுவானில் 6 மாத குழந்தை உயி ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்.

குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே உள்ள இதயக் கோளாறை சரிசெய்ய சிகிச்சைக்காக அவர்கள் டெல்லி புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைக்குச் செல்லும் வழியில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே குழந்தை பரிதாபமாக உயி ரிழந்துள்ளது.

இதையறிந்த சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை அடைந்ததும் பொலிசார் குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தாய்க்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மகள் செய்த காரியம் : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள்

பெங்களூரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தாய்க்காக திருமணத்தையே தடுத்து நிறுத்தியுள்ளார். வங்காளதேசத்தை பூர்விகமாக கொண்ட 25 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதற்கிடையில் திடீரென இளம்பெண்ணின் தாயாருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பல இடங்களில் தேடி பார்த்தும் சிறுநீரகம் கிடைக்காததால், அந்த இளம்பெண் தன்னுடைய சிறுநீரகத்தை கொடுக்க கொடுக்க முன் வந்துள்ளார்.

இதற்காக திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரின் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவர் இறுதிவரை அனுமதி கொடுக்காததால், ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தாய்க்கு கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த மக்கள் அனைவரும் தாய்க்காக தன்னுடைய திருமணத்தையே தடுத்து நிறுத்திய இளம்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

கொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம்!!

இளம் பெண் பட்டதாரி

கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரி ஒருவர் உயி ரிழந்துள்ளார். ரயில் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த பெண்ணே இவ்வாறு உயி ரிழந்துள்ளார்.

ரயில் வரும் வேளையில் கை தவறி மோட்டார் சைக்கிள் இயங்கி, ரயில் வீதியை நோக்கி பயணித்துள்ளது. குறித்த நேரத்தில் கோட்டையில் இருந்து பயணித்த ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயி ரிழந்துள்ளார்.

கந்தான பிரதேசத்தை சேர்ந்த திலினி சத்துரிக்கா என்ற 25 வயதான பட்டதாரி பெண்ணே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த பெண்ணின் தவறினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் இருவரின் மோசமான செயல் : வசமாக சிக்கினர்!!

மோசமான செயல்

ஹட்டன் – மஸ்கெலியா பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் இருவர் பரீட்சை வினாத்தாள்களை களவாடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் தவணை பரீட்சைக்காக மத்திய மாகாணத்தில் இருந்து அச்சிடப்பட்டு அனுப்பப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள் பேயாலோன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரின் காரியாலயத்தில் பொதி செய்யபட்ட நிலையில் இருந்துள்ளது.

இந்த நிலையில் பரீட்சை வினாத்தாள்கள் இருந்த பொதி உடைக்கபட்டு இருந்ததை அவதானித்த அதிபர், சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்களை கைது செய்துள்ளனர். அதிபர் காரியாலயத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் வழியாக சென்று பொதி செய்யபட்டிருந்த விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான வினாத்தாள்களை குறித்த இரு மாணவர்களும் களவாடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மாணவர்கள் இருவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் : எங்களை காப்பாற்றுங்கள்!!

மோடிக்கு அவசர கடிதம்

திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை யாழிலுள்ள இந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்திய துணை தூதரின் ஆலோசனையின் பேரில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள்“ என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழிலுள்ள இந்து அமைப்புக்கள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திற்கு சென்று, துணைத்தூதரை சந்தித்து கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் அரசாங்கம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு..

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சம்பள உயர்வு ஜூலை மாதத்திலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

இதற்கென 2700 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு என்பவற்றுக்கு 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட த்தப்பட்ட பாடசாலை மாணவியை நுட்பமாக காப்பாற்றிய குடும்பத்தினர்!!

பாடசாலை மாணவி

கண்டி – தல்வத்தை பிரதேசத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கட த்தப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் மாணவியை கடத்திய நபரை சில நாட்களின் பின்னரே குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி – தல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 9 வயதான மாணவியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கட த்தி சென்றுள்ளார். கண்டி தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீடு செல்லும் போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் கால் பாத அடையாளங்களை வைத்து மாணவியை கொண்டு சென்றுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது. நுட்பமான முறையில் செயற்பட்ட குடும்பத்தினர் மாணவியை காப்பாற்றியுள்ளனர். அத்துடன் இன்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிஸ் இங்கிலாந்து அழகி போட் டி : இறுதி சுற்றில் இலங்கை தமிழ் பெண்!!

திலானி செல்வானந்தன்

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு முதன்முறையாக இலங்கை தமிழ் பெண் திலானி செல்வானந்தன் தெரிவாகியுள்ளார். பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து திலானி செல்வானந்தன் கருத்து வெளியிடுகையில்.

“மிஸ் இங்கிலாந்தின் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இலங்கை தமிழ் பெண்ணாக நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இது எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாகும். ஏனெனில் எனது கலாசாரம் மற்றும் பின்னணியில் இருந்து பார்க்கும் போது பலரும் இந்த முயற்சியை எடுக்க மாட்டார்கள். அதனால் தான் நான் மற்றவர்களின் கண் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறேன்.

இந்த போட்டியில் சேர்ந்தன் மூலம், எனது சுயமரியாதையையும், நம்பிக்கையையும் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். மேலும் இந்த போட்டிகளைப் பற்றி மற்ற தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்பினேன்.

உதாரணமாக சிலர் தங்கள் வீட்டு பெண்களை குறுகிய ஆடைகளுடன் போட்டிகளில் பங்கேற்க விரும்புவதில்லை. அவர்களுக்குள் எத்தனை திறமைகள் இருந்தாலும் அவர்கள் வீட்டிலேயே பூட்டி வைக்கப்படுகின்றனர்.

என்னை பற்றி கூற வேண்டும் என்றால், நான் என் குடும்பத்தில் மூத்தவள், சிறு வயதிலிருந்தே என் தந்தை உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வேலை செய்வதை நிறுத்திவிட்டார். குடும்ப பாரத்தை சுமப்பதற்காகவே என் அம்மா மொத்த உழைப்பை தனது தோளில் சுமந்தார்.

அவரை பார்த்த பின்பு, எனது உடன்பிறப்புகளுக்கும், பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கி தர வேண்டும் அவர்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

நான் மிகவும் ஆர்வமுடையவள். முயற்சியை நம்புபவள். தொடர்ந்து பல்வேறு விடயங்களை விடாமல் முயற்சி செய்து வருகிறேன். நான் ஏதாவது செய்யும்போதெல்லாம் என் அம்மாவை பெருமைப்படுத்துவது பற்றி தான் முதல் எண்ண ஓட்டம் வரும்.

எங்களுக்காக அவர், எவ்வளவு கடினமான உழைப்பை மேற்கொண்டார் என்பது எனக்கு ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். நான் செய்வது எல்லாமே கண்டிப்பாக அவரை பெருமைப்படுத்தும் என நம்புகிறேன்.

என்னுடைய 13வது வயதில் புல்லீஸாட் என்ற தொண்டு நிறுவனத்தின் இளம் தூதராக தெரிவானேன். அப்போதில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பலரின் வழிகாட்டில் உதவியோடு இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். மிஸ் இங்கிலாந்தில் பங்கேற்பது எனது பயத்தை போக்கிக்கொள்ளவும் என்னை நானே முழுமையாக நம்பவும் ஒரு மிகச் சிறந்த பாதையாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த போட்டி வெறும் அழகு மற்றும் தோற்றத்திற்கானது மட்டுமில்லை. ஆளுமை, அறிவுத்திறன், கடின உழைப்பு மற்றும் சவால்கள் நிறைந்தது. இறுதிப்பேட்டி எனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன்.

அதற்காக காத்திருக்கிறேன். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. எனக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து என்றால் மிகவும் இஷ்டம்.

நான் டேக்வாண்டோவில் 2வது டான் பிளாக் பெல்ட் மற்றும் முன்னாள் ஏர் கேடட். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளேன்.

ஓய்வு நேரத்தில் தையல், ஓவியம், கேமிங், அனிமேஷன், நடிப்பு, இசையமைத்தல், புகைப்படம் எடுத்தல், உலகம் முழுவதிலுமிருந்து நாணயங்களை சேகரித்தல் என பல பொழுதுபோக்குகளை நான் ரசித்து செய்வேன்.

அவை எனக்கு உற்சாகத்தையும் அளிக்கின்றன. இதனால் நான் தொடர்ந்து புதிய விஷயங்களை முயற்சிக்கிறேன். ஜாக் பெட்சே விருது போன்ற பல விருதுகளை நான் பெற்றுள்ளேன்.

இந்த மிஸ் இங்கிலாந்து போட்டி எனது இத்தனை ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிணையில் வெளியில் வந்த நளினிக்கு ஏற்பட்ட நிலை!!

நளினிக்கு ஏற்பட்ட நிலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி நேற்று பிணையில் வெளியில் வந்தார். எனினும் பிணையில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை என தமிழக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “ராஜீவ் காந்தி கொ லையில் சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி எத்தனையோ போராட்டங்களை யார் யாரோ நடத்தினார்கள்.

நளினி தனது மகள் திருமணத்துக்காக பிணை கேட்டு மறுக்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்தார்கள். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சீமான் உள்ளிட்ட பல அமைப்புகள் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன. எனினும், தனது மகள் திருமணத்தை நடத்த பிணையில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை.

தமிழ் தேசியம் பேசும் அமைப்புகளில் சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் மட்டுமே தனது வீட்டில் தங்கி திருமண வேலைகளை செய்ய நளினிக்கு உதவியிருக்கிறார்.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. சிங்கராயருக்கு சுப.வீரபாண்டியன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மர்ம விமானம் : உடனடியாக தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை!!

மர்ம விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமானம் குறித்த தகவல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பாதுக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளது.

எனினும், அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது, எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியவரவில்லை. ஆகையினால், அதில் வந்தவர்கள் யார், இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்” என அவர் கோரினார்.

இதேவேளை, N513SN என மாத்திரமே குறிக்கப்பட்ட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது. அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே, விமானம் குறித்த தகவல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலதிபருக்கு வந்த ஆசை : நயன்தாராவுக்காக பேசப்பட்ட 10 கோடி!!

நயன்தாரா

தென்னிந்தியா சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும், தமிழ்ப் படங்களில் நடிப்பதில் தான் நயன்தாரா தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் அவர்,

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, விஜய், ரஜினி, சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும், என்று விரும்பியுள்ளார்.

இதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக கூறினாராம். ஆனால், நயனோ பணத்தை பார்க்காமல், அந்த தொழிலதிபருடன் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அந்த தொழிலதிபருடன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் கூட படத்தில் நடிக்க முடியாது, என்று கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த ரூ.10 கோடி மேட்டர் குறித்து கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா, என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும், அந்த துணிக்கடை தொழிலதிபர் ஹீரோவாவதும், அவருக்காக ஹீரோயின் தேடுதல் வேட்டை நடப்பதும் உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது.

காதல் தோல்வியால் மன உளைச்சல் : வருங்கால கணவருக்கு நிபந்தனை போடும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா. அந்தப்படம் மிகச் சிறப்பாக ஓடியதால் படத்தில் நடித்த ராஷிமிகாவும் பிரபல ஆனார்.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு நடிகை ராஷ்மிகா பேட்டி அளித்துள்ளார். அதில், தன்னுடைய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியிருக்கிறார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, எனது வருங்காலக் கணவர் எப்போதும் உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். இனியாகவும் பேச வேண்டும். என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கட்டாயம், அவர் சொல்படி நடப்பேன். என்னுடன், அவர் அதிக நேரம் செலவிட வேண்டும். மற்றபடி, ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டாலே போதும்; சண்டை-சச்சரவுகள் இருக்காது. இருவருக்குமான வயது வித்தியாசம், ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.

முன்னதாக, தன்னுடன் நடித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை, நடிகை ராஷ்மிக மந்தனா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, 2017ல், நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த காதல் தோல்வியைத் தொடர்ந்துதான், தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம், ராஷ்மிகா நிபந்தனை விதிக்கத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன்!!

சேரன்

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர் தாமினி.

இதில் இளைய மகள் தாமினி சேரனின் பேச்சை கேட்காமல் ஒருவரை காதலித்து அவருடன் சென்றுவிட்டார். இந்த பிரச்சனையினால் சேரன் முழுவதுமாக மனம் உடைந்துவிட்டராம்.

இதிலிருந்து மீளவே அவருக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கே பல வருடங்கள் ஆகியுள்ளது. இதனால் தான் அவரால் முன்பு கொடுக்கப்பட்ட ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற தரமான படங்களை தற்போது கொடுக்க முடியவில்லையாம். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திருமணம் படமும் அவ்வளவாக ஒடவில்லை.

இதையெல்லாம் மறக்கவும் மீண்டும் புத்துயிர் பெறவும் தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாராம். இதையே அவரது நண்பர் இயக்குனர் சமுத்திரகனியும் கடந்த மாதம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு!!

கருத்தரங்கு

வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் மற்றும் தென்னை சார் கைத்தொழில்களை செய்பவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு இன்று (25.07) நடைபெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமூர்த்தி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது தென்னை பயிர் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் பெ.உதயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்னை சார் உற்பத்திகளை செய்யும் விவசாயிகள் மற்றும் தென்னை சார் பொருட்களில் கைத் தொழில்களை செய்ய எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட ‘கற்பக’ சங்கங்களின் உறுப்பினர்களான 200 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தென்னை சார் சிறு கைத்தொழில்களை உற்பத்தி செய்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி மின்வெட்டு : பரீட்சை நேரத்தில் மாணவர்கள் அவதி!!

மின்வெட்டு

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி இடம்பெறம் மின்வெட்டு காரணமாக பரீட்சை நேரத்தில் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி கடந்த சில நாட்களாக மின்வெட்டு இடம்பெறுகின்றது. இதன்காரணமாக அரச அலுவலகங்கள், வர்த்தகர்கள், உத்தியோகத்தர் எனப் பலரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவைதவிர, தற்போது மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் எதிர்வரும் 4 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையும், எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சையும் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு இடம்பெறும் மின்வெட்டினால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.

ஏற்கனவே வட மாகாணத்தின் கல்வி கீழ் நிலை நோக்கி செல்லும் நிலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்வெட்டுக்களும் மாணவர்களின் பெறுபேற்றை கேள்விக்குட்படுத்தியுள்ஏதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.