வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தில் இன்று இராணுவத்தினர் காவடி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இம்மாதம் 23 ஆம் திகதி ஆடிச்செவ்வாய் அன்று 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம யாத்திரையானது இன்று கதிர்காமம் முருகன் ஆலயத்தில் காவடி நடனங்களும் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக் கந்தன் ஆலயம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தில் இன்று இராணுவத்தினர் காவடி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூரியவெவ-மீகாஜதுர விவசாய சேவை நிலையத்திற்கு அருகாமையில் இராணுவ வீரர்களின் கன ரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் கன ரக வாகனமே இவ்வாறு நேற்று விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகின்றது. குறித்த கன ரக வாகனத்தில் 13 இராணுவ வீரர்கள் பயணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
கந்தளாய் – ரஜஎல பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் வீழ்ந்து பெண்ணொருவர் உயி ரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியளார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயி ரிழந்துள்ளவர் அதே பகுதியை சேர்ந்த 88 வயதான வயோதிப பெண் என தெரியவந்துள்ளது.
அவர் எவ்வாறு கிணற்றில் வீழ்ந்துள்ளார் என்பது தொடர்பில் இதுவரை அறியப்படாத நிலையில், கந்தளாய் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலவசமாக மூன்று கிராமங்களுக்கு பெண் ஒருவரும், அவரது குடும்பத்தினரும் நீர் விநியோகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட லிஹினிபிட்டிய பகுதியில் இவ்வாறு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
சுஜானி தீபிகா ரணசிங்க என்ற பெண்ணும், அவரது குடும்பத்தினரும் இவ்வாறு எவ்வித தயக்கமும் இன்றி நீர் விநியோகம் செய்து வருகின்றனர். மூன்று கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகின்றது. பல மைல் தொலைவில் உள்ள கிராம மக்கள் கால் நடையாகவும், முச்சக்கர வண்டியின் ஊடாகவும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று நீர் பெற்றுக்கொள்கின்றனர்.
குழாய்க் கிணறு நீரை மோட்டார் மூலம் பாய்ச்சி இவ்வாறு மக்களுக்கு குறித்த பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் நீர் வழங்கி வருகின்றனர். தாங்கள் குளிப்பதற்கு கூட நீரைப் பயன்படுத்தாது கிராமங்களின் மக்களின் குடிநீர் தேவைக்காக இவ்வாறு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாக காணப்படும் ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில் மக்களின் காணிகளில் உள்ள கிணறுகளின் நீரினை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக உவர் நீராகவும் காவிபடிந்த நீராகவும் இவை காணப்படுவதால் மக்கள் பணம் கொடுத்தே நீரினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனந்தா என்ற நீர்விநியோக அமைப்பினால் ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவிற்கு விநியோகம் செய்துவருவதாக ஆனந்தா அமைப்பின் தலைவர் றாஜா திருமேனி தெரிவித்துள்ளார்.
1959ஆம் ஆண்டு குடியேற்றத்திட்டமாக உருவாக்கப்பட்ட கிராமம் இது ஒரு உவர்நீர் பிரதேசமாக காணப்பட்டுள்ளது. சில கிணறுகள் சமையல் பாவனைக்கு பாவிக்கக்கூடியதாக இருந்துள்ளது.
இருநூற்றி ஐம்பது வரையான குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் கடும் வறட்சிகாலத்தில் பிரதேச செயலரின் உதவியுடன் தண்ணீர் பௌசர்களால் நீர் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கடும் வறட்சியான காலநிலை நீர் பிரச்சினையால் மக்கள் பலர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலைகூட வந்துள்ளது.
வைத்திய ஆய்வின் படி கிட்னி பிரச்சினை இந்த கிராமத்திலும் அதிகளவில் இருக்கென்ற ஆய்வின் பிரகாரம் கேலீஸ் நிறுவனத்தினால் வடிகட்டப்பட்ட குடிநீர்பம்பி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இந்த பில்டர் குடிநீர் பம்பி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் ஏற்படும் செலவீனங்களுக்கான ஒரு லீற்றர் ஒரு ரூபா படி மக்களுக்கு வழங்கி வருகின்றோம் என்றும் தெரிவித்த அவர்,
கடந்த 2016ஆம் ஆண்டு இந்த பில்டர் தண்ணீர் தாங்கி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒரு அமைப்பினை நிறுவி கிராம மக்களாக நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
விசுவமடுவில் இருந்து சாலையில் இருந்து இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம், கைவேலி, தேவிபுரம் போன்ற பகுதிகளில் இருந்துகூட இங்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக வருகின்றார்கள்.
நாளாந்தம் நான்காயிரம் லீற்றர் வரை சராசரி நீரினை வழங்கி வருகின்றோம். அருகில் உள்ள கிராமங்களில் 15 இடங்களில் குடிநீர் தாங்கி வைத்து குடிநீரினை குறைந்த பணத்திற்கு விநியோகம் செய்துவருகின்றோம். ஏனைய மக்கள் இங்குவந்து குடிநீரினை எடுத்து செல்கின்றார்கள்.
ஆனந்தபுரம் பகுதியில் உள்ள மக்களின் கிணறுகளில் உள்ள அனைத்து நீரூம் மஞ்சல் நிறமாக மாறியுள்ளது இதனால் இந்த நீர் ஒன்றிற்குமே உதவாத நீராக மாறியுள்ளது.
ஆனந்தபுரத்திற்கு என்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினால் நீர்விநியோகத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கே நீரினை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. அது எந்த காலப்பகுதியில் கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ்.சுண்டுக்குளி, மூலாய் வீதியில் உள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் மிக நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் வழிபாடுகள் மேற்கொண்டு பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆலயத்தை உருவாக்கியவரின் பிள்ளைகளுக்கிடையில் தொடர்ச்சியான முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆலயத்திற்குள் நுழைந்த சிலர் ஆலய கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். அத்துடன், அங்கிருந்த விக்கிரகங்களை எடுத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,
ஆலயத்தை உருவாக்கியவரின் பிள்ளைகளுக்கிடையிலான சில முரண்பாடுகளாலேயே ஆலயம் உடைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்த ஆலயம் மிக பழமையான ஆலயம் எனவும், பெருமளவு மக்களால் வழிபடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும் கூறியுள்ளனர்.
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இந்த ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ் ஆண்டு ஒரு தொகை பணத்தை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம விமானம் ஒன்று வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த விமானம் எந்த நாட்டுக்கு சொந்தமானது? எந்த விமான சேவைக்கு சொந்தமானது? என்ன காரணத்திற்காக இலங்கை வந்தது? அந்த விமானத்தில் வந்தவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் மர்மமாகவே உள்ளது.
குறித்த விமானத்தில் N513SN என மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
இந்த அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் எனவும், இலங்கை அமெரிக்காவின் கொலனியாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த விமானம் செல்வதான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஓரிடத்தில் பள்ளம் தோண்டும்போது, அங்கிருந்து கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோரின் உட ல்கள் கிடைத்துள்ள நிலையில், அவை சதாம் உசேனால் கொ ல்லப்பட்ட குர்திஷ் இனத்தவர்களின் உட ல்களாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக்தாதிலிருந்து 200 மைல்கள் தெற்கில், ஈராக்கின் Tal al-Sheikhiya பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குழியில், 70க்கும் மேற்பட்ட உட ல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் அனைவரும் முன்னாள் சர் வாதிகாரி சதாம் உசேனால் கொ ல்லப்பட்ட குர்திஷ் இனத்தவர்கள் என நம்பப்படுகிறது.
அந்த 70 உட ல்களில், பிறந்த குழந்தைகள் முதல், 10 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களின் உ டல்களும் அடங்கும். அந்த பகுதியில் மேலோட்டமாக தோ ண்டும்போதே 70 உ டல்கள் வரை கிடைத்துள்ள நிலையில், அதே இடத்தில் சற்று ஆழமாக தோ ண்டினால், மேலும் ஏராளமான உ டல்கள் கிடைக்குலாம் என அங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், அவை 1988இல் கொ ல்லப்பட்டவர்களின் உட ல்கள் என தோன்றுகிறது. அந்த காலகட்டத்தில்தான் சதாம் உசேன், ‘Anfal’ இன ப்ப டுகொ லை என்னும் ஒரு நிகழ்வின் மூலம் கொ டூரமாக 180,000பேரைக் கொ ன்று குவி த்தார்.
அப்போது சுமார் 3,000 கிராமங்கள் அழி த்தொழிக்கப்பட்டன. குறிப்பாக பிடிபட்ட பெண்கள் கண்களின் துணி கட்டப்பட்டு தலை யில் சு டப்பட்டு கொ ல்லப்பட்டனர்.
1980, 90களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சதாமின் அராஜக செயல்களால் கா ணாமல்போன நிலையில், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய இன்னமும் அவர்களது குடும்பத்தினர் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அப்படி கா ணாமல் போனவர்கள் குறித்து அறியும் முயற்சியாகத்தான் தற்போது அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மும்பையில் சாதி பெயரை சொல்லி சித் ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் த ற்கொ லை செய்த வழக்கில் கைதான 3 பெண் மருத்துவர்களுக்கு எதிராக பொலிசார் 1,203 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த மே மாதம் 22ம் திகதியன்று தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.
அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு நேரே விடுதிக்கு சென்ற பயல், நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார். 4 மணி நேரம் கழித்து தான், அவர் தூ க்கில் தொ ங்குவதை மற்றவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்த பொலிஸ் விசாரணையில் சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி பயலை து ன்புறுத்தியதால் ஏற்பட்ட அவமானத்தில் இம்முடிவை எடுத்தது தெரியவந்தது.
மேலும், பயல் எழுதி வைத்திருந்த கடிதத்தின் ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை சமீபத்தில் பொலிசார் கைப்பற்றினர். அதில், மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் சாதி ரீதியாக மோசமாக பேசி துன் புறுத்தினார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஹேமா அஹுஜா, அன்கிதா, மேரே ஆகிய மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில், பயல் த ற்கொ லை வழக்கில் கைதான 3 பேருக்கு எதிராகவும் நேற்று குற்றப்பிரிவு பொலிசார் நீதிமன்றத்தில் 1,203 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் 274 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளார்கள், மூவருக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதால் அவர்களுக்கு இந்த வழக்கில் தகுந்த தண் டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டி அதற்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வாங்கிய நிலையில், அதை நான் எப்படி சுட்டிக் காட்டினேன் என்பதை கூறியுள்ளார்.
தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் சாப்பாடு கூட ஒரு நாளைக்கு இருந்துவிடுவர். ஆனால் மொபைல் போன், நெட் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு செல்போன்கள் நம்மை அடிமையாக்கி வைத்துள்ளன. குறிப்பாக இந்த செல்போன் மற்றும் கணனிகளில் வேலை நேரம் போக, நாம் அதிகம் பயன்படுத்துவது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை தான்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் இருந்த ஒரு சிறிய தவறால், 5 கோடி மக்களின் பேக்புக் அக்கவுண்ட்கள் ஹெக் செய்யப்பட்டன. இதனால் பேஸ்புக் பயனாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அது சரி செய்யப்பட்டாலும், மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறி தவறு ஒன்று இருப்பதாக கூறி சுட்டிக் காட்டினார். இதனால் தவறை சுட்டிக் காடிய அவருக்கு அந்த நிறுவனம்20 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.
இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடைய சொந்த ஊர் சிவகங்கை, நான் கல்லூரி படித்தது திருவள்ளூரில், CSE மாணவரான எனக்கு, ஆரம்பம் முதலே தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் இருந்தது.
இதன் காரணமாகவே தொழில்நுட்ப போடிகளில் கலந்து கொள்வேன். இது எனக்கு ஒன்றும் புதிதல்ல, கடந்த 2013-ஆம் ஆண்டு சில ஆப்களில் தவறுகளை சுட்டிக் காடியுள்ளேன். அதுமட்டுமின்றி 2015-ஆம் ஆண்டு பேஸ்புக்கிலும் பக் இருப்பதை கண்டுபிடித்தேன், அதற்கும் அவர்கள் சன்மானம் வழங்கினர்.
இது போன்று தான், இன்ஸ்டாகிராமில் மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு 6 டிஜிட் எண்கள் அனுப்பபடும். அப்படி அனுப்பப்படும், பதிவுகளை பதிவிட்டால், அதன் பாஸ்வேர்டுகளை மாற்ற முடியும். அனுப்பப்படும், 6 டிஜிட் எண்கள் மொத்தம் 10 லட்சம் வரை இருக்கும். இந்த 10 லட்சம் எண்களையும் internet protocal-ஐ பயன்படுத்தி எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்தக் குறைபாட்டையே நான் கண்டுபிடித்தேன். அதனை வீடியோவாகப் பதிவுசெய்து அவர்களுக்கு அனுப்பினேன். அதன் பின்னரே அவர்கள் இப்படி ஒரு பக் இருப்பதைப் புரிந்துகொண்ட பின், இன்ஸ்டாகிராம் எனக்கு பரிசு அறிவித்தது. எதிர்காலத்திலும் இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு ஊற்ற அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த வாரம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை செய்திருந்தார்கள்.
அந்த போராட்டத்தில் தென்கயிலை ஆதீனம் மீது சூடான தேயிலை சாயம் ஊற்றப்பட்டது. அன்று அந்த சம்பவம் நடந்தபோது தென்கயிலை ஆதீனத்தை ஒரு பேச்சுவார்த்தைக்காக பொலிஸார்தான் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு பொலிஸார் அழைத்துச் சென்ற போது அங்கிருந்த சில காடையர்களால் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பாதுகாப்பில் செல்லும் ஒரு மதத் தலைவர் மீது இவ்வாறான மோசமான செயல் நடத்தப்பட்டபோது அதை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸாரோ அந்த மாவட்ட அதிகாரிகளோ ஏன் இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
அன்று நடந்த அந்த சம்பவம் ஒரு பௌத்த மதகுருவுக்கு நடந்திருந்தால் இன்று இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களுடைய நிலை என்ன?
இந்து மதத்தின் பிரதான குரு ஒருவருக்கு பொலிஸாரின் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், பொலிஸாருக்கு தெரியும், யார் இதைச் செய்தார்கள் என்று தெரியும் ஆனால் ஏன் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டம் ஒழுங்கு அமைச்சினை வைத்திருக்கக் கூடிய இந்த நாட்டினுடைய ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை. அவர் இதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நாட்டினுடைய பிரதமரும் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.
அந்த போராட்டத்தின்போது பௌத்த குரு ஒருவர் ஒரு விடயத்தை கூறியிருந்தார். குறித்த இடத்தில் நின்று கொண்டிருந்த கத்தோலிக்க மத குருக்களைப் பார்த்து நீங்கள் திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்டுவதற்கு அனுமதி கொடுக்காமல் இங்கு வந்து வெளிப்பூச்சுக்காக ஏன் நிற்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த காலம் முதல் தற்போது வரை, ஆயுதங்கள் கொண்டு போராடிய காலம் தொட்டு ஒற்றுமையாக ஒரே தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள் நாங்கள்.
தமிழர்களின் பிரதான மாவட்டமான திருகோணமலையில் இந்து குரு ஒருவர் மீது சுடுநீர் ஊற்ற முற்பட்டிருக்கின்றார்கள் என்றால் தமிழர்களின் சமய தலைவர்களை இந்த அரசாங்கம் எந்த இடத்தில் வைத்து பார்க்கின்றது என்பதுதான் இன்று பிரதானமான கேள்வியாக இருக்கின்றது.
தமிழர்களுக்கு இவ்வாறு ஏதும் நடந்தால் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியம் ஆட்சியாளர்களுக்கும் ஒரு சில மதகுருமார்களுக்கும் இருக்கின்றது.
நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு சுடுதண்ணீர் ஊற்ற உங்களுக்கு தைரியம் வந்திருக்குமா என அன்று சுடுதண்ணீர் ஊற்றியவர்களைப் பார்த்து கேட்க விரும்புகின்றேன்.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆண்கள் மீதான நம்பிக்கையை இழந்ததால் இங்கிலாந்தை சேர்ந்த மொடல் அழகி, தன்னை புரிந்து வைத்திருக்க கூடிய வளர்ப்பு நாயை திருமணம் செய்ய உள்ளார். இங்கிலாந்தின் கிழக்கு பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் நகரில் வசிக்கும் 49 வயதான எலிசபெத் ஹோட், கண்களை கவரும் வகையில் அழகாக இருந்தாலும், பல ஆண்களால் ஏமாற்றங்களை சந்தித்துள்ளார்.
எலிசபெத், பலரை சந்தித்தாலும் வாழ்நாளின் இறுதிவரை பயணிக்க ஒரு நல்ல காதலனை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கூறியிருக்கும் அவர், “நான் ஆண்கள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டேன். நான் 6 டேட்டிங் தளங்களை பயன்படுத்தியுள்ளேன். 8 ஆண்டுகளில் 220 ஆண்களைச் சந்தித்தேன்.
ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. நான் திருமண வயதை எட்டிவிட்டேன் என்பதை சொல்வதற்கு பயப்படுகிறேன். நிச்சயிக்கப்பட்டு 2 முறை திருமணம் நின்று போயுள்ளது. அதனால் தற்போது ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ஆகஸ்ட் 2, 2018ம் ஆண்டு நான் ஒரு நாயை தத்தெடுத்து வளர்த்தேன். அதற்கு லோகன் என பெயரிட்டேன். நான் அதிக ஏமாற்றத்துடன் இருக்கும் சமயங்களில் லோகன் தான் எனக்கு ஆறுதல் தரும்.
அதனால் தற்போது லோகனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். அது ஒருபோதும் என்னை விட்டு விலகாது, நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். ஆகஸ்டு 2ம் திகதி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம். 20 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். இதனை பார்த்து நிறைய பேர் என்னை பைத்தியம் என்று கூறுவார்கள். ஆனால் நான் செய்வது சரி என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மனைவியை கொடூ ரமாக கு த்தி கொ லை செய்த கணவன், அவரை எத்தனை முறை அழைத்தும் குடும்பம் நடத்த வரவில்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் குருமுனீசுவரன். இன்ஜினியரான இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும், இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
ரதிதேவி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், குழந்தைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்தார். அப்போது தான் அவருக்கு மதுரையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசியர் வேலை கிடைத்துள்ளது.
இதனால் நேற்று முன் தினம் இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று வகுப்பிற்குள் ஹெல்மட் அணிந்த படி உள்ளே நுழைந்த அவரது கணவர் ஸ்க்ரு டிரைவரால், அவரை கொ டூரமாக கு த்தி கொ லை செய்தார். இதைக் கண்ட அங்கிருந்த மாணவர்கள் அதி ர்ச்சியடைந்து அலறி அடித்து ஒடினர். அதன் பின் குரு முனீசுவரன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் மனைவியை கொ லை செய்துவிட்டதாக கூறி சர ண் அடைந்தார்.
அதன் பின் பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவள் என்னுடன் சரியாக குடும்பம் நடத்தவில்லை, அடிக்கடி அவள் அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவாள். இதனால் அவளை சென்று அழைத்தால், வரவே மாட்டார்.
எத்தனையோ முறை சொந்தக்காரர்களை வைத்து பேசி பார்த்தோம், பலமுறை கூப்பிட்டு பார்த்தோம், ஆனால் அவள் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் ரதி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமங்கலத்தில் ஸ்கூலில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். அதனால் அந்த ஸ்கூலிலேயே வைத்து கொ லை செய்ய முடிவு செய்தேன்.
ஹெல்மட்டில் க த்தி, ஸ்குரூடிரைவர் மறைச்சு வெச்சு எடுத்துட்டு போனேன். என்னை பார்த்ததுமே ரதி அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் நான ஹெல்மெட்டால் ஒரே போடு போட்டு, கத்தியாலும் கு த்தி கொ ன்றுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத் தீ விபத்தினால் வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுள்ள போதிலும் எவரும் வீட்டில் குறித்த நேரத்தில் இல்லாமையினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
இந் நிலையில் குறித்த வீட்டின் மின்சார இணைப்பு நேற்றைய தினமே மீள பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளமையினால் மின்சார ஒழுக்கினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை நகை மற்றும் பணம் கொ ள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொ ள்ளைச் சம்பவம் சண்டிலிப்பாய், டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து வந்தவர்களுடைய நகை, பணம் என்பனவே கொ ள்ளையிடப்பட்டுள்ளன. இதில் 30 பவுண் நகைகள், 600 யூரோ, மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பன கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களது உறவினர்களுடைய வீட்டில் தங்கியிருந்துள்ளதாக தெரிய வருகிறது. கொ ள்ளைச் சம்பவம் சண்டிலிப்பாய், டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
23 ஆண்டுகளுக்குமுன் மீன்பிடிக்க சென்று காணாமல் போன ஒருவர் தற்போது இலங்கையில் யாசகம் பெற்றும் வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்தவர் பரதன் (வயது62). கடந்த 1996ம் ஆண்டு கடலுக்கு 3 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் பரதன் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.
அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் உயி ரிழந்துவிட்டதாக கருதி அவர் தொலைந்து போன நாளை நினைவு நாளாக கருதி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் சமூக வலைதளம் ஒன்றில் பிச்சைக்காரர்கள் பற்றி வெளியான வீடியோ காட்சியில் பரதன் இலங்கையில் பிச்சைக்காரராக திரிவது போன்ற காட்சியை பரதனின் குடும்பத்தினர் பார்த்து அவர்தான் என்று உறுதிசெய்தனர்.
இந்த நிலையில் மீனவர் பரதன் கொழும்பு பகுதியில் உள்ள வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் அறிந்துகொண்டனர். இந்நிலையில், பரதனை மீட்க கோரி அவரது குடும்பத்தினர் மனு கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது,
“கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் மீன்பிடிக்க சென்று கடலில் சிக்கி தற்போது இலங்கையில் உள்ளதாக கூறப்படும் மீனவர் பரதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் என்பதால் இதுதொடர்பாக மீன்வளத்துறை சார்பில் மத்திய அரசின் மறுவாழ்வுத்துறை மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து பரதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக” கூறியுள்ளார்